ஞாயிறு, ஜூலை 10, 2011

என் மனதை பாதித்த பத்து பெண்கள்.. ( இறுதி பகுதி )

இசைப்பிரியா
ழத்தின் அழகி என்று சொல்லக்கூடிய  ஈழப்பெண்களின் குறியீடாக திகழ்ந்தவர் இசைப்பிரியா. என்னின ஈழப்பெண் இசைப்பிரியா என்று  சொல்வதில் பெருமை எனக்கு.  அழகு திறமை அதிஸ்ரம் ஒன்று சேர அமைவதற்கு ரெம்ப அதிஸ்ரம் வேணும். அப்படிப்பட்ட அதிஸ்ரக்கார பெண் இசைப்பிரியா.   வன்னிக்கு   ஒருமுறை சென்றபோது  இசைப்பிரியாவை   நேரில் பார்த்துள்ளேன்.  1981இல் மே மாதம் 02ஆம் திகதி பிறந்த இசைப்பிரியாவின் இயற்பெயர் சோபனா.  1998இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்த இசைப்பிரியா தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவில் அடங்குகிற ஊடகத்துறையான நிதர்சனபிரிவுப் போராளியாக இருந்தார்.  நீண்ட காலமாக நிதர்சனப் பிரிவிலேயே இருந்தார்.  தமீழீழத் தேசியத் தொலைக்காட்சி
ஆரம்பிக்கப்பட்டபின் இசைப்பிரியாவின் வளர்ச்சி மிக அசுரத்தனமானது.
வன்னிப் போரின் இறுதிக் களத்தில் அவர் சரணடைந்த பொழுது அவரை
இராணுவம் மிகவும் கொடுமையாக சித்திரவதை செய்து வன்புணர்வுக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஒரு தாயாக அவர் கருவுற்று குழந்தையை சுமந்திருந்த நிலையில்தான் இப்படி வன்முறையால் சிதைத்துக் கொல்லப்பட்டார்.  நான் தூங்காமல் நரகமாக களித்த இரவு இசைப்பிரியாவின் அந்த கொடூர மரண காணொளி பார்த்த இரவுதான்.

தேவயாணி.

மிழ் சினிமாவில்  எனக்கு மிக பிடித்தமான நடிகை,   எனது  8  வயதில் இருந்து  எனக்கு தேவயானியை பிடிக்கும் இது பற்றி முன்பு ஒரு தனி பதிவே 
போட்டுள்ளேன்.  மிக திறமையான  நடிகை தேவயாணி,   அவருடைய நடிப்பு திறமைக்கு  ஒரு உதாரணம்   "பாரதி" திரைப்படம்.  அத்திரைப்படத்தில் பாரதியாரின் மனைவி செல்லம்மாவாக நடித்து இருப்பார்.  செல்லம்மா இப்படித்தான் இருந்திருப்பார் என்று என்னுள் ஒரு கணிப்பை வைத்து இருந்தேன் அதற்க்கு சற்றும் குறைவில்லாமல் செல்லம்மாவை கண்முன் கொண்டு வந்து  விட்டார்  தன் நடிப்பு திறமையால் தேவயாணி என்று அப்போதைய முதல்வர்  கருணாநிதி மனம் திறந்து பாராட்டினார்.  தமிழ்சினிமாவில் எவ்வித பின்பலமும் இன்றி அறிமுகமாகி முதன்மை இடத்தை கைப்பற்றியது  தேவயானியின் அசாத்திய திறமை. தேவயானியின் காதல் திருமணம் தமிழ்நாட்டில் அவ்வளவு பிரபலம்.  நடிகர் விக்ரமின் குமுதம் பேட்டி ஒன்றில் உங்களுக்கு பிடித்த காதல் ஜோடி எது என்ற கேள்விக்கு , லைலா-மஜ்னு , ஷாஜகான்-மும்தாஜ் வரிசையில் எனக்கு மிகவும் பிடித்த காதல் ஜோடி " தேவயாணி -ராஜகுமாரன்" என்று சொல்லியது தேவயானியின்  காதலுக்கு கிடைத்த மணிமகுடத்தில் பொறிக்கப்பட்ட முதன்மையான முத்து.

ஜூலியத்
                                                  
ன் வேலை இடத்தில் வேறு பிரிவொன்றில் வேலைசெய்யும் பிரான்ஸ் வாழ் ஆபிரிக்கா அழகி.  அசாத்திய துணிச்சல்காரி,  பெரியாரின் சிந்தனைக்கேற்ப இங்கு வாழும் புரட்சி பெண் என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிடலாம் இவளைப்பற்றி.  ஜூலியத்துக்கு வயது 55 ஜ நெருங்குது என்றால் யாராலையும் நம்பமுடியாது,  அவள் உடலழகு மட்டும்  அல்ல   பேச்சழகும் செய்கைகளும் என்றும் எனக்கு இருபது என்றே அமைந்து இருக்கும். ஜூலியத்துக்கு ஒன்பது பிள்ளைகள் ஒன்பதும் ஆண் பிள்ளைகள்தான்,  ஜூலியத்துக்கும் அவள் கணவனுக்கும் விவகாரத்து ஆனதில்  பிள்ளைகள் அனைத்தும் தந்தையுடன் இருக்க
ஜூலியத் மட்டும் தனியே இருக்கிறாள்.  தன் கணவனுடனான   விவகாரத்துக்கு   இப்படி    காரணம் சொல்லுவாள் . நான் பிரான்ஸ்  குடியுரிமை  பெற்றவள்  அவன் இங்கு வந்து விசா இல்லாமல் ரெம்ப கஸ்ரப்பட்டான், அவன் மேலானா பரிதாபம் காதலாக மாற திருமணம் செய்துகொண்டோம், ஒன்பது பிள்ளைகள் பிறந்தபின் அவன் நடத்தைகளில் மாற்றம் வரத்தொடங்கிவிட்டது,  என்னை கட்டுப்படுத்த ஆரம்பித்துவிட்டான்.  நான் ஒன்றும் நாய் இல்லை அவன் சொல் கேட்டு அவன் பின்னால் செல்ல,  என் தனி சுதந்திரத்தில் தலையிடுவவர்கள் யாராக இருந்தாலும் எப்போதும் அவர்களுடன் என்னால் ஒத்துபோக முடியாது.  விவகாரத்தின் பின் என் பிள்ளைகள் அவனுடன் இருக்கவே விரும்பினர் நானும் சம்மதித்து விட்டேன் என்று அசால்ட்டையாக சொல்லும் ஜூலியத் இப்போது இன்னொரு காதலில் விழுந்து அவருடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஜூலியத் காதலித்து இப்போது சேர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பது  தன்னைப்போல் சக பெண்ணான    இஸ்ரபெனி என்ற பிரஞ்சு பெண்ணோடு.

யாழினி 
நான் பிரான்ஸ் வந்த புதிதில் அறிமுகமானவர், பிரான்சில் நாங்கள் இருந்த
வீட்டுக்கு அருகில்தான் அவரும் இருந்தார் , இலங்கையில்  இருந்து குடும்பமாக சுவிஸ் வந்த   யாழினியக்கா  குடும்பத்தில்  எல்லோருக்கும் சுவிஸில்  விசா கிடைத்து இவருக்கு  மட்டும்  கிடைக்காமல்  விட  அங்கிருந்து  பிரான்ஸ் வந்து இங்கு ஒரு உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்,
நிறையா புத்தகங்கள் வாசிப்பார், எப்போதும் ஒரு வித மென் சோகம் 
அவர் முகத்தில் அப்பியே இருக்கும், எப்போவாது அவர்கள் வீட்டுக்கு
நாங்கள் போனால் அந்த குடும்பத்தார் யாழினியக்காவை  நடத்தும்விதம் 
அதிர்ச்சிகரமாக இருக்கும்.  அந்த வீட்டில் அவர் பயன்படுத்தும்  அத்தனை  பொருட்களும் தனி தனியாகவே இருக்கும், சில வேளைகளில் எங்கள் 
முன்னிலையிலேயே அவர்கள் பயன் படுத்தும் பொருட்கள் எதையேனும் 
 யாழினியக்கா எடுத்து பாவித்துவிட்டால்  அவர்கள் அவாவை கடிந்து கொள்வது எங்களை நெளிய வைத்துவிடும் இதன்காரணமாகவே அவர்கள் அழைத்தால் கூட அவர்கள் வீட்டுக்கு போவதை நாங்கள் தவிர்த்துகொண்டோம்.  யாழினியக்காவுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட பத்து வயது வித்தியாசம் ஆனாலும் அவருக்கும் எனக்குமான நட்பு மிக ஆழமானது,  எங்கள் வீட்டுக்கு வந்தால் கூட அதிகமாக என்னுடன்தான்  பேசிக்கொண்டு இருப்பார்,  ஒரு நாள் அவர்கள் தன்னை இப்படி நடத்துவதன் காரணத்தை அவர் சொல்லிய போது நிஜமாகவே நான் உடைந்து போய் விட்டேன்.  சுவிஸில் இவருக்கு விசா மறுத்துவிட  அங்கிருந்து ஒரு புரோக்கர் மூலம் பிரான்ஸ் குடியுருமை பெற்ற
ஒருவரை  திருமணம் செய்துகொண்டு பிரான்ஸ் வந்து சில மாதங்கள் குடுப்பம் நடத்தியவருக்கு, ஒரு நாள் தன் கணவனின் பழைய பைல்களை கிண்டியபோது  கைகளில் கிடைத்த மருத்துவ ரிப்போட் ஒன்று அவர் வாழ்க்கையை புரட்டி போட்டது,  ஆம்.. அவர் கணவன் கடந்த இரண்டு வருடங்களாக எயிட்ஸ் நோயுடன்  வாழ்ந்து கொண்டிருக்குறார்.  அவனுடன் சண்டைபோட்டு விரக்தியுடன் வீட்டை விட்டு வெளியேறியவர் அடைக்கலம் ஆனதுதான் இந்த உறவினர் வீடு,  நீ அவனுடன் சில மாதங்கள் குடும்பம் நடத்தியவள் தானே அப்போ உனக்கு
எயிட்ஸ் இருக்கலாம் என்ற கண்ணோட்டத்திலேயே உறவுகள் நோக்க மிச்சம் இருந்த நம்பிக்கையும் உடைந்து போய்விட்டது அவருக்கு,
மிகுந்த போராட்டத்தின் மத்தியில் அவனிடம் இருந்து விவகாரத்து வாங்கி இப்போது ஒருவரை காதலித்து மறுமணம் செய்து இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயாகி அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் யாழினியக்கா.

ஜெயலலிதா
  
னக்குப்பிடித்த பெண் அரசியல்வாதிகளில்  முதன்மையானவர்  ஜெயலலிதா, ஏன் எதற்கு எப்போ எப்படி ஜெயலலிதாவை பிடிக்கும்  என்பதற்கு சரியானா காரணம் என்னிடம் இல்லை,  எனக்கு அரசியல் தெரிந்த காலங்களில் இருந்து ஜெயலலிதாவை எனக்கு பிடிக்கும். ஜெயலலிதாவை எனக்கு பிடிப்பதற்கு அவரின் மன ஓட்டத்தை நான் சரியாக புரிந்து வைத்துள்ளமையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நினைக்குறேன்.  அதைவிட ஜெயலலிதாவின் நேர்மை, திறமை, அசாத்திய துணிச்சல், அவருடைய தெளிவான முடிவுகள் போன்றவை அவரை எனக்கு பிடிப்பதற்கு முக்கிய காரங்கள். எங்கள் வீட்டில் கூட ஜெயலலிதாவை எதிர்ப்பவர்கள்தான் அதிகம் அவர்கள் மத்தியில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பேசி நிறைய வேண்டிக்கட்டியும் உள்ளேன். ஜெயலலிதாவை எதிர்ப்பவர்கள் அதற்க்கு சொல்லும் காரணங்களை  மறுத்து அதற்க்கு சரியானா விளக்கம் சொல்ல என்னிடம் ஆதாரங்களும் காரணங்களும் இருக்கிறது, ஆனால் நான் ஜெயலலிதாவை ஆதரிப்பதை எதிர்ப்பவர்கள் அதற்க்கு சரியான ஏற்கும்படியான காரணத்தை சொல்லியதே இல்லை. ஜெயலிதாவும் தன் அரசியல் வாழ்வில் நிறைய தவறுகள் செய்துள்ளார் ஒத்துகொள்கிறேன். ஆனால் இப்போது உள்ள அரசியல்வாதிகளில் திறமையானவர் பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டியவர் ஜெயலலிதா என்பது என் தாழ்மையான கருத்து.

தனிஷா
பிரான்சின் என் ஆரம்பகால கல்லூரி வாழ்க்கையில் மலர் தூவிய வசந்த காலங்களும் உண்டு. அனல் கக்கிய கோடைகாலங்களும் உண்டு. இவள் அந்த வசந்த காலங்களுக்கு சொந்தக்காரி. "சந்தோஸ்சுப்பரமணிய"  காஸினி  போல் இருப்பாள்,  பேசுவாள் பேசுவாள் பேசிக்கொண்டே இருப்பாள் பக்கத்தில் பேச யாரும் கிடைக்காவிட்டால் அருகில் இருக்கும் மரம்கொடியிடமெல்லாம் பேச தொடங்கிவிடும் அழகு ப்ளஸ் லூஸு பெண் அவள்.  தமிழ்சினிமா  காதல் போல் ஒரு மோதலில் ஆரம்பித்த நட்பு காதலாகி சிம்பு வார்த்தையில் சொல்வதாயின் திகட்ட திகட்ட காதலித்தோம்.  பெண் இஸ்பரிசத்தை முதல் முதல் எனக்கு
உணர்த்தியவள்.   பல காரணங்களை சொல்லி சொல்லியே என்னைக்காதலித்தவள் இறுதியில் எந்த காரணமும் சொல்லாமலே பிரிந்து மேல்படிப்புக்காக லண்டன் சென்றுவிட்டாள்.  என் வாழ்க்கையில் அவள் தந்த அடி மரண அடி, எழுந்து வர ரெம்ப சிரமப்பட்டேன். அவளுக்கு நான் அனுப்பிய இறுதி பிரியாவிடை இ.மெயிலின் சாராம்சம் இதுதான். கடந்தகால என் வாழ்க்கையின் தனிமைக்கு
மருந்திட்டதுக்கு நன்றிகள் பல, தயவுசெய்து இன்னொருவனை காதலித்து விடாதே.. அப்படி காதலித்தாலும் அவனுடன் நெருங்கி பழகாதே..
அப்படி நெருங்கி பழகினாலும், அவனைவிட்டு பிரியாதே, அப்படி பிரிந்தாலும் அவனிடம் எந்த ஆதாரங்களையும் விட்டுச்செல்லாதே.. ஏனெனில் எல்லா ஆண்களும் என்னைப்போல் இருக்கமாட்டார்கள்.


புதன், ஜூலை 06, 2011

என் மனதை பாதித்த பத்து பெண்கள்...

ப்போதுமே பெண் தேவதைகளால் மட்டும் ஆசிர்வதிக்கப்பட்டவன்
நான். இதுவரைகால என் வாழ்க்கையில் அதிகமாக பெண்களால்தான்
நேசிக்கப்பட்டுள்ளேன் பாதுகாக்கப்பட்டுள்ளேன்,  அதனால் எனக்கு எப்போதுமே பெண்கள் மேல் தனி மரியாதையுண்டு நாங்கள் யாரை அதிகம் நேசிக்கிறோமோ அவர்களால்தான் அதிக காயமும் படுவோம் அந்தவகையில் என்னை பல சமயங்களில் காயப்படுத்திய பெருமையும் அதிகமாக பெண்களைத்தான் சேரும். என் மனதை பாதித்த பெண்கள் பலபேர் இருந்தாலும்,  அதிகமாய் என் மனதை பாதித்த பத்து  பெண்கள் இவர்கள்..

சூரியகலா (பள்ளி ஆசிரியர்)
சொந்த இடமான நெடுங்கேணியில் இருந்து அப்பாவின் வேலை மாற்றத்தால் வவுனியா வந்து புது பாடசாலையில் சேர்ந்தபோது எனது வகுப்பின் ஆசிரியராக இருந்தவர்,  அன்றில் இருந்து நான் ப்ராண்ட்ஸ் வரும்வரை என் வகுப்பாசிரியராகவே தொடர்ந்து வழி நடத்தியவர். அழகானவர்,  சாந்தமான முகம், அமைதியானவர் அமைதியை விரும்புகிறவரும் எங்கள் தமிழ் ஆசிரியரும் கூட,  அவர் பாடம் நடத்தினால் தெளிந்த நீரோடை மெதுவாக ஓடுவதைப்போல அவ்வளவு அமைதியாக அழகாக இருக்கும். நான் தமிழை அதிகம் நேசித்தாலேயோ என்னவோ அவரையும் அதிகமாகவே நேசித்தேன்.  எனக்கு அவரை
பிடிக்கும் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லைத்தான்  ஆனால் அவருக்கு என்னைத்தான் பிடிக்கும் என்பது ஆச்சரியம் ப்ளஸ் பெருமை எனக்கு. வகுப்பிலும் மற்ற பாடங்களிலும் நான்தான் முதன்மையானவன் என்று அடித்து சொல்லமுடியாவிட்டாலும் அவர் கற்பித்த தமிழ் பாடத்தில் எப்போதுமே நான்தான் முதல் மாணவன்.  ஒரு வகுப்பு ஆசிரியர் என்ற வகையில் எங்கள் வகுப்பில் கிடைக்கும் அத்தனை சலுகைகளையும் எனக்கே வழங்கி என்னை என் சக மாணவர்களால் பொறமையாய் பார்க்க வைத்தவர்.  அவர் வகுப்பில் இருக்கும் சமயங்களில் அதிகம் உச்சரிப்பது என் பெயரைத்தான்,  வகுப்பில் அவர் படிப்பித்துகொண்டிருக்கும் போது திடீரென " துஷியந்தன் மிச்சத்த நீ விளங்கப்படுத்து.."  என்று சொல்லி என்னை தன் இடத்தில் வைத்து அழகுபாப்பவர் அதை தன் சக ஆசிரியர்களிடமும் சொல்லி பெருமைப்பட்டுகொள்பவர்.  எங்கு இலக்கிய போட்டிகள் நடந்தாலும் என்னைக்கேட்காமலே என் பெயரை கொடுத்து நம்பிக்கையுடன் தாய் அன்போடு வழியனுப்பி வைப்பவர்,  என் பாடசாலையில் உள்ள பல ஆயிரம் மாணவர்களுல் என்னை தனித்து தெரிய வைத்தவர்.  பாடசாலை அதிபர் தொடங்கி முதலாம் ஆண்டு படிக்கும் சிறு மாணவன் வரை என்னை உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கவைத்த பெருமைக்கு உரியவர்.  நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது என் முதல் சிறுகதை "இடி" வார இதழில் வெளிவந்த போது அந்த பத்திரிகையை தூக்கிக்கொண்டு அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் என ஒவ்வொருவரிடமும் காட்டி காட்டி துஷ்யந்தன் என் மாணவன்  என்று  பெருமைப்பட்டு அவர் குதுகளித்த அந்த நிமிடங்கள் இப்போதும் என் கண் முன் நிழலாடுகின்றது.  பிராண்ட்ஸ் வந்து இத்தனை வருடங்கள் உருண்டோடிவிட்ட பின்னும் இன்னும் பசுமையாகவே இருக்கிறது அவர் நினைவுகள்.  நான் படித்த பாடசாலையில் இப்போது படிக்கும் என் சொந்தங்கள் என்னுடன் தொலைபேசியில் பேசும் போது "துஷியந்தன் போல ஒரு மாணவன் எனக்கு இனி எப்போதும் கிடைக்காது என்று சொல்லி உன் சூரியகலா மிஸ் அடிக்கடி பீல் பண்ணுவாங்கடா " என்று சொல்லி என்னை நெகிழ வைத்துவிடுவார்கள்.  சில நேரங்களில் நல்ல ஆசிரியர்கள் கிடைப்பதும் இறைவன்  கொடுத்த வரம்தான். 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...