புதன், ஜூன் 22, 2011

இன்று ஒரு தேவ(யானி)தைக்கு பிறந்த நாள்.. ஒரு ரசிகனின் குறிப்பு.

22.06  இன்று,  காதலுக்கு மரியாதை கொடுத்த காதல் தேவதை
தேவயானியின்    பிறந்த நாள். தேவயானியை எனக்கு எனது 8 வயதில் இருந்து புடிக்கும் அதாவது 1995 ல் இருந்து அவருடைய தீவிர ரசிகன் நான்.  1995 வன்னியில் இருந்து அம்மாவுடன் கொழும்பு வந்த போது கொழும்பு தியேட்டரில் பார்த்த முதல் தேவயானியின் திரைப்படம் கல்லூரி வாசல்,  அத்திரைப்படத்தில் ஹீரோயின் பூஜா பத்ராவாக இருந்தபோதும் கொஞ்ச நேரமே வந்து அஜித்தை உருகி உருகி காதல் செய்து இறந்து போகும் தேவயானியை பார்த்ததுமே புடித்து விட்டது எனக்கு, அப்போது தேவயானி என்றொரு நடிகை இருப்பதே பலருக்கு தெரியாது அதன் பின் சில மாதங்களின் பின் வெளிவந்த மெகாஹிட் திரைப்படமான காதல் கோட்டையில் அதே அஜித்துக்கு ஜோடி  அதே   தேவயானிதான்,  காதல் கோட்டை திரைப்படத்தைப்பற்றி சொல்லவே தேவை இல்லை அத்திரைப்படம் பார்த்தபின் மனசுக்குள் நங்கூரமிட்டு நிரந்தரமா இடம் புடித்து விட்டார் தேவயாணி , என் மனசில் மட்டுமா இடம் பிடித்தார் அத்திரைப்படத்தின் பின் தமிழ் சினிமா ரசிகர்கள் அத்தனை பேர் மனங்களிலும் இடம் புடித்து விட்டார்.  குறிப்பாக அப்போது தமிழ்சினிமாவில் தேவயானி அலையே பலமாக  வீசிக்கொண்டு இருந்தது.

தேவயானியை எனக்கு பிடிப்பதர்க்கு அவருடைய அசரடிக்கும் ஹோம்லி அழகு மட்டும் காரணம் அல்ல இன்னொரு சுவையான காரணமும் உண்டு. வன்னியில் புலிகளின் ஆட்சியின் கீழ் வாழ்தவர்கள் நாங்கள்.  அங்கு வரும் இந்திய தமிழ் திரைப்படங்களை முதலில் அவர்கள் பார்த்து அதில் வரும் ஆபாச காட்சிகளை (இடுப்பு தெரிந்தால் கூட அது  ஆபாச   காட்சிதான்)  வெட்டி எறிந்து தணிக்கை செய்த பின்னரே எங்கள் ஊர் தியேட்டர்களில் ஓடும் அத்திரைப்படங்கள் சில நேரங்களில் ஆங்கில திரைப்படங்கள் போல் 1 மணித்தியாலயம் 30 நிமிடங்கள் மட்டுமே ஓடினால் கூட ஆச்சரியம் தான்.  அப்படிப்பட்ட சூழ் நிலையில் அப்போது தமிழ்சினிமாவில் இருந்த ரம்பா மந்த்ரா வகையறாக்கள் மத்தியில் தேவயானியின் கிளாமர் இல்லா நடிப்புக்கு அங்கு ஒரு தனி மரியாதை இருந்ததும் எனக்கு அவரை புடிப்பதர்க்கு ஒரு காரணம் ஆகி விட்டது.  அந்தகாலகட்டங்களில் அப்பாவின் வேலை மாற்றத்தால் நாங்கள் வன்னியை விட்டு    வவுனியாவில் வந்து குடியமர்ந்த பின்  தமிழ்  சினிமா  இன்னும்  எனக்கு  நெருக்கமாகி   தேவயானியின்  படங்கள்  அன்றி   அவரை பற்றிய செய்திகள் பேட்டிகள்  போட்டோக்கள் என்று தேவயாணி சம்மந்தமான எல்லா  கலக்ஷனும்  சேர்க்க தொடங்கி  விட்டேன் அவை   இப்போதும் என்னிடம்  ஏராளம் உண்டு.  பாடசாலை நாட்களில் நான் அவருடைய எவ்வளவு  தீவிர ரசிகன் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம், என்னுடைய பாடசாலை நண்பர்கள் ஆசிரியர்கள் இப்போது கூட என்னை ஜானி என்றுதான் அழைப்பார்கள் (தேவயானியை சுருக்கி). 

16   வருடங்கள்  உருண்டோடி விட்டன, தேவயானிக்கு பின் மந்த்ரா தொடங்கி சிம்ரன் ஜோதிகாவில் இருந்து திரிஷா நயன்தாரா இப்போது ஹன்சிகா வரை எத்தனையோ பேர் வந்தும் என் மனசில் தேவயானிக்கு கொடுத்த சிம்மாசனத்தை யாராலும் கைப்பற்ற முடியவில்லை. இனியும் யாராவது கைப்பற்றுவார்கள் என்ற நம்பிகையும் இல்லை, தேவயானியின் 
அழகுக்கும் அப்போது அவருக்கு இருந்த செல்வாக்குக்கும் அவர்  நினைத்து இருந்தால் ஒரு கோடிஸ்வரர் மகனையோ அல்லது ஒரு
தொழிலதிபரையோ  வளைத்துப்போட்டுக்கொண்டு ஒரு குளிர் நாட்டில் செட்டில் ஆகி இருக்கலாம் ஆனால்  தன்னை விட மிக சாதாரமான தன்  பட இயைக்குனர் தன் மேல் வைத்த உண்மையான காதலை  புரிந்து  எந்த  எதிர்பார்ப்புகளும் இன்றி அவரை காதலித்து அந்த காதலில் கடைசிவரை
உருதியாக நின்று  பல எதிர்ப்புக்களை மீறி அவரையே திருமணம் செய்துகொண்டார்.  தேவயானியின் காதல் திருமணம் அவருடைய பெற்றோருக்கு மறக்க முடியாத மன வலி இன்று வரை,  ஆனால் தேவயானிக்கு  அவர் ரசிகர் மனங்களில் மட்டும் அல்ல அவர் ரசிகர் இல்லதவர் மனங்களிலும் இன்றுவரை ஒரு அசைக்க முடியாத நிரந்தர நன்மதிப்பை கொடுத்துவிட்டு போய் விட்டது அத்திருமணம்.  தேவயானியின் ரகசிய திருமணதின் போது அத்தனை தமிழ் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் இவர்கள் திருமணந்தான் தலைப்பு செய்தி அதுமட்டும் அல்ல பல மீடியாக்கள் வெளிப்படையாகவே தேவயானியின் கணவர் அவருக்கு எந்த விதத்திலும் பொருத்தமானவர் அல்ல ஆகவே இத் திருமணம் ஒரு வருடம் தாக்கு பிடித்தாலே அதிசயம் என்று நக்கல் விமர்சனம் செய்தன (அப்போது பார்த்தீபன் - சீதா, கமல் - சரிதா, விவகாரத்து கேட்டு கோட் ஏறிய நேரம் வேறு).  ஆனால் அதையேல்லாம் பொய்ப்பித்து இனிய இல்லற வாழ்க்கையில் இரண்டு குட்டி தேவதைகளை பெற்றெடுத்து அண்மையில் பத்தாவது ஆண்டு திருமண விழாவைக் கொண்டாடினார்கள் இந்த நட்சத்திர தம்பதிகள்.



இனி தேவயானியை பற்றி சில ருசிகர  தகவல்கள். 

முதல் படத்திலையே ஹீரோயினாக அறிமுகமாகி காணாமல் போகும் நடிகைகள் மத்தியில் தமிழில் துக்கடா கவர்ச்சி (தொட்டாசிணுங்கி , சிவசக்தி ) வேடங்களில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் போராடி தன் தனி திறமையால் முன்னேறி முதன்மை நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தேவயானி.

தேவயானியின் அப்பா மும்பாய் என்றாலும் தாய் ஒரு மலையாளி, தேவயானிக்கு இரண்டு சகோதரர்கள் அதில் நகுல் இப்போது பிரபல நடிகர், அவருடைய அடுத்த தம்பி மயூர் புதிய திரைப்படம் ஒன்றில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

தேவயானியின் காதல் திருமணம் தமிழ் சினிமாவில் பிரபலம், காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பி அவரை வீட்டுகாவலில் வைத்த போது அந்த கட்டுகாவலை மீறி நடுஇரவில் கேட் ஏறிக்குதித்து தப்பியோடி இயக்குனர் இராஜகுமாரனை காதல் திருமணம் செய்துகொண்டார்.

தேவயானி இராஜகுமாரன் தம்பதிகளுக்கு இனியா, பிரியங்கா என இரண்டு பெண் குழந்தைகள்.

தேவயானி 22-06-1974 பிறந்தவர், இப்போது அவருக்கு 37 வயசாகிறது, ஆனால் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பும் இன்னும் பழைய தோற்றத்துடனே அசரடிக்கும் அழகுடன் இருப்பதற்க்கு தன் மனசுதான் காரணம் என்பார்,

ந்த பிரச்சனையாக இருந்தாலும் நான் அதற்க்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஆக கூடியது 5 நிமிஷம் தான், இதுவே நான் என்றும் இளமையாகவும் ஹப்பியாகவும் இருக்க காரணம், இது கடந்த ஆணந்த விகடனில் தேவயானி சொன்னது.

தேவயானியின் மொழி ஹிந்தியாக இருந்தாலும் இப்போது தமிழ் சரலமாக பேசுவார், தன் பிள்ளைகளுக்கு தமிழில் பாடங்கள் சொல்லி கொடுக்கும் அளவுக்கு தன் தமிழ் அறிவை வளர்த்துள்ளார்.

தேவயானி இரவில் படுக்கைக்கு போகும் முன் தன் இரண்டு குழந்தைகளுக்கும் ஏதாவது ஒரு புத்தகத்தை படித்துகாட்டுவது அவர் வழக்கம், தன் குழந்தைகளுக்கு வாசிப்பு திறனை வளர்க்க அது உதவும் என அதற்க்கு காரணம் சொல்லுவார்.

தேவயானியின் காதல் திருமணத்தால் உடைந்த அவரது குடும்பம் பல வருடங்களின் பின் தேவயானியின் இரண்டாவது குழந்தை பிரியங்காவின் வருகையின் பின்தான் ஒன்று சேர்ந்தது.

தேவயானிக்கு பிடித்த நடிகர் கமலஹாசன்,
பிடித்த நடிகை சிறிதேவி.
தேவயானிக்கு பிடித்த திரைப்படம் சாந்தி ( சிறிதேவி நடித்த ஹிந்திதிரைப்படம்).

தேவயானியுடன் அதிக திரைப்படங்களில் நடித்த நடிகர்கள்
அஜித்குமார் & சரத்குமார்.

தேவயானியை வைத்து அதிக திரைப்படங்களை இயக்கியவர் மு.களஞ்சியம் அவர் இயக்கிய பூமணி, பூந்தோட்டம், கிழக்கும் மேற்க்கும், நிலவே முகம் காட்டு என அத்தனை ஹிட் திரைப்படங்களிலும் தொடர்ந்து ஹீரோயினாக நடித்தவர்.

தேவயானி நடித்த முதல் திரைப்படங்கள்.
ஹிந்தி- கோயல்,
மலையாளம்- காதில் ஒரு கின்னாரம்,
தமிழ்- தொட்டாச்சிணுங்கி,
தெலுங்கு- சுஸ்வாகதம்,
பெங்காளி- துஸோர் கோ துளி.

மிழ் நாடு அரசின் கலைமாமணி விருது மட்டும் அல்ல சிறந்த நடிகைக்கான விருதையும் மூன்று முறை பெற்று இருக்கிறார், காதல் கோட்டை, சூரியவம்சம், பாரதி ஆகிய திரைப்படங்களில் நடித்தமைக்காக.

பெரிய திரையை விட்டு சின்னத்திரைக்கு வந்து அங்கையும் தன் திறமையை நிலை நாட்டி இப்போது சின்னத்திரையில் நொ 1 நடிகையாக திகழ்கிறார். தமிழ் சினிமாவில் மதிக்கப்பட்ட தினகரன் விருது விழாவில் தேவயானிக்கு நியூ திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த குணச்சித்திர நடிகைகான விருது கிடைத்தது அப்போது அவரை மேடைக்கு அழைக்கும் போது தமிழ் சினிமாவின் அத்தனை விஜபிகள் முன் நிலையில் "தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார்" என அழைத்தது அப்போதைய
கைலைட் செய்தி.

சின்னத்திரையில் தேவயாணி "கோலங்கள்" என்ற ஒரே ஒரு சீரியலுக்காக மூன்றுமுறை சிறந்த நடிகைக்கான விருதை வென்றவர்.

தேவயானியின் கோலங்கள் சீரியல் 6 வருடங்களை தாண்டியும் முன்னனி சீரியலாக ஓடி சாதனை படைத்தது, தமிழ் சீரியல் வரலாற்றில் இது எந்த சீரியலும் செய்யாத சாதனை.

திரையில் தேவயானிக்கு ஏற்ற சிறந்த ஜோடி அஜித்குமார்தான்,
இது தேவயானியின் தம்பி நடிகர் நகுல் சொன்னது.

சின்னத்திரையை ஆட்டிப்படைக்கும் மஹா சக்தி இரண்டு, ஒன்று ராதிகா மற்றொன்று தேவயானி,  இது அண்மையில் நடிகர் ராதாரவி சொன்னது.

மிழ் சினிமா உலகில் ஒரு நடிகை முன்னனியில் இருக்கும் போதும் சரி சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கும் போது சரி எப்போது கேட்டாலும் சரி அந்நடிகையை பற்றி பெருமைபட்டு அந்த நடிகைக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறார்கள் என்றால் அது எனக்கு தெரிந்து தேவயானிக்கு மட்டும் தான் இது அன்மையில் ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மதன்பாபு சொன்னது.

ந்த புகழ் பணம் வாழ்க்கை எல்லாமே அகத்தியன் சார் தந்தது என்று தேவயாணி அடிக்கடி சொல்லிக்கொள்ளுவார்,  ஒரே ஒரு  படந்தின் மூலம் தேவயானியை புகழின் உச்சிக்கே கொண்டு சென்ற காதல் கோட்டை திரைப்படத்தின் இயக்குனர்தான் அகத்தியன்.


மிழில் அஜித் விஜய் விக்ரம் பிரஷாந்த் என்று  இளைய நடிகர்கள் தொடங்கி விஜய்காந்த் கமல் சரத்குமார் பார்த்தீபன் சத்தியராஜ் என மூத்த நடிகர்கள் வரை அத்தனை முன்னனி நடிகர்களுடனும் ஜோடி போட்டுவிட்டார் தேவயானி,  ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜனியுடன் மட்டும் இன்னும் நடிக்கவே இல்லை என அடிக்கடி பீல் பண்ணுவார்.

சூப்பர் ஸ்டார் ரஜனியுடன் நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகி பின் சில பிரச்சனைகளால் அப்படத்தில் இருந்து விலகிக்கொண்டார்,  அத்திரைப்படம் "அருணாச்சலம்".

தேவயானியின் நெருங்கிய தோழிகள் இரண்டு பேர்.
அவர்கள் நடிகை ரோஜா,  எழுத்தாளர் ஆர்.மணிமாலா.

தேவயாணி தமிழ்சினிமாவில் முக்கியமான ஒரு நடிகையாக இருந்த காலகட்டத்தில் தேவயானியை மட்டுமே நம்பி தயாராகி வெளிவந்து 
தேவயானியின் நடிப்பு பரவலாக பாராட்டப்பட்ட  திரைப்படங்களில்
முக்கியமானவை, செந்தூரம், சொர்ணமுகி,  குருவம்மா.

மிழில் மெஹா ஹிட்டாகி எல்லோருடைய பாராட்டையும் பெற்ற "பொற்காலம்"   "லவ் டுடே" ஆகிய திரைப்படங்களின் தெலுங்கு பதிப்பின் ஹீரோயினி தேவயானிதான்.

னி பிந்நாள்  ல்வாழ்த்துக்ள்.

47 கருத்துகள்:

  1. வணக்கம் துஸ்ய்ந்தன்,
    அட்டைப் படம், சாரி
    டெம்பிளேட் ஹெடர் சூப்பரா இருக்கு.
    அந்தப் போட்டோக்களில்
    ஒரு பிரெஞ் Rap Star மாதிரி, பிரெஞ்ச் Gang Star மாதிரி நிற்பது யாரு?
    நீங்களா?

    பதிலளிநீக்கு
  2. அதா பாஸ் ?? ஹா ஹா
    அவருதான் பிரபல பிரஞ்சு நடிகர் , உங்க பிரெண்ட் ஓட்டவடைட்ட கேட்டா சொல்லுவாரே lol

    பதிலளிநீக்கு
  3. நான் இரவு இரவா கண் முழிச்சு என் தேவயானிக்கு பிறந்த நாள் வாழ்த்து போட்டா அதை கண்டு கொள்ளாமல் ஒரு வாழ்த்துக்கூட சொல்லாமல், என்னை கலாய்ப்பதிலேயே குறியாக இருக்கும்
    மிஸ்ரர் நிரூபன் அண்ணாவை வண்மையாக கண்டிப்பதுடன், அவரை வலை உலக்கில் இருந்து ஒரு மாதத்துக்கு தள்ளி வைக்குறேன்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான ஆக்கம் மச்சி..ரியலி சூப்பெர்ப்!!!
    எனக்கும் பிடித்த நடிகை..
    ரசித்து ருசித்து எழுதி இருக்கீங்க...ம்ம்ம்ம்

    பதிலளிநீக்கு
  5. அருமையான ஆக்கம் மச்சி..ரியலி சூப்பெர்ப்!!!
    எனக்கும் பிடித்த நடிகை..
    ரசித்து ருசித்து எழுதி இருக்கீங்க...ம்ம்ம்ம்

    பதிலளிநீக்கு
  6. சூப்பர் பதிவு மச்சி...எங்க இவரை யாரும் மறந்துடுவாங்களொ என்று பயந்தேன்.. இனி கவலையில்லை அதான் நீங்க இருக்கீங்களே...


    வாழ்த்துகள் தேவதை தேவயானிக்கு....

    http://sivagnanam-janakan.blogspot.com/2011/06/chief-minister.html

    பதிலளிநீக்கு
  7. தேவயானியைப் பற்றிய குறிப்புக்கள் நல்லதாக இருக்கிறது அவருடைய நடிப்பு புதிய நடிகைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு!

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா6:59 AM, ஜூன் 22, 2011

    HELLO WORST HEROIN EVER (Boss TN innaku yarekettalum perumbalonor verukku nadigai ivalagatthan irrukka mudium.This cover story presentation was good but aluthan mokkai(devyani) I am hearing first time good comments abt devvani.

    பதிலளிநீக்கு
  9. அடடா நீங்க தேவயானி ரசிகனா?

    பதிலளிநீக்கு
  10. ம்ம்.. நல்லாத்தான் எழுத்தியிருக்கிறீங்க
    ரொம்ப டைம் எடுத்திருப்பீங்க போல

    பதிலளிநீக்கு
  11. தேவயானிக்கு என்னுடைய வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்

    பதிலளிநீக்கு
  12. பாஸ்.. இப்பிடி உங்க படத்த header ல போட்டிருந்தா பொண்ணுங்க மனசு டிஸ்ரப் ஆகாதா???

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா8:26 AM, ஜூன் 22, 2011

    தேவயானி ரசிகரா தாங்கள் ....

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா8:27 AM, ஜூன் 22, 2011

    அண்மையில் தேவயாணி எனக்கு அனுப்பிய இமெயிலில்
    இணைத்து அனுப்பிய புகைப்படம் ஒன்று...
    //// நெசமா தான் சொல்லுரிங்களா ...

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா8:27 AM, ஜூன் 22, 2011

    தேவயானி இரவில் படுக்கைக்கு போகும் முன் தன் இரண்டு குழந்தைகளுக்கும் ஏதாவது ஒரு புத்தகத்தை படித்துகாட்டுவது அவர் வழக்கம், தன் குழந்தைகளுக்கு வாசிப்பு திறனை வளர்க்க அது உதவும் என அதற்க்கு காரணம் சொல்லுவார்.///மிக நல்லா பழக்கம் ..தாயாராகவும் தன் கடமையை பொறுப்பாக செய்கிறார் போல ..

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா8:28 AM, ஜூன் 22, 2011

    அட இவ்வளவு விடயங்கள் தெரிஞ்சு வச்சுக்கிரின்களே பாஸ் ....

    பதிலளிநீக்கு
  17. தேவ(யானி)தைக்கு//

    வைக்கிறாங்க பாருங்க தலையங்கம்,

    அவா இப்பவுமே இவருக்குத் தேவதையாம்...
    ஹி..ஹி...

    பதிலளிநீக்கு
  18. அண்மையில் தேவயாணி எனக்கு அனுப்பிய இமெயிலில்
    இணைத்து அனுப்பிய புகைப்படம் ஒன்று...//


    மாப்ளே, நிஜமாவா சொல்றாய்...
    நம்பவே முடியலைடா..

    உனக்குச் சினிமாக் காதல் முத்திப் போச்சு.
    ஹி...ஹி...

    பதிலளிநீக்கு
  19. எனக்கும் ஒரு காலத்தில் தேவயானி பிடித்த நடிகையாக இருந்தார்.

    பின்னர் சினிமா பார்க்கும் பழக்கம் குறைந்து விட காணாமற் போய் விட்டார்.

    தேவயானிக்கு உங்களுடன் இணைந்து நானும் என் வாழ்த்துக்களைப் பகிர்கிறேன்,

    பதிலளிநீக்கு
  20. அழகான தேவயானியைப்பற்றி
    அபூர்வத் தகவல்களை தந்த
    தம்பி
    துஷ்யந்தனுக்கு
    நன்றிகள் பல

    பதிலளிநீக்கு
  21. //மைந்தன் சிவா கூறியது...
    அருமையான ஆக்கம் மச்சி..ரியலி சூப்பெர்ப்!!!
    எனக்கும் பிடித்த நடிகை..
    ரசித்து ருசித்து எழுதி இருக்கீங்க...ம்ம்ம்ம்
    //

    தேங்க்ஸ் நண்பா,
    உங்களுக்கும் தேவயானியை புடிக்குமா??
    ம்ம்... சினிமாவில் கவர்ச்சி நடிகைகளை ரசித்தாலும் எல்லா ஆண்களுக்கும் குத்துவிளக்காக இருக்கும் நடிகைகளைத்தான் புடிக்குது,
    இதுதான் ஆண்மனமோ

    பதிலளிநீக்கு
  22. //நிலவின்” ஜனகன் கூறியது...
    சூப்பர் பதிவு மச்சி...எங்க இவரை யாரும் மறந்துடுவாங்களொ என்று பயந்தேன்.. இனி கவலையில்லை அதான் நீங்க இருக்கீங்களே...


    வாழ்த்துகள் தேவதை தேவயானிக்கு....//

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மச்சி,
    சான்சே இல்லை மறக்கவே முடியாது மறக்கும் முகமா அது ..!!

    பதிலளிநீக்கு
  23. //Nesan கூறியது...
    தேவயானியைப் பற்றிய குறிப்புக்கள் நல்லதாக இருக்கிறது அவருடைய நடிப்பு புதிய நடிகைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு!//

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ,
    உண்மைதான் ரேவதி சரிதா வரிசையில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அசத்தல் நடிகை தேவயாணி,
    அவர் நடிப்பு மட்டும் அல்ல அவர் ரியல் லைப் ம்ம் பல நடிகைகள் பின்பற்ற வேண்டியது.

    பதிலளிநீக்கு
  24. //பெயரில்லா கூறியது...
    HELLO WORST HEROIN EVER (Boss TN innaku yarekettalum perumbalonor verukku nadigai ivalagatthan irrukka mudium.This cover story presentation was good but aluthan mokkai(devyani) I am hearing first time good comments abt devvani.//


    சார் உங்க கருத்தை எல்லோருடைய கருத்தாகவும் சொல்லி முடிவு சொல்லாதீங்க ..
    கலைமாமணி விருது உட்பட மூன்று முறை தமிழக அரசின் சிறந்த நடிகை விருதுகளுடன் பல விருகளை வேண்டி குவித்த ஒரு நடிகையை
    யாருக்குமே புடிக்காது என்று சொல்வதை ஆச்சரியமாக கேட்குறேன்,
    ம்ம் உங்களுக்கு என்ன கோவமோ தேவயாணி மேல் ???
    தேவயானியின் பிரபலத்துக்கு ஒரு சான்று
    பாரம்பரம் மிக்க "ஆனந்த விகடன்" வார இதழில் தேவயாணி கேள்வி பதில்களுக்காகவே தனியாக சில பக்கங்களை வார வாரம் ஒதுக்கியமையும் அதற்க்கு
    கிடைத்த வரவேற்ப்பும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா10:30 PM, ஜூன் 22, 2013

      Dear Thussy pls don bother abt this kinda comments. Write for us v would love to c more.

      நீக்கு
  25. //மதுரன் கூறியது...
    அடடா நீங்க தேவயானி ரசிகனா?
    //

    ஹி ஹி ,
    ஆமாம் பாஸ்

    பதிலளிநீக்கு
  26. //மதுரன் கூறியது...
    ம்ம்.. நல்லாத்தான் எழுத்தியிருக்கிறீங்க
    ரொம்ப டைம் எடுத்திருப்பீங்க போல//

    அவ்வ
    அந்த சோக கதையை ஏன் கேக்குறிங்க
    ஒரு வாரமா என் ஜபோனில் வேலை செய்யும் இடங்களில் எல்லாம் இருந்து எழுதிக்கொண்டு திரிந்தேன்.

    பதிலளிநீக்கு
  27. //மதுரன் கூறியது...
    தேவயானிக்கு என்னுடைய வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்//

    அவங்க சார்பா என் நன்றிகள் பாஸ்

    பதிலளிநீக்கு
  28. //மதுரன் கூறியது...
    பாஸ்.. இப்பிடி உங்க படத்த header ல போட்டிருந்தா பொண்ணுங்க மனசு டிஸ்ரப் ஆகாதா???
    //

    அவ்வ..
    இவ்ளோ நேரமா நல்லாத்தான போய்ட்டு இருந்திச்சு...
    ஏன் குத்து பாஸ்
    (நம்ம வலைப்பக்கம் ஒரே பசங்கதான் வாரங்க பாஸ், ஒரு பொண்ணையும் காணோம் , இதில நீங்க வேற)

    பதிலளிநீக்கு
  29. //வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
    வாழ்த்துக்கள்..
    //

    நன்றி பாஸ்

    பதிலளிநீக்கு
  30. //கந்தசாமி. கூறியது...
    தேவயானி ரசிகரா தாங்கள் ....
    //

    அதே அதே

    பதிலளிநீக்கு
  31. //கந்தசாமி. கூறியது...
    அண்மையில் தேவயாணி எனக்கு அனுப்பிய இமெயிலில்
    இணைத்து அனுப்பிய புகைப்படம் ஒன்று...
    //// நெசமா தான் சொல்லுரிங்களா ...
    //

    உண்மைதான் பாஸ்,
    நடிகைகளுள் எந்த வித பந்தாவும் இல்லாதவர் தேவயாணி,

    பதிலளிநீக்கு
  32. //கந்தசாமி. கூறியது...
    அட இவ்வளவு விடயங்கள் தெரிஞ்சு வச்சுக்கிரின்களே பாஸ் ....//

    சும்மா இல்ல பாஸ் 1995 இருந்து இன்றுவரை அவர் ரசிகன் நான்,
    இன்னும் நிறைய இருக்கு அவசரத்தில் மிஸ் பண்ண்ட்டேன் (அடுத்த பதிவு ஒன்று போட்ட போச்சு )

    பதிலளிநீக்கு
  33. //நிரூபன் கூறியது...
    தேவ(யானி)தைக்கு//

    வைக்கிறாங்க பாருங்க தலையங்கம்,

    அவா இப்பவுமே இவருக்குத் தேவதையாம்...
    ஹி..ஹி...
    //

    ஹி ஹி ,
    இவருக்கு போறாம போறாம :)

    தேவயானிக்கு 60 வயசானாலும் ஏன் பார்வையில் அவங்க எப்பவும் ஒரு தேவதை தான் பாஸ்

    பதிலளிநீக்கு
  34. //நிரூபன் கூறியது...
    அண்மையில் தேவயாணி எனக்கு அனுப்பிய இமெயிலில்
    இணைத்து அனுப்பிய புகைப்படம் ஒன்று...//


    மாப்ளே, நிஜமாவா சொல்றாய்...
    நம்பவே முடியலைடா..

    உனக்குச் சினிமாக் காதல் முத்திப் போச்சு.
    ஹி...ஹி...//

    நெசம்தான் பாஸ்,
    தன்னை நேசிப்பவர்களை மதிக்க தெரிந்த பிரபலங்களில் முதன்மையானவர் தேவயாணி.

    ஹி ஹி
    நோ நெவர் பாஸ், சினிமா புடிக்கும் பட் அதிகம் பார்க்க மாட்டேன், ரெண்டு மாதத்தில் ஒரு படம் முழுசா பார்த்தாலே ஆச்சரியம் தான்
    சினிமாவை விட தேவயானியை அதிகமாக புடிக்கும், (தேவயாணி சினிமாவை விட்டு ஒதுங்கியதும் நானும் சினிமா பார்ப்பதை குறைத்து விட்டேன் பாஸ்)

    பதிலளிநீக்கு
  35. //எனக்கும் ஒரு காலத்தில் தேவயானி பிடித்த நடிகையாக இருந்தார்.

    பின்னர் சினிமா பார்க்கும் பழக்கம் குறைந்து விட காணாமற் போய் விட்டார்.

    தேவயானிக்கு உங்களுடன் இணைந்து நானும் என் வாழ்த்துக்களைப் பகிர்கிறேன்,//

    வாழ்த்துக்கு நன்றி பாஸ்,
    என்னது உங்களுக்கும் தேவயானியை புடிக்குமா?
    அப்போ ஓட்டவடை வேலை சுலபமாக போச்சே

    எங்க நம்ம ஓட்டவடை
    நம்ம நிருபன் அண்ணாவுக்கு தேவயாணி மாதிரி ஒரு பொண்ணு பாருங்க, நம்ம அண்ணன் உடனே ஓகே சொல்லுவாரு

    பதிலளிநீக்கு
  36. //.R.ராஜகோபாலன் கூறியது...
    அழகான தேவயானியைப்பற்றி
    அபூர்வத் தகவல்களை தந்த
    தம்பி
    துஷ்யந்தனுக்கு
    நன்றிகள் பல
    //

    ரெம்ப தேங்க்ஸ் பாஸ்
    ( இதில் ஏதும் உள் குத்து இல்லையே...lol )

    பதிலளிநீக்கு
  37. இந்த ஆணாதிக்க சண்முகம் ச்சீ.. சமூகம் தளபதியின் பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருக்க, அழகு தேவதையின் பிறந்தநாளை நினைவு படுத்தியமைக்கு நன்றி நண்பா...

    பதிலளிநீக்கு
  38. தேவயாணி பற்றிய நல்ல பல குறிப்புகள் தந்துள்ளீர்கள் நண்பரே /

    பதிலளிநீக்கு
  39. தேவயானிக்கே அவரைப்பற்றி
    இவ்வளவு விஷயங்கள் தெரிந்திருக்குமா
    என்பது சந்தேகமே
    அடுக்கி அசத்தி இருக்கிறீர்கள்
    தேவயானி கொடுத்துவைத்தவர்
    எனத்தான் தோன்றுகிறது
    மனங்கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  40. //Mahan.Thamesh சொன்னது…
    தேவயாணி பற்றிய நல்ல பல குறிப்புகள் தந்துள்ளீர்கள் நண்பரே //

    தேங்க்ஸ் பாஸ்

    பதிலளிநீக்கு
  41. //Ramani கூறியது...
    தேவயானிக்கே அவரைப்பற்றி
    இவ்வளவு விஷயங்கள் தெரிந்திருக்குமா
    என்பது சந்தேகமே
    அடுக்கி அசத்தி இருக்கிறீர்கள்
    தேவயானி கொடுத்துவைத்தவர்
    எனத்தான் தோன்றுகிறது
    மனங்கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்//


    ரெம்ப நன்றி பாஸ்,
    அடிகடி வாங்க பாஸ்,

    பதிலளிநீக்கு
  42. மாப்பிள நானும் அந்த முதல் போட்டோவ எங்கேயோ பார்த்த ஞாபகம்...! ஆங் டாக்டர் விகடன்ல..?

    பதிலளிநீக்கு
  43. super nanba unmayilayea neega great, nanum devayani mam oda fan than. chance less. amazing.

    na matum tha mam oda theevira fan nu ninashutu iruntha neenga yanna minjutinga poanga.

    பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...