ஞாயிறு, பிப்ரவரி 12, 2012

வலி தந்த 2012 ம்.. ஃபிரான்ஸில் ஒரு பதிவர் சந்திப்பும்.

வலி தந்த 2012 ...
வாழ்க்கையில் இந்த 2012  தொடக்கமே மறக்கமுடியாமல் ஆகிவிட்டது. இந்த மரண அடிகளுக்கு பின்னும் நானே எழுந்து நிற்பது எனக்கே ஆச்சரியம்தான். எப்போதுமே எனக்கு காதல்மேல் நம்பிக்கை இருந்தது இல்லை! அப்போ ஏண்டா காதலிச்சே? என்று நீங்கள் கேக்கலாம். ஹும்.. கரெக்ட்டான கேள்விதான். என்ன பண்ண... மூளையின் பேச்சை விட  பல நேரங்களில் நம் ஹர்மோன்களின் பேச்சைத்தானே கேட்கிறோம் :(

எப்போதும் எல்லோருடைய நிஜ முகங்களும் நமக்கு தெரிந்து விடுவதில்லை. ஏதாவதொரு சந்தர்ப்பங்களின் போதுதான் தங்கள் நிஜ முகம் காட்டுகிறார்கள். நான் நம்பி அன்பை கொட்டியவர்களின் இப்படியான கோர முகங்கள் காணக்கிடைக்கும் போது அதிர்ச்சி ஏற்ப்பட்டாலும், நான் அதிகம்  வருந்தியது இல்லை. காரணம் இப்போதாவது கண்டு+தெளிந்து கொண்டேனே என்ற சிறு சந்தோஷம்தான்.

அதற்காக எங்கேயும் என்னை தவறே செய்யாதவன் என்று சொல்ல வரவில்லை. என் சம்மந்தமாக என்ன தவறு நடந்தாலும் அந்த தவறை முதலில் என்னில் இருந்துதான் தேடுவேன்... தவறே செய்யாமல் இருக்க நான் ஒன்றும் கடவுள் இல்லையே...! என் பக்கமும் தவறு இருக்குத்தான் ஆனால் அதை ஒட்டிய என் பக்க நியாயங்களும் என்னிடம் இருக்கு. என்னை பொறுத்தவரை ஒரு பிரச்சனை என்று வரும் போது அதை தீர்க்க நிறைய வழிகள் உண்டு. ஆனால் காட்டுமிராண்டித்தனமான பேச்சுக்கள் என்றும் அதை தீர்த்துவிடாது. இந்த பிரச்சனையில் நான் முடிந்தவரை அமைதியாகவே இருந்தேன்; ஆனால் எதிர்ப்பக்கம் நிறைய பேசிவிட்டார்கள். தங்கள் பேச்சின் ஊடே தங்கள் வக்கிர குணத்தையும்  காட்டி என் அடிமனசில் இருந்து சுத்தமாக துடைத்து எறியப்பட்டு விட்டார்கள்.

முடிந்தது முடிந்தாகவே இருக்கட்டும். நான் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதை எப்போதும் மறு பரிசீலனைக்கு எடுப்பது இல்லை. இது புரியவேண்டியவங்களுக்கு புரிந்தால் சரி.


ஒரு பதிவர் சந்திப்பு...

எனக்கு தமிழ் நண்பர்கள் அதிகம் இருந்தது இல்லை. பதிவுலகம் வந்த பின்புதான் அது அதிகம் உருவாகியது. உண்மையில் அவை சந்தோஷ தருணங்கள். பதிவுலகில் பலரை நண்பர்கள் என்று சொல்லிவிடுவேன், சிலரை பெஸ்ட் நண்பர்கள் என்று சொல்லிவிடுவேன். ஆனால் பதிவர் காட்டான் மாமாவை இவை எதற்குள்ளும் என்னால் அடக்கிவிடமுடியாது. அவர் எனக்கு எல்லாவற்றுக்கும் மேல். ஆனாலும் ஒரே நாட்டில் இருந்தாலும் அவரும் நானும் இதுவரை நேரில் சந்தித்துகொண்டதே இல்லை. (எந்த பதிவரையும் நான் இதுவரை நேரில் சந்தித்தது இல்லை).

கடந்த 6 ,7  மாதங்களாக அவரை நேரில் வந்து பார்ப்பதாக சொல்லி சொல்லி ஏமாற்றிக்கொண்டே இருந்தேன். கடைசி வரை போகவேயில்லை. இதற்க்கு ஸ்பெசலாக எந்த காரணமும் இல்லை. என்னுடைய அதித கூச்ச சுபாவமே காரணம்:(  இறுதியில் இதற்கு மேலும் சாக்கு போக்கு சொல்ல முடியாது என்ற நிலையில் கடந்த வாரம் அவர் வீட்டுக்கு போயிருந்தேன்.

அதைவிட.. பதிவுலகில் என்னை சரியாக புரிந்து வைத்திருப்பவரும் என்னை பற்றி முழுதும் தெரிந்தவர் என்றால் அது பதிவர் கந்தசாமிதான். இருவருக்குள்ளும் இருக்கும் கருத்து ஒற்றுமைகள் ஒரே சிந்தனைகள் எனக்கே இன்ப ஆச்சரியம். அதைவிட மிக முக்கியமான விடயம் பலர் கந்தசாமியை பெரியவர்+தாத்தா என்று நினைக்கிறார்கள். ஹா ஹா... அவர் 23  வயதே நிரம்பிய என் வயதை ஒத்தவர். எல்லாவற்றுக்கும் மேல் அவர் எனக்கு ரெம்ப ரெம்ப பெஸ்ட்.அவரும் வருவார் என்றதும் இரட்டிப்பு சந்தோஷத்துடன் கிளம்பி போயிருந்தேன். அங்கே பதிவர் "தனிமரம்" நேசன் நிற்க.. பதிவர் "நிகழ்வுகள்" கந்தசாமி வர..... சந்திப்பு செம களை கட்டியது.

எல்லோரும் என் மேல் காட்டிய அதித அன்பு வாழ்க்கையில் மறக்க முடியாது. கிட்டத்தட்ட தூக்கி வைத்து கொண்டாடினார்கள். ஃபிரான்ஸின் பனிக்கொட்டலுக்கு நடுவில் பின்னேரம் 3 :30  க்கு காட்டான் மாமா வீட்டுக்கு போய் சேர்ந்த நான் அவர்கள் வீட்டில் இருந்து வெளியேற இரவு 11 :20  ஆகிவிட்டது. பனி+குளிர் என்று சொல்லி இரவு காட்டான் மாமா தன் காரில் என் வீட்டு வாசலில் கொண்டுவந்து இறக்கிவிட்டுபோனார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...