சனி, மே 14, 2011

வெளிவந்தது தேர்தல் முடிவுகள்.. ஜெயலலிதா அபார வெற்றி, கொண்டாட்டத்தில் அதிமுகாவினர்.

திமுகா வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வராவர் என்பது பலர் எதிர்பார்த்த ஒன்றுதான், ஆணந்த விகடன், குமுதம், இந்தியா டுடே, லயலா காலேஜ் போன்றவற்றின் பெரும்பாலான கருத்துக்கணிப்புக்களும் அதைத்தான் கூறின, ஆனால் ஒவ்வொரு முறையும் சரியாக கணிக்கும் நக்கீரனின் கருத்துகணிப்பு மீண்டும் திமுகா தான் ஆட்சியை பிடிக்கும் என்றது மக்களை கொஞ்சம் குழப்பித்தான் விட்டிருந்தது,
அதை விட ஜெயலலிதா வைகோவை கடைசி நேரத்தில் வெளியேற்றியது, அதிமுகா தேமுகாவின் ஒற்றுமையின்மை, விஜயகாந்தின் உளறல் பேச்சு போன்றவை அதிமுகாவை ஆட்டங்கான வைக்க இந்தப்பக்கம் திமுகாவின் ஒற்றுமையான கூட்டுப்பிரச்சாரம்,வடிவேலுவின் அதிரடி பேச்சு, பண பலம், போன்றவை திமுகாதான் ஆட்சியை புடிக்கும் என்று ஒரு மாயத்தோற்றத்தை உண்டுபண்ணி அரசியலின் காமடி பீஸ்சான சுப்பரமணியசுவாமியைக்கூட திமுகா பக்கம் பேச வைத்தது. ஆனால் இன்று வெளிவந்த தேர்தல் முடிவுகள் அதிமுகாவுக்கு ஆதரவாக வந்து திமுகா மேல் உள்ள மக்கள் வெறுப்பை படம் புடித்துக்காட்டியுள்ளது. ஒருவேளை திமுகா மறுபடியும் ஆட்சியை கைப்பற்றி இருந்தால் கலைஞர் வயதைக்காரணம் காட்டி முதல்வர் பதவியில் ஸ்டாலினை அமர்த்தி அவருடைய நெடு நாள் ஆசையை பூர்த்தி செய்து இருப்பார் இதைப்பார்த்து மதுரை அஞ்சாநெஞ்சன் வாளுடல் கிளம்பிவெர இடையில் பல அப்பாவிகளின் உயிர்கள் பலி போய் இறுதியில் முகாவின் கண்கள் பனிக்க! உடனே அண்ணன் தம்பிமார் ஒற்றுமையாகி தமிழ் நாட்டை ஆளுக்கொரு பகுதியாக பிரித்து ஆட்சியமைத்திருப்பார்கள் நல்ல வேளை அந்த கண்றாவி எதுவும் நடக்க வில்லை தமிழ் நாடு தப்பியது.
எது எப்படியோ ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து விட்டார்,
ஆட்சிமாற்றம் என்ற ஒன்றைக்காட்டிளும் இப்போது தமிழ் நாடு உள்ள நிலமையில் ஜெயலலிதாவின் ஆட்சிதான் வர வேண்டும் என்ற என் போன்றவர்களின் ஆசை நிறைவேறியுள்ளது. முதல்வர் ஜெயலிதாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதுடன் அவர் ஆட்சிக்கு வந்ததால் கிடைக்கும் என்று நான் நம்பும் சில நன்மைகளை பட்டியல் இடுகிறேன்...


:- மத்திய அரசை நெருக்குவதன் மூலம் ஸ்பெக்ட்ரம் ஊழலில் நேர்மையான தீர்ப்பை பெற்றுத்தெருவார்.

:- சட்ட ஒழுங்கு சீராக்கப்படும்.
திமுகா கருணாநிதி ஆட்சியில் கட்டவிழ்த்து விடப்படும் ரவுடிஸம் அதிமுகா ஜெயலலிதா ஆட்சியில் அடக்கப்படுவது வழமையாக நடக்கும் ஒன்றுதான்.

:- கலைஞர் தொலைக்காட்சி முடக்கப்படும்.
மக்கள் வரிப்பணத்தில் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு முடக்கப்படும் அல்லது அரசுடைமை ஆக்கப்படும்.

:- சினிமாத்துரையில் முகா குடும்பத்தின் ஆதிக்கம் ஒடுக்கப்படும். 

:- போர்குற்றத்துக்காக ராஜபக்சாவை கைது செய்யச்சொல்லி குரல் கொடுப்பார்.

இப்படி பல நன்மைகள் கிடைக்கும் அதில் நான் முக்கியமாக நினைக்கும் சிலவற்றை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்.
அப்போ ஜெயா ஆட்சியில் கெட்டதே நடக்காதா என்று நீங்கள் நினைப்பது புரிகிறது, ஜெயலலிதா ஆட்சியின் நன்மைகளை சொன்ன என்னால் ஒரு உத்திரவாதத்தையும் மட்டும் தரமுடியும் ஜெயலலிதா ஆட்சி சில விடையங்களில் அப்படி இப்படி இருந்தாலும் கடந்த ஜந்தாண்டு கால கருணாநிதி ஆட்சியை விட ஒன்றும் மோசமாக இருந்திடமுடியாது.பின்குறிப்பு: அடடா.. நாளைக்குத்தான் தேர்தல் முடிவுகள் வருது, இவன் இண்டைக்கே ஜெயலலிதா முதல்வர் எண்டு சொல்லுறானே என்று கடுப்பாகாதீங்கப்பா.. அடுத்தது அம்மா ஆட்சிதான் என்பது என் அசைக்க முடியாத நம்பிகை கூடவே ஆசையும், அதுதான் தேர்தல் முடிவு வெளிவருவதர்க்கு முதல் நாளே இந்த பதிவு.

4 கருத்துகள்:

 1. இதென்ன தேர்தல் லீக்ஸா மாப்பு...

  தேர்தல் முடிவுகள் வர முன்னாடியே புலானாய்வுத் தகவலாகப் பதிவு போட்டுள்ளீர்கள் என்று வந்தால், உங்களின் ஊகத்தையல்லவா குறிப்பிட்டுள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 2. *முதல் வடை நிரூபன் அண்ணாவுக்கே..lol

  //தேர்தல் முடிவுகள் வர முன்னாடியே புலானாய்வுத் தகவலாகப் பதிவு போட்டுள்ளீர்கள் என்று வந்தால், உங்களின் ஊகத்தையல்லவா குறிப்பிட்டுள்ளீர்கள்//

  *ஊகம் என்பதை விட துஷ்யந்தனின் ஆசை என்று சொல்லலாம் அண்ணா.

  பதிலளிநீக்கு
 3. தங்கள் ஆசைதான் பலிக்கும்போல் உள்ளது
  பலிக்கவும் வேண்டும்
  எனது பதிவுக்கு தஙகள் வரவுக்கும்
  பாராட்டுக்கும் நன்றி
  தொடர்ந்து வருகிறேன்
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...