ஞாயிறு, ஜூலை 10, 2011

என் மனதை பாதித்த பத்து பெண்கள்.. ( இறுதி பகுதி )

இசைப்பிரியா
ழத்தின் அழகி என்று சொல்லக்கூடிய  ஈழப்பெண்களின் குறியீடாக திகழ்ந்தவர் இசைப்பிரியா. என்னின ஈழப்பெண் இசைப்பிரியா என்று  சொல்வதில் பெருமை எனக்கு.  அழகு திறமை அதிஸ்ரம் ஒன்று சேர அமைவதற்கு ரெம்ப அதிஸ்ரம் வேணும். அப்படிப்பட்ட அதிஸ்ரக்கார பெண் இசைப்பிரியா.   வன்னிக்கு   ஒருமுறை சென்றபோது  இசைப்பிரியாவை   நேரில் பார்த்துள்ளேன்.  1981இல் மே மாதம் 02ஆம் திகதி பிறந்த இசைப்பிரியாவின் இயற்பெயர் சோபனா.  1998இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்த இசைப்பிரியா தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவில் அடங்குகிற ஊடகத்துறையான நிதர்சனபிரிவுப் போராளியாக இருந்தார்.  நீண்ட காலமாக நிதர்சனப் பிரிவிலேயே இருந்தார்.  தமீழீழத் தேசியத் தொலைக்காட்சி
ஆரம்பிக்கப்பட்டபின் இசைப்பிரியாவின் வளர்ச்சி மிக அசுரத்தனமானது.
வன்னிப் போரின் இறுதிக் களத்தில் அவர் சரணடைந்த பொழுது அவரை
இராணுவம் மிகவும் கொடுமையாக சித்திரவதை செய்து வன்புணர்வுக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஒரு தாயாக அவர் கருவுற்று குழந்தையை சுமந்திருந்த நிலையில்தான் இப்படி வன்முறையால் சிதைத்துக் கொல்லப்பட்டார்.  நான் தூங்காமல் நரகமாக களித்த இரவு இசைப்பிரியாவின் அந்த கொடூர மரண காணொளி பார்த்த இரவுதான்.

தேவயாணி.

மிழ் சினிமாவில்  எனக்கு மிக பிடித்தமான நடிகை,   எனது  8  வயதில் இருந்து  எனக்கு தேவயானியை பிடிக்கும் இது பற்றி முன்பு ஒரு தனி பதிவே 
போட்டுள்ளேன்.  மிக திறமையான  நடிகை தேவயாணி,   அவருடைய நடிப்பு திறமைக்கு  ஒரு உதாரணம்   "பாரதி" திரைப்படம்.  அத்திரைப்படத்தில் பாரதியாரின் மனைவி செல்லம்மாவாக நடித்து இருப்பார்.  செல்லம்மா இப்படித்தான் இருந்திருப்பார் என்று என்னுள் ஒரு கணிப்பை வைத்து இருந்தேன் அதற்க்கு சற்றும் குறைவில்லாமல் செல்லம்மாவை கண்முன் கொண்டு வந்து  விட்டார்  தன் நடிப்பு திறமையால் தேவயாணி என்று அப்போதைய முதல்வர்  கருணாநிதி மனம் திறந்து பாராட்டினார்.  தமிழ்சினிமாவில் எவ்வித பின்பலமும் இன்றி அறிமுகமாகி முதன்மை இடத்தை கைப்பற்றியது  தேவயானியின் அசாத்திய திறமை. தேவயானியின் காதல் திருமணம் தமிழ்நாட்டில் அவ்வளவு பிரபலம்.  நடிகர் விக்ரமின் குமுதம் பேட்டி ஒன்றில் உங்களுக்கு பிடித்த காதல் ஜோடி எது என்ற கேள்விக்கு , லைலா-மஜ்னு , ஷாஜகான்-மும்தாஜ் வரிசையில் எனக்கு மிகவும் பிடித்த காதல் ஜோடி " தேவயாணி -ராஜகுமாரன்" என்று சொல்லியது தேவயானியின்  காதலுக்கு கிடைத்த மணிமகுடத்தில் பொறிக்கப்பட்ட முதன்மையான முத்து.

ஜூலியத்
                                                  
ன் வேலை இடத்தில் வேறு பிரிவொன்றில் வேலைசெய்யும் பிரான்ஸ் வாழ் ஆபிரிக்கா அழகி.  அசாத்திய துணிச்சல்காரி,  பெரியாரின் சிந்தனைக்கேற்ப இங்கு வாழும் புரட்சி பெண் என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிடலாம் இவளைப்பற்றி.  ஜூலியத்துக்கு வயது 55 ஜ நெருங்குது என்றால் யாராலையும் நம்பமுடியாது,  அவள் உடலழகு மட்டும்  அல்ல   பேச்சழகும் செய்கைகளும் என்றும் எனக்கு இருபது என்றே அமைந்து இருக்கும். ஜூலியத்துக்கு ஒன்பது பிள்ளைகள் ஒன்பதும் ஆண் பிள்ளைகள்தான்,  ஜூலியத்துக்கும் அவள் கணவனுக்கும் விவகாரத்து ஆனதில்  பிள்ளைகள் அனைத்தும் தந்தையுடன் இருக்க
ஜூலியத் மட்டும் தனியே இருக்கிறாள்.  தன் கணவனுடனான   விவகாரத்துக்கு   இப்படி    காரணம் சொல்லுவாள் . நான் பிரான்ஸ்  குடியுரிமை  பெற்றவள்  அவன் இங்கு வந்து விசா இல்லாமல் ரெம்ப கஸ்ரப்பட்டான், அவன் மேலானா பரிதாபம் காதலாக மாற திருமணம் செய்துகொண்டோம், ஒன்பது பிள்ளைகள் பிறந்தபின் அவன் நடத்தைகளில் மாற்றம் வரத்தொடங்கிவிட்டது,  என்னை கட்டுப்படுத்த ஆரம்பித்துவிட்டான்.  நான் ஒன்றும் நாய் இல்லை அவன் சொல் கேட்டு அவன் பின்னால் செல்ல,  என் தனி சுதந்திரத்தில் தலையிடுவவர்கள் யாராக இருந்தாலும் எப்போதும் அவர்களுடன் என்னால் ஒத்துபோக முடியாது.  விவகாரத்தின் பின் என் பிள்ளைகள் அவனுடன் இருக்கவே விரும்பினர் நானும் சம்மதித்து விட்டேன் என்று அசால்ட்டையாக சொல்லும் ஜூலியத் இப்போது இன்னொரு காதலில் விழுந்து அவருடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஜூலியத் காதலித்து இப்போது சேர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பது  தன்னைப்போல் சக பெண்ணான    இஸ்ரபெனி என்ற பிரஞ்சு பெண்ணோடு.

யாழினி 
நான் பிரான்ஸ் வந்த புதிதில் அறிமுகமானவர், பிரான்சில் நாங்கள் இருந்த
வீட்டுக்கு அருகில்தான் அவரும் இருந்தார் , இலங்கையில்  இருந்து குடும்பமாக சுவிஸ் வந்த   யாழினியக்கா  குடும்பத்தில்  எல்லோருக்கும் சுவிஸில்  விசா கிடைத்து இவருக்கு  மட்டும்  கிடைக்காமல்  விட  அங்கிருந்து  பிரான்ஸ் வந்து இங்கு ஒரு உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்,
நிறையா புத்தகங்கள் வாசிப்பார், எப்போதும் ஒரு வித மென் சோகம் 
அவர் முகத்தில் அப்பியே இருக்கும், எப்போவாது அவர்கள் வீட்டுக்கு
நாங்கள் போனால் அந்த குடும்பத்தார் யாழினியக்காவை  நடத்தும்விதம் 
அதிர்ச்சிகரமாக இருக்கும்.  அந்த வீட்டில் அவர் பயன்படுத்தும்  அத்தனை  பொருட்களும் தனி தனியாகவே இருக்கும், சில வேளைகளில் எங்கள் 
முன்னிலையிலேயே அவர்கள் பயன் படுத்தும் பொருட்கள் எதையேனும் 
 யாழினியக்கா எடுத்து பாவித்துவிட்டால்  அவர்கள் அவாவை கடிந்து கொள்வது எங்களை நெளிய வைத்துவிடும் இதன்காரணமாகவே அவர்கள் அழைத்தால் கூட அவர்கள் வீட்டுக்கு போவதை நாங்கள் தவிர்த்துகொண்டோம்.  யாழினியக்காவுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட பத்து வயது வித்தியாசம் ஆனாலும் அவருக்கும் எனக்குமான நட்பு மிக ஆழமானது,  எங்கள் வீட்டுக்கு வந்தால் கூட அதிகமாக என்னுடன்தான்  பேசிக்கொண்டு இருப்பார்,  ஒரு நாள் அவர்கள் தன்னை இப்படி நடத்துவதன் காரணத்தை அவர் சொல்லிய போது நிஜமாகவே நான் உடைந்து போய் விட்டேன்.  சுவிஸில் இவருக்கு விசா மறுத்துவிட  அங்கிருந்து ஒரு புரோக்கர் மூலம் பிரான்ஸ் குடியுருமை பெற்ற
ஒருவரை  திருமணம் செய்துகொண்டு பிரான்ஸ் வந்து சில மாதங்கள் குடுப்பம் நடத்தியவருக்கு, ஒரு நாள் தன் கணவனின் பழைய பைல்களை கிண்டியபோது  கைகளில் கிடைத்த மருத்துவ ரிப்போட் ஒன்று அவர் வாழ்க்கையை புரட்டி போட்டது,  ஆம்.. அவர் கணவன் கடந்த இரண்டு வருடங்களாக எயிட்ஸ் நோயுடன்  வாழ்ந்து கொண்டிருக்குறார்.  அவனுடன் சண்டைபோட்டு விரக்தியுடன் வீட்டை விட்டு வெளியேறியவர் அடைக்கலம் ஆனதுதான் இந்த உறவினர் வீடு,  நீ அவனுடன் சில மாதங்கள் குடும்பம் நடத்தியவள் தானே அப்போ உனக்கு
எயிட்ஸ் இருக்கலாம் என்ற கண்ணோட்டத்திலேயே உறவுகள் நோக்க மிச்சம் இருந்த நம்பிக்கையும் உடைந்து போய்விட்டது அவருக்கு,
மிகுந்த போராட்டத்தின் மத்தியில் அவனிடம் இருந்து விவகாரத்து வாங்கி இப்போது ஒருவரை காதலித்து மறுமணம் செய்து இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயாகி அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் யாழினியக்கா.

ஜெயலலிதா
  
னக்குப்பிடித்த பெண் அரசியல்வாதிகளில்  முதன்மையானவர்  ஜெயலலிதா, ஏன் எதற்கு எப்போ எப்படி ஜெயலலிதாவை பிடிக்கும்  என்பதற்கு சரியானா காரணம் என்னிடம் இல்லை,  எனக்கு அரசியல் தெரிந்த காலங்களில் இருந்து ஜெயலலிதாவை எனக்கு பிடிக்கும். ஜெயலலிதாவை எனக்கு பிடிப்பதற்கு அவரின் மன ஓட்டத்தை நான் சரியாக புரிந்து வைத்துள்ளமையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நினைக்குறேன்.  அதைவிட ஜெயலலிதாவின் நேர்மை, திறமை, அசாத்திய துணிச்சல், அவருடைய தெளிவான முடிவுகள் போன்றவை அவரை எனக்கு பிடிப்பதற்கு முக்கிய காரங்கள். எங்கள் வீட்டில் கூட ஜெயலலிதாவை எதிர்ப்பவர்கள்தான் அதிகம் அவர்கள் மத்தியில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பேசி நிறைய வேண்டிக்கட்டியும் உள்ளேன். ஜெயலலிதாவை எதிர்ப்பவர்கள் அதற்க்கு சொல்லும் காரணங்களை  மறுத்து அதற்க்கு சரியானா விளக்கம் சொல்ல என்னிடம் ஆதாரங்களும் காரணங்களும் இருக்கிறது, ஆனால் நான் ஜெயலலிதாவை ஆதரிப்பதை எதிர்ப்பவர்கள் அதற்க்கு சரியான ஏற்கும்படியான காரணத்தை சொல்லியதே இல்லை. ஜெயலிதாவும் தன் அரசியல் வாழ்வில் நிறைய தவறுகள் செய்துள்ளார் ஒத்துகொள்கிறேன். ஆனால் இப்போது உள்ள அரசியல்வாதிகளில் திறமையானவர் பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டியவர் ஜெயலலிதா என்பது என் தாழ்மையான கருத்து.

தனிஷா
பிரான்சின் என் ஆரம்பகால கல்லூரி வாழ்க்கையில் மலர் தூவிய வசந்த காலங்களும் உண்டு. அனல் கக்கிய கோடைகாலங்களும் உண்டு. இவள் அந்த வசந்த காலங்களுக்கு சொந்தக்காரி. "சந்தோஸ்சுப்பரமணிய"  காஸினி  போல் இருப்பாள்,  பேசுவாள் பேசுவாள் பேசிக்கொண்டே இருப்பாள் பக்கத்தில் பேச யாரும் கிடைக்காவிட்டால் அருகில் இருக்கும் மரம்கொடியிடமெல்லாம் பேச தொடங்கிவிடும் அழகு ப்ளஸ் லூஸு பெண் அவள்.  தமிழ்சினிமா  காதல் போல் ஒரு மோதலில் ஆரம்பித்த நட்பு காதலாகி சிம்பு வார்த்தையில் சொல்வதாயின் திகட்ட திகட்ட காதலித்தோம்.  பெண் இஸ்பரிசத்தை முதல் முதல் எனக்கு
உணர்த்தியவள்.   பல காரணங்களை சொல்லி சொல்லியே என்னைக்காதலித்தவள் இறுதியில் எந்த காரணமும் சொல்லாமலே பிரிந்து மேல்படிப்புக்காக லண்டன் சென்றுவிட்டாள்.  என் வாழ்க்கையில் அவள் தந்த அடி மரண அடி, எழுந்து வர ரெம்ப சிரமப்பட்டேன். அவளுக்கு நான் அனுப்பிய இறுதி பிரியாவிடை இ.மெயிலின் சாராம்சம் இதுதான். கடந்தகால என் வாழ்க்கையின் தனிமைக்கு
மருந்திட்டதுக்கு நன்றிகள் பல, தயவுசெய்து இன்னொருவனை காதலித்து விடாதே.. அப்படி காதலித்தாலும் அவனுடன் நெருங்கி பழகாதே..
அப்படி நெருங்கி பழகினாலும், அவனைவிட்டு பிரியாதே, அப்படி பிரிந்தாலும் அவனிடம் எந்த ஆதாரங்களையும் விட்டுச்செல்லாதே.. ஏனெனில் எல்லா ஆண்களும் என்னைப்போல் இருக்கமாட்டார்கள்.


70 கருத்துகள்:

 1. இசை பிரியா , நினைவுகளில் இருந்து அழிக்க முடியாத பெயர் , அவர் இறக்கும் போது ஒரு குழந்தையின் தாய் என்று நினைக்கிறேன் ,அவருக்கு முன்னமே யுத்தத்தின் கோரப்பற்கள் அந்த குழந்தையையும் தனக்கு இரயாக்கிவிட்டது.

  பதிலளிநீக்கு
 2. ///நான் ஒன்றும் நாய் இல்லை அவன் சொல் கேட்டு அவன் பின்னால் செல்ல, என் தனி சுதந்திரத்தில் தலையிடுவவர்கள் யாராக இருந்தாலும் எப்போதும் அவர்களுடன் என்னால் ஒத்துபோக முடியாது./// அவ பெண். ஒரு சலூட்..

  பதிலளிநீக்கு
 3. ///மிகுந்த போராட்டத்தின் மத்தியில் அவனிடம் இருந்து விவகாரத்து வாங்கி இப்போது ஒருவரை காதலித்து மறுமணம் செய்து இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயாகி அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் யாழினியக்கா.//அவங்களுக்கு எனது வாழ்த்துக்கள் ...

  பதிலளிநீக்கு
 4. ///ஆனால் இப்போது உள்ள அரசியல்வாதிகளில் திறமையானவர் பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டியவர் ஜெயலலிதா என்பது என் தாழ்மையான கருத்து.//தைரியமான பெண், ஆனால் நிச்சயமாக நான் சொல்வேன் ஜெயலலிதா "மக்களுக்கான அரசியல்வாதி" அல்ல.

  பதிலளிநீக்கு
 5. ///கடந்தகால என் வாழ்க்கையின் தனிமைக்கு
  மருந்திட்டதுக்கு நன்றிகள் பல, தயவுசெய்து இன்னொருவனை காதலித்து விடாதே.. அப்படி காதலித்தாலும் அவனுடன் நெருங்கி பழகாதே..
  அப்படி நெருங்கி பழகினாலும் அவனிடம் எந்த ஆதாரங்களையும் விட்டுச்செல்லாதே.. ஏனெனில் எல்லா ஆண்களும் என்னைப்போல் இருக்கமாட்டார்கள்.

  /// அருமையான பதில் எல்லாம் கடந்து போகும் பாஸ் ..காலம் மாற்றும்

  பதிலளிநீக்கு
 6. ///அனேகமாக அடுத்த வருஷம்
  டும்..டும்.. என்றுதான் நினைக்குறேன். //வாழ்த்துக்கள் நண்பா ,பழசை மறவுங்கள் புதிய வாழ்க்கைக்குள் குடி புகுங்கள்...

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் பெண்களின் உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகனே!
  பதிவினைப் படித்து விட்டு வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 8. இசைப்பிரியா/

  துஸி..நீங்களும் மீண்டும் இசைப்பிரியாவை நினைவுபடுத்தி தூக்கத்தைத் தொலைக்க வைக்கிறீங்க.

  பதிலளிநீக்கு
 9. இசைப் பிரியா: பன்முகப்பட்ட ஆற்றல் கொண்ட ஓர் கலைஞர்.
  காலம் தன் வித்தையினை அவர் மீதும் பிரயோகித்து விட்டது.

  பதிலளிநீக்கு
 10. தேவயாணி.//

  நம்ம மச்சிக்கு தேவயானி மீது ஒரு இது...

  ஹி....

  பதிலளிநீக்கு
 11. ஜூலியத்//

  ஜூலியத் பற்றிய பகிர்வில் புதுமைப் பெண்ணிற்கான அடையாளங்கள் தெரிகின்றன சகோ.

  அத்தோடு ஆணின்றித் தனித்து வாழ முடியும் எனும் சாதிக்கப் பிறந்த பெண்களின் மன வைராக்கியத்தினையும் இங்கே வெளிப்படுத்தியிருக்கிறீங்க.

  பதிலளிநீக்கு
 12. யாழினி//

  யாழினியக்கா, நம்பிக்கையினை உரமாக்கி, சமூகத்திற்குச் சாட்டையடி கொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெண், மனதினையும் ஒரு நிமிடம் கலங்க வைத்து விட்டா.

  பதிலளிநீக்கு
 13. ஜெயலலிதா//

  ஆஹா...நமக்கும் ஓரளவு இவாவை பிடிக்கும், ஆனால் என்ன காரணம் என்று தான் தெரியலை.

  பதிலளிநீக்கு
 14. தனிஷா //

  மச்சி...க.க.போ...

  சோகத்திலும் ஒரு கிளு கிளுப்போடு எழுதியிருப்பது, இப்போதும் அவளிடத்தே,
  ஓர் இனம் புரியாத பாசம் இருப்பதை காண்பிக்கிறது,

  பதிலளிநீக்கு
 15. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 16. முதலாவதாக உங்கள் தளம் வந்திருக்கிறேன்.....
  உங்களது எழுத்து மிகவும் அழகாக உள்ளது வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 17. இசைப்பிரியா, எந்த பெண்ணுக்கும் நேரக் கூடாத துயரங்களை சுமந்தவர். அதனாலேயே இதயத்திலிருந்து அழிக்கப்பட முடியாதவராக இருக்கிறார்.

  பதிலளிநீக்கு
 18. துஷி இப்படித்தான் எங்களுக்கு அன்பை வெளிக்காட்ட தெரியாது போகின்றது எனது பதிவொன்றின் கருத்துரைக்கு மறுமொழி இடும்போது எனது மனைவியை பற்றி எழுதியிருந்ததை அவள் வாசித்து விட்டு என்னை பார்த்து ஒரு புன்சிரிப்பிட்டாளே ஆகா காட்டான் கல்யானமாண புது மாப்பிளகணக்கா மாறி விட்டான்..!அதனால்தான் சொல்கிறேன் எங்கட அடி மனத்தில் உள்ள அன்பை எங்களால்  வெளிக்கொணர முடியவில்லை..!  

   நீ அதிஸ்ட சாலி ஏற்கனவே காதலித்துள்ளாய்..! இந்த காட்டானும் இருக்கிறானே எவ்வளவு பெண்களின் சைக்கில் காண்டில் காதல் கடிதங்களை இடது கையால் எழுதி(அகப்பட்டால் தப்புவது சுலபமென்று என்ர குரு சொல்வார்..!?) வைத்து அணில் ஏற விட்ட நாய் போல் காத்திருந்தேனே..!உனக்கு அதிஸ்டம் இன்னோர் முறை கதவை தட்டியிக்கு வாழ்த்துக்கள் .. 

  மனைவிய காதலிப்பதை போல் சுதந்திரமான காதல் உலகத்தில் இல்லையப்பு இஞ்ச இருக்கிற பதிவர்கள் காதால் புகை போவதை பார்கிறேன்..! என்னப்பு செய்வது பல்லிருக்கிற நாங்க பாக்கு சாப்பிடுவோம் பல்லில்லாதவங்க.. வெறும் வாய மெல்லுங்கோப்பு..!!? இப்பிடி சொல்லி சொல்லியே எங்கள பள்ளத்தில தல்ல பாக்கிறியா காட்டானே என்று யாரோ சொல்வது காதில் விழுகிறது அரசியல்ல இதெல்லாம் சகசமப்பா..!வந்த விசயத்த விட்டு வேற எங்கேயோ போட்டன் போல துஷிக்கு வாழ்த்துக்கள்..! கன்னாலம் பாரீசில் நடந்தா காட்டானுக்கும் ஒரு அழைப்பு வரும்தானே..!!??

  பதிலளிநீக்கு
 19. மதிய வணக்கம் பாஸ்.
  இப்படி துணிச்சலான பதிவு போட்டதற்கு முதலில் ஒரு பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 20. இதில் இசைப்பிரியாவை நிதர்சனம் ஊடாகத்தான் வைத்த கண் வாங்காமல் பார்த்தேன் பின் அலைவரிசை நிறுத்தப்பட்டதால் அந்த தேன் குரல் கேட்கவும் பார்க்கவும் முடியாமல் போய் பின் முடிவில்லா துன்பத்தை தந்த வேதனை என்றாலும் சில படைப்புக்கள் மூலம் உயிர் வாழும் படைப்பாளினி. தேவதைக்கு உதாரணம் இவள் அழகு .

  பதிலளிநீக்கு
 21. தேவயானி பிடித்த நடிகை ஆரம்பத்தில் இருபடங்களில் கவர்ச்சியாக நடித்து நெஞ்சில் கல்லைப் போட்ட பின் வந்த பூமனி படம் என்னை மீண்டும் அவங்களின் விசிரிதான்.

  பதிலளிநீக்கு
 22. இங்கே நடக்கும் இன்னொரு வேதனைகள் யாழியின் சிந்தனைகள் முற்போக்கு நிம்மதியளிக்கிறது.

  பதிலளிநீக்கு
 23. இதுவரை துஷ்யந்தன் எனக்கு அண்ணன் என்று நினைப்பில் இருந்தேன் இப்போது தம்பி என்றும் கலியாணம் என்றும் சொல்லும் போது பயல் அதிஸ்டசாலி இப்படிக்காதல் கடந்துவந்த  நவீன சிம்பு என்று ஜோசிக்க வைக்கிறது . பாரிஸ்சில் கலியாணம் என்றால் தனிமரத்திற்கும் அழைப்பு விடுத்தால் தோப்பாக வந்து கும்மியடிப்போம். பால்கோப்பி மட்டும் சூடாகத்தரனும். முன்கூட்டியே வாழ்த்துகின்றேன் இனியதாய் இல்லத்தில் இனையட்டும் இளையவனே நீ கான்பாய் பல சுகங்கள்.

  பதிலளிநீக்கு
 24. பல வகைப்பட்ட அதிசய பெண்களைப் அசத்தலாக பதிவிட்டமைக்கு நன்றி தலைவா

  பதிலளிநீக்கு
 25. இசைப்பிரியாவை எப்படி மறக்க முடியும்,,,,,அவரின் சாவை ஏற்கவே முடியல,,,

  பதிலளிநீக்கு
 26. வணக்கம் பாஸ்
  அருமையான பதிவு...
  காதல் தந்த வலியில் இருந்து மீண்டு அடுத்த வாழ்க்கைக்கு தயாராகிவிட்டீர்கள்.. வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 27. //அனேகமாக அடுத்த வருஷம்
  டும்..டும்.. என்றுதான் நினைக்குறேன்///

  ஹா ஹா... வாழ்த்துக்கள் மாப்புளே....
  கல்யாணம் இலங்கையில தானே... எங்களையும் கூப்புடுவீங்கதானே....

  பதிலளிநீக்கு
 28. சுற்றி வளைத்துப் பேசக் கற்றுக் கொள்ளவில்லை என
  நீங்கள் சொல்லவேண்டியதே இல்லை பதிவே சொல்கிறது
  அது தேவையும் இல்லை
  மனந்திறந்த உண்மையான பதிவு
  தங்கள் வாழ்வில் வஸந்த காலம் விரைவில் வந்து
  மணம் வீச மனங்கனிந்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 29. அருமை கடைசியில் உண்மை
  வாழ்த்துக்கள் சகோ

  பதிலளிநீக்கு
 30. //நிகழ்வுகள் கூறியது...
  வண்க்கம் தலீவா ..))//

  வணக்கம் வணக்கம் :))

  பதிலளிநீக்கு
 31. //நிகழ்வுகள் கூறியது...
  இசை பிரியா , நினைவுகளில் இருந்து அழிக்க முடியாத பெயர் , அவர் இறக்கும் போது ஒரு குழந்தையின் தாய் என்று நினைக்கிறேன் ,அவருக்கு முன்னமே யுத்தத்தின் கோரப்பற்கள் அந்த குழந்தையையும் தனக்கு இரயாக்கிவிட்டது.
  //

  உண்மை பாஸ்,
  ஓம் பாஸ், அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து அது இறுதி போரின் செல்லடியில் இறந்துவிட்டதாக நானும் அறிந்தேன் பாஸ்,
  வேதனையான தகவல் பாஸ்

  பதிலளிநீக்கு
 32. //நிகழ்வுகள் கூறியது...
  ///நான் ஒன்றும் நாய் இல்லை அவன் சொல் கேட்டு அவன் பின்னால் செல்ல, என் தனி சுதந்திரத்தில் தலையிடுவவர்கள் யாராக இருந்தாலும் எப்போதும் அவர்களுடன் என்னால் ஒத்துபோக முடியாது./// அவ பெண். ஒரு சலூட்..
  //

  அதே.... அதே....

  பதிலளிநீக்கு
 33. //நிகழ்வுகள் கூறியது...
  ///மிகுந்த போராட்டத்தின் மத்தியில் அவனிடம் இருந்து விவகாரத்து வாங்கி இப்போது ஒருவரை காதலித்து மறுமணம் செய்து இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயாகி அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் யாழினியக்கா.//அவங்களுக்கு எனது வாழ்த்துக்கள் ...
  ///

  உங்களைப்போன்றவர்களின் நல்ல வாழ்த்து கண்டிப்பா அவங்களை வாழவைக்கும் பாஸ்

  பதிலளிநீக்கு
 34. //நிகழ்வுகள் கூறியது...
  ///ஆனால் இப்போது உள்ள அரசியல்வாதிகளில் திறமையானவர் பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டியவர் ஜெயலலிதா என்பது என் தாழ்மையான கருத்து.//தைரியமான பெண், ஆனால் நிச்சயமாக நான் சொல்வேன் ஜெயலலிதா "மக்களுக்கான அரசியல்வாதி" அல்ல.//


  உங்கள் கருத்தை ஏற்குறேன்,
  ஆனாலும் நோ கமெண்ட்ஸ்

  பதிலளிநீக்கு
 35. //நிகழ்வுகள் கூறியது...
  ///கடந்தகால என் வாழ்க்கையின் தனிமைக்கு
  மருந்திட்டதுக்கு நன்றிகள் பல, தயவுசெய்து இன்னொருவனை காதலித்து விடாதே.. அப்படி காதலித்தாலும் அவனுடன் நெருங்கி பழகாதே..
  அப்படி நெருங்கி பழகினாலும் அவனிடம் எந்த ஆதாரங்களையும் விட்டுச்செல்லாதே.. ஏனெனில் எல்லா ஆண்களும் என்னைப்போல் இருக்கமாட்டார்கள்.

  /// அருமையான பதில் எல்லாம் கடந்து போகும் பாஸ் ..காலம் மாற்றும்
  //

  உங்கள் அன்புக்கு நன்றி பாஸ் ,
  அந்த நம்பிக்கையில்தான் நானும் இருக்குறேன் பாஸ்

  பதிலளிநீக்கு
 36. //நிகழ்வுகள் கூறியது...
  ///அனேகமாக அடுத்த வருஷம்
  டும்..டும்.. என்றுதான் நினைக்குறேன். //வாழ்த்துக்கள் நண்பா ,பழசை மறவுங்கள் புதிய வாழ்க்கைக்குள் குடி புகுங்கள்...
  //

  தேங்க்ஸ் பாஸ்

  பதிலளிநீக்கு
 37. //நிரூபன் கூறியது...
  வணக்கம் பெண்களின் உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகனே!
  பதிவினைப் படித்து விட்டு வருகிறேன்.//


  பாஸ் இது ஓவர் ஓவர்

  இது ரெம்ப அதிகம் பாஸ்

  பதிலளிநீக்கு
 38. //நிரூபன் கூறியது...
  இசைப்பிரியா/

  துஸி..நீங்களும் மீண்டும் இசைப்பிரியாவை நினைவுபடுத்தி தூக்கத்தைத் தொலைக்க வைக்கிறீங்க.
  //

  ஹும்... மன்னிக்கணும் பாஸ்

  பதிலளிநீக்கு
 39. //நிரூபன் கூறியது...
  இசைப் பிரியா: பன்முகப்பட்ட ஆற்றல் கொண்ட ஓர் கலைஞர்.
  காலம் தன் வித்தையினை அவர் மீதும் பிரயோகித்து விட்டது.
  //

  வேதனையான உண்மை பாஸ்
  நினைக்கவே மனசு கனக்குது பாஸ்

  பதிலளிநீக்கு
 40. //நிரூபன் கூறியது...
  தேவயாணி.//

  நம்ம மச்சிக்கு தேவயானி மீது ஒரு இது...

  ஹி....
  //

  ஹி ஹி
  கண்டு புடிச்சுட்டீங்களே பாஸ்

  பதிலளிநீக்கு
 41. //நிரூபன் கூறியது...
  ஜூலியத்//

  ஜூலியத் பற்றிய பகிர்வில் புதுமைப் பெண்ணிற்கான அடையாளங்கள் தெரிகின்றன சகோ.

  அத்தோடு ஆணின்றித் தனித்து வாழ முடியும் எனும் சாதிக்கப் பிறந்த பெண்களின் மன வைராக்கியத்தினையும் இங்கே வெளிப்படுத்தியிருக்கிறீங்க.
  //

  உண்மை பாஸ்

  பதிலளிநீக்கு
 42. //நிரூபன் கூறியது...
  யாழினி//

  யாழினியக்கா, நம்பிக்கையினை உரமாக்கி, சமூகத்திற்குச் சாட்டையடி கொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெண், மனதினையும் ஒரு நிமிடம் கலங்க வைத்து விட்டா.
  //

  உண்மைதான் பாஸ், அவங்க ரெம்ப கஸ்ரப்பட்டுட்டாங்க, அவங்க இனியாவது நல்லா இருக்கணும் அதுதான் என் ஆசை பாஸ்

  பதிலளிநீக்கு
 43. //நிரூபன் கூறியது...
  ஜெயலலிதா//

  ஆஹா...நமக்கும் ஓரளவு இவாவை பிடிக்கும், ஆனால் என்ன காரணம் என்று தான் தெரியலை.
  //

  அதே.. அதே... இதான் என் நிலையம் பாஸ்

  பதிலளிநீக்கு
 44. //நிரூபன் கூறியது...
  தனிஷா //

  மச்சி...க.க.போ...

  சோகத்திலும் ஒரு கிளு கிளுப்போடு எழுதியிருப்பது, இப்போதும் அவளிடத்தே,
  ஓர் இனம் புரியாத பாசம் இருப்பதை காண்பிக்கிறது,
  //

  ஆஹா,

  நோ கமெண்ட்ஸ் நோ கமெண்ட்ஸ்

  பதிலளிநீக்கு
 45. //நிரூபன் கூறியது...
  யது//

  கறை படிந்த பக்கங்களை மறந்து விட்டு, வசந்த காலத்தை நோக்கிய வளமான பக்கங்களை நேசியுங்கள் துஸி.

  எதிர்காலம் இன்பமயமானதாக இருக்க வாழ்த்துக்கள்.
  //

  நன்றி அண்ணா

  பதிலளிநீக்கு
 46. //akulan கூறியது...
  முதலாவதாக உங்கள் தளம் வந்திருக்கிறேன்.....
  உங்களது எழுத்து மிகவும் அழகாக உள்ளது வாழ்த்துக்கள்...
  //

  தேங்க்ஸ் பாஸ்,

  உங்கள் வருகை சந்தோசத்தை கொடுக்குது பாஸ்

  அடிக்கடி வாங்க பாஸ்

  பதிலளிநீக்கு
 47. //தமிழ் உதயம் கூறியது...
  இசைப்பிரியா, எந்த பெண்ணுக்கும் நேரக் கூடாத துயரங்களை சுமந்தவர். அதனாலேயே இதயத்திலிருந்து அழிக்கப்பட முடியாதவராக இருக்கிறார்.
  //

  நிஜம்தான் பாஸ்

  இசைப்பிரியா மறக்கவே முடியாது

  பதிலளிநீக்கு
 48. //ATHAVAN கூறியது...
  துஷி இப்படித்தான் எங்களுக்கு அன்பை வெளிக்காட்ட தெரியாது போகின்றது எனது பதிவொன்றின் கருத்துரைக்கு மறுமொழி இடும்போது எனது மனைவியை பற்றி எழுதியிருந்ததை அவள் வாசித்து விட்டு என்னை பார்த்து ஒரு புன்சிரிப்பிட்டாளே ஆகா காட்டான் கல்யானமாண புது மாப்பிளகணக்கா மாறி விட்டான்..!அதனால்தான் சொல்கிறேன் எங்கட அடி மனத்தில் உள்ள அன்பை எங்களால் வெளிக்கொணர முடியவில்லை..!

  நீ அதிஸ்ட சாலி ஏற்கனவே காதலித்துள்ளாய்..! இந்த காட்டானும் இருக்கிறானே எவ்வளவு பெண்களின் சைக்கில் காண்டில் காதல் கடிதங்களை இடது கையால் எழுதி(அகப்பட்டால் தப்புவது சுலபமென்று என்ர குரு சொல்வார்..!?) வைத்து அணில் ஏற விட்ட நாய் போல் காத்திருந்தேனே..!உனக்கு அதிஸ்டம் இன்னோர் முறை கதவை தட்டியிக்கு வாழ்த்துக்கள் ..

  மனைவிய காதலிப்பதை போல் சுதந்திரமான காதல் உலகத்தில் இல்லையப்பு இஞ்ச இருக்கிற பதிவர்கள் காதால் புகை போவதை பார்கிறேன்..! என்னப்பு செய்வது பல்லிருக்கிற நாங்க பாக்கு சாப்பிடுவோம் பல்லில்லாதவங்க.. வெறும் வாய மெல்லுங்கோப்பு..!!? இப்பிடி சொல்லி சொல்லியே எங்கள பள்ளத்தில தல்ல பாக்கிறியா காட்டானே என்று யாரோ சொல்வது காதில் விழுகிறது அரசியல்ல இதெல்லாம் சகசமப்பா..!வந்த விசயத்த விட்டு வேற எங்கேயோ போட்டன் போல துஷிக்கு வாழ்த்துக்கள்..! கன்னாலம் பாரீசில் நடந்தா காட்டானுக்கும் ஒரு அழைப்பு வரும்தானே..!!??
  ///

  ஹும் ... அசத்தல் கருத்துரை,

  அண்ணா உங்களுக்கு சொல்லாமல் நான் எப்படி கல்யாணம் கட்டுவன் *

  காட்டானின் வாழ்த்து எப்பொழுதும் இந்த துஷிக்கு வேணும்

  பதிலளிநீக்கு
 49. Nesan கூறியது...
  இதில் இசைப்பிரியாவை நிதர்சனம் ஊடாகத்தான் வைத்த கண் வாங்காமல் பார்த்தேன் பின் அலைவரிசை நிறுத்தப்பட்டதால் அந்த தேன் குரல் கேட்கவும் பார்க்கவும் முடியாமல் போய் பின் முடிவில்லா துன்பத்தை தந்த வேதனை என்றாலும் சில படைப்புக்கள் மூலம் உயிர் வாழும் படைப்பாளினி. தேவதைக்கு உதாரணம் இவள் அழகு .
  //

  ஹும்...

  தேவதையின் சாயல் இசைப்பிரியா பாஸ்

  பதிலளிநீக்கு
 50. //Nesan கூறியது...
  தேவயானி பிடித்த நடிகை ஆரம்பத்தில் இருபடங்களில் கவர்ச்சியாக நடித்து நெஞ்சில் கல்லைப் போட்ட பின் வந்த பூமனி படம் என்னை மீண்டும் அவங்களின் விசிரிதான்.//


  தேவயானியின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் ,

  தேவயானியின் தெலுங்கு படம் SUSWAGATHAM

  பதிலளிநீக்கு
 51. //Nesan கூறியது...
  இங்கே நடக்கும் இன்னொரு வேதனைகள் யாழியின் சிந்தனைகள் முற்போக்கு நிம்மதியளிக்கிறது.

  //
  எனக்கும்தான் பாஸ்

  பதிலளிநீக்கு
 52. Nesan கூறியது...
  இதுவரை துஷ்யந்தன் எனக்கு அண்ணன் என்று நினைப்பில் இருந்தேன் இப்போது தம்பி என்றும் கலியாணம் என்றும் சொல்லும் போது பயல் அதிஸ்டசாலி இப்படிக்காதல் கடந்துவந்த நவீன சிம்பு என்று ஜோசிக்க வைக்கிறது . பாரிஸ்சில் கலியாணம் என்றால் தனிமரத்திற்கும் அழைப்பு விடுத்தால் தோப்பாக வந்து கும்மியடிப்போம். பால்கோப்பி மட்டும் சூடாகத்தரனும். முன்கூட்டியே வாழ்த்துகின்றேன் இனியதாய் இல்லத்தில் இனையட்டும் இளையவனே நீ கான்பாய் பல சுகங்கள்.
  ///

  ஹா ஹா

  நன்றி அண்ணா,

  பதிலளிநீக்கு
 53. //A.R.ராஜகோபாலன் கூறியது...
  பல வகைப்பட்ட அதிசய பெண்களைப் அசத்தலாக பதிவிட்டமைக்கு நன்றி தலைவா
  //

  தேங்க்ஸ் பாஸ்

  பதிலளிநீக்கு
 54. //vidivelli கூறியது...
  இசைப்பிரியாவை எப்படி மறக்க முடியும்,,,,,அவரின் சாவை ஏற்கவே முடியல,,,
  //

  இசப்பிரியாவின் மரணம் என் கனவாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று நான் அடிக்கடி நினைபதுண்டு

  பதிலளிநீக்கு
 55. //மதுரன் கூறியது...
  வணக்கம் பாஸ்
  அருமையான பதிவு...
  காதல் தந்த வலியில் இருந்து மீண்டு அடுத்த வாழ்க்கைக்கு தயாராகிவிட்டீர்கள்.. வாழ்த்துக்கள்...//


  நன்றி பாஸ்,

  இப்பொழுது எல்லாம் காதல் என் வாழ்க்கையின் ஒரு பகுதிதான் என்று நினைக்க தொடன்கீவிட்டேன் பாஸ்

  பதிலளிநீக்கு
 56. //மதுரன் கூறியது...
  //அனேகமாக அடுத்த வருஷம்
  டும்..டும்.. என்றுதான் நினைக்குறேன்///

  ஹா ஹா... வாழ்த்துக்கள் மாப்புளே....
  கல்யாணம் இலங்கையில தானே... எங்களையும் கூப்புடுவீங்கதானே....
  //

  உங்களை அழைக்காமல் உங்கள் ஆசி இல்லாமல் எனக்கு கல்யாணமா ??

  சான்சே இல்லை பாஸ்

  பதிலளிநீக்கு
 57. Ramani கூறியது...
  //சுற்றி வளைத்துப் பேசக் கற்றுக் கொள்ளவில்லை என
  நீங்கள் சொல்லவேண்டியதே இல்லை பதிவே சொல்கிறது
  அது தேவையும் இல்லை
  மனந்திறந்த உண்மையான பதிவு
  தங்கள் வாழ்வில் வஸந்த காலம் விரைவில் வந்து
  மணம் வீச மனங்கனிந்த வாழ்த்துக்கள்//


  நன்றி பாஸ்,

  உங்களைப்போன்ற பெரியவர்களின் ஆசி மனசுக்கு இதமான சந்தோசத்தை கொடுக்குது,
  என் ஆசை எல்லாம் ஒன்றுதான்,
  உங்களின் அன்பும் ஆசிர்வாதமும் எனக்கு நிலைத்து இருக்க வேண்ட்டும்,
  தேங்க்ஸ் பாஸ்

  பதிலளிநீக்கு
 58. //Rathi கூறியது...
  இசைப்பிரியா இசைப்பிரியா தான்.

  யது மனதில் நிற்கிறார்.

  Wish you a happy married life.//


  நன்றி அக்கா,

  தேங்க்ஸ் , உங்கள் வருகை சந்தோசம் கொடுக்குது, அடிக்கடி வாங்கோ அக்கா,

  பதிலளிநீக்கு
 59. //சி.பி.செந்தில்குமார் கூறியது...
  அழகிய கட்டுரை//

  தேங்க்ஸ் பாஸ்

  பதிலளிநீக்கு
 60. //கவி அழகன் கூறியது...
  அருமை கடைசியில் உண்மை
  வாழ்த்துக்கள் சகோ
  //

  நன்றி பாஸ்

  பதிலளிநீக்கு
 61. முத்து முத்தான் பெணகளின் நட்பும் நினைவும் உங்கள் வாழ்க்கையில்.அவர்களில் சிலர் இனி எங்கள் மனதோடும்.எழுதியதால் நிச்சயம் உங்கள் மனப்பாரமும் கொஞ்சம் குறைந்திருக்கும்.உங்கள் யதுவுக்கும் உங்கள் அன்பு நிறைவாகப் புரிந்திருக்கும் துஷி !

  பதிலளிநீக்கு
 62. //ஹேமா கூறியது...
  முத்து முத்தான் பெணகளின் நட்பும் நினைவும் உங்கள் வாழ்க்கையில்.அவர்களில் சிலர் இனி எங்கள் மனதோடும்.எழுதியதால் நிச்சயம் உங்கள் மனப்பாரமும் கொஞ்சம் குறைந்திருக்கும்.உங்கள் யதுவுக்கும் உங்கள் அன்பு நிறைவாகப் புரிந்திருக்கும் துஷி !
  //

  நன்றி அக்கா,
  உங்கள் வருகையும் கருத்தும்
  எனக்கு ரெம்ப சந்தோசத்தை கொடுக்குது அக்கா.
  உண்மைதான் அக்கா மனசில் இருந்த பாரத்தை இறக்கிய சந்தோஷம் மன நிறைவு எனக்கு.
  தேங்க்ஸ் அக்கா.

  பதிலளிநீக்கு
 63. இசை பிரியாவுக்கு அஞ்சலிகள் என் கண்ணீருடன்!

  பதிலளிநீக்கு
 64. முதல் நபரே மற்ற அனைவரையும் முழுங்கி விட்டார் சகோதரா...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்

  பதிலளிநீக்கு
 65. என் முதல் விசிட்...கலக்கல் பதிவு...என் வாழ்த்துக்களை பிடியுங்கள்...

  பதிலளிநீக்கு
 66. வாழ்வின் வசந்தகாலத்தென்றல் இனிமையாக வீச திருமணநாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 67. ரெம்ப தேங்க்ஸ் அக்கா
  உங்கள் வாழ்த்து உண்மையில்
  மனதில் அதி சந்தோஷத்தை கொடுக்குது.

  பதிலளிநீக்கு
 68. ஜூலியத் பற்றி படித்தது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது. 9 குழந்தைகளை விட்டு ஒரு பெண்ணால் இருக்க முடியுமா? she is not a normal lady...

  பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...