அத்தை பெத்த அழகு ராட்சஸிகளின் அட்டகாசங்கள் இருக்கே... அய்யய்யோ தாங்க முடியாது. அத்தை பொண்ணுங்க கூட்டம் கூட்டமாய் இருக்க எல்லாம் ஒரு மச்சம் வேணுமிய்யா.. அந்த விசயத்தில் நமக்கு உடம்பெல்லாம் மச்சம் போலஇருக்கு. வன்னியில் இருந்த காலத்திலும் சரி வெளிநாடு வந்த பின்னும் சரி எப்போதுமே நம்மல சுத்தி ஒளிவட்டம் போல ஒரு மச்சாள்ஸ் வட்டம் சுத்தீட்டே இருக்கும். சினிமாவுக்கோ பீச்சுக்கோ நாம தனி ஒரு ஆம்பிளையா மச்சாள்ஸ்கூட்டத்தோடு அடிபட்டு குத்துப்பட்டுக்கொண்டு போகும் போது வயசு பசங்க எல்லாம் நம்மல குறுகுறு என்று பொறாமையா பார்க்கும் போது நமக்கு சந்தோஷத்தில் ஆகாயத்தில் அப்படியே விர்ர்..ண்னு பறக்கிற ஒரு பீலிங்.ஆனா பாருங்க இவங்களால சந்தோஷமாய் இருந்ததை விட இவங்ககிட்ட மாட்டி நொந்து நூடில்ஸ்சான சம்பவங்களும் அதிகம்.
வன்னியில் இருக்கும் போது நம்ம வீட்டுக்கு பக்கத்திலேயே ரஸி-ஜனா என்றுரெண்டு மச்சாள்ஸ் இருந்தாங்க. எங்களுக்குள்ளே ஒரு முக்கோண லவ் ஓடிட்டேஇருந்திச்சு.இதிலே என்ன கொடுமை என்றா ரஸி மச்சாளுக்கு 14 வயசு ஜனா மச்சாளுக்கு 9 வயசு நமக்கு 7 வயசு. அடப்பாவி என்று வாய பிளக்காம மிச்சத்தை கேளுங்க.. இதில் ஜனா மச்சாள் அழகி என்றாலும் சொஞ்சம் கறுப்பாய் இருப்பாள். ஆனா ரஸி மச்சாள் வெள்ளைக்காரி கலரில் செம லுக்கா அழகா இருப்பாள் அதால அவ மேலேநமக்கு செம லவ்வு. ஆனா அவ பெரிய பொண்ணு கொஞ்சம் விவரம் தெரியும் என்பதாலஇதெல்லாம் நடக்காதுப்பா என்று தெரிந்தாலும் நம்ம மனசு கஸ்ரப்படக்கூடாது என்பதற்க்காக பார்க்கும் போதெல்லாம் ஜ லவ் யூடா.. செல்லம்டா.. என்று அவகன்னத்தை கிள்ளியும் கிஸ் கொடுத்தும் நம்மல உசுப்பேற்ற நாமளும் பெக்குமாதிரி அவ நமக்குத்தான் என்ற மமதையில் பருத்திவீரன் கார்த்தி மாதிரி ஊருக்க திரிஞ்சுட்டு இருந்தோம்.
இதுக்குள்ளே ஜனா மச்சாளின் நம்ம மேலான லவ்வூ மடை திறந்த வெள்ளம் மாதிரி கடைபுரண்டு ஓட தொடங்கிவிட்டது. இதிலே வேற நம்ம அப்பாவும் நீதாண்டி என் மருமக என்று சொல்லி அவளை உசுப்பேற்ற அவளும் ஒரு முடிவோட ஒரு நாள் பெட்டி படுக்கையுடன் இங்கே தான்
இனி இருப்பேன் இங்கே இருந்துதான் ஸ்கூல் போவேன்என்று அடம்புடிச்சு நம்ம வீட்டிலேயே தங்கி நம்ம ரஸி மச்சாள் மேலான லவ்வுக்கு ஆப்படிக்க தொடங்கீட்டா.. கூட்டத்தோட கூட்டமாய் வீட்டுல நாம எங்கயாவது ஆ..ண்ணு பார்த்துட்டு நிக்கும் போது டக்குண்ணு இவ வந்து நமக்கு
கிஸ் அடிச்சுட்டு எதுவும் தெரியாதவ போல் அடுத்த பக்கம் திரும்பி சிரிச்சுட்டு நிப்பா.. நமக்கு ரெம்ப அவமானமாய் போயிரும், அவளை ஒரு முறைப்பு பார்வை பார்த்து விட்டு ஓடிப்போய்
2,3 தரம் சோப் போட்டு முகம் கழுவி அவ கிஸ் கொடுத்த இடத்துக்கு பவுடர் எல்லாத்தையும் அள்ளி தப்பி கொண்டு மோருக்க விழுந்த சுண்டெலி மாதிரி அவ முன்னால வந்து நின்னு ஒரு லுக்கு விடுவோம் பாருங்க.. அதை இப்போ நினைச்சாலும் நமக்கே கெக்கே பெக்கே என்று
சிரிப்பு வரும்.
இவளுக்கு பயந்து நாம இரவில் படுக்கிறது கூட அம்மாவின் பாதுகாப்புல அம்மாவை கட்டிப்புடிச்சோண்டுதான். ஆனாலும் அவ விடுவாளா பாருங்க.. படுக்கும் போது எல்லாம் நல்லாத்தான் இருக்கும், காத்தால கண்ணை முழிச்சுப்பார்த்தா! எங்கேயோ படுத்து இருந்தவ இப்போ நமக்கு பக்கத்திலே.. நம்ம மேலேயே கால போட்டுட்டு ஹாயா படுத்திருப்பா. நமக்கு வரும் பாருங்க கோவம். அங்கே ஆரம்பிக்கும் சண்டை மீண்டும் இரவு படுக்கைக்கு போயிம் தொடரும்.
ஒரு நாள் ஸ்கூல் முடிஞ்சு போகும் போது இவ என் நன்பர்களிடம் எல்லாம் துஷி மச்சானைதான் நான் கல்யாணம் செய்யப்போறேன் என்று அவுத்துவிட, உடனே என் நன்பர்கள் எல்லாம்,
டேய்.. வெள்ளையா இருந்தாத்தான் உன் பிரண்டாவே சேத்துப்ப.. ஆனா இப்போ உன் கறுப்பு மச்சாளைத்தான் கல்யாணம் கட்டப்போறியா..? என்று சொல்லி சொல்லி காமெடி பண்ணி நமக்கு ஏத்தி விட்ட வெறுப்பு , நானும் ஜனா மச்சாளும் ஒருவர் முடியை ஒருவர் பிச்சுக்கொண்டு கீழே உருண்டு சண்டை போட்டு ரத்த காயங்களுடன் அப்பா முன் விளக்கத்துக்கு போய் நிப்பதில் தான் முடிந்தது. எல்லாத்தையும் விலாவாரியா கேட்ட நம்ம அப்பா என் மேலே காண்டமாகி, இதுக்காடா அவள போய் அடிச்சே..! உனக்கு இருக்குடா அப்புறம் என்று சொல்லிய படியே அவளை தூக்கி தன் மடியில் உக்கார வைச்சு, மருமோளே நீ அழாதேடி.. யார் என்ன செய்தாலும் நீதாண்டி என் மருமகள் என்று வசனம் பேச, நாம கண்ணெல்லாம் கண்ணீர் முட்டி ஓவென்று அழும் நிலைக்கு வந்துடுவோம், உடனே எங்க அம்மா ஓடி வந்து நம்மல அணைச்சபடியே சொல்லுவா, மாமனும் மருமகளும் என் புள்ளைய அழ வைச்சு லூட்டியாடி அடிக்கிறீங்க..?
இங்கே எவளுக்கும் என் புள்ளையை கட்டிக்கொடுக்க மாட்டேன், எம் புள்ள கலருக்கும் அழகுக்கும் (நம்புங்கப்பா அப்போ அவ்ளோ கலரா அழகா இருப்பேன் ஹீ.. ஹீ..) அவனை வெளிநாட்டில் யாரும் வெள்ளைக்காரிக்குத்தான் கட்டிக்கொடுப்பேன் என்று சொன்ன பிறகுதான் நமக்கு போன உசிரே திரும்பி வரும். உடனே நாம அப்பாவையும் ஜனா மச்சாளையும் பார்த்து ஹீரோ மாதிரி சிரிக்கும் சிரிப்பில் அதுவரை கண்ணில் முட்டி நின்ற கண்ணீர் பொல பொல என கன்னங்களில் வழிந்தோடும். இந்த நேரத்தில் நம்ம மூளைக்கு ஒரு அவசர தந்தி வரும்.
அடேய்.. முட்டாள் துஷியே உங்க அம்மா சொன்னது போல் உன்னை யாரும் வெள்ளைக்காரிக்கு கட்டி வைத்தால் உன் ரஸி மச்சாள் மேலான லவ் என்னாகிறது..!! என்று, உடனே நாம சுதாரித்துக்கொண்டு மெதுவாக அம்மாவ சுரண்டி அம்மா நம்ம ரஸி மச்சாள் கூட வெள்ளைக்காரி மாதிரித்தான் இருப்பாம்மா.. என்று வழிய.. அம்மா ஒரு நமட்டு சிரிப்புடன் அடுத்து ஏதாவது ஒரு வேலையில் பிஸியாகி விடுவார். இப்படியான எனக்கும் ரஸி மச்சாளுக்கும் ஜனா மச்சாளுக்குமான முக்கோண லவ்வூ, அடுத்தடுத்த வருடங்களில் ரஸி மச்சாள்
இயக்கத்துக்கு (விடுதலைப்புலிகள் அமைப்பு) சென்று விட ஒரு முடிவுக்கு வந்தது.
அவங்களை பார்க்காமல் பேசாமல் இருப்பது என்பது என்னால் முடியாத ஒரு காரியம். ரஸி மச்சாள் இயக்கத்துக்கு போனது உண்மையில் என்னால் ஜீரணித்து கொள்ள முடியாத ஒன்று.
இப்படி அவங்க பிரிவால் நான் தவித்து நின்ற நேரத்தில் தான் என் இன்னொருஅத்தை ஒருவர் என் மேல் இருந்த பிரியத்தால் என்னை தங்கள் வீட்டுக்குகூட்டிக்கொண்டு போய் அங்கிருந்தபடியே ஸ்கூல் விட போவதாக சொல்ல அப்பாவும் அவர்கள் வீடு என் ஸ்கூல் அருகில் என்பதால் சம்மதிக்க நானும் இந்த ஜனா மச்சாள் தொல்லையில் இருந்து தப்பினால் போதும் என்று அவர்கள் வீட்டுக்கே போய் விட்டேன். அங்கே போனாலும் கடவுள் நமக்கு மச்சாள்ஸ் விடயத்தில் குறை வைக்கவே இல்லை. அந்த அத்தை வீட்டிலேயும் நமக்கு மூணு மச்சாள்ஸ் ஒரு மச்சான் ஆனாலும் இது பற்றி இங்கே இப்போ எதுவும் நான் எழுத போறது இல்லை. காரணம் அந்த மூணு மச்சாளும் இப்போ கல்யாணம் கட்டி இங்கே எனக்கு பக்கத்தில்தான் இருக்காங்கய்யா.. சோ அப்புறம் யாருய்யா அடி வாங்கிறது..?அவ்வ்.
பிறகு.. அத்தை வீட்டில் நின்று படிச்ச நான் சில வருடங்களில் வெளிநாடு வந்துவிட, ஒரு நாள் ஊரில் இருந்து வந்த தகவல் ஒன்று என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. ஆம்.. ஒரு இரவு வன்னி நெடுங்கேணியில் இருந்து புதுக்குடியிருப்பை நோக்கி சென்ற நெடுங்கேணி வைத்தியசாலை அம்புலன்ஸ் ஒன்று ஒட்டிசுட்டான் காட்டு பாதையில் ராணுவம் புலிகளுக்கு வைத்த கிளோமர் தாக்குதலில் சிக்கி சிதற அதில் உயிர் இழந்தவர்களில் என் ஜனா மச்சாளும் ஒருவர். இங்கிருந்த படியே பல இணைய தளங்களில் அவருடைய சிதறிய உடலை பார்த்து நான் துடித்த துடிப்பை வார்த்தைகளால் சொல்லுவிடமுடியாது. அந்த சம்பவத்தின் பின் பல இரவுகள் நான் தூக்கம் தொலைத்து தவித்து இருக்கேன். கண்ணை மூடினால் சின்ன வயசில் அவர் என் மேல் வைத்த கண்மூடித்தனமான பாசமும் அவர் வலுக்கட்டாயமாக அடிக்கடி தரும் அந்த முத்தங்களும், அதே கொஞ்சம் வளர்ந்து விவரம் தெரிந்த பின் அவர் என் மேல் வைத்த மரியாதை கலந்த அன்பும் தான் நினைவு வந்து வாட்டும். இதைப்பற்றி மேலும் சொல்ல போனால் இது ஒரு கனமான பதிவாய் மாறிவிடும். ஒரு சந்தோஷமான மேட்டரை சொல்ல வந்தால் கூட நமக்கு யுத்தம் தந்த வடுக்களை வலியோடு கடந்தே வர வேண்டியுள்ளது. இது நமக்கு நம் நாடு தந்த வரம் போலும். சரி சரி இதை விடுங்கள்.. நான் என் மச்சாள்ஸ் பற்றி தொடர்கிறேன். ஹீ.. ஹீ.
வெளிநாடு வந்த பின்னும் இந்த மச்சாள்ஸ் வட்டம் நமக்கு குறையவே இல்லை. சொல்ல போனால் இன்னும் கூடி விட்டது என்றே சொல்ல வேண்டும். நாம இருக்கும் பிராண்ஸில் ஒரு மச்சாள்ஸ் கூட்டமே இருக்கு நமக்கு. அதை தாண்டி சுவீஸ்,ஜெர்மன், நோர்வே, கனடா என்று எங்கே போனாலும் அங்கே இருக்கும் இந்த மச்சாள்ஸ் கூட்டத்தை சமாளிப்பதே நமக்கு பெரும்பாடா போயிரும். அதிலும் கனடாவில் ஜானு என்று மச்சாள் இருக்காள். இவள் அடாவடித்தனம் தாங்காமல் அய்யய்யோ.. யாராவது என்னை கடத்தீட்டு போயாவது இவளிடம் இருந்து காப்பாற்றுங்கப்பா என்று அலற தோணும். மெயிலுக்கு மேலே மெயிலு அனுப்பியே சாகடிப்பா, எங்கயாவது முக்கிய வேலையில் நிக்கும் போது டேய் இரவுக்கு Chatக்கு வா.. உன்னிடம் ஒரு முக்கிய மேட்டர் சொல்லனும் என்று ஒரே sms ஆ.. அனுப்பிட்டு இருப்பா, இரவுக்கு chat க்கு போனா இவ என்ன என்னெல்லாம் சொல்லுவா என்று பழைய அனுபவத்தில் தெரிந்திருந்தாலும்.. இவ தொல்லை தாங்க முடியாமலும், மச்சாள் என்று மனசு கேக்காமலும் போய் குந்தியிருந்தா, அவ விடுவா பாருங்க ரீலு.. ஒவ்வொண்ணும் தலையை பிச்சுக்க தோணும் அவ்வ்.. ரகம். டேய்.. கொஞ்சம் வெயிட் பண்ணு விஜய்க்கு பாய் சொல்லீட்டு வாறேன் என்பா.. நாமளும் யாரு அந்த பக்கத்து அப்பாட்மெண்ட் விஜயா என்று கேட்டா, டேய் லூசு இது நம்ம தளபதி விஜய்.. எங்கேயோ என் போட்டோ பார்த்தாராம் அதான் தன் அடுத்த படத்தில் தனக்கு ஜோடியா நடி நடி என்று ஒரே கெஞ்சீட்டு இருக்காருடா.. என்று சொல்லி நம்மல மூச்சடைக்க வைச்சுட்டு லபுக்குண்ணு அடுத்த மேட்டருக்கு போயிருவா. டேய் மச்சான் இந்த வில்லியம்ஸ் தொல்லை தாங்க முடியல்ல என்பா, நாமளும் அப்பாவியா யாருடி அது என்று கேட்டா, டேய் அவருதான் யாரோ டயானாவின் மகனாம்.. என்னை லவ் பண்ணு லவ் பண்ணு என்று ஒரே டாச்சர்டா என்று சொல்லியபடியே, இந்த ஒபாமாவும் ரெம்ப ஓவர்டா இப்போத்தான் போன் பண்ணி நாளைக்கு லஞ்சுக்கு கூப்பிட்டு இருக்காரு இத ரெண்டு நாள் முந்தி சொல்லி இருக்க கூடாதா எனக்கு நாளைக்கு ராகுல் காந்தியோட ஒரு மீட்டிங் இருக்கு அவசரமா போகணும் என்பா. இவ இம்சைய நேத்து இரவு கூட அனுபவிச்சேன். இவ பேச்சை தாங்க முடியாம.. மயக்கமோ தூக்கமோ தெரியல்லைங்க கொம்பியூட்டர் மேசையிலேயே இவ கூட chat பண்ணின குறையிலேயே குப்பற படுத்துட்டேன் என்றா பாருங்களேன்.
ஆனாலும் இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் படி ஒரு மச்சாளுட்ட நாம பல்பூ வாங்கிய சம்பவம் ஒன்றும் உண்டு. அவ ஜெர்மனியில் இருக்கா. பெயரு பானு, அவ்ளோ அழகா இருப்பா, என்ன அவளுக்கு அவ்ளோ பிடிக்கும். ஒரு நாளைக்கு ஒருக்காவது என் கூட பேசாம இருக்க மாட்டா, காலேஜ் முடிஞ்சு வீட்ட வந்தா இரவு கட்டாயம் அவ கூட chat பண்ணியே ஆகணும். எங்காவது விழாவுக்கு போறது என்றா அங்கே இருந்து கொண்டே நாம இங்கே போட்டு போற உடுப்பு கலர கூட அவதான் செலக்ட் பண்ணுவா என்றா பாத்துக்கோங்களேன். அவ ஒரு பெரிய விஜய் ரசிகைங்கோ. அங்க இருந்தோண்டு சொல்லுவா, டேய்.. சுறா,ஆதி சூப்பர் ஹிட் (!) படங்களோட DVD எல்லாம் வாங்கி அனுப்பு என்று, நாமளும் இங்கே லாச்சப்பளில் கடை கடையா ஏறி அந்த DVD கேட்டா.. திருட்டு DVD விக்கிறவன் கூட நம்மல திருதிருண்ணு பாப்பான். இவ அன்பு அடாவடித்தனங்களில் நாமளும் கிறங்கி போய் இவ நம்மளத்தான் டாவடிக்கிறா என்று நம்பி
ஜ லவ் யூ சொல்லுவம் என்று.. ஒரு நாள் போனை எடுத்தா, அப்போ வைச்சா பாருங்க ஒரு ஆப்பு...!! டேய் துஷி.. எங்க கிளாஸில ஒரு தமிழ் பையன் புதுசா வந்து சேர்ந்து இருக்காண்டா, பார்க்க அப்படியே சூர்யா மாதிரியே இருப்பாண்டா.. அவன பார்க்கும் போதெல்லாம் அப்படியே மனசுக்க ஒரே பட்டாம் பூச்சியா பறக்குதடா... என்று அவ போட்ட போடுல இங்கிட்டு நமக்கு மயக்கமே வந்துட்டுது.
இப்படி நம்மல தவிக்க விட்டு ரசிச்சாலும், அலைய விட்டு வேடிக்கை பார்த்தாலும், பல நேரங்களில் நம்மல காமெடி பீஸ் ஆக்கினாலும், இப்படி என்னென்னவோ செய்தாலும், நாம சொந்தகாரங்களோட கூட்டத்தோட கூட்டமாய் நிக்கும் போது, ஓடி வந்து அப்படியே நம்ம முதுகில் ஒரு போடு போட்டு மச்சான் எப்படிடா இருக்க..? உன்ன ரெம்ப மிஸ் பண்ணுறேண்டா.. என்று சொல்லும் போது கிடைக்கும் சுகம் இருக்கே... அப்பப்பா.. அதெல்லாம் அனுபவிச்சவனுக்குத்தான் தெரியும் பாஸ்.
டிஸ்கி 1 -: எங்கையாவது தூர பயணம் சென்று வந்தால்.. பதிவுலகம்திரும்பியதும் பயணக்கட்டுரைதான் எழுதனுமாமே.. போகும் போது நானும் அப்புடித்தான் பிளான் பண்ணி போனேனுங்க.. ஆனா பாருங்க, போன இடத்தில் மச்சாள்ஸ் அன்பில் கிறங்கிப்போய், பயணக்கட்டுரைக்கு பதில் மச்சாள்ஸ் கட்டுரை போட்டுட்டேனுங்க. ஹீ..ஹீ.
டிஸ்கி 2 -: நாம சுவீஸ் போனதுதான் போனோம், இங்கே நம்ம கந்தசாமி துஷிக்கு சுவீஸ்சில் கல்யாணமாம் என்று ஒரு புரளியை கிளப்பி விட்டுட்டாரு.. அவ்வ், அந்த புரளியால நம்ம ப்ளாக் E.Mailக்கும் சரி பேஸ்புக் inboxக்கும் சரி ஒரே திருமண வாழ்த்தா வந்து குவிஞ்சுட்டுது, அந்த புரளியை கிளப்பி விட்ட கந்தசாமிக்கு என் வண்மையான கண்டங்களை தெரிவித்து கொள்வதுடன், துஷிக்கு இன்னும் கல்யாணம் ஆகல.. அவரு 24 வயசுக்கு அப்புறம் தான் ( பார்டா.. ஏதோ 30 வயசுக்கு பிறகுதான் கட்டுவேன் என்று சொல்லுற மாதிரி பந்தாவ..) கல்யாணம் கட்டுவாராம் என்பதையும் தெரிவித்துக்கொள்(ல்)கின்றேன். ஹீ..ஹீ.
///வன்னியில் இருக்கும் போது நம்ம வீட்டுக்கு பக்கத்திலேயே ரஸி-ஜனா என்றுரெண்டு மச்சாள்ஸ்///
பதிலளிநீக்குயோவ் மோக முள் படம் காட்டுறீரா பொறும் வாறன்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பில்கேட்சை ஏழையாக்கப் போகும் ஈழத்துப் புதல்வன்
ஐ ஐ ஐ சுடு சோற நம்மளுக்கு..
பதிலளிநீக்குசந்தோசம் தாங்க முடியல அதோல தார்மீக கடமையுடன் எஸ்கேப்பு..
பதிலளிநீக்கு//அத்தை பெத்த ராட்சஸிகள்///
பதிலளிநீக்குதுஷி கடுப்பேத்திறார் மை லார்ட்
வடை ஜஸ்ட் மிஸ்
பதிலளிநீக்கு♔ம.தி.சுதா♔ சொன்னது…
பதிலளிநீக்கு///வன்னியில் இருக்கும் போது நம்ம வீட்டுக்கு பக்கத்திலேயே ரஸி-ஜனா என்றுரெண்டு மச்சாள்ஸ்///
யோவ் மோக முள் படம் காட்டுறீரா பொறும் வாறன்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா<<<<<<<<<<
மோக முள்ளா..?? அவ்வ ....
அது நல்ல படமாச்சே..
அவ்வளோ நல்லாவா இருக்கு, நம்ம மச்சாள்ஸ் புராணம்
( யப்பா... தப்பியாச்சு ... அவ்வ)
//கூட்டத்தோட கூட்டமாய் வீட்டுல நாம எங்கயாவது ஆ..ண்ணு பார்த்துட்டு நிக்கும் போது டக்குண்ணு இவ வந்து நமக்குகிஸ் அடிச்சுட்டு//
பதிலளிநீக்குஅவ்வ்வ்வ்
பாஸ்.. வேணாம்.. அழுதிருவன்.
இந்த பாவம் உங்கள சும்மா விடாது. வயசு பசங்க இருக்கிற இடத்தில இப்பிடியெல்லாம் கதைக்கலாமா. எங்க மனம் என்ன பாடுபடும். ஒரு மனிதாபிமானம் இல்லையாப்பு..
உங்களுக்குத்தான் வயது போயிட்டுது.. நாங்க அப்ப்டிடயா
♔ம.தி.சுதா♔ கூறியது...
பதிலளிநீக்குஐ ஐ ஐ சுடு சோற நம்மளுக்கு..
<<<<<<<<<<<<<<<<<<<<<<<
ஹும்... பெரிய பதிவரொருவர்
நம்ம கடையில் சுடு சோறு சாப்பிடுவது
நமக்கும் பெருமையா இருக்குண்ணே..
தேங்க்ஸ் :)
//அவளை ஒரு முறைப்பு பார்வை பார்த்து விட்டு ஓடிப்போய் 2,3 தரம் சோப் போட்டு முகம் கழுவி அவ கிஸ் கொடுத்த இடத்துக்கு பவுடர் எல்லாத்தையும் அள்ளி தப்பி கொண்டு மோருக்க விழுந்த சுண்டெலி மாதிரி அவ முன்னால வந்து நின்னு ஒரு லுக்கு விடுவோம் பாருங்க//
பதிலளிநீக்குஹி ஹி இப்பவும் அப்பிடித்தான்னு பிரெஞ்சு பொண்ணுங்கெல்லாம் சொல்லுறாங்களாமே.. உண்மையா?
//எம் புள்ள கலருக்கும் அழகுக்கும்//
பதிலளிநீக்குஇந்த அம்மாக்களே இப்படித்தான் பாஸ்.. மனச்சாட்சியே இல்லாம கதைப்பாங்க
ஹி ஹி
♔ம.தி.சுதா♔ கூறியது...
பதிலளிநீக்குசந்தோசம் தாங்க முடியல அதோல தார்மீக கடமையுடன் எஸ்கேப்பு..
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
சந்தோஷமா..?? ஹீ ஹீ
ஒக்கே பாஸ். அது சரி என்ன மதுவும் நீங்களும் சேர்ந்தே நிக்கீங்க
வேலை இடத்தில் நின்று ப்ளாக் பாக்கிறேளோ....??
பாவம் உங்க முதலாளி... ஹீ ஹீ
மதுரன் கூறியது...
பதிலளிநீக்கு//அத்தை பெத்த ராட்சஸிகள்///
துஷி கடுப்பேத்திறார் மை லார்
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
யுவரானார் மதுரன்
பொய் சொல்லுறாரு....... :(
மதுரன் மச்சாள் ஆக்களோட அடிக்கிற லூட்டி நமக்கு தெரியாதாக்கும்
ஹீ ஹீ
மதுரன் கூறியது...
பதிலளிநீக்குவடை ஜஸ்ட் மிஸ்
<<<<<<<<<<<<<<<<<<
உங்க பாஸுதான் தட்டிட்டு போய்ட்டாரு ..... :)))
//அம்புலன்ஸ் ஒன்று ஒட்டிசுட்டான் காட்டு பாதையில் ராணுவம் புலிகளுக்கு வைத்த கிளோமர் தாக்குதலில் சிக்கி சிதற அதில் உயிர் இழந்தவர்களில் என் ஜனா மச்சாளும் ஒருவர்.///
பதிலளிநீக்குவேதனையான விடயம் துஷி. இப்படியான தருணங்களில் ஏற்படும் வலி நாமே இறந்திருந்தால் பரவாயில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்துமளவிற்கு இருக்கும்
வணக்கம் மருமோனே என்னடா மாமனுக்கு சொல்லாம மூன்று முடிச்சு போட்டுட்டிங்களோன்னு பயந்திட்டன்.. இந்த கந்தசாமிப்பயல் வதந்திய பரப்பி என்ர மனச நோவடிச்சிட்டார் அவருக்கு என்ர கண்டனங்கள்..!! இதுக்கு அவர் நல்லா அனுபவிக்கபோகிறார்...ஹி ஹி
பதிலளிநீக்கு//வெளிநாடு வந்த பின்னும் இந்த மச்சாள்ஸ் வட்டம் நமக்கு குறையவே இல்லை.//
பதிலளிநீக்குயோவ் உமக்கு மச்சம் இருக்கா அல்லது மச்சத்துக்குள்ள நீங்க இருக்கிறீங்களா..
யோ சுற்றுலா போனமா நல்ல விசங்களைச் சொன்னமா எனறு இல்லாமல் அத்தை மகள்(மாமி மகள் எங்கள் ஊர் வழக்கப்படி) ஞாபகங்களைச் சீண்டி விட்டீர்கள்! உண்மையில் நானும் கொடுத்து வைத்தவன் இந்த மச்சாள் மார் தொல்லையில் இருந்து காப்பாற்றியது (அதை ஜிரனிக்க முடியாவிட்டாலும் உண்மை அதுதான்) யுத்தம் அதில் நம் கனவுகள் தொலைந்த வேதனையை தனிமரம் பாடல் போட்டு காட்டித்தப்பி விட்டது இந்தகந்தசாமி செய்த வேலையில் தனிமரமும் நம்பி விட்டது!( கருத்து கந்தசாமித் தாத்தா சொன்னா தனிமரம் நம்பும் அவர் வயதில் மூத்தவர்) ஹீஹீ
பதிலளிநீக்குயோ சுற்றுலா போனமா நல்ல விசங்களைச் சொன்னமா எனறு இல்லாமல் அத்தை மகள்(மாமி மகள் எங்கள் ஊர் வழக்கப்படி) ஞாபகங்களைச் சீண்டி விட்டீர்கள்! உண்மையில் நானும் கொடுத்து வைத்தவன் இந்த மச்சாள் மார் தொல்லையில் இருந்து காப்பாற்றியது (அதை ஜிரனிக்க முடியாவிட்டாலும் உண்மை அதுதான்) யுத்தம் அதில் நம் கனவுகள் தொலைந்த வேதனையை தனிமரம் பாடல் போட்டு காட்டித்தப்பி விட்டது இந்தகந்தசாமி செய்த வேலையில் தனிமரமும் நம்பி விட்டது!( கருத்து கந்தசாமித் தாத்தா சொன்னா தனிமரம் நம்பும் அவர் வயதில் மூத்தவர்) ஹீஹீ
///டேய் துஷி.. எங்க கிளாஸில ஒரு தமிழ் பையன் புதுசா வந்து சேர்ந்து இருக்காண்டா, பார்க்க அப்படியே சூர்யா மாதிரியே இருப்பாண்டா.. அவன பார்க்கும் போதெல்லாம் அப்படியே மனசுக்க ஒரே பட்டாம் பூச்சியா பறக்குதடா...///
பதிலளிநீக்குஐ ஐ ஒருத்தி துஷிக்கு ஆப்பு வச்சிட்டாவே ஜாலி ஜாலி..
மதுரன் கூறியது...
பதிலளிநீக்கு//கூட்டத்தோட கூட்டமாய் வீட்டுல நாம எங்கயாவது ஆ..ண்ணு பார்த்துட்டு நிக்கும் போது டக்குண்ணு இவ வந்து நமக்குகிஸ் அடிச்சுட்டு//
அவ்வ்வ்வ்
பாஸ்.. வேணாம்.. அழுதிருவன்.
இந்த பாவம் உங்கள சும்மா விடாது. வயசு பசங்க இருக்கிற இடத்தில இப்பிடியெல்லாம் கதைக்கலாமா. எங்க மனம் என்ன பாடுபடும். ஒரு மனிதாபிமானம் இல்லையாப்பு..
உங்களுக்குத்தான் வயது போயிட்டுது.. நாங்க அப்ப்டிடயா
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
ஹீ ஹீ
பாஸ் கோவிச்சுக்காதீங்க பாஸ்...
நான் என்ன பாஸ் பண்ணுறது நமக்கு மச்சாள்ஸ் வரத்தை கடவுள் அதிகமாவே தந்துட்டார் போல, ஆனா மது நீ இப்படி அப்பாவி மாதிரி கமெண்ட்ஸ் போட்டுட்டா உன்னை நம்பிருவம் ஆக்கும், இந்த கதை இங்கே எடுபடாது... யோவ்.... உங்க மச்சாள்ஸ் பற்றி அங்கே நடந்த மதுரன் லீலைகள் பற்றியும்
எப்பய்யா பதிவு போடுவ..???
யோவ்.... வயசானவனா..........?? கொலை விழும்... ஆமா சொல்லீட்டேன்... என் இமேஜை டேமேஜ் ஆக்கிறதிலேயே குறியா இருக்கான் டா.. அவ்வ
பாஸ் உங்க லவ்வருக்கு இந்த லிங்க அனுப்பனும் எண்டு ஆசையா இருக்கு
பதிலளிநீக்குஃஃஃஃதுஷ்யந்தன் சொன்னது…
பதிலளிநீக்கு♔ம.தி.சுதா♔ கூறியது...
ஐ ஐ ஐ சுடு சோற நம்மளுக்கு..
<<<<<<<<<<<<<<<<<<<<<<<
ஹும்... பெரிய பதிவரொருவர்
நம்ம கடையில் சுடு சோறு சாப்பிடுவது
நமக்கும் பெருமையா இருக்குண்ணே..
தேங்க்ஸ் :)ஃஃஃஃ
துசி இது ஹ...ஹ...ஹ.. 2222222 much அப்படி ஒரு எண்ணமிருந்தால் இன்றோடு அழிச்சிடுங்க..
பணக்காரனாய் ஹொட்டல் போய் சாப்பிடுவதை விட ஒரு ஏழையாய் அன்னதான மடம் போய் லைனில் நின்று வழையிலையில் சாப்பிடுவது தான் என்றைக்கு திருப்தியாய் செமிக்கும்பா..
மதுரன் கூறியது...
பதிலளிநீக்கு//அவளை ஒரு முறைப்பு பார்வை பார்த்து விட்டு ஓடிப்போய் 2,3 தரம் சோப் போட்டு முகம் கழுவி அவ கிஸ் கொடுத்த இடத்துக்கு பவுடர் எல்லாத்தையும் அள்ளி தப்பி கொண்டு மோருக்க விழுந்த சுண்டெலி மாதிரி அவ முன்னால வந்து நின்னு ஒரு லுக்கு விடுவோம் பாருங்க//
ஹி ஹி இப்பவும் அப்பிடித்தான்னு பிரெஞ்சு பொண்ணுங்கெல்லாம் சொல்லுறாங்களாமே.. உண்மையா?
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<யோவ்..........
வேணாம்ய்யா......... ஒரு சூப்பர் பிகரை லவ்ஸ் விட்டுட்டு இருக்கேன்ய்யா, அதுல கும்மி அடிச்சிராதே.... அவ்வவ்
வன்னியில் இருந்த காலத்திலும் சரி வெளிநாடு வந்த பின்னும் சரி எப்போதுமே நம்மல சுத்தி ஒளிவட்டம் போல ஒரு மச்சாள்ஸ் வட்டம் சுத்தீட்டே இருக்கும். ///
பதிலளிநீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்!
துசி இந்த மச்சாள் மார் சீதனம் கொண்டு வராட்டியும் நம்மளையும் நம் தாய் மாரையும் ஒரு உறவோடு நடத்தும் முறை எத்தனை கோடி சீதனம் கொண்டு வந்தாளும் முடியாதகாரியம் இதை நடை முறையில் உணர்ந்த விடயம்! கலரா முக்கியம் அன்பு, பாசம், புரிந்துணர்வு தானா வாழ்வில் தத்துவம் ஒ மாப்பூ தனியாள் நானும் குடும்பஸ்தன் என்று நம்பி விட்டேன்!
பதிலளிநீக்கு//யுவரானார் மதுரன்
பதிலளிநீக்குபொய் சொல்லுறாரு....... :(
மதுரன் மச்சாள் ஆக்களோட அடிக்கிற லூட்டி நமக்கு தெரியாதாக்கும்
ஹீ ஹீ///
அடப்பாவியளா.. புரளிய கிளப்பீராதிங்கப்பு. நான் ரொம்ப நல்லவன்.. அப்பாவி... முக்கியமா குழந்தை.. ஹி ஹி
நமக்கு சந்தோஷத்தில் ஆகாயத்தில் அப்படியே விர்ர்..ண்னு பறக்கிற ஒரு பீலிங்.ஆனா பாருங்க இவங்களால சந்தோஷமாய் இருந்ததை விட இவங்ககிட்ட மாட்டி நொந்து நூடில்ஸ்சான சம்பவங்களும் அதிகம்.///
பதிலளிநீக்குசம்பவங்களுமா?சம்பவங்கள் மட்டுமா?
மதுரன் கூறியது...
பதிலளிநீக்கு//எம் புள்ள கலருக்கும் அழகுக்கும்//
இந்த அம்மாக்களே இப்படித்தான் பாஸ்.. மனச்சாட்சியே இல்லாம கதைப்பாங்க
ஹி
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
ஹீ ஹீ
அங்கேயும் அனுபவம் பேசுதோ....lol
ஆனா உலக இளைஞர்களோட(கலைஞர் அல்ல)
பதிலளிநீக்குபாவம் உங்கள சும்மா விடாது போங்க!
மதுரன் கூறியது...
பதிலளிநீக்கு//அம்புலன்ஸ் ஒன்று ஒட்டிசுட்டான் காட்டு பாதையில் ராணுவம் புலிகளுக்கு வைத்த கிளோமர் தாக்குதலில் சிக்கி சிதற அதில் உயிர் இழந்தவர்களில் என் ஜனா மச்சாளும் ஒருவர்.///
வேதனையான விடயம் துஷி. இப்படியான தருணங்களில் ஏற்படும் வலி நாமே இறந்திருந்தால் பரவாயில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்துமளவிற்கு இருக்கும்
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
மனசில் அன்று தோணியதை இப்போ அப்படியே சொல்லி இருக்கீங்க மது. ஜனா மச்சாளில்ன் அன்றைய அந்த மரணம் தந்த வலியை விட என் மரணம் கூட இனி எனக்கு தருமோ தெரியாது...... நாம் (இலங்கை தமிழர்) ரெம்ப பாவப்பட்டவர்கள் போல்.. அவர்களில் வலி இல்லா மனம் உண்டோ :((
உண்மையில் மச்சாள் மாரை கலியாணம் செய்வது என்பது குடும்பத்தில் பரம்பரை நோய் வரும் என்று சொன்னாலும் உண்னையில் கூட்டுக்குடும்பத்தில் அவர்கள்தான் ஹீரோயினி அவர்களுக்குத் தெரியும் குடும்ப உறவுகளின் குண இயல்பு இரவு வாரன் மிச்சத்திற்கு '
பதிலளிநீக்குபாஸவேலை இது பற்றி பிறகு சொல்லுகின்றன்!
காட்டான் கூறியது...
பதிலளிநீக்குவணக்கம் மருமோனே என்னடா மாமனுக்கு சொல்லாம மூன்று முடிச்சு போட்டுட்டிங்களோன்னு பயந்திட்டன்.. இந்த கந்தசாமிப்பயல் வதந்திய பரப்பி என்ர மனச நோவடிச்சிட்டார் அவருக்கு என்ர கண்டனங்கள்..!! இதுக்கு அவர் நல்லா அனுபவிக்கபோகிறார்...ஹி ஹி
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
எங்கய்யா.... என் மாமாவை காணோம் என்று பார்த்துட்டு இருந்தேன்... வந்துட்டேளா... ஹீ ஹீ. ஆஹா கந்தசாமி புரளியை நீங்களுமா நம்பீட்டிங்க.. அவ்வ..
மாமாவுக்கு தெரியாம இந்த மருமான் முடிச்சு போடுவானா.... ஹீ ஹீ..
மதுரன் கூறியது...
பதிலளிநீக்கு//வெளிநாடு வந்த பின்னும் இந்த மச்சாள்ஸ் வட்டம் நமக்கு குறையவே இல்லை.//
யோவ் உமக்கு மச்சம் இருக்கா அல்லது மச்சத்துக்குள்ள நீங்க இருக்கிறீங்களா..
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
போங்க மது...... வெக்கமா வருது...
கண்ணு வெக்காதே மது..... :))
தனிமரம் கூறியது...
பதிலளிநீக்குயோ சுற்றுலா போனமா நல்ல விசங்களைச் சொன்னமா எனறு இல்லாமல் அத்தை மகள்(மாமி மகள் எங்கள் ஊர் வழக்கப்படி) ஞாபகங்களைச் சீண்டி விட்டீர்கள்! உண்மையில் நானும் கொடுத்து வைத்தவன் இந்த மச்சாள் மார் தொல்லையில் இருந்து காப்பாற்றியது (அதை ஜிரனிக்க முடியாவிட்டாலும் உண்மை அதுதான்) யுத்தம் அதில் நம் கனவுகள் தொலைந்த வேதனையை தனிமரம் பாடல் போட்டு காட்டித்தப்பி விட்டது இந்தகந்தசாமி செய்த வேலையில் தனிமரமும் நம்பி விட்டது!( கருத்து கந்தசாமித் தாத்தா சொன்னா தனிமரம் நம்பும் அவர் வயதில் மூத்தவர்) ஹீஹீ
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
உண்மை உண்மை பாஸ்.
இந்த மச்சாள்ஸ் யோகம் வாசவன் எல்லாம் கடவுளின் செல்லப்பிள்ளைகள்
அப்போ நீங்களும் அவரு ஆளுதான்... கந்தசாமி பெரியவரா..??
பாஸ் அவரு கேட்டா கடுப்பாக போறாரு அவ்வ
மதுரன் கூறியது...
பதிலளிநீக்கு///டேய் துஷி.. எங்க கிளாஸில ஒரு தமிழ் பையன் புதுசா வந்து சேர்ந்து இருக்காண்டா, பார்க்க அப்படியே சூர்யா மாதிரியே இருப்பாண்டா.. அவன பார்க்கும் போதெல்லாம் அப்படியே மனசுக்க ஒரே பட்டாம் பூச்சியா பறக்குதடா...///
ஐ ஐ ஒருத்தி துஷிக்கு ஆப்பு வச்சிட்டாவே ஜாலி ஜாலி..
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
அவ்வவ்....
மதுக்கு உள்ளே குளு குளு என்று இருக்குமே... என்ன ஒரு வில்லத்தனமைய்யா....
பணக்காரனாய் ஹொட்டல் போய் சாப்பிடுவதை விட ஒரு ஏழையாய் அன்னதான மடம் போய் லைனில் நின்று வழையிலையில் சாப்பிடுவது தான் என்றைக்கு திருப்தியாய் செமிக்கும்பா
பதிலளிநீக்குஅங்க இருந்தோண்டு சொல்லுவா, டேய்.. சுறா,ஆதி சூப்பர் ஹிட் (!) படங்களோட DVD எல்லாம் வாங்கி அனுப்பு என்று, நாமளும் இங்கே லாச்சப்பளில் கடை கடையா ஏறி அந்த DVD கேட்டா.. திருட்டு DVD விக்கிறவன் கூட நம்மல திருதிருண்ணு பாப்பா
பதிலளிநீக்குயாரையா டொக்குத்தர் ரசிகர் வாங்கையா வெளிய..!!!! ஹி ஹி
மதுரன் கூறியது...
பதிலளிநீக்குபாஸ் உங்க லவ்வருக்கு இந்த லிங்க அனுப்பனும் எண்டு ஆசையா இருக்கு
<<<<<<<<<<<<<<<<<<<<<<
அவங்க படிப்பாங்க பாஸ்
சிரிப்பாங்க பாஸ்
அப்புறம் திட்டுவாங்க பாஸ்
அவ்வ்வ்வ்
( நாம... வேண்டாத திட்டா.. லவ்ல இது சகஜமப்பா.. ஹீ ஹீ)
கந்தசாமிக்கு வாழ்த்துக்கள் உன்கள் வலையை அழகாய் அற்புதமாய் வடிவமைத்து தந்ததற்கு! (கந்தசாமிக்குத் தெரியும் தனிமரம் டாக்குத்தரை விட இம்சை இல்ல என்று ஹீ ஹீ ) பிறகு வாரன் வேலை நேரம் பாஸ்!
பதிலளிநீக்கு♔ம.தி.சுதா♔ கூறியது...
பதிலளிநீக்குஃஃஃஃதுஷ்யந்தன் சொன்னது…
♔ம.தி.சுதா♔ கூறியது...
ஐ ஐ ஐ சுடு சோற நம்மளுக்கு..
<<<<<<<<<<<<<<<<<<<<<<<
ஹும்... பெரிய பதிவரொருவர்
நம்ம கடையில் சுடு சோறு சாப்பிடுவது
நமக்கும் பெருமையா இருக்குண்ணே..
தேங்க்ஸ் :)ஃஃஃஃ
துசி இது ஹ...ஹ...ஹ.. 2222222 much அப்படி ஒரு எண்ணமிருந்தால் இன்றோடு அழிச்சிடுங்க..
பணக்காரனாய் ஹொட்டல் போய் சாப்பிடுவதை விட ஒரு ஏழையாய் அன்னதான மடம் போய் லைனில் நின்று வழையிலையில் சாப்பிடுவது தான் என்றைக்கு திருப்தியாய் செமிக்கும்பா..
<<<<<<<<<<<<<<<<<<<<<<<
நான் சொன்னது உண்மைதானே பாஸ்...
நீங்கள் இப்படி சொல்வது உங்கள் அடக்கம் பெருந்தன்மை..
ரியலி கிரேட் பாஸ்.
அழகா சொன்னீர்கள் பாஸ்.
நல்ல உவமை... அது நிஜமும் கூட...எனக்கும் ஹோட்டல் சாப்பாட்டை விட அன்னதானம் தான் பிடிக்கும் பாஸ்..
தேங்க்ஸ் பாஸ்.
கோகுல் கூறியது...
பதிலளிநீக்குவன்னியில் இருந்த காலத்திலும் சரி வெளிநாடு வந்த பின்னும் சரி எப்போதுமே நம்மல சுத்தி ஒளிவட்டம் போல ஒரு மச்சாள்ஸ் வட்டம் சுத்தீட்டே இருக்கும். ///
கர்ர்ர்ர்ர்ர்ர்!
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
நீங்களுமா...... அவ்வவ் lol
பதிவுலகை நாரடிச்ச துஷ்யந்தன் ஒழிக....
பதிலளிநீக்குஅப்பாடா கடுப்பை காட்டியாச்சு...
தனிமரம் கூறியது...
பதிலளிநீக்குதுசி இந்த மச்சாள் மார் சீதனம் கொண்டு வராட்டியும் நம்மளையும் நம் தாய் மாரையும் ஒரு உறவோடு நடத்தும் முறை எத்தனை கோடி சீதனம் கொண்டு வந்தாளும் முடியாதகாரியம் இதை நடை முறையில் உணர்ந்த விடயம்! கலரா முக்கியம் அன்பு, பாசம், புரிந்துணர்வு தானா வாழ்வில் தத்துவம் ஒ மாப்பூ தனியாள் நானும் குடும்பஸ்தன் என்று நம்பி விட்டேன்!
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
அருமையா சொன்னீர்கள் பாஸ்.
சூப்பர்.. எங்க வீட்ட கூட
இப்போ அப்பா என் தங்கச்சியை ( ஒரே ஒரு )
கட்டிக்கொடுக்க இருப்பது பிரான்சில் இருக்கும் அத்தை பையனுக்கே... யாரும் காரணம் கேட்டால் அப்பா சொல்லுவார்..அவனுக்கு ஒரு வேளை மனுசி என்ற பாசம் இல்லாட்டியும் என் மாமன் பொண்ணு என்ற பாசமாவது இருக்கும் என் பொண்ணை நல்லா பார்த்துப்பான் என்று... இது நிஜமும் கூட பாஸ்.
மச்சாள் புராணம் மருமோனிடம் இருந்து ஒரு வேறுபட்ட பதிவு ஜனாவின் முடிவு மனதை கனக்கவைத்தது...
பதிலளிநீக்குமதுரன் கூறியது...
பதிலளிநீக்கு//யுவரானார் மதுரன்
பொய் சொல்லுறாரு....... :(
மதுரன் மச்சாள் ஆக்களோட அடிக்கிற லூட்டி நமக்கு தெரியாதாக்கும்
ஹீ ஹீ///
அடப்பாவியளா.. புரளிய கிளப்பீராதிங்கப்பு. நான் ரொம்ப நல்லவன்.. அப்பாவி... முக்கியமா குழந்தை.. ஹி ஹி
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
இங்கே புதுசா கிளப்ப என்னய்யா இருக்கு.... உண்மை சொன்னா ஒத்துக்கணும்...
என்னது குழந்தையா....????
யுவரானர்... இது பீர் அடிக்கும் குழந்தை.. ஹீ ஹீ
கோகுல் கூறியது...
பதிலளிநீக்குநமக்கு சந்தோஷத்தில் ஆகாயத்தில் அப்படியே விர்ர்..ண்னு பறக்கிற ஒரு பீலிங்.ஆனா பாருங்க இவங்களால சந்தோஷமாய் இருந்ததை விட இவங்ககிட்ட மாட்டி நொந்து நூடில்ஸ்சான சம்பவங்களும் அதிகம்.///
சம்பவங்களுமா?சம்பவங்கள் மட்டுமா?
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
ஆஹா..... பையன் எஸ்.ஜே சூர்யா மாதிரி பேசி, மாட்டி விட பாக்கிறான்... டேய் துஷி உசாரு......... வாயைகொடுத்து மாட்டிக்காதா....... அவ்வ
கோகுல் கூறியது...
பதிலளிநீக்குஆனா உலக இளைஞர்களோட(கலைஞர் அல்ல)பாவம் உங்கள சும்மா விடாது போங்க!
<<<<<<<<<<<<<<<<<<<<<<<
ஹீ ஹீ... கண்ணு வைக்காதீங்க பாஸ்....
தனிமரம் கூறியது...
பதிலளிநீக்குஉண்மையில் மச்சாள் மாரை கலியாணம் செய்வது என்பது குடும்பத்தில் பரம்பரை நோய் வரும் என்று சொன்னாலும் உண்னையில் கூட்டுக்குடும்பத்தில் அவர்கள்தான் ஹீரோயினி அவர்களுக்குத் தெரியும் குடும்ப உறவுகளின் குண இயல்பு இரவு வாரன் மிச்சத்திற்கு '
பாஸவேலை இது பற்றி பிறகு சொல்லுகின்றன்!
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
உண்மைதான் பாஸ்... ரத்த சொந்தங்கள் இணையும் போது அங்கே பிறக்கும் குழந்தைகள் பாதிக்கப்படும்... இதனால் தடை பட்ட திருமணங்களும் பல உண்டு..
இந்த விடயத்தில் கடவுள் துரோகி..........
ஒக்கே பாஸ்.. பிறகு வாங்கோ... வேலை முக்கியம்.
அத்தை பெத்த ராட்சஸிகள் ///////////
பதிலளிநீக்குவணக்கம் துஷி! ராட்சகிகள் மகள்களாக பிறந்ததனால், அத்தையும் ராட்சஷியா? டவுட்!
அத்தை பெத்த அழகு ராட்சஸிகளின் அட்டகாசங்கள் இருக்கே... அய்யய்யோ தாங்க முடியாது!!!!!!!!
பதிலளிநீக்குஹி ஹி ஹி உண்மைதான்!!
அத்தை பொண்ணுங்க கூட்டம் கூட்டமாய் இருக்க எல்லாம் ஒரு மச்சம் வேணுமிய்யா.. ////////
பதிலளிநீக்குயாருக்கு அத்தைக்கா?
MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்குபதிவுலகை நாரடிச்ச துஷ்யந்தன் ஒழிக....
அப்பாடா கடுப்பை காட்டியாச்சு...
<<<<<<<<<<<<<<<<<<<<<<<
அவ்வவ்.........
நல்லாத்தானய்யா.. எல்லாம் கடுப்பாரங்க....
இவங்க எல்லாம் சேர்ந்து துஷிக்கு எதிரா ஒரு சங்கம் அமைப்பாங்களோ :(
வன்னியில் இருந்த காலத்திலும் சரி வெளிநாடு வந்த பின்னும் சரி எப்போதுமே நம்மல சுத்தி ஒளிவட்டம் போல ஒரு மச்சாள்ஸ் வட்டம் சுத்தீட்டே இருக்கும். /////////
பதிலளிநீக்குநல்லா குடுத்து வச்ச ஆளய்யா நீ! சரி சரி வெளிநாட்டு மச்சாள்சுக்கும், வன்னி மச்சாள்சுக்கும் என்ன வித்தியாசங்கள்? 6 வித்தியாசம் தருக!
காட்டான் கூறியது...
பதிலளிநீக்குமச்சாள் புராணம் மருமோனிடம் இருந்து ஒரு வேறுபட்ட பதிவு ஜனாவின் முடிவு மனதை கனக்கவைத்தது...
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
தேங்க்ஸ் மாமா.
நீங்கதானே புதுசா ஏதாவது எழுதியா எண்டீங்க
அதான் மாத்தி யோசிட்டேன்..
நிஜம் மாமா.
ஜனா.. இன்றுவரை இருக்கும் மனதோர வலி.
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
பதிலளிநீக்குஅத்தை பெத்த ராட்சஸிகள் ///////////
வணக்கம் துஷி! ராட்சகிகள் மகள்களாக பிறந்ததனால், அத்தையும் ராட்சஷியா? டவுட்!
<<<<<<<<<<<<<<<<<<<<<
வணக்கம் பாஸ்..
என்னய்யா... டவுட்டு இது...?? அவ்வ
அத்தைமார் ராட்சசியா தேவதையா என்று மாமாட்ட (காட்டான் மாமா இல்லையா) தான் கேக்கணும்..
ஹீ ஹீ
சினிமாவுக்கோ பீச்சுக்கோ நாம தனி ஒரு ஆம்பிளையா மச்சாள்ஸ்கூட்டத்தோடு அடிபட்டு குத்துப்பட்டுக்கொண்டு போகும் போது வயசு பசங்க எல்லாம் நம்மல குறுகுறு என்று பொறாமையா பார்க்கும் போது நமக்கு சந்தோஷத்தில் ஆகாயத்தில் அப்படியே விர்ர்..ண்னு பறக்கிற ஒரு பீலிங்.//////////
பதிலளிநீக்குஐயோ ஐயோ! அதை ஞாபகப்படுத்தாதீங்க! ம்..... அதெல்லாம் ஒரு காலம்!
எனக்கு இப்பதான் ஞாபகம் வருது! அணமியில் Suisse போனீர்கள் தானே! அது மச்சாளவைப் பார்க்கத்தானே!
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
பதிலளிநீக்குஅத்தை பெத்த அழகு ராட்சஸிகளின் அட்டகாசங்கள் இருக்கே... அய்யய்யோ தாங்க முடியாது!!!!!!!!
ஹி ஹி ஹி உண்மைதான்!!
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
பார்டா.... நம்ம ஜடியா மணியும் அனுபவிச்சு இருக்கு... ஹீ ஹீ
வன்னியில் இருக்கும் போது நம்ம வீட்டுக்கு பக்கத்திலேயே ரஸி-ஜனா என்றுரெண்டு மச்சாள்ஸ் இருந்தாங்க. எங்களுக்குள்ளே ஒரு முக்கோண லவ் ஓடிட்டேஇருந்திச்சு.////////
பதிலளிநீக்குநீங்க யாரையும் கூட்டிக்கொண்டு ஓடலையா?
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
பதிலளிநீக்குஅத்தை பொண்ணுங்க கூட்டம் கூட்டமாய் இருக்க எல்லாம் ஒரு மச்சம் வேணுமிய்யா.. ////////
யாருக்கு அத்தைக்கா?
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
யோவ்.... நீங்க அத்தைமாறிலேயே குறியாய் இருக்கீர் ???
அவரா நீரு??????? ஹீ ஹீ
கூட்டத்தோட கூட்டமாய் வீட்டுல நாம எங்கயாவது ஆ..ண்ணு பார்த்துட்டு நிக்கும் போது டக்குண்ணு இவ வந்து நமக்கு
பதிலளிநீக்குகிஸ் அடிச்சுட்டு எதுவும் தெரியாதவ போல் அடுத்த பக்கம் திரும்பி சிரிச்சுட்டு நிப்பா..///////
சுமாரா எத்தனை?????
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
பதிலளிநீக்குவன்னியில் இருந்த காலத்திலும் சரி வெளிநாடு வந்த பின்னும் சரி எப்போதுமே நம்மல சுத்தி ஒளிவட்டம் போல ஒரு மச்சாள்ஸ் வட்டம் சுத்தீட்டே இருக்கும். /////////
நல்லா குடுத்து வச்ச ஆளய்யா நீ! சரி சரி வெளிநாட்டு மச்சாள்சுக்கும், வன்னி மச்சாள்சுக்கும் என்ன வித்தியாசங்கள்? 6 வித்தியாசம் தருக!
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
நிறையா சொல்லலாம்...
( அடுத்த பதிவுக்கு ஜடியா தந்த ஜடியா மணி வாழ்க)
ஊரில் இருக்கும் மச்சாள்சிடம் பார்த்த அந்த எதார்த்தம்
வெளிநாட்டு மச்சாள்சிடம் மிஸ்ஸிங்...... மேலே சொன்னா அவங்க கடுப்பாயிருவாங்க பாஸ் அவ்வவ்
நமக்கு ரெம்ப அவமானமாய் போயிரும், அவளை ஒரு முறைப்பு பார்வை பார்த்து விட்டு ஓடிப்போய்
பதிலளிநீக்கு2,3 தரம் சோப் போட்டு முகம் கழுவி அவ கிஸ் கொடுத்த இடத்துக்கு பவுடர் எல்லாத்தையும் அள்ளி தப்பி கொண்டு மோருக்க விழுந்த சுண்டெலி மாதிரி அவ முன்னால வந்து நின்னு ஒரு லுக்கு விடுவோம் பாருங்க.. ////////
துஷி, இது பழைய சம்பவம் தானே! ஆனால், இப்போது அந்த மச்சாள் வந்து கிஸ் அடிச்சா என்ன பண்ணுவீங்க? சோப் போட்டு கழுவுவீங்களா?
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
பதிலளிநீக்குசினிமாவுக்கோ பீச்சுக்கோ நாம தனி ஒரு ஆம்பிளையா மச்சாள்ஸ்கூட்டத்தோடு அடிபட்டு குத்துப்பட்டுக்கொண்டு போகும் போது வயசு பசங்க எல்லாம் நம்மல குறுகுறு என்று பொறாமையா பார்க்கும் போது நமக்கு சந்தோஷத்தில் ஆகாயத்தில் அப்படியே விர்ர்..ண்னு பறக்கிற ஒரு பீலிங்.//////////
ஐயோ ஐயோ! அதை ஞாபகப்படுத்தாதீங்க! ம்..... அதெல்லாம் ஒரு காலம்!
எனக்கு இப்பதான் ஞாபகம் வருது! அணமியில் Suisse போனீர்கள் தானே! அது மச்சாளவைப் பார்க்கத்தானே!
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
கரெக்டா கண்டு புடிச்சிட்டேளா... அவ்வவ்
எப்புடித்தான் முடியுதோ :(
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
பதிலளிநீக்குவன்னியில் இருக்கும் போது நம்ம வீட்டுக்கு பக்கத்திலேயே ரஸி-ஜனா என்றுரெண்டு மச்சாள்ஸ் இருந்தாங்க. எங்களுக்குள்ளே ஒரு முக்கோண லவ் ஓடிட்டேஇருந்திச்சு.////////
நீங்க யாரையும் கூட்டிக்கொண்டு ஓடலையா?
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
ஓட ..... விட்டாங்களா??? படுபாவி பசங்க..... அவ்வ
போங்க துஷி உங்கள நினைச்சாலே பொறாமையா இருக்கு.
பதிலளிநீக்குஎனக்கிருக்கிற மாச்சாள் மாருக்கு ஒன்றில் 35 வயதுகளைக் கடந்திருக்கும், இல்லாவிட்டால் 7 வயதுக்கு குறைவாக இருக்கும். மச்சாள் மாரை லவ்வும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவேயில்லை. இனியும் சாத்தியமில்லை.
அனுபவிங்க.
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
பதிலளிநீக்குகூட்டத்தோட கூட்டமாய் வீட்டுல நாம எங்கயாவது ஆ..ண்ணு பார்த்துட்டு நிக்கும் போது டக்குண்ணு இவ வந்து நமக்கு
கிஸ் அடிச்சுட்டு எதுவும் தெரியாதவ போல் அடுத்த பக்கம் திரும்பி சிரிச்சுட்டு நிப்பா..///////
சுமாரா எத்தனை?????
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
ஹீ ஹீ ....
விடுங்க விடுங்க... கண்டுக்காதீங்க பாஸ்.
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
பதிலளிநீக்குநமக்கு ரெம்ப அவமானமாய் போயிரும், அவளை ஒரு முறைப்பு பார்வை பார்த்து விட்டு ஓடிப்போய்
2,3 தரம் சோப் போட்டு முகம் கழுவி அவ கிஸ் கொடுத்த இடத்துக்கு பவுடர் எல்லாத்தையும் அள்ளி தப்பி கொண்டு மோருக்க விழுந்த சுண்டெலி மாதிரி அவ முன்னால வந்து நின்னு ஒரு லுக்கு விடுவோம் பாருங்க.. ////////
துஷி, இது பழைய சம்பவம் தானே! ஆனால், இப்போது அந்த மச்சாள் வந்து கிஸ் அடிச்சா என்ன பண்ணுவீங்க? சோப் போட்டு கழுவுவீங்களா?
<<<<<<<<<<<<<<<<<<<<<<<
ஹீ ஹீ.....
கொக்காமக்கா ....... துஷி அவ்ளோ இளிச்ச வாயா என்ன...
நாமளும் சேர்ந்து புகுந்து விளையாடிட மாட்டோம்.. ஹீ ஹீ.
மருதமூரான். கூறியது...
பதிலளிநீக்குபோங்க துஷி உங்கள நினைச்சாலே பொறாமையா இருக்கு.
எனக்கிருக்கிற மாச்சாள் மாருக்கு ஒன்றில் 35 வயதுகளைக் கடந்திருக்கும், இல்லாவிட்டால் 7 வயதுக்கு குறைவாக இருக்கும். மச்சாள் மாரை லவ்வும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவேயில்லை. இனியும் சாத்தியமில்லை.
அனுபவிங்க.
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
பாஸ் பாஸ்.. கண்ணு வைக்காதீங்க.... ஹீ ஹீ
அடப்பாவமே.... இவ்ளோ பாவப்பட்ட ஆளா நீங்க??
கடவுள் சதிகாரன் பாஸ் (கூடவே அத்தை அண்ட் மாமாவும்).
அப்புறம் மச்சாள்சுக்கு வயது அதிகம் என்று கவலைப்படாதீங்க
நான் போட்ட " வயது அதிகமான பெண்களை காதலிப்பது தப்ப..? "
என்ற பதிவை நீங்க இன்னும் படிக்கவில்லையா ... ஹீ ஹீ
////துஷ்யந்தன் கூறியது...
பதிலளிநீக்குபாஸ் பாஸ்.. கண்ணு வைக்காதீங்க.... ஹீ ஹீ
அடப்பாவமே.... இவ்ளோ பாவப்பட்ட ஆளா நீங்க??
கடவுள் சதிகாரன் பாஸ் (கூடவே அத்தை அண்ட் மாமாவும்).
அப்புறம் மச்சாள்சுக்கு வயது அதிகம் என்று கவலைப்படாதீங்க
நான் போட்ட " வயது அதிகமான பெண்களை காதலிப்பது தப்ப..? "
என்ற பதிவை நீங்க இன்னும் படிக்கவில்லையா ... ஹீ ஹீ/////
எனக்கு 15 வயசு இருக்கிறபோதுதான் அவர்கள் என்னைவிட 20 வயது அதிகமானவர்களாக இருப்பார்கள். இப்போது எல்லோருக்கும் என்னுடைய வயதுகளிலெல்லாம் பிள்ளைகள் உண்டு. ஹிஹிஹி.
துஷி, உங்கள் மச்சாள் ஜனா இறந்த செய்தி அதிர்ச்சியாக உள்ளது!
பதிலளிநீக்குஅதைவிட அதிர்ச்சியான செய்தி ஒன்று சொல்லட்டுமா?
உங்கள் மச்சாளுக்கு அரசாங்க மருத்துவமனையில், நிரந்தர உத்தியோகம் கிடைச்சு, வெறும் மூன்று மாதங்களே ஆனநிலையில்தான் அந்தச் சம்பவம் நடந்தது!
அதில் டொக்டர் ஜெயபாலினா ( வி சி டொக்டர் ), அவரின் மனைவி பொன்னம்மா, சாரதி, மற்றும் உங்கள் மச்சாள் ஜனா ஆகியோர் சாவடைந்தார்கள்!
08.08.2006 அன்று இச்சம்பவம் நடந்தது! துஷி, உங்கள் மச்சாளின் செத்தவீட்டுக்கு நானும் போனேன்! அவர்களுக்காக, பல கண்ணீர் அஞ்சலி பிரசுரங்கள் வெளியிடப்பட்டன! அதில் எனது கவிதையும் உள்ளது!
மேலும் உங்களது ரஸி மச்சாளையும் எனக்கு நன்கு தெரியும்! அவருகு இன்னொரு பெயர் உண்டு! - ரஜினி!
அவரும் வீரச்சாவு! உங்கள் மாமாவின் பெயர் திருநாவுக்கரசு தானே!
துஷி நான் சொன்ன விபரங்கள் சரிதானா?
துஷி என்னை மன்னிக்கவும்! என்னை துயரத்தில் ஆழ்த்திய பல வன்னிச் சம்பவங்களில், உங்கள் மச்சாள்கள் இருவரதும் இறப்பும் அடங்கும்!
பதிலளிநீக்குஇது தெரியாமல் மேலே கும்மிவிட்டேன்! ஐ ஆம் வெரி ஸாரி!
நல்லாருங்கண்ணே.......
பதிலளிநீக்குஎல்லாம் கலந்து கட்டி அடிக்கிறியள்?தமிழ் திரைப்படத்துக்கு கதை எழுத,வசன கர்த்தாவாப் போறதுக்கு ஏற்ற வல்லமை உங்களிட்ட இருக்கு!நக்கல் இல்லை,உண்மையாத்தான் சொல்லுறன்!கதை சொன்ன விதம் அருமை,உண்மையிலேயே!BONNE CHANCE!
பதிலளிநீக்குPowder Star - Dr. ஐடியாமணி கூறியது...
பதிலளிநீக்குதுஷி, உங்கள் மச்சாள் ஜனா இறந்த செய்தி அதிர்ச்சியாக உள்ளது!
அதைவிட அதிர்ச்சியான செய்தி ஒன்று சொல்லட்டுமா?
உங்கள் மச்சாளுக்கு அரசாங்க மருத்துவமனையில், நிரந்தர உத்தியோகம் கிடைச்சு, வெறும் மூன்று மாதங்களே ஆனநிலையில்தான் அந்தச் சம்பவம் நடந்தது!
அதில் டொக்டர் ஜெயபாலினா ( வி சி டொக்டர் ), அவரின் மனைவி பொன்னம்மா, சாரதி, மற்றும் உங்கள் மச்சாள் ஜனா ஆகியோர் சாவடைந்தார்கள்!
08.08.2006 அன்று இச்சம்பவம் நடந்தது! துஷி, உங்கள் மச்சாளின் செத்தவீட்டுக்கு நானும் போனேன்! அவர்களுக்காக, பல கண்ணீர் அஞ்சலி பிரசுரங்கள் வெளியிடப்பட்டன! அதில் எனது கவிதையும் உள்ளது!
மேலும் உங்களது ரஸி மச்சாளையும் எனக்கு நன்கு தெரியும்! அவருகு இன்னொரு பெயர் உண்டு! - ரஜினி!
அவரும் வீரச்சாவு! உங்கள் மாமாவின் பெயர் திருநாவுக்கரசு தானே!
துஷி நான் சொன்ன விபரங்கள் சரிதானா?
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
அண்ணா... நீங்கள் சொன்ன அத்தனை தகவல்களும் நிஜமே.....
ஜனா மச்சாளின் தகவல்கள் சரியே....
ஆனால் ரஷி மாச்சாளின் இன்னொரு பெயர் ரஜனிதான் நீங்கள் சொல்லியவர்தான் அவர் அனால் அவர் இறக்கவில்லை. அவரை பற்றிய
மேலதிக தகவல்களை அவரின் பாதுகாப்பு கருதி இங்கே சொல்ல முடியவில்லை.. பிறகு சொல்கிறேன் மன்னிக்கவும்.
ஆச்சரியமாய் இருக்கு........ விசி டாக்டர் என் அப்பாவின் நண்ப கூட... சின்ன வயதில் நெடுங்கேணியில் அவர் ரொபி தந்து சிரிப்புக்காட்டி ஊசி போடுவது எல்லாம் இப்பவும் மறைதாத நினைவுகளாக.... அவர் என்னை மாப்பிளை என்றுதான் சின்ன வயசில் அழைப்பார்.
உலகம் ரெம்ப சின்னன் என்று சொல்வார்கள்
அதுதான் இப்போ எனக்கு நினைவு வருது.
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
பதிலளிநீக்குதுஷி என்னை மன்னிக்கவும்! என்னை துயரத்தில் ஆழ்த்திய பல வன்னிச் சம்பவங்களில், உங்கள் மச்சாள்கள் இருவரதும் இறப்பும் அடங்கும்!
இது தெரியாமல் மேலே கும்மிவிட்டேன்! ஐ ஆம் வெரி ஸாரி!
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
பாஸ்.... இதுக்கு போய்.... தெரியாமல்தானே பேசினீர்கள்... விடுங்கள்.... ;)
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
பதிலளிநீக்குநல்லாருங்கண்ணே.......
<<<<<<<<<<<<<<<<<<<<<<<
வணக்கம் அண்ணே...
அட என்னப்பா இன்றைக்கு நம்ம கடைக்கு பெரிய பெரிய ஆக்கள் எல்லாம் வாறாங்க
ஹீ ஹீ... தேங்க்ஸ் அண்ணே.
மருதமூரான். கூறியது...
பதிலளிநீக்கு////துஷ்யந்தன் கூறியது...
பாஸ் பாஸ்.. கண்ணு வைக்காதீங்க.... ஹீ ஹீ
அடப்பாவமே.... இவ்ளோ பாவப்பட்ட ஆளா நீங்க??
கடவுள் சதிகாரன் பாஸ் (கூடவே அத்தை அண்ட் மாமாவும்).
அப்புறம் மச்சாள்சுக்கு வயது அதிகம் என்று கவலைப்படாதீங்க
நான் போட்ட " வயது அதிகமான பெண்களை காதலிப்பது தப்ப..? "
என்ற பதிவை நீங்க இன்னும் படிக்கவில்லையா ... ஹீ ஹீ/////
எனக்கு 15 வயசு இருக்கிறபோதுதான் அவர்கள் என்னைவிட 20 வயது அதிகமானவர்களாக இருப்பார்கள். இப்போது எல்லோருக்கும் என்னுடைய வயதுகளிலெல்லாம் பிள்ளைகள் உண்டு. ஹிஹிஹி.
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
அச்சச்சோ........
ஹீ ஹீ
நீங்க ரெம்ப பாவம் பாஸ்.
Yoga.s.FR கூறியது...
பதிலளிநீக்குஎல்லாம் கலந்து கட்டி அடிக்கிறியள்?தமிழ் திரைப்படத்துக்கு கதை எழுத,வசன கர்த்தாவாப் போறதுக்கு ஏற்ற வல்லமை உங்களிட்ட இருக்கு!நக்கல் இல்லை,உண்மையாத்தான் சொல்லுறன்!கதை சொன்ன விதம் அருமை,உண்மையிலேயே!BONNE CHANCE!
<<<<<<<<<<<<<<<<<<<<<<
வணக்கம் யோகா அண்ணா.
ரியலி........ தேங்க்ஸ் அண்ணா.
ரெம்ப சந்தோசமா இருக்கு.....
ஆனால் நாம இன்னும் கத்துக்குட்டி
சோ இன்னும் வளரனும் (மூளை) என்று நினைக்குறேன்...
உங்கள் அன்புக்கு நன்றி பாஸ்.
ரொம்ப லேட்டாகி வந்துட்டேனோ...
பதிலளிநீக்குநிறைய அத்தை பொண்ணுங்க இருக்கு போல.. அப்ப மகிழ்ச்சிதான்..
இப்படியும் சொல்லலாமே..
ஒவ்வொரு மச்சாள்ஸ்ம் தேவை மச்சான்,
பிளாக்கின் எழுத்துக்களை கருப்பிலேயே வைத்திருக்கலாமே..
துஷி யாரையோ கடுப்பேத்த தான் இந்த பதிவை எழுதியுள்ளார் மக்கள்ஸ் )))
பதிலளிநீக்குபின் குறிப்பு ;- எந்த ஒரு மனைவியும் தன கணவன் இன்னொரு பெண்ணை(களை) பற்றி புகழ்வதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டா ;-))
///நமக்கு ரெம்ப அவமானமாய் போயிரும், அவளை ஒரு முறைப்பு பார்வை பார்த்து விட்டு ஓடிப்போய்
பதிலளிநீக்கு2,3 தரம் சோப் போட்டு முகம் கழுவி அவ கிஸ் கொடுத்த இடத்துக்கு பவுடர் எல்லாத்தையும் அள்ளி தப்பி கொண்டு///// ஏன் இன்னொரு மச்சாளிடம் அடுத்த முத்தம் வாங்கவா ;-))
பொறாமையாய் இருக்கியா பொறாமையாய் இருக்கு ... எனக்கு ஒரு மச்சாளும் இல்லாமல் போயிட்டுதேஏஏஏ ...
பதிலளிநீக்குகுத்த வைச்ச பொண்ணு எல்லாம் இங்கே அத்தை பொண்ணுதான்]
பதிலளிநீக்குமத்த பொண்ணு எல்லாம் இங்கே மாமன் பொண்ணுதான்....
உடம்பு முழுதும் மச்சம் உங்களுக்கு...அசத்துங்க.....வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குசாரி மச்சி எனக்கு ஆரோ ஆப்பு வைச்சுட்டாங்க.....அதான் லேட்டாகிடுச்சி....இப்ப ஓக்கே...
பதிலளிநீக்குயோவ் உங்களுக்கு உடம் பெல்லாம் மச்சம்யா...
பதிலளிநீக்குஅது சின்ன வயசில் ஒரு மச்சாள் இயக்கத்துக்கு போய்ட்டாள் மற்றவங்களைப்பத்தி சொல்லவில்லை அவங்க இப்ப எஙக இருக்காங்க?
பதிலளிநீக்குபாவம்யா உமக்கு வரும் காலத்தில் பொண்டாட்டியா வரும் பொண்ணு அதுக்கு உங்களை மச்சாள்கள் கிட்ட இருந்து காப்பாத்துறதே வேலையாய் இருக்கப்போகுது...............
பதிலளிநீக்குஉங்கள் மச்சாள் போல எத்தனை பேரின் உயிரை யுத்தம் பறித்துவிட்டது...மறக்க நினைக்கின்ற ஆனால் மறக்கமுடியாத நினைவுகள்...
பதிலளிநீக்குஎல்லாம் சரி உங்கள் மச்சாள்கள் டாகுத்தர் ரசிகைகள் என்று சொல்லி மேலும் கும்ம முடியாமல் ஆக்கிபுட்டீங்க அது என்னமோ டாகுத்தர் பெயரை கேட்டாலே நமக்கு ஆகுது இல்லை..ஹி.ஹி.ஹி.ஹி......
பதிலளிநீக்குமிக அழகாக எழுதிப் போகிறீர்கள்
பதிலளிநீக்குஅழகிய ராட்சஷிகள் என
தலைப்பிட்டிருக்கலாமோ
சுவாரஸ்யமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 15
கிளைமோர் வெடிச்ச அந்த இடத்திலேயே அந்த பிள்ளைகளை அடக்கம் செய்ததது கொடுமை
பதிலளிநீக்குஅந்த வழியால போன அதுதான் யாபகம்
டைட்டிலில் ராட்சசிக்கு முன் அழகான சேர்த்திருக்கலாம்
பதிலளிநீக்குநகைச்சுவையாக இருந்தாலும்
பதிலளிநீக்குநடுநடுவே சொல்லபட்ட சில
செயிதிகள் மனச்சுமைத்
தருவதாக உள்ளன!
நன்றி
புலவர் சா இராமாநுசம்
ஆனா பாருங்க, போன இடத்தில் மச்சாள்ஸ் அன்பில் கிறங்கிப்போய், பயணக்கட்டுரைக்கு பதில் மச்சாள்ஸ் கட்டுரை போட்டுட்டேனுங்க. ஹீ..ஹீ.//// சூப்பர் சகோ...
பதிலளிநீக்கு. ஜாலியான பதிவு.
பதிலளிநீக்குதுஷ் ஜகஜோதியா வாழ்ந்திருக்காரே..நமக்குத் தான் வாழ்க்கை பாலைவனமாப் போச்சு, ஹும்!
பதிலளிநீக்குபயணம் போனீங்களா?..கிஸ் ராஜா நீங்க ஹனிமூன் ட்ரிப் போயிருக்கிறதாச் சொன்னாரே..
பதிலளிநீக்கு////
பதிலளிநீக்குசெங்கோவி கூறியது...
பயணம் போனீங்களா?..கிஸ் ராஜா நீங்க ஹனிமூன் ட்ரிப் போயிருக்கிறதாச் சொன்னாரே////
பயணம் என்றால் பலதும் பத்தும் இருக்கத்தான் செய்யும் பாஸ் இதை இனி துஷி வேற டீட்டேலா விளக்கனுமா..நான் சொன்னது புரிஞ்சுட்டுதானே பிறகு அதை துஷி வாயல வேற கேட்டனுமா?ஹி.ஹி.ஹி.ஹி.ஹி....
இனிய காலை வணக்கம் மச்சி,
பதிலளிநீக்குஎழுத்து நடை கலக்கல்,
சம்வங்களைக் கோர்த்த விதமும் அசத்தல்,
மச்சாள்மாரின் கிஸ் அடிப்பு மேட்டரைச் சொல்லிப் பதிவிற்குச் சுவாரஸ்யம் கூட்டிப் பதிவினை நகர்த்திய நீங்கள் மேலும் படித்து உங்களைக் கலாய்க்க முடியாதவாறு வேதனையான சம்பவத்தைப் பகிர்ந்திருக்கிறீங்க.
காலம் சில வேளைகளில் எம் ஆசைகளுக்கு கடிவாளம் போடுகின்றது என்பது இப் பதிவினைப் படிக்கையில் தான் தெரிகின்றது.
பதிலளிநீக்குபதிவின் கலரை பிங் நிறத்திற்குப் பதிலாக வேறு கலரில் தரலாமே பாஸ்...
Riyas சொன்னது…
பதிலளிநீக்குரொம்ப லேட்டாகி வந்துட்டேனோ...
நிறைய அத்தை பொண்ணுங்க இருக்கு போல.. அப்ப மகிழ்ச்சிதான்..
இப்படியும் சொல்லலாமே..
ஒவ்வொரு மச்சாள்ஸ்ம் தேவை மச்சான்,
பிளாக்கின் எழுத்துக்களை கருப்பிலேயே வைத்திருக்கலாமே..
<<<<<<<<<<<<<<<<<<<<<<
தேங்க்ஸ் பாஸ்...
இதோ மாத்தீட்டேன் பாஸ்.
கந்தசாமி. சொன்னது…
பதிலளிநீக்குதுஷி யாரையோ கடுப்பேத்த தான் இந்த பதிவை எழுதியுள்ளார் மக்கள்ஸ் )))
பின் குறிப்பு ;- எந்த ஒரு மனைவியும் தன கணவன் இன்னொரு பெண்ணை(களை) பற்றி புகழ்வதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டா ;-))
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
யோவ்... எப்படிய்யா .... இப்புடி புட்டு புட்டு வைக்கீறீர்...... அவ்வவ்
கந்தசாமி. சொன்னது…
பதிலளிநீக்கு///நமக்கு ரெம்ப அவமானமாய் போயிரும், அவளை ஒரு முறைப்பு பார்வை பார்த்து விட்டு ஓடிப்போய்
2,3 தரம் சோப் போட்டு முகம் கழுவி அவ கிஸ் கொடுத்த இடத்துக்கு பவுடர் எல்லாத்தையும் அள்ளி தப்பி கொண்டு///// ஏன் இன்னொரு மச்சாளிடம் அடுத்த முத்தம் வாங்கவா ;-))
<<<<<<<<<<<<<<<<<<<<<<<
ஆஹா..... இந்த கொலை வெறி உடம்புக்கு ஆகாது... அவ்வ
கந்தசாமி. கூறியது...
பதிலளிநீக்குபொறாமையாய் இருக்கியா பொறாமையாய் இருக்கு ... எனக்கு ஒரு மச்சாளும் இல்லாமல் போயிட்டுதேஏஏஏ ...
<<<<<<<<<<<<<<<<<<<<<
யோவ்.... கண்ணு வைகாதையா........ஹீ ஹீ
அது சரி எனக்கு மச்சாள் இல்லை என்ற சத்திய வாக்கை நம்ப முடியாம இருக்கே...
மகேந்திரன் சொன்னது…
பதிலளிநீக்குகுத்த வைச்ச பொண்ணு எல்லாம் இங்கே அத்தை பொண்ணுதான்]
மத்த பொண்ணு எல்லாம் இங்கே மாமன் பொண்ணுதான்....
<<<<<<<<<<<<<<<<<
அவ்வவ்.....
அப்படியா சொல்லுறீங்க....??
நீங்க எல்லாம் ரெம்ப விவரமான ஆள்தான் போல, ஹா ஹா
ரெவெரி சொன்னது…
பதிலளிநீக்குஉடம்பு முழுதும் மச்சம் உங்களுக்கு...அசத்துங்க.....வாழ்த்துக்கள்...
<<<<<<<<<<<<<<
ஹீ ஹீ... தேங்க்ஸ் பாஸ்.
.s.s.Rajh சொன்னது…
பதிலளிநீக்குசாரி மச்சி எனக்கு ஆரோ ஆப்பு வைச்சுட்டாங்க.....அதான் லேட்டாகிடுச்சி....இப்ப ஓக்கே...
<<<<<<<<<<<<<<<<<
அப்படியா..... யாருய்யா அது நம்ம கிஸ் ராஜ் மேலே கையை வச்சது ?? பிச்சுப்புடுவேன் பிச்சு
Rajh சொன்னது…
பதிலளிநீக்குயோவ் உங்களுக்கு உடம் பெல்லாம் மச்சம்யா...
<<<<<<<<<<<<<<<<
யோவ்.... என்னய்யா எல்லோரும் என் மேலே கண் வைக்கிறீங்க..... அம்மாட்ட சொல்லி சுத்திப்போடனுமைய்யா... ஹீ ஹீ
K.s.s.Rajh சொன்னது…
பதிலளிநீக்குஅது சின்ன வயசில் ஒரு மச்சாள் இயக்கத்துக்கு போய்ட்டாள் மற்றவங்களைப்பத்தி சொல்லவில்லை அவங்க இப்ப எஙக இருக்காங்க?
<<<<<<<<<<<<<<<<
கிஸ் ராஜாவுக்கு... ஆசிய பாரு.....??? ஹீ ஹீ... சொல்ல மாட்டோமே...
K.s.s.Rajh சொன்னது…
பதிலளிநீக்குபாவம்யா உமக்கு வரும் காலத்தில் பொண்டாட்டியா வரும் பொண்ணு அதுக்கு உங்களை மச்சாள்கள் கிட்ட இருந்து காப்பாத்துறதே வேலையாய் இருக்கப்போகுது...............
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
ஹும்.... இரக்கப்படுற மாதிரி போட்டு கொடுக்குற இல்ல மச்சி.. அவ்
K.s.s.Rajh சொன்னது…
பதிலளிநீக்குஉங்கள் மச்சாள் போல எத்தனை பேரின் உயிரை யுத்தம் பறித்துவிட்டது...மறக்க நினைக்கின்ற ஆனால் மறக்கமுடியாத நினைவுகள்...
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
உண்மைதான் நண்பா..... நாம் ரெம்ப பாவப்பட்டவர்கள்.. விடுங்கள் இதைப்பற்றி பேச போனால் மனசே உடைந்து விடும். :(
K.s.s.Rajh சொன்னது…
பதிலளிநீக்குஎல்லாம் சரி உங்கள் மச்சாள்கள் டாகுத்தர் ரசிகைகள் என்று சொல்லி மேலும் கும்ம முடியாமல் ஆக்கிபுட்டீங்க அது என்னமோ டாகுத்தர் பெயரை கேட்டாலே நமக்கு ஆகுது இல்லை..ஹி.ஹி.ஹி.ஹி......
<<<<<<<<<<<<<<<
ஹீ ஹீ... ஏன்ய்யா..... விஜய் மேலே இந்த கொலை வெறி..... நீரும் வர வர தனிமரம் போல தாக்குறாய் விஜயை... அது எப்படி எல்லா பொண்ணுங்களுக்கும் விஜய் புடிக்குது.... இதுதான் உங்க பொறாமையோ... ஹா ஹா
Ramani சொன்னது…
பதிலளிநீக்குமிக அழகாக எழுதிப் போகிறீர்கள்
அழகிய ராட்சஷிகள் என
தலைப்பிட்டிருக்கலாமோ
சுவாரஸ்யமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 15
<<<<<<<<<<<<<<<<
தேங்க்ஸ் ரமணி சார். பெயரை மாற்றி விட்டேன்...... தேங்க்ஸ் சார்.
கவி அழகன் சொன்னது…
பதிலளிநீக்குகிளைமோர் வெடிச்ச அந்த இடத்திலேயே அந்த பிள்ளைகளை அடக்கம் செய்ததது கொடுமை
அந்த வழியால போன அதுதான் யாபகம்
<<<<<<<<<<<<<<<<<<<
ஹும்...... ரெம்ப கொடுமை நண்பா :(
சி.பி.செந்தில்குமார் சொன்னது…
பதிலளிநீக்குடைட்டிலில் ராட்சசிக்கு முன் அழகான சேர்த்திருக்கலாம்
<<<<<<<<<<<<
தேங்க்ஸ் பாஸ்.... நிறைய பெயர் இதைத்தான் சொல்கிறீர்கள்..... மாற்றி விட்டேன் பாஸ்.
புலவர் சா இராமாநுசம் சொன்னது…
பதிலளிநீக்குநகைச்சுவையாக இருந்தாலும்
நடுநடுவே சொல்லபட்ட சில
செயிதிகள் மனச்சுமைத்
தருவதாக உள்ளன!
நன்றி
புலவர் சா இராமாநுசம்
<<<<<<<<<<<<<<<<<<
நன்றி ஜயா ...
!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…
பதிலளிநீக்குஆனா பாருங்க, போன இடத்தில் மச்சாள்ஸ் அன்பில் கிறங்கிப்போய், பயணக்கட்டுரைக்கு பதில் மச்சாள்ஸ் கட்டுரை போட்டுட்டேனுங்க. ஹீ..ஹீ.//// சூப்பர் சகோ...
<<<<<<<<<<<<<
தேங்க்ஸ் பாஸ்
தமிழ் உதயம் சொன்னது…
பதிலளிநீக்கு. ஜாலியான பதிவு.
<<<<<<<<<<<<<<<<<<<<<<
தேங்க்ஸ் பாஸ்
செங்கோவி சொன்னது…
பதிலளிநீக்குதுஷ் ஜகஜோதியா வாழ்ந்திருக்காரே..நமக்குத் தான் வாழ்க்கை பாலைவனமாப் போச்சு, ஹும்!
<<<<<<<<<<<<<<<
வணக்கம் அண்ணா... எப்புடி இருக்கீங்க... தேங்க்ஸ்... ஆனால் இதை நம்ப முடியாம இருக்கே.... ஹீ ஹீ, அவ்ளோ பாவமா நீங்க??? அவ்வ
செங்கோவி சொன்னது…
பதிலளிநீக்குபயணம் போனீங்களா?..கிஸ் ராஜா நீங்க ஹனிமூன் ட்ரிப் போயிருக்கிறதாச் சொன்னாரே..
<<<<<<<<<<<<<<<<<
அவரும் கந்தசாமியும் என் இமேஜை டேமேஜ் ஆக்கிரதிலேயே குறியா இருக்காங்க அண்ணா... அவ்வ்வ்வ்... கெட்ட பசங்கlol:((
K.s.s.Rajh சொன்னது…
பதிலளிநீக்கு////
செங்கோவி கூறியது...
பயணம் போனீங்களா?..கிஸ் ராஜா நீங்க ஹனிமூன் ட்ரிப் போயிருக்கிறதாச் சொன்னாரே////
பயணம் என்றால் பலதும் பத்தும் இருக்கத்தான் செய்யும் பாஸ் இதை இனி துஷி வேற டீட்டேலா விளக்கனுமா..நான் சொன்னது புரிஞ்சுட்டுதானே பிறகு அதை துஷி வாயல வேற கேட்டனுமா?ஹி.ஹி.ஹி.ஹி.ஹி....
<<<<<<<<<<<<<<<<<<<<
யோவ்.... வந்துட்டியா.............. அவ்
ஏன்ய்யா இந்த கொலை வெறி தாக்குதல், துஷி பாவம் இல்ல.... அவ்வ
நிரூபன் சொன்னது…
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் மச்சி,
எழுத்து நடை கலக்கல்,
சம்வங்களைக் கோர்த்த விதமும் அசத்தல்,
மச்சாள்மாரின் கிஸ் அடிப்பு மேட்டரைச் சொல்லிப் பதிவிற்குச் சுவாரஸ்யம் கூட்டிப் பதிவினை நகர்த்திய நீங்கள் மேலும் படித்து உங்களைக் கலாய்க்க முடியாதவாறு வேதனையான சம்பவத்தைப் பகிர்ந்திருக்கிறீங்க.
<<<<<<<<<<<<<<<
வணக்கம் அண்ணா... நன்றி... என்ன செய்யா ஜாலியாய் ஒரு மேட்டரை எழுத வந்தால் கூட, நம் வழியை கடந்தே வர வேண்டி உள்ளது :(
நிரூபன் சொன்னது…
பதிலளிநீக்குகாலம் சில வேளைகளில் எம் ஆசைகளுக்கு கடிவாளம் போடுகின்றது என்பது இப் பதிவினைப் படிக்கையில் தான் தெரிகின்றது.
பதிவின் கலரை பிங் நிறத்திற்குப் பதிலாக வேறு கலரில் தரலாமே பாஸ்...
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
நிஜம் பாஸ்..... எம் வாழ்க்கையை கூட பல நேரங்களில் காலங்கள் தான் தீர் மாநிக்கிறது போல்.... நன்றி பாஸ்... கலரை மாற்றி விட்டேன் பாஸ்.
//
பதிலளிநீக்குதுஷ்யந்தன் சொன்னது…
K.s.s.Rajh சொன்னது…
பாவம்யா உமக்கு வரும் காலத்தில் பொண்டாட்டியா வரும் பொண்ணு அதுக்கு உங்களை மச்சாள்கள் கிட்ட இருந்து காப்பாத்துறதே வேலையாய் இருக்கப்போகுது...............
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
ஹும்.... இரக்கப்படுற மாதிரி போட்டு கொடுக்குற இல்ல மச்சி.. அவ்////
காட்டான் மாம்ஸ்தான் இந்த ஜடியாவ சொன்னாரு(அப்பாடா கோத்துவுட்டாச்சி)
மச்சாள் என்கிற வார்த்தை உங்களீடம் இருந்துதான் கற்றுக்கொள்கிறேன். :)
பதிலளிநீக்கு****இப்படி நம்மல தவிக்க விட்டு ரசிச்சாலும், அலைய விட்டு வேடிக்கை பார்த்தாலும், பல நேரங்களில் நம்மல காமெடி பீஸ் ஆக்கினாலும், இப்படி என்னென்னவோ செய்தாலும், நாம சொந்தகாரங்களோட கூட்டத்தோட கூட்டமாய் நிக்கும் போது, ஓடி வந்து அப்படியே நம்ம முதுகில் ஒரு போடு போட்டு மச்சான் எப்படிடா இருக்க..? உன்ன ரெம்ப மிஸ் பண்ணுறேண்டா.. என்று சொல்லும் போது கிடைக்கும் சுகம் இருக்கே... அப்பப்பா.. ***
ரொம்ப அனுபவிச்சுத்தான் எழுதியிருக்கீங்க. :)
கண்ணைப்படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே! :(
//வெளிநாடு வந்த பின்னும் இந்த மச்சாள்ஸ் வட்டம் நமக்கு குறையவே இல்லை.//
பதிலளிநீக்குயோவ் உமக்கு மச்சம் இருக்கா அல்லது மச்சத்துக்குள்ள நீங்க இருக்கிறீங்களா.
அதுதானே இதெல்லாம் தேவையா சகோ ஹி ...ஹி ..ஹி ....மிக்க நன்றி சகோ
பகிர்வுக்கு .என் தளத்தில் பாடல் காத்திருக்கின்றது வாருங்கள் .
அட மருமோனே எல்லா பொடிசுகளும் கண்ணூர் பாக்கிறாங்கையா கொஞ்சம் உப்பையும் ரெண்டு செத்தல் மிளகாயையும் எடுத்து அடுப்பிள போடையா ஹி ஹி குடுத்து வைச்சவண்டா நீ
பதிலளிநீக்குவன்னியில் இருந்த காலத்திலும் சரி வெளிநாடு வந்த பின்னும் சரி எப்போதுமே நம்மல சுத்தி ஒளிவட்டம் போல ஒரு மச்சாள்ஸ் வட்டம் சுத்தீட்டே இருக்கும். ///mmmmmsuuuupparthaan
பதிலளிநீக்குஎன்னது? 7 வயசுலயே ஸ்டார்ட் பண்ணீட்டீங்களா? யோவ். இதெல்லாம் அநியாயம், அக்கிரமம். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
பதிலளிநீக்கும்....துஷி இது பெருமுச்சு !
பதிலளிநீக்குதுசி ரொம்ப பொறாமையா இருக்கு. எனக்கு ஒரு மச்சாள்ஸ்கூட இல்லையே. நான் கொடுத்துவச்சது அம்புட்டும்தான்
பதிலளிநீக்குதுசி கதைசொல்லும் அழகு ஒரு கைதேர்ந்த கதாசிரியரைப்போல ரொம்ப நேர்த்தியாக இருக்கு தொடர்ந்து எழுதுங்கள் தொடவேண்டிய உயரங்கள் நிறைய இருக்கு.
பதிலளிநீக்குதுஷி, எப்பிடி இருக்கிறீங்க!!! கண்டு கனகாலம் போல :)
பதிலளிநீக்குவணக்கம் நண்பரே... தங்களது இந்தப்பதிவு "நண்பர்கள்" ராஜ் என்பவரால் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு கீழுள்ள முகவரிக்குச் சென்று காணவும்... வாழ்த்துக்கள், நன்றி...
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.in/2013/04/blog-post_23.html
interesting post very enjoyable writing
பதிலளிநீக்கு