நாம் எல்லோரும் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட தமிழர்கள். எமது தமிழ் மொழியின் பெருமையும் சிறப்பையும் சற்றே உற்று பார்த்து விட்டு மேற்கொண்டு எழுதலாம் என்று நினைக்கிறன், அதுவே சாலச்சிறந்தது என்று நினைக்குறேன். தமிழ் தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். தென்னிந்தியாவில் தமிழ் நாட்டிலும்இலங்கையிலும், சிங்கப்பூரிலும் அதிக அளவில் பேசப்படும் இம்மொழி, ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயுனியன், டிரினிடாட் போன்ற பல நாடுகளிலும் சிறிய அளவில் பேசப்படுகிறது. 1997-ம் ஆண்டு புள்ளி விவரப்படி தமிழ் உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ், ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.
(நன்றி விக்டோரியா)
அதிக மக்கள் உள்ள இடம்: | இந்தியா: 61.5 மில்லியன் (6.32%) இலங்கை: 2.7 மில்லியன் (18%) மலேசியா: 1.06 மில்லியன் தென்னாபிரிக்கா: 250 000 கனடா: 250 000 ஐக்கிய இராச்சியம்: 250 000 [4] ஐக்கிய அமெரிக்கா: 100 000 பிரான்சு: 100 000 ரீயூனியன்: 120,000 சிங்கப்பூர்: 90,000 மொரிசியசு: 31,௦௦௦ |
இவ்வாறு எத்தனையோ பெருமைகளை கொண்ட நம் தமிழ் மொழியை பேசுவதற்கு நாம் பெருமைப்பட வேண்டும் ஆனால் நம்மில் இவ்வாறு எத்தினை பேர் இருக்கிறார்கள்..! எமது ஆங்கில மோகத்தால் தமிழை கதைப்பதை கேவலமாகவும் ஆங்கிலம் கதைப்பதை கௌரவமாகவும் நம்மில் பலர் கருதுகிறார்கள். ஆனால் உண்மை
அதுவல்ல நாம் எந்த மொழியை பேசுகின்றோம் என்பதை விட எவ்வாறு பேசுகின்றோம் என்பதே முக்கியம். இதற்காக ஆங்கிலம் பேசவேண்டாம் என்று கூறவில்லை நம் மொழியுடன் இன்னுமொரு மொழி தெரிந்திருப்பது என்றும் தவறு இல்லை. ஆனால் அதற்கொன்று ஒரு முறை இருக்கின்றது. இன்னொரு மொழியினருடனோ அல்லது ஆங்கிலத்தை தொடர்பாடல் மொழியாக கொண்டவருடன் நீங்கள் ஆங்கிலத்தில் சரளமாக கதையுங்கள். எமது தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டவர்களுடன் தமிழில் கதையுங்கள் அதைதான் நான் கூறுகின்றேன்.
குறிப்பாக வெளிநாட்டில் வாழும் தமிழர்கள்(பலர்) தங்களுக்கும் தமிழுக்கும் ஏதோ எட்டாப் பொருத்தம் மாதிரி ஆங்கிலத்தில் தான் கதைப்பார்கள். கேட்டால் ஐ டோன்ட் நோ தமிழ்(!) என்கிறார்கள் இதை நான் இந்த பதிவுக்காக குறிப்பிடவில்லை. இதை நாளாந்தம் என் கண் கூடாக கண்டு கொண்டு இருக்கிறேன். இப்படி பேசுபர்கள் யார் என்று பார்த்தால் இவர்கள் இங்கிலாந்தில் பிறந்த தமிழர்கள் அல்லர் இவர்கள் யுத்த நடவடிக்கை காரணமாக வெளிநாடுக்கு இடம் பெயந்தவர்கள்,
சரி.. இவர்கள் பேசும் ஆங்கிலம் ஆகா என்ன அ(எ)ருமை..! எவ்வாறு எல்லாம் ஆங்கிலம் கதைக்கலாம், இலக்கணம் தவறாமல் கதைப்பது எப்படி என்று இவர்கள் தான் இங்கிலாந்து மகாராணிகே கற்று கொடுக்க வேண்டும். இவ்வாறு ஆங்கிலம் பேசுபவர்கள் தமது பிள்ளைகளுடன் தமிழில் தான் உரையாடுகிறார்கள். தமிழை வளர்க்க வேண்டும் என்று இல்லை இவர்கள் ஆங்கிலம் கதைத்தால் இவர்களின் பிள்ளைகளுக்கு விளங்காது இவர்களது பிள்ளைகள் ஆங்கிலம் கதைத்தால் இவர்களுக்கு சுத்தமாக விளங்காது. இவர்கள் வெளுத்து கட்டுவது சக தமிழர்களிடம் மாத்திரமே.
இவர்கள் ஈழத்தில் இருக்கும் அவர்களது உறவினர்களுக்கு தொலைபேசியில் உரையாடினாலும் சிறிது ஆங்கிலம் கலந்து தான் உரையாடுவார்கள் (பந்தா). இவ்வாறு பேசுவது பெரும் பாலும் ஆண்களே என்பதும் வருத்தத்துக்குரிய விடயம். ஆண்களோடு ஒப்பிடும் பொழுது பெண்கள் பருவாயில்லை. ஏனெனில் தென்றலோ தங்கமோ திருமதி செல்வமோ (சின்னத்திரை நாடகங்கள்) ஆங்கிலத்தில் ஒளிபரப்ப படுவதில்லை என்பதுதான். ஆனால் இவ்வாறு வேறு நாட்டவர்கள் அல்லது வேறு மொழியினர் நடந்து கொள்வதில்லை என்பது தான் கவலைக்குரிய விடயம். இரண்டு பிரஞ்சுகாரர்கள் சந்தித்துகொண்டால் கொண்டால் அவர்களது உரையாடல் பிரஞ்சு மொழியிலேயே அமைந்திருக்கும். இதே போல இரண்டு ஆங்கில நாட்டவர் சந்தித்து கொண்டால் அவர்கள் உரையாடல் ஆங்கில மொழியிலேயே அமைந்திருக்கும். ஆனால் எமது தமிழர்கள் சந்தித்து கொண்டால் மட்டும் அம்மாடி பிழையோ சரியோ நாலு வார்த்தை ஆங்கிலத்தில் கதைத்தால் தான் அவர்களுக்கு அன்று நித்திரையே வரும்.
அண்மையில் என் நண்பனின் உறவினர் வீட்டுக்கு போயிருந்தேன்
நானும் நண்பனும் வீட்டுக்குள் நுழையும் போது உள்ளே தொலைக்காட்சியில் தீபம்(தமிழ்தொலைக்காட்சி) வடிவேலுவின் காமெடிக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது என் நண்பனுடைய உறவினர் அவருடைய பதினொரு வயது மகளும் எட்டு வயது மகனும் வாய்விட்டு சிரித்து அதை ரசித்துக்கொண்டு இருந்தார்கள். எங்களை கண்டதும் எழுந்து வரவேற்ற அந்த உறவு என்னிடம் தம்பி இந்த பிள்ளையல் தமிழ் ரீவியே பாக்குதுவள் இல்ல
ஒரே பிரஞ்சு டீவி தான், இப்போ கூட பிரஞ்சு டீவில படம்தான்
பாத்தோண்டு இருந்துவள் நான்தான் செய்தி பாப்போம் எண்டு தீபத்துக்கு
மாத்தினான் என்று சொல்லியே வாறே அவர் மகளின் கைகளில் இருந்த
ரிமோட்டை புடுங்கி பிரஞ்சு சானல் ஒன்றில் மாற்றி விட்டார், ரசித்து பார்த்துகொண்டு இருந்த நிகழ்ச்சி மாற்றப்பட்டதின் அதிர்ப்ப்தி அந்த ரெண்டு குழந்தைகளினதும் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.
எங்களுடன் தமிழில் உரையாடியே படியே தன குழந்தைகளுடன் பிரஞ்சில்
உரையாடிக்கொண்டு இருந்தார், அவரின் பிரஞ்சு(!) உச்சரிப்பை வைத்தே அவர் பிரஞ்சு அறிவு எத்தகையது என்று என்னால் உணரும்படி இருந்தது. சிறிது நேரத்தில் அந்த குழந்தைகள் எழுந்து தங்கள் அறைகளுக்கே சென்று விட்டது ஆனால் அவர் பந்த பேச்சு மட்டும் செல்லவே இல்லை.
தொலைக்காட்சியில் போய்கொண்டு இருந்த பிரஞ்சு படத்தின் சிறு சிறு
மொக்கை நகைசுவைக்காட்சிகெல்லாம் விழுந்து விழுந்து சிரித்து (அவருக்கு பிரஞ்சு நல்லாதெரியுமாம்) கடுப்பை கிளப்பி கொண்டு இருந்தார், எனக்கு ஏன்டா வந்தோம் என்று ஆகிவிட்டது. இது ஒரு சின்ன உதாரணம் இவரைப்போன்றுதான் இன்றைய வெளிநாடு வாழ் தமிழர்கள்
பெரும்பாலானோர் இருக்கிறார்கள்.
தமிழை வளர்க வேண்டும் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும் என்று போராடிக்கொண்டு இருக்கின்றோம். ஏன் தமிழர்களிடையே ஆங்கிலத்தை பேசி ஆங்கிலேயர்களுக்கு அடிமை பட்டு இருப்பதை விரும்புகிறிர்கள்..? ஏன் இந்த பகட்டு வாழ்க்கை..? உங்களால் முடிந்த வரை தமிழில் உரையாடுங்கள் தவிர்க்க முடியாத இடங்களில் மட்டும் ஆங்கிலத்தில் பேசுங்கள். ஏன் இந்த போலி வாழ்க்கை..? நீங்கள் இறந்தால் யாரும் FATHER என்றோ MOTHER என்றோ அழ போவதில்லை. வெள்ளைக்காரனின் பிள்ளை பிறக்கும் பொது கூட அம்மா என்று தான் பிறக்கிறது. மம்மி என்று பிறப்பதில்லை. ஏன் இங்கிலாந்தில் இருக்கும் மாடு கூட அம்மா என்று தான் கதறுகின்றது. நீங்க ஏனைய்யா அம்மி மம்மி எண்டு கொண்டு திரிகிறீர்கள்..? புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழ் பெற்றோர்களின் பிள்ளைகள் தமிழை பேச மறுத்தலோ அல்லது தமிழை பேச தெரியாததோ அந்த பிள்ளையின் தவறு இல்லை, அது அந்த பெற்றோரின் தவறு தமிழை வளர்க வேண்டும் என்று உண்மையிலேயே உங்களுக்கு அக்கறை இருந்தால் உங்கள் பிள்ளைகளுக்கு தமிழரின் வரலாறு பற்றியும் தமிழரின் கலாசாரம் பற்றியும் தமிழ் மொழியின் சிறப்பு பற்றியும் நீங்களே ஆசிரியராய் இருந்து கற்று கொடுங்கள். அப்பிடி இல்லாவிடின் தயவு செய்து நீங்க தமிழர்கள் என்று கூற வேண்டாம். தமிழை தெரியாதவன் தமிழனாக இருந்து எவ்வித பயனும் இல்லை
பிரான்ஸ் இங்கிலாந்து கனடா ஜெர்மனி சுவிஸ் என்று எந்தெந்த நாடுகளில் தமிழர்கள் இருக்கிறார்களோ அந்தந்த நாட்டு மொழிகள் கதைத்தால் தங்களுக்கு கெளரவமாம் எண்டு சொல்லிக்கொண்டு திரியும் இவர்களுக்கு ஒரு பாடலை நினைவு படத்தலாம் எண்டு நினைக்கிறன்..
"சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா"
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா"
இந்த பாடலில் குறிப்பிடுவதை போல இந்த உலகத்தில் பேசும் மொழிகளில் மன உணர்ச்சியை வெளிப்படுத்தும் சொற்கள் இருக்கும் ஒரே ஒரு மொழி தமிழ் மொழி தான். அதை மறந்து விட்டு நானுறு ஆண்டுகளுக்கு முன் வந்த ஆங்கிலேயரின் மொழியினை கதைக்கும் உங்களை தமிழில் என்ன வார்த்தை கொண்டு பேசுவது..??? வேண்டாம் ஏன் தமிழை கதைக்க மறுக்கும் உங்களை தமிழில் பேசி தமிழை அவமானப் படுத்த விரும்பவில்லை என்றோ ஒரு நாள் நீங்கள் வருந்தித் திருந்துவீர்கள். அன்றே உங்களை தமிழ்த் தாய் மன்னிப்பாள்.
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் -
என்றன் உடல்சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்
பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும்
பைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும்
ஓடையிலே என்சாம்பல் ஓடும்போதும்
ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டு.
டிஸ்கி : இது நான் எழுதிய பதிவு அல்ல, இப்பதிவில் சில மட்டும் நான் எழுதி சில திருத்தங்கள் மட்டுமே செய்து உள்ளேன், இப்பதிவு
லண்டனில் இருக்கும் என் தம்பியின் நண்பன் "யதுர்சன்" எழுதி
என் இமெயிலுக்கு அனுப்பியதை இங்கு பிரசுரித்து உள்ளேன்
"அவரின் இந்த கோவம் தமிழை நேசிக்கும் என்னைப்போன்றவர்களுக்கும் இருப்பதுதான்"
வேதனை தரக்கூடிய அதே நேரத்தில் வெட்கப்படக்கூடிய செய்தி நண்பா
பதிலளிநீக்குஏன் எம் தமிழர்கள் இப்படி அந்நிய மோகம் கொண்டு அலைகின்றனர் என்று தெரியவில்லை
நல்ல பதிவு
வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்களின் நண்பருக்கும்
உண்மை தான். தமிழனே தமிழை போற்றாவிட்டால், தமிழின் சிறப்பை வேறு யார் போற்றுவார்கள்.நல்ல பதிவு
பதிலளிநீக்குஎன் கோபத்தையும் கொஞ்சம் படித்து பாருங்கள்.
பதிலளிநீக்குhttp://sshathiesh.blogspot.com/2011/06/blog-post_20.html
என்னவென்று சொல்வது... நம் தமிழும் தமிழரும் படும்பாட்டை..
பதிலளிநீக்குசூப்பர் தலைவா .. ஆனால் இந்த நிலை மாறும் என்பது கேள்விக்குறியே ... ஆனால் நான் பார்த்திருக்கிறேன் பலரை, புலம்பெயர்ந்த தேசத்தில் பிறந்த தமிழ் குழந்தைகள் தமக்கு தமிழ் பேச தெரியவில்லையே என்று கூனி குறிக்கி நிற்பதை ... எல்லாம் பெற்றோரின் பிழை தான்...
பதிலளிநீக்கு///அண்மையில் என் நண்பனின் உறவினர் வீட்டுக்கு போயிருந்தேன்
பதிலளிநீக்குநானும் நண்பனும் வீட்டுக்குள் நுழையும் போது உள்ளே தொலைக்காட்சியில் தீபம்(தமிழ்தொலைக்காட்சி) வடிவேலுவின் காமெடிக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது என் நண்பனுடைய உறவினர் அவருடைய பதினொரு வயது மகளும் எட்டு வயது மகனும் வாய்விட்டு சிரித்து அதை ரசித்துக்கொண்டு இருந்தார்கள். எங்களை கண்டதும் எழுந்து வரவேற்ற அந்த உறவு என்னிடம் தம்பி இந்த பிள்ளையல் தமிழ் ரீவியே பாக்குதுவள் இல்ல
ஒரே பிரஞ்சு டீவி தான், இப்போ கூட பிரஞ்சு டீவில படம்தான்// இப்பிடி ஒரு சம்பவம் எனக்கும் நடந்தது ...
தன் மகளுக்கு தாயின் கட்டளை " நீ என்னுடன் கதைக்கும் போது ஆங்கிலத்தில் தான் கதைக்கனும் " என்று ........உருப்படுமா ..!!!
பெற்றோர்கள் தான் உணர்ந்து செயற்ப்பட வேண்டும் ... தாம் தமிழர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது...
பதிலளிநீக்குநண்பா ரொம்ப ரொம்ப சந்தோசமாய் இருக்கு...
பதிலளிநீக்குஉங்கள் ஆதங்கத்தைப்பார்க்கும் போது..
100 வீதம் அத்தனையும் உண்மை நண்பா....
அருமையான பதிவு...
எங்கள் மொழி அழிந்துகொண்டே போகிறது ....
இப்போதே இந்நிலையெனில் போகப் போக....????????????????????????????
வாழ்த்துக்கள் நண்பா....
!!எனது பக்கம் லெப்.கேணல் புரட்சிநிலாவின் தொடர் ஓடுகிறது ஓடிவாங்கோ..
///டிஸ்கி : இது நான் எழுதிய பதிவு அல்ல, இப்பதிவில் சில மட்டும் நான் எழுதி சில திருத்தங்கள் மட்டுமே செய்து உள்ளேன், இப்பதிவு
பதிலளிநீக்குலண்டனில் இருக்கும் என் தம்பியின் நண்பன் "யதுர்சன்" எழுதி
என் இமெயிலுக்கு அனுப்பியதை இங்கு பிரசுரித்து உள்ளேன்
"அவரின் இந்த கோவம் தமிழை நேசிக்கும் என்னைப்போன்றவர்களுக்கும் இருப்பதுதான்"/// அவருக்கு வாழ்த்துக்கள் ...
//"சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
பதிலளிநீக்குஅட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா" //
வாழ்க தமிழ் ! வெல்க தமிழ் !!
நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள்.
அருமையான விஷயம் ஒன்றை, நகைச்சுவை இழையோட சொல்லியிருக்கிறீர்கள் துசி! கட்டுரையும் தேவையான அளவுக்கு விரிவாக இருக்கிறது!
பதிலளிநீக்குஇப்பதிவின் பல பகுதிகளை, என்னைய நண்பர்கள் எடுத்தாண்டு கருத்துக்களைக் கூற முடியும் என்பதால், நான் எம்மவர்கள் இங்கு பிரெஞ்சு மொழியை எப்படியெல்லாம் கொலை செய்கிறார்கள் என்பது பற்றி சிறிது சொல்கிறேன்!
தாய்மொழியாக தமிழ்மொழியை, இழிவுவெனக்கருதி, அதனைப் பேசாதிருப்பவர்கள், பிரெஞ்சையாவது ஒழுங்காக பேசலாம் இல்லையா?
நண்பர் ஒருவர் புதிதாக வேலைக்கு சேர்ந்தார்! நான் கேட்டேன் எங்கே இருக்கிறீர்கள் என்று! அவர் சொன்னார்
“ சென்னைக் கனி “
என்று! எனக்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை! சென்னை எப்போது ஃபிரான்சுக்கு வந்தது?
ஹி ஹி ஹி செனெகனி என்பதைத்தான் நண்பர் சென்னைக்கனியாக மாற்றிவிட்டார்!
லா ஷபேல் என்பதை எம்மவர்கள் லாச்சப்பல், லாச்சப்பல் என்று கொலையாய் கொல்வார்கள்!
ஊஸ்மன் சலசா என்பதை எம்மவர்கள் 1 செல்லசார், செல்லசார் “ என்று சொல்லும்போது சிரிப்பு சிரிப்பா வரும்!
அத்தேன்ஷியோ என்பதை சிலர் அத்தோசியம் என்று உச்சரித்து வெறுப்பேத்துவார்கள்!
போர்த்து து பஞ்ஞொலெ என்பதை போத்துபனியோலை என்று கொஞ்சம் கூட யோசனை இல்லாமல் சொல்கிறார்கள்!
எமது தலைநகரை, யாரைப் பார்த்தாலும் பரிஸ், பரிஸ் என்றே சொல்கிறார்கள்! ஃப்ரெஞ்சு முறைப்படி பரி என்றுதானே வரும்!
மெத்ரோ வை மெற்றோ என்று சொல்வதும், எர் இ எர் ஐ, ஆர் ஈ ஆர் என்று சொல்வதும், என எம்மவர்களின் ஃபிரெஞ்சுக் கொலைகள் சொல்லி மாளாதவை!
எவன் ஒருவன் தனது தாய்மொழியை நேசிக்கிறானோ, அவனால் மட்டுமே அன்னிய மொழிகளையும் நேசிக்க முடியும்/
-பகிர்வுக்கு நன்றி சகோ..
பதிலளிநீக்குஇவர்களை திருத்த முடியாது பாஸ்
வணக்கம் துஸி,..
பதிலளிநீக்குஇருங்கோ, ப்டித்து விட்டு வருகிறேன்.
இவர்கள் ஆங்கிலம் கதைத்தால் இவர்களின் பிள்ளைகளுக்கு விளங்காது இவர்களது பிள்ளைகள் ஆங்கிலம் கதைத்தால் இவர்களுக்கு சுத்தமாக விளங்காது. இவர்கள் வெளுத்து கட்டுவது சக தமிழர்களிடம் மாத்திரமே.//
பதிலளிநீக்குஅடிங்...இதில இன்னுமொரு கூத்து, ஊருக்குப் புலத்தில் இருந்து வருகின்ற உள்ளங்கள் அரை முக்காற் காற்சட்டையும் போட்டு, நுனி நாக்கிலை ஆங்கிலம் பேசி, எங்களுக்குச் சோக் காட்டுவாளுங்க...அப்ப வரும் ஆத்திரம்...
ஆனா ஒன்னுமே பண்ண முடியாதில்லே..
ஹி....
தமிழின் இன்றைய நிலையினை உணர்ந்து, உங்கள் நண்பர் தனது ஆதங்கத்தினை இப் பதிவில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
பதிலளிநீக்குதமிழுக்காக போராடுகிறோம், தமிழருக்கென்று நாடு வேண்டும் எனக் கூக்குரல் போடுவோர் தான், வீடுகளில் தமிழைப் பேசாது, வேறு மொழிகளைப் பேசி மகிழ்வதாக எனது புலம் பெயர் நண்பன் ஒருவன் சொல்லி ஆதங்கப்பட்டுக் கொள்வான்.
காத்திரமான பதிவு சகோ,
பதிலளிநீக்குஉங்கள் பதிவின் அடிப்படையில் பார்க்கையில் புலம் பெயர்ந்த மூன்றாம் தலமைமுறையிடமிருந்து தமிழை அந்நியப்படுத்துவதிலே மக்கள் குறியாக இருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த நிலை மாற வேண்டும்.
//A.R.ராஜகோபாலன் கூறியது...
பதிலளிநீக்குவேதனை தரக்கூடிய அதே நேரத்தில் வெட்கப்படக்கூடிய செய்தி நண்பா
ஏன் எம் தமிழர்கள் இப்படி அந்நிய மோகம் கொண்டு அலைகின்றனர் என்று தெரியவில்லை
நல்ல பதிவு
வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்களின் நண்பருக்கும்//
உண்மைதான் நண்பரே,
நம்மிடம் இருப்பதை விட அடுத்தவர்களிடம் இருப்பதுதான் உயர்ந்தது என்று நினைக்கும் மனம் தான் நம்மில் அதிகமானவர்களிடம் இருக்குறது.
//தமிழ் உதயம் கூறியது...
பதிலளிநீக்குஉண்மை தான். தமிழனே தமிழை போற்றாவிட்டால், தமிழின் சிறப்பை வேறு யார் போற்றுவார்கள்.நல்ல பதிவு
//
உண்மைதான்
எல்லோரும் உணர வேண்டிய விடயம் இது
//SShathiesh-சதீஷ். கூறியது...
பதிலளிநீக்குஎன் கோபத்தையும் கொஞ்சம் படித்து பாருங்கள்.
http://sshathiesh.blogspot.com/2011/06/blog-post_20.html
//
நன்றி சகோ
இதோ வருகிறேன்......
//சந்ரு கூறியது...
பதிலளிநீக்குஎன்னவென்று சொல்வது... நம் தமிழும் தமிழரும் படும்பாட்டை..
//
உண்மைதான்
நினைத்தாலே வேதனை தரும் விடயம் இது
//கந்தசாமி. கூறியது...
பதிலளிநீக்குசூப்பர் தலைவா .. ஆனால் இந்த நிலை மாறும் என்பது கேள்விக்குறியே ... ஆனால் நான் பார்த்திருக்கிறேன் பலரை, புலம்பெயர்ந்த தேசத்தில் பிறந்த தமிழ் குழந்தைகள் தமக்கு தமிழ் பேச தெரியவில்லையே என்று கூனி குறிக்கி நிற்பதை ... எல்லாம் பெற்றோரின் பிழை தான்...
//
சத்திய வார்த்தைகள் பாஸ்
//கந்தசாமி. கூறியது...
பதிலளிநீக்குஇப்பிடி ஒரு சம்பவம் எனக்கும் நடந்தது ...
தன் மகளுக்கு தாயின் கட்டளை " நீ என்னுடன் கதைக்கும் போது ஆங்கிலத்தில் தான் கதைக்கனும் " என்று ........உருப்படுமா ..!!!
//
இவர்களை நிக்க வைத்து சுட்டாலும் தப்பு இல்லை பாஸ்,
தன மொழியை மதிக்காதவன் தன தாயை எப்படி மதிப்பான்
//vidivelli கூறியது...
பதிலளிநீக்குநண்பா ரொம்ப ரொம்ப சந்தோசமாய் இருக்கு...
உங்கள் ஆதங்கத்தைப்பார்க்கும் போது..
100 வீதம் அத்தனையும் உண்மை நண்பா....
அருமையான பதிவு...
எங்கள் மொழி அழிந்துகொண்டே போகிறது ....
இப்போதே இந்நிலையெனில் போகப் போக....????????????????????????????
வாழ்த்துக்கள் நண்பா....
!!எனது பக்கம் லெப்.கேணல் புரட்சிநிலாவின் தொடர் ஓடுகிறது ஓடிவாங்கோ..
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா
இதோ வந்துடுறேன்
வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...
பதிலளிநீக்கு//"சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா" //
வாழ்க தமிழ் ! வெல்க தமிழ் !!
நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள்.//
நன்றி அய்யா
//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...
பதிலளிநீக்குஅருமையான விஷயம் ஒன்றை, நகைச்சுவை இழையோட சொல்லியிருக்கிறீர்கள் துசி! கட்டுரையும் தேவையான அளவுக்கு விரிவாக இருக்கிறது...........................................................!//
நன்றி பாஸ்
உங்கள் ஸ்டைலில் கருத்துரை இட்டு உள்ளீர்கள்
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை மறுக்க முடியாத நிதர்சனம்
உங்கள் கருத்துரையை வாசிக்கும் போது எனக்கு சிரிப்பும் அடக்க முடியவில்லை
இவை யாவும் நாளாந்தம் நானும் சந்திப்பதுதான்,
இவர்கள் தமிழை பேச வெக்கப்பட்டு பிரஞ்சையும் குதறி கடைசியில் காமெடியன் ஆகி விடுகிறார்கள்
அடிக்கடி வாங்க பாஸ்
//மைந்தன் சிவா கூறியது...
பதிலளிநீக்கு-பகிர்வுக்கு நன்றி சகோ..
இவர்களை திருத்த முடியாது பாஸ்//
நன்றி நண்பா
//நிரூபன் கூறியது...
பதிலளிநீக்குஇவர்கள் ஆங்கிலம் கதைத்தால் இவர்களின் பிள்ளைகளுக்கு விளங்காது இவர்களது பிள்ளைகள் ஆங்கிலம் கதைத்தால் இவர்களுக்கு சுத்தமாக விளங்காது. இவர்கள் வெளுத்து கட்டுவது சக தமிழர்களிடம் மாத்திரமே.//
அடிங்...இதில இன்னுமொரு கூத்து, ஊருக்குப் புலத்தில் இருந்து வருகின்ற உள்ளங்கள் அரை முக்காற் காற்சட்டையும் போட்டு, நுனி நாக்கிலை ஆங்கிலம் பேசி, எங்களுக்குச் சோக் காட்டுவாளுங்க...அப்ப வரும் ஆத்திரம்...
ஆனா ஒன்னுமே பண்ண முடியாதில்லே..
ஹி....
//
இவர்கள் இங்கே தான் இப்படி என்றால் உங்கே வந்தும் இதே விளையாட்டைத்தான் காட்டுகிறார்களா
அவ்வ
//நிரூபன் கூறியது...
பதிலளிநீக்குதமிழின் இன்றைய நிலையினை உணர்ந்து, உங்கள் நண்பர் தனது ஆதங்கத்தினை இப் பதிவில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
தமிழுக்காக போராடுகிறோம், தமிழருக்கென்று நாடு வேண்டும் எனக் கூக்குரல் போடுவோர் தான், வீடுகளில் தமிழைப் பேசாது, வேறு மொழிகளைப் பேசி மகிழ்வதாக எனது புலம் பெயர் நண்பன் ஒருவன் சொல்லி ஆதங்கப்பட்டுக் கொள்வான்.//
உங்கள் நண்பரின் கவலை, நிதர்சன உண்மை பாஸ்
புலம் பெயர்ந்த காலத்திலிருந்து மொழி,இன அக்கறை உள்ளவர்கள் நம்மைப்போலப் புலம்பிக்கொண்டுதான் இருக்கிறோம் துஷ்யந்தன்.சிலர் ஏதோ ஆகாயத்தில் பறப்பதுபோலத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
பதிலளிநீக்குஎதிர்காலம் பற்றிய நினைவோ இன்னொரு நாட்டில் இருக்கிறோம்,நாம் யார் என்ற நினவே இல்லை அவர்களுக்கு.
அதற்காக எல்லோரையுமே குறை சொல்லவும் முடியாது !
நல்ல கருத்துகள் துசி ......
பதிலளிநீக்கு//"சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
பதிலளிநீக்குஅட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா" //
ரிப்பீட்டு .. ஹிஹி ( இன்னொருமுறை )
உண்மையான ஆதங்கம் நண்பா ! யார் மீதும் மொழியைத் தினிக்க முடியாது உணர்ந்து கொண்டால் தான் விடிவு ஒன்று மட்டும் என் சிந்தனை பகட்டு மொழி பாடையில் போகும் போது பாடிவருமா?
பதிலளிநீக்குநியாயமான கோவம்தான் நண்பா;
பதிலளிநீக்குசிலர் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று கொடுப்பதில்லை கேட்டால் அவர்கள் இங்கே இருக்கப்போற பிள்ளைகள் அவங்களுக்கு எதுக்கு தமிழ் என்று கேட்குரார்கள் ; என்ன செய்ய திருத்த முடியாது சிலரை ;
ஒட்டை வடையார் பிழையான பிரன்சு உச்சரிப்பை தந்திருக்கிறார் லா சப்பல் சரியே உஸ்மான் செலசாரும் சரியே அத்துடன் பிரான்சில் இருந்து கொண்டு பிரன்சு மொழியை கதைக்கவேண்டாம் என்று நீங்கள் சொல்லவில்லையென நினைக்கிரேன்..!?
பதிலளிநீக்கு