வியாழன், மே 26, 2011

மாறுகிறாரா ஜெயலலிதா...?

ஜெயலலிதாவை வெறுப்பவர்கள் மட்டும் அல்ல நேசிப்பவர்கள் கூட அடிக்கடி அவர் மேல் நப்பாசை கொள்வது இவர் மாறவே மாட்டாரா என்றுதான். ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய முக்கிய அம்சமே அவர் பேச்சுக்கும் முகத்துக்கும் மக்கள் மத்தியில் ஒரு கவர்ச்சி இருக்க வேண்டும், எனக்கு தெரிந்து எம்ஜிஆர்க்கு அடுத்து அது அதிகளவு இருப்பது ஜெயலலிதாவிடம் தான், வருடக்கணக்கில் கொடாநாட்டில் ஓய்வெடுத்துவிட்டு வந்து ஒரு நாள் கூட்டம் போட்டாலும் அதுக்கு வரும் மக்கள் தொகையையும் ஆதரவையும் குறைந்தது ஒரு வருடத்துக்கு குறையாமல் பேச வைத்து விடுவார். ஜெயலலிதா இப்படி இருக்கும் போதே இவ்வளவு செல்வாக்கு என்றால் அவர் மட்டும் மக்களுக்கு புடித்தமாதிரி தன்னை மாற்றிக்கொண்டால்...!! அவர் நிலை எவ்வளவு உயரத்தில் இருக்கும் என்பதுதான் அவரை நேசிக்கும் என்னைப்போன்றவர்களின் அங்கலாய்ப்பு. கூட்டணிக்கட்சிகளை மதிக்காமை, பத்திரிகைகளை விரோதிகளாய் பார்ப்பது, தன் கட்சி தொண்டர்களைகளைக்கூட சந்திக்காதது, இப்புடி அவர் ஆணவ போக்கு ஏராளம், இந்த ஆணவ போக்கால் அவர் சேர்த்ததை விட இழந்ததுதான் அதிகம்.

மாற்றம் ஒன்றுதான் உலகில் மாற்றம் இல்லாதது என்று சொல்வார்கள், இதற்கமைய ஜெயலலிதாவிடமும் இப்போது ஒரு மாற்றம் தெரிகிறது, ஜெயலலிதாவை உண்ணிப்பாக அவதானித்துகொண்டிருப்பவர்கள் இதை மறுக்க முடியாது. சிறுத்தைக்கு பிறக்கும் போதே உடம்பில் இருக்கும் கோடுகள் கடைசிவரை அதை விட்டு போகாது அது போலதான் ஜெயலலிதாவும் அவரிடம் இருக்கும் ஆணவ போக்கும் என்று ஆருடம் சொன்னவர்கள் கூட இப்போது வாயடைத்துப்போய் அவரை ஆச்சரியமாய் நோக்கிறார்கள். அவர் மாற்றம் புரியாத புதிராகவே இருக்கிறது. ஒரு வேளை கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுகாவின் தோல்வி கிண்ணஸ் புத்தகதில் பதியும் அளவுக்கு மிக பெரிய தோல்வியாக இருக்க வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விட்டார் அது போலவே தேர்தல் முடிவுகளும் அமைந்தது, அதிமுகா யாரும் எதிர்பார்க்காதவகையில் மிக பெரிய வெற்றி பெற்றது, இந்த தேர்தல் முடிவுகள்தான் அவரை மாற்றிவிட்டதோ என்று கூட எண்ணத்தோன்றுகிறது. ஜெயலலிதா மாறிவிட்டதுக்கு சாட்சியாக அமைந்த அவருடைய சமீபத்திய செய்கைகள் சில..

-:தேர்தல் முடிவுகள் வெளிவந்த சில மணி நேரத்தில் ஜெயா டீவியில் வெளிவந்த ஜெயலலிதா பேட்டி.
லக தமிழர்களுக்கு ஜெயலலிதா வெற்றிச்செய்தியை விட அதிக சந்தோஷத்தை கொடுத்தது இந்த பேட்டிதான், வழமைக்கு மாறான ஜெயலலிதாவின் நிதானமான திடமான ஆணவம் அற்ற பேச்சு ஆச்சரியத்தையும் அவர் மேல் நம்பிக்கையையும் கொடுத்தது, பேட்டியின் போது " இலங்கை அதிபர் ராஜ பக்‌ஷாவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுப்பேன்" என்றது அவர் மாறிவிட்டார் என்பதையே காட்டியது. இக்கருத்தை ஜெயலலிதா தேர்தலுக்கு முதல் சொல்லி இருந்தால் ஒட்டுவாங்க சொல்லுகிறார் என்ற எண்ணம் வந்து இருக்கும் ஆனால் தேர்தலில் அதிமுகா மாபெரும் வெற்றி என்ற செய்தி வந்த சில நிமிடங்களில் அவர் அளித்த பேட்டியில் இதை சொல்லியிருக்கிறார், ஆகவே இது ஜெயலலிதாவின் மாற்றமடைந்த மனசைத்தான் காட்டுகிறது என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.

-: பதவியேற்பு விழா- வைகோவுக்கு முதல் வரிசையில் நாற்காலி ஒதுக்கினார் ஜெயலலிதா.

ஜெயலலிதா கடைசி நேரத்தில் வைகோவை வெளியேற்றியது வருத்தமான செய்கைதான் ஆனால் வைகோவின் "அதிகசீட்" ஆசையால்தான் இந்த சம்பவம் நடந்தது, வைகோவின் கட்சிக்கு தமிழ்நாட்டில் இப்போது உள்ள செல்வாக்கு என்ன என்பது எல்லோரும் அறிந்ததே, இதை நன்றாக அறிந்து வைத்திருக்கும் ஜெயலலிதா அவருக்கு எப்படி அதிக சீட் கொடுப்பார் என்பது எல்லோரும் யோசிக்க வேண்டிய விடயம். வைகோ வெளியேற்ற பட்டபின் " ஜெயலலிதா இன்னும் திருந்த வில்லை என" ஆணந்த விகடனில் வைகோ சீறி பேட்டி கொடுக்க, வைகோவின் சகாக்கள் கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல் " இலை கருகி சூரியன் உதிக்கட்டும்" என்று உளறிக்கொட்ட இதையெல்லாம் கண்டும் கானாதது போல இருந்தார் ஜெயலலிதா. ஆனால் இன்று ஜெயலலிதா வெற்றிடைந்த பின் வைகோவை சாடி அறிக்கை விடுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்து இருக்க தன் பதவி ஏற்பு விழாவுக்கு வைகோவுக்கு முறையாக அழைப்பிதழ் அனுப்பியது மட்டும் இன்றி முதல் வரிசையில் நார்காலி ஒதுக்கி வைகோவுக்கு மரியாதை கொடுத்து பதவி ஏற்கும் முன்னமே நான் மாறிவிட்டேன் என்பதை ஆணித்தரமாக காட்டுகிறாரோ ஜெயலலிதா.

-:புதிய சட்டசபையை புறக்கணித்தது ஏன்? விளக்கமளித்த ஜெயலலிதா.
பொதுவாகவே ஜெயலலிதா எதாவது செய்யும் போது இதைப்பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசிக்கவே மாட்டார், அதை பற்றி பத்திரிகைகள் விமர்சித்தாலோ கேள்வி கேட்டாலோ அதற்க்கு பதில் சொல்வதைக்கூட அவமானமாக நினைப்பார். ஆனால் இப்போது, புதிய சட்டசபையை புறக்கணிப்பது கருணாநிதிமேல் உள்ள வெறுப்பால்தான் என்று ஒரு பேச்சு அடிபட "ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள புதிய சட்டசபை கட்டிடத்தில், போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. ஆட்சி நிர்வாகம் நடத்த அங்கு சரியான வசதிகள் இல்லாத காரணத்தினாலேயே, ‌செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு சட்டசபையை மாற்றியுள்ளோம். இதில் எவ்வி‌த அரசியல் உள்‌நோக்கமும் கிடையாது’’ என்று பத்திரிகைகளுக்கு விளக்கம் கொடுத்து நான் மாறிவிட்டேன் என்று உணர்த்துகிறாரா ஜெயலலிதா.

-:வாரம் ஒரு முறை பத்திரிகையாளர்களை சந்திப்பேன்- ஜெயலலிதா அறிவிப்பு.
த்திரிகைகளை எப்போதுமே விரோதிகளாய் பார்ப்பவர் ஜெயலலிதா. அவர்களை சந்திப்பதையே அறவே தவிர்ப்பார், ஆனால் இப்போது பத்திரிகைகளை அரவனைத்து போவது மட்டுமின்றி இனி வாரவாரம் ஒரு நாள் பத்திரிகைகளை சந்தித்து அவர்கள் கேள்விகளுக்கு பதில் அழிக்க போவதாக அறிவித்து இருப்பது நான் மாறிவிட்டேன் என்பதைத்தான் நமக்கு உணர்த்துகிறாரா ஜெயலலிதா.

-:மரியம் பிச்சையின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு ஜெயலலிதா நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
ரஜினி விரைவில் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - ஜெயலலிதா
.
பொதுவாகவே தன்னைச்சுற்றி எது நடந்தாலும் கண்டும் காணதது போல் இருப்பவர் ஜெயலலிதா. இதன் காரணமாகவே பல அதிமுகா விஜபி தொண்டர்கள் திமுகா பக்கம் சென்றுவிட்டனர், தன்னைச்சுற்றி ஒரு இரும்பு வலையத்தை உருவாக்கி கொண்டு அதுக்குள்ளேயே இருந்து விடுவார். ஆனால் இப்போது அதில் நிறைய மாற்றங்கள்,  அமைச்சர் மரியம் பிச்சை ஒரு சாலை விபத்தில் இறந்த போது எவ்வளவோ முக்கிய வேலைகள் இருந்த போதும் அதை எல்லாம் புறம் தள்ளிவிட்டு திருச்சிக்கு ஓடோடிச்சென்று அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவர் குடுப்பத்துக்கு ஆறுதல் சொன்னது மரியம் பச்சை குடும்பத்தை மட்டும் அல்ல ஒட்டுமொத்த அதிமுகா தொண்டர்களையே நெகிழச்செய்து விட்டது. கூடவே உடல்நலக்குறைவால் வைத்தியசாலையில் இருக்கும் நடிகர் ரஜனிகாந் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் என்று அறிக்கை வெளியிட்டது அடடா ஜெயலலிதாவா இது என்று எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்து நான் மாறிவிட்டேன் என்பதைத்தான் காட்டுகிறாரா ஜெயலலிதா.

-:நான் போகும் போது மக்கள் போக்குவரத்தை தடை செய்ய வேண்டாம்,
மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் ஆடம்பர செய்கைகளை அதிமுகா தொண்டர்கள் நிறுத்த வேண்டும் ஜெயலலிதா அறிவிப்பு
.
டம்பரத்துக்கு பெயர் பெற்றது கடந்த கால ஜெயலலிதா ஆட்சி, அதுக்கு இன்றுவரை மறைக்க முடியாத நல்ல உதாரணம் அவரின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம். தன் கட்சி அலுவலகத்துக்கு வரும் ஒரு சாதாரண நிகழ்வைக்கூட தன் தொண்டர்கள் மூலம் ஆடம்பரமாக கொண்டாட வைப்பவர், தான் எது செய்தாலும் ஒட்டுமொத்த இந்தியாவே தன்னை திரும்பி பாக்க வேண்டும் என்ற பந்தா பிரியையும் கூட அப்படிப்பட்ட ஜெயலலிதாவா இப்புடி எல்லாம் அறிவித்தது என்று ஒட்டு மொத்த தமிழினமே ஆச்சரியமாய் பாக்கின்றது அதிமுகா அரசை,
அதைவிட அவர் அமைச்சரவையில் இடம் புடித்த புதியவர்களினதும் எழிமையானவர்களினதும் பெயர் பட்டியல் இன்னும் ப்ளஸ்சான ஆச்சரியம். இதையெல்லாம் செய்வதன் மூலம் நான் மாறிவிட்டேன் என்பதைத்தான் ஆணித்தரமாக நிரூபிக்கிறாரா ஜெயலலிதா.

-:மேலும்..  ன் கையால் அனைவருக்கும் இனிப்பு வழங்கியது, தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, போயஸ் கார்டனில் ஒன்றுக்கு இரண்டு முறை மாடியில் நின்று மக்களைப் பார்த்து கையசைத்து புன்னகைத்தது, அடுத்தடுத்து பல முறை செய்தியாளர்களை சந்தித்தது, அமைச்சர்கள் தங்கள் வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்துதல், செல்லுதல் கூடாது என்றது, அதிமுக்கியமாக, "பதவியேற்பு விழாவில் எந்த அமைச்சரும், தன் காலில் விழக் கூடாது' என கண்டிப்புடன்  உத்தரவிட்டது போன்றவை ஜெயலலிதா மாறிவிட்டார் என்பதைத்தான் உணர்த்துகிறது என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.

து எப்படியோ இந்த மாற்றம் நிஜம்தான்  என்றால்  ஜெயலலிதாவை வருங்காலத்திலும் முதல்வர் பதவியில் இருந்து  அசைக்க முடியாது. எம்ஜிஆர் இருந்த காலங்களில் எப்படி கருணாநிதிக்கு முதல்வர் பதவி எட்டாக்கனியாக இருந்ததோ அந்த நிலைமை  வருங்காலத்திலும்   கருணாநிதியின் கட்சிக்கு ஏற்பட்டுவிடும்,  இப்போது  பாதாளத்தில்  விழுந்து கிடக்கும் திமுகா எழுவதும் எழாமல் போவதும்  ஜெயலலிதாவின் மாற்றத்தில்தான் இருக்கிறது.  

23 கருத்துகள்:

  1. பெயரில்லா11:43 PM, மே 26, 2011

    நண்பா நல்லாய் அலசியுள்ளீர்கள்..

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா11:44 PM, மே 26, 2011

    ////பேட்டியின் போது " இலங்கை அதிபர் ராஜ பக்‌ஷாவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுப்பேன்" என்றது அவர் மாறிவிட்டார் என்பதையே காட்டியது./// சில வேளைகளில் வெற்றி களிப்பில் விட்ட அறிக்கையாக கூட இருக்கலாம், வருங்காலத்தில் கிடப்பில் கூட இந்த கருத்தை போட்டுவிடலாம். ஆக போக போக தான் தெரியும் என்று நினைக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  3. நண்பா நல்ல அலசல் பதிவு எது எப்படியோ மக்களுக்கு தான் தலைவன் மக்களுக்கு ஏற்றால் போல் மாறினால் நல்லது தானே

    பதிலளிநீக்கு
  4. நல்லா இருக்கு பதிவு தொடர்ந்தும் இப்படியே எழுதுங்க..
    நம்மள மாதிரி மொக்கைய போட்டு வீணா போகாம ஹேஹ்

    பதிலளிநீக்கு
  5. இன்னும் ஐந்து வருடம் இருக்கிறது. இந்த மாற்றம் தொடரலாம் அல்லது இந்த மாற்றத்திற்கு மாற்றம் வரலாம். காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. நல்ல அலசல் கட்டுரை! ஜெ வின் மாற்றம் தொடர்ந்தால் தமிழகம் உருப்படும். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. //கந்தசாமி. கூறியது...
    சில வேளைகளில் வெற்றி களிப்பில் விட்ட அறிக்கையாக கூட இருக்கலாம், வருங்காலத்தில் கிடப்பில் கூட இந்த கருத்தை போட்டுவிடலாம். ஆக போக போக தான் தெரியும் என்று நினைக்கிறேன்...://

    எல்லோர் நினைப்பும் இவ்வாறுதான் இருக்கு,
    பாக்கலாம் நன்பா..
     உலக தமிழர்களிடம் செல்வாக்கு பெற ஜெயாவுக்கு நல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்து இருக்கு இதை இழப்பதால் இழப்பும் அவருக்குதான்.

    பதிலளிநீக்கு
  8. //.Thamesh கூறியது...
    நண்பா நல்ல அலசல் பதிவு எது எப்படியோ மக்களுக்கு தான் தலைவன் மக்களுக்கு ஏற்றால் போல் மாறினால் நல்லது தானே//

    உண்மைதான் நண்பா..
    இதைப்பற்றி ஜெயலலிதா யோசிக்க வேண்டும்.
    நன்றி நன்பா

    பதிலளிநீக்கு
  9. // மைந்தன் சிவா கூறியது...
    நல்லா இருக்கு பதிவு தொடர்ந்தும் இப்படியே எழுதுங்க..
    நம்மள மாதிரி மொக்கைய போட்டு வீணா போகாம ஹேஹ//

    நன்றி பாஸ்,
    என்ன நக்கலா...?  அப்படியே உங்க பதிவு மொக்கையா இருந்தாலும் அந்த மொக்கையின் அதிதீவிர ரசிகன் நான்,
    பாஸ் ப்ராண்ஸ் ல உங்களுக்கு ஒரு ரசிகர்மன்றம் துறக்கலாம் என்று இருக்கன்,
    அதை தொறந்து வைக்க வருவீங்க இல்ல..?

    பதிலளிநீக்கு
  10. //தமிழ் உதயம் கூறியது...
    இன்னும் ஐந்து வருடம் இருக்கிறது. இந்த மாற்றம் தொடரலாம் அல்லது இந்த மாற்றத்திற்கு மாற்றம் வரலாம். காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.//

    உண்மைதான் பாஸ்,
    பட், கடந்த கால கருணாநிதியின் ஆட்சிக்கு மக்கள் அடித்த ஆப்பை ஜெயா கண்கூடக பார்த்தவர் சோ அவர் திருந்திவிட்டர் என்றுதான் நினைக்கிறேன்,
    உங்க வருகைக்கு நன்றி பாஸ்
    அடிக்கடி வாங்க ^_^

    பதிலளிநீக்கு
  11. // thalir கூறியது...
    நல்ல அலசல் கட்டுரை! ஜெ வின் மாற்றம் தொடர்ந்தால் தமிழகம் உருப்படும். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்//

    ரெம்ப நன்றி பாஸ்,
    உங்க ஆதரவுக்கும் வருகைக்கும்,
    அடிக்கடி வாங்க பாஸ் ^_^

    பதிலளிநீக்கு
  12. மிகவும் அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  13. அம்மா வின் மாற்றம் தொடர்ந்தால் தமிழகம் உருப்படும்.

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா5:00 AM, மே 28, 2011

    தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, போயஸ் கார்டனில் ஒன்றுக்கு இரண்டு முறை மாடியில் நின்று மக்களைப் பார்த்து கையசைத்து புன்னகைத்தது -இது உண்மையிலேயே சாதனைதான்

    பதிலளிநீக்கு
  15. // sri சொன்னது…
    மிகவும் அருமையான பதிவு//

    கருத்துக்கும் வருகைக்கும் நன்றி பாஸ்

    பதிலளிநீக்கு
  16. //பெயரில்லா கூறியது...
    தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, போயஸ் கார்டனில் ஒன்றுக்கு இரண்டு முறை மாடியில் நின்று மக்களைப் பார்த்து கையசைத்து புன்னகைத்தது -இது உண்மையிலேயே சாதனைதான்//

    ஹாஹாஹாஹா
    No Comments,

    பதிலளிநீக்கு
  17. //சிவலோகநாதன் நிறூஜ் கூறியது...
    அம்மா வின் மாற்றம் தொடர்ந்தால் தமிழகம் உருப்படும்.//

     நித்ரசனமான உண்மை நண்பா 
    நன்றி நண்பா ^_^

    பதிலளிநீக்கு
  18. பாஸ், ஜெயலலிதா பேட்டியைத் தாமதமாகத் தான் படிக்க முடிந்தது.
    மன்னிக்கனும் பாஸ்.
    தவற விட்டு விட்டேன்.

    அப்புறமா, அம்மா அருள் பாலிச்சால் எல்லோருக்கும் நன்மை தானே;-))

    பதிலளிநீக்கு
  19. //நிரூபன் கூறியது...
    பாஸ், ஜெயலலிதா பேட்டியைத் தாமதமாகத் தான் படிக்க முடிந்தது.
    மன்னிக்கனும் பாஸ்.
    தவற விட்டு விட்டேன்.

    அப்புறமா, அம்மா அருள் பாலிச்சால் எல்லோருக்கும் நன்மை தானே;-))//என்ன பாஸ்
    இதுக்கு போய் மன்னிப்பா ?
    நீங்க இருக்கிற பிஸி ல நம்ம ப்ளாக் பக்கம் வாறதே பெரிய விஷயம்,
    ஆனாலும் டைம் கிடைக்கும் போது அடிகடி வாங்க பாஸ்,

    உண்மைதான் பாஸ்,
    அம்மா மாறினால் நல்லம் தான்,
    மாறிவிட்டார் போல் தான் இருக்கு வெயிட் பண்ணி பாக்கலாம்,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாஸ்,

    பதிலளிநீக்கு
  20. ஏன் இரண்டு கழகங்களையும் திமுகா, அதிமுகா என்று காக்காயாக்கினீர்கள்?

    பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...