ஞாயிறு, ஜூன் 05, 2011

வயசு அதிகமான பெண்களை காதலிப்பது தப்பா..?

ண்களால் முதல் காதலை மறக்கவே முடியாது அதிலும் அந்த அறியா வயசில் வரும் பப்பி லவ் சான்ஸே இல்லை,  தயங்கி தயங்கி தங்களுடைய முதல் காதலை வெளியே சொல்லும் ஒரு சில ஆண்கள் கூட அதற்க்கு முன்னால் வரும் தங்கள் பப்பி லவ்வை மறந்து கூட வெளியே சொல்வது இல்லை, வெளியே சொன்னால் எங்கே இது பிஞ்சிலேயே பழுத்தது என்று சொல்லி விடுவார்களோ என்ற அச்சத்தால்.
அதிலும் பல ஆண்களுக்கு பப்பி லவ் வருவதே  தங்களை விட வயது அதிகமான பெண்கள் மீதுதான்.

எனக்கும் சின்ன வயசில் இப்படி ஒரு காதல் வந்து இருக்கிறது, அவளுக்கு என்னை விட 4 வயது அதிகம், அவளை பேரழகி என்று சொல்ல முடியாவிட்டாலும் அழகு என்று சொல்லலாம், அவள் எனக்கு சொந்த மச்சாளும் கூட,  நான் எங்கள் வீட்டில் தங்கியதை விட அவர்கள் வீட்டில் தங்கியதுதான் அதிகம். அவர்கள் வீட்டிலும் சரி எங்கள் வீட்டிலும் சரி எங்கள் ரெண்டு பேருக்கும் தான் திருமணம் செய்து வைக்க போவதாக சொல்லி எங்களைக் கிண்டல் பண்ணுவார்கள். நாங்கள் இருவரும் எப்போதும் ஒன்றாகவே சுத்தி திரிந்தாலும் இந்த திருமண விசயத்தைப்பற்றி எங்களுக்குள் பேசியதும் இல்லை மற்றவர்கள் பேசும் போது மறுத்ததும் இல்லை ஆனாலும் மனசுக்குள் ஒருவரை ஒருவர் நேசித்துக்கொண்டேதான் இருந்தோம், அதிலும் அவள் மேலான என் காதல் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.  சில வருடங்களில் நடந்த யுத்தத்தின் காரணமான இடம்பெயர்வால் அவள் குடும்பமும் எங்கள் குடும்பமும் பிரிந்து விட்ட நிலையிலும் அவள் மேலான என் காதல் மட்டும் வளர்ந்து கொண்டேதான் இருந்தது.

சமீப காலத்தில் அவள் மேலான என் காதலை கிட்டத்தட்ட மறந்து விட்ட நிலையில்   "டேய் உன் மச்சாளுக்கு கல்யாணமாம்டா ..  பையன் வெளி நாட்டில் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறானாம்" என்று என் உறவினர் ஒருவர்  சொன்ன போது மனசு வலித்தது இன்னும் மிச்ச சொச்சம் இருக்கும் அவள் மேலானா காதலையே   காட்டிக்கொடுத்தது.  

முடிந்து போன  என்னுடைய இந்த பழைய காதல் கதையை இப்போது என் நண்பர்கள் யாரிடமாவது சொன்னால் அவர்கள் கேக்கும் முதல் கேள்வி, டேய் லூசாடா நீ..! எப்புடிடா உன்னை விட 4 வயசு அதிகமான பெண்ணை காதலிச்ச..! என்றுதான். ஒரு ஆண் தன்னை விட 7, 8 வயது குறைந்த ஒரு பெண்ணை திருமணம் செய்யும் போது ஒரு பெண் ஏன் தன்னை விட வயது குறைந்த ஆணை திருமணம் செய்யக்கூடாது..! இது என் பதில் வாதமாக இருக்கும். அதற்க்கு அவர்கள் எப்போதுமே சரியான பதில் தந்ததே இல்லை, இங்கு வெளி நாட்டில் தன்னை விட வயது மூத்த பெண்களை ஆண்கள் சர்வசாதாரணமாக திருமணம் செய்துகொன்று சந்தோஷமாக வாழ்வதை பார்த்து இருக்கிறேன்,

ஆனால் நம் நாட்டில்தான் நாம் இத்தகைய திருமணங்களை ஆதிரிப்பது இல்லை, தப்பித்தவறி ஒரு சில திருமணங்கள் இப்படி நடந்து விட்டால் கூட அதை நம்மால் முடிந்தளவு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கேவலப்படுத்தி பேசுகின்றோம். தங்களை விட வயது அதிகமான பெண்களை மனசுக்குள்ளேயே காதலித்து சுற்றியிருப்பவர்களுக்கு பயந்து அதை வெளியே சொல்லாமல் இருக்கும் எத்தனையோ பேரை பார்த்து இருக்கிறேன், ஒருவிதத்தில் அவர்கள் மேல் பரிதாபம் வந்தாலும் அதிகமாக அவர்கள் கோழைத்தனம் மீது கோவம்தான் வருகிறது. நாம் வெளி நாட்டவர் போல் வாழவேண்டும் என்பது என் வாதம் அல்ல இந்த திருமண விசயத்தை அவர்களைப்போல் சர்வசாதாரணமாக எடுத்து ஏன் கடந்து போகக்கூடாது என்பதுதான் என் வாதம்.

அண்மையில் கூட ஒரு பத்திரிகையில் இப்படிப்பட்ட ஒரு திருமண செய்தி வந்து இருந்தது, அதற்க்கு வந்து இருந்த வாசகர் கருத்துரைகள் பெரும்பாலும் அவர்களை கேவலமாக சித்தரித்தே வந்து இருந்தது, அதிலும் ஒரு சில  வாசகர்கள் ஒரு படி மேலே போய் இத்தகைய திருமணம் செய்துகொண்ட சில பிரபல ஜோடிகளை குறிப்பாக "ஐஸ்வர்யா - தனுஷ்"  'ஐஸ்வர்யா ராய் - அபிஷேக்பச்சன்" போன்றவர்களையும்  மிகமோசமாக விமர்சித்திருந்தமை அவர்களுடைய ஊனமான மனசையே காட்டிகொடுத்தது. காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள் அது ஜாதி மதம் ஏழை பணக்காரன் என்று எதுவும் பார்ப்பது இல்லை அப்படி இருக்கையில் அது வயசை மட்டுமா பாக்க முடியும்..?   அதிலும் 40 வயது ஆண்  20 வயது பெண்ணை திருமணம் செய்தால் அதை சர்வசாதாரணமாக எடுக்கும் நம் அறிவுஜீவிகள் ஏன் ஒரு பெண் ஒரு சில வயது மட்டுமே குறைந்த ஆணைத்திருமணம் செய்தால் மட்டும் விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்து அந்த பெண்ணின் நடத்தையையே தப்பா பேசுகிறார்கள். இங்கே ஆண் செய்தது தவறு இல்லை என்றால் பெண் செய்தது மட்டும் எப்படி தவறாகும்..! 

59 கருத்துகள்:

 1. ம்ம் உண்மைதான் துஷி... எம் சமூகத்தின் ஊனங்களில் இதுவும் ஒன்று.. இதையெல்லாம் திருத்த முடியாது

  பதிலளிநீக்கு
 2. மௌனித்துப்போன உங்கள் முதல் காதலுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை.. காரணம் இதே வலிகளுடன் தான் கடந்த 5 வருட காலமாக நானும் வாழ்ந்துவருகிறேன்.

  பதிலளிநீக்கு
 3. ஹிஹி தப்பே இல்ல பாஸ்,,
  அதுல தான் ஒரு இது இருக்கு!!!
  ஐ லைக் தட்!!

  பதிலளிநீக்கு
 4. சச்சின் டெண்டுல்கர்8:08 பிற்பகல், ஜூன் 05, 2011

  என்னுடைய திருமணமும் அப்படித்தான். என் மனைவி என்னைவிட மூன்று வயது மூத்தவள்.

  பதிலளிநீக்கு
 5. கொய்யாலே சச்சின் உன்னோட ப்ளாக் விசிறியா??சொல்லவே இல்ல?

  பதிலளிநீக்கு
 6. //////பப்பி லவ் // இந்த வார்த்தையை முதல் முதலாக கேள்விப்படுகிறேன் பாஸ் ...

  பதிலளிநீக்கு
 7. மனசு ஒத்துப்போனால் சரி தான். எங்க பள்ளியில் படித்த ஆசிரியர் ஒருவர் தன்னை விட ஒன்பது வயசு அதிகமான சக ஆசிரியரை திருமணம் செய்துகொண்டார்...


  ஆனால் பிற்காலத்தில் தாம்பத்தியம் சம்மந்தமான பிரச்சனைகள் வரும் என்று சிலர் சொல்வார்கள்...

  பதிலளிநீக்கு
 8. மேற்க்கத்தேய நாடுகளில் இதெல்லாம் சர்வ சாதாரணம்......

  பதிலளிநீக்கு
 9. இருந்தாலும் உங்களுக்கு துணிவு அதிகம் பாஸ், சிறு வயசு காதலை பப்பிளிக்காய் சொல்லிவிட்டீர்கள்...)

  பதிலளிநீக்கு
 10. எல்லோருக்கும் (எனக்கும் கூட) வந்து வந்து போகும்
  சின்ன செல்ல காதலை சொன்னவிதம் அருமை நண்பரே

  பதிலளிநீக்கு
 11. //மதுரன் கூறியது...
  ம்ம் உண்மைதான் துஷி... எம் சமூகத்தின் ஊனங்களில் இதுவும் ஒன்று.. இதையெல்லாம் திருத்த முடியாது//

  உண்மைதான் மது,  நல்லதோ கெட்டதோ எல்லா விடயங்களிலும் பிழை கண்டு புடித்து பழகி விட்டார்கள், வேளியே வருவது ரெம்ப கஸ்ரம் பாஸ் :(

  பதிலளிநீக்கு
 12. // மதுரன் கூறியது...
  மௌனித்துப்போன உங்கள் முதல் காதலுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை.. காரணம் இதே வலிகளுடன் தான் கடந்த 5 வருட காலமாக நானும் வாழ்ந்துவருகிறேன்.//

  ஆறுதலுக்கு நன்றி நன்பா 
  விடுங்க பாஸ்
  முதல் காதல் யாருக்குத்தான் கை கூடி இருக்கு எங்களுக்கு மட்டும் கை கூட, அதை நினைத்து மனதை தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்.

  பதிலளிநீக்கு
 13. /// மைந்தன் சிவா கூறியது...
  ஹிஹி தப்பே இல்ல பாஸ்,,
  அதுல தான் ஒரு இது இருக்கு!!!
  ஐ லைக் தட்!!///

  ஹீ ஹீ
  தேங்க்ஸ்ஸு பாஸ்,
  நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் :)
  ஆனாலும் உங்க நேர்மை எனக்கு புடிச்சு இருக்கு பாஸ்
  ஐ லைக் யூ பாஸ்^_^

  பதிலளிநீக்கு
 14. // மைந்தன் சிவா கூறியது...
  கொய்யாலே சச்சின் உன்னோட ப்ளாக் விசிறியா??சொல்லவே இல்ல? //

  அவ்வ்........
  எனக்கே இப்போத்தான் தெரியும் பாஸ்,

  பதிலளிநீக்கு
 15. /// கந்தசாமி. கூறியது...
  //////பப்பி லவ் // இந்த வார்த்தையை முதல் முதலாக கேள்விப்படுகிறேன் ///

  ரெம்ப குட்டி வயசுல வார லவ்வ இப்புடி செல்லமா சொல்லுவாங்க பாஸ் ^_^

  பதிலளிநீக்கு
 16. /// கந்தசாமி. கூறியது...
  மனசு ஒத்துப்போனால் சரி தான். எங்க பள்ளியில் படித்த ஆசிரியர் ஒருவர் தன்னை விட ஒன்பது வயசு அதிகமான சக ஆசிரியரை திருமணம் செய்துகொண்டார்...


  ஆனால் பிற்காலத்தில் தாம்பத்தியம் சம்மந்தமான பிரச்சனைகள் வரும் என்று சிலர் சொல்வார்கள்...///

  -: இப்படி நிறைய நடக்குது பாஸ், ஆனால் நாங்கள்தான் அவர்களை மதிப்பது இல்லை, அவர்கள் திருமணத்தின் பின் உங்கள் பாடசாலையிலேயே அவர்கள் பற்றி மோசமாக கொமண்ட்ஸ் அடித்து இருப்பார்களே பாஸ் ..?

  -: உண்மைதான் பாஸ்,

  பதிலளிநீக்கு
 17. // கந்தசாமி. கூறியது...
  இருந்தாலும் உங்களுக்கு துணிவு அதிகம் பாஸ், சிறு வயசு காதலை பப்பிளிக்காய் சொல்லிவிட்டீர்கள்...)//

  ஹாஹா
  என் துணிச்சல் என்ன என்பது, நாளை என் ஆள் இதை படித்து விட்டு நடந்து கொள்ளுவதைப் பொறுத்துத்தான் இருக்கு..
  அவ்வ்வ்............ 

  பதிலளிநீக்கு
 18. /// A.R.ராஜகோபாலன் கூறியது...
  எல்லோருக்கும் (எனக்கும் கூட) வந்து வந்து போகும்
  சின்ன செல்ல காதலை சொன்னவிதம் அருமை நண்பரே///

  நன்றி நன்பரே
  சின்ன வயசு செல்லக்காதலில் இருந்து தப்பியவர்கள் மிக சொர்பமே...
  அது ஒரு சுகமான சுமை பாஸ் ^_^

  பதிலளிநீக்கு
 19. அதிலும் பல ஆண்களுக்கு பப்பி லவ் வருவதே தங்களை விட வயது அதிகமான பெண்கள் மீதுதான்.//

  ஆஹா...வயசான பெண்கள் பற்றி அலசுறீங்களே...

  இருங்க மிகுதியையும் படித்து விட்டு வாறேன்

  பதிலளிநீக்கு
 20. திருமணத்திற்கு வயது தடை இல்லை என்பது தான் எனது கருத்தும்....

  எமது தமிழ்ப் பண்பாட்டில் தான் வயது கூடிய காதலை ஏற்க மறுக்கிறார்கள். நான் அறிந்தளவில் ஏனைய மக்களிடத்தே இந்த வயது கூடிய காதல் நடை முறையில் இருக்கிறது...

  பதிலளிநீக்கு
 21. ஆண்கள் சீக்கிரம் இறந்து விடுகிறார்கள். பெண்கள் விதவைகளாக வாழ்நாளைக் கழிப்பதைத் தடுக்க ஒவ்வொரு ஆணும் தன்னை விட ஐந்து வயது மூத்த
  பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் ஒன்று ஓஷோ சொல்கிறார்.

  பதிலளிநீக்கு
 22. thappu than girls sa veda boys age adegamma irukkannum so appa than purungukka mudum

  பதிலளிநீக்கு
 23. கலாச்சாரம் சிறப்பானது என்று பீத்திக்கொள்ளும் நமது நாட்டில் தான் அடுத்தவர் வாழ்க்கையில் மூக்கை நுழைக்கும் பாங்கும் அதிகமாக உள்ளது.நாட்டாமை பண்ணுவது இங்கே ரொம்ப சகஜம்.கண நேரத்தில் அடுத்தவன் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிடுவார்கள். ஆனால் இவர்களிடம் யாரேனும் ஏதேனும் இதையே சொன்னால் குதிப்பார்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் முடிவின் படி தான் நடக்க வேண்டும்.இதை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டு போய்க்கொண்டே இருங்கள்.எவன் சொல்வதற்கும் எந்தவித மதிப்பும் கொடுக்கத் தேவையில்லை.

  பதிலளிநீக்கு
 24. //நிரூபன் கூறியது...
  அதிலும் பல ஆண்களுக்கு பப்பி லவ் வருவதே தங்களை விட வயது அதிகமான பெண்கள் மீதுதான்.//

  ஆஹா...வயசான பெண்கள் பற்றி அலசுறீங்களே...

  இருங்க மிகுதியையும் படித்து விட்டு வாறேன்//

  ஹீ ஹீ
  அதுக்குள்ளே அவசரமா ?? lol

  பதிலளிநீக்கு
 25. // நிரூபன் கூறியது...
  திருமணத்திற்கு வயது தடை இல்லை என்பது தான் எனது கருத்தும்....

  எமது தமிழ்ப் பண்பாட்டில் தான் வயது கூடிய காதலை ஏற்க மறுக்கிறார்கள். நான் அறிந்தளவில் ஏனைய மக்களிடத்தே இந்த வயது கூடிய காதல் நடை முறையில் இருக்கிறது...//அதுதான் என் மாற்ற முடியாத கருத்தும் அண்ணா,

  உண்மைதான் அண்ணா எனக்கு தெரிந்தும் எந்த நாட்டிலும் இதை பெரிதாக எடுப்பது இல்லை
  நாம் தன இதை தூக்கி புடித்துக்கொண்டு இருக்குறோம்
  எதிலும் குற்றம் கண்டே பழக்கப்பட்டவர்கள் அல்லவா நாம் அதுதான் இப்படி..

  பதிலளிநீக்கு
 26. //சி.பி.செந்தில்குமார் கூறியது...
  காதல் அவங்கவங்க விருப்பம்//

  நச்சுன்னு ஒரு வரியில் சொன்னிங்க பாஸ்
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாஸ்

  பதிலளிநீக்கு
 27. //சமுத்ரா கூறியது...
  ஆண்கள் சீக்கிரம் இறந்து விடுகிறார்கள். பெண்கள் விதவைகளாக வாழ்நாளைக் கழிப்பதைத் தடுக்க ஒவ்வொரு ஆணும் தன்னை விட ஐந்து வயது மூத்த
  பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் ஒன்று ஓஷோ சொல்கிறார்.//

  நல்ல கருத்து
  நன்றி சமுத்திரா,
  உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்,
  அடிக்கடி வாங்க..

  பதிலளிநீக்கு
 28. //ILLUMINATI கூறியது...
  கலாச்சாரம் சிறப்பானது என்று பீத்திக்கொள்ளும் நமது நாட்டில் தான் அடுத்தவர் வாழ்க்கையில் மூக்கை நுழைக்கும் பாங்கும் அதிகமாக உள்ளது.நாட்டாமை பண்ணுவது இங்கே ரொம்ப சகஜம்.கண நேரத்தில் அடுத்தவன் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிடுவார்கள். ஆனால் இவர்களிடம் யாரேனும் ஏதேனும் இதையே சொன்னால் குதிப்பார்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் முடிவின் படி தான் நடக்க வேண்டும்.இதை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டு போய்க்கொண்டே இருங்கள்.எவன் சொல்வதற்கும் எந்தவித மதிப்பும் கொடுக்கத் தேவையில்லை.//

  உண்மைதான் பாஸ்
  அசத்தலான கருத்து இதுதான் என் கருத்தும் பாஸ்
  வாழப்போறது கொஞ்ச நாள் அது நமக்கு புடித்த மாதிரி இருக்கட்டுமே

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாஸ்

  பதிலளிநீக்கு
 29. \\போது ஒரு பெண் ஏன் தன்னை விட வயது குறைந்த ஆணை திருமணம் செய்யக்கூடாது..! \\ ஒரு பெண்ணுக்கு அவளுடைய மாதவிடாய் நின்ற பின்னர் [menopause] உடலுறவில் நாட்டம் இருக்காது, உடல் ரீதியாகவும் ஆணுக்கு திருப்தியாக இருக்காது. ஆணைப் பொறுத்தவரையில் 60 வயதுக்கு மேலும் ஆசை தீராது, உடல் ரீதியாக தகுதியுடனே இருப்பான். இந்த காரணத்தால், ஒரு பெண் ஐந்து முதல் பத்து வயது வரை இளையவளாக இருப்பது நலம். இந்த இடர்பாடு பற்றி கவலையில்லை என்று இப்போது தோன்றினாலும், பின்னால் உங்களால் சமாளிக்க முடியுமா என்று யோசித்து பார்த்துக் கொள்ளுங்கள். 40 ஆணை 20 வயது பெண் திருமணம் செய்வது, அவளது போதாத காலம்.

  பதிலளிநீக்கு
 30. ரொம்பச் சரி, எல்லாரும் சொல்ல தயங்கும் விஷயத்த அருமையா சொல்லி இருக்கீங்க, எனக்கும் சின்ன வயசில் இப்படி ஒரு அனுபவம் இருந்தது!

  பதிலளிநீக்கு
 31. நண்பர் ஜெயதேவ் சொல்லி இருப்பதுதான் மனிதர்கள் ஆண்-பெண் திருமண வயது வித்தியாசத்தை ஏற்படுத்தியதற்கு காரணம். ஆனால் விரும்பியவர்களுக்கு அந்த உரிமை வழங்கப்பட வேண்டும்!

  பதிலளிநீக்கு
 32. //Jayadev Das கூறியது...
  \\போது ஒரு பெண் ஏன் தன்னை விட வயது குறைந்த ஆணை திருமணம் செய்யக்கூடாது..! \\ ஒரு பெண்ணுக்கு அவளுடைய மாதவிடாய் நின்ற பின்னர் [menopause] உடலுறவில் நாட்டம் இருக்காது, உடல் ரீதியாகவும் ஆணுக்கு திருப்தியாக இருக்காது. ஆணைப் பொறுத்தவரையில் 60 வயதுக்கு மேலும் ஆசை தீராது, உடல் ரீதியாக தகுதியுடனே இருப்பான். இந்த காரணத்தால், ஒரு பெண் ஐந்து முதல் பத்து வயது வரை இளையவளாக இருப்பது நலம். இந்த இடர்பாடு பற்றி கவலையில்லை என்று இப்போது தோன்றினாலும், பின்னால் உங்களால் சமாளிக்க முடியுமா என்று யோசித்து பார்த்துக் கொள்ளுங்கள். 40 ஆணை 20 வயது பெண் திருமணம் செய்வது, அவளது போதாத காலம்.//

  உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே,

  உங்கள் தகவல்கள் பயன் உள்ள தகவல்கள்,

  நீங்கள் சொல்வது சரிதான் ஆனாலும் உடலுக்கு சந்தோஷம் தரும் பெண்ணை விட மனசுக்கு சந்தோஷம் தரும் பெண்ணை தேர்ந்தெடுப்பதுதான் சிறந்தது என்று நான் நினைக்குறேன், அந்த மனசுக்கு சந்தோஷம் தரும் பெண் என்னை விட வயதில் மூத்தவலாக இருந்தாலும் அதில் எந்த தப்பும் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து

  பதிலளிநீக்கு
 33. //பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
  ரொம்பச் சரி, எல்லாரும் சொல்ல தயங்கும் விஷயத்த அருமையா சொல்லி இருக்கீங்க, எனக்கும் சின்ன வயசில் இப்படி ஒரு அனுபவம் இருந்தது!//

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்று நண்பா,

  உண்மைதான் நண்பா இந்த திருமண விடயத்தை ஆதரிப்பது மட்டும் அல்ல பேசுவதும் அசிங்கம் என நினைப்பவர்கள் தான் நம்மில் அதிகம்.

  அவர்கள் மனதை தொட்டு சொல்ல சொல்லுங்கள் அவர்களுக்கு தங்களை விட வயது அதிகமான பெண்கள் மீது காதல் வந்ததே இல்லை என்று.
  ஹும்ம் பதில் வராது, அவர்கள் மகா நடிகர்கள் நண்பா.

  பதிலளிநீக்கு
 34. //பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
  ......ஆனால் விரும்பியவர்களுக்கு அந்த உரிமை வழங்கப்பட வேண்டும்!//

  நச்சுன்னு ஒரு வரியில் சொல்லிவிட்டிர்கள் நண்பா,
  இதுதான் என் ஆழமான கருத்தும்
  அடிகடி இங்கால பக்கமும் வாங்க பாஸ் :)

  பதிலளிநீக்கு
 35. நல்ல பதிவு. இதில் ஒன்றும் தப்பே இல்லை. உண்மையான காதலுக்கு எந்த பேதங்களுமே கிடையாது.

  பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 36. //சமுத்ரா கூறியது...
  ஆண்கள் சீக்கிரம் இறந்து விடுகிறார்கள். பெண்கள் விதவைகளாக வாழ்நாளைக் கழிப்பதைத் தடுக்க ஒவ்வொரு ஆணும் தன்னை விட ஐந்து வயது மூத்த
  பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் ஒன்று ஓஷோ சொல்கிறார்.//
  அவர் சொல்வது இருக்கட்டும்,நீங்கள் என்ன சொல்கிறீர்கள், தயாரா?

  பதிலளிநீக்கு
 37. ///மைந்தன் சிவா கூறியது...
  ஹிஹி தப்பே இல்ல பாஸ்,,
  அதுல தான் ஒரு இது இருக்கு!!!
  ஐ லைக் தட்!!///நான் முந்தியே சொன்னனான்,பிரான்சில இருக்கிற "அந்தாளோட"குளோசா பழக வேணாமெண்டு!

  பதிலளிநீக்கு
 38. //வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...
  நல்ல பதிவு. இதில் ஒன்றும் தப்பே இல்லை. உண்மையான காதலுக்கு எந்த பேதங்களுமே கிடையாது.

  பகிர்வுக்கு பாராட்டுக்கள்.//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா
  உங்களை போன்ற பெரியவர்களின் வருகை மிகவும் சந்தோஷத்தை கொடுக்குது
  அடிக்கடி வந்து வாழ்த்துங்கள் அய்யா,

  பதிலளிநீக்கு
 39. // Yoga.s.FR கூறியது...
  ///மைந்தன் சிவா கூறியது...
  ஹிஹி தப்பே இல்ல பாஸ்,,
  அதுல தான் ஒரு இது இருக்கு!!!
  ஐ லைக் தட்!!///நான் முந்தியே சொன்னனான்,பிரான்சில இருக்கிற "அந்தாளோட"குளோசா பழக வேணாமெண்டு //

  ஹீ ஹீ
  நானும் பிரான்ஸ் தான் பாஸ்
  நீங்க என்ன சொல்லலையே ..?? அவ்வ்

  ஓகே ஓகே
  நீங்க அவர சொல்லுறிங்களா
  பிரான்சில் ஓட்டை வடை விக்குறவர சொல்லுறிங்களா.. lol

  பதிலளிநீக்கு
 40. உங்களுக்கு ரொம்ப தைரியம் பாஸ் வெளிப்படையா இதை சொல்லிடிங்க எல்லாருக்கும் கட்டாயம் ஒரு பப்பி லவ் (நாய்க்கு வைக்கிற பெயர் புதுசா வேற ஏதாவது யோசிச்சிருக்கலாம்) இருக்கும் அது இயற்கை ஆனால் அது எதிர்காலத்தில எல்லாருக்கும் கை கூடுறதில்ல(99.99%) அதை நினைச்சு கவலைப்படக்கூடாது இந்த சோகத்தில தங்கச்சிய கை விட்டுடாதிங்க பாஸ்............lol

  பதிலளிநீக்கு
 41. //நீங்கள் சொல்வது சரிதான் ஆனாலும் உடலுக்கு சந்தோஷம் தரும் பெண்ணை விட மனசுக்கு சந்தோஷம் தரும் பெண்ணை தேர்ந்தெடுப்பதுதான் சிறந்தது என்று நான் நினைக்குறேன், அந்த மனசுக்கு சந்தோஷம் தரும் பெண் என்னை விட வயதில் மூத்தவலாக இருந்தாலும் அதில் எந்த தப்பும் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து//

  அப்பிடி போடுங்க பாஸ் அருவாள

  பதிலளிநீக்கு
 42. திருமணத்தில் வயது தடை இல்லை என்பது தான் எனதுக் கருத்தும்.. ஆனால் வயது இடைவெளி அதிகமாக இருக்கக் கூடாது என்பேன்... குறிப்பாக நீங்கள் 25 வயதில் இருக்கும் போது 45 வயதுப் பெண்ணை மணந்தால் அது எப்படி இருக்கும் ? அதே போல 55 பெரியவருக்கு 15 வயதுப் பெண்ணை மணந்துக் கொடுத்தால் எப்படி இருக்கும் ?

  வயது இடைவெளியைக் கருத்தில் கொள்வது அவசியம் .... இடைவெளி அதிகரித்தல் என்பது - அது மனம், உடல், ஆகிய ஒன்றிணைதலில் பெரியப் பிரச்சனையை உண்டுப் பண்ணிவிடும் .... என்பது எனதுக் கருத்து .. இல்லை இடைவெளி ஒருப் பொருட்டே இல்லை என சொல்பவர்கள் வாழும் சாட்சியங்களாக இருந்தால் சுபம் !

  பதிலளிநீக்கு
 43. //நவீனன் கூறியது...
  உங்களுக்கு ரொம்ப தைரியம் பாஸ் வெளிப்படையா இதை சொல்லிடிங்க எல்லாருக்கும் கட்டாயம் ஒரு பப்பி லவ் (நாய்க்கு வைக்கிற பெயர் புதுசா வேற ஏதாவது யோசிச்சிருக்கலாம்) இருக்கும் அது இயற்கை ஆனால் அது எதிர்காலத்தில எல்லாருக்கும் கை கூடுறதில்ல(99.99%) அதை நினைச்சு கவலைப்படக்கூடாது இந்த சோகத்தில தங்கச்சிய கை விட்டுடாதிங்க பாஸ்............lol///

  ஹாய்
  நவீனன்,
  ம்ம்.. ப்ளாக் பக்கம் எல்லாம் வாறிங்க,
  பாஸ் உங்க எழுத்து நல்லா இருக்கு , சும்மா கிறுக்கிய நாங்களே எழுதும் போது
  சூப்பரா எழுதிற நீங்க ஒரு ப்ளாக் துறந்து எழுதலாமே பாஸ் ,
  ஹா ஹா
  எது எப்புடியோ உங்க தங்கச்சில மட்டும் அக்கறையா இருக்கீங்க lol
  ம்ம் கவலைப்படாதிங்க
  நம்பியோர் கைவிடப்பட மாட்டார் lol

  பதிலளிநீக்கு
 44. //மதுரன் கூறியது...
  //நீங்கள் சொல்வது சரிதான் ஆனாலும் உடலுக்கு சந்தோஷம் தரும் பெண்ணை விட மனசுக்கு சந்தோஷம் தரும் பெண்ணை தேர்ந்தெடுப்பதுதான் சிறந்தது என்று நான் நினைக்குறேன், அந்த மனசுக்கு சந்தோஷம் தரும் பெண் என்னை விட வயதில் மூத்தவலாக இருந்தாலும் அதில் எந்த தப்பும் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து//

  அப்பிடி போடுங்க பாஸ் அருவாள//

  ஹீ ஹீ ,
  பாஸ் உங்க பீலிங் என் பீலிங்
  என் பீலிங் உங்க பீலிங்
  மொத்தத்தில் நீங்க என் நண்பேண்டா பாஸ் :)

  பதிலளிநீக்கு
 45. //இக்பால் செல்வன் கூறியது...
  திருமணத்தில் வயது தடை இல்லை என்பது தான் எனதுக் கருத்தும்.. ஆனால் வயது இடைவெளி அதிகமாக இருக்கக் கூடாது என்பேன்... குறிப்பாக நீங்கள் 25 வயதில் இருக்கும் போது 45 வயதுப் பெண்ணை மணந்தால் அது எப்படி இருக்கும் ? அதே போல 55 பெரியவருக்கு 15 வயதுப் பெண்ணை மணந்துக் கொடுத்தால் எப்படி இருக்கும் ?

  வயது இடைவெளியைக் கருத்தில் கொள்வது அவசியம் .... இடைவெளி அதிகரித்தல் என்பது - அது மனம், உடல், ஆகிய ஒன்றிணைதலில் பெரியப் பிரச்சனையை உண்டுப் பண்ணிவிடும் .... என்பது எனதுக் கருத்து .. இல்லை இடைவெளி ஒருப் பொருட்டே இல்லை என சொல்பவர்கள் வாழும் சாட்சியங்களாக இருந்தால் சுபம் !//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாஸ்,
  நீங்கள் சொல்வது மறுக்க முடியாத உண்மை பாஸ்

  பதிலளிநீக்கு
 46. //வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…
  இனி தொடர்ந்து வருவேன் நண்பா.. //

  நன்றி பாஸ்

  பதிலளிநீக்கு
 47. துசி அண்ணா உங்கள் பதிவுகளை தவறாமல் வாசிக்கிறேன் .ஆனாலும் இதுவே கருத்துரை இடும் முதல் சந்தர்பம்.தவறுகள் இருந்தால் மன்னிக்கவும் நீங்க சொல்லுறது உண்மைதான் ..துசி அண்ணா ..எல்லோருக்கும் சின்ன வயசில காதல் வாறது சர்வ சாதாரணம் தான் ....ஆனால் வயதை காரணமா காட்டி எந்த ஆணும் சொல்லுவதும் இல்லை.சொன்னாலும் வயசை காரணம் காட்டி பிஞ்சில பழுத்தது என்ட பெயரும் எடுப்பது தான் மிச்சம்.குறிப்பாக மேற்கத்தைய நாடுகளிடமிருந்து கற்று கொள்ள வேண்டிய விசயங்களில் இதுவும் ஒன்று.நீங்கள் குறிப்பிட்டது போல எமது ஊன மனசை இன்னும் திருத்துவது இல்லை.மாறாக அடுத்தவரின் வாழ்கையை விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம் ...உங்களுக்கே தெரிந்திருக்கும்.உலகமே எதிர் பார்த்த வில்லியம் கேட் திருமணம்.இந்த தம்பதிகளில் மணப்பெண் மாப்பிளையை விட 5,6 மாத வயசு வித்தியாசம் .(இணையத்தில் பார்த்து அறிந்ததே) ஆனால் இதை உலகம் ஏற்றுகொண்டது .ஆனால் இதே எமது மக்களில் யாரவது செய்தால் அதை தூக்கி பிடித்து பெரிதாக கதைப்பதும் இல்லாமல் கொச்சை வார்த்தைகளையும் பயன்படுத்தி எமது ஊன மனசை வெளிப்படுத்துகின்றோம் ....இது யாராக இருந்தாலும் கண்டிக்க தக்கதே ....

  பதிலளிநீக்கு
 48. /jathu சொன்னது…
  துசி அண்ணா உங்கள் பதிவுகளை தவறாமல் வாசிக்கிறேன் .ஆனாலும் இதுவே கருத்துரை இடும் முதல் சந்தர்பம்.தவறுகள் இருந்தால் மன்னிக்கவும் நீங்க சொல்லுறது உண்மைதான் ..துசி அண்ணா ..எல்லோருக்கும் சின்ன வயசில காதல் வாறது சர்வ சாதாரணம் தான் ....ஆனால் வயதை காரணமா காட்டி எந்த ஆணும் சொல்லுவதும் இல்லை.சொன்னாலும் வயசை காரணம் காட்டி பிஞ்சில பழுத்தது என்ட பெயரும் எடுப்பது தான் மிச்சம்.குறிப்பாக மேற்கத்தைய நாடுகளிடமிருந்து கற்று கொள்ள வேண்டிய விசயங்களில் இதுவும் ஒன்று.நீங்கள் குறிப்பிட்டது போல எமது ஊன மனசை இன்னும் திருத்துவது இல்லை.மாறாக அடுத்தவரின் வாழ்கையை விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம் ...உங்களுக்கே தெரிந்திருக்கும்.உலகமே எதிர் பார்த்த வில்லியம் கேட் திருமணம்.இந்த தம்பதிகளில் மணப்பெண் மாப்பிளையை விட 5,6 மாத வயசு வித்தியாசம் .(இணையத்தில் பார்த்து அறிந்ததே) ஆனால் இதை உலகம் ஏற்றுகொண்டது .ஆனால் இதே எமது மக்களில் யாரவது செய்தால் அதை தூக்கி பிடித்து பெரிதாக கதைப்பதும் இல்லாமல் கொச்சை வார்த்தைகளையும் பயன்படுத்தி எமது ஊன மனசை வெளிப்படுத்துகின்றோம் ....இது யாராக இருந்தாலும் கண்டிக்க தக்கதே .... /

  பாஸ் முதலில் முதல் கருத்துரைக்கு நன்றி பாஸ், அடிக்கடி வாங்க பாஸ்,
  உண்மைதான் பாஸ், வெளிநாட்டவர் பற்றி கேவலமாக பேசும் நாம் உண்மையில் அவர்களிடம் இருந்து கற்றுகொள்ள நிறைய இருக்குறது,

  பதிலளிநீக்கு
 49. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கூடுதல் வயதுள்ள பெண்ணை
  காதலிக்கிற விஷயம் எல்லருடையவாழ்விலும்
  நிச்சயமாக இருக்கும்
  அது காதலா அன்பா நேசமா என பிரித்தரிய முடியாதபடி
  வளர்ந்து சிதைந்தும் போயிருக்கும்
  அழியாத கோலங்களில் பாலுஅதைச் சொல்ல முயன்றிருக்கிறார்
  உங்கள் அது தொடர்பான தொடர் சிந்தனையை
  அழகாக பதிவு செய்துள்ளீர்கள்
  நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 50. //Ramani சொன்னது…
  நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கூடுதல் வயதுள்ள பெண்ணை
  காதலிக்கிற விஷயம் எல்லருடையவாழ்விலும்
  நிச்சயமாக இருக்கும்
  அது காதலா அன்பா நேசமா என பிரித்தரிய முடியாதபடி
  வளர்ந்து சிதைந்தும் போயிருக்கும்
  அழியாத கோலங்களில் பாலுஅதைச் சொல்ல முயன்றிருக்கிறார்
  உங்கள் அது தொடர்பான தொடர் சிந்தனையை
  அழகாக பதிவு செய்துள்ளீர்கள்
  நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்//

  முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி பாஸ்,
  உங்களைப்போன்றவர்களின் பெரியவர்களின் வருகையும் கருத்தும்
  சந்தோஷத்தை கொடுக்குது பாஸ்
  அடிகடி வாங்க
  ரெம்ப தேங்க்ஸ் பாஸ்...

  பதிலளிநீக்கு
 51. ரொம்ப நன்றி பாஸ் உங்கள் ப்ளாக் பக்கம் வராமல் எப்படி பாஸ் சூப்பரா எழுதுறிங்க நீங்கள் எப்போது பதிவை போட்டாலும் பார்த்து விட்டுதான் படுப்பன் பாஸ் உங்களை மாதிரி எழுத முடியுமா பாஸ் என்னால?? உங்களை என்னோட ஒப்பிடுறிங்களே நீங்க மலை பாஸ் நான் சின்ன மடுபாஸ் ஆனா எனக்கும் எழுதணும் எண்டுதான் ஆசை ஆனா நேரம் இல்ல பாஸ் பார்ப்பம்...............

  பதிலளிநீக்கு
 52. //காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள் அது ஜாதி மதம் ஏழை பணக்காரன் என்று எதுவும் பார்ப்பது இல்லை அப்படி இருக்கையில் அது வயசை மட்டுமா பாக்க முடியும்..? //

  உன்மை துஷ்யந்தன்!இதெல்லாம் அவரவர் மனதைப் பொறுத்த விடயம்.இதில் யாரும் மூக்கை நீட்டக் கூடாதுதான்!நன்று!

  பதிலளிநீக்கு
 53. அன்பானவரே, இப்போது தங்கள் வலைபதிவின் வாசகர்கள் தமிழிலேயே கமெண்ட் இட வசதியாக பிளாக்கருக்காக தமிழ் யூனிகோடு வந்துவிட்டது, இதைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக மறுமொழிகளை தமிழில் பெறமுடியும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

  பதிலளிநீக்கு
 54. வணக்கம் நண்பரே !!
  உங்களது இந்த பதிவு எனக்காகவே எழுதியது போல் உள்ளது.சொல்லப்போனால் இந்த பதிவை படிக்கும்போதுதான் என்னை விட என் மனைவியின் வயது அதிகம் என்பதே நினைவில் வந்தது.நான் பெண் பார்க்க சென்ற போதே இந்த வயது வித்தியாசம் நன்றாக தெரிந்ததுதான்(என்னை விட என் மனைவிக்கு மூன்றரை வயது அதிகம் ).ஆனாலும் எனக்கு நல்ல துணைவியாக இருப்பால் என்று மனம் ஏற்றதால் மகிழ்ச்சியுடன் திருமணம் செய்தோம்.இத்தனைக்கும் நான் வெளிநாட்டில் வேலை செய்வதால் என்னை விட வயது குறைவான பெண் கொடுக்க ஒரு சில பெற்றோர் தயாராக இருந்தார்கள்.தற்போது எங்கள் மணவாழ்க்கை நல்லபடியாக செல்கிறது.திருமணத்திற்கு பின் குடும்ப வாழ்கையே முக்கியம் என கருதி தான் வகித்த உயரிய பணியை விட்டு (மாதம் 100000 ஊதியம் ) என்னுடன் வாழ்கிறார்.
  நிறைய காதலும், சிறிதளவு விட்டு கொடுத்தலும் இருந்தால் வயது வித்தியாசம் ஒன்றும் பெரிய விடயமே அல்ல என்பதை உணர்ந்தாலே இந்த சமுதாயம் நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 55. //பெயரில்லா சொன்னது…
  வணக்கம் நண்பரே !!
  உங்களது இந்த பதிவு எனக்காகவே எழுதியது போல் உள்ளது.சொல்லப்போனால் இந்த பதிவை படிக்கும்போதுதான் என்னை விட என் மனைவியின் வயது அதிகம் என்பதே நினைவில் வந்தது.நான் பெண் பார்க்க சென்ற போதே இந்த வயது வித்தியாசம் நன்றாக தெரிந்ததுதான்(என்னை விட என் மனைவிக்கு மூன்றரை வயது அதிகம் ).ஆனாலும் எனக்கு நல்ல துணைவியாக இருப்பால் என்று மனம் ஏற்றதால் மகிழ்ச்சியுடன் திருமணம் செய்தோம்.இத்தனைக்கும் நான் வெளிநாட்டில் வேலை செய்வதால் என்னை விட வயது குறைவான பெண் கொடுக்க ஒரு சில பெற்றோர் தயாராக இருந்தார்கள்.தற்போது எங்கள் மணவாழ்க்கை நல்லபடியாக செல்கிறது.திருமணத்திற்கு பின் குடும்ப வாழ்கையே முக்கியம் என கருதி தான் வகித்த உயரிய பணியை விட்டு (மாதம் 100000 ஊதியம் ) என்னுடன் வாழ்கிறார்.
  நிறைய காதலும், சிறிதளவு விட்டு கொடுத்தலும் இருந்தால் வயது வித்தியாசம் ஒன்றும் பெரிய விடயமே அல்ல என்பதை உணர்ந்தாலே இந்த சமுதாயம் நன்றாக இருக்கும்///


  சாரி நண்பா உங்கள் கருத்தை கவனிக்காமல் விட்டு விட்டேன், உங்கள் கருத்து எனக்கு சந்தோசம் தருது , தேங்க்ஸ் பாஸ், நீங்கள் சொல்வது மிக சரியே

  பதிலளிநீக்கு
 56. வித்தியாசமான பதிவு.. நன்றாக இருக்கிறது.. ஒவ்வொருவருக்கும் இதை படித்தவுடன் தங்கள் பப்பி லவ் நியாபகத்துக்கு வரும்..

  பதிலளிநீக்கு

 57. பெண்களின் தாம்பத்தியம் அவர்களின் மா.......... நிற்கும் வரை தான். அதன் பின்னர்
  அவர்களுக்கு அதில் போதுமான நாட்டம் இருக்காது. ஆனால் ஆண்களுக்கு மா.......... போன்ற
  பிரச்சனை இல்லாத்தால் அவர்கள் திடகாத்திரமாக இருந்தால் எழுபது எண்பது வயது வரை
  தாம்பத்தியத்தில் ஈடுபட இயலும். 25 வயது வாலிபன் 25 வயதுப் பெண்ணை அல்லது முப்பது வயதுப் பெண்ணை திருமணம் செய்தால்
  அந்தப் பெண்ணுக்கு 45 வயதில் மா.......... நின்று விடும் போது அந்த ஆணுக்கு 45 அல்லது
  நாற்பது வயது ஆக இருக்கும். இந்த வயது தாம்பத்தியத்தை அதிகம் நாடக் கூடிய வயதாகும்.
  பெண்ணால் தாம்பத்திய சுகம் கொடுக்க முடியாத்தால் இவன் தவறான பாதையில் செல்லும் நிலை
  ஏற்படும்.

  பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...