திங்கள், ஏப்ரல் 25, 2011

வெறுக்கத்தான் நினைக்குறேன்..

சிணுங்கி சிணுங்கி பேசும் 
உன் செல்லக்குரலை - என் 
தேசியக்கீதமாய்  
மாற்றிவிட்டுப்போன
வித்தைக்காரியே...

ண்ணுமே தெரியாதவள்போல்
அருகில் வந்து
மோகத்தை தூண்டிவிட்டு
உன் தேவைகளை
பூர்த்தி செய்யும்
காரியக்காரியே...

டந்தால்  என் நிழலாக 
படித்தால் என் புத்தகமாக 
தூங்கினால் என் கனவாக 
வெகுதூரத்தில் இருந்தாலும்
அருகில் இருப்பதைப்போல்
என்னை ஆட்டிப்படைக்கும்
மாயக்காரியே...  

விருப்போ வெறுப்போ
துக்கமோ சந்தோசமோ 
எந் நிலையில் நான் இருந்தாலும்
உன்னைப்பார்த்ததும் - எல்லாம் மறந்து 
உன்னைக்காதலிக்க வெக்கும்
வசியக்காரியே..

ங்கேயும் எப்போதும் 
எந்நேரமும் 
உன்னையே உன்னைப்பற்றி 
மட்டுமே - பேச வெக்கும்
காதல்காரியே...

ன் கைப்பொம்மையாக  
என்னை சீண்டி
விளையாடும் உன்னை
வெறுக்கத்தான் நினைக்குறேன்
ஆனாலும்
என்னையே என்னால்
எப்படி - வெறுக்கமுடியும்
சொல்லடி என்னவளே.ஆக்கம் துஷ்யந்தன்

வியாழன், ஏப்ரல் 14, 2011

காதல் சர்வாதிகாரி

ன்னிடம் பேசுவதற்காக
ஒவ்வொரு வார்த்தைகளையும்
பல முறை
ஒத்திகை பாக்கும் நான்
நீ வந்ததும் - தட்டுதடுமாறி
உளறிக்கொட்டுகுறேன் காரணம்
எல்லா தமிழ் வார்தைகளும்
உன்னுடன் பேச
அடம்புடித்து சண்டை போடுவதை
அறிவாயா நீ..

பார்த்தால் கூட
அடிப்பவன் - இன்று
அடித்தால் கூட
புன்னகைக்கிறேன்
மிடுக்குடன் அலைந்தவன்
இன்று - பூக்களுடன்
நடக்குறேன்
கடைகளில் கடவுள்
சிலைகளை கண்டால் கூட
உனக்காக நின்று
ஆழமாய் பிராத்திக்கிறேன்,
என்னை அடியோடு - புரட்டிப்போட்ட
மாயக்காரி நீ..

திட்டினால்
உதட்டை மூடும் முத்தம்
விலகினால்
இழுத்து  இறுக்கமான அணைப்பு
பார்க்காவிட்டால்
ஆளை விழுங்கும் குறுகுறு பார்வை
பேசாவிட்டால் பேசதூண்டும்
மயக்கும் அருகாமை -  இப்படி
தவறுகளை  தாராளமாய்
செய்யத்தூண்டும்
காதல் சர்வாதிகாரி நீ..


ஆக்கம் துஷ்யந்தன்செவ்வாய், ஏப்ரல் 12, 2011

தமிழ்நாட்டு மக்களுக்கு ஈழத்து உறவின் ஒரு பகிரங்க கடிதம்

ஈழத்தின்  தலைவன் பிரபாகரன்  இருக்குறாரா இல்லியா
அது இன்றுவரை  விடை இல்லா கேள்வியாகவே இருக்கு. ஈழத்து   சண்டை ஓய்ந்த போது இலங்கை அரசாங்கத்தால் பிரபாகரன் இறந்து விட்டதாக அவர்களின் தொலைகாட்சியில் காட்டிகொண்டிருந்த  போது, பிரபாகரனை வெறுத்தவர்கள் கூட கண்கலங்காமல் இருந்திருக்க மாட்டார்கள். அந்த நேரத்தில் அன்று எனது இந்திய நண்பர் லோகுக்கு நான் எழுதிய  கடிதம் இது.  இதை அவர் தன் ப்ளாக் 'அச்சம் தவிர்' இல் வெளியிட்டு இருந்தார். ப்ளாக்கில் வெளி வந்த என் முதல் எளுத்தும் கூட.
நாளை மறுநாள் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுக்கும் உயர்பதவியில் என் மதிப்பிற்குரிய இந்திய தமிழ் மக்கள் இருப்பதால், இக்கடிதத்தை மீண்டும் அவர்கள் பார்வையில் வைக்கணும் எண்டு மனசுக்கு பட்டுது  இதோ உங்கள் பார்வைக்கு..
( இந்திய நண்பர்களுக்கு: தலைவர் இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மறு நிமிடம்  ஆத்திரத்தில் அவசரத்தில் கோவத்தில் இயலாமையுடன்  எளுதிய  கடிதம் இது, இக் கடிதத்தில் தவறுகளும் வெறுப்புக்களும்தான் அதிகம் இருக்குறது என்று எனக்கு நன்று தெரியும்    இதற்காக இப்போது கூட மன்னிப்பு கேக்க எனது மனசு இடம்கொடுக்கவில்லை ஆனாலும் நீங்களும் என்னை போல் ஒருவன்தானே, அதனால் என்னை புரிந்து கொள்வீர்கள் என நம்புகுறேன்.. )


Wednesday, May 20, 2009

நம் மீதான ஒரு இலங்கை தமிழரின் கோபம். - பதில் என்ன..


துஷ்யந்தன்- பிரான்ஸ் வாழ் இலங்கை தமிழர்...
அவரது உறவினர்கள் விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து சமீபத்தில் இறந்துள்ளனர்..
எனது பதிவுகளின் மூலம் எனக்கு நண்பரானார்..
நேற்று கூட என்னோடு தொலைபேசியில் பேசினார்..
இந்நிலையில் சற்று முன் அவரிடமிருந்து மிக கோபமாக கீழ்கண்டவாறு ஒரு மின்னஞ்சல் வந்தது.."லோகு
ரொம்ப
கஷ்டமா இருக்கு
நான்
கொஞ்சம் கூட எதிர் பார்க்கல
இப்போ
கூட நம்ப முடியல
இதே
பொய்யா இருக்கும் என்றே நினைக்கிறேன்
உண்மையாவே
பொய்தான்..ரொம்ப கோவம் வருது
இதுக்கு காரணமே சோனியா தான்
இவ்ளோ பிரச்சனைக்கு பின்னும் சோனியாவ தூக்கி மேல வச்சது நீங்கதான் (உங்க சனம்)

இன்றைக்கு
பிரபாகரன் செத்ததும் நீலிக்கண்ணீர் வடிக்க தமிழ்நாட்டில் நிறைய கூட்டம் இருக்கும் ... அவங்களுக்கும், ஏன் உங்களில் யாருக்குமே தலைவர பத்தி பேச உரிமை இல்லை, தகுதியும் இல்லை..
இன்றைக்கு
தலைவரோட, எங்களோட இந்த நிலைமைக்கு காரணம் இந்தியா, இந்தியா, இந்தியா தான்..

பிரான்ஸ் வந்தது முதல் இன்றைக்கு நான் அழுதே இருக்கேன்.

சோகத்த
விட உங்கள் நாட்டின் மேல் இருக்கும் கோபம் தான் அதிகம்..
தலைவர
கடைசி நிலைல கூட நீங்க நெனச்சு இருந்தா காப்பாத்தி இருக்கலாம்.. அதை நெனச்சாத்தான் ரொம்ப கவலையா இருக்கு..

ஒன்று
மட்டும் லோகு,, கொஞ்ச நாள் மட்டும் கிடைச்சு இருந்தாலும், இப்படி ஒரு தலைவர் கிடைச்சதுக்கு நாங்கள் பெருமை பட்டு தலை நிமிர்ந்து நிக்கிறோம்.. ஆனா நீங்க??
உங்க
நாட்டு பெரிய அரசியல் (தறுதலைகள்) வாதிகளை நினைச்சு வெக்கப்பட்டு தலை குனிஞ்சு நிக்கணும் லோகு..
எங்களுக்கு
உங்கள மாதிரி தனி நாட்டு இல்லாட்டியும், நல்ல தலைவன் இருந்தான்.. அதையும் உங்க புத்திசாலி தனத்தால இல்லாம ஆக்கிட்டீங்க... வாழ்த்துக்கள்..

எனக்கு
ஒன்று மட்டும் புரிய.. தமிழ் நாடு சோனியா வோட சொத்தா.. வெயிட் பண்ணுங்க.. ஒரு நாள் சோனியா தமிழ்நாட்டையும் ஸ்ரீ லங்க வெறியன் ராஜபக்சேவுக்கு (கச்சா தீவு மாதிரி) எழுதி வச்சாலும் ........( இதற்கு பின் அவர் எழுதிய சி வார்த்தைகள் எனக்கு புரியவில்லை )
ஏன்னா
உங்களுக்கு நாடா முக்கியம், 100 ரூபா தாளும், பிரியாணியும் கிடைச்சா போதுமே..

ஒருத்தியோட
பழி வாங்கும் கொலை வெறிக்கு ஒரு நாட்டையே (ஈழ்ம்) பலியாக்கிட்டீங்க...
ஈழாத்தோட
மக்களில் 75% யை அழிச்ச பெருமை உங்களுக்கும் சோனியாவுக்கும் தான்..
குமுதம்
ஞானியிடம் சொல்லி வாங்கி கொள்ளுங்கள் ஆளுக்கொரு இவ்வார பூச்செண்டு..

என்னோட
ஒரு கேள்விக்கு மட்டும் பதில் பிளீஸ் ராஜீவ் காந்தியை கொன்னாங்க, கொன்னாங்க என்றே சொல்லி எங்களை ஒதுக்கி இவ்ளோ பெரிய தண்டனை கொடுத்துட்டீங்களே..
(எங்கள் நாட்டில் உங்கள் ராஜீவ் அனுப்பிய மிருகங்கள் செய்த வெறியாட்டம் ஒருபுறம் இருக்கட்டும்)

அந்த
ராஜீவ பெத்த இந்திராவ கொன்னது யாரு??
உலகத்துக்கே
கிடைக்காத உங்களுக்கு கிடச்ச மகாத்மாவ கொன்னது யாரு??? இதையெல்லாம் செய்த உங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்..
மகாத்மா
இப்போ உயிரோடு இருந்திருந்த உங்களை நெனச்சு வெக்கி தலை குனிந்து இருப்பார்..

எங்களோட ரத்த கண்ணீர உங்க 'அபியோட' கிளிசரின் கண்ணீர் மறைத்து விட்டது.. அவ்ளோ தான்


போகட்டும், எங்களுக்கு புதுசு புதுசா பிரபாகரன் வந்து கொண்டு இருப்பார்கள்.. ஆனால் உங்களுக்கு???

நீங்க
செய்த பாவத்துக்கு எத்தனை தலைமுறை சென்றாலும்.. மீண்டும் மீண்டும் இதே கருணாநிதியும், ஜெயலலிதாவும் தான்...
இதுதான்
எங்கள் சாபம், உங்களுக்கு கொடுக்கும் தண்டனை..

லோகு
.. நெறைய எழுதிட்டேன்... ஆனால் மன்னிப்பு கேக்க நான் தயார் இல்லை.. இறுதியாக உலகத்திடம் ஒன்று மட்டும்..

உலக நாடுகளே..
எங்கள் எதிரி ஸ்ரீ லங்காவை நாங்கள் பார்த்து கொள்கிறோம்..

எங்கள்
நண்பன் இந்தியாவிடம் இருந்து எங்களை காப்பாற்று......

ப்படிக்கு துஷ்யந்தன் "


நன்றி: லோகு
(ப்ளாக் 'அச்சம் தவிர்') 

 
 
ஆக்கம்: துஷ்யந்தன்  

ஞாயிறு, ஏப்ரல் 10, 2011

களவானி

நீ களவாடி சென்றது
என் கனவுகள்  மட்டும் அல்ல
என் நினவுகளையும் தான்..

உன் மேல் வெரும்
கோவங்கள் எல்லாம்
உன்னை  பாத்ததும் ஏன்
மாயமாகின்றது..

கொடுத்து மட்டும்
பழக்கப்பட்ட எனக்கு 
திருடவும் (இதயம்) ஏன்
சொல்லிகொடுதாய் ..
கொஞ்சம் கோவம் 
கொஞ்சம் நேசம் என 
வரம் தரும்  இந்த திமிரை 
யார் தந்தார் உனக்கு ..

சண்டை போட்டால் 
முத்தம் தருகுறாய் 
உன்னை பாக்கும் போதெல்லாம் 
சண்டை போடச்சொல்லியல்லவா   
உதடு துடிக்குது .. 

ஆக்கம்:- துஷ்யந்தன்


வலைக்கு புதியவன்

வணக்கம் வலை நண்பர்களே..

வலை பிரியனாக இருந்த போதும்
வலை பக்கம் வரவேண்டும் எண்ட என்  நெடுநாள் ஆசை
வெளிநாட்டு இயந்திர வாழ்கையில் இன்றுதான் நிறைவேறி உள்ளது,
வலைக்கடலில் தத்தளித்து நீச்சல்  பழகும் இந்த சிறுவனை மன்னித்து
எனது கோபங்கள் சந்தோசங்கள் எதிர்பாப்புகள் கிறுக்கல்களையும் 
சகித்து கொள்வீர்கள் என்ற நம்பிகையுடன் ..
உங்கள் அன்பு நண்பன் 

துஷ்யந்தன்  
பாரிஸ்
பிரான்ஸ்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...