அண்மைக்காலமாக என் மனதில் இருக்கும் ஆதங்கம் இது. இதை பல தடவை எழுத முயன்று பின் இதனால் பலரின் நக்கல் நய்யாண்டி கருத்துரைகளை சம்பாதிக்க வேண்டி வரும் என்று தவிர்த்துவிட்டேன். ஆனாலும் இப்படியான கருத்துரைகளுக்கு பயப்படுபவன் நான் அல்ல. ஒருவிசயத்தை எத்தனை பேர் ஆதரித்தாலும் அதில் எனக்கு உடன்பாடு இல்லை எனில் நான் தனி ஒருவனாகவே அதை எதிர்த்து நிக்க தயங்க மாட்டேன். ஜெயலலிதா விசயத்தில் நான் இதுவரை அமைதியாக
இருந்தமைக்கு காரணம் நான் மேற்குறிப்பிட்ட கருத்துரைகளுக்கு பதில் அளிக்க என்னிடமும் ஆதாரங்கள் இருக்க வேண்டும் அதை விட அவர்களைப்போல் அவசரம் கொள்ளாமால் கொஞ்சம் ஜெயலலிதாவையும் அவதானிப்போமே என்பதுதான். இதுவரை நான் ஜெயலலிதாவை அவதானித்தவரை தமிழ்நாட்டு மக்கள் விடையத்திலும் சரி இலங்கை தமிழர்கள் விடையத்திலும் சரி முன்னைய தாத்தா ஆட்சியை விட மிக அதிகமாகவே மிக நல்ல விடயங்களை இப்போது செய்துள்ளார்.
ஆனாலும் அவரை பாராட்டுவோர்தான் யாரும் இல்லை சில பத்திரிகைகளை பொறுத்தவரை இந்த விசயத்தில் அவர்கள் கொஞ்சம் நியாயமாகவே இருக்கிறார்கள். ஆனால் பதிவர்களை பொறுத்தவரை இந்த விசயத்தில் மிக மோசமாக நடந்து கொள்கிறார்கள். முன்பு கருணாநிதி ஆட்சியில் பதிவர்கள் அனைவரும் சேர்ந்து தாத்தாவை கும்மியது மறக்க முடியாது. ஆனால் அதில் ஒரு நியாயமான கோவம் இருந்தது கருணாநிதியின் ஈழ துரோகத்தின் நிஜமுகம் வெளிவந்ததுடன் அவரின் பல தில்லு முல்லுகள் வெளிவந்த காலம் அது அப்போது அவரை கும்மினார்கள் அதில் ஒரு நியாமம் இருந்தது. ஆனால் இப்போது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து தான் கொடுத்த உறுதிமொழிகளை விரைந்து செயல் படுத்திக்கொண்டு இருக்கிறார். இந்த வாக்குறுதிகளை ஜெயலலிதா தேர்தலின் போது சொல்லியபோது கூட இவ்வளவு ஆடுமாடு எங்கிருந்து
கிடைக்கும் அது முடியாது இது முடியாது என்று சொல்லிய எதிர்கட்சிகள் கூட இப்போது வாயடைத்து நிக்கும் அளவுக்கு ஜெயலலிதாவின் செயற்பாடுகள் அமைந்து இருக்கு. நான் முன்பொரு பதிவில் குறிப்பட்டது போல் ஆடம்பர விசயத்தில் ஜெயலலிதா அடக்கிவாசிப்பதே எதிர்பாரா இன்ப அதிர்ச்சி குறிப்பாக சொல்லப்போனால் ஆடம்பர விசயத்தில் முந்திய ஆட்சியை விட ஜெயலலிதா ஆட்சியில் இது ரெம்பகுறைவே. இன்னும் சொல்லப்போனால் மேடைபோட்டு யாரையாவது புகழவிட்டு கேட்பதாகட்டும் இரண்டு பக்கமும் கிளுகிளு நடிகையை ஜிங்குஜக்கா என்று ஆடவிட்டு ரசிப்பதாகட்டும் இப்படிப்பட்ட கடந்தகால ஆட்சியின் அசிங்கங்களை ஜெயலலிதா செய்யாதர்க்கே ஜெயாவை மேடை போட்டு பாராட்டலாமே ..! அப்புறம் ஏன்இவ்வளவு வெறுப்பை அவர் மேல் பல பதிவர்கள் உமிழ்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை.
சில இந்திய பதிவர்களுடன் சேர்ந்து சில இலங்கை பதிவர்களும் ஜெயலலிதாவை கும்முவதுதான் வேடிக்கை ப்ளஸ் வேதனையானது. கடந்த ஆட்சியில் தாத்தா நமக்கு தந்த அதிர்ச்சி வைத்தியம் ஏராளம் அதை எல்லாம் அனுபவித்த பின்னுமா இப்படி..?? சரி இவர்கள் எல்லாம் ஜெயலலிதாவிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று சத்தியமாக எனக்கு தெரியவில்லை.. ஜெயாவை கும்மி பதிவிடும் பதிவர்களில் யாராவது ஒருவர் இதற்க்கு பதில் தந்தாள் தேவலாம். இலங்கை விடயத்தில் தேர்தல் சமையத்தில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு அமைய ஆட்சிக்கு வந்ததும் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்துடன் இலங்கை அரசாங்கத்தை போர்க்குற்றம், மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்த அரசாக பிரகடனம் செய்ய, ஐக்கிய நாடுகள் சபையை இந்தியா வலியுறுத்த வேண்டும் எனவும், இலங்கை அரசாங்கம் மீது பொருண்மியத் தடை ஏற்படுத்தி, அடிபணிய வைக்க வேண்டும் எனவும் ஈழத் தமிழர்கள் சிங்கள மக்கள் போன்று சம உரிமையுடன் வாழ வழிசெய்ய செய்ய வேண்டும் எனவும், இடம்பெயர்ந்த மக்கள் உடனடியாக தமது சொந்த இடங்களில் மீளக் குடியேற்றப்பட வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்ததுடன்
மேலும் அண்மையில் அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் திருமதி ஹிலாரி கிளின்டன் ஜெயலலிதாவை சந்தித்ததும், இந்த சந்திப்பில் பேச எவ்வளவோ விடயங்கள் இருந்தும் காலத்தின் தேவையுணர்ந்து ஈழத்தமிழ் மக்களின் விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விவாதித்திருப்பதையும் இவர்கள் இலகுவில் மறந்ததுதான் வேதனை. இவைமட்டுமா..! ஈழத்தமிழ் மக்கள் விடயத்தை இந்திய நாடாளுமன்றில் எழுப்பி, அதனை இந்தியாவின் ஏனைய மாநிலங்களும் அறிய செய்வதுடன், அவர்களின் ஆதரவையும் பெறும் நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக ஜெயலலிதா அறிவித்துள்ளமை அவர் இலங்கை மக்கள் மீது கொண்டுள்ள பற்றை வெளிப்படுத்தி நிற்கின்றது. தமிழின அழிப்பை மேற்கொண்டு போர்க்குற்றம் புரிந்த இலங்கை அரசாங்கத்தின் நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் நாடாளுன்றக் குழுவினர் 01-08 2011 அன்று இந்திய நாடாளுமன்றத்திற்கு
சென்றபோது அவர்களுக்கு எதிர்க்குரல் எழுப்பிய அ.தி.மு.க
நாடாளுமன்ற உறுப்பினர் அதை ஆதரித்த ஜெயலலிதா எல்லாத்தையும் மறந்துவிட்டு எல்லோரும் கும்முறாங்கப்பா நானும் என் பங்குக்கு கும்முகுறேன் என்று ஜெயலலிதாவை மிக கேவலமாக விமர்சித்தும் கருத்துப்படம் வரைந்தும் கவி வடித்தும் பல பிரபல பதிவர்கள் கூட பரபரப்பு தேடுவதுதான் வேதனையாக இருக்குறது. ஒருவர் தப்பு செய்யும் போது தட்டிக்கேட்கலாம் தப்பு இல்லை ஆனால் அவர் நல்லது செய்யும் போது கூட அதை பாராட்டி அவரை ஊக்கப்படுத்தாமல் அதை விமர்சிப்பது எந்த வகையில் நியாயம்..? இது அவர் செய்யும் நல்ல காரியங்களை கூட
முடக்கிப்போட்டு விடுமல்லவா..? பதிவுலகில் நம் பதிவுகளை பரபரப்பாக்க கிடைப்பதெல்லாத்தையும் கண் மூடித்தனமாக எதிர்ப்பது எந்தவகையில் நியாயம்..?
பின் குறிப்பு:- எனக்கு தெரிந்து ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததில் இருந்து இன்றுவரை அவர் ஆட்சியில் செய்த தவறு என்றால் அது சமசீர் பாடதிட்டத்தைதான் சொல்ல முடியும், அது கூடதவறு என்று சொல்ல முடியாது சறுக்கி விட்டார் என்றே சொல்ல முடியும். ஏனெனில் சமசீர் பாடத்திட்டத்தை ஆதரிப்பவர்களில் எத்தனை பேர் அப்புத்தகங்களை பார்வை இட்டார்கள் என்று தெரியவில்லை காரணம் அப்புத்தங்களின் தரமே.. அப்புத்தகங்களில் தேவையின்றி கருணாநிதியின் சுயபுராணமும்
கவிதைகளும் ஏன் ஏதோ திருவள்ளுவர் கூட கருணாநிதியின்
தூரத்து சொந்தம்போல் காட்டுவது முகம்சுழிக்க வைப்பவை. அதிவிட அப்புத்தங்கங்களில் இருக்கும் இந்துமத விரோத கருத்துக்கள்
போன்றவை பின் மதக்கலவரத்தை உண்டு பண்ண வழிவகுக்கும்.
இப்போது சமசீர் பாடத்திட்டத்தை உச்ச நீதிமன்றம் செயல்படுத்தச்சொல்லி தீர்ப்பு கொடுத்த நிலையில் ஜெயலலிதாவும் நீதிமன்றத்தின் முடிவுக்கு தலை அசைத்த நிலையில் அப்புத்தகங்களை அடியோடு ஒதுக்கமுடியாவிட்டாலும் அவற்றில் பல திருத்தங்களை செய்யலாம் என்பது என் கருத்து இதை இலகுவில் நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் தெரிகிறது ஆனாலும் இது மாணவர்களின் படிப்பின் தரத்தை நிர்னைக்கும் என்பதால் சிரமம் பாராது திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்பது என் தாழ்மையான கருத்து.
nalla padhivu vazhththukkal
பதிலளிநீக்குnandri
நீங்கள் சொல்வது சரிதான். செம்மொழியான தமிழ்மொழியாம் என்று அவர் அடித்த கூத்துக்களை யாரும் ஆயுளுக்கும் மறக்க முடியாது. ஆனால் ஜெயலலிதா தனியார் பள்ளி வியாபாரிகளுக்கு சப்போர்ட் பண்ணுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
பதிலளிநீக்குதாத்தாவின் ஈழ துரோகம்,கண்டிக்கப்பட வேண்டியதே,அதே போல ஜெயாவின் சமச்சீர் கல்வி சறுக்கலும் கண்டிக்கப்பட வேண்டியதே.குட்ட வேண்டியதை குட்டியே ஆக வேண்டும்.தட்டிக்கொடுக்க வேண்டியதை தட்டிகொடுக்க வேண்டும் என்பதை பதிவுலகம் சரியாக செய்வதாகவே தெரிகிறது.ந்ன்றி.
பதிலளிநீக்குஎன்ன சொல்வதென்றே தெரியல்ல பாஸ்.... ஜெயா மேடத்தை பற்றி காலம் தான் முடிவு செய்ய வேண்டும்!!!
பதிலளிநீக்குஇன்னும் கொஞ்ச காலம் பொறுத்திருந்தால் எல்லாம் வெளிச்சம்.
நம்பிக்கெட்டவன் தமிழனாச்சே..அதுதான் இப்ப யார் மீதும் அவ்வளவா நம்பிக்கை வைப்பதில்லை.
சம நிலை கண்ணோட்டத்துடன் விமர்சனம்
பதிலளிநீக்குசெய்திருக்கிறீர்கள்
அவரவர்கள் செயல்களின் அடிப்படையில்தான்
விமர்சனம் செய்துள்ளீர்கள்
தரமான அரசியல் விமர்சனப் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
எனக்கு தெரிந்து ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததில் இருந்து இன்றுவரை அவர் ஆட்சியில் செய்த தவறு என்றால் அது சமசீர் பாடதிட்டத்தைதான் சொல்ல முடியும்,/////
பதிலளிநீக்குமிக சரி. தூற்றுவோர் தூற்றி கொண்டே தான் இருப்பார்கள்.
அருமையான விமர்சனம். பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஇன்னும் கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம் நண்பா.....
பதிலளிநீக்குநிச்சயமாக பாராட்டலாம் துஷி..
பதிலளிநீக்குஆனால் சமச்சீர்கல்வி விஷயத்தில் நீங்கள் சொல்வதைப்போல வெறும் சறுக்கல் என்றெல்லாம் சொல்லி மூடி மறைக்க முடியாது.
பள்ளி மாணவர்களின் கல்வி விஷயத்தில் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டார். முறையீடு - மேல் முறையீடு என்று செய்து காலத்தை வீணடிக்கிறார். நேரடியாகவோ மறைமுகமாகவோ அம்மாவின் செயல்பாடுகள் தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக உள்ளது.
உங்களை போன்றே.. ஏன் நம்மவர்கள் குட்டுவதர்க்கு மட்டும் இவ்வளவு பிரியப்படுகிரார்கள்? தட்டிகொடுப்பதற்கு யாரையுமே காணவில்லையே? என்ற வருத்தம் எனக்கும் உண்டு.
இது நம்மவர்களின் பொதுவான உளவியல் பிரச்சனை என்று நினைக்கிறேன், பொதுவாகவே ஒருவரை திட்டும்போது எதைப்பற்றியும் கவலைபடாமல் திட்டுவோம்... பாராட்டும்போது மட்டும் வெளிப்படையாக பாராட்டினால் எங்கே இவருக்கு தலைகனம் ஏறிவிடுமோ என்று அச்சபட்டுகொண்டே பாராட்டுவதை குறைத்துகொள்வோம்..
துஷி... உங்களின் நற்பணிகள் தொடர வாழ்த்துக்கள்!!
வணக்கம் பாஸ் ஈழத்தமிழரை வைத்து தனக்கு சுயலாபம் தேடிய கருணாநிதி.”தா(த்)தா”வைவிட ஜெயலலிதா மேடம் பரவாஇல்லை.மிகச்சிறந்த ஒரு திறமையான அரசியல்வாதி ஜெயலலிதா.அதற்கு உண்மையில் அவருக்கு ஒரு சலூட்.
பதிலளிநீக்குஆனால் இதே ஜெயலலிதாமேடம்.ஈழத்தில் போர் நடந்து கொண்டிருந்தகாலப்பகுதியில்.அப்போதுஈழத்தில் போராடிக்கொண்டு இருந்த விடுத்தலைப்புலிகளையும்.அவர்களின் தலைவரையும் கடுமையாக விமர்சித்தவர்.அதே ஜெயலலிதாமேடம் இன்று ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்கின்றார் என்றால் ஈழத்தமிழர் நாங்கள் எப்படி அவரை நம்ம முடியும்?
இன்னும் ஒன்று ஈழத்தமிழர்களுக்காக ஒருவேளை ஜெயலலிதா மேடம் தற்போது எதுவும் பேசாமல் இருந்தால் தமிழகத்தின் ஏனைய அரசியல் வாதிகள் அதைவைத்தே அரசியல் நடத்துவார்கள் இல்லையா?
மொத்தத்தில் ஜெயலலிதா மேடம் மட்டும் இல்லை ஒட்டு மொத்த தமிழக அரசியல் வாதிகளின் கருத்துக்களை ஈழத்தமிழர்கள் யாரும் இனியும் நம்பமாட்டார்கள்.
நாம் பட்ட வேதனைகள் போதும்.தமிழகத்தின் சுய இலாப அரசியல்வாதிகளின்.தயவும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்.எங்களை இனியாவது நிம்மதியாக வாழவிடுங்கள்
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநல்ல அழுத்தமான பதிவு துஷி...
பதிலளிநீக்குஎனக்கு பிடித்த அரசியல்வாதிகளுள் அவரும் ஒருவர்...
என்ன...ஆங்காரம் தான் அவருக்கு அழகும்...அழிவும்...
மு க வை பழிவாங்குவதை முழு நேர தொழிலாக அவர் எடுத்துக்கொள்வதை அவர் மாற்றுவதாய் தெரியவில்லை...
மாற்றம் வரும் வரை ஏமாற்றம் இயல்பாகிப்போவது தானே நிதர்சனம்...
வாழ்த்துக்கள் உங்கள் கட்டுரைக்கு...ஜெ நிறைய மாறணும்...நிறைய செய்யணும்...ஏமாந்தே பழகிப்போன தமிழர்களுக்கு...
வாழ்த்துக்கள் உங்கள் கட்டுரைக்கு...ஜெ நிறைய மாறணும்...நிறைய செய்யணும்...
பதிலளிநீக்குவணக்கம் பாஸ்
பதிலளிநீக்குஎன்ன ஜெயலலிதாவுக்கு சப்போர்ட்டா
இருங்க படிச்சிட்டு வாறன்
அரசியல்.......நான் விலகிவிட்டேன்.....
பதிலளிநீக்குஎனக்கு தெரிந்து இதில் எதாவது ஒன்றாக இருக்கலாம்.
பதிலளிநீக்கு1 ) குடும்பத்துல யாருக்காவது கருணாநிதி ஆட்சி காலத்துல அரசாங்க வேல கிடைச்சி இருக்கும் ( விசுவாசம் , அதிலும் ஒண்ணுத்துக்கும் உதவாததுக்கு வேல கிடச்சா ... தலைமுறை , தலைமுறையா தி மு க அடிமை தான் )
2 ) கருணாநிதி வளத்து விட்ட சாதிவெறி -- மாஸ் ஓட்டுகள் அதிகம் கிடைக்கும்
3 ) "பிரபல" அப்படிங்கற வார்த்தை , 'பிரபல' பதிவர் , 'பிரபல' சைக்கிள் ஓட்டுனர் , பிரபல நடந்து போவோர் , பிரபல மூச்சுவிடுவோர் ... தாங்க முடியலடா சாமி
சமச்சீர்க்கல்விப் பிரச்சினை தவிர்த்து அவர் செயல்பாடு பாராட்டத்தக்கவையே..உங்கள் கருத்தும் சரியே!
பதிலளிநீக்கு//ramalingam கூறியது...
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது சரிதான். செம்மொழியான தமிழ்மொழியாம் என்று அவர் அடித்த கூத்துக்களை யாரும் ஆயுளுக்கும் மறக்க முடியாது. ஆனால் ஜெயலலிதா தனியார் பள்ளி வியாபாரிகளுக்கு சப்போர்ட் பண்ணுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.//
உண்மைதான் பாஸ்,
தாத்தாவை ஜென்மத்துக்கும் மறக்க முடியாது
அவர் செய்தது அப்படி அல்லவா
//R.Elan. கூறியது...
பதிலளிநீக்குதாத்தாவின் ஈழ துரோகம்,கண்டிக்கப்பட வேண்டியதே,அதே போல ஜெயாவின் சமச்சீர் கல்வி சறுக்கலும் கண்டிக்கப்பட வேண்டியதே.குட்ட வேண்டியதை குட்டியே ஆக வேண்டும்.தட்டிக்கொடுக்க வேண்டியதை தட்டிகொடுக்க வேண்டும் என்பதை பதிவுலகம் சரியாக செய்வதாகவே தெரிகிறது.ந்ன்றி.//
உங்கள் முதல் வருகைக்கு நன்றி பாஸ் முதலில்.
அப்புறம் ... என் பதிவை நீங்கள் சரியாக படிக்கவில்லை என்று
நினைக்குறேன், நானும் இதைத்தான் சொல்ல்கிறேன் பாஸ்
குட்ட வேண்ட்டிய இடத்தில் குட்டத்தான் வேண்ட்டும்
அதற்காக குட்டுவதே பொழுது போக்காக கொண்டு அலைய படாது
என்றுதான் சொல்கிறேன்,
//நிகழ்வுகள் கூறியது...
பதிலளிநீக்குஎன்ன சொல்வதென்றே தெரியல்ல பாஸ்.... ஜெயா மேடத்தை பற்றி காலம் தான் முடிவு செய்ய வேண்டும்!!!
இன்னும் கொஞ்ச காலம் பொறுத்திருந்தால் எல்லாம் வெளிச்சம்.
நம்பிக்கெட்டவன் தமிழனாச்சே..அதுதான் இப்ப யார் மீதும் அவ்வளவா நம்பிக்கை வைப்பதில்லை.//
உங்கள் பயமும் ஆதங்கமும் புரிகிறது பாஸ்,
ஆனாலும் யாரையாவது நம்பி இருக்க வேண்ட்டிய நிலைமையில் தானே
நாங்கள் இன்னும் இருக்குறோம் பாஸ்,
//Ramani கூறியது...
பதிலளிநீக்குசம நிலை கண்ணோட்டத்துடன் விமர்சனம்
செய்திருக்கிறீர்கள்
அவரவர்கள் செயல்களின் அடிப்படையில்தான்
விமர்சனம் செய்துள்ளீர்கள்
தரமான அரசியல் விமர்சனப் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
//
நன்றி ரமணி சார்,
நீங்கள் சொல்வதுதான் நிதர்சனம்
அவர்களின் செய்கைகளை பொறுத்துத்தானே
அவர்களையும் எடை போட முடியும்.
நன்றி சார்.
//தமிழ் உதயம் கூறியது...
பதிலளிநீக்குஎனக்கு தெரிந்து ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததில் இருந்து இன்றுவரை அவர் ஆட்சியில் செய்த தவறு என்றால் அது சமசீர் பாடதிட்டத்தைதான் சொல்ல முடியும்,/////
மிக சரி. தூற்றுவோர் தூற்றி கொண்டே தான் இருப்பார்கள்.
//
நிஜம்தான் நண்பா.
என்ன செய்ய சில பேருக்கு திட்ட மட்டுமே முடிகிறது
பாராட்ட தெரிவதில்லை
//முத்து குமரன் கூறியது...
பதிலளிநீக்குஅருமையான விமர்சனம். பாராட்டுக்கள்.//
தேங்க்ஸ் பாஸ்
அடிக்கடி வாங்கப்பா நம்ம பக்கமும்.
// MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்குஇன்னும் கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம் நண்பா.....
//
ஆம் பாஸ் பொறுத்து இருக்கலாம்தான்,
ஆனால் கும்மும் சில பதிவர்களும் பொறுத்து இருக்கலாமே
இருந்து இருந்தால் இந்த பதிவே தேவை இல்லையே
//குடிமகன் கூறியது...
பதிலளிநீக்குநிச்சயமாக பாராட்டலாம் துஷி..
ஆனால் சமச்சீர்கல்வி விஷயத்தில் நீங்கள் சொல்வதைப்போல வெறும் சறுக்கல் என்றெல்லாம் சொல்லி மூடி மறைக்க முடியாது.
பள்ளி மாணவர்களின் கல்வி விஷயத்தில் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டார். முறையீடு - மேல் முறையீடு என்று செய்து காலத்தை வீணடிக்கிறார். நேரடியாகவோ மறைமுகமாகவோ அம்மாவின் செயல்பாடுகள் தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக உள்ளது.
உங்களை போன்றே.. ஏன் நம்மவர்கள் குட்டுவதர்க்கு மட்டும் இவ்வளவு பிரியப்படுகிரார்கள்? தட்டிகொடுப்பதற்கு யாரையுமே காணவில்லையே? என்ற வருத்தம் எனக்கும் உண்டு.
இது நம்மவர்களின் பொதுவான உளவியல் பிரச்சனை என்று நினைக்கிறேன், பொதுவாகவே ஒருவரை திட்டும்போது எதைப்பற்றியும் கவலைபடாமல் திட்டுவோம்... பாராட்டும்போது மட்டும் வெளிப்படையாக பாராட்டினால் எங்கே இவருக்கு தலைகனம் ஏறிவிடுமோ என்று அச்சபட்டுகொண்டே பாராட்டுவதை குறைத்துகொள்வோம்..
துஷி... உங்களின் நற்பணிகள் தொடர வாழ்த்துக்கள்!!
//
ஒத்துகொள்கிறேன் நண்பா
சமசீர் புத்தக விடயத்தில் அம்மா மேல் நிறைய தப்பு இருக்கு
ஆனால் சமசீர் புத்தகங்கள் தரமானதுதான் என்று உங்களால்
ஒத்துக்க முடியுமா??????????
ம்.. என்ன செய்ய சில பேருக்கு யாரையாவது திட்டும்போது கிடைக்கும் சந்தோஷம்
பாராட்டும் போது கிடைப்பது இல்லைப்போல்,
நீங்கள் சொல்வது போல் இதுவும் ஒருவித நோய்தான் போல் நண்பா
தேங்க்ஸ் நண்பா விரிவான அழகான கருத்துக்கு.
//Kss.Rajh கூறியது...
பதிலளிநீக்குவணக்கம் பாஸ் ஈழத்தமிழரை வைத்து தனக்கு சுயலாபம் தேடிய கருணாநிதி.”தா(த்)தா”வைவிட ஜெயலலிதா மேடம் பரவாஇல்லை.மிகச்சிறந்த ஒரு திறமையான அரசியல்வாதி ஜெயலலிதா.அதற்கு உண்மையில் அவருக்கு ஒரு சலூட்.
ஆனால் இதே ஜெயலலிதாமேடம்.ஈழத்தில் போர் நடந்து கொண்டிருந்தகாலப்பகுதியில்.அப்போதுஈழத்தில் போராடிக்கொண்டு இருந்த விடுத்தலைப்புலிகளையும்.அவர்களின் தலைவரையும் கடுமையாக விமர்சித்தவர்.அதே ஜெயலலிதாமேடம் இன்று ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்கின்றார் என்றால் ஈழத்தமிழர் நாங்கள் எப்படி அவரை நம்ம முடியும்?
இன்னும் ஒன்று ஈழத்தமிழர்களுக்காக ஒருவேளை ஜெயலலிதா மேடம் தற்போது எதுவும் பேசாமல் இருந்தால் தமிழகத்தின் ஏனைய அரசியல் வாதிகள் அதைவைத்தே அரசியல் நடத்துவார்கள் இல்லையா?
மொத்தத்தில் ஜெயலலிதா மேடம் மட்டும் இல்லை ஒட்டு மொத்த தமிழக அரசியல் வாதிகளின் கருத்துக்களை ஈழத்தமிழர்கள் யாரும் இனியும் நம்பமாட்டார்கள்.
நாம் பட்ட வேதனைகள் போதும்.தமிழகத்தின் சுய இலாப அரசியல்வாதிகளின்.தயவும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்.எங்களை இனியாவது நிம்மதியாக வாழவிடுங்கள்
//
உங்கள் கருத்து தவறானது நண்பா
ஜெயா ஆரம்பகாலங்களில் புலி சப்போட்டானவர்தான்.
ஆனால் ராஜீவின் கொலைக்கு பின் தான் மாறினார்
இப்போது கூட அவர் புலிகளை எதிர்க்கிறார்தான்
அதை மாற்றியதாக அவர் சொல்லவே இல்லையே.......
அப்புறம்... யுத்தத்தின் போது புலிகளை விமர்சித்ததாக நான் அறியவில்லை
" யுத்தம் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்" என் அவர் சொல்லியது மட்டும்தான்.
இதை நானும்தான் எதிர்க்குறேன். விடுங்கள் தவறு செய்யாதவர்கள் யார் ???
அதைவிட கருணாநிதிபோல் நாடகம் ஆடவில்லையே என சந்தோஷம் கொள்ளுங்கள்.
அவர் அப்படி சொன்னார் இப்படி சொன்னார்
அவர்களின் உதவி வேண்ட்டம் என்று சொல்லி சொல்லி நாங்கள் என்னத்தை
சாதிக்கப்போறோம். பகைமை பாராட்டாது கிடைக்கும் கைகளை
வழுவாக பற்றி எழ முயற்சிப்போமே சகோ
//Reverie கூறியது...
பதிலளிநீக்குநல்ல அழுத்தமான பதிவு துஷி...
எனக்கு பிடித்த அரசியல்வாதிகளுள் அவரும் ஒருவர்...
என்ன...ஆங்காரம் தான் அவருக்கு அழகும்...அழிவும்...
மு க வை பழிவாங்குவதை முழு நேர தொழிலாக அவர் எடுத்துக்கொள்வதை அவர் மாற்றுவதாய் தெரியவில்லை...
மாற்றம் வரும் வரை ஏமாற்றம் இயல்பாகிப்போவது தானே நிதர்சனம்...
வாழ்த்துக்கள் உங்கள் கட்டுரைக்கு...ஜெ நிறைய மாறணும்...நிறைய செய்யணும்...ஏமாந்தே பழகிப்போன தமிழர்களுக்கு...
//
நன்றி பாஸ் வருகைக்கும் அழகான கருத்துக்கும்.
சூப்பரா சொன்னீங்க.. அவருக்கு
அழகும் அழிவும் அந்த அகங்காரம் தான்
எனக்கு அவரிடம் புடித்வைகளில் இதுவும் ஒன்று
ஹா ஹா
//
பதிலளிநீக்குமதுரன் கூறியது...
வணக்கம் பாஸ்
என்ன ஜெயலலிதாவுக்கு சப்போர்ட்டா
இருங்க படிச்சிட்டு வாறன்
///
யா யா ....
ஆஹா
இன்னுமா படித்தோண்டு இருக்கீங்க ???lol
ஹா ஹா
//!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் உங்கள் கட்டுரைக்கு...ஜெ நிறைய மாறணும்...நிறைய செய்யணும்...//
தேங்க்ஸ் பாஸ்
//ஆகுலன் கூறியது...
பதிலளிநீக்குஅரசியல்.......நான் விலகிவிட்டேன்.....//
அடப்பாவி
எப்படிடா இப்புடி கிரேட் எஸ்கேப் ஆகிற ??
//அஹோரி கூறியது...
பதிலளிநீக்குஎனக்கு தெரிந்து இதில் எதாவது ஒன்றாக இருக்கலாம்.
1 ) குடும்பத்துல யாருக்காவது கருணாநிதி ஆட்சி காலத்துல அரசாங்க வேல கிடைச்சி இருக்கும் ( விசுவாசம் , அதிலும் ஒண்ணுத்துக்கும் உதவாததுக்கு வேல கிடச்சா ... தலைமுறை , தலைமுறையா தி மு க அடிமை தான் )
2 ) கருணாநிதி வளத்து விட்ட சாதிவெறி -- மாஸ் ஓட்டுகள் அதிகம் கிடைக்கும்
3 ) "பிரபல" அப்படிங்கற வார்த்தை , 'பிரபல' பதிவர் , 'பிரபல' சைக்கிள் ஓட்டுனர் , பிரபல நடந்து போவோர் , பிரபல மூச்சுவிடுவோர் ... தாங்க முடியலடா சாமி
//
பாஸ் முதலில் வொக்கையை புடியுங்க பாஸ்
முதல் முதல் நம்ம பக்கம் வந்ததுக்குlol
தேங்க்ஸ் பாஸ்
//செங்கோவி கூறியது...
பதிலளிநீக்குசமச்சீர்க்கல்விப் பிரச்சினை தவிர்த்து அவர் செயல்பாடு பாராட்டத்தக்கவையே..உங்கள் கருத்தும் சரியே!
//
தேங்க்ஸ் பாஸ்,
இதைதான் நானும் சொல்கிறேன் பாஸ்
உண்மையும் இதுதான்.
ஜெயலலிதாவிடம் பேச எங்களின் (ஈழத்தமிழர்களின்) அம்பாசிடர் நீங்கதான்!! :))
பதிலளிநீக்குஉங்கள் பதிவுக்கு பதில் சொல்லி எதிர்ப்பதிவு போட்டா தப்பா நினைப்பீங்களோ துஷ்யந்தன்...?
//Rathi கூறியது...
பதிலளிநீக்குஜெயலலிதாவிடம் பேச எங்களின் (ஈழத்தமிழர்களின்) அம்பாசிடர் நீங்கதான்!! :))
உங்கள் பதிவுக்கு பதில் சொல்லி எதிர்ப்பதிவு போட்டா தப்பா நினைப்பீங்களோ துஷ்யந்தன்...?
//
வணக்கம் அக்கா ,
உங்கள் எதர் பதிவை கண்டிப்பாக தப்பா நினைக்க மாட்டேன்,
உங்கள் கருத்தை சொல்வது உங்கள் உரிமையல்லவா
அதி எப்படி நான் தலையிட முடியும். ஆனால் ஒன்று என் எழுத்தை
நன்றாகா புரிந்து கொண்டு பின் எதர் பதிவு போடுங்கள் அக்கா.
என்னைப்பொறுத்தவரை தவறி செய்யாத மனிதர்களே இல்லை
ஆனால் அவர்கள் திருந்துபோது பழையதையே பேசாமல்
வரவேற்பதுதான் நன்று என நினைக்குறேன்,
செய்த தப்புக்களை சுட்டிக்காட்டி என்னத்தை சாதிக்கப்போறோம்
இப்போது செய்யும் நல்லவற்ருக்காக பாராட்டலாமே அக்கா
//Rathi கூறியது...
பதிலளிநீக்குஉங்கள் பதிவுக்கு பதில் சொல்லி எதிர்ப்பதிவு போட்டா தப்பா நினைப்பீங்களோ துஷ்யந்தன்...?
//
உங்களின் எதர் பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்குறேன் அக்கா
( அக்காவின் எழுத்தை ரசிக்கும் ஆவல் தம்பிக்கு இருக்காத என்ன?? )
நீங்கதான் பின்குறிப்பு போட்டுட்டீங்களே!
பதிலளிநீக்குஇந்த முறை ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டிய்வையே.ஆனால் சமச்சீர் கல்வியில் கோட்டை விட்டு தனக்கு மூன்றே கால் என்பதில் உறுதியாகவே இருக்கிறேன் என்று நிருபீக்க முயன்றுள்ளார்.
100 நாள் கெடு முடியட்டும்.ஆட்டத்தை துவங்கிடலாம்.
நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்? பட்டிஜெட்க்கு முன்பே வரியை உயர்த்துவதும் பின்பு வரியைக்குறைப்பும் உங்களுக்குத் தெரியவில்லையா
பதிலளிநீக்குபாராட்டலாமே ஜெயலலிதாவை..//
பதிலளிநீக்குமச்சி....முதலில் உன்னைப் பாராட்ட வேண்டும், அருமையான ஒரு தலைப்பில் அடித்தாடியிருக்கிறீங்க. வாழ்த்துகள்.
கூடவே இரண்டு மைனஸ் ஓட்டும் தந்திருக்கிறாங்கள்.
சமச்சீர் கல்வியினை விடுத்துப் பார்க்கையில் அம்மா ந்ன்றாக் யோசித்துத் தான் இரு நாட்டு மக்களின் விடயங்களிலும் செயற்படுகிறா/.
பதிலளிநீக்கும்...பொறுத்திருந்து பார்ப்போம்.
@பகைமை பாராட்டாது கிடைக்கும் கைகளை
பதிலளிநீக்குவழுவாக பற்றி எழ முயற்சிப்போமே சகோ..
நல்ல வார்த்தைகள் பாஸ்.
நீங்கள் சென்னது போல
தவறு செய்யாதவர்கள் யார்இருக்கின்றார்கள்.அப்படி யாரும் நிச்சயமாக இருக்கமுடியாது நண்பா?
ஏன் தமிழருக்காக போராடிய புலிகள் கூட எத்தனை தவறுகள் செய்தார்கள்.
விடுதலைப்புலிகளின் தலைவரை கைதுசெய்ய வேண்டும் என்று தொடர்ந்து கூறிவந்தவர் ஜெயலலிதா.இப்ப யுத்தம் எல்லாம் முடிந்து விட்டது ஆனாலும்.யுத்தம் நடந்த காலப்பகுதியில் தமிழர்களுக்காக போராடியவர்களை கைது செய்யவேண்டும்.என்று கூறிய ஒருவர் மீண்டும் எல்லாம் முடிந்த பின் தமிழர்களுக்கு சாதகமாக பேசுவதை எவ்வாறு நம்மமுடியும்.
அதைவிட கருணாநிதி தாத்தாவும் ஆரம்பத்தில் ஈழத்தமிழர்களுக்கு உண்ணாவிரதம் இருந்தார்தானே அப்பெழுது அவர் எவ்வளவு பாராட்டுக்கள் பெற்றுஇருந்தார்.ஆனால் கடைசியில் அது எல்லாம் நாடகம் என்று அவரைச்சேர்ந்தவர்களின் மூலவே வெளிவந்ததுதானே.
எனவே ஜெயலலிதா மேடத்தை.உடனடியாக நம்பமுடியாது..ஆனால் இப்ப கொஞ்சம் மாறி விட்டார் போலத்தான் தெரியுது.
உண்மையில் எனக்கு ஜெயலலிதாவை.தனிப்பட்டரீதியில் மிகவும்.பிடிக்கும்.ஒரு பெண்ணாக. தமிழக அரசியலில் எவ்வளவோ சாதித்துள்ளார்.சாதிக்கத்துடிக்கும் பெண்களுக்கு நிச்சயம் அவர் ஒரு முன் உதாரணம்.
தனிப்பட்ட ரீதியில் எனக்கு அவரைப்பிடித்தாலும்.குருதிகறை படிந்த எங்கள் வன்னிமண்ணில் பிறந்த ஒரு ஈழத்தமிழனாக அவரை நம்ம சிலகாலம் பொறுத்து இருக்கவேண்டும்.சகோ
நல்ல அழுத்தமான பதிவு சார்!
பதிலளிநீக்குநிச்சயமாக நானும் ஜெயலலிதா அவர்களை பாராட்டுகிறேன் !
உண்மைவிரும்பி,
மும்பை.
//ராஜ நடராஜன் சொன்னது…
பதிலளிநீக்குநீங்கதான் பின்குறிப்பு போட்டுட்டீங்களே!
இந்த முறை ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டிய்வையே.ஆனால் சமச்சீர் கல்வியில் கோட்டை விட்டு தனக்கு மூன்றே கால் என்பதில் உறுதியாகவே இருக்கிறேன் என்று நிருபீக்க முயன்றுள்ளார்.
100 நாள் கெடு முடியட்டும்.ஆட்டத்தை துவங்கிடலாம்.
///
உண்மைதான் பாஸ் ,
பாடப்புத்தக விசயத்தில் கொஞ்சம் அவமானப்பட்டு விட்டார்
என்றே தோனுகிறது. நம்ம சக பதிவர் மேலே சொன்னதுபோல்
அகங்காரம்தானே அவருக்கு அழகு ப்ளஸ் அழிவு
@ நிரூபன் கூறியது...
பதிலளிநீக்குபாராட்டலாமே ஜெயலலிதாவை..//
மச்சி....முதலில் உன்னைப் பாராட்ட வேண்டும், அருமையான ஒரு தலைப்பில் அடித்தாடியிருக்கிறீங்க. வாழ்த்துகள்.
கூடவே இரண்டு மைனஸ் ஓட்டும் தந்திருக்கிறாங்கள்
//
தேங்க்ஸ் பாஸ்,
ஹா ஹா
உங்கள மாதிரி ரெம்ப பெரிய பதிவர்கள்தான் மைனஸ்
ஒட்டு வாங்குவாங்க. இப்போ எனக்கு கிடைச்சு இருக்கு.
அப்போ நாமும் பிரபல பதிவரோ ??
( சரி சரி திட்டாதீங்கப்பா )
@நிரூபன் கூறியது...
பதிலளிநீக்குசமச்சீர் கல்வியினை விடுத்துப் பார்க்கையில் அம்மா ந்ன்றாக் யோசித்துத் தான் இரு நாட்டு மக்களின் விடயங்களிலும் செயற்படுகிறா/.
ம்...பொறுத்திருந்து பார்ப்போம்.
//
ஹும்... பார்க்கலாமே பாஸ்
@Kss.Rajh கூறியது...
பதிலளிநீக்கு@பகைமை பாராட்டாது கிடைக்கும் கைகளை
வழுவாக பற்றி எழ முயற்சிப்போமே சகோ..
நல்ல வார்த்தைகள் பாஸ்.
நீங்கள் சென்னது போல
தவறு செய்யாதவர்கள் யார்இருக்கின்றார்கள்.அப்படி யாரும் நிச்சயமாக இருக்கமுடியாது நண்பா?
ஏன் தமிழருக்காக போராடிய புலிகள் கூட எத்தனை தவறுகள் செய்தார்கள்.
விடுதலைப்புலிகளின் தலைவரை கைதுசெய்ய வேண்டும் என்று தொடர்ந்து கூறிவந்தவர் ஜெயலலிதா.இப்ப யுத்தம் எல்லாம் முடிந்து விட்டது ஆனாலும்.யுத்தம் நடந்த காலப்பகுதியில் தமிழர்களுக்காக போராடியவர்களை கைது செய்யவேண்டும்.என்று கூறிய ஒருவர் மீண்டும் எல்லாம் முடிந்த பின் தமிழர்களுக்கு சாதகமாக பேசுவதை எவ்வாறு நம்மமுடியும்.
அதைவிட கருணாநிதி தாத்தாவும் ஆரம்பத்தில் ஈழத்தமிழர்களுக்கு உண்ணாவிரதம் இருந்தார்தானே அப்பெழுது அவர் எவ்வளவு பாராட்டுக்கள் பெற்றுஇருந்தார்.ஆனால் கடைசியில் அது எல்லாம் நாடகம் என்று அவரைச்சேர்ந்தவர்களின் மூலவே வெளிவந்ததுதானே.
எனவே ஜெயலலிதா மேடத்தை.உடனடியாக நம்பமுடியாது..ஆனால் இப்ப கொஞ்சம் மாறி விட்டார் போலத்தான் தெரியுது.
உண்மையில் எனக்கு ஜெயலலிதாவை.தனிப்பட்டரீதியில் மிகவும்.பிடிக்கும்.ஒரு பெண்ணாக. தமிழக அரசியலில் எவ்வளவோ சாதித்துள்ளார்.சாதிக்கத்துடிக்கும் பெண்களுக்கு நிச்சயம் அவர் ஒரு முன் உதாரணம்.
தனிப்பட்ட ரீதியில் எனக்கு அவரைப்பிடித்தாலும்.குருதிகறை படிந்த எங்கள் வன்னிமண்ணில் பிறந்த ஒரு ஈழத்தமிழனாக அவரை நம்ம சிலகாலம் பொறுத்து இருக்கவேண்டும்.சகோ
//
நியாமான கருத்துத்தான் பாஸ்.
உங்கள் ஆதங்கம் சரியே .....
எனக்கும் ஜெயாவை புடிக்கும்,
சமூகம் விமர்சிக்கும் ஒரு நடிகையாக இருந்து
இப்போது அவர் இருக்கும் இந்த உயரம்
உண்மையில் பாராட்ட தக்கதே...
ஜெயாவின் நேர்மை எனக்கு ரெம்ப புடிக்கும்.
//எனது கவிதைகள்... சொன்னது…
பதிலளிநீக்குநல்ல அழுத்தமான பதிவு சார்!
நிச்சயமாக நானும் ஜெயலலிதா அவர்களை பாராட்டுகிறேன் !
உண்மைவிரும்பி,
மும்பை.
//
நன்றி பாஸ்,
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்
தேங்க்ஸ் பாஸ்
ஒருவர் தப்பு செய்யும் போது தட்டிக்கேட்கலாம் தப்பு இல்லை ஆனால் அவர் நல்லது செய்யும் போது கூட அதை பாராட்டி அவரை ஊக்கப்படுத்தாமல் அதை விமர்சிப்பது எந்த வகையில் நியாயம்..? இது அவர் செய்யும் நல்ல காரியங்களை கூட
பதிலளிநீக்குமுடக்கிப்போட்டு விடுமல்லவா..?//
இது பூனை சூடான பாலை ஒரு தடவ குடிச்சிட்டு நாக்கசுட்டுகிட்டு அப்பறம் எப்ப பால பாத்தாலும் பால் சூடா இருக்குன்னு பால குடிக்காம இருந்த மாதிரி இருக்கு.
நிச்சயம் நல்லது செய்யும் போது தட்டிகொடுக்கவும் வேண்டும்,பகிர்வுக்கு நன்றி!
//ஒருவிசயத்தை எத்தனை பேர் ஆதரித்தாலும் அதில் எனக்கு உடன்பாடு இல்லை எனில் நான் தனி ஒருவனாகவே அதை எதிர்த்து நிக்க தயங்க மாட்டேன்.///
பதிலளிநீக்குசேம் பிளட்.
நண்பேண்டா
கோகுல் கூறியது...
பதிலளிநீக்குஒருவர் தப்பு செய்யும் போது தட்டிக்கேட்கலாம் தப்பு இல்லை ஆனால் அவர் நல்லது செய்யும் போது கூட அதை பாராட்டி அவரை ஊக்கப்படுத்தாமல் அதை விமர்சிப்பது எந்த வகையில் நியாயம்..? இது அவர் செய்யும் நல்ல காரியங்களை கூட
முடக்கிப்போட்டு விடுமல்லவா..?//
இது பூனை சூடான பாலை ஒரு தடவ குடிச்சிட்டு நாக்கசுட்டுகிட்டு அப்பறம் எப்ப பால பாத்தாலும் பால் சூடா இருக்குன்னு பால குடிக்காம இருந்த மாதிரி இருக்கு.
நிச்சயம் நல்லது செய்யும் போது தட்டிகொடுக்கவும் வேண்டும்,பகிர்வுக்கு நன்றி!
||
அழகான உவமையுடன் சூப்பரா சொன்னீங்க பாஸ் ^_^
தேங்க்ஸ் பாஸ்.
@ மதுரன் கூறியது...
பதிலளிநீக்கு//ஒருவிசயத்தை எத்தனை பேர் ஆதரித்தாலும் அதில் எனக்கு உடன்பாடு இல்லை எனில் நான் தனி ஒருவனாகவே அதை எதிர்த்து நிக்க தயங்க மாட்டேன்.///
சேம் பிளட்.
நண்பேண்டா//
ஹி ஹி
நண்பேண்டா... ^_^
நல்ல ஒரு அலசல் நண்பரே!
பதிலளிநீக்குஃஃஃகடந்த ஆட்சியில் தாத்தா நமக்கு தந்த அதிர்ச்சி வைத்தியம் ஏராளம் அதை எல்லாம் அனுபவித்த பின்னுமா இப்படி..?? ஃஃஃஃ
பதிலளிநீக்குமொத்தத்தில் எல்லாரும் அரசியல்வாதிகள் தானே... சகோதரா..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னை கடுப்பேற்றும் பதிவர்களின் செயற்பாடுகள் மூன்று
மாப்பிள கொஞ்சம் லேட்டாகிட்டேண்டா.. நல்ல பதிவுதான்யா.. இத வாசித்துக்கொண்டு போகும்போது காட்டானுக்கு பல்ப் எரிஞ்சுதடா.. மாப்பிளைய இண்டைக்கு நல்லா கடுப்பேத்துவோமென்னு..
பதிலளிநீக்குஅதுக்கு நீ ஆப்படிச்சிட்டாய்யா.. சமசீர் கல்வியிலதான் அம்மா சறுக்கிணவா.. ஆனா இந்த தாத்தா ஏன் பள்ளிக்கூட பாடதிட்டத்தில தற்புகழ்சி பாடினாரென்று தெரியவில்லை.. அப்படி தன்னை பாராட்ட வேண்டுமெண்டா மேடை போட்டு பாராட்டி நமிதா டான்சையும் போட்டிருந்தா காட்டானும் ரசித்திருப்பாந்தானேய்யா..!!!
அது சரி எப்ப அம்மா கட்சி உறுப்பினர் படிவம் வாங்கினாய் மாப்பிள..!!!???? வீட்ட போய் ஓட்டுப்போடுறன் இப்ப கொஞ்சம் தூரத்தில நிக்கிறன் மாப்பிள...
காட்டான் குழ போட்டான்...
//ஷீ-நிசி கூறியது...
பதிலளிநீக்குநல்ல ஒரு அலசல் நண்பரே
//
நன்றி நண்பரே
//! ஸ்பார்க் கார்த்தி @ கூறியது...
பதிலளிநீக்குஅப்படியே இந்த பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க
http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html//
தேங்க்ஸ் நண்பா
நல்ல சேவை தொடருங்கள்
வாழ்த்துக்கள்
//♔ம.தி.சுதா♔ கூறியது...
பதிலளிநீக்குஃஃஃகடந்த ஆட்சியில் தாத்தா நமக்கு தந்த அதிர்ச்சி வைத்தியம் ஏராளம் அதை எல்லாம் அனுபவித்த பின்னுமா இப்படி..?? ஃஃஃஃ
மொத்தத்தில் எல்லாரும் அரசியல்வாதிகள் தானே... சகோதரா..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னை கடுப்பேற்றும் பதிவர்களின் செயற்பாடுகள் மூன்று//
ஓம் பாஸ்
ஆனால் இருப்பவர்களில்
நல்லவர்களை தேர்ந்தெடுப்பது
நம் கடமையல்லவா
//காட்டான் கூறியது...
பதிலளிநீக்குமாப்பிள கொஞ்சம் லேட்டாகிட்டேண்டா.. நல்ல பதிவுதான்யா.. இத வாசித்துக்கொண்டு போகும்போது காட்டானுக்கு பல்ப் எரிஞ்சுதடா.. மாப்பிளைய இண்டைக்கு நல்லா கடுப்பேத்துவோமென்னு..
அதுக்கு நீ ஆப்படிச்சிட்டாய்யா.. சமசீர் கல்வியிலதான் அம்மா சறுக்கிணவா.. ஆனா இந்த தாத்தா ஏன் பள்ளிக்கூட பாடதிட்டத்தில தற்புகழ்சி பாடினாரென்று தெரியவில்லை.. அப்படி தன்னை பாராட்ட வேண்டுமெண்டா மேடை போட்டு பாராட்டி நமிதா டான்சையும் போட்டிருந்தா காட்டானும் ரசித்திருப்பாந்தானேய்யா..!!!
அது சரி எப்ப அம்மா கட்சி உறுப்பினர் படிவம் வாங்கினாய் மாப்பிள..!!!???? வீட்ட போய் ஓட்டுப்போடுறன் இப்ப கொஞ்சம் தூரத்தில நிக்கிறன் மாப்பிள...
காட்டான் குழ போட்டான்...
//
நன்றி காட்டான்
ஹா ஹா
நான் அம்மா கட்சியில் சேர்ந்து ரெம்ப நாள் ஆச்சு
உங்களுக்கும் ஒரு படிவம் அனுப்பி உள்ளேன்
அம்மா கட்சியில் சேர
வந்திச்சா?????
நியாயமான கேள்வி தம்பி
பதிலளிநீக்குநான் ஒரு காலத்தில தமிழ் ஈன தலைவரின் போட்டோவ வீட்டில மாட்டி வைச்சவந்தான்யா.. இப்ப அது எந்த குப்பையிலோ...?? எனக்கு இப்ப வேற வழி இல்லை மூன்றாம் அணி கானல் நீரே இப்போது... படிவத்த வாங்காம என்னையா செய்ய அத அனுப்பிவை வேற வழி...!!!!???
பதிலளிநீக்கு//காட்டான் சொன்னது…
பதிலளிநீக்குநான் ஒரு காலத்தில தமிழ் ஈன தலைவரின் போட்டோவ வீட்டில மாட்டி வைச்சவந்தான்யா.. இப்ப அது எந்த குப்பையிலோ...?? எனக்கு இப்ப வேற வழி இல்லை மூன்றாம் அணி கானல் நீரே இப்போது... படிவத்த வாங்காம என்னையா செய்ய அத அனுப்பிவை வேற வழி...!!!!???
//
கவலையை விடுங்கள் பாஸ்
துரோகியை விட
எதிரி எவ்வளவோ மேல்
அம்மா உங்களுக்கு ஆசி வழங்கட்டும்
ஹா ஹா
2 மைனஸ் ஓட்டா. !!!!
பதிலளிநீக்கு//சி.பி.செந்தில்குமார் கூறியது...//
பதிலளிநீக்கு2 மைனஸ் ஓட்டா. !!!!
யா பாஸ்
ஆனாலும் அசர மாட்டோம் இல்ல
நிஜமாகவே நல்ல நடு நிலையோடு ஆராய்ந்து எழுதப்பட்ட கருத்து இது.பாராட்டுகள்.
பதிலளிநீக்குஅவருடைய துணிச்சல் தைரியம்,நிதானமான அப்ரோச்,எல்லாமே ஆச்சரியமான அருமையான ப்ளஸ் பாயிண்ட்ஸ்
அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் எண்: 26 இல் இலங்கை தமிழ் அகதிகளுக்கு தரமான இருப்பிடம், தண்ணீர் மருத்துவ வசதி கல்வி ஆகியவை வழங்கப் படும் என்று கூறியுள்ளது இந்த ஆண்டு நிதி அறிக்கையில் இடம் பெறவில்லை...
பதிலளிநீக்குஎன்று அம்மா மீது இருக்கும் கோபத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்,
அப்படி அடுக்குவதை அநேகமாக நீங்கள் நீக்கி விடப் போகிறீர்கள் அல்லது பிரசுரிக்காமலே விட போகிறீர்கள் என்பது தெளிவான பின்பு..
நீங்கள் உங்களை பற்றி குரிப்புட்டுள்ளபடி நேர்மை என்பது வார்த்தைகளில் மட்டும் உள்ளது, பதிவுகளில் காணப் படவில்லை... அல்லது அம்மா மீது இருக்கும் பாசம் கண்ணை மறைக்கிறது என்று எடுத்துக் கொள்கிறேன்...
உங்கள் குடும்பத்தில் யாராவது ஒருவர் அரசு ஊழியராக சென்ற அ.தி.மு.க ஆட்சியில் அவதிப் பட்டிருந்தால் உங்களுக்கு கஷ்டம் புரியும்... போர் நடக்கும் பொழுது மக்கள் இறக்க தான் செய்வார்கள் என்ற பொன்மொழியை ஈழத் தமிழனான நீங்கள் வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு மறந்து போயிருக்கலாம்.. ஆனால் தமிழனின் முதுகில் குத்திய எந்த அரசியல் வாதியையும் மன்னிக்கும் மன நிலையில் பல பதிவர்கள் இல்லை என்பது தான் உங்களுக்கான சுருக்கமான பதில்...
jeevansure@gmail.com
I am really wondering about peoples memory power, what exactly jayalalitha has achieved other than riding MGR influence and peoples foolishness. Has she ever taken part in any of the dravidian movement or
பதிலளிநீக்குactivities ever gone to jail or ever struggled for any cause. She was always against tamils (end of the day a kannada papathi as per her own words) she is the one who gained the maximum because of rajiv's death an d did put the blame on dmk and became CM. She being simple remember sudhakaran marriage and now who is cheating the court and getting whipped from the court? She doesnt have any qualities to become CM MGR himself kept her out of the party due her betrayal(she wrote a letter to PM stating that MGR is not fit to rule due to ill health. Tell me one improvement which she has ever done full of humbug and shit she is. I dont support any party but people should know what really she is
நீங்கள் சொன்னது மிகவும் சரி நண்பரே.. ஜெயா வை திட்டுபவர்கள் திட்டட்டும். அது அவர்கள் வேலை. நாம் நடுநிலையோடு இருப்போம்.. நல்ல பதிவு...
பதிலளிநீக்கு