ஊரில் பழைய காலத்தில் அரசாங்கத்தில் ஏதாவது ஒரு வேலையில் இருப்பவர்களுக்குத்தான் என் பெண்ணைக்கட்டிக்கொடுப்பேன்
என்று பெண்ணைப்பெற்ற பெற்றோர் வீம்பாக இருப்பார்கள் என்று
என் தாத்தா பாட்டி பேசும் போது கேட்டு இருக்கேன். ஆனால்
இப்போது அந்த நிலை கொஞ்சம் வலுவிழந்து யாராவது ஒரு
வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு தங்கள் பெண்பிள்ளைகளை
கட்டி வைக்க ஊரில் இருப்பவர்கள் நாயாய் பேயாய் அலைவது
மிக வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கு.
ஊரில் இருந்து யாராவது பெண் கேட்டு வந்துவிட்டால் மட்டும்
அவன் குணம், குடும்பம், படிப்பு, வேலை, சம்பளம், என தெளிவாக விசாரிக்கும் இந்த அறிவு ஜீவிகள் அதே ஒரு வெளிநாட்டு
மாப்பிள்ளை கிடைத்துவிட்டால் எந்த விசாரிப்புக்களும் இன்றி
முன்பின் தெரியாதவனுக்கு வெளிநாட்டில் இருக்கிறான் என்ற ஒரே காரணத்துக்காக பொத்தி பொத்தி வளர்த்த அந்த அப்பாவிகளை
அவனுடன் அனுப்பிவைப்பது எந்த வகையில் நியாயம்..!
வெளிநாட்டில் இருக்கிறான் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக
கட்டிக்கொடுத்துவிட்டு அவர்கள் அங்கே நிம்மதியாக! இருந்து விடுகிறார்கள் ஆனால் இந்த அப்பாவிகள் இங்கே படும் பாட்டை
இவர்கள் அறிகிறார்களா..? "பாவம் இவர்கள் அறிவதில்லை" என்ற
ஒரே வசனத்தில் இவர்களை தப்பவிட முடியாது, முன்பு ஒரு
காலத்தில் வேண்டுமானால் இங்கு நடப்பது இவர்களுக்கு
தெரியாமல் இருக்கலாம் ஆனால் இப்போது நிலமை
அப்படி இல்லை எல்லாம் தெரிந்து இருந்தும் இவர்கள்
வெளிநாட்டு மோகம் எல்லாத்தையும் மறைத்து விடுகிறது. இந்த வெளிநாட்டு மோகத்துக்கு எங்கள் குடும்பத்தில் உள்ள
ஒருவருடைய வாழ்க்கையையும் பலி கொடுத்துள்ளோம்.
என் அத்தை. நன்றாக படித்தவர் அழகானவர், எனக்கு தெரிந்தே ஊரில் இவரை நிறைய பேர் பெண் கேட்டு வந்தார்கள் ஆனால் என் தாத்தா கட்டிக்கொடுத்தால் வெளிநாட்டு மாப்பிள்ளைக்குத்தான்
கட்டிக்கொடுப்பேன் என்று பிடிவாதமாய் நின்று புரோக்கர் மூலம்
வந்த ஒரு நோர்வை மாப்பிள்ளையை தெரிவுசெய்து,
அத்தை தாத்தாவுக்கு கடைசி பெண் ஒரே பெண் என்பதால்
அதிக சீதனம் கொடுத்து இந்தியா கூட்டிச்சென்று மிக பிரமாண்டமாக திருமணம் செய்துவைத்து அவனுடன் நோர்வை அனுப்பிவைத்தார். நோர்வை சென்ற சில மாதங்களிலேயே அவன் வண்டவாளங்கள் ஒவ்வொன்றாக வெளிவர தொடங்கியது, எல்லாவற்றுக்கும் உச்சமாக அவனுக்கு நோர்வையில் ஒரு நோர்வைக்காரியுடன் திருமணமாகி (எழுத்தில் இல்லாமல்) இரண்டு குழந்தைகளும் இருப்பது தெரிய வந்தது. நியாம் கேட்ட அத்தைக்கு கிடைத்தது அடி உதைதான். யாருடைய ஆதரவும் இன்றி அவனுடன் போராடி விவகாரத்து வேண்டி அத்தை வெளியே வந்த போது அவருடன் வந்த ஒரே சொத்து அவன் கொடுத்த பெண் குழந்தைதான். இனி என் வாழ்க்கையில் திருமணம் என்ற
பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லி அந்த பெண் குழந்தையுடன் தனியே வாழ்ந்து வருகிறார் அத்தை. அத்தையின் இந்த நிலைக்கு தான்தான் காரணம் என்று நினைத்து வேதனைபட்டே தாத்தாவும்
இறந்து விட்டார். இதில் அசிங்கம் என்ன வென்றால் எங்கள் தாத்தாவை ஏமாத்திய அந்த அயோக்கியனின் செய்கைகள்
எல்லாத்துக்கு அவன் தாயும் சப்போட் என்பதுதான்.
இப்போது அவனுக்கு மீண்டும் திருமணம் பேசுபடுதாம் பாவம் எந்த அப்பாவி பெண்ணின் வாழ்க்கை சீரழியப்படப்போகுதோ..
ஊரில் இருப்பவர்களின் வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தை இங்குள்ளவர்களும் அழகாக பயன் படுத்திக்கொள்கிறார்கள். அங்கிருப்பவர்களிடம் ஏதோ சொர்க்கத்துக்கே அதிபதிபோல் காட்டிக்கொள்ளும் இவர்களின் உண்மை நிலை இங்கிருக்கும் எங்களுக்குத்தானே வெளிச்சம். இப்படியான இவர்களின் பந்தாவைக்கூட ஓரளவு சகித்துக்கொள்ளலாம் ஆனால் ஊரில் தங்களுக்கு பெண் பாப்பவர்களிடம் பொண்ணு த்ரிஷா மாதிரி மெல்லிசா இருக்கனும்
தமணா கலரில் இருக்கனும் என்று சொல்லுவது இருக்கே..
கடவுளே, இந்த ஆணழகன்கள் தங்கள் முகத்தை கண்ணாடியில் பாப்பதே இல்லைப்போல் இவர்களைப்போலவே அந்த பெண்களும் எங்களுக்கு வரும் மாப்பிள்ளைமார் சூர்யா மாதிரியோ ஆர்யா மாதிரியோதான் இருக்கணும் என்றாள் இவர்களுக்கு எல்லாம் எப்படி கல்யாணம் ஆகிறதாம்! அண்மையில் கூட இப்படிப்பட்ட ஒரு வெளி நாட்டு மாப்பிள்ளையின் கூத்தைப்பார்த்து அழுவதா சிரிப்பதா என்றே எனக்கு தெரியாமல் போச்சு. அவர் என் அண்ணாவின் ப்ரண்ட் இங்கே தனியேதான் இருக்காரு அவரின் அப்பா செத்து மூன்றே மாதங்கள் ஆன நிலையில்
நானும் அண்ணாவும் அவர் வீட்டுக்கு போய் இருந்தோம். எங்களை வரவேற்று பேசிக்கொண்டு இருந்தவர் தான் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக சொன்னபோது அண்ணா பொண்ணு யாரு
எங்க இருக்கா எப்படி தெரியும் என்று விசாரித்த போதுதான் அந்த வெக்கம்கெட்ட செயலை கொஞ்சமும் கூச்சமும் இல்லாமல் அவர் சொன்னார். தன்னுடைய தந்தையின் இறந்தவீட்டை தான் வீடியோ எல்லாம் எடுத்து பெருசாக செய்ததாவும் அந்த வீடியோ கொப்பி தனக்கு அனுப்பட்டபோது அதில் ஒரு அழகான பொண்ணு ஒடியாடி வேலை செய்துகொண்டு இருந்ததாகவும், தன் தாயிடம் போன் பண்ணி அது யார் என்று கேட்ட போது அது பக்கத்துவீட்டு பொண்ணு என்று விவரம் சொன்னதும் அவளை தனக்கு புடித்து இருப்பதாக சொல்லி பொண்ணு கேட்க்க சொன்னாராம், தந்தை இறந்து சில வாரங்களே ஆனதால் இப்போது போய் பெண்கேட்டால் அவர்கள் தன்னை தப்பா நினைப்பார்கள் என்று அந்த தாய் மறுத்துவிட அதை இவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையாம் ஏனெனில் அந்த அழகான பெண்ணை அதர்குள் யாராவது கொத்திப்போய் விடுவார்களாம். பின் ஒரு வழியாகா தாயை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாராம். இப்போது எல்லாம் ஓக்கே ஆகி அந்த பெண்ணுடன் போனில் பேசுவதாகவும் அவர் சொன்ன போது என் எதிரே இருந்த அவரை நிமிர்ந்து பார்த்தேன். சத்தியமாக என் கண்ணுக்கு அவர் ஒரு மனிதப்பிறப்பாகவே தெரியவில்லை ஒரு அருவருக்கத்தக்க புளுவாகவே கண்ணுக்கு தெரிந்தார். தங்களுக்கு மாப்பிள்ளையாக வருபவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் சரி வெளிநாட்டில் இருந்தால் மட்டும் போதும் என் ஊரில் இருப்பவர்கள் நினைப்பதும், தங்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் ஒரு தகுதியே போதும் ஜஸ்வர்யாராயைக்கூட
பொண்ணு கேட்கலாம் என இங்கு இருப்பவர்கள் நினைப்பதும் கொடுமையின் உச்சம். சிந்திப்பார்களா இவர்கள்..?
வெளிநாட்டில் இருந்து கொண்டு இப்படி ஒரு பதிவு எழுதியதற்காக உங்களுக்கு ஒரு சபாஷ்...
பதிலளிநீக்குஊரில் இருந்து யாராவது பெண் கேட்டு வந்துவிட்டால் மட்டும்
பதிலளிநீக்குஅவன் குணம், குடும்பம், படிப்பு, வேலை, சம்பளம், என தெளிவாக விசாரிக்கும் இந்த அறிவு ஜீவிகள் அதே ஒரு வெளிநாட்டு
மாப்பிள்ளை கிடைத்துவிட்டால் எந்த விசாரிப்புக்களும் இன்றி
முன்பின் தெரியாதவனுக்கு வெளிநாட்டில் இருக்கிறான் என்ற ஒரே காரணத்துக்காக பொத்தி பொத்தி வளர்த்த அந்த அப்பாவிகளை
அவனுடன் அனுப்பிவைப்பது எந்த வகையில் நியாயம்..!// ம்ம் இது நான் பல இடங்களில் கண்டுள்ளேன். வெளிநாடு என்றாலே அதற்கடுத்த விடயம் தேவையில்லை. எதோ சொர்க்கம் என்ற நினைப்பு, அங்கிருப்பன் இந்திரன் ))
நாட்டு சூழ்நிலையோ இல்லை வறுமையயோ காரணமாக சொன்னாலும், எவனோ ஒரு தெரியாதவனுக்கு பொத்தி பொத்தி வளர்த்த பெண்ணை கட்டி கொடுப்பது என்பது பிற்காலத்தில் பெற்றோர் நெருப்பை மடியில் கட்டிக்கொண்டு வாழ்வதற்கு வழிவகுக்கும்.. இந்த நிலை மாறுமா ?
பதிலளிநீக்குஇவர்களா...? வெளிநாட்டு மாப்பிள்ளை.//
பதிலளிநீக்குவணக்கம் மச்சி, யாரைப் பார்த்து, என்னா கேள்வி கேட்கிறீங்க..
பார்த்தய்யா...எங்காச்சும் உங்களைக் கண்டால் போட்டுத் தள்ளிடுவாங்க.
ஒரு
பதிலளிநீக்குவெளிநாட்டு மாப்பிள்ளைக்கு தங்கள் பெண்பிள்ளைகளை
கட்டி வைக்க ஊரில் இருப்பவர்கள் நாயாய் பேயாய் அலைவது
மிக வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கு.//
அதானே மாப்ளே, ஊரிலை இருக்கிற எங்களை மாதிரி அழகான பையன்கள் அவர்களுக்குத் தெரியலைப் போல இருக்கே.
வெளி நாட்டு மாயையால், பல அப்பாவிப் பெண்களின் வாழ்க்கையினை எம் பெற்றோர்கள் சீரழிக்கிறார்கள். என்ன சொல்லத் துஸி, இக்கரை மாட்டிற்கு அக்கரை தானே பச்சை,.
பதிலளிநீக்குஎன்று தணியும் வெளிநாட்டு மாப்பிள்ளை மோகம்
பதிலளிநீக்குபெண் வீட்டுக்காரர்கள் இதை எல்லாம் உணர்வார்களா?
பதிலளிநீக்குதுஷ்யந்தன், சமூக அக்கறையில காலையில நாலு பத்துக்கு நித்திரை முழிச்சு பதிவு போட்டு..... ம்ம்ம்ம்......
பதிலளிநீக்குஊரில சிங்கள ஆமியின்ர கண்ணில பட்டு பெண்கள் வாழ்க்கை சீரழியிறத விட தமிழ் ஆண்களிடம் வாழ்க்கை தொலைந்து போனால் பரவாயில்லை என்று பெற்றவர்கள் நினைக்கிறார்களோ என்னவோ. எல்லாமே அனுபவப் பகிர்வு என்பதால் அதிகம் சொல்ல ஒன்றுமில்லை.
இது நிரூபனுக்கு... சந்தடி சாக்கில ரெண்டு பொய்யா... முதலாவது "அழகான", இரண்டாவது "பையன்" ..ம்ம்ம்.. நடத்துங்கோ... :))
மாப்பிள எங்க போனீங்க ஆளை கானோம் லீவு எல்லாம் சந்தோசமாய் அனுபவித்தீர்களா..? இது ஒரு முக்கியமான காலத்தின் கட்டாயமான பதிவு இதை நான் நகைச்சுவையாக சில இடங்களில் கூறி இருக்கிறேன் அன்மையில் நானே புதிதாக ஒரு ஜாதகம் செய்து அதில் எல்லா நன்மை செய்யும் கிரகங்களும் என்னிடம் ஒரே வீட்டில் இருந்து கும்மியடிப்பதாக சொன்னேன் ஒரு ஜஸ்வரியாவை பிடிப்பதற்காக..!!!?? நீயும் தனி மரமும் சேர்ந்து அதற்கு ஆப்பு வைக்கலாம் என்று நினைக்கிறீர்கள் இதெல்லாம் வேலைக்கு ஆகாது மாப்பிள... நீங்க எவ்வளவுதான் கத்தினாலும் அங்கு இருப்பவர்கள் திருந்துவார்களா மாப்பு..!!!? நல்ல காலம் நான் தப்பிச்சேன் இந்த பதிவு என்னுடைய 23ம் வயதில் வந்திருந்தால் ஆச்சி தலை கீழாக நின்றாலும் எனக்கு பொண்னு கிடச்சிருக்காது.. இப்ப நீ எப்பிடி எழுதினாலும் நான் கும்மியடிப்பேன்... நான் வெளிநாட்டு மாப்பிளையாகி 15 வருசமாச்சுடோய்...ஆச்சி.. ஆச்சி.. என்ர ஆச்சி.. இந்த துசியந்தன் ஒரு துரோகியாகிட்டான் எங்கட வெளி நாட்டில் இருக்கும் புது மாப்பிளைகளுக்கு...!!!!????
பதிலளிநீக்குகாட்டான் குழ போட்டான்.. பேந்து வாரன் மரத்தோட உன்ர படலைய இண்டைக்கு குழயாழ நிறப்பாம நான் ஓயமாட்டேன்டா மாப்பிள வைச்சுகிறேன்டா மாப்பிள உனக்கு ஆப்பு... ஏன் நான் முருகன மாதிரி இருக்கிறது உனக்கு விருப்பமில்லையா..?
நீ காட்டான கோவபடுத்தீட்ட இப்ப காட்டான் மரம் முறிக்க போறான் திரும்பி வாரேன்ய்யா...
என்றுதான் தீருமோ இந்த வெளி நாட்டு மோகம் ...
பதிலளிநீக்குஹிஹி டாஷ்போர்ட் பாக்காமலே பேஸ்புக்கில் கேட்டுவிட்டேனே!!
பதிலளிநீக்கு//எல்லாவற்றுக்கும் உச்சமாக அவனுக்கு நோர்வையில் ஒரு நோர்வைக்காரியுடன் திருமணமாகி (எழுத்தில் இல்லாமல்) இரண்டு குழந்தைகளும் இருப்பது தெரிய வந்தது. நியாம் கேட்ட அத்தைக்கு கிடைத்தது அடி உதைதான்./
பதிலளிநீக்குபெரும்பாலான கதை இப்பிடித்தான் போகுது பாஸ் இப்பெல்லாம்
//சத்தியமாக என் கண்ணுக்கு அவர் ஒரு மனிதப்பிறப்பாகவே தெரியவில்லை ஒரு அருவருக்கத்தக்க புளுவாகவே கண்ணுக்கு தெரிந்தார். /
பதிலளிநீக்குஅடச் சீ நாயே அடியுங்க பாஸ்!!
வணக்கம் பாஸ்
பதிலளிநீக்குநீண்ட நாளைக்கு அப்புறம்...
இருங்க படிச்சிட்டு வாறன்
ஃஃஃவெளிநாட்டு மாப்பிள்ளைக்கு தங்கள் பெண்பிள்ளைகளை
பதிலளிநீக்குகட்டி வைக்க ஊரில் இருப்பவர்கள் நாயாய் பேயாய் அலைவது
மிக வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கு.ஃஃஃஃ
பாஸ்..... அதிலயும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க வெளிநாட்டு மாப்பிள்ளையை நம்பி படுற அவஸ்தையை பார்த்த பின்பும் ”எல்லாரும் அப்பிடி இல்லை” என்று சொல்லிப்போட்டு, தங்களுக்கும் அதே பிரச்சினை வரும்போது ”அப்பவே சொன்னாங்க... கேட்டனா என்று புலம்புவது வேதனையிலும் விட வேடிக்கை...
ஃஃஊரில் இருந்து யாராவது பெண் கேட்டு வந்துவிட்டால் மட்டும்
பதிலளிநீக்குஅவன் குணம், குடும்பம், படிப்பு, வேலை, சம்பளம், என தெளிவாக விசாரிக்கும் இந்த அறிவு ஜீவிகள் அதே ஒரு வெளிநாட்டு
மாப்பிள்ளை கிடைத்துவிட்டால் எந்த விசாரிப்புக்களும் இன்றி
முன்பின் தெரியாதவனுக்கு வெளிநாட்டில் இருக்கிறான் என்ற ஒரே காரணத்துக்காக பொத்தி பொத்தி வளர்த்த அந்த அப்பாவிகளை
அவனுடன் அனுப்பிவைப்பது எந்த வகையில் நியாயம்..!ஃஃஃஃ
அப்பிடி கேளுங்கப்பு........
பட்டாலும் திருந்தமாட்டானுகள்
ஆமா... நீங்ககூட வெளிநாட்டு மாப்பிள்ளைதானே.... ஹி ஹி டவுட்டு.....
பதிலளிநீக்குஃஃஃஃநிரூபன் சொன்னது…
பதிலளிநீக்குஅதானே மாப்ளே, ஊரிலை இருக்கிற எங்களை மாதிரி அழகான பையன்கள் அவர்களுக்குத் தெரியலைப் போல இருக்கே.ஃஃஃ
என்ன நிரூபன்..... மனச்சாட்சி இல்லயா?... நமக்கு எல்லாம் ஏது அழகு? ஹி ஹி
இந்தநிலை எப்பொழுது மாறுமோ...
பதிலளிநீக்குஇந்த விஷயத்தில் மிகவும் உஷாராகத்தான் இருக்க வேண்டும்.
பதிலளிநீக்குவிழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்ல பதிவு.
பெண்களைப் போற்றி மதிக்காத ஆண்கள், உள்நாட்டிலும் கூட இருக்கிறார்கள்.
வெளிநாட்டில் உள்ள இதுபோன்றவர்களிடம் தெரியாமல் ஒரு பெண் மாட்டிக்கொண்டால் அவள் அங்கிருந்து தப்பி வருவதே மிகவும் கஷ்டமாகி விடும்
வணக்கம் துஸி எண்ண இப்படி ஒரு பார்வை உங்களிடமா? அதிகமாக எழுத கொஞ்சம் பிஸி முடிந்தால் பின்னால் வாரன் அவசர பயணம் ?
பதிலளிநீக்குஅறியாத வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு பெண் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.
பதிலளிநீக்கு//கந்தசாமி. கூறியது...
பதிலளிநீக்குவெளிநாட்டில் இருந்து கொண்டு இப்படி ஒரு பதிவு எழுதியதற்காக உங்களுக்கு ஒரு சபாஷ்...
//
வாங்க பாஸ் வாங்க,
நானும் வெளிநாட்டில் இருக்குறேன் என்பதற்காக
இங்குள்ளவர் செய்யும் அட்டகாசங்களை மறைக்க முடியுமா என்ன ??
நன்றி பாஸ்.
//கந்தசாமி. கூறியது...
பதிலளிநீக்குஊரில் இருந்து யாராவது பெண் கேட்டு வந்துவிட்டால் மட்டும்
அவன் குணம், குடும்பம், படிப்பு, வேலை, சம்பளம், என தெளிவாக விசாரிக்கும் இந்த அறிவு ஜீவிகள் அதே ஒரு வெளிநாட்டு
மாப்பிள்ளை கிடைத்துவிட்டால் எந்த விசாரிப்புக்களும் இன்றி
முன்பின் தெரியாதவனுக்கு வெளிநாட்டில் இருக்கிறான் என்ற ஒரே காரணத்துக்காக பொத்தி பொத்தி வளர்த்த அந்த அப்பாவிகளை
அவனுடன் அனுப்பிவைப்பது எந்த வகையில் நியாயம்..!// ம்ம் இது நான் பல இடங்களில் கண்டுள்ளேன். வெளிநாடு என்றாலே அதற்கடுத்த விடயம் தேவையில்லை. எதோ சொர்க்கம் என்ற நினைப்பு, அங்கிருப்பன் இந்திரன் ))//
உண்மைதான் பாஸ், அங்கிருப்பவர்கள் இங்கிருப்பவனை இந்திரனாக நினைத்தால் இங்கிருப்பவனும் அதற்க்கு ஏற்றால் போல் இந்திரன்! போல் நடிப்பதுதான்
கொடுமையின் உச்சம் :)
//கந்தசாமி. கூறியது...
பதிலளிநீக்குநாட்டு சூழ்நிலையோ இல்லை வறுமையயோ காரணமாக சொன்னாலும், எவனோ ஒரு தெரியாதவனுக்கு பொத்தி பொத்தி வளர்த்த பெண்ணை கட்டி கொடுப்பது என்பது பிற்காலத்தில் பெற்றோர் நெருப்பை மடியில் கட்டிக்கொண்டு வாழ்வதற்கு வழிவகுக்கும்.. இந்த நிலை மாறுமா ?
//
அழகான ஆழமான கருத்து பாஸ் உங்களுடையது,
அவர்கள் மர மண்டையில் எங்கே இது எல்லாம் ஏற போகுது
//நிரூபன் கூறியது...
பதிலளிநீக்குஇவர்களா...? வெளிநாட்டு மாப்பிள்ளை.//
வணக்கம் மச்சி, யாரைப் பார்த்து, என்னா கேள்வி கேட்கிறீங்க..
பார்த்தய்யா...எங்காச்சும் உங்களைக் கண்டால் போட்டுத் தள்ளிடுவாங்க.//
அவ்வ்...
அதான் பாஸ், பயமா இருக்கு,
இதில வேற நம்ம முன்னாள் வெளிநாட்டு மாப்பிள்ளை "காட்டான்" வேற நம்மல
பப்புளிக்கா மிரட்டிட்டாரு...... :(
//நிரூபன் கூறியது...
பதிலளிநீக்குஒரு
வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு தங்கள் பெண்பிள்ளைகளை
கட்டி வைக்க ஊரில் இருப்பவர்கள் நாயாய் பேயாய் அலைவது
மிக வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கு.//
அதானே மாப்ளே, ஊரிலை இருக்கிற எங்களை மாதிரி அழகான பையன்கள் அவர்களுக்குத் தெரியலைப் போல இருக்கே.//
ஹி ஹி ,
அதான பாஸ்,
உங்க இருக்கும் அழகு பசங்கள ( கவனிக்க- அழுக்கு பசங்க இல்ல lol )
விட்டுட்டு இங்கு இருக்கும் நெட்டைக்கும் சொட்டைக்கும்
எப்புடித்தான் பொண்ணு கொடுக்குறான்களோ???
பேசாமா நம்ம நிரு பாஸ் சொன்ன மாதிரி
ஸ்ரீலங்கா பொருட்களை மாதிரி பொண்ணுங்களையும் புறக்கனிச்சாங்க என்றா
உங்களுக்கு எல்லாம் ஜாலியா இருக்கும் இல்ல
ஹி ஹி
//நிரூபன் கூறியது...
பதிலளிநீக்குவெளி நாட்டு மாயையால், பல அப்பாவிப் பெண்களின் வாழ்க்கையினை எம் பெற்றோர்கள் சீரழிக்கிறார்கள். என்ன சொல்லத் துஸி, இக்கரை மாட்டிற்கு அக்கரை தானே பச்சை,.//
அதே அதே பாஸ்
இனியாவது திருந்துவார்களா இவர்கள்
இதுதான் என் ஆதங்கம்
//தமிழ் உதயம் கூறியது...
பதிலளிநீக்குஎன்று தணியும் வெளிநாட்டு மாப்பிள்ளை மோகம்
//
அவர்கள் எல்லாம் பகட்டு வாழ்க்கை ஆசைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் போது
என்று நினைக்குறேன் பாஸ் :)
//பாலா கூறியது...
பதிலளிநீக்குபெண் வீட்டுக்காரர்கள் இதை எல்லாம் உணர்வார்களா?
//
உணர்ந்தாலும் அவர்கள் ஆசை கண்ணை மறைத்து விடுகிறது பாஸ்
//Rathi கூறியது...
பதிலளிநீக்குதுஷ்யந்தன், சமூக அக்கறையில காலையில நாலு பத்துக்கு நித்திரை முழிச்சு பதிவு போட்டு..... ம்ம்ம்ம்......
ஊரில சிங்கள ஆமியின்ர கண்ணில பட்டு பெண்கள் வாழ்க்கை சீரழியிறத விட தமிழ் ஆண்களிடம் வாழ்க்கை தொலைந்து போனால் பரவாயில்லை என்று பெற்றவர்கள் நினைக்கிறார்களோ என்னவோ. எல்லாமே அனுபவப் பகிர்வு என்பதால் அதிகம் சொல்ல ஒன்றுமில்லை.
இது நிரூபனுக்கு... சந்தடி சாக்கில ரெண்டு பொய்யா... முதலாவது "அழகான", இரண்டாவது "பையன்" ..ம்ம்ம்.. நடத்துங்கோ... :))
//
நன்றி
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்,
நீங்கள் சொல்வதும் ஒரு வகையில் உண்மையாக இருக்குமோ ?
எது எப்படியோ வெளிநாட்டில் இருந்து குறிப்பாக புரோக்கர் மூலம்
வரும் வரங்களை இவர்கள் ஆராய்ந்து தேர்ந்து எடுக்கலாம் என்பது என்
கருத்து.
அப்புறம் நிருபன் பாஸிடம் நீங்க கேட்ட கேள்விக்கு
நான் பதில் சொல்வேன் ஆனா வேண்டாம்
அப்புறம் அவரு கொலை மிரட்டல் விடுவாரு
அவ்வவ், அவரு சொன்னத கேட்டு நானும் கூட தான் ஒரு நிமிஷம்
அப்படியே ஷாக் ஆகிட்டேன் :)
//காட்டான் கூறியது...
பதிலளிநீக்குமாப்பிள எங்க போனீங்க ஆளை கானோம் லீவு எல்லாம் சந்தோசமாய் அனுபவித்தீர்களா..? இது ஒரு முக்கியமான காலத்தின் கட்டாயமான பதிவு இதை நான் நகைச்சுவையாக சில இடங்களில் கூறி இருக்கிறேன் அன்மையில் நானே புதிதாக ஒரு ஜாதகம் செய்து அதில் எல்லா நன்மை செய்யும் கிரகங்களும் என்னிடம் ஒரே வீட்டில் இருந்து கும்மியடிப்பதாக சொன்னேன் ஒரு ஜஸ்வரியாவை பிடிப்பதற்காக..!!!?? நீயும் தனி மரமும் சேர்ந்து அதற்கு ஆப்பு வைக்கலாம் என்று நினைக்கிறீர்கள் இதெல்லாம் வேலைக்கு ஆகாது மாப்பிள... நீங்க எவ்வளவுதான் கத்தினாலும் அங்கு இருப்பவர்கள் திருந்துவார்களா மாப்பு..!!!? நல்ல காலம் நான் தப்பிச்சேன் இந்த பதிவு என்னுடைய 23ம் வயதில் வந்திருந்தால் ஆச்சி தலை கீழாக நின்றாலும் எனக்கு பொண்னு கிடச்சிருக்காது.. இப்ப நீ எப்பிடி எழுதினாலும் நான் கும்மியடிப்பேன்... நான் வெளிநாட்டு மாப்பிளையாகி 15 வருசமாச்சுடோய்...ஆச்சி.. ஆச்சி.. என்ர ஆச்சி.. இந்த துசியந்தன் ஒரு துரோகியாகிட்டான் எங்கட வெளி நாட்டில் இருக்கும் புது மாப்பிளைகளுக்கு...!!!!????
காட்டான் குழ போட்டான்.. பேந்து வாரன் மரத்தோட உன்ர படலைய இண்டைக்கு குழயாழ நிறப்பாம நான் ஓயமாட்டேன்டா மாப்பிள வைச்சுகிறேன்டா மாப்பிள உனக்கு ஆப்பு... ஏன் நான் முருகன மாதிரி இருக்கிறது உனக்கு விருப்பமில்லையா..?
நீ காட்டான கோவபடுத்தீட்ட இப்ப காட்டான் மரம் முறிக்க போறான் திரும்பி வாரேன்ய்யா...
//
அவ்வவ்
பாஸ் இப்புடி எல்லாம்
பப்புளிக்கா மிரட்டப்படாது :(
அப்புறம் நான் நம்மட நிருபன் அண்ணாட்ட சொல்ல வேண்டி வரும்
ஆமா சொல்லிட்டேன்
//!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
பதிலளிநீக்குஎன்றுதான் தீருமோ இந்த வெளி நாட்டு மோகம் ...//
அவர்களின் ஆசைகள் அடங்கும் போது என்று நினைக்குறேன் பாஸ்
( அது எப்போ அடங்குறதாம்)
//மைந்தன் சிவா கூறியது...
பதிலளிநீக்குஹிஹி டாஷ்போர்ட் பாக்காமலே பேஸ்புக்கில் கேட்டுவிட்டேனே!!
//
நீங்க யாரு பாஸ்
சுனாமிலேயே சும்மிங் அடிக்கிற ஆள் இல்லையா lol
// மைந்தன் சிவா கூறியது...
பதிலளிநீக்கு//எல்லாவற்றுக்கும் உச்சமாக அவனுக்கு நோர்வையில் ஒரு நோர்வைக்காரியுடன் திருமணமாகி (எழுத்தில் இல்லாமல்) இரண்டு குழந்தைகளும் இருப்பது தெரிய வந்தது. நியாம் கேட்ட அத்தைக்கு கிடைத்தது அடி உதைதான்./
பெரும்பாலான கதை இப்பிடித்தான் போகுது பாஸ் இப்பெல்லாம்//
நிஜம் பாஸ்
ஆனாலும் அடிவாங்கினாலும் திருந்துவேனா என்று அடம்புடித்தால்
என்ன செய்வது ???
//மைந்தன் சிவா கூறியது...
பதிலளிநீக்கு//சத்தியமாக என் கண்ணுக்கு அவர் ஒரு மனிதப்பிறப்பாகவே தெரியவில்லை ஒரு அருவருக்கத்தக்க புளுவாகவே கண்ணுக்கு தெரிந்தார். /
அடச் சீ நாயே அடியுங்க பாஸ்!!
//
உண்மை பாஸ்,
அடிக்கணும் போல கை துரு துரு என்று இருந்துச்சு பாஸ்
அதை செய்யாமல் தடுத்தது கூட வந்த என் அண்ணா மேல் இருந்த
மரியாதையும் அந்த மிருக பிறப்பின் வயசும் தான்,
//மதுரன் கூறியது...
பதிலளிநீக்குவணக்கம் பாஸ்
நீண்ட நாளைக்கு அப்புறம்...
இருங்க படிச்சிட்டு வாறன்
//
நெசம்தான் பாஸ்,
ரெம்ப பிஸி பாஸ்
//மதுரன் கூறியது...
பதிலளிநீக்குஃஃஃவெளிநாட்டு மாப்பிள்ளைக்கு தங்கள் பெண்பிள்ளைகளை
கட்டி வைக்க ஊரில் இருப்பவர்கள் நாயாய் பேயாய் அலைவது
மிக வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கு.ஃஃஃஃ
பாஸ்..... அதிலயும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க வெளிநாட்டு மாப்பிள்ளையை நம்பி படுற அவஸ்தையை பார்த்த பின்பும் ”எல்லாரும் அப்பிடி இல்லை” என்று சொல்லிப்போட்டு, தங்களுக்கும் அதே பிரச்சினை வரும்போது ”அப்பவே சொன்னாங்க... கேட்டனா என்று புலம்புவது வேதனையிலும் விட வேடிக்கை...
//
அடுப்புக்குள் கையை வச்சுத்தான் சூடு பாப்பேன் என்று அலையும் ஜென்மங்கள் இவர்கள் பாஸ்
திருந்தவே மாட்டார்கள்
//மதுரன் கூறியது...
பதிலளிநீக்குஃஃஊரில் இருந்து யாராவது பெண் கேட்டு வந்துவிட்டால் மட்டும்
அவன் குணம், குடும்பம், படிப்பு, வேலை, சம்பளம், என தெளிவாக விசாரிக்கும் இந்த அறிவு ஜீவிகள் அதே ஒரு வெளிநாட்டு
மாப்பிள்ளை கிடைத்துவிட்டால் எந்த விசாரிப்புக்களும் இன்றி
முன்பின் தெரியாதவனுக்கு வெளிநாட்டில் இருக்கிறான் என்ற ஒரே காரணத்துக்காக பொத்தி பொத்தி வளர்த்த அந்த அப்பாவிகளை
அவனுடன் அனுப்பிவைப்பது எந்த வகையில் நியாயம்..!ஃஃஃஃ
அப்பிடி கேளுங்கப்பு........
பட்டாலும் திருந்தமாட்டானுகள்
//
அதே அதே பாஸ்
//மதுரன் கூறியது...
பதிலளிநீக்குஆமா... நீங்ககூட வெளிநாட்டு மாப்பிள்ளைதானே.... ஹி ஹி டவுட்டு.....//
நான் வெளிநாட்டில் இருப்பதால்தான், வீட்டாரை ஊரில் எனக்கு பொண்ணு பாக்க சொல்லாமல்
நானே என்னை பற்றி எல்லாம் தெரிந்த பெண்ணை நான் காதலித்து
கரம் புடிக்க போவதின் ரகசியம் இதுதான் பாஸ்
//மதுரன் கூறியது...
பதிலளிநீக்குஃஃஃஃநிரூபன் சொன்னது…
அதானே மாப்ளே, ஊரிலை இருக்கிற எங்களை மாதிரி அழகான பையன்கள் அவர்களுக்குத் தெரியலைப் போல இருக்கே.ஃஃஃ
என்ன நிரூபன்..... மனச்சாட்சி இல்லயா?... நமக்கு எல்லாம் ஏது அழகு? ஹி ஹி
//
வலைப்பக்க அழகன்கள் என்று உங்கள் இருவரையும்தான்
குறிப்புடுகிறார்கள், நீங்கள் என்ன வென்றால் இப்படி சொல்லுகிறீர்கள்
என்ன கொடுமை மது
ஓஹோ இதுதான் நிறைகுடம் தளும்பாது என்று சொன்னார்களோ????
//ஆகுலன் கூறியது...
பதிலளிநீக்குஇந்தநிலை எப்பொழுது மாறுமோ...
//
விரைவில் மாற வேண்டும் என்பதே என் அவா பாஸ்
//வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...
பதிலளிநீக்குஇந்த விஷயத்தில் மிகவும் உஷாராகத்தான் இருக்க வேண்டும்.
விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்ல பதிவு.
பெண்களைப் போற்றி மதிக்காத ஆண்கள், உள்நாட்டிலும் கூட இருக்கிறார்கள்.
வெளிநாட்டில் உள்ள இதுபோன்றவர்களிடம் தெரியாமல் ஒரு பெண் மாட்டிக்கொண்டால் அவள் அங்கிருந்து தப்பி வருவதே மிகவும் கஷ்டமாகி விடும்///
ரெம்ப நன்றி அய்யா,
உண்மைதான் ஊரில் இப்படிப்பட்ட கொடுமைகளில் சிக்கும் பெண்கள்
இலகுவாக தப்பி விடுவார்கள், ஆனால் அதே வெளிநாட்டில் நடக்கும் போது அவர்கள் நிலை அந்தோ பரிதாபம் தான்,
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு விசாரிக்காமல் பெண் கொடுக்கும் பெற்றோர் இனியாவது யோசிக்க வேண்டும்.
//Nesan கூறியது...
பதிலளிநீக்குவணக்கம் துஸி எண்ண இப்படி ஒரு பார்வை உங்களிடமா? அதிகமாக எழுத கொஞ்சம் பிஸி முடிந்தால் பின்னால் வாரன் அவசர பயணம் ?
//
ஏன் பாஸ் இப்படி சொல்லுறீங்க???
ஒக்கே பாஸ் ஆறுதலா வாங்க.
//செங்கோவி கூறியது...
பதிலளிநீக்குஅறியாத வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு பெண் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.
//
நன்றி பாஸ்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
நீங்கள் சொல்லியது நிதர்சனம் பாஸ்
முடிவு பெற்றோர் கையில்
பயனுள்ள தரமான பதிவு
பதிலளிநீக்குஇப்போதெல்லாம் வெளி நாட்டு மாப்பிளைகள்
குட்டு வெளிப்பட வெளிப்பட
கொஞ்சம் யோசிக்கவும் அதிகம் விசாரிக்கவும் செய்து தான்
பெண் கொடுக்கிறார்கள் என்றாலும்
விசாரிப்பதில் ஏமாந்துபோய் பின் அவதிப்படுபவர்கள்
பட்டியல் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது
சமூக அக்கறையுடன் கூடிய தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
//"கற்றது தமிழ்" துஷ்யந்தன் சொன்னது…
பதிலளிநீக்குவலைப்பக்க அழகன்கள் என்று உங்கள் இருவரையும்தான்
குறிப்புடுகிறார்கள், நீங்கள் என்ன வென்றால் இப்படி சொல்லுகிறீர்கள்
என்ன கொடுமை மது
ஓஹோ இதுதான் நிறைகுடம் தளும்பாது என்று சொன்னார்களோ????//
க.க.க.போ
நான் கொஞ்சம் தன்னடக்கமானவன் பாஸ்.. அதுதான் அப்படி ஹி ஹி
நெத்தி அடி மாப்பு
பதிலளிநீக்குவிழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்ல பதிவு...பகிர்வுக்கும் நன்றி நண்பரே...
பதிலளிநீக்குநீண்ட நாள் காக்க வைத்தாலும் அருமையான ஒரு பதிவுடன் வந்ததற்கு வாழ்த்துக்கள்.. நாங்கள் இங்கு நடக்கும் இப்படியான சம்பவங்களை எப்படி கத்தினாலும் அங்கு இருப்பவர்களுக்கு அது செவிடன் காதில் ஊதிய சங்கே.. நானும் உதைப்பற்றி எழுத முயற்சித்தேன்..
பதிலளிநீக்குஅதை நான் எழுதும் விதம் வேறு மாதிரியாக போய்விடம் சாத்தியமே அதிகம்..!!? வெளிநாட்டு மாப்பிள்ளைன்னு சொல்லிக்கொண்டு வருபவர்களிடம் அவதானமாக இருக்க வேண்டியது அவசியமே..!!?
அதற்காக எல்லோரும் அப்படியில்லை காட்டானைப்போல் செம்பு நெளிபடும் மாப்பிளைகளும் இங்கு இருக்கிறார்கள் அவர்களைப்பற்றியும் நீங்கள் எழுதலாமே..!?
காட்டான் குழ போட்டான்..
தம்பி ஆகுலன் நீங்க எதிர்கால வெளிநாட்டு மாப்பிள.. இந்த பகுதியி கும்மியடிக்கும்போது கவனமாய் அடியுங்கோ...!?
பதிலளிநீக்குஅது சரி மாப்பிள யார் அந்த தாத்தா உங்கள் பிளாக்கின் முகப்பில் இருக்கிறார்..? ஒரு முறை விஜயகாந்தும் அவரின் போட்டோவிற்கு கற்பூர தீபம் காட்டி படையல் போட்டதை பார்தேன்.. அதன் பிறகுதான் அவருக்கு சட்ட மன்ற எதிர் கட்சி தலைவராக வரும் வாய்ப்பு வந்ததாக கூறுகிறார்கள்.. நீயும் அந்த படத்தை எனக்கு தந்தால் அதற்கு நானும் சூடமேற்றி படையல் போட்டு வெளிநாட்டு மாப்பிளைகளுக்கு நல்ல புத்திய கொடுன்னு வேண்டிக்கிறேன்...!!!!!!!!!!!!!!!!!!
விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்ல பதிவு...பகிர்வுக்கும் நன்றி
பதிலளிநீக்குu should been write this 10 years before, ippellam yarum velinattu mappillaikku ponnu kedakiratu rombba seramam
பதிலளிநீக்குதுஷி...ஆரம்ப காலங்களை விட இப்போ ஊரில் உள்ளவர்கள் உஷாராகவே இருப்பதாக எனக்குப் படுகிறது.இதைமாதிரி நிறையச் சம்பவங்கள் கதைகதையா இருக்கு !
பதிலளிநீக்குஉள் நாட்டு மாப்பிள்ளைகள், பெண் கிடைக்காம திண்டாடுவதற்க்கு இதுதான் காரணமோ?
பதிலளிநீக்குநான் என்னமோ, இந்த அரசாங்கங்களின் புள்ளிவிவரங்கள் சொல்ற மாதிரி ஆண்-பெண் விகிதாச்சாரம் கொறைஞ்சி போய்டிச்சோ னு நெனச்சிட்டேன்.
துஷி.. உள் நாட்டு மாப்பிள்ளைகளின் சார்பா தங்களின் வக்காலதிற்கு நன்றி..
பெற்றோர்களை நோக்கி தங்களின் கேள்விகள் நியாயமானதே..
பி.கு :
வெளிநாட்டு மாப்பிள்ளைகள் எல்லாரும் அயோகியர்க்களுமில்லை, உள் ஊர் மாப்பிள்ளைகள் எல்லாரும் யோகியர்க்களுமில்லை.. எல்லாம் தனிநபர் சம்பந்தப்பட்டது.
Athu enga ellarum mappillaiya pathiyea solringa en ponnunga romba pavama ? ampilaingakuda pavamthaiya oru ponna kattikittu nan padura padu irrukea aiyyooo aiyyooooooo ithanikkum nan varathatchinayea ethumea vangala ana ippa anupavikkiren ,eppavumea ellaroum ematharathilla , en yaravathu software engineer unga thangachiyea keata freeiya va kattikuduping ? iruanthallum ungalukkunnu irukkira prastige cooker a maintain pannanumunu niga kudukirathila ,ada ivalaum en intha pathiula enthanea paru commend potukkanga athula ethana paru kalyanm panirrukanga ellam enna ethuvmea vangama than kalyanam panninangala enna ?
பதிலளிநீக்குஉங்கள் பதிவு மிகவும் நன்றாக உள்ளது
பதிலளிநீக்குNeenga vaera boss,already thanjavur area la foreign paiyanku ponnu tharatha nippatitanga...neenga pithiya kilapathinga boss...
பதிலளிநீக்குபெண் வீட்டார் சிந்திக்கவேண்டும்...!!!
பதிலளிநீக்கு//Ramani கூறியது...
பதிலளிநீக்குபயனுள்ள தரமான பதிவு
இப்போதெல்லாம் வெளி நாட்டு மாப்பிளைகள்
குட்டு வெளிப்பட வெளிப்பட
கொஞ்சம் யோசிக்கவும் அதிகம் விசாரிக்கவும் செய்து தான்
பெண் கொடுக்கிறார்கள் என்றாலும்
விசாரிப்பதில் ஏமாந்துபோய் பின் அவதிப்படுபவர்கள்
பட்டியல் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது
சமூக அக்கறையுடன் கூடிய தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்//
தேங்க்ஸ் பாஸ் ,
உண்மைதான் பாஸ்
இப்போது வெளி நாட்டு மாப்பிள்ளை விசயத்தில் நம்மவர் கொஞ்சம் உசாராத்தான் இருக்கிறார்கள்.
//மதுரன் கூறியது...
பதிலளிநீக்கு//"கற்றது தமிழ்" துஷ்யந்தன் சொன்னது…
வலைப்பக்க அழகன்கள் என்று உங்கள் இருவரையும்தான்
குறிப்புடுகிறார்கள், நீங்கள் என்ன வென்றால் இப்படி சொல்லுகிறீர்கள்
என்ன கொடுமை மது
ஓஹோ இதுதான் நிறைகுடம் தளும்பாது என்று சொன்னார்களோ????//
க.க.க.போ
நான் கொஞ்சம் தன்னடக்கமானவன் பாஸ்.. அதுதான் அப்படி ஹி ஹி//
க.க.க.போ
இதுக்கு கொஞ்சம் விளக்கம் தர முடியுமா பாஸ்
ஹி ஹி ஹி ஹி ஹி
//கவி அழகன் கூறியது...
பதிலளிநீக்குநெத்தி அடி மாப்பு//
நன்றி மாப்புளே
//Reverie கூறியது...
பதிலளிநீக்குவிழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்ல பதிவு...பகிர்வுக்கும் நன்றி நண்பரே...//
நன்றி நண்பரே
//காட்டான் கூறியது...
பதிலளிநீக்குதம்பி ஆகுலன் நீங்க எதிர்கால வெளிநாட்டு மாப்பிள.. இந்த பகுதியி கும்மியடிக்கும்போது கவனமாய் அடியுங்கோ...!?
அது சரி மாப்பிள யார் அந்த தாத்தா உங்கள் பிளாக்கின் முகப்பில் இருக்கிறார்..? ஒரு முறை விஜயகாந்தும் அவரின் போட்டோவிற்கு கற்பூர தீபம் காட்டி படையல் போட்டதை பார்தேன்.. அதன் பிறகுதான் அவருக்கு சட்ட மன்ற எதிர் கட்சி தலைவராக வரும் வாய்ப்பு வந்ததாக கூறுகிறார்கள்.. நீயும் அந்த படத்தை எனக்கு தந்தால் அதற்கு நானும் சூடமேற்றி படையல் போட்டு வெளிநாட்டு மாப்பிளைகளுக்கு நல்ல புத்திய கொடுன்னு வேண்டிக்கிறேன்...!!!!!!!!!!!!!!!!!//!
ஹா ஹா
ஆகுலன் காட்டான் சொல்லுறத வடிவா கேளுமப்பா :)
அப்புறம் காட்டான்
அந்த போட்டோ ல இருக்குறவர நமக்கு ரெம்ப புடிக்கும்
அதான் போட்டு இருக்கேன்
//மாலதி கூறியது...
பதிலளிநீக்குவிழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்ல பதிவு...பகிர்வுக்கும் நன்றி//
நன்றி அக்கா
//பெயரில்லா கூறியது...
பதிலளிநீக்குu should been write this 10 years before, ippellam yarum velinattu mappillaikku ponnu kedakiratu rombba seramam
//
அப்படி சொல்லிவிட முடியாது பாஸ்,
இப்போது குறைந்து உள்ளது என்று வேண்டுமானால் சொல்லலாம்,
//ஹேமா கூறியது...
பதிலளிநீக்குதுஷி...ஆரம்ப காலங்களை விட இப்போ ஊரில் உள்ளவர்கள் உஷாராகவே இருப்பதாக எனக்குப் படுகிறது.இதைமாதிரி நிறையச் சம்பவங்கள் கதைகதையா இருக்கு !
//
உண்மைதான் அக்கா,
முன்பை விட இப்போது நம்மவர் கொஞ்சம் உசாராக இருப்பது
சந்தோஷம் அளிக்குது,
//குடிமகன் கூறியது...
பதிலளிநீக்குஉள் நாட்டு மாப்பிள்ளைகள், பெண் கிடைக்காம திண்டாடுவதற்க்கு இதுதான் காரணமோ?
நான் என்னமோ, இந்த அரசாங்கங்களின் புள்ளிவிவரங்கள் சொல்ற மாதிரி ஆண்-பெண் விகிதாச்சாரம் கொறைஞ்சி போய்டிச்சோ னு நெனச்சிட்டேன்.
துஷி.. உள் நாட்டு மாப்பிள்ளைகளின் சார்பா தங்களின் வக்காலதிற்கு நன்றி..
பெற்றோர்களை நோக்கி தங்களின் கேள்விகள் நியாயமானதே..
பி.கு :
வெளிநாட்டு மாப்பிள்ளைகள் எல்லாரும் அயோகியர்க்களுமில்லை, உள் ஊர் மாப்பிள்ளைகள் எல்லாரும் யோகியர்க்களுமில்லை.. எல்லாம் தனிநபர் சம்பந்தப்பட்டது.//
நன்றி நண்பா,
ஊரில் ஆறுதலுக்கு நாலு பேராவது இருப்பார்கள் சகோ
ஆனால் இங்கே பாவம் அந்த அப்பாவிகளின் கண்ணீர் நாலு சுவற்றுக்குள் மறைவதுதான்
வேதனை பாஸ்
//Nisha கூறியது...
பதிலளிநீக்குஉங்கள் பதிவு மிகவும் நன்றாக உள்ளது
//
thnxxxxx
//appavi கூறியது...
பதிலளிநீக்குAthu enga ellarum mappillaiya pathiyea solringa en ponnunga romba pavama ? ampilaingakuda pavamthaiya oru ponna kattikittu nan padura padu irrukea aiyyooo aiyyooooooo ithanikkum nan varathatchinayea ethumea vangala ana ippa anupavikkiren ,eppavumea ellaroum ematharathilla , en yaravathu software engineer unga thangachiyea keata freeiya va kattikuduping ? iruanthallum ungalukkunnu irukkira prastige cooker a maintain pannanumunu niga kudukirathila ,ada ivalaum en intha pathiula enthanea paru commend potukkanga athula ethana paru kalyanm panirrukanga ellam enna ethuvmea vangama than kalyanam panninangala enna ?//
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி பாஸ்
//RAGUL DEVAN கூறியது...
பதிலளிநீக்குNeenga vaera boss,already thanjavur area la foreign paiyanku ponnu tharatha nippatitanga...neenga pithiya kilapathinga boss...//
ஹா ஹா
ரெம்ப குறும்பு பாஸ் உங்களுக்கு,
லவ் பண்ணி கட்டுங்க சார்
லைப் நல்லா இருக்கும் ;)
//MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்குபெண் வீட்டார் சிந்திக்கவேண்டும்...!!!
//
நிஜம்தான் பாஸ்,
தேங்க்ஸ் ,)
////ஊரில் இருப்பவர்களின் வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தை இங்குள்ளவர்களும் அழகாக பயன் படுத்திக்கொள்கிறார்கள்.////
பதிலளிநீக்குஆமாப்பா..
அது சரி எனக்க ஒரு சிட்டிசன் பொம்பிள கிடைக்குமா ?
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவிட்ட பின் அழித்த பதிவுகளையும் தேடிப் படிக்கலாம்.
///♔ம.தி.சுதா♔ கூறியது...
பதிலளிநீக்கு////ஊரில் இருப்பவர்களின் வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தை இங்குள்ளவர்களும் அழகாக பயன் படுத்திக்கொள்கிறார்கள்.////
ஆமாப்பா..
அது சரி எனக்க ஒரு சிட்டிசன் பொம்பிள கிடைக்குமா ?
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
///
என்ன பாஸ் இப்புடி கேட்டுட்டிங்க ..??
உங்களுக்கு இல்லாத பொண்ணா !!
ஒரு பொண்ணு இருக்கு பாஸ்
பிரஞ்சு சிட்டிசன்
வயசு நாற்ப்பத்தி ஒண்ணு,
ஆறு பிள்ளைங்க பட் இன்னும் கல்யாணம் ஆகல
இப்போத்தான் கல்யாணம் பண்ண ஆசை வந்து இருக்காம்
தமிழ் மாப்பிள்ளைதான் வேணும் என்று பொண்ணு
அடம்புடிக்குது, உங்களுக்கும் ஒக்கே என்றா சொல்லுங்க பாஸ்
பேசி முடிக்கலாம்
எப்படி வசதி
sema செம போஸ்ட்ய்யா
பதிலளிநீக்குஇன்றைய வலைச் சரத்தில் தங்களை
பதிலளிநீக்குஅறிமுகப் படுத்தக் கிடைத்த
வாய்ப்புக்கு பெரிதும் மகிழ்கிறேன்
//சி.பி.செந்தில்குமார் கூறியது...
பதிலளிநீக்குsema செம போஸ்ட்ய்யா
//
தேங்க்ஸ் பாஸ்
உங்களால் பாராட்டப்படுவது ரெம்ப சந்தோஷம் பாஸ்
//Ramani கூறியது...
பதிலளிநீக்குஇன்றைய வலைச் சரத்தில் தங்களை
அறிமுகப் படுத்தக் கிடைத்த
வாய்ப்புக்கு பெரிதும் மகிழ்கிறேன்//
ரமணி சார்,
எனக்கும் கவுரவம் தந்தமைக்கு நன்றிகள் பல
ரெம்ப தேங்க்ஸ்
வணக்கம் நண்பரே இன்றுதான் உங்கள் வலைப்பதிவை எதேற்சையாக படித்தேன்.நண்பர் கந்தசாமி சொன்னது போல் வெளிநாட்டில் இருந்து கொண்டு இப்படி ஒரு பதிவு எழுதியதற்கு ஒரு சலூட்.இதுதான் இன்றைய நிலைமை மிகவும் யதார்த்தமான உண்மை.இலங்கையில் குறிப்பாக வன்னிப்பக்கம் பல காதல்களைக்கூட உதரித்தள்ளிவிட்டு வெளிநாட்டு மாப்பிளை என்று போய் சிக்கி சீரழிந்த பலரை நான் பார்த்து இருக்கின்றேன்.இது பற்றி ஆரம்பத்தில் ஒரு பதிவு எழுதலாம் என்று கூட யோசித்து இருந்தேன்.ஆனால் வெளிநாட்டில் இருந்து கொண்டு நீங்கள் இந்தவிடயத்தை எழுதியதால் இது மிகவும் சிறப்பு பெற்றுள்ளது வாழ்த்துக்கள்.இனி தொடர்ந்து வருவேன் உங்கள் பதிவுகளை.
பதிலளிநீக்குஇன்றுதான் உங்கள் தளத்துக்கு முதல் வருகை!
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான்! ஆரம்ப காலத்தை விட இப்போ நம்மவர் கொஞ்சம் உஷாரா இருந்தாலும், இது இன்னமும் தொடர்கிறது!
உள்ளூர் மாப்பிள்ளைகளின் எக்கச்சக்கமான நியாயமே இல்லாத அற விலையும் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கான டிமாண்டுக்கு ஒரு முக்கிய காரணம்!
//Kss.Rajh கூறியது...
பதிலளிநீக்குவணக்கம் நண்பரே இன்றுதான் உங்கள் வலைப்பதிவை எதேற்சையாக படித்தேன்.நண்பர் கந்தசாமி சொன்னது போல் வெளிநாட்டில் இருந்து கொண்டு இப்படி ஒரு பதிவு எழுதியதற்கு ஒரு சலூட்.இதுதான் இன்றைய நிலைமை மிகவும் யதார்த்தமான உண்மை.இலங்கையில் குறிப்பாக வன்னிப்பக்கம் பல காதல்களைக்கூட உதரித்தள்ளிவிட்டு வெளிநாட்டு மாப்பிளை என்று போய் சிக்கி சீரழிந்த பலரை நான் பார்த்து இருக்கின்றேன்.இது பற்றி ஆரம்பத்தில் ஒரு பதிவு எழுதலாம் என்று கூட யோசித்து இருந்தேன்.ஆனால் வெளிநாட்டில் இருந்து கொண்டு நீங்கள் இந்தவிடயத்தை எழுதியதால் இது மிகவும் சிறப்பு பெற்றுள்ளது வாழ்த்துக்கள்.இனி தொடர்ந்து வருவேன் உங்கள் பதிவுகளை.//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா
உண்மைதான் பாஸ்
நம்மவர் இந்த வெளி நாட்டு மாப்பிள்ளையால் பட்டது அதிகம்
ஆனாலும் இன்னும் ஏமாறுவோர் அதிகம்தான்
என்ன செய்ய எல்லாம் பகட்டு வாழ்க்கை ஆசையால் வருவது
//ஜீ... கூறியது...
பதிலளிநீக்குஇன்றுதான் உங்கள் தளத்துக்கு முதல் வருகை!
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான்! ஆரம்ப காலத்தை விட இப்போ நம்மவர் கொஞ்சம் உஷாரா இருந்தாலும், இது இன்னமும் தொடர்கிறது!
உள்ளூர் மாப்பிள்ளைகளின் எக்கச்சக்கமான நியாயமே இல்லாத அற விலையும் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கான டிமாண்டுக்கு ஒரு முக்கிய காரணம்!
//
உங்கள் முதல் வருகைக்கு என் நன்றிகள் பல பாஸ்
தொடர்ந்து வாருங்கள் ,
உங்கள் கருத்து நிஜம் பாஸ்
சம்மந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும் இனியாவது
ஆயிரம் காலத்துப் பயிரை
பதிலளிநீக்குஆராயாமல் செய்துவிட்டு
சாவகாசமாய் சங்கடப்படாமல்
துப்பறியும் நிறுவனங்களை முறைப்படி அணுகி சகலமும் விசாரித்தபின் திருமணம் செய்யவேண்டும்.
//இராஜராஜேஸ்வரி கூறியது...
பதிலளிநீக்குஆயிரம் காலத்துப் பயிரை
ஆராயாமல் செய்துவிட்டு
சாவகாசமாய் சங்கடப்படாமல்
துப்பறியும் நிறுவனங்களை முறைப்படி அணுகி சகலமும் விசாரித்தபின் திருமணம் செய்யவேண்டும்.
//
நன்றி அக்கா
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்,
ரியலி அக்கா இந்த விசயத்தில் இவர்கள் சிந்தித்து
ஆராந்து முடிவெடுப்பது நன்று
யோசிப்பார்களா ????
நல்ல விழிப்புணர்வு கட்டுரைகளாக எழுதுகிறீர்கள்.....தொடரட்டும் உங்கள் நற்பணி.
பதிலளிநீக்குவெள்நாட்டு மாப்பிள்ளை மோகம் மட்டும் இங்கே தலைவிரித்து ஆடவில்லை மகன் வெளிநாட்டு மகனாக இருக்க வேண்டும் என்று ,பாலர் பள்ளிப் பருவத்திலிருந்து கனவு காணும் பெற்றோர்களும் இங்கே ஏராளம்.
ஏதாவது உயர்நிலைப்பள்ளியின் வாசலில் நின்று சர்வே பண்ணுங்கள் கல்லூரியில் என்ன க்ரூப் எடுப்பீர்கள் என்ரு கேட்டுப் பாருங்கள்....97 விழுக்காடு கம்ப்யூட்டர் என்றுதான் சொல்வார்கள்
நண்பரே, நல்ல பதிவு.
பதிலளிநீக்குஇன்ட்லியில் ஓட்டுப்போடலாம் என்று அழுத்தினேன். என்னமோ ஆகி என் போட்டோவுடன் இன்ட்லியில் தெரிகிறது. மன்னிக்கவும்.
நல்ல விழிப்புணர்வு பதிவு .பெற்றோர் சிந்திக்க வேண்டிய விஷயம் .
பதிலளிநீக்குவிழிப்போடு இருக்கணும் .
சமூகத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் தங்கள்பகிர்வுக்கு என் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்கு