அண்மையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தேவயாணி குமுறிய விடயம் இது. இப்போது உள்ள ஹீரோக்கள் எல்லாம் என்னை தங்களுக்கு அம்மாவாக நடிக்க அழைப்பு மேல் அழைப்பு விடுகிறார்கள் அது கூட பராவாயில்லை முன்பு நான் யார் யாருடன் ஜோடி போட்டேனோ
அவர்களே என்னை தங்களுக்கு அம்மாவா நடிக்க அழைப்பதுதான்
வேதனையாக இருக்கு என்று சொல்லியவர் உதாரணமாக ஒரு
சம்பவத்தையும் குறிப்பிட்டார். அஜித்தின் சூப்பர் ஹிட் திரைப்படமான "வரலாறு" திரைப்படத்தில் அஜித்துக்கு அம்மாவாக நடிக்க அழைத்ததாகவும்(பின்பு கனிகா நடித்த வேடம்) அதற்க்காகாக பெருந்தொகை ஒன்றை சம்பளமாக தர முன்வந்த போதும் "எனக்கு சம்பளம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை"என்று கூறி அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாகவும் முன்பு அஜித்துடன் பல படங்களில் நான் ஜோடியாக நடித்துள்ளேன்,
எங்கள் ஜோடிப்பொருத்தம் ரசிகர்களிடையே மிக பிரபலமானதும் கூட இப்படி இருக்கும் போது நான் எப்படி அஜித்துக்கு அம்மாவாக நடிக்க முடியும்? என்று எதிர்கேள்வி கேட்டு ஆதங்கப்பட்டவர். பின்பு பிற்காலத்தில் நான் அம்மாவாக நடித்தால் கூட புதுமுக நடிகர்களுக்கு மட்டுமே
அம்மாவாக நடிப்பேன் கண்டிப்பாக நான் ஜோடியாக நடித்த நடிகர்களுக்கு மட்டும் ஒருபோதும் அம்மாவாக நடிக்கமாட்டேன் என்று சற்று காட்டமாகவே சொல்லி இருந்தார்.
அம்மாவாக நடிப்பேன் கண்டிப்பாக நான் ஜோடியாக நடித்த நடிகர்களுக்கு மட்டும் ஒருபோதும் அம்மாவாக நடிக்கமாட்டேன் என்று சற்று காட்டமாகவே சொல்லி இருந்தார்.
இது தேவயானியின் தனிப்பட்ட முடிவு என்று சொல்லி இதை நாம் மேலோட்டமாக பார்க்காமால் கொஞ்சம் உற்றுப்பார்த்தால் உள்ளே தமிழ்சினிமாவின் அராஜகம் கைகொட்டி சிரிப்பது தெரியும். முன்பு அஜித்-தேவயாணி ஜோடி மிகப்பிரபலம். கல்லூரிவாசல் படம் மூலம் முதன் முதலில் ஜோடி சேர்ந்தவர்கள், அதன்பின் வெளிவந்து தேசியவிருது பெற்ற மெகாஹிட் படமான "காதல்கோட்டை" மூலம் மிகச்சிறந்த ஜோடியாக ரசிகர்களாக கணிக்கப்பட்டார்கள். பின்பு தொடரும்.., நீ வருவாய் என.. போன்ற படங்களில் கூட வெற்றிகரமான ஜோடியாகவே வலம்வந்தார்கள் பின்பு தேவயானியின் திடீர் காதல் திருமணத்தால் தேவயானிக்கு சினிமாவாய்புக்கள் மறுக்கப்பட முன்பு யாருடன் ஜோடிபோட்டு பிரபலமானாரோ இப்போது அவருக்கே அதே அஜித்துக்கே அம்மாவா நடிக்க வைக்க தேவயானியை தமிழ்சினிமா முயற்சிப்பதுதான் வேடிக்கை. இது தமிழ்சினிமாவின் போக்கிரித்தனம். ஹீரோ என்பவன் எப்போதும் இளமையாகவே இருப்பான் அவனை எப்போதும் ரசிக்க ரசிகர்கள் இருப்பார்கள் அவன் அறுபது வயதில் கூட பதினாறு வயது ஹீரோயினுடன் ஆடிப்பாடுவதை சகிப்பார்கள் என்று நினைக்கும் தமிழ்சினிமா, கதாநாயகிகள் விடயத்தில் மட்டும் எதிர்ப்புறமாய் நினைப்பதுதான் அராஜக போக்கின் உச்சம்.
அடுத்த மாதம் வரவிருக்கும் முகேஷ் ஜோடியாக தேவயாணி நடித்திருக்கும் "சர்க்கார் காலனி" திரைப்படத்தில் இருந்து..
ஒரு நடிகைக்கு இருக்கும் செல்வாக்கு அவர் திருமணத்தின் பின் எப்படி குறைந்து போகும் என்பதுதான் எனக்கும் ஆச்சரியமான விடையம்.
மலையாள பக்கம் போனால் அங்கே இப்போதும் தேவயாணி ஹீரோயினாக நடித்துக்கொண்டுதான் இருக்குறார். அடுத்தமாசம் தேவயாணி முகேஷுடன் ஜோடிபோட்ட "சர்க்கார் காலனி" திரைப்படம் வெளிவர இருக்கின்றது. ஏன் சுகன்யா சோபனா எல்லாம் இப்பவும் கதாநாயகிகளாக மலையாளத்தை வலம் வருகிறார்கள். ஏன் இந்திய சினிமாக்களுக்கே முன்னோடிகளாக இருக்கும் ஹிந்தி சினிமாக்களில் கூட நடிகைகள் விடையத்தில் நியாயமாகவே நடந்து கொள்கிறார்கள். திருமணத்தின் பின் கூட ஐஸ்வர்யா ராய் அங்கே இப்போதும் முன்னணி நடிகைதான் அவர் திருமணம் அவர் செல்வாக்கையோ திரைப்பட வாய்ப்புக்களையோ எந்த விதத்திலும் பாதிக்க வில்லை. ஏன் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான பின்பு கூட கஜோல் ஷாருக்கானுடன் ஜோடிபோட்டு அசத்துகிறார். இப்போது கூட கஜோளுடன் ஜோடிபோட பாலிவுட் ஹீரோக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால் நம்மூர் ஹீரோக்கள்..?? ஹீரோயினை தலையில் வைத்து கொண்டாடும் இவர்கள் அவர்களுக்கு திருமணமாம் என்ற செய்தி வந்தாலே போதும் எவ்வளவு தூரம் தூக்கினார்களோ அங்கே இருந்தே கீழே போட்டுவிடுவார்கள். இதற்க்கு நல்ல உதாரணம் சிம்ரன். தமிழ்சினிமாவில் முன்னியில் இருந்தபோது சிம்ரனுடன் ஒரு படத்தில் ஆவது ஜோடி போட்டுவிடவேனும் என்று அலைந்த ஹீரோக்களே நம் ஹீரோக்கள். பரபரப்பாக இருக்கும்போதே திருமணம் செய்துகொண்ட சிம்ரன் திருமணத்தின் பின்பு நடிக்கவந்து முட்டிமோதிப்பார்த்தார் கதாநாயகி வாய்ப்புக்கொடுப்போர்தான் யாருமில்லை. முன்பு யார்யாரெல்லாம் சிம்ரனுடன் ஜோடிபோட துடியாய் துடித்தார்களோ அவர்களே சிம்ரனை தங்களுக்கு அம்மாவாகவும் அக்காவாகவும் நடிக்க அழைத்ததுதான் வேதனை. இதுதான் இன்று தமிழ்சினிமாவில் நடிகைகளுக்கு உள்ள நிலைமை.
உண்மையிலேயே தமிழ்சினிமாவில் அதிததிறமை இருந்தாலும் திருமணமாகிவிட்டால் அவர்கள் ஹிரோயினாக நடிப்பதை ரசிகர்கள் விரும்பவில்லையா?? அல்லது தமிழ்சினிமாவை மிகஅதிகமாக ஆண்களே
ஆக்கிரமித்து இருப்பதால் திருமணமான ஹீரோயின்களை தங்கள் படங்களில் பயன்படுத்தினால் அவர்களால் பல வழிகளில் தங்களுக்கு
ஒத்துழைப்பு தரமுடியாது என்று நினைக்கிறார்களா?? இதில் எது உண்மை??
கடந்தகால தமிழ்சினிமாவில் இப்படிப்பட்ட அவல நிலை இல்லை என்றே சொல்லவேண்டும். திருமணத்தின் பின்பு கூட சொவ்கார்ஜானகி, கே.ஆர் விஜயா, சாவித்திரி போன்றவர்கள் ஒரு கலக்கு கலக்கினார்கள். ஏன் இப்போது கூட நாங்கள் பழைய திரைப்படங்களைப்பார்க்கும் போது கே.ஆர் விஜயா சாவித்திரி போன்றவர்கள் தொலைக்காட்சி பெட்டியை மறைக்கும் உருவத்துடன் நின்று கொண்டு அத்தான் எனக்கு வெக்கமாக இருக்கு என்றோ.. அத்தான் என்னை கைவிட்டு விடாதீர்கள்.. என்று காதல் வசனம் பேசுவது ஆச்சரியத்தை கொடுக்கும். அப்போது சினிமாவில் இருந்தவர்கள் கதையையும் நடிகர்கள் திறமையையும்தான் நம்பினார்கள் போல்.
இப்போது தேவயானியை எடுத்துகொண்டாள் கூட 1995 ஆண்டு காலப்பகுதியில் தமிழ்சினிமாவில் எவ்வித பின்பலமும் இன்றி ஒரு குத்தாட்ட நடிகையாக ஒரு பாடல் காட்சியில் அறிமுகமாகி தன் நடிப்பாற்றலால் முன்னனி நடிகையாக முன்னேறியவர். அவர் பிஸியாக நடித்துகொண்டிருந்த காலப்பகுதியிலேயே "தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருதை" நான்கு முறை பெற்றதே அவரின் சிறந்த நடிப்புக்கு உதாரணம். பரபரப்பாக நடித்துகொண்டிருக்கும்போதே திடீர் என காதல் திருமணம் செய்துகொண்டார். தமிழ்சினிமாவின் சாபம் அவருக்கு மட்டும் விதிவிலக்கா என்ன..?? அவர் ஒப்பந்தம் ஆன "மானஸ்தன்" போன்ற பல படங்களில் இருந்து காரணமே இன்றி தூக்கி வீசப்பட்டார், அவர் நடித்து கொண்டிருந்த படங்கள் ஆன " ரோசாப்பு சின்ன ரோசாப்பு" "தவமணி" "க்ளிக்" போன்ற திரைப்படங்கள் பாதிவளர்ந்த நிலையில் நிறுத்தப்பட்டன. "லவ்லி " "பம்மல் கே சம்மந்தம்" படங்களில் பல காட்சிகளில் நடித்துகொண்டிருந்த நிலையிலேயே தேவயாணி நீக்கப்பட்டு அவருக்கு பதில் மாளவிகா சினேகா போன்ற நடிகைகளை ஒப்பந்தம்
செய்யப்பட்டார்கள். இதில் பம்மல் கே சம்மந்தம் கமலின் திரைப்படம். ஒரு நல்ல நடிகையை திருமணம் செய்துகொண்டார் என்ற ஒரே காரணத்துக்காக நீக்குகிறார்கள் இதற்க்கு கமல் கூட மவுனமாக இருந்து ஆதரித்தமைதான் ஆச்சரியம். எது எப்படியோ "திருமணமாகிவிட்டது" என்ற ஒரே காரணத்துக்காக பல திறமையான நடிகைகளை ஒதுக்கி வைப்பது என்பது தமிழ்சினிமாவுக்கு ஆரோக்கியமான விடயம் அல்ல.
டேய் மருமோனே இது என்னடா புது கத வாசிட்டுட்டு வாறேண்டா கும்மியடிக்க...
பதிலளிநீக்குஐயோ காட்டான் முன்தீட்டார்....கொஞ்சத்தில மிஸிங்...நானும் வாசித்து விட்டு வாறன் கும்மி அடிக்க......
பதிலளிநீக்குஇந்த பதிவில கனக்க ஹீரோகளுக்கு ஆப்பு அடிதிருகிரீர்கள்..............(யாருலே அது அஜித் ரசிகனா....இந்த பக்கம் வாருங்கோ)
பதிலளிநீக்குநீங்க தேவயானியின் பரம ரசிகன் என்பதற்கு இந்த பதிவு உதாரணம்...(இத நான் சொல்லித்தான் தெரியணும்)
பதிலளிநீக்குதமிழ் மக்கள் ஒருவரை ஒருவரினுடைய மனைவியாக பார்த்த பிறகு எப்படி அண்ணே முடியும்.... நீங்களே சொல்லுங்க...
பதிலளிநீக்குநாலு கப் டீ......(கொஞ்சம் குடிச்சு பாருங்கோ)
மாப்பிள தேவயானியின் ஈமெயில் இருந்தா முதல்ல இந்த பதிவ வாசிக்க ஒரு லிங் குடுய்யா...
பதிலளிநீக்குதனக்கு உலகத்திலே ஒரு ரசிகனும் இல்லையோன்னு நொந்துபோய் இருப்பதாக தகவல்.. இல்லை நீ இருக்கிறாய் என்று காட்ட வேண்டாமா??
தமிழ்சினிமாவை மிகஅதிகமாக ஆண்களே
பதிலளிநீக்குஆக்கிரமித்து இருப்பதால் திருமணமான ஹீரோயின்களை தங்கள் படங்களில் பயன்படுத்தினால் அவர்களால் பல வழிகளில் தங்களுக்கு
ஒத்துழைப்பு தரமுடியாது என்று நினைக்கிறார்களா??
சரி மருமோனே உனக்கு தெரியும்தானே காட்டான் மாமாவைப் பற்றி அது என்னையா ஒத்துழைப்பு கொஞ்சம் விளக்கமாய் சொலலாந்தானே.....!!!!!
ஆகுலன் கூறியது...
பதிலளிநீக்குதமிழ் மக்கள் ஒருவரை ஒருவரினுடைய மனைவியாக பார்த்த பிறகு எப்படி அண்ணே முடியும்.... நீங்களே சொல்லுங்க...
நாலு கப் டீ......(கொஞ்சம் குடிச்சு பாருங்கோ)
அது சரி ஆகுலன் ஆனா பாருங்கோ நமிதா என்ர ஆள் என்று தெரிந்த பிறகும் ஏன் அவங்களுக்காக எல்லோரும் சண்டை பிடிக்கிறார்கள்..!!??
இதுவும் தமிழ் பண்பாடு இல்லைத்தானே..!!
பண்டரிபாய் அன்று இப்படி சொன்னாரா?. பராசக்தியில் சிவாஜிக்கு ஜோடியாக வந்தவர் கொஞ்ச நாளிலேயே சிவாஜிக்கு அக்கா ஆனார். பின் பல படங்களில் அம்மா அகிவிட்டாரே
பதிலளிநீக்குசகாதேவன்
காட்டான் சொன்னது…
பதிலளிநீக்குஅது சரி ஆகுலன் ஆனா பாருங்கோ நமிதா என்ர ஆள் என்று தெரிந்த பிறகும் ஏன் அவங்களுக்காக எல்லோரும் சண்டை பிடிக்கிறார்கள்..!!??
இதுவும் தமிழ் பண்பாடு இல்லைத்தானே..!!
எங்கட ஆக்கள் இரண்டவத ஒருநாளும் ஏற்று கொள்ள மாட்டார்கள் அதுதான்.....
ஹிஹி ஐயோ ஐயோ அவனவன் ஹன்சிகா கார்த்திகான்னு புது பிகருக்கு அடிபடேக்க....
பதிலளிநீக்குஊர்ல சூப்பர் பிகர் பான்ஸ் எல்லாம் சும்மா இருக்காங்க..இந்த தேவயாணி பான் துஷ்யந்தன் மட்டும்..
ஹிஹி ஓகே ஓகே கோபம் புரியுது பாஸ்...
தேவயாணி கூட சூப்பர் பிகரு தான் ஒத்துக்கிறன்..;
இவங்க இப்பிடித்தான் என்ன பண்ண..அவங்க இப்போ ஹீரோயினாக நடிக்க முடியாது.
நடித்தால் எத்தனை பேர் பாக்க போவாங்க?
சோ,
இதை விட்டால் வேறு வழி கிடையாது பாஸ்...கவலைப்படாதீங்க...
தமிழ் சினிமாவின் போக்கிரித்தனம் ஒழிக!!
பதிலளிநீக்குஎன்ன பன்ன பாஸ் இந்த ஹீரோப்பயலுகள்.60,65 வயசிலையும் பாஞ்சி பாஞ்சி பைட்பன்னுறது.என்னா நீங்க சொன்ன மாதிரி 16 வயசு நாயகிகளுடன் டூயட் பாடுவது என்ன தாங்க முடியலைப்பா.நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஒரு படத்தில் குழந்தையாக மீனா மகளாக நடித்து இருப்பார்(படம்-அன்புள்ள ரஜினிகாந்)அதே மீனா பின் வளர்ந்த பின் நம்ம தலையுடன் எத்தனை படங்கள் கதாநாயகியாக நடித்தார்.இப்போ மீனா திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.இன்னும் கொஞ்சகாலம் சென்றதும்.மீனாவை தலைவருக்கு அம்மாவா நடிக்கக்கூப்பிட்டாலும் கூப்புடுவாங்க.என்ன நாசமப்பா.இந்த விடயத்தில் நம்ம ஜஸ் அக்கா(ஜஸ்வர்யா ராய்)பரவா இல்லை.இந்த வயசிலையும் அக்கா எம்புட்டு அழகா இருக்குது.அவருக்கு எத்தனை சான்ஸ் வருது.இப்ப அக்காவை அத்தான்(அபிசேக்)கர்ப்பமாக்கிவிட்டதால்.குழந்தை பிறந்த பின்பு எப்படி அவருக்கு நடிக்க சான்ஸ்வருமா வராதா?என்று பொறுத்துதான் பார்க்கவேண்டும்.//அப்பறம் தேவயானி என்ன ஒரு பிரமாதமான நடிகை ஒரு ரசிகனாக அவரை ரொம்ப மிஸ் பன்னுறன் பாஸ்.//
பதிலளிநீக்கு"திருமணமாகிவிட்டது" என்ற ஒரே காரணத்துக்காக பல திறமையான நடிகைகளை ஒதுக்கி வைப்பது என்பது தமிழ்சினிமாவுக்கு ஆரோக்கியமான விடயம் அல்ல.
பதிலளிநீக்கு//
ஆமா பாஸ் ஹீரோ ல்லாம் பல்லு போனப்பறமும் ஹீரோ வாவே இருக்காங்க .ஹீரோயன் பாடு திண்டாட்டம் தான்.
முன்பு நான் யார் யாருடன் ஜோடி போட்டேனோ
பதிலளிநீக்குஅவர்களே என்னை தங்களுக்கு அம்மாவா நடிக்க அழைப்பதுதான்
வேதனையாக இருக்கு//
ஐயோ ஐயோ அநியாயம் அக்கிரமம், பாட்டியாக நடிக்க கூப்பிடாதது ஹி ஹி...
முன்பு நான் யார் யாருடன் ஜோடி போட்டேனோ
பதிலளிநீக்குஅவர்களே என்னை தங்களுக்கு அம்மாவா நடிக்க அழைப்பதுதான்
வேதனையாக இருக்கு//
ஐயோ ஐயோ அநியாயம் அக்கிரமம், பாட்டியாக நடிக்க கூப்பிடாதது ஹி ஹி...
தேவயானியின் குரலாக ஒலித்தது பதிவு.
பதிலளிநீக்குநியாயமான விசயம்
பதிலளிநீக்குடூ லேட்..இந்த அம்மாவை காதல் கோட்டையிலேயே அஜித்துக்கு அம்மா ஆக்கி இருக்கணும்..
பதிலளிநீக்குஒரு ரசிகனின் மனக்குமுறல் புரிகிறது )
பதிலளிநீக்குஇது தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதி, மீனா மற்றும் இதர நடிகைகளுக்கு கூட இந்த நிலை வந்துள்ளது.
பதிலளிநீக்கு////அவன் அறுபது வயதில் கூட பதினாறு வயது ஹீரோயினுடன் ஆடிப்பாடுவதை சகிப்பார்கள் என்று நினைக்கும் தமிழ்சினிமா, கதாநாயகிகள் விடயத்தில் மட்டும் எதிர்ப்புறமாய் நினைப்பதுதான் அராஜக போக்கின் உச்சம்.//ஹீரோயின்களிடம் எதிர்பார்ப்பது திறமையை விட உடல் அழகை தானே ...
பதிலளிநீக்குநல்வாத்தான் சொல்றீங்க! அவங்க கேட்டு நடக்கணுமே!
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
<<<காட்டான் கூறியது...
பதிலளிநீக்குடேய் மருமோனே இது என்னடா புது கத வாசிட்டுட்டு வாறேண்டா கும்மியடிக்க...<<<
மாமா, நீங்க ஆறுதலா படிச்சுட்டு வாங்கோ கும்மி அடிக்க, அப்புறம் கண்ணாடிய மறக்காதீங்கோ!! கண்ணாடிய விட்டுட்டு வந்து என்னடா எழுதி இருக்க என்று என்னை தொல்லைபன்ன படாது.. ஆமா சொல்லிட்டேன். :)
<<<ஆகுலன் கூறியது...
பதிலளிநீக்குஐயோ காட்டான் முன்தீட்டார்....கொஞ்சத்தில மிஸிங்...நானும் வாசித்து விட்டு வாறன் கும்மி அடிக்க......<<<
ஹி ஹி
காட்டான் எனக்கு பக்கத்தில்தானே இருக்காரு, அதான் பக்கென்று ஓடி வந்துட்டாரு போல மச்சான்
<<<ஆகுலன் கூறியது...
பதிலளிநீக்குஇந்த பதிவில கனக்க ஹீரோகளுக்கு ஆப்பு அடிதிருகிரீர்கள்..............(யாருலே அது அஜித் ரசிகனா....இந்த பக்கம் வாருங்கோ)<<<
டேய்.. டேய்..
ஏன்டா இப்புடி கோத்து விடுறாய்....
அவ்வவ்.......
<<<ஆகுலன் கூறியது...
பதிலளிநீக்குநீங்க தேவயானியின் பரம ரசிகன் என்பதற்கு இந்த பதிவு உதாரணம்...(இத நான் சொல்லித்தான் தெரியணும்)<<<
அப்போ... நாங்க தேவயாணி ஜொள்ளர் என்பது உலகத்துக்கே தெரிஞ்சு போச்சா, ஆஹா !!!
<<<ஆகுலன் கூறியது...
பதிலளிநீக்குதமிழ் மக்கள் ஒருவரை ஒருவரினுடைய மனைவியாக பார்த்த பிறகு எப்படி அண்ணே முடியும்.... நீங்களே சொல்லுங்க...<<<
போட்டான்யா ஒரு போடு..
விளக்கம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு, மேலே சொல்லுவேன் வேணாம் வாயை கிளராத விட்டுடு.. :))
<<<காட்டான் கூறியது...
பதிலளிநீக்குமாப்பிள தேவயானியின் ஈமெயில் இருந்தா முதல்ல இந்த பதிவ வாசிக்க ஒரு லிங் குடுய்யா...
தனக்கு உலகத்திலே ஒரு ரசிகனும் இல்லையோன்னு நொந்துபோய் இருப்பதாக தகவல்.. இல்லை நீ இருக்கிறாய் என்று காட்ட வேண்டாமா??<<<
என்ன மாமா இப்புடி சொல்லிட்டீங்க.. சினிமாவில் வேணும் என்றால் இப்போ தேவயானிக்கு ரசிகர்கள் இல்லாம இருக்கலாம், ஆனா இப்போ சின்னத்திரையில் அவங்க தானே நொ-01 , அவங்களுக்கு இல்லாத ரசிகர்களா??????? எல்லாம் குடும்ப பெண்களும் அபி அபி என்று உருகிறது தெரியல்லையா மாம்ஸ், உதுக்குத்தான் சொல்லுறது கண்ணாடி போடணும் என்று, ஹி ஹி
நண்பா உங்களிடம் ஒரே கேள்வி, இப்போது வெளிவரும் படங்களில் ஹன்ஸிகா, அமலாபால் உள்ளிட்டோருக்கு பதிலாக தேவயானி, சிம்ரன் ஆகியோர் நடித்திருந்தால் பார்ப்பீர்களா. அதுசரி வரலாற்றில் அஜீத் அம்மாவாக நடிக்க கூப்பிட்டார்களாமே, இதே மேடம்தானே நியூ படத்தில் எஸ்ஜெசூர்யாவுக்கு அம்மாவா நடிச்சாங்க? வரல்ற்றில் அஜித்துக்கு அப்பாவும் அஜீத்தானே?
பதிலளிநீக்குஎந்திரன் வந்தபோது இதே அறிவுஜீவி ரசிகன் அடித்த கமெண்ட், 65 வயது நாயகன், மெனோபாஸ் நாயகி. அப்படியானால் மெனோபாஸ் வந்துவிட்டால் பெண்கள் கதாநாயகியாக நடிப்பதை விட்டுவிடவேண்டும் என்றுதானே அர்த்தம். ரசிகனே இப்படி இருக்கும்போது படமெடுக்கிறவன் என்ன பண்ணுவான்?
<<<காட்டான் கூறியது...
பதிலளிநீக்குதமிழ்சினிமாவை மிகஅதிகமாக ஆண்களே
ஆக்கிரமித்து இருப்பதால் திருமணமான ஹீரோயின்களை தங்கள் படங்களில் பயன்படுத்தினால் அவர்களால் பல வழிகளில் தங்களுக்கு
ஒத்துழைப்பு தரமுடியாது என்று நினைக்கிறார்களா??
சரி மருமோனே உனக்கு தெரியும்தானே காட்டான் மாமாவைப் பற்றி அது என்னையா ஒத்துழைப்பு கொஞ்சம் விளக்கமாய் சொலலாந்தானே.....!!!!!<<<
போங்க மாமா....
எனக்கு வெக்கம் வெக்கமா வெருது, ஒரு மருமோனுட்ட கேக்கிற டவுட்டா இது,நம்ம தமிழ்சினிமாவில் ஒத்தழைப்பு இன்னா என்னனு தெரியாதவங்க இருக்காங்களா என்ன !!!
<<<காட்டான் கூறியது...
பதிலளிநீக்குஆகுலன் கூறியது...
தமிழ் மக்கள் ஒருவரை ஒருவரினுடைய மனைவியாக பார்த்த பிறகு எப்படி அண்ணே முடியும்.... நீங்களே சொல்லுங்க...
நாலு கப் டீ......(கொஞ்சம் குடிச்சு பாருங்கோ)
அது சரி ஆகுலன் ஆனா பாருங்கோ நமிதா என்ர ஆள் என்று தெரிந்த பிறகும் ஏன் அவங்களுக்காக எல்லோரும் சண்டை பிடிக்கிறார்கள்..!!??
இதுவும் தமிழ் பண்பாடு இல்லைத்தானே..!!<<<
கேட்டாருய்யா ஒரு கேள்விய என் மாமா, யோவ் ஆகுலன், இதுக்கு பதிலா சொல்லுய்யா முதலிலே..
இது அக்கிரம் இல்ல?? அநியாயம் இல்ல??எங்கட செம்பு.. எங்கட நாட்டாமை...
<<<சகாதேவன் கூறியது...
பதிலளிநீக்குபண்டரிபாய் அன்று இப்படி சொன்னாரா?. பராசக்தியில் சிவாஜிக்கு ஜோடியாக வந்தவர் கொஞ்ச நாளிலேயே சிவாஜிக்கு அக்கா ஆனார். பின் பல படங்களில் அம்மா அகிவிட்டாரே<<<
அது ஆயிரத்தில் ஒண்ணு பாஸ்,
அதைவிட தேவயாணி போல் பண்டாரி பாய் கதாநாயகியாக நடித்து புகழ் பெறவில்லையே...
அவர் அம்மாவா நடித்துதானே புகழ் பெற்றார்.
<<<ஆகுலன் கூறியது...
பதிலளிநீக்குகாட்டான் சொன்னது…
எங்கட ஆக்கள் இரண்டவத ஒருநாளும் ஏற்று கொள்ள மாட்டார்கள் அதுதான்.....
<<<
அவ்வவ்....
நெசமாவா?????
புதிய அலசல் யாருமே யோசிக்காத அலசல்
பதிலளிநீக்குஎப்படி இப்படி ஒரு சிந்தனை
<<<மைந்தன் சிவா கூறியது...
பதிலளிநீக்குஹிஹி ஐயோ ஐயோ அவனவன் ஹன்சிகா கார்த்திகான்னு புது பிகருக்கு அடிபடேக்க....
ஊர்ல சூப்பர் பிகர் பான்ஸ் எல்லாம் சும்மா இருக்காங்க..இந்த தேவயாணி பான் துஷ்யந்தன் மட்டும்..
ஹிஹி ஓகே ஓகே கோபம் புரியுது பாஸ்...
தேவயாணி கூட சூப்பர் பிகரு தான் ஒத்துக்கிறன்..;
இவங்க இப்பிடித்தான் என்ன பண்ண..அவங்க இப்போ ஹீரோயினாக நடிக்க முடியாது.
நடித்தால் எத்தனை பேர் பாக்க போவாங்க?
சோ,இதை விட்டால் வேறு வழி கிடையாது பாஸ்...கவலைப்படாதீங்க...<<<
ஹன்சிகாவது கார்த்திகாவது, போங்க பாஸ் உதுவள் இண்டைக்கு இருக்குங்கள் நாளைக்கு பூத கண்ணாடி கொண்டு தேடித்தான் புடிக்கணும். பட் நம்ம தேவயாணி அப்படியா?? அது தேவதை பாஸ், ராஜகுமாரன் கொத்திக்கொண்டு போய்ட்டாரு.. :( என்னால இப்புடி ஆதங்கப்பட்டு பதிவுதான் போட முடியுது பாஸ். அவ்வ்வ்வ்
<<<மைந்தன் சிவா கூறியது...
பதிலளிநீக்குதமிழ் சினிமாவின் போக்கிரித்தனம் ஒழிக!!
<<<
சவுண்டு காணாது பாஸ், இன்னும் சத்தமா??? ஹி ஹி ஹி ஹி
<<<K.s.s.Rajh கூறியது...
பதிலளிநீக்குஎன்ன பன்ன பாஸ் இந்த ஹீரோப்பயலுகள்.60,65 வயசிலையும் பாஞ்சி பாஞ்சி பைட்பன்னுறது.என்னா நீங்க சொன்ன மாதிரி 16 வயசு நாயகிகளுடன் டூயட் பாடுவது என்ன தாங்க முடியலைப்பா.நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஒரு படத்தில் குழந்தையாக மீனா மகளாக நடித்து இருப்பார்(படம்-அன்புள்ள ரஜினிகாந்)அதே மீனா பின் வளர்ந்த பின் நம்ம தலையுடன் எத்தனை படங்கள் கதாநாயகியாக நடித்தார்.இப்போ மீனா திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.இன்னும் கொஞ்சகாலம் சென்றதும்.மீனாவை தலைவருக்கு அம்மாவா நடிக்கக்கூப்பிட்டாலும் கூப்புடுவாங்க.என்ன நாசமப்பா.இந்த விடயத்தில் நம்ம ஜஸ் அக்கா(ஜஸ்வர்யா ராய்)பரவா இல்லை.இந்த வயசிலையும் அக்கா எம்புட்டு அழகா இருக்குது.அவருக்கு எத்தனை சான்ஸ் வருது.இப்ப அக்காவை அத்தான்(அபிசேக்)கர்ப்பமாக்கிவிட்டதால்.குழந்தை பிறந்த பின்பு எப்படி அவருக்கு நடிக்க சான்ஸ்வருமா வராதா?என்று பொறுத்துதான் பார்க்கவேண்டும்.//அப்பறம் தேவயானி என்ன ஒரு பிரமாதமான நடிகை ஒரு ரசிகனாக அவரை ரொம்ப மிஸ் பன்னுறன் பாஸ்.<<<
அழகானா ஆழமான கருத்துக்கு முதலில் தேங்க்ஸ் பாஸ்,
உண்மைதான் பாஸ், தேவயாணி, மீனா, சுவலட்சுமி, என்று தமிழ் சினிமா மிஸ் பண்ணிய நடிகைகள் ஏராளம்.தமிழ் சினிமாவை ஆண்கள் ஆட்டி வைபதால்தான் இந்த நிலை, இது கட்டாயமாக மாற வேண்டிய நிலை, ஹிந்தி மலையாளத்தை பார்த்தாவது இவர்கள் திருத்திக்கொள்ள வேண்டும்.
<<<கோகுல் கூறியது...
பதிலளிநீக்கு"திருமணமாகிவிட்டது" என்ற ஒரே காரணத்துக்காக பல திறமையான நடிகைகளை ஒதுக்கி வைப்பது என்பது தமிழ்சினிமாவுக்கு ஆரோக்கியமான விடயம் அல்ல.
//
ஆமா பாஸ் ஹீரோ ல்லாம் பல்லு போனப்பறமும் ஹீரோ வாவே இருக்காங்க .ஹீரோயன் பாடு திண்டாட்டம் தான்.<<<
உண்மைதான் பாஸ், நடிகைகள் பாடு ரெம்ப கஸ்ரம்தான் குறிப்பாக தமிழ் நடிகைகளுக்கு. சின்னத்திரை என்று ஒன்று இல்லாவிடில்
இன்னும் பரிதாபத்துக்கு உரியவர்களாக இருப்பார்கள்
செங்கோவி சொன்னது…
பதிலளிநீக்குடூ லேட்..இந்த அம்மாவை காதல் கோட்டையிலேயே அஜித்துக்கு அம்மா ஆக்கி இருக்கணும்..
Amen.
<<<MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்குமுன்பு நான் யார் யாருடன் ஜோடி போட்டேனோ
அவர்களே என்னை தங்களுக்கு அம்மாவா நடிக்க அழைப்பதுதான்
வேதனையாக இருக்கு//
ஐயோ ஐயோ அநியாயம் அக்கிரமம், பாட்டியாக நடிக்க கூப்பிடாதது ஹி ஹி...
<<<
யோவ்.... உமக்கு நக்கல் ரெம்ப ஓவரா போச்சய்யா... அவ்வ்
<<<தமிழ் உதயம் கூறியது...
பதிலளிநீக்குதேவயானியின் குரலாக ஒலித்தது பதிவு.<<<
தேங்க்ஸ் பாஸ்
<<<கார்த்தி கேயனி கூறியது...
பதிலளிநீக்குநியாயமான விசயம்
<<<
ஆதரவுக்கு நன்றி பாஸ்
<<<செங்கோவி கூறியது...
பதிலளிநீக்குடூ லேட்..இந்த அம்மாவை காதல் கோட்டையிலேயே அஜித்துக்கு அம்மா ஆக்கி இருக்கணும்..<<<
யோவ்.. இருய்யா இரு, சீக்கிரமே வீட்டுக்கு ஆட்டோ அனுப்பாம விட மாட்டேன்.ஜாக்கிரதை மக்கா சொல்லிபுட்டேன் ஆமா... அவ்வ்வவ்வ்
<<<கந்தசாமி. கூறியது...
பதிலளிநீக்குஒரு ரசிகனின் மனக்குமுறல் புரிகிறது )<<<
புரிதலுக்கு நன்றி பாஸ்
//கந்தசாமி. கூறியது...
பதிலளிநீக்குஇது தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதி, மீனா மற்றும் இதர நடிகைகளுக்கு கூட இந்த நிலை வந்துள்ளது.//
உண்மைதான் பாஸ், இது தமிழ் சினிமாவின் சாபம் என்று கூட சொல்லலாம். தேவயாணி, மீனா, சுவலட்சுமி போன்ற பல நடிகைகள் இருக்கிறார்கள்...
<<<<கந்தசாமி. கூறியது...
பதிலளிநீக்கு////அவன் அறுபது வயதில் கூட பதினாறு வயது ஹீரோயினுடன் ஆடிப்பாடுவதை சகிப்பார்கள் என்று நினைக்கும் தமிழ்சினிமா, கதாநாயகிகள் விடயத்தில் மட்டும் எதிர்ப்புறமாய் நினைப்பதுதான் அராஜக போக்கின் உச்சம்.//ஹீரோயின்களிடம் எதிர்பார்ப்பது திறமையை விட உடல் அழகை தானே ...
<<<<
ஆனால் நடிகையின் உடலை நம்பி படமெடுப்பது எல்லாம் ஒரு பொழைப்பா?? சரி அப்படி எடுக்கப்பட்ட எத்தனை படங்கள் ஓடி இருக்கு என்பது கேள்விக்குறியாகவே தொங்கி நிக்குதே நண்பா
<<<kovaikkavi கூறியது...
பதிலளிநீக்குநல்வாத்தான் சொல்றீங்க! அவங்க கேட்டு நடக்கணுமே!
வேதா. இலங்காதிலகம்.
<<<
கேட்டுட்டாலும் பாஸ்,
எருமை மாட்டில் மழை பெய்தால் போல்தான்...
<<<கவி அழகன் கூறியது...
பதிலளிநீக்குபுதிய அலசல் யாருமே யோசிக்காத அலசல்
எப்படி இப்படி ஒரு சிந்தனை<<<
இந்த அரக்கிழடு ஹீரோவேல்லாம் பதினாறு வயசு பொண்ணுங்க கூட கொஞ்சி குலாவுவதை பார்க்கும் பொது வந்த சிந்தனைதான் பாஸ்,
அவ்வவ்
<<<<ரெவெரி கூறியது...
பதிலளிநீக்குசெங்கோவி சொன்னது…
டூ லேட்..இந்த அம்மாவை காதல் கோட்டையிலேயே அஜித்துக்கு அம்மா ஆக்கி இருக்கணும்..
Amen.<<<<
அப்படி தேவயாணி மேல் என்ன கோவமோ???
உங்க ரெண்டு பேருக்கும் ஏதும் வாய்க்கால் வரம்பு, மாமன் மச்சான் பிரச்சனையா பாஸ்??
சும்மா சொல்லுங்க பாஸ், வெட்டியாத்தான் இருக்கோம், தீர்த்துவைப்போம் இல்ல
<<<< பாலா கூறியது...
பதிலளிநீக்குநண்பா உங்களிடம் ஒரே கேள்வி, இப்போது வெளிவரும் படங்களில் ஹன்ஸிகா, அமலாபால் உள்ளிட்டோருக்கு பதிலாக தேவயானி, சிம்ரன் ஆகியோர் நடித்திருந்தால் பார்ப்பீர்களா. அதுசரி வரலாற்றில் அஜீத் அம்மாவாக நடிக்க கூப்பிட்டார்களாமே, இதே மேடம்தானே நியூ படத்தில் எஸ்ஜெசூர்யாவுக்கு அம்மாவா நடிச்சாங்க? வரல்ற்றில் அஜித்துக்கு அப்பாவும் அஜீத்தானே?
எந்திரன் வந்தபோது இதே அறிவுஜீவி ரசிகன் அடித்த கமெண்ட், 65 வயது நாயகன், மெனோபாஸ் நாயகி. அப்படியானால் மெனோபாஸ் வந்துவிட்டால் பெண்கள் கதாநாயகியாக நடிப்பதை விட்டுவிடவேண்டும் என்றுதானே அர்த்தம். ரசிகனே இப்படி இருக்கும்போது படமெடுக்கிறவன் என்ன பண்ணுவான்?
<<<<
இப்போது தேவயாணி அமலா பாலுக்கும் ஹன்சிகாவுக்கும் பதில் நடித்தால் ஏன் பார்க்க முடியாது பாஸ்?? நான் ஒன்றும் தனுஸ்கும் சிம்புக்கும் ஜோடியாக தேவயாணி நடிக்கலாம் என்று சொல்லவே இல்லையே, கமல், ரஜனி, சத்தியராஜ், சரத்குமார் ஏன் அஜித், விஜய் க்கு கூட தேவயாணி யோடியாக நடிக்கலாமே?? இந்த அரைக் கிழவர்கள் அமலா பாலுடனும் கார்த்திகாவுடனும் ஜோடி சேர்ந்தால்தான் அசிங்கமாக இருக்கு, அண்ணன் தங்கை போலவோ, தந்தை மகள் போலவோ இருக்கு, தமிழ் சினிமாவில் மட்டுமே இந்த கேவலம் சற்று அண்டை மாநிலங்களை பாருங்கள், அங்கு மலையாளத்தில் தேவயாணி சுகன்யா மீனா எல்லாம் இப்பவும் ஹீரோயின். ஏன் ஹிந்தியை எடுங்கள் அங்கே ஆனாபட்ட சிறிதேவிக்கே இப்பவும் மவுசு. சிறிதேவி லேட்டசாக
கூட ஒரு படத்தில் ஹிரோயினாக நடிக்கிறார், தேவயானியை நான் இப்பவும் மரத்தை சுத்தி டுயட் பாட சொல்ல வில்லை, அவருக்கான கதைகளில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாமே "கதையின் நாயகியாக".
அப்புறம் நியு சூரியாவுக்கு அம்மாவ நடித்தார் ஏன் அஜித்துக்கு அம்மாவ நடிக்க முடியாது என்பது அபத்தம் பாஸ்,
தேவயாணி நான் ஜோடியாக நடித்தவருக்குத்தான் அம்மாவாக நடிக்க மாட்டேன் என்றார், சூர்யாவுக்கு ஜோடியாக தேவயாணி அம்மாவாக நடிக்கவே இல்லையே, அதைவிட இவ்விடயத்தில் தேவயாணி மேல் தவறு இல்லை ஏன் மேல் தான் தவறு, காரணம் தேவயாணி பேட்டியில் அஜித்தின் வரலாறு படத்தை தான் நிராகரித்ததுக்கு முக்கிய காரணமாக அதில் அஜித்தை பார்த்து தேவயாணியை " நீ எல்லாம் ஒரு ஆம்பளையா..???" என்று கே எஸ் ரவிக்குமார் பேச சொல்லியதும் ஒரு காரணமாக குறிப்பிட்டு இருந்தார்.
அப்புறம் ரசிகர்கள் ரசிக்க மாட்டார்கள் என்பதை நம்பமுடியாது பாஸ்,
மலையாள ரசிகர்கள் ரசிக்கிறார்கள், ஹிந்தியில் இன்னும் கஜோல் நந்திதா தாஸ் , சிறிதேவியை ரசிக்கிறார்கள்,
ஆனால் தமிழில் மட்டும் எப்படி ஆதரிக்காமல் போவார்கள்,,,?? பழைய சினிமாவில் இந்த நிலை இல்லாமல்தானே இருந்திச்சு, ஏன் பாரதிராஜா தன் "முதல் மரியாதை" படத்தில் திருமணத்தின் பின் ராதைவை வைத்து எடுத்து வெள்ளிவிழா கண்டாரே ?? அதில் ராதாவுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று யாராவது படத்தை ரசிக்காமலா விட்டார்கள்??? ஒரு படத்தை ரசிகன் ரசிப்பதற்கு நல்ல கதையும் நடிகர்களுக்கு நல்ல திறமையும் இருந்தால் போதுமே??????
வணக்கம் துஸி..
பதிலளிநீக்குஉண்மையில் ஜோடியாக நடித்தவர்களிடம்,
அம்மாவேடம் எதிர்பார்ப்பது கொடுமையிலும்ம் கொடுமை ஐயா./
மருமோனே நீ என்னத்த கூவினாலும் நம்ம மீனா தன்ர மகளை சூப்பர் ஸ்டாரோட சோடியா நடிக்க வைக்காமல் தான் ஓயப்போவதில்லைன்னு சபதம் எடுத்திருக்காங்களாமே நிசமாவா ...??
பதிலளிநீக்குகாட்டான் கூறியது...
பதிலளிநீக்குடேய் மருமோனே இது என்னடா புது கத வாசிட்டுட்டு வாறேண்டா கும்மியடிக்க..//
என்னது..காட்டானுக்கு துஸி மருமோனா..
அப்போ இன்னோர் குட்டிக் காட்டான் ரெடி ஆகிறார் போல,.
அன்பரே!
பதிலளிநீக்குமுதற்கண் வலைவந்து
கருத்துரைத்த தங்களுக்கு நன்றி!
வணக்கம்!
நீண்ட காலமாக நான் திரைப்
படங்களே பார்பதில்லை.
பொதுவாக தமிழ்நாட்டில்
கதாநாயகர்களின் ஆதிக்கம் அதிகம்
என்பதைக் கேள்விப் பட்டிருக்கிறேன்
புலவர் சா இராமாநுசம்
காட்டான் கூறியது...
பதிலளிநீக்குடேய் மருமோனே இது என்னடா புது கத வாசிட்டுட்டு வாறேண்டா கும்மியடிக்க..//
என்னது..காட்டானுக்கு துஸி மருமோனா..
அப்போ இன்னோர் குட்டிக் காட்டான் ரெடி ஆகிறார் போல,.
ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011 4:36:00 pm GMT
மாப்பிள அவன் என்ர மருமோந்தான் ஆனா குட்டிக்காட்டான் இல்ல அவனுக்கு இளகிய மனசு காட்டானை போல கம்ப தூக்கிறவனில்லை.. அவண்ட பதிவ பார்தாலே தெரியவில்லையா மாப்பிள...
புலவர் சா இராமாநுசம் கூறியது...
பதிலளிநீக்குஅன்பரே!
முதற்கண் வலைவந்து
கருத்துரைத்த தங்களுக்கு நன்றி!
வணக்கம்!
நீண்ட காலமாக நான் திரைப்
படங்களே பார்பதில்லை.
பொதுவாக தமிழ்நாட்டில்
கதாநாயகர்களின் ஆதிக்கம் அதிகம்
என்பதைக் கேள்விப் பட்டிருக்கிறேன்
புலவர் சா இராமாநுசம்
ஐயா நித்திரை விட்டு எழுந்திட்டார் நாங்க இனித்தான் ஐயா..!!!??? விளங்கிச்சா மருமோனே...
புலவர் சா இராமாநுசம் கூறியது...
பதிலளிநீக்குஅன்பரே!
முதற்கண் வலைவந்து
கருத்துரைத்த தங்களுக்கு நன்றி!
வணக்கம்!
நீண்ட காலமாக நான் திரைப்
படங்களே பார்பதில்லை.
பொதுவாக தமிழ்நாட்டில்
கதாநாயகர்களின் ஆதிக்கம் அதிகம்
என்பதைக் கேள்விப் பட்டிருக்கிறேன்
புலவர் சா இராமாநுசம்
ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011 5:05:00 pm GMT-07:00
ஐயா நீங்க கேள்விப்படுகிறீர்கள் அத நாங்க பாக்குறோமையா...
தேவயாணி கொடுத்துவைத்தவர்
பதிலளிநீக்குஇல்லையெனில் அவரைப் பற்றி
அவரே யோசிக்காத அளவு யோசிக்கிற
இப்படி ஒரு நல்ல ரசிகர் கிடைத்திருப்பாரா
படமும் தர்க்கரீதியாக விளக்கிச் செல்லும் விதமும்அருமை
தொடர வாழ்த்துக்கள்
இலைமறை காயாக உள்ள பல பதிவர்களை இனம் காணல்.இது எமது தளத்தின் நோக்கம்.கொஞ்சம் எல்லாப்பதிவர்களும் வந்து ஆதரவைத்தாருங்கள்
பதிலளிநீக்குபராசக்தியில் சிவாஜிக்கு ஜோடியாக வந்தவர் கொஞ்ச நாளிலேயே சிவாஜிக்கு அக்கா ஆனார். பின் பல படங்களில் அம்மா அகிவிட்டார்
பதிலளிநீக்குதமிழ் சினிமாவில்
இதை விட்டால் வேறு வழி கிடையாது
பராசக்தியில் சிவாஜிக்கு ஜோடியாக வந்தவர் கொஞ்ச நாளிலேயே சிவாஜிக்கு அக்கா ஆனார். பின் பல படங்களில் அம்மா அகிவிட்டார்
பதிலளிநீக்குதமிழ்சினிமாவில்
இதை விட்டால் வேறு வழி கிடையாது
<<<நிரூபன் சொன்னது…
பதிலளிநீக்குவணக்கம் துஸி..
உண்மையில் ஜோடியாக நடித்தவர்களிடம்,
அம்மாவேடம் எதிர்பார்ப்பது கொடுமையிலும்ம் கொடுமை ஐயா.<<<
நெசம்தான் பாஸ், இதுவும் ஒருவித ஆணாதிக்கம் தான்.
<<<காட்டான் கூறியது...
பதிலளிநீக்குமருமோனே நீ என்னத்த கூவினாலும் நம்ம மீனா தன்ர மகளை சூப்பர் ஸ்டாரோட சோடியா நடிக்க வைக்காமல் தான் ஓயப்போவதில்லைன்னு சபதம் எடுத்திருக்காங்களாமே நிசமாவா ...??<<<<
ரஜனி கிழவனுக்கு ஆசைய பார்த்தேலோ..........?? அவ்வவ்
<<<<<நிரூபன் கூறியது...
பதிலளிநீக்குகாட்டான் கூறியது...
டேய் மருமோனே இது என்னடா புது கத வாசிட்டுட்டு வாறேண்டா கும்மியடிக்க..//
என்னது..காட்டானுக்கு துஸி மருமோனா..
அப்போ இன்னோர் குட்டிக் காட்டான் ரெடி ஆகிறார் போல,.
<<<<<
பாஸ், காட்டானின் மருமோன் என்று சொல்வதில் பெருமை எனக்கு...
<<<<<புலவர் சா இராமாநுசம் கூறியது...
பதிலளிநீக்குஅன்பரே!
முதற்கண் வலைவந்து
கருத்துரைத்த தங்களுக்கு நன்றி!
வணக்கம்!
நீண்ட காலமாக நான் திரைப்
படங்களே பார்பதில்லை.
பொதுவாக தமிழ்நாட்டில்
கதாநாயகர்களின் ஆதிக்கம் அதிகம்
என்பதைக் கேள்விப் பட்டிருக்கிறேன்
புலவர் சா இராமாநுசம்<<<<
நன்றி அய்யா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
பல நேரங்களில் சினிமா பார்க்காமல் இருப்பதே நன்று போல் தோன்றும் அய்யா.. நீங்கள் கேள்வி பட்டது உண்மைதான் தமிழ்சினிமாவில் ஆணாதிக்கம் அதிகம் தான், சினிமாவில் பெண்களை ஏதோ ஒரு போதை பொருளாகத்தான் பார்க்கிறார்கள்.
<<<<காட்டான் கூறியது...
பதிலளிநீக்குஎன்னது..காட்டானுக்கு துஸி மருமோனா..
அப்போ இன்னோர் குட்டிக் காட்டான் ரெடி ஆகிறார் போல,.
மாப்பிள அவன் என்ர மருமோந்தான் ஆனா குட்டிக்காட்டான் இல்ல அவனுக்கு இளகிய மனசு காட்டானை போல கம்ப தூக்கிறவனில்லை.. அவண்ட பதிவ பார்தாலே தெரியவில்லையா மாப்பிள...<<<<<<
தேங்க்ஸ் காட்டான் மாமா, ஹி ஹி மாமா பொய் சொல்லுறாரு நிரு பாஸ், இந்த துஷி எவ்வளவுக்கு எவ்ளோ நல்லவனோ அதை விட என் காடான் மாமா நல்லம். எங்க காட்டான் மாமா பெயர்தான் கரடுமுரடா இருக்கும், எங்க மாமா மனசு சொக்க தங்கமய்யா..
<<<<<காட்டான் கூறியது...
பதிலளிநீக்குபுலவர் சா இராமாநுசம் கூறியது...
அன்பரே!
முதற்கண் வலைவந்து
கருத்துரைத்த தங்களுக்கு நன்றி!
வணக்கம்!
நீண்ட காலமாக நான் திரைப்
படங்களே பார்பதில்லை.
பொதுவாக தமிழ்நாட்டில்
கதாநாயகர்களின் ஆதிக்கம் அதிகம்
என்பதைக் கேள்விப் பட்டிருக்கிறேன்
புலவர் சா இராமாநுசம்
ஐயா நித்திரை விட்டு எழுந்திட்டார் நாங்க இனித்தான் ஐயா..!!!??? விளங்கிச்சா மருமோனே...<<<<<<
ஹி ஹி,
புரியுது புரியுது, நாங்க சாப்பிடாமா இருந்தா கூட சினிமா பார்க்காமல் இருக்க மாட்டோம். எங்க காட்டான் மாமாவ எடுத்துங்க, அவரு எங்க அத்தையை பார்க்காமல் கூட இருப்பாரு ஆனா பாருங்க எங்க "சின்ன அத்தை" நமிதாவ பார்க்காம இருக்கமாட்டாரு...
<<<<<காட்டான் கூறியது...
பதிலளிநீக்குபுலவர் சா இராமாநுசம் கூறியது...
அன்பரே!
முதற்கண் வலைவந்து
கருத்துரைத்த தங்களுக்கு நன்றி!
வணக்கம்!
நீண்ட காலமாக நான் திரைப்
படங்களே பார்பதில்லை.
பொதுவாக தமிழ்நாட்டில்
கதாநாயகர்களின் ஆதிக்கம் அதிகம்
என்பதைக் கேள்விப் பட்டிருக்கிறேன்
ஐயா நீங்க கேள்விப்படுகிறீர்கள் அத நாங்க பாக்குறோமையா...<<<<
ஹி ஹி
அதே அதே
<<<<<Ramani கூறியது...
பதிலளிநீக்குதேவயாணி கொடுத்துவைத்தவர்
இல்லையெனில் அவரைப் பற்றி
அவரே யோசிக்காத அளவு யோசிக்கிற
இப்படி ஒரு நல்ல ரசிகர் கிடைத்திருப்பாரா
படமும் தர்க்கரீதியாக விளக்கிச் செல்லும் விதமும்அருமை
தொடர வாழ்த்துக்கள்<<<<
தேங்க்ஸ் ரமணி சார் :)
<<<svr sakthi கூறியது...
பதிலளிநீக்குபராசக்தியில் சிவாஜிக்கு ஜோடியாக வந்தவர் கொஞ்ச நாளிலேயே சிவாஜிக்கு அக்கா ஆனார். பின் பல படங்களில் அம்மா அகிவிட்டார்
தமிழ்சினிமாவில்
இதை விட்டால் வேறு வழி கிடையாது<<<
இதைத்தான் நான் ஆணாதிக்கம், இது மாற்ரப்படனும் என்று சொல்கிறேன் பாஸ்
எது எப்படியோ "திருமணமாகிவிட்டது" என்ற ஒரே காரணத்துக்காக பல திறமையான நடிகைகளை ஒதுக்கி வைப்பது என்பது தமிழ்சினிமாவுக்கு ஆரோக்கியமான விடயம் அல்ல.
பதிலளிநீக்குதமிழ்சினிமாவின் அராஜகம்."
துஷி...எனக்கு பிடித்த நடிகைகளுள் அவரும் ஒருவர்...எந்த ரோலும் ஏற்றுகொள்ள நடிகர் நடிகைகள் தயாராக இருக்க
பதிலளிநீக்குவேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து...15 வயதில் அம்மா வேடம் தவறு...இவங்க?
00 am GMT-07:00
பதிலளிநீக்குசெங்கோவி கூறியது...
டூ லேட்..இந்த அம்மாவை காதல் கோட்டையிலேயே அஜித்துக்கு அம்மா ஆக்கி இருக்கணும்..
ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011 2:19:00 am GMT-07:00
மருமோனே இந்தாள் ஆட்டோவ அனுப்புறோம்ன்னு சொன்ன பிறகும் ஆடுறார் இது நல்லா இல்லைன்னு சொல்லிவை...
<<<இராஜராஜேஸ்வரி சொன்னது…
பதிலளிநீக்குஎது எப்படியோ "திருமணமாகிவிட்டது" என்ற ஒரே காரணத்துக்காக பல திறமையான நடிகைகளை ஒதுக்கி வைப்பது என்பது தமிழ்சினிமாவுக்கு ஆரோக்கியமான விடயம் அல்ல.
தமிழ்சினிமாவின் அராஜகம்." <<<<
அதே அதே அக்கா,
தேங்க்ஸ் உங்க வருகைக்கு
<<<<ரெவெரி கூறியது...
பதிலளிநீக்குதுஷி...எனக்கு பிடித்த நடிகைகளுள் அவரும் ஒருவர்...எந்த ரோலும் ஏற்றுகொள்ள நடிகர் நடிகைகள் தயாராக இருக்க
வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து...15 வயதில் அம்மா வேடம் தவறு...இவங்க?<<<<
உங்கள் கருத்தை நானும் ஒத்துக்கொள்கிறேன் பாஸ், ஆனால் தான் யாருக்கு ஜோடியாக நடித்தாரோ பின் அவருக்கே அம்மாவாக நடிப்பது ரெம்ப நெருடன்ல் ஆன விடயம் அல்லவா????????? ஏன் ரஜனி கமல் சத்தியராஜ் எல்லாம் நாயகன் ஆக நடிக்க ரசிக்கிறோமே?? அப்படியானால் தேவயாணி, மீனா, ஜோதிகா, சிம்ரன் போன்றோர் அவர்கள் வ்வயதுக்கு ஏற்ற நாயகி வேடத்தில் நடித்தால் ஏன் ரசிக்க முடியாது. இந்த நிலை ஏன் தமிழ் சினிமாவில் மட்டும் இருக்கு????? பார்த்தீர்களா ஹிந்தியில் ஸ்ரீதேவி புதிய படமொன்றில் நாயகியாம் . நான் தேவயானியை சிறிதேவி வயதில் நாயகியாக நடிக்க சொல்ல வில்லை, ஆனால் அவர் இப்போது நடிக்கலாமே??
<<<<<காட்டான் கூறியது...
பதிலளிநீக்கு00 am GMT-07:00
செங்கோவி கூறியது...
டூ லேட்..இந்த அம்மாவை காதல் கோட்டையிலேயே அஜித்துக்கு அம்மா ஆக்கி இருக்கணும்..
ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011 2:19:00 am GMT-07:00
மருமோனே இந்தாள் ஆட்டோவ அனுப்புறோம்ன்னு சொன்ன பிறகும் ஆடுறார் இது நல்லா இல்லைன்னு சொல்லிவை...xxxxx<<<<<
யா காட்டான் மாமா
இந்தாள் அடங்காது, ஆட்டோ அனுப்பினாத்தான் சரிவரும்.. அல்லது நம்ம தளபதி விஜய் படம் வரட்டும், நாலு விஜய் பட டிவிடி வேண்ட்டி தபால்ல அனுப்பிடுவோம்... மக்காக்கு அதுதான் சரியான தண்டனை, ஹி ஹி ஹி
கல்யாணத்துக்கு பிறகு ஐஸ், கஜோல், மாதுரி உள்ளிட்ட ஹிந்தி பிரபலங்கள் குண்டாக வராதுகள், நம்ம ஆளுங்க... ஹீ ஹீ அது தான் அம்மாவா நடிக்க கூப்பிடுறாங்க
பதிலளிநீக்குஅருமையான பதிவு.
பதிலளிநீக்குரஜினி சுஜாதாவுக்கு கனாஅக நடிப்பதைப் பார்க்கும் போதே என்னடா இது என்றிருந்தது.....
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ராஜகுமாரா!!!!!!
பதிலளிநீக்குசகோ இன்று என் வலைத்தளத்தைக் காணத் தவறாதீர்கள் .நன்றி .....
பதிலளிநீக்கு