ஞாயிறு, நவம்பர் 20, 2011

முகமூடி கிழிந்த பிரபல 'மணி'ப்பதிவர்


எனக்கும் அந்த பிரபல பதிவருக்கும் கிட்டத்தட்ட நாலு ஜந்து மாதங்கள் நடந்த இந்த கண்ணாம்பூச்சி விளையாட்டை சொல்ல எனக்கும் நேரமும் இல்லை பொறுமையும் இல்லை ஆகையால் நாற்றில் நிரூபன் போட்ட status  பாருங்கள்.. மிகுதியை நான் சொல்லுகிறேன்.

Selvarajah நிருபன்"நான் மதுரனின் உதவியோடு ஒரு குறும்படம் எடுக்கலாம் என்று ப்ளான் பண்ணியுள்ளேன். வழமையான தமிழ் சினிமா சாயலிலில் நின்றும் விலகி பதிவர்களைப் பற்றிய கருவினை படத்தில் உள்ளடக்கலாம் என்று நினைத்து இக் குறும்படத்திற்கான கதையினை எழுதியுள்ளேன். படத்தின் முக்கிய கட்டம்,
திவர்கள் இருவர் அவர்களின் வலைப் பதிவு எழுத்தால் கவரப்பட்டு ஒருவரை ஒருவர் பார்த்துப் பேச வேண்டும் எனும் ஆவல் நீண்ட நாட்களாய் மனதில் குடி கொண்டிருக்க, இருவருமே சந்திக்க வேண்டும் எனத் தவித்துக் கொண்டிருப்பார்களாம், ஆனால் நேரில் இரு பதிவர்களும், இவர்கள் பதிவர்கள் இல்லை என்ற ரீதியில் ஒவ்வோர் நாளும் சந்தித்துக் கொள்வார்களாம்! அப்போது ஒரு பதிவருக்கு மற்றைய பதிவரைப் பற்றித் தெரியுமாம். ஆனால் மற்றப் பதிவருக்கு இவர் பதிவர் தான் என்று தெரியாதாம்! இப்படி சஸ்பென்ஸுடனும், ஆவலைத் தூண்டும் வகையில் ஒரு சம்பவம் நிஜ வாழ்க்கையில் நடந்தால் எப்படி இருக்கும்..??"

தில் சித்தரிக்கப்படும்  பதிவர்களில் ஒருவர் நான், மற்றவர் அந்த பிரபல 
மணிப்பதிவர்.இதைப்பார்த்ததும் எனக்கும் சிரிப்பு வந்தாலும் கூடவே 
இன்னொரு உண்மையும் தெரிய வந்தது.. சிரிப்பு வந்ததின் காரணம் 
சில நாட்களின் முன்புதான் நான் அவரை அடையாளம் கண்டேன்.
இப்போது தெரிய வந்த உண்மை இவ்ளோ நாளா எங்களுக்குள் நடந்த இந்த 
விளையாட்டு எங்கள் இருவருக்கு மட்டும்தான் தெரியும் என்று நினைத்து இருந்தேன் ஆனால் மூன்றாவதாக இன்னொரு நபருக்கும் இது தெரிந்து 
இருக்கிறது என்பதுதான்.

அந்த பதிவருக்கும் எனக்குமான தொடர்பு எத்தகையது..?
பதிவுலகத்துக்காக எப்பவுமே என் நேரத்தை நான் ஒதுக்கியது இல்லை. எனக்கு கிடைக்கும் நேரங்களில்தான் பதிவுலகை டைம் பாஸுக்கு பயன்படுத்தி வருகிறேன்.  விளையாட்டாய்  எழுதவந்த எனக்கு இவ்ளோ நண்பர்களும் பதிவுலகில் கிடைத்த சிறு அங்கீகாரமும் உண்மையில் 
புரியாத ஆச்சரியம்தான் இத்தனைக்கும் நான் எழுதியது வெறும் 30பதிவுகள்தான். என்னுடைய நண்பர்கள் பதிவுகளுக்கு மட்டுமே போய் 
கருத்துரைகளும் வோட்டும் போட்டு வந்தேன். என் நட்பு வட்டத்துக்குள் புதிதாய் யாரையும் நான் சேர்ப்பதும் இல்லை.

இந்த நிலையில்தான் எனக்கு அந்த பதிவரின் ப்ளாக் அறிமுகம் கிடைத்தது.
நான் ஒரு மொக்கைப்பதிவர் என்று அவர் தன்னை சொல்லிக்கொண்டாலும் 
அவர் பதிவுகளை மொக்கை என்று ஒதுக்கி விட முடியாது.. அத்தனை ஈர்ப்பு ரசனை அவர் எழுத்தில். படித்த மாத்திரத்திலேயே அவர் எழுத்துக்கு அடிமையாகிவிட்டேன்.  சாண்டில்யனின் கட்டு புத்தகங்களை இடைவெளி இன்றி படித்தது போல் அவரில் பழைய பதிவுகளை இரவு இரவாய் நித்திரை முழித்து படித்த நாட்களும் உண்டு. அதன் பின் நானும் அவருடைய புதிய பதிவுகளுக்கு போய் கருத்துரை வோட் போட்டு வந்தாலும்   அவர் நம்ம ப்ளாக்பக்கம் வருவதே இல்லை. என் ப்ளாக் வரும் எல்லா நண்பர்கள் ப்ளாக் பக்கமும் நான் போவதும் இல்லை, நான் போகும் ப்ளாக் நண்பர்கள் எல்லோரும் என் பக்கம் வருவதும் இல்லை. ஆகவே இதை நான் பெருசாக நினைக்காவிட்டாலும் அவர் எனக்கு பிடித்த பதிவர் என்ற முறையில் அவர் கருத்துக்களுக்காக மனம் ஏங்கத்தான் செய்தது. இந்த நிலையில் ஒரு நாள் நான் பதிவிட்ட  பாசமாவது.. பந்தமாவது.. இது வெளிநாடு. என்ற பதிவுக்கு  முதன் முறையாக என் ப்ளாக் வந்த அவர் என்னையும் என் பதிவையும் மிகவும் பாராட்டி கருத்துரைகளை அள்ளி வழங்கியதுடன் என் பதிவை தன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து விட்டதுடன் தனிபட்ட முறையில் என்னுடன் பேசினார். பதிவுலகம் வந்து நான் மிகவும் சந்தோஷமாய் இருந்த நாட்களில் அந்த நாளும் ஒன்று. நமக்கு பிடித்த பதிவர் அதுவும் பதிவுலகில் தனிக்காட்டு ராஜாவாக கொடிகட்டி பறக்கும் பிரபல பதிவர் நம்மை வந்து பாராட்டுகிறார் என்றால் சும்மாவா?? அந்த சந்தோஷத்தை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. இதன் பின் ப்ளாக்-பேஸ்புக் என்று எனக்கும் அவருக்குமான நட்பு மிகவும் நெருங்க தொடங்கிவிட்டது.

யார் அந்த பதிவர்..?
உலகம் ரெம்ப சிறியது என்று சொல்லுவார்கள். இந்த பதிவர் விடயத்தில்
நான் ரெம்ப ரெம்ப சின்னன் என்று உலகம் எனக்கு உணர்த்திவிட்டது. இந்த பதிவர் என் சொந்தகாரர் ஏன் எங்கள் வீட்டுக்கு கூட அடிகடி வரும் ஒரு நபர். அந்த பதிவர் மேல் வைத்த அன்பால் பிரான்சில் அவரை தேடி இருக்கேன்
அவரிடமே விசாரித்து இருக்கேன்.. அவரை பார்க்க ஆசைப்பட்டு இருக்கேன்.
இத்தனைக்கும் அவர் என் முன்னாலேயே  இருந்து எனக்கே கை தந்து என் வீட்டுக்கே வந்து போயிருக்கார் போய்க்கொண்டு இருக்கார்.
அடக்கடவுளே.......!!!!! அவர் எங்கள் வீட்டுக்கு வந்த போதெல்லாம் எப்போதுமே ஹாய்.. ஹலோ.. என்பதை தவிர நான் வேறு வார்த்தை பேசியது இல்லை. காரணம் நான் யாருடனும் அதிகம் பேச மாட்டேன் அதிலும் தமிழ் ஆக்களை பார்த்தால் ஒருவித பதட்டம் நாணமே.. இங்கு எனது நண்பர்கள் லிஸ்ட்டில் தமிழர்கள் இல்லாததும் இதுக்கு ஒரு காரணமாய் இருக்கலாம். நான் தமிழ் நண்பர்களை சம்பாதித்துக்கொண்டதே ப்ளாக் எழுத வந்த பின்புதான். இப்படியான ஒரு சூழ்நிலையில் அந்த பதிவர் வீட்டுக்கு வரும் நேரங்களில் அவர் யார் என்று அடையாளம் தெரியா நிலையில் நான் அவருடன் பேசாமால் ஒரு புன்னகையுடன் அவரை கடந்து போனதில் ஆச்சரியம் இல்லைத்தானே...?
உண்மையில் எங்கள் வீட்டுக்கு வந்தும் அவர் ஆரம்பத்தில் என்னை அடையாளம் காணவில்லைத்தான். அதுவும் "நான்" எல்லாம் ப்ளாக் எழுதுவேன் என்று அவர் கனவிலும் நினைத்து இருக்க மாட்டார். என் ப்ளாக்கில் என்னுடைய புகைப்படத்துடன் என்னைப்பற்றிய தகவல்களும் கிடைப்பதால் பின்பு அவர் என்னை அடையாளம் கொண்டதிலும்  ஆச்சரியம் ஒன்றும் இல்லை. என்னை அடையாளம் தெரிந்து கொண்டும் தான் யாரோ ஒருவர் போல் இருந்து என்னோடு சஸ்பென்ஸ் வைச்சு கண்ணாம்பூச்சி விளையாடியதுதான் எனக்கு ஆச்சரியம் கொஞ்சம் கோவமும்.

நான் எப்படி அந்த பதிவரை கண்டு  பிடித்தேன்..?
அவருடைய முதல் எழுதிய ப்ளாக் பெயரும் வேறு இப்போது எழுதும் ப்ளாக் பெயரும் வேறு இருந்தும் அவர் உண்மையான  பெயர் ரஜீவன் என்றதுமே அவர் மேல் எனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்துவிட்டது. அதன் பின் அவர் ஒரு ஆங்கில ஆசிரியர் என்றதுமே அவர் மேல் சந்தேகம் உறுதியாகி நாமளும் புலனாய்வு புலியாகி அவரைப்பற்றிய தகவல்களை சேகரிக்க தொடங்கிய வேளையில் தவளையும் தன் வாயால் கெடும் என்பதைப்போல் "அத்தை பெற்ற
அழகிய ராட்சஷிகள்" என்று என் சமீபத்திய  பதிவொன்றில் நான் புலிகள் அமைப்பில் சேர்ந்த என் மச்சாள் பற்றியும் இறந்த மச்சாள் பற்றியும் சொல்ல அதில் நான் சொல்லாமல் விட்டதை இவர் சொல்லியதுடன் அந்த மச்சாள்மாரின் அப்பாக்கள் (என் மாம்ஸ்) பெயரை சொல்லியதுடன் பல தகவல்களை சொல்லி என்னை ஆச்சரியப்பட வைக்க நினைத்து அதனுடே தன்னைப்பற்றிய தகவல்களையும் உளறிவிட்டுப்போனார். இதேநேரத்தில்  என் புலனாய்வாலும் அவரைப்பற்றிய பல தகவல்கள் எனக்கு கிடைக்க (அவரின் பாதுகாப்பு கருதி அத்தகவல்கள் இங்கே மறைக்கப்பட்டு உள்ளது) இவர்தான் அவர்.. அவர்தான் இவர்.. என்று சுலபமாக நான் அடையாளம் கண்டு கொண்டு விட்டேன்.

அவரை நான் அடையாளம் கண்டு கொண்ட  பின்னும் வழமை போல் 
எதுவும் தெரியாதவன் போல் அவரின் சஸ்பென்ஸ் விளையாட்டை ரசித்துக்கொண்டிருக்க எப்படியோ நான் அவரை நெருங்கிக்கொண்டுப்பதை உணர்ந்துகொண்டவர். நாடகம் முடிந்த பின்னும் தன்னை காப்பாற்றிக்கொள்ள
அவர் போட்ட நாடகங்களும் துடிப்பும் இருக்கே...!! ஒரு உயிரின் கடைசி துடிப்பைப்போல் அந்த பதிவர் தன் முகமூடியை காப்பாற்ற கடைசி வரை போரா(டியது)க்கொண்டிருப்பது உண்மையில் எனக்கே மனசுக்கு கஸ்ரமாய்  போய்விட்டது. நான் உங்களை பார்க்கவில்லை பேசவில்லை நீங்கள் யார் என்றே எனக்கு தெரியாது என்று சொல்லிவிட்டு ஒன்றும் தெரிந்து கொள்ளாதவன் போல் பழைய மாதிரி இருந்துவிடுவோமா என்று கூட ஜோசித்தேன்.. அவ்ளோ பரிதாபமாக இருந்தது.

சரி இவ்ளோ நடந்து முடிந்துவிட்டது, என்னை ஏமாற்றிய அந்த பதிவருடன்
நட்பை தொடரலாமா..?
ஏன் தொடரப்படாது... ப்ளாக்கில் அவருக்கும் எனக்குமான நட்பு இன்றுவரை
ஆரோக்கியமாகவும் அன்பாகவும் தானே இருக்கு. ப்ளாக் நண்பனாக இந்த நிமிஷம் வரை என் மேல் அன்பு செலுத்திக்கொண்டுதானே இருக்கார். தான் யார் என்று என்னிடம் வெளிப்படுத்தி ஒரு உறவாக அவர் என்னிடம் தன்னை காட்டிக்கொள்ள விரும்பாமல் இருந்து இருக்கலாம்! அல்லது சஸ்பென்ஸ் வைத்து இருக்கலாம்! ஆனால் பொய்களுக்கு ஆயுசு கம்மி என்பதை அவர் உணராமல் விட்டுவிட்டார். எது எப்படியோ இந்த கண்ணாம்பூச்சி விளையாட்டில் அவர் மேல் எனக்கு துளி கோபம் இல்லை என்பதை இங்கேயே சொல்லிக்கொள்கிறேன். அவர் எப்போதும் நான் நேசிக்கும் பதிவர்தான் நண்பர்தான் இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்னிடம்.

அப்போ ரஜீவன்...?
போங்கப்பா...... அவர் பிரான்ஸ் வந்த இந்த சில வருடங்களில்  பல தடவை எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார்.. அதில் பல நேரங்களில் சிறு புன்னகையுடன் அவரைக்கடந்து என் அறைக்கு போயிருக்கேன்.  அதில் ஜந்து தடவை ஹாய்.. சொல்லி கைகொடுத்து இருப்பேன்,  மூன்று தடவை என் கையால் தேநீர் போட்டு கொடுத்திருப்பேன், ஒரு தடவை சாப்பாடு போட்டுக்கொண்டுவந்து கொடுத்ததாய் நினைவு.. இப்படியான ஒரு சூழ் நிலையில் உனக்கும் அவருக்கும் நட்பு தொடருமா என்று கேட்டால் கெக்கே பேக்கே என்று சிரிப்பு வராது..!!

குறிப்பு: இப்பதிவு அந்த பிரபல  'மணி'ப்பதிவரை மனம் நோகும்படி செய்திருந்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவர் மனதை 
நோகடிப்பது என் நோக்கமும் அல்ல.  நான் யாரிடமும் இலகுவில் ஒட்டவும் மாட்டேன் எதுவும் வாங்கவும்  மாட்டேன். ஒட்டினால் ரெம்ப ஒட்டிவிடுவேன் வாங்கினால் ரெண்டு மடங்காக திருப்பிக்கொடுத்துவிடுவேன். அவரை யார் என்று அடையாளம் கண்டபின் எனக்கு கிடைத்தை அவர் தந்த 'ஷாக்கை' இப்போது நான் அவரை அடையாளம் கண்டதை சொல்லி திருப்பி கொடுக்க வேண்டும் என்பதே இப்பதிவின் நேக்கம். ஹே.. ஹே.

105 கருத்துகள்:

 1. படவா, துஸி!
  நான் சும்மா ஒரு ஸ்டேட்டஸ் போட்டால் எப்படி அதை நீங்க உண்மை என்று எடுப்பீங்க!
  ஆதாரம் ஏதும் இருக்கா அவர் இவர் தான் என்று?

  பதிலளிநீக்கு
 2. அட இவ்வளவு விசயம் நடந்திருக்கா

  பதிலளிநீக்கு
 3. என்னப்பா ஒரே திரில்லிங் கதை மாதிரி இருக்கு?
  அவர் அடையாளம் காட்டிக்கொள்ளாமைக்கு பல காரணங்க இருக்கலாம்.முதல் காரணம் எல்லாருக்கும் இருப்பது போல வழமையான காரணம் தான்.
  ஆனால் ஏன் இவ்வாறு நடந்தது என்று எனக்கு தெரியாமையால் வேறு கருத்துக்கள் கூற விரும்பவில்ல.அனைவரும் நண்பர்களே எனக்கு,

  பதிலளிநீக்கு
 4. ம்ம்ம்!!!

  கண்ணாமூச்சியை ஆடியிருக்கிறார் ஒருவர், மற்றவர் கொஞ்சம் காலம்தாழ்தி பிடித்திருக்கிறார்.

  இதுக்கு வேறு வடிவில் பின்னுாட்ட எனக்கும் தெரியவில்லையே??????!!!!

  பதிலளிநீக்கு
 5. இப்படியெல்லாம் நடந்திருக்கா?
  ஒரு பதிவரின் கண்ணாமூச்சி ஆட்டமும் இன்னொரு பதிவரின் துப்பறியும் படலமும் சுவாரஸ்யம் தான் போங்க!

  பதிலளிநீக்கு
 6. நிரூபன் சொன்னது…
  படவா, துஸி!
  நான் சும்மா ஒரு ஸ்டேட்டஸ் போட்டால் எப்படி அதை நீங்க உண்மை என்று எடுப்பீங்க!ஆதாரம் ஏதும் இருக்கா அவர் இவர் தான் என்று?<<<<<<

  ஹா ஹா
  என்ன நிரு பாஸ் நண்பரைக்க் காப்பாற்ற கடைசி ஆயுதமா??
  அம்புட்டு ஆதாரம் என்கிட்ட இருக்கு... புகைப்படம் தொலைபேசி இல்லக்கம் உட்பட..என் புலனாய்வில் சிக்கிய ஆதாரங்கள் முக்கியமான எதையும் நான் இங்கே பகிரவில்லை..
  ஹீ ஹீ

  பதிலளிநீக்கு
 7. மதுரன் கூறியது...
  அட இவ்வளவு விசயம் நடந்திருக்கா<<<<<

  இன்னும் அதிகம் மது
  சொன்னது கொஞ்சம்
  சொல்லாதது அதிகம்
  அவ்வ......................

  பதிலளிநீக்கு
 8. மைந்தன் சிவா கூறியது...
  என்னப்பா ஒரே திரில்லிங் கதை மாதிரி இருக்கு?அவர் அடையாளம் காட்டிக்கொள்ளாமைக்கு பல காரணங்க இருக்கலாம்.முதல் காரணம் எல்லாருக்கும் இருப்பது போல வழமையான காரணம் தான்.
  ஆனால் ஏன் இவ்வாறு நடந்தது என்று எனக்கு தெரியாமையால் வேறு கருத்துக்கள் கூற விரும்பவில்ல.அனைவரும் நண்பர்களே எனக்கு,<<<<<<<

  பாஸ்.... ஏன் இவ்ளோ பெரிய வார்த்தை?? அவர் தன்னை என்னிடம் இருந்து மறைத்ததில் எனக்கு கோவம் எதுவும் இல்லை... அவர் எப்பவும் ஏன் பெஸ்ட் நண்பர்தான். ஆனால் வேண்டிய ஷாக்கை திரும்ப கொடுக்க வேண்டும் அல்லவா அதுக்குத்தான் இப்பதிவு.

  பதிலளிநீக்கு
 9. மருதமூரான். கூறியது...
  ம்ம்ம்!!!
  கண்ணாமூச்சியை ஆடியிருக்கிறார் ஒருவர், மற்றவர் கொஞ்சம் காலம்தாழ்தி பிடித்திருக்கிறார்.
  இதுக்கு வேறு வடிவில் பின்னுாட்ட எனக்கும் தெரியவில்லையே??????!!!!
  <<<<<<<<<<<

  அழகான கருத்துரை பாஸ்... :)
  ஹும்... நான் கொஞ்சம் லேட் தான்
  அவ்வவ்

  பதிலளிநீக்கு
 10. கோகுல் கூறியது...
  இப்படியெல்லாம் நடந்திருக்கா?
  ஒரு பதிவரின் கண்ணாமூச்சி ஆட்டமும் இன்னொரு பதிவரின் துப்பறியும் படலமும் சுவாரஸ்யம் தான் போங்க!<<<<<<<<<<<<


  எனக்கும் ஆச்சரியம் பாஸ்..
  ஏதோ காலமெல்லாம் காதல் வாழ்க பட பட கதை போல் இருக்கு
  அவ்வ்...... சமிபத்தில் எனக்கு கிடைத்த வித்தியாசமான அனுபவம் இது இதுவும் புதுசா திரிலாத்தான் இருக்கு.. :)

  பதிலளிநீக்கு
 11. மச்சி துஸி,
  இது ரொம்ப ஓவர் !
  அவர் உங்களைச் சந்திக்காமல் விட்டதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்!
  தன்னை ஒரு பதிவர் என்று அறிமுகப்படுத்த வேண்டாமே என அவர் நினைத்திருக்கலாம்!

  ஆனாலும் ஒரு சாதா மனிதனாக உங்க கூட பேசியிருக்காரே!

  அது இருக்கட்டும் அவர் இவர் தான் என்பதற்கு ஏதும் ஆதாரங்கள்?

  இருந்தால் மணியின் பேஸ்புக்கிற்கும், என் பேஸ்புக்கிற்கும் பகிரவும்.

  பதிலளிநீக்கு
 12. தம்பி நல்லவரு சார்! ஹிஹி கொஞ்சம் கூச்ச சுபாவம் அவ்ளோதான்!

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் மருமோனே..
  அந்த பதிவரின் பாதுகாப்புக்காக அவர் அப்படி செய்திருக்கலாம் அல்லவா?

  பதிலளிநீக்கு
 14. அட நான் நினைக்கிறேன் உங்களுக்கு அவரை நல்லா பிடிக்கும்... அவரோடு உங்களுக்கு கதைக்க ஆசை அதற்காகவா இந்த வலை? ஹி ஹி ஹி நடத்து நடத்து..

  பதிலளிநீக்கு
 15. ///காரணம் நான் யாருடனும் அதிகம் பேச மாட்டேன் அதிலும் தமிழ் ஆக்களை பார்த்தால் ஒருவித பதட்டம் நாணமே.. ///ஹிஹி

  பதிலளிநீக்கு
 16. ஆமா மணி பதிவர் எங்க ??? அவர காணேல்ல ????

  பதிலளிநீக்கு
 17. ஒழிஞ்சு நிண்டு போட்டோ எடுத்த கதையெல்லாம் இங்க சொல்லல்லையே ))

  பதிலளிநீக்கு
 18. ////அவர் எங்கள் வீட்டுக்கு வந்த போதெல்லாம் எப்போதுமே ஹாய்.. ஹலோ.. என்பதை தவிர நான் வேறு வார்த்தை பேசியது இல்லை.// அவருக்கு ரொம்ப கூச்ச சுபாவம் போல )))

  பதிலளிநீக்கு
 19. நிரூபன் சொன்னது…
  மச்சி துஸி,
  இது ரொம்ப ஓவர் !
  அவர் உங்களைச் சந்திக்காமல் விட்டதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்!
  தன்னை ஒரு பதிவர் என்று அறிமுகப்படுத்த வேண்டாமே என அவர் நினைத்திருக்கலாம்!
  ஆனாலும் ஒரு சாதா மனிதனாக உங்க கூட பேசியிருக்காரே!
  அது இருக்கட்டும் அவர் இவர் தான் என்பதற்கு ஏதும் ஆதாரங்கள்?
  இருந்தால் மணியின் பேஸ்புக்கிற்கும், என் பேஸ்புக்கிற்கும் பகிரவும்.<<<<<<

  மேலே அவர் செய்ததை நியாப்படுத்தி காரங்களை அடுக்கியே நான் சொன்னது எல்லாம் நிஜம் என்று நீங்களே நிருபித்து விட்டீர்களே..?? ஹே ஹே ...

  ஆதாரங்களில் முக்கியமானதை பதிவு வெளியிட்ட உடனேயே அவர் பேஸ்புக் க்கு அனுப்பிவிட்டேன் :)

  அப்புறம் புரிஞ்சு கொள்ளுங்கப்பா
  அவர் மேல் எனக்கு எந்த கோவமும் இல்லை இல்லை இல்லை

  பதிலளிநீக்கு
 20. shanmugavel கூறியது...
  தம்பி நல்லவரு சார்! ஹிஹி கொஞ்சம் கூச்ச சுபாவம் அவ்ளோதான்!<<<<<

  சரியா சொன்னீங்க அண்ணே.....
  தேங்க்ஸ்

  பதிலளிநீக்கு
 21. காட்டான் கூறியது...
  வணக்கம் மருமோனே..
  அந்த பதிவரின் பாதுகாப்புக்காக அவர் அப்படி செய்திருக்கலாம் அல்லவா?<<<<<

  நாம என்ன உலவுதுறையிலா வேலை செய்யிறோம். பயப்பட..... இருந்தாலும் அவரை புரிந்து கொள்கிறேன்... :)

  பதிலளிநீக்கு
 22. காட்டான் கூறியது...
  அட நான் நினைக்கிறேன் உங்களுக்கு அவரை நல்லா பிடிக்கும்... அவரோடு உங்களுக்கு கதைக்க ஆசை அதற்காகவா இந்த வலை? ஹி ஹி ஹி நடத்து நடத்து..<<<<<<<

  முதல் சொன்னது சரி அவரை எனக்கு ரெம்ப புடிக்கும்..
  மற்றும்படி அவருடன் பேசுவதுக்கும் இத பதிவுக்கும் என்ன சம்மந்தம்.
  நான் அவருடன் பேச நினைத்தால் அவர் எங்கள் வீட்டுக்கு வரும் நேரங்களில் ஒரு உறவாகவே என் நட்பை தொடர்ந்து இருப்பேனே......

  பதிலளிநீக்கு
 23. கந்தசாமி. கூறியது...
  ///காரணம் நான் யாருடனும் அதிகம் பேச மாட்டேன் அதிலும் தமிழ் ஆக்களை பார்த்தால் ஒருவித பதட்டம் நாணமே.. ///ஹிஹி<<<<<<<<<<<<<<<

  யோவ்.... என்னய்யா சிரிப்பு இது
  அவ்வ

  பதிலளிநீக்கு
 24. கந்தசாமி. கூறியது...
  ஆமா மணி பதிவர் எங்க ??? அவர காணேல்ல ????<<<

  :(
  ரெம்ப ஷாக் ஆகிட்டாரோ ??????

  பதிலளிநீக்கு
 25. கந்தசாமி. கூறியது...
  ஒழிஞ்சு நிண்டு போட்டோ எடுத்த கதையெல்லாம் இங்க சொல்லல்லையே ))<<<<<<<<<<<<<<

  யோவ்........ ஏன் இந்த கொலை வெறி........?LOL

  பதிலளிநீக்கு
 26. கந்தசாமி. கூறியது...
  ////அவர் எங்கள் வீட்டுக்கு வந்த போதெல்லாம் எப்போதுமே ஹாய்.. ஹலோ.. என்பதை தவிர நான் வேறு வார்த்தை பேசியது இல்லை.// அவருக்கு ரொம்ப கூச்ச சுபாவம் போல )))<<<<<<<<<<<<<<<<

  இங்கேயும் அதான்...
  ஹே ஹே

  பதிலளிநீக்கு
 27. அட இம்புட்டு மேட்டர் நடந்திருக்கா...

  பதிலளிநீக்கு
 28. அண்ணே துஸி! வாங்க! நாம எல்லோரும் ஒன்று சேர்ந்து மல்லாக்காப் படுத்து எச்சில் துப்புவோம்! இது உங்களின் வழமையான கமெண்ட்.
  என்னடா நிரூ உங்களுக்கு எதிராகவே திருப்பி விடுறான் என்று யோசிக்கிறீங்களா!

  ஹே...ஹே...

  நீங்க தானே தாயக மக்களையோ புலத்து மக்களையோ காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளைச் செய்ய மாட்டேன் என்று சொல்லியிருக்கிறீங்க!

  அப்புறம் ஏன் இப்படி ஒரு பதிவு!

  மணியை அவரின் நிஜப் பெயரோடு காட்டிக் கொடுக்கவா!

  மணி ஐடியாமணியாக இருந்தாலும் உங்கள் முன் தோன்றாததற்குப் பல காரணங்கள் இருக்கலாம்! அப்படி இருக்க ஏன் இப்படி ஒரு பதிவு?

  உங்களுக்குப் பேஸ்புக் இல்லையா?
  அங்கே போய் மணியோடு பேசியிருக்கலாம் தானே?

  பதிலளிநீக்கு
 29. அன்பிற்குரிய துஸி!

  எல்லோரும் எங்கள் மூஞ்சியில் முதலில் துப்புவோம் வாருங்கள்!

  ஹே....ஹே...

  இது உங்களின் வழமையான வசனம்!

  மணி ஒரு சாதா ஆள்!
  அவருக்கும் கூச்ச சுபாவம்! வெட்கம் எனப் பல காரணங்கள் இருக்கலாம்!
  உங்கள் உறவினராக,
  உங்கள்ன் சொந்தக்காரனாக உங்களோடு பேசும் மணி,
  ஏன் உங்களோடு ஒரு பதிவராகப் பேசவில்லையே என்று பொத்தாம் பொதுவாக யோசித்து விட்டு இப் பதிவினை எழுதியிருக்கலாமே?

  இதுவா மணி அண்ணருக்கும், உங்கள் மணி அண்ணரின் கருத்துக்களுக்கும் நீங்கள் கொடுக்கும் மரியாதை?
  ஹே...ஹே...

  துப்புங்கள்! மூன்று முறை துப்புங்கள்!

  பதிலளிநீக்கு
 30. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 31. என்னய்யா இங்கே நடக்குது!

  ஒரு வாத்தியாரா, சொந்தக்காரனா உங்க கூட இவ்ளோ நாளும் பேசின மணி உங்களோடு இன்று வரை பதிவராகப் பேசலையே என்று தானே இவ்ளோ பெரிய பதிவு!
  கொய்யாலே!

  இதுவா உங்க லட்சனம்!

  பதிலளிநீக்கு
 32. "அவர்"எப்போதுமே இப்படித் தான் போலும்!பொல்லைக் கொடுத்து அடி வாங்குவதே இவர் தலை எழுத்தோ?(அவருக்குப் புரியும்!)

  பதிலளிநீக்கு
 33. மணிப்பதிவரின் நிஜமான பெயர் என்ன ,அவர் எந்த நாட்டில் இருக்கார் என்பது பதிவுலகத்தில் 'மணி பதிவரை' தெரிந்த அனைவருக்கும் தெரியும் தானே!

  பதிலளிநீக்கு
 34. ஐயோ கந்து மாமா! துஸியிடம் மணி இது தான் நான் என்று சொல்லுமளவிற்கு அவர் என்ன பிரெஞ்சு ஜனாதிபதியா?
  அவர் ஒரு சாதா ஆளய்யா! தான் ஒரு பதிவர் அல்லாது தான் ஒரு சராசரி மனிதன் என்ற உணர்வோடு பழகியிருக்கலாம் தானே!

  இதில என்னப்பா குறை இருக்கு! வாற வருசம் நான் பிரான்ஸ் வாரேன்!
  நான் காட்டான் மாமா, யோகா ஐயா, துஸி, மகேன் தமேஷ், நேசன் அண்ணை, என எல்லோரும் சந்திக்க இருந்தோம்! அப்போது துஸியிடம் தான் ஒரு பதிவர் என்று சொல்ல வேண்டும் என மணி நினைத்திருந்தார்!

  ஆனால் இப்படி ஆகுமென்று நினைக்கலையே!

  பதிலளிநீக்கு
 35. விடுங்க நிரூபன்!ஏதோ விளையாட்டாக எழுதப் போய் இப்படி..............................,விட்டிடுங்க.துஷி இந்தப் பதிவை நீக்கி விடுவார் என நினைக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 36. துழி-மணி விளையாடல்கள் அருமை பாஸ்.. நீங்க சொன்ன அந்த பதிவர் யார்னு உங்க பழைய பதிவோட கமெண்ட்ஸ் பாத்து நானும் தெரிஞ்சிகிட்டேன்.. பொதுஅறிவு ரொம்ப முக்கியம்னு ஊர்ல பேசிக்கிறாங்க..

  அப்பறம் என்ன உங்க பதிவெல்லாம் என்னோட டஸ்போர்ட் வரமாட்டேங்குது

  பதிலளிநீக்கு
 37. @கந்துப் பெரியப்பா!

  மணி ஒரு சாதா ஆளய்யா!
  அவர் பல காரணங்களுக்காக சந்திக்காமல் விட்டிருக்கலாம்! அதனை வைத்து ஒரு பதிவு போடனுமா?

  கந்து Please don't blame him in a open air theater. Please keep it quit.

  பதிலளிநீக்கு
 38. Yoga.S.FR கூறியது...
  "அவர்"எப்போதுமே இப்படித் தான் போலும்!பொல்லைக் கொடுத்து அடி வாங்குவதே இவர் தலை எழுத்தோ?(அவருக்குப் புரியும்!)//

  யோகா ஐயா! நீங்கள் கூடப் புரிந்து கொண்டது இவ்வளவு தானா?

  அவர் பல காரணங்களால் தன்னை அறிமுகப்படுத்தாது விட்டிருக்கலாம் தானே!

  சொந்தப் பேரில் பழகும் எல்லோரும் தமக்குரிய புனை பெயரை அறிமுகப்படுத்த வேண்டும் என அவசியம் கிடையாதே!

  பதிலளிநீக்கு
 39. கந்தசாமி. கூறியது...
  மணிப்பதிவரின் நிஜமான பெயர் என்ன ,அவர் எந்த நாட்டில் இருக்கார் என்பது பதிவுலகத்தில் 'மணி பதிவரை' தெரிந்த அனைவருக்கும் தெரியும் தானே!//

  அட இது வேறையா!

  ஆனாலும் நீங்கள் சொல்லுற போட்டோ, பேட்டி எத்தினை பேருக்கய்யா தெரியும்?

  நடத்துங்கள்! நடத்துங்கள்!

  குருக்கள் மட்டும் கோயிலுக்குள் ??????????????????????????

  பதிலளிநீக்கு
 40. அது தான் தாத்தா நகைச்சுவையாக தானே இந்த பதிவு போட்டிருக்கார்..ஹிஹி மணிபதிவருக்கு துஷி யார் எண்டு தெரியும் துசிக்கும் மனிபதிவர் யார் எண்டு தெரியும் ..இதில என்ன சப்ரைஸ் ஹிஹி ...

  ////எது எப்படியோ இந்த கண்ணாம்பூச்சி விளையாட்டில் அவர் மேல் எனக்கு துளி கோபம் இல்லை என்பதை இங்கேயே சொல்லிக்கொள்கிறேன். அவர் எப்போதும் நான் நேசிக்கும் பதிவர்தான் நண்பர்தான் இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்னிடம்.////

  பதிலளிநீக்கு
 41. துஸி, உங்களை நன்கு தெரிந்து கொண்டு அவர் கண்ணாமூச்சி விளையாடியிருக்கலாம் என்று நீங்க நினைக்கிறீங்க!

  உங்களின் சந்தேகம் உறுதியாகுவதற்கான காரணம் பேஸ்புக்கில் நான் போட்ட ஸ்டேட்டஸ்,

  நீங்களாச்சும் உங்களது நெருங்கிய உறவினரிடம் போய் நான் தான் ப்ளாக் எழுதுற துஸி என்று அறிமுகம் செய்வீங்களா?
  மணிக்குத் தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம்!

  ஏதோ உங்களிடம் கடன் வாங்கி விட்டுத் திருப்பித் தராத கடன்காரன் ரேஞ்சுக்கு எழுதியிருக்கிறீங்க!

  எங்களின் இன ஒற்றுமை பற்றி நீங்களே ஆதங்கப்பட்டும் பதிவு எழுதுவீங்க!
  அதே வேளை நீங்களே அவசரப்பட்டு இன ஒற்றுமையினைப் புட்டுக் காட்டவும் பதிவெழுதுவீங்க!

  நல்லா இருக்கைய்யா இந்த ஜனநாயகம்!

  பதிலளிநீக்கு
 42. ////ஆனாலும் நீங்கள் சொல்லுற போட்டோ, பேட்டி எத்தினை பேருக்கய்யா தெரியும்?//// என்ன பாஸ் இப்பிடி சொல்லுரிங்க ..போட்டோவும் பேட்டியும் அந்த பதிவரின் முழு சம்மதத்துடன் தானே போட்டிருப்பார்கள்!! ஹிஹி பதிவு போடுறதே ஏனையவர்கள் வாசிக்க தானே??

  பதிலளிநீக்கு
 43. கந்தசாமி. கூறியது...
  ////ஆனாலும் நீங்கள் சொல்லுற போட்டோ, பேட்டி எத்தினை பேருக்கய்யா தெரியும்?//// என்ன பாஸ் இப்பிடி சொல்லுரிங்க ..போட்டோவும் பேட்டியும் அந்த பதிவரின் முழு சம்மதத்துடன் தானே போட்டிருப்பார்கள்!! ஹிஹி பதிவு போடுறதே ஏனையவர்கள் வாசிக்க தானே??//

  அதெல்லாம் ஓக்கேயப்பா! ஆனாலும் பேட்டி என்று வரும் போது படிப்போர் தொகை குறைவாக இருக்கும்!
  பிறகு தனி நபரைப் பற்றிய பரபரப்பு பதிவு எனும் போது படிப்போர் தொகை அதிகமாக இருக்குமில்லே

  ஹி....ஹி...

  பதிலளிநீக்கு
 44. //நிரூபன் கூறியது...

  உங்களின் சந்தேகம் உறுதியாகுவதற்கான காரணம் பேஸ்புக்கில் நான் போட்ட ஸ்டேட்டஸ்,/// நிரூபன் தாத்தா பம்முகிறார் ஹிஹிஹி ...)

  பதிலளிநீக்கு
 45. நான் சொன்னதன் பொருள் வேறு, நிரூபன்!வேண்டாம் விட்டு விடலாம்.புனைபெயரில் எழுதுவதில் தவறில்லை.இருந்தாலும்,அனைத்தையும் தெரிந்து கொண்டே.............................?!

  பதிலளிநீக்கு
 46. ////அதெல்லாம் ஓக்கேயப்பா! ஆனாலும் பேட்டி என்று வரும் போது படிப்போர் தொகை குறைவாக இருக்கும்!
  பிறகு தனி நபரைப் பற்றிய பரபரப்பு பதிவு எனும் போது படிப்போர் தொகை அதிகமாக இருக்குமில்லே

  ஹி....ஹி.../// இலங்கை பதிவர்கள் முக்கால்வாசி பேர் அந்த பதிவுக்கு கமெண்ட் பண்ணியிருக்கார்கள் .. ஜெனா அண்ணா பிரபலமான பதிவர் ஆகவே அந்த பதிவு அனைத்து இலங்கை பதிவர்களிடமும் சென்றடைந்திருக்கும் ...))

  பதிலளிநீக்கு
 47. நிருபன் ஒரு விளக்கம்..............
  இங்கே எங்கையும் அவரை பற்றிய முக்கிய தகவல்களை நன் பகிர வில்லை..
  ஏன் புகைப்படம் இருந்தும் பகிரவில்லை.....
  கந்து சொல்லும் அவர் புகைப்படம் இருக்கும் லிங்க் உட்பட....
  இது கோவத்தில் வந்த பதிவு கூட இல்லை....
  அவருக்கு உருமையுடன் ஷாக் கொடுக்க நினைத்து எழுதிய பதிவு
  சொள்ளபோனான் அவர் மேல் இருக்கும் அன்பினால் எழுதிய பதிவே..

  அப்புறம் காமெடி பண்ணாதீங்க....
  அவர் பேர் ரஜீவன் என்பது
  இன்னும் எந்த பதிவருக்கு தெரியாது?????????
  எல்லோருக்கும் தெரிந்த உண்மைகளைத்தான் நான் இங்கே எழுதி உள்ளேன்...
  மறந்து கூட அவருடைய எந்த பேசனல் (தெரிந்தும் ரெம்ப) விடயங்களையும்
  நான் இங்கே உளற வில்லை.

  நிரு பாஸ்
  ஈழ மக்கள் மேல் உங்களை விட ஒரு படி மேலேயே எனக்கு அக்கறை உண்டு அதன்காரங்களையும் இங்கே நான் சொல்லாமல் உங்களுக்கு புரியும் என்று நினைக்குறேன்.

  பதிலளிநீக்கு
 48. நண்பன் தன்னுடைய ஒரு நண்பனை பற்றி நகைச்சுவையாக எழுதிய பதிவு தான் இது ...இதை போய் கடன்காரான் ரேஞ்சுக்கும், இன ஒற்றுமை ரேஞ்சுக்கும் கொண்டு செல்வது டூ மச் ..(

  பதிலளிநீக்கு
 49. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 50. கந்தசாமி. கூறியது...
  நண்பன் தன்னுடைய ஒரு நண்பனை பற்றி நகைச்சுவையாக எழுதிய பதிவு தான் இது ...இதை போய் கடன்காரான் ரேஞ்சுக்கும், இன ஒற்றுமை ரேஞ்சுக்கும் கொண்டு செல்வது டூ மச் ..<<<<<<<<<<<<


  இதுதான் இப்போது என் கவலை கந்து.......நான் எதையோ நினைத்து எழுத நிருபன் இதை எங்கையோ திருப்புகிறார்....இப்பவும் சொல்லுகிறேன்... மணி பற்றிய புதிய யாருக்கும் தெரியா தகவல்கள் இங்கே எங்கையும் பகிரவில்லை....அவர் மேல் எனக்கு எந்த கோவமும் இல்லை..... இந்த பதிவு கூட அவர் மேல் உள்ள அன்பினால் எழுதியதே.....இதை பதிவி கூட நான் தெளிவாக சொல்லிய பின்னும் ஏன் இந்த குழப்பு குழப்புகிறார்கள்???

  குறிப்பாய்..
  நீங்கள் போட்ட கருத்துரை ஒன்றில் மணி பேட்டி, .......... , உள்ள ப்ளாக் அடையாளம் சொல்லிவிட்டீர்கள் என்று அந்த கருத்துரையே நீக்கிவிட்டேன்... ( சாரி நீக்கியதுக்கு கந்து.. நீங்கள் என்னை புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையிலேயே நீக்கினேன்.)

  பதிலளிநீக்கு
 51. /////குறிப்பாய்..
  நீங்கள் போட்ட கருத்துரை ஒன்றில் மணி பேட்டி, .......... , உள்ள ப்ளாக் அடையாளம் சொல்லிவிட்டீர்கள் என்று அந்த கருத்துரையே நீக்கிவிட்டேன்... ( சாரி நீக்கியதுக்கு கந்து.. நீங்கள் என்னை புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையிலேயே நீக்கினேன்.)/// விடுங்க பாஸ்...)

  பதிலளிநீக்கு
 52. மணி நீங்கள் ஏன் இப்படி எழுதினீங்கள்.. அண்ணனை பற்றி எழுதிய வார்த்தைகளை உடனடியாக  வாபஸ் வாங்குங்கோ..!! இது நல்லா இல்லை அவர்  வயசுக்கு கூட மரியாதை செய்ய மாட்டாயா.... துஷி அந்த பின்னூட்டத்தை நீக்கி விடுங்கோ..!!(((

  பதிலளிநீக்கு
 53. மணி நீங்கள் ஏன் இப்படி எழுதினீங்கள்.. அண்ணனை பற்றி எழுதிய வார்த்தைகளை உடனடியாக வாபஸ் வாங்குங்கோ..!! இது நல்லா இல்லை அவர் வயசுக்கு கூட மரியாதை செய்ய மாட்டாயா.... துஷி அந்த பின்னூட்டத்தை நீக்கி விடுங்கோ..!!(((

  காட்டான் அண்ணர்! என்னை மன்னியுங்கள்! அவர் வரம்பு மீறிக்கொண்டே இருக்கிறார்! அதனால் தான் எழுதினேன்!

  இப்போது உங்கள் பேச்சுக்கு மதிப்பளித்து அதனை நீக்கிவிடுகிறேன்!

  காட்டான் அண்ணை, நான் அவரை மதிக்கவே மாட்டேன்!

  ஆனால் உங்களை மிக மிக மதிக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 54. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாள் -ஆர்வலர்- புன் கண்ணீர் பூசல் தரும்.

  பதிலளிநீக்கு
 55. K.s.s.Rajh சொன்னது…
  அட இம்புட்டு மேட்டர் நடந்திருக்கா...<<<<<<<<<<<<<<<<

  ஹே ஹே.... ரெம்ப நடந்து போச்சு மச்சான்... lol

  பதிலளிநீக்கு
 56. குடிமகன் சொன்னது…
  துழி-மணி விளையாடல்கள் அருமை பாஸ்.. நீங்க சொன்ன அந்த பதிவர் யார்னு உங்க பழைய பதிவோட கமெண்ட்ஸ் பாத்து நானும் தெரிஞ்சிகிட்டேன்.. பொதுஅறிவு ரொம்ப முக்கியம்னு ஊர்ல பேசிக்கிறாங்க..

  அப்பறம் என்ன உங்க பதிவெல்லாம் என்னோட டஸ்போர்ட் வரமாட்டேங்குது<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

  வணக்கம் பாஸ்
  எப்படி இருக்கீங்க??? கன நாள் பார்த்து...!!
  தேங்க்ஸ் பாஸ்

  பதிலளிநீக்கு
 57. கந்தசாமி. சொன்னது…
  அது தான் தாத்தா நகைச்சுவையாக தானே இந்த பதிவு போட்டிருக்கார்..ஹிஹி மணிபதிவருக்கு துஷி யார் எண்டு தெரியும் துசிக்கும் மனிபதிவர் யார் எண்டு தெரியும் ..இதில என்ன சப்ரைஸ் ஹிஹி ...
  <எது எப்படியோ இந்த கண்ணாம்பூச்சி விளையாட்டில் அவர் மேல் எனக்கு துளி கோபம் இல்லை என்பதை இங்கேயே சொல்லிக்கொள்கிறேன். அவர் எப்போதும் நான் நேசிக்கும் பதிவர்தான் நண்பர்தான் இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்னிடம்.<

  கந்தசாமி துங்குறவனை எழுப்பலாம்
  துங்குறவன் மாதிரி நடிப்பவனை எழுப்ப முடியாதுப்பா

  பதிலளிநீக்கு
 58. கந்தசாமி. சொன்னது…
  ////ஆனாலும் நீங்கள் சொல்லுற போட்டோ, பேட்டி எத்தினை பேருக்கய்யா தெரியும்?//// என்ன பாஸ் இப்பிடி சொல்லுரிங்க ..போட்டோவும் பேட்டியும் அந்த பதிவரின் முழு சம்மதத்துடன் தானே போட்டிருப்பார்கள்!! ஹிஹி பதிவு போடுறதே ஏனையவர்கள் வாசிக்க தானே??<<<<<<<<<<<<<<<<<

  இவ்ளோ இருந்தும் ஏன் பதிவில் அப்படி என்னத்தை சொல்லிவிட்டேன் என்பது நிருபனுக்குத்தான் வெளிச்சம்...

  பதிலளிநீக்கு
 59. கந்தசாமி. சொன்னது…
  ////அதெல்லாம் ஓக்கேயப்பா! ஆனாலும் பேட்டி என்று வரும் போது படிப்போர் தொகை குறைவாக இருக்கும்!
  பிறகு தனி நபரைப் பற்றிய பரபரப்பு பதிவு எனும் போது படிப்போர் தொகை அதிகமாக இருக்குமில்லே

  ஹி....ஹி.../// இலங்கை பதிவர்கள் முக்கால்வாசி பேர் அந்த பதிவுக்கு கமெண்ட் பண்ணியிருக்கார்கள் .. ஜெனா அண்ணா பிரபலமான பதிவர் ஆகவே அந்த பதிவு அனைத்து இலங்கை பதிவர்களிடமும் சென்றடைந்திருக்கும் ...))


  விடுப்பா கந்து விட்டு விடு .............

  பதிலளிநீக்கு
 60. வணக்கம் தம்பி நிருபன் ( நீங்கள் என்னை அண்ணா என்று விளிக்கும் போது நீங்கள் எனக்கு தம்பிதானே!!)
  இனி உங்களுக்கான பதில்களை சொல்லுகிறேன் கேளுங்கள்.......

  பதிலளிநீக்கு
 61. வேண்டாம் துஷி விட்டு விடுங்கள்,தயவு செய்து!வேகத்தில் வார்த்தைகளைக் கொட்ட வேண்டாம்!ஜாலிக்காக எழுதியதெனில் வீம்புக்குப் போதல் முறையன்று.சொற்பிரயோகங்கள் ஒவ்வொருவர் புரிதல் பொறுத்தது.

  பதிலளிநீக்கு
 62. நிரூபன் சொன்னது…
  அண்ணே துஸி! வாங்க! நாம எல்லோரும் ஒன்று சேர்ந்து மல்லாக்காப் படுத்து எச்சில் துப்புவோம்! இது உங்களின் வழமையான கமெண்ட்.
  என்னடா நிரூ உங்களுக்கு எதிராகவே திருப்பி விடுறான் என்று யோசிக்கிறீங்களா!

  ஹே...ஹே...

  நீங்க தானே தாயக மக்களையோ புலத்து மக்களையோ காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளைச் செய்ய மாட்டேன் என்று சொல்லியிருக்கிறீங்க!
  அப்புறம் ஏன் இப்படி ஒரு பதிவு!
  மணியை அவரின் நிஜப் பெயரோடு காட்டிக் கொடுக்கவா!
  மணி ஐடியாமணியாக இருந்தாலும் உங்கள் முன் தோன்றாததற்குப் பல காரணங்கள் இருக்கலாம்! அப்படி இருக்க ஏன் இப்படி ஒரு பதிவு?
  உங்களுக்குப் பேஸ்புக் இல்லையா?
  அங்கே போய் மணியோடு பேசியிருக்கலாம் தானே?<<<<<<


  மேலே உங்களுக்கு சொல்லிய பதில்தான் இருந்தும் திரும்பவும் சொல்லுகிறேன்...இப்பதிவில் மணி பற்றிய எந்த ரகசிய தகவல்களையும் நான் பகிரவில்லை...அவர் மேல் எனக்கு எப்போதும் அன்பு உண்டு அதித அக்கறையும் உண்டு.
  அவர் எனக்கு சொந்தம் என்ற முறையில் அவர் பற்றிய தகவல்கள் எனக்கு குறிப்பாய்
  உங்களை விட அதிகம் தெரிந்து இருக்கும் என்பது உங்களுக்கே தெரியும் இருந்தும் அதில் சிறு துளியை கூடநான் இங்கு பகிரவில்லை என்பதில் இருந்தே நான் அவர் மேல் கொண்ட அக்கறையை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

  அப்புறம்... அவர் பெயர் ரஜீவன் என்பது எல்லோருக்கும் தெரியுமே.... இதை புதுசா நான் சொல்லியா தெரியனும்?? எல்லோருக்கும் அந்த
  பெயர் தெரியும் என்பதால்தான் அதை இங்கே குறிப்பிட்டேன்...

  அடுத்து.... நீங்கள் சொல்லியது போல் இது பற்றி பேஸ்புக் பக்கத்தில் அவருடன் பேசி இருக்கலாம்தான்... அந்த அவசியம் எனக்கு தேவைப்படவில்லை..அவர் மேல் உள்ள அன்பால் அவருடன் கொஞ்சம் விளையாட நினைத்து அவரை அடையாளம் கண்டதும் எனக்கு கிடைத்த ஷாக்கை அவருக்கு கொடுக்கவே இதை பதிவிட்டேன்... நான் நினைத்தது போல் அவரும் ஷாக்கானார் ஆனால் கோவபடவில்லை... இப்போது முதலை விட இன்னும் அதிகமாகவே தொடர்கிறது
  எங்கள் நட்பு...... என் பதிவின் நோக்கத்தை அவர் தெளிவாகவே புரிந்து கொண்டார்.....

  அடுத்து......... நான் ஈழ மக்கள் புலம்பெயர் மக்களை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று சொன்னதாக சொல்லி இருந்தீர்கள்...நன்றி.... அதை உங்கள் வாயால் கேட்பதில் சந்தோசம்...அது உண்மையும் கூட .... என் இனத்தை காட்டிகொடுத்து பதிவெழுதி ஹிட்ஸ் வாங்கும் புத்தி
  என்னிடம் இல்லை...

  நீங்கள் நான் அடிக்கடி சொல்லுவதாக குறிப்பிட்டதையே மறுபடியும் சொல்லுகிறேன்..
  பிரபாகரனின் மறுபக்கம் சொல்லுகிறேன் என்றோ... கடைசி யுத்த உண்மைகள் சொல்லுகிறேன் என்றோ... அல்லது புலம் பெயர் தமிழரும் புண்ணாக்குகளும் என்றோ என் இனத்தை தோலுரித்து அவர்களை நாடு சந்தியில் இழுத்து வந்து அலங்கோல படுத்தி............... அதேதான்.. மல்லாக்க படுத்து எச்சில் துப்பும் பழக்கம் என்னிடம் இல்லை இனியும் இருக்க போவதும் இல்லை...

  என் இனம் எப்போதும் எனக்கு பெருசுதான்..... அதுக்கு பிறகுதான் யாராக இருந்தாலும்...

  உங்கள் எல்லா கருத்துக்கும் பதில் சொல்ல நேரமில்லை என்பதால் இதிலேயே உங்களுக்கான பதில் இருப்பாதால் இத்துடுடன் முடித்து கொள்கிறேன்.மேலும் சந்தேகம் தீர்க்க உங்களுக்கு இந்த பதிவில் கந்தசாமி போட்ட கருத்தை பாருங்கள்.

  பதிலளிநீக்கு
 63. அட உங்கள் உறவுக்காரர ,? ஒரு மாதிரி கண்டுபிடிச்சிட்டிங்க . நானும் அவர தேடிக்கிட்டு தான் இருக்கேன் . ஒரு உதவி குறிப்பு தரமுடியுமா , ? நண்பா

  பதிலளிநீக்கு
 64. dear thushi anf niru....

  I am at work now. I don't wish this small issue will turn as word war between both of you.

  Niru... I spoke with thushi and made a good understanding.so let it to calm.

  Thushi.... I was just a few munites upset after read this post. That's why, i shared some feelings with niru. This made him to put such comments.

  This is true.

  So,pls be cool both of you.

  பதிலளிநீக்கு
 65. கந்தசாமி. சொன்னது…
  /////குறிப்பாய்..
  நீங்கள் போட்ட கருத்துரை ஒன்றில் மணி பேட்டி, .......... , உள்ள ப்ளாக் அடையாளம் சொல்லிவிட்டீர்கள் என்று அந்த கருத்துரையே நீக்கிவிட்டேன்... ( சாரி நீக்கியதுக்கு கந்து.. நீங்கள் என்னை புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையிலேயே நீக்கினேன்.)/// விடுங்க பாஸ்...)
  >>>>


  Thnxxxxx my Firend :)

  பதிலளிநீக்கு
 66. காட்டான் கூறியது...
  மணி நீங்கள் ஏன் இப்படி எழுதினீங்கள்.. அண்ணனை பற்றி எழுதிய வார்த்தைகளை உடனடியாக  வாபஸ் வாங்குங்கோ..!! இது நல்லா இல்லை அவர்  வயசுக்கு கூட மரியாதை செய்ய மாட்டாயா.... துஷி அந்த பின்னூட்டத்தை நீக்கி விடுங்கோ..!!(((
  >>>>>

  நன்றி மாமா..
  மணி அதை நீக்கிவிட்டார்......

  பதிலளிநீக்கு
 67. Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...

  <<<<<<<<<<

  நன்றி மணி...
  கருத்துரையை நீக்கியமைக்கு.... 

  பதிலளிநீக்கு
 68. Yoga.S.FR கூறியது...
  வேண்டாம் துஷி விட்டு விடுங்கள்,தயவு செய்து!வேகத்தில் வார்த்தைகளைக் கொட்ட வேண்டாம்!ஜாலிக்காக எழுதியதெனில் வீம்புக்குப் போதல் முறையன்று>>>>>>>>


  வணக்கம் யோகா அய்யா...
  ப்ளிஸ் என்னை மன்னித்துகொள்ளுங்கள்
  என் விளையாட்டு சிறு பிள்ளைதன பதிவு இவ்ளோ தூரத்துக்கு பிரச்சனைக்கு வித்திட்டுவிடும் என்று நான் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை...

  என் பதிவின் நோக்கம் அதில் சம்மந்தப்பட்டவர் உட்பட எல்லொருக்கும் புரிந்த நிலையில் ஒருவருக்கு மட்டும் புரியாமல் போனது ஆச்சரியம் :(
  சரி அதை விடுங்கள்..

  நீங்கள் இப்பதிவை நீக்க சொல்லிய பின்னும் நான் நீக்காதற்க்கு காரணம் பதிவில் சம்மந்தப்பட்ட மணி நீக்க அவசியம் இல்லை என்றதால்தான்..

  யோகா ஜயா..
  இந்த பதிவின் கருத்துரைகளால் உங்கள் மனசு நோகும் படி ஏதும் நடந்திருந்தால் இந்த ப்ளாக்கின் உரிமையாளன் என்ற முறையில் என்னை மன்னித்து கொள்ளுங்கள்.. ப்ளிஸ்.. கோபங்களில் நன்பர்கள் விடும்  வார்த்தைகளை மனசில் 
  வைக்காதீர்கள்.. நாம் எல்லோரும் நன்பர்களே... 

  பதிலளிநீக்கு
 69. வணக்கம் துசி வேலையில் கொஞ்சம் அதிகம் இருந்ததால் வலையைப் பார்க்கவில்லை! 
  ஒன்று சொல்லுவேன் பதிவுலகு வேறு முகநூல் வேறு புரிந்து கொள்ளுங்கள் பதிவுலகில் யாரும் வாசிக்கலாம் சண்டை பிடிக்கலாம் காரணம் ஒருத்தரின் தனிப்பட்ட வாழ்க்கை தெரியாது ஆனால் முகநூல் அப்படி அல்ல நண்பர்களுக்கு மட்டும்! ?!?  ?

  பதிலளிநீக்கு
 70. இங்கு பின்னூட்டம் இட்ட எல்லோரும் என் நண்பர்கள் உங்களையும் சேர்த்து ஒரு அண்ணாக உரிமையுடன் கேட்கின்றேன் இந்தப்பதிவு வேண்டாம் தூக்கி விடுங்கள் எல்லோருக்கும் எல்லோரையும் பற்றி போதிய தனிப்பட்ட/முழுமையான புரிதல் பதிவுலகில் இல்லை ஆகவே வேண்டாமே கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறியும் வேளை இன்றுடன் வெளியேறும் நான் சந்தோஸத்துடன் போகின்றேன் நண்பர்கள் இடையே ஏன் பிரிவு வர ஒரு பதிவு காரணமாகும் பிளிஸ் புரிந்து கொள் வேண்டாம் ஒருவர் ஒருவர் முகம் பார்க்கனும் தம்பி!

  பதிலளிநீக்கு
 71. @ மணி
   நீங்கள்!

   மூத்த பதிவாளர் யோகா ஐயா மீது இப்படி பதிவுலகில் மரியாதை இல்லாமல் எழுதுவது    எனக்கு உடன் பாடு இல்லை நான் கூட உங்களுடன் ஓட்டைவடை என்றாலும் ஐடியாமணி /பிரென்சுக்காரன் என்றாலும்  பலஇடங்களில் வரம்பு மீறி மோதியிருக்கின்றேன் கருத்துக்காக தவிர ஹிட்ச் மற்றும் தனிப்பட்ட ஓட்டுக்காக அல்ல இன்றுவரை உங்களை மதிக்கின்றேன் சகபதிவாளராக தயவு செய்து பதிவுலகில் இப்படி பதிவுலகில் யாரையும் இழிந்து பேசாதீர்கள் முதலில் வயதைப்பாருங்கள் அவர்களின் மனநிலையை இளையவராக ஒரு கணம் நடிநிலையாக யோசித்துப் பாருங்கள் பிளீஸ்!

  பதிலளிநீக்கு
 72. பதிவுலகில் எல்லோருக்கும் யார் பற்றியும்  சின்னச் சின்ன தேடல் இருக்கும் ஆனாலும் தெரியும் தானே நாம் எல்லோரும் பதிவாள நண்பர்கள் எங்களை தனிப்பட்ட முறையில் ஒவ்வொருத்தரை சீண்டாமல் சொல்ல வேண்டிய சமுக விடயத்தைச் சொல்லுவமோ புரிந்து கொள்ளுங்கள் தம்பி இனி அடுத்தவருடம் புதிய பதிவில் சந்திப்போம்!

  பதிலளிநீக்கு
 73. ஹீ ஹீ நான் வேலையாலை வந்து வாசிப்பம் எண்டு அப்போதை விட்டிட்டு போனன். அதுக்குள்ள இம்புட்டு நடந்து போச்சா! இனி இந்தப் பதிவை தூக்கி பிரியோசனம் இல்லை துஸி. பார்க்கவேண்டி எல்லாரும் பாத்திருப்பினம். இதில நான் யாருக்கு சார்பா கதைக்கிறது எண்டு தான் புரியல.

  பதிலளிநீக்கு
 74. துஸி – நிரூ, இவர்களுக்கிடையிலான வார்த்தைகள் தடித்துப் போகின்றது. இது நண்பர்களாக பழகும் எங்களுக்கும் அழகல்ல. பதிவுலகத்திற்கும் அழகல்ல.

  துஸி தான் அறிந்த விடயத்தை பகிர்ந்ததை தப்பு என நான் சொல்ல மாட்டேன். ஆனால் ”கண்டு பிடித்துவிட்டேன்” என மார் தட்டும்படியான சில வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். (தலைப்பு உட்பட)

  அருமையான மொக்கைப் பதிவாக வேண்டிய ஒரு பதிவு இப்படி சீரியஸாகிப்போய்விட்டது.

  எல்லோரும் மதிக்கும் பதிவர் நிரூபன் கோபத்தில் உதிர்த்த வார்த்தைகளுடன் எனக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை. அந்த வார்த்தைகளால் துஸியும் கோபப்பட்டு தேவையில்லாத வசனங்களை எல்லாம் பாவித்தாகிவிட்டது. இருவரின் அணுகுமுறைகளும் தவறாகியது எனக்கு வருத்தமாக இருக்கின்றது.

  மூன்றாம் தரப்பு கைதட்டி சிரிக்கும் படி தொடர்ச்சியாக வார்த்தைகளை யாரும் உதிர்க்கவேண்டாம். எல்லோருக்குமே வலையுலகம், பேஸ்புக் என்பவற்றை தாண்டி தனிப்பட்ட ரீதியில் ஸ்கைப், தொலைபேசி தொடர்புகள் இருக்கின்றது. பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
 75. ஒக்கே! கூல்!!!

  என்ன பாஸ் இது? நானாயிருந்தால் ஆரம்பத்திலேயே கண்டுபிடிச்சிருப்பேன்! அவரைப் பற்றி நீங்க சொன்ன விபரம் எல்லாமே இங்கே பதிவுலகில் எல்லோருக்கும் தெரியுமே! நாங்க அவரோட புகைப்படம்கூட பார்த்திருக்கிறோமே! அவரோட பேட்டியில்! :-)

  பதிலளிநீக்கு
 76. அதுசரி! Followers Widget மாத்திட்டீங்களா? என்னாச்சு?

  பதிலளிநீக்கு
 77. குடும்பத்திலை மட்டுமில்லை பதிவுலகிலும் ஊடலும் கூடலும் சகஜம்

  பதிலளிநீக்கு
 78. துஷி, இங்கை ஜேர்மனியிலையும் இந்த அறுவை அறுக்கிற அம்பலத்தானை நேரிலை கண்டால் வெட்டாமல் விடமாட்டமென்று கொஞ்சப்பேர் அரிவாளோட திரியிறாங்கள். எவ்வளவு கஸ்டப்பட்டு அவங்கட கண்ணிலை படாமல் ஒளிச்சுத்திரியிறன். மணிக்கும் என்ன பிரச்சனையோ பாவம் விட்டுவிடுங்கோ

  பதிலளிநீக்கு
 79. /////நான் ஒரு மொக்கைப்பதிவர் என்று அவர் தன்னை சொல்லிக்கொண்டாலும்
  அவர் பதிவுகளை மொக்கை என்று ஒதுக்கி விட முடியாது..////

  நிச்சயமாக? சென்ற வருடக் கடைசியில் தான் அவர் பதிவை முதலில் படித்தேன் அப்போதே அவர் என்னைக் கவர்ந்து விட்டார்....

  பதிலளிநீக்கு
 80. துசி பழைய விட்ஜெட்டுக்கு என்னாச்சு ?

  நீங்க புது புளொக்கில் ஆரம்பிச்சிருக்கீங்க போல...

  மேல ஏதோ நடக்கிறது என்பது மட்டும் தெரியுது அனால் இது இருவரிடையேயான நெருக்கத்தைத் தான் அதிகரிக்கும் என்பது எனத உறுதியான நம்பிக்கை... எதைக் கதைப்பதானாலும் மனதில் வைத்திருக்காமல் தனிமடல்களில் போட்டுடையுங்கள்...

  பதிலளிநீக்கு
 81. இனி நல்ல நண்பர்களாக இருக்க வாழ்த்துக்கள்.....

  பதிலளிநீக்கு
 82. பதிவு அவளவு பிரசனை இல்லை..கருத்துகள் கொஞ்சம் குறையலாம் என்று கருதுகிறேன்...

  பதிலளிநீக்கு
 83. haa haa ஹா ஹா ஜீவன், மணீ, புரட்சிக்காரன் மூவரும் ஒருவரே.. ஹா ஹா

  பதிலளிநீக்கு
 84. >>>>>நிரூபன் சொன்னது…
  கந்தசாமி. கூறியது...
  மணிப்பதிவரின் நிஜமான பெயர் என்ன ,அவர் எந்த நாட்டில் இருக்கார் என்பது பதிவுலகத்தில் 'மணி பதிவரை' தெரிந்த அனைவருக்கும் தெரியும் தானே!//

  அட இது வேறையா!

  ஆனாலும் நீங்கள் சொல்லுற போட்டோ, பேட்டி எத்தினை பேருக்கய்யா தெரியும்?<<<<<

  நிறையப் பேருக்குத் தெரியும்! ரஜீவன் தனது தளத்தில் அந்தப் பேட்டியின் 'லிங்க்' கொடுத்திருந்ததாக ஞாபகம்!
  அதைவிடப் பெரிதாக ஒன்றும் துஷி கூறவில்லை!!

  COOOOL NIRU!!

  பதிலளிநீக்கு
 85. KANA VARO சொன்னது…
  துஸி – நிரூ, இவர்களுக்கிடையிலான வார்த்தைகள் தடித்துப் போகின்றது. இது நண்பர்களாக பழகும் எங்களுக்கும் அழகல்ல. பதிவுலகத்திற்கும் அழகல்ல.

  துஸி தான் அறிந்த விடயத்தை பகிர்ந்ததை தப்பு என நான் சொல்ல மாட்டேன். ஆனால் ”கண்டு பிடித்துவிட்டேன்” என மார் தட்டும்படியான சில வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். (தலைப்பு உட்பட)

  அருமையான மொக்கைப் பதிவாக வேண்டிய ஒரு பதிவு இப்படி சீரியஸாகிப்போய்விட்டது.

  எல்லோரும் மதிக்கும் பதிவர் நிரூபன் கோபத்தில் உதிர்த்த வார்த்தைகளுடன் எனக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை. அந்த வார்த்தைகளால் துஸியும் கோபப்பட்டு தேவையில்லாத வசனங்களை எல்லாம் பாவித்தாகிவிட்டது. இருவரின் அணுகுமுறைகளும் தவறாகியது எனக்கு வருத்தமாக இருக்கின்றது.
  //

  சகோதரம் வரோ,
  எனக்கும் துஸிக்கும் எந்தவித கோபமும் இல்லை!
  இருவரது நட்பையும் இந்தக் கருத்துக்கள் பாதிக்காது சகோ!
  மணி இப் பதிவினைப் படித்து விட்டுப் பேஸ்புக்கில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்.
  கவலையடைந்திருந்தார்.
  அதன் விளைவு தான் இந்தப் பின்னூட்டம்!

  மற்றும் படி என் பின்னூட்டங்களால் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றியிருப்பின் யாவரும் என்னை மன்னியுங்கள்!

  துஸிக்கும் எனக்கும் உள்ள வழமையான நட்பிற்கு எந்தவித தீங்கும் நேரவில்லை!

  ஹி...ஹி...!

  கருத்து மோதல் வேறு!
  நட்பு வேறு என்று எமக்குத் தெரியாதா என்ன?

  பதிலளிநீக்கு
 86. சி.பி.செந்தில்குமார் சொன்னது…
  haa haa ஹா ஹா ஜீவன், மணீ, புரட்சிக்காரன் மூவரும் ஒருவரே.. ஹா ஹா
  //

  அண்ணேய் புரட்சிக்காரனா இல்லே பிரெஞ்சுக்காரானா?
  புரட்சிக்காரன் யாருன்னு தெரியாம எல்லோரும் குழப்பத்தில இருக்கோம்!
  நீங்க பிரெஞ்சுக்காரனை புரட்சிக்காரன் என்று மாத்தி எழுதி அடுத்த பூகம்பத்தை உருவாக்கப் போறீங்களே?

  ஹே....ஹே....

  பதிலளிநீக்கு
 87. சிபி பய என்னத்தையோ கொளுத்தி போட்டுட்டானே ஹி ஹி...

  பதிலளிநீக்கு
 88. கலவரத்திலையும் மணோ அண்ணாச்சிண்ட கிளுகிளுப்பை பாரன். சி.பியை போட்டுத்தாக்காட்டி இந்தாளுக்கு நித்திரையும் வராது போல!

  பதிலளிநீக்கு
 89. நன்றி நிரூ, எல்லாம் நம்ம பசங்க..

  பதிலளிநீக்கு
 90. மீண்டும் இரவு வணக்கம்,துஷி! நேற்றைய சம்பவத்தில் சும்மா தான் முதலில் ஒரு கருத்தை அனுப்பினேன்.விடயம் விபரீதமாகி விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் தான் பதிவை நீக்கி விடக் கேட்டேன்.மேலும்,எனது முதலாவது கருத்துக்குப் பதிலடி"அங்கிருந்து"வருமென்றும் எனக்குத் தெரியும்.வந்தது,போனது கூடத் தெரியாது என்பது உண்மை.காட்டானின் கண்டிப்புக்குப் பின்னரே எனக்கு "நடந்தது என்ன?"என்று புரிந்தது.ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு,வெறுப்புகள் உண்டு, நான் மறுக்கவில்லை!அதே வேளை மற்றவர் சுதந்திரத்தில் தலையிடுதல் எனக்குப் பிடிக்காதது.கருத்துத் திணிப்பு ஏற்றுக் கொள்ளப்படவே முடியாதது. நாம் இன்று புலம் பெயர்ந்திருக்கிறோமென்றால் அதற்குக் காரணமே நான் மேற்சொன்னவைகள் தான்.இது தன்னிலை விளக்கம் மட்டுமே! நன்றி!!!

  பதிலளிநீக்கு
 91. துஷி, எப்பிடி இருக்கிறீங்க!

  *என்ன நடக்குது*!

  பதிலளிநீக்கு
 92. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 93. தனிமரம் சொன்னது…
  வணக்கம் துசி வேலையில் கொஞ்சம் அதிகம் இருந்ததால் வலையைப் பார்க்கவில்லை!
  ஒன்று சொல்லுவேன் பதிவுலகு வேறு முகநூல் வேறு புரிந்து கொள்ளுங்கள் பதிவுலகில் யாரும் வாசிக்கலாம் சண்டை பிடிக்கலாம் காரணம் ஒருத்தரின் தனிப்பட்ட வாழ்க்கை தெரியாது ஆனால் முகநூல் அப்படி அல்ல நண்பர்களுக்கு மட்டும்! ?!? ?<<<<<<<<<<<<<<<<<<<<<<

  அண்ணாச்சி
  என்ன அண்ணாச்சி சொல்லுறீங்க?? அவ்வவ்

  பதிலளிநீக்கு
 94. தனிமரம் சொன்னது…
  இங்கு பின்னூட்டம் இட்ட எல்லோரும் என் நண்பர்கள் உங்களையும் சேர்த்து ஒரு அண்ணாக உரிமையுடன் கேட்கின்றேன் இந்தப்பதிவு வேண்டாம் தூக்கி விடுங்கள் எல்லோருக்கும் எல்லோரையும் பற்றி போதிய தனிப்பட்ட/முழுமையான புரிதல் பதிவுலகில் இல்லை ஆகவே வேண்டாமே கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறியும் வேளை இன்றுடன் வெளியேறும் நான் சந்தோஸத்துடன் போகின்றேன் நண்பர்கள் இடையே ஏன் பிரிவு வர ஒரு பதிவு காரணமாகும் பிளிஸ் புரிந்து கொள் வேண்டாம் ஒருவர் ஒருவர் முகம் பார்க்கனும் தம்பி!
  11/20/2011 2:16 PM <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

  அண்ணாச்சி நட்புக்கு சண்டைதானே அழகு நாங்க எப்பவும் ஒற்றுமைதான்... ஹீ ஹீ
  இப்போ எல்லாம் தெளிவாகிட்டுது...
  ஹப்பி ஹப்பி
  நீங்களும் lol

  பதிலளிநீக்கு
 95. தனிமரம் சொன்னது…
  பதிவுலகில் எல்லோருக்கும் யார் பற்றியும் சின்னச் சின்ன தேடல் இருக்கும் ஆனாலும் தெரியும் தானே நாம் எல்லோரும் பதிவாள நண்பர்கள் எங்களை தனிப்பட்ட முறையில் ஒவ்வொருத்தரை சீண்டாமல் சொல்ல வேண்டிய சமுக விடயத்தைச் சொல்லுவமோ புரிந்து கொள்ளுங்கள் தம்பி இனி அடுத்தவருடம் புதிய பதிவில் சந்திப்போம்!/////

  ஓக்கே பாஸ்..
  புது வருடத்தில் புதுசாய் சிந்திப்போம் :)

  பதிலளிநீக்கு
 96. KANA VARO சொன்னது…
  ஹீ ஹீ நான் வேலையாலை வந்து வாசிப்பம் எண்டு அப்போதை விட்டிட்டு போனன். அதுக்குள்ள இம்புட்டு நடந்து போச்சா! இனி இந்தப் பதிவை தூக்கி பிரியோசனம் இல்லை துஸி. பார்க்கவேண்டி எல்லாரும் பாத்திருப்பினம். இதில நான் யாருக்கு சார்பா கதைக்கிறது எண்டு தான் புரியல.<<<<<<<<<<<<<<<<

  எங்களால அண்ணனுக்கு இப்படி ஒரு இக்காட்டான நிலையா ?? அவ்
  நீங்க யார் பக்கம் கதைத்தாலும் நான் உங்க பக்கம்தான் எப்பவுமே...

  பதிலளிநீக்கு
 97. KANA VARO சொன்னது…
  துஸி – நிரூ, இவர்களுக்கிடையிலான வார்த்தைகள் தடித்துப் போகின்றது. இது நண்பர்களாக பழகும் எங்களுக்கும் அழகல்ல. பதிவுலகத்திற்கும் அழகல்ல.

  துஸி தான் அறிந்த விடயத்தை பகிர்ந்ததை தப்பு என நான் சொல்ல மாட்டேன். ஆனால் ”கண்டு பிடித்துவிட்டேன்” என மார் தட்டும்படியான சில வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். (தலைப்பு உட்பட)

  அருமையான மொக்கைப் பதிவாக வேண்டிய ஒரு பதிவு இப்படி சீரியஸாகிப்போய்விட்டது.

  எல்லோரும் மதிக்கும் பதிவர் நிரூபன் கோபத்தில் உதிர்த்த வார்த்தைகளுடன் எனக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை. அந்த வார்த்தைகளால் துஸியும் கோபப்பட்டு தேவையில்லாத வசனங்களை எல்லாம் பாவித்தாகிவிட்டது. இருவரின் அணுகுமுறைகளும் தவறாகியது எனக்கு வருத்தமாக இருக்கின்றது.

  மூன்றாம் தரப்பு கைதட்டி சிரிக்கும் படி தொடர்ச்சியாக வார்த்தைகளை யாரும் உதிர்க்கவேண்டாம். எல்லோருக்குமே வலையுலகம், பேஸ்புக் என்பவற்றை தாண்டி தனிப்பட்ட ரீதியில் ஸ்கைப், தொலைபேசி தொடர்புகள் இருக்கின்றது. பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள்.<<<<<<<<<<<<<<<<<<<<<

  தேங்க்ஸ் அண்ணா....

  அண்ணா நான் எப்பவும் கருத்தை கருத்தாத்தான் பார்ப்பேன்.. நட்பு வேற கருத்துவேற... இதோ ஒன்றாய் போட்டு நான் எப்பவும் குழப்பினது இல்லை :)

  பதிலளிநீக்கு
 98. ஜீ... சொன்னது…
  ஒக்கே! கூல்!!!

  என்ன பாஸ் இது? நானாயிருந்தால் ஆரம்பத்திலேயே கண்டுபிடிச்சிருப்பேன்! அவரைப் பற்றி நீங்க சொன்ன விபரம் எல்லாமே இங்கே பதிவுலகில் எல்லோருக்கும் தெரியுமே! நாங்க அவரோட புகைப்படம்கூட பார்த்திருக்கிறோமே! அவரோட பேட்டியில்! :-)<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

  இந்த மேட்டரில் நான் உலகமகா சோம்பரி பாஸ்...
  அதான் ரெம்ப லேட் பண்ணிட்டேன்..... அவ்வவ்

  பதிலளிநீக்கு
 99. ஜீ... சொன்னது…
  அதுசரி! Followers Widget மாத்திட்டீங்களா? என்னாச்சு?<<<<

  ஹீ ஹீ.... மாத்திட்டோம் பாஸ்

  பதிலளிநீக்கு
 100. அம்பலத்தார் சொன்னது…
  குடும்பத்திலை மட்டுமில்லை பதிவுலகிலும் ஊடலும் கூடலும் சகஜம்<<<<<<<<<<<<

  கரெக்டா சொன்னீங்க அம்பலத்தார்... :)

  பதிலளிநீக்கு
 101. அம்பலத்தார் சொன்னது…
  துஷி, இங்கை ஜேர்மனியிலையும் இந்த அறுவை அறுக்கிற அம்பலத்தானை நேரிலை கண்டால் வெட்டாமல் விடமாட்டமென்று கொஞ்சப்பேர் அரிவாளோட திரியிறாங்கள். எவ்வளவு கஸ்டப்பட்டு அவங்கட கண்ணிலை படாமல் ஒளிச்சுத்திரியிறன். மணிக்கும் என்ன பிரச்சனையோ பாவம் விட்டுவிடுங்கோ<<<<<<<<<<<<<<<<

  அடுத்து உங்கள பற்றித்தான் ஒரு புலனாய்வு ரிப்போட் ரெடி ஆகிட்டு இருக்கு... ஹீ ஹீ

  பதிலளிநீக்கு
 102. ♔ம.தி.சுதா♔ சொன்னது…
  /////நான் ஒரு மொக்கைப்பதிவர் என்று அவர் தன்னை சொல்லிக்கொண்டாலும்
  அவர் பதிவுகளை மொக்கை என்று ஒதுக்கி விட முடியாது..////

  நிச்சயமாக? சென்ற வருடக் கடைசியில் தான் அவர் பதிவை முதலில் படித்தேன் அப்போதே அவர் என்னைக் கவர்ந்து விட்டார்....
  11/20/2011 9:31 PM <<<<<<<<<<<<


  உண்மைதான் ரெம்ப ஈர்ப்பான எழுத்து நடை ஆள் பாஸ்

  பதிலளிநீக்கு
 103. ♔ம.தி.சுதா♔ சொன்னது…
  துசி பழைய விட்ஜெட்டுக்கு என்னாச்சு ?

  நீங்க புது புளொக்கில் ஆரம்பிச்சிருக்கீங்க போல...

  மேல ஏதோ நடக்கிறது என்பது மட்டும் தெரியுது அனால் இது இருவரிடையேயான நெருக்கத்தைத் தான் அதிகரிக்கும் என்பது எனத உறுதியான நம்பிக்கை... எதைக் கதைப்பதானாலும் மனதில் வைத்திருக்காமல் தனிமடல்களில் போட்டுடையுங்கள்...<<<<<<<<<<<<

  தேங்க்ஸ் பாஸ்

  பதிலளிநீக்கு
 104. சரி துஷி....இவ்வளவு பின்னூட்டங்களுக்குப் பிறகெண்டாலும் அவர் ஆரெண்டு சொல்லுங்கோவன் !

  பதிலளிநீக்கு
 105. இன்று ஓர் பொன்னான நாள்! ஆம்,எங்கள் விடுதலைப் பேரொளி அவதரித்த நாள்!எல்லா நலனும் பெற்று நீடூழி வாழ வல்லானை வேண்டுவோம்!

  பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...