செவ்வாய், ஆகஸ்ட் 30, 2011

அம்மணமான கருணாநிதி(நரி)யும் ஜெயலலிதாவின் அதிரடியும்.

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார் அதை தொடர்ந்து பேசியவர், மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படவுள்ளது தமிழக மக்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மக்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் இந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இவ் முடிவு
எடுக்கப்படுகிறது என்று அறிவித்தார். இது உண்மையில் மிக பெரிய விடயம், ஜெயலலிதாவிடம் அந்த மூவரையும் காப்பாற்றுங்கள்  காப்பாற்றுங்கள் என்று கோரிக்கை மேல் கோரிக்கை வைத்தவர்கள்  
கூட இதை எதிர் பார்த்து இருக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை.
ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க
வேண்டும் என்று கோரி ஜெயலலிதா  சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தது பாராட்ட தக்க  மிகப்பெரிய விடயம் இது மிகப்பெரிய சாதனை என்பதை விட தமிழ் உணர்வாளர்களின் ஒட்டுமொத்த அபிமானத்தையும்
ஒருங்கே சம்பாதித்து விட்டார் ஜெயலலிதா. ஏனெனில் மத்தியஅரசு ஆதரவுடன் ஜனாதிபதியால் உறுதிப்படுத்தபட்ட மரணதண்டனையை ஒரு மாநில முதல்வர் குறைப்பதோ நிறுத்தி வைப்பதோ மிக சிக்கலானது.
அதைவிட அவர்கள் மீது சாட்டபட்டுள்ள குற்றம் சாதாரணமானது
அல்ல ஒரு பிரதமரை  அவர் நாட்டில் வைத்தே கொலை செய்த குற்றம்.
இது ஒரு தவறான  குற்றசாட்டு  அவர்கள் நிரபராதி என்பது உண்மையாக
இருக்கும் பட்சத்திலும் பல விசாரணைகள் நடத்தப்பட்டு நீதிவான்களால்
தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், பின்பு  உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள்  மறு ஆய்வு மனு தாக்கல் செய்தாபோதும். இதனையும் அன்று உச்ச நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது,  பின்  தமிழக ஆளுநருக்கு கருணை மனுக்களை சமர்ப்பித்தார்கள் ஆனால்  தமிழக ஆளுநரும்   இவர்களின் கருணை மனுக்களை நிராகரித்தார். அதன் பின்பு பேரறிவாளன் முருகன் சாந்தன் 
ஆகிய  மூன்று நபர்களும் குடியரசுத் தலைவருக்கு அளித்த கருணை மனுக்களை   இந்தியக் குடியரசுத் தலைவரும் நிராகரித்த நிலையில்   அதன் பின்பு ஒரு மாநில முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிடுவது என்பது எத்தகைய சிக்கல்களை உருவாக்கும்  என்பது நாம் அறியாதது அல்ல.
இந்த  உண்மையைத்தான் முந்தைய ஜெயலலிவாவின்  தன்னால் எதுவும்
செய்யமுடியாது என்ற அறிக்கை சொல்லிப்போனது. இந்நிலையில்
தமிழ் உணர்வாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஜெயலலிதாவால்
சட்டபேரவையில் கொண்டு வரப்பட்ட இந்த  தீர்மானமானது ஜெயலலிதாவின்  அரசியல் வாழ்க்கையில் ஒரு மைல் கல்,  மீண்டும்
ஒருமுறை மனிதாபிமானத்துடன் தன் துணிச்சலை நிரூபித்து உள்ள ஜெயலலிதாவுக்கு பேரறிவாளன்  தாயார்,  சீமான்,  வைகோ போன்றவர்களும்  பல தமிழ் உணர்வாளர்களும் தெரிவிக்கும் பாராட்டுகளுடனும் என் பாராட்டுக்களையும் தெரிவிக்கும் இந்த நேரத்தில் கருணாநிதி பற்றி பேசுவது தேவையற்றதுதான். ஆனாலும் இந்த உத்தமபுத்திரன் போல் வேஷம் போடும் கருணாநிதியின் உண்மை முகத்தின்  சில  பகுதிகளையேனும்  காட்டியே  ஆக வேண்டும்.புள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது கருணாநிதிக்கு. ஒன்றும் புதுசு இல்லைத்தான். ஆனால் இந்த மூவர் மரணதண்டனை விடயத்தில் தன் கபட நாடகத்தை அரங்கேற்றுவதுதான்  மன்னிக்க முடியாதபடி உள்ளது.  நில அபகரிப்பின் நியாயமான நடவடிக்கையில் திமுகாவின் முக்கிய புள்ளிகளே உள்ளே போக வெகுண்டெழுந்த கருணாநிதி மிக பெரிய பேரணி நடத்தி தன் எதிர்ப்பை காட்டுகிறார் அதே வேகத்தை ஏன் இந்த மூவருக்காகவும் காட்டி இருக்க கூடாது. சரி பேரணிதான் நடத்த வேண்டாம் "அவர்களை காப்பாற்றுங்கள்" என்ற அறிக்கைதான் விட்டார் அத்துடன் அமைதியாக இருந்து இருக்க வேண்டியதுதானே.. இதிலுமா..  ஜெயாவை சாடி உன் கீழ்த்தரமான அரசியல் நாடகத்தை அரங்கேற்ற வேண்டும். இந்த வயது போன நேரத்தில் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா...?? இந்த மூவரின் தூக்கு தண்டனை யாரால் உறுதி செய்யப்பட்டது என்ற மனச்சாட்சி கூடவா உறுத்தவில்லை.

அப்பாக்கு பிள்ளை தப்பாமல் பிறந்து இருக்கு, அப்பா நடிகன் என்றால்
மகன் மகா நடிகனாக அல்லவா இருக்கான், ஜெயலலிதாவின்  தமிழர் மேலான போலிப்பாசம் வெளுத்துவிட்டதாம், சொல்லுறாரு ஸ்டாலின்.
சோனியாவின் புடைவை தலைப்பின் பின்னால் நிக்கும் இவர்கள்
அதை சொல்லுகிறார்களாம். ஏன்ய்யா.... மூன்று உயிர்களில் பதைபதைப்பில்
நின்றுகொண்டு அங்கயும் உங்களுக்கு ஆதாயம் தேடி அறிக்கைவிட
உடம்பு கூசாவில்லையா??  உண்மையில் அக்கறை உள்ளவர்கள்தான் என்றால் கடந்த ஆட்சி உங்கள் கையில் தானே இருந்தது. சொத்து
சேகரிப்பதில் காட்டிய ஆர்வத்தை அவர்களின் கருணை மனுக்களிலும்
காட்டி இருக்கலாம் இல்லையா...?? பேசாமால் இருந்தாக் கூட பராவாயில்லை அவர்களின் மரண தண்டனைக்கு ஆதரவு வழங்கி
சோனியாவை குஷி படுத்திவிட்டு இப்போது ஏன் இந்த போலி வேஷம்.
புள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் இந்த நரிப்புத்தி எதற்கு.
தமிழர்கள் முன்னால் அம்மணமான பின்னுமா உங்கள் வேஷம் இன்னும் கலையவில்லை என்று நம்புகிறீர்கள்..??

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின்  மரணதண்டனைக்கு  ஆதரவு  அளித்த அவர்களின் கருணை மனுவை நிராகரிக்கலாம் என்று
 19.4.2000 அன்று அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவு எடுக்கப்பட்டது.

"தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நான்கு கைதிகளில் ஒருவரான நளினியின் பெண் குழந்தை அனாதை ஆகி விடும் என்று முதல்வர் தெரிவித்த கருத்திற்கிணங்க, நளினி ஒருவருக்கு மட்டும் கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும், மற்றவர்களைப் பொறுத்த வரையில் அவர்களது கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை முடிவெடுத்தது."

"கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை ஏற்று ஆளுநர் 21.4.2000 அன்று ஒப்புதல் அளித்தார். அதன்படி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது."



வெள்ளி, ஆகஸ்ட் 26, 2011

அம்மா என்ற வார்த்தையின் புனிதத்தை காப்பாற்றுங்கள் ஜெயலலிதா..


ராஜீவ்காந்தி கொலை எப்போது நடந்ததோ அன்றில் இருந்து
இந்தியாவின் ஈழதமிழர்  மேலான  பழிவாங்கும்  நடவடிக்கை  ஆரம்பித்துவிட்டது. ஆனால் அந்த  ராஜீவ்  படுகொலையையே  எதனால் நடந்தது என்பதைத்தான்   இந்தியா கொஞ்சமும்   சிந்தித்து
பார்க்க மறுக்கிறது. இப்போது வன்னியில் நடந்த இறுதி போரில் எவ்வளவுக்கு எவ்வளவு ஈழதமிழர் மீது வன்முறைகள் கட்டவுழ்த்து  விடப்பட்டதோ அதற்க்கு சற்றும் குறைவு இல்லாமல்தானே
ராஜீவ்காந்தியின் அமைதிப்படையின் அட்டகாசங்கள் அன்று
இருந்தது. இப்போது ராஜபக்ஷா மேல் போர்குற்ற நடவடிக்கைக்கு
நாம் காட்டும் ஆர்வத்தை ஒருவேளை ராஜீவ் உயிரோடு இருந்து இருந்தால் காட்டி இருப்போமோ என்னவோ.. என்னை பொறுத்தவரை   ராஜபஷாவால் ஏற்பட்ட வலியை விட ராஜீவ்வால் நமக்கு ஏற்பட்ட வலிதான் அதிகம்.  ஏனெனில் நம்  எதிரி  நெஞ்சில்  குத்துவதைவிட நம் நண்பன்  முதுகில்  குத்தும்  போதுதான்  வலியும்  வேதனையும்  அதிகம்.

ராஜீவ்வால் நாம் நிறைய இழந்து இருக்குறோம் அனுபவித்து 
இருக்கிறோம்.ஆனால் நான்   எப்போதுமே ராஜீவ்வின் கொலையை நியாயப்படுத்த முன் வரவில்லை. 1991 ஆம் ஆண்டு  ஸ்ரீ பெரும்புத்தூரின் நடந்த ராஜீவ் கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட
நிலையில் கருணை மனுவிலாவது தங்கள் உயிர்கள் காப்பாற்றப்படும் என்ற  நம்பிக்கையில் மட்டும் வாழ்ந்து வந்தவர்களை அவர்களின் கருணைமனு நிராகரிப்பு அந்த நம்பிக்கையையே தூக்கி புதைத்துவிட்டது.  இவர்களுக்கு இந்த தண்டனை நியாமானதுதானா..? என்று எவ்வித சார்பு தன்மை இல்லாமல்
கூட ஆராய்ந்து பார்த்தாலும் அங்கு நியாயத்துக்கு பதில் இந்திய அரசின்
உயிருக்கு உயிர் என்ற பழிவாங்கும் கொடூர எண்ணம்தான் கைகொட்டி
சிரிக்கிறது.  ராஜீவ் கொலையைப்பற்றி எதுவும் தெரியாமல் ஒரு சக தமிழனுக்கு  ஒரு பேட்டரி வேண்டி கொடுத்ததுக்கு கூடவா மரண தண்டனை. அப்பப்பா.... இந்திய அரசின் சட்டம் எவ்வளவு விசித்திரமாக
இருக்கு. இப்படி பார்த்து பார்த்து மரண தண்டனையை கொடுக்க வெளிக்கிட்டால்  இந்தியாவில் மக்கள் தொகை வெறும் ஆயிரத்தை
தொட்டுவிடும்.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனை நியாயமானது தானா என்று அவர்களை கேள்விகேட்டு விவாதிப்பதே
மடத்தனமாது ஏனெனில் அவர்களுக்கே தெரியும் இந்த தீர்ப்பு
எவ்வளவு நேர்மைநியாயம் அற்றது என்று. ஒரு ஆளும்வர்க்க   
குடும்பத்தை குதுகலப்படுத்த எடுக்கப்பட்ட முடுவு இது.  அந்த
இத்தாலி குடும்பத்தின் ஒரு உயிர் இழப்பு என்பது உண்மையில் வருந்ததக்கமைதான் ஆனால் அந்த இழப்பை சரிசெய்ய மூன்று
அப்பாவி உயிர்களின் இரத்தத்தை குடிக்க வேண்டும் என்று
அலையும் இந்த காட்டேரிகளை நம்பித்தான் இந்தியாவே
இருக்கின்றதா என்பதுதான் வேதனை. இந்த இத்தாலியில்
இருந்து வந்த மருமகள் ஈழதமிழர் எங்களை அடியோடு
வெறுக்கிறார் காரணம் அவர் கணவர் கொலைக்கு காரணம்
நாங்கலாம் . சரி இருக்கட்டும்...  இதே குடும்பத்தில் நடந்த
இந்திராகாந்தி படுகொலைக்கு யார் காரணம், ஒரு சீக்கியன்
தானே..  அப்படியானால் இந்த இத்தாலியில் இருந்து வந்த
மருமகள் எம் இணைத்தை வெறுப்பது போல் ஏன் சீக்கிய
இனத்தை வெறுக்கவில்லை, அதுக்கு பதில் தன் கோட்டையிலேயே நம்பிக்கைக்கு உரிய பாதுகாப்பு பதவியை கூட சீக்கிய
இனத்தவருக்கு கொடுத்து  சீக்கிய இனத்தை சேர்ந்த சிங்க்கு
பிரதமர்  பதவியை  கொடுத்து மகிழ்கிறார். ஓஹோ..  தன் ஆசை
கணவரை கொலை செய்தவர்கள் என்று   சந்தேகப்படுபவர்கள்
மீது கொலைவெறி... அதே தனக்கு பிடிக்காத தன்  மாமியாரை
படுகொலை செய்தவர்களுக்கு 'தானே தன் கண்ணால்  பார்த்தபின்பும்'  பதவிகளும் மரியாதையும் பாசமும்.  எந்த
காலத்தில் மாமியாரை மருமகளுக்கு பிடித்து இருக்கு.
பதவியிருப்பதால் தங்களுக்கு தகுந்தால் போல் சட்டத்தையை வளைக்கிறார்கள்  
என்ன உலகமடா இது.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரணதண்டனையை
நிராகரிக்க சொல்லி போராட்டங்கள் தமிழ்நாட்டில் மெது மெதுவாக
வெடித்துகிளம்ப தொடங்கி இருக்கு. கட்சிசார்பு இன்றி  பேரறிவாளன்
பெற்றோர் உட்பட "நீங்கள் தலையிட்டு காப்பாற்றுங்கள்" என்று
கோரிக்கைகள் முதல்வர் ஜெயலலிதாவை நோக்கி வந்துகொண்டே
இருக்கு என்ன செய்யபோறார் ஜெயலலிதா என்று உலக தமிழினமே
விரக்தியுடனும் எஞ்சியுள்ள நம்பிக்கையுடனும் பார்த்துகொண்டு 
இருக்கிறார்கள்.  இந்த   நேரத்தில் ஜெயலலிதாவிடம்  சில வார்த்தைகள்..

ஜெயலலிதாவுக்கு: இது நீங்கள் அமைதியாக இருக்கும் நேரம்
அல்ல.கொஞ்சம் வெளியே பாருங்கள்.. கட்சி சார்புகள் மத சார்புகள் மொழிசார்புகள் இன்றி அந்த அப்பாவி உயிர்களுக்காக
போராடுகிறார்கள். இந்த விசயத்திலும் "அவர்கள் சொல்லி நான்
என்ன கேட்பது" என்ற இறுமாப்புடன் இருந்து விடாதீர்கள். இப்போது எல்லாம் நாங்கள் உங்களைத்தான் அதிகம் நம்புகிறோம். தமிழின தலைவன் என்று கருணாநிதிக்கு முடிசூட்டிய காலம் எல்லாம் போய்விட்டது அவர் எங்களை நம்ப வைத்து முதுகில் குத்தி விட்டார், கடந்த தேர்தலில் நீங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என உங்களை
விட அதிகம் ஆசைப்பட்டவர்கள்தான் நாங்கள்.  அம்மா வரணும்..
அம்மா வந்தால்தான் எங்களுக்கு ஒரு விடிவு  கிடைக்கும்.. அம்மா துணிச்சல் மிக்கவர் எங்களுக்காக போராடுவார்.. அம்மா முகத்துக்கு
நேரே பேசுபவர் செய்பவர் அவருக்கு கருணாநிதி போல் நடிக்கவோ முதுகில் குத்தவோ தெரியாது..இப்படி கூடும் இடங்களில் எல்லாம் உங்களுக்காக வக்காலத்து வாங்கி பேசிய ஈழதமிழன்தான் அதிகம். அதேபோலவே நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள் போகுமிடமெல்லாம் சந்தோஷத்தை கொண்டாடினோம் நாங்கள், எங்கள் சந்தோஷவரவேற்ப்பு உங்கள்  காதுக்கு எட்டியதோ என்னவோ நீங்கள் பதவியேற்ற
உடனேயே உங்கள் பார்வை எங்கள் பக்கம் திரும்பியது எங்களுக்காக எங்கள் நலனுக்காக அடுத்தடுத்து  நல்ல முடிவுகளை  எடுத்தீர்கள்  பேசினீர்கள். ஆதரவற்று நிர்கதியாய்  நாங்கள்  நின்றவேளை உங்களின்  ஆதரவு  கண்டு  நாம்  பெற்ற  ஆனந்தத்தை   வார்த்தைகளால்
சொல்லிவிட முடியாது. இப்போது மீண்டும் உங்களிடமே
உயிர்பிச்சை கேட்க்கவந்து இருக்கிறோம். தாயிடம்தானே முறையிட
முடியும் தாயன்பால் மட்டுமே சலிக்காமல் உதவிட முடியும்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின்  உயிர்களை நீங்கள் நினைத்தால் காப்பாற்றலாம்.  நீங்கள் ஒன்றை நினைத்தால் அதை
செய்துமுடிக்காமல் விட மாட்டீர்கள். உங்களை விட உங்கள் மீது
எங்களுக்கு அதிக நம்பிக்கை இருக்கு. 20  வருடங்களாக தனிமை
சிறைவாழ்க்கையை அனுபவித்துவிட்ட அவர்களுக்கு மேலும் தண்டனையை கொடுப்பது முறையல்ல,  அவர்களை காப்பாற்ற
சட்டத்தில் கூட இடமிருக்கிறது ஒருவரின் கருணை மனு மீது முடிவெடுப்பதில் காலதாமதம் செய்யப்பட்டால், அவருடைய தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் எத்தனையோ தீர்ப்புகளை வழங்கியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்த தேவீந்தர் சிங்பால் புல்லார் என்பவரின் கருணை மனு மே மாதம் தள்ளுபடி
செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை கடந்த 23ஆம்
திகதி  விசாரித்த உச்சநீதிமன்றம், அவரது கருணை மனு மீது முடிவெடுப்பதில் தாமதம் காட்டப்பட்டது சரியல்ல என்றும், இதை அடிப்படையாக வைத்து அவரது தண்டனையை குறைப்பது குறித்த கோரிக்கை மீது முடிவெடுக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்து முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் மரண தண்டனையில் இருந்து காப்பாற்றவும் பொருந்தும். உங்களை அம்மா என்று வாய்நிறைய அழைத்து
மகிழ்கிறோம். அந்த அம்மா என்ற வார்த்தையின் புனிதத்தையாவது காப்பாற்றுங்கள். உங்கள் ஆட்சியில் நீங்கள் செய்த எத்தனையோ
விடயங்களை சொல்லி சொல்லி பெருமை பட்டு உள்ளீர்கள்.
உலகத்திலேயே உயிர்பிச்சை கொடுப்பதைப்போல் உயர்ந்தது
வேறெதுவும் இல்லை, அவர்களை காப்பாற்றுங்கள் அந்த பெருமை
காலகாலத்துக்கு உங்கள் புகழ்பாடும்.அந்த அப்பாவி உயிர்களை
காப்பாற்றி தாருங்கள். இதை எங்கள் வாழ்நாளில் மறக்கவே
மாட்டோம்.. எங்கள் வருங்கால சந்ததிகள் கூட உங்களை தங்கள் வரலாற்றில் போறித்துவைத்து அன்புகாட்டுவார்கள், இப்போதைய
எங்கள் நிலையில் எங்களுக்கு தனி ஈழமோ ராஜபக்ஷாவின்
போர்குற்ற விசாரணையோ எதுவும் வேண்டாம் அந்த மூன்று
அப்பாவி உயிர்களைவிட இவை ஒன்றும் பெரிது இல்லை
எங்களுக்கு. விரைந்து நடவடிக்கை எடுங்கள்  காலமெல்லாம்
கடமைப்பட்டு இருப்போம் உங்களுக்கு.




ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2011

அஜித்தின் அம்மாவாக தேவயாணி..! தமிழ்சினிமாவின் அராஜகம்.

ண்மையில் பத்திரிகையாளர்கள்  சந்திப்பின் போது தேவயாணி குமுறிய விடயம் இது. இப்போது உள்ள ஹீரோக்கள் எல்லாம் என்னை தங்களுக்கு அம்மாவாக நடிக்க அழைப்பு மேல் அழைப்பு விடுகிறார்கள் அது கூட பராவாயில்லை முன்பு நான் யார் யாருடன் ஜோடி போட்டேனோ
அவர்களே என்னை தங்களுக்கு அம்மாவா நடிக்க அழைப்பதுதான்
வேதனையாக இருக்கு என்று சொல்லியவர் உதாரணமாக ஒரு
சம்பவத்தையும் குறிப்பிட்டார்.  அஜித்தின் சூப்பர் ஹிட் திரைப்படமான "வரலாறு" திரைப்படத்தில் அஜித்துக்கு அம்மாவாக நடிக்க அழைத்ததாகவும்(பின்பு கனிகா நடித்த வேடம்)  அதற்க்காகாக பெருந்தொகை ஒன்றை சம்பளமாக தர முன்வந்த போதும் "எனக்கு சம்பளம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை"என்று கூறி அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாகவும்  முன்பு அஜித்துடன் பல படங்களில் நான் ஜோடியாக நடித்துள்ளேன்,
எங்கள் ஜோடிப்பொருத்தம் ரசிகர்களிடையே மிக பிரபலமானதும் கூட இப்படி இருக்கும் போது நான் எப்படி அஜித்துக்கு அம்மாவாக நடிக்க முடியும்? என்று எதிர்கேள்வி கேட்டு ஆதங்கப்பட்டவர். பின்பு  பிற்காலத்தில் நான் அம்மாவாக நடித்தால் கூட  புதுமுக நடிகர்களுக்கு மட்டுமே
அம்மாவாக  நடிப்பேன் கண்டிப்பாக நான் ஜோடியாக நடித்த நடிகர்களுக்கு மட்டும் ஒருபோதும் அம்மாவாக நடிக்கமாட்டேன் என்று சற்று காட்டமாகவே  சொல்லி இருந்தார்.

து தேவயானியின் தனிப்பட்ட முடிவு என்று சொல்லி இதை நாம் மேலோட்டமாக பார்க்காமால் கொஞ்சம் உற்றுப்பார்த்தால் உள்ளே தமிழ்சினிமாவின் அராஜகம் கைகொட்டி சிரிப்பது தெரியும்.  முன்பு அஜித்-தேவயாணி ஜோடி மிகப்பிரபலம். கல்லூரிவாசல் படம் மூலம் முதன் முதலில் ஜோடி சேர்ந்தவர்கள், அதன்பின் வெளிவந்து தேசியவிருது பெற்ற மெகாஹிட் படமான "காதல்கோட்டை" மூலம் மிகச்சிறந்த ஜோடியாக ரசிகர்களாக கணிக்கப்பட்டார்கள்.  பின்பு தொடரும்.., நீ வருவாய் என.. போன்ற படங்களில் கூட வெற்றிகரமான ஜோடியாகவே   வலம்வந்தார்கள் பின்பு தேவயானியின் திடீர் காதல் திருமணத்தால் தேவயானிக்கு சினிமாவாய்புக்கள் மறுக்கப்பட முன்பு யாருடன் ஜோடிபோட்டு பிரபலமானாரோ இப்போது அவருக்கே அதே அஜித்துக்கே  அம்மாவா நடிக்க வைக்க  தேவயானியை தமிழ்சினிமா முயற்சிப்பதுதான் வேடிக்கை.  இது தமிழ்சினிமாவின் போக்கிரித்தனம். ஹீரோ என்பவன் எப்போதும் இளமையாகவே இருப்பான் அவனை எப்போதும் ரசிக்க ரசிகர்கள் இருப்பார்கள்   அவன்  அறுபது வயதில் கூட  பதினாறு வயது ஹீரோயினுடன் ஆடிப்பாடுவதை சகிப்பார்கள் என்று நினைக்கும் தமிழ்சினிமா, கதாநாயகிகள் விடயத்தில் மட்டும் எதிர்ப்புறமாய் நினைப்பதுதான் அராஜக போக்கின் உச்சம்.

அடுத்த மாதம் வரவிருக்கும் முகேஷ் ஜோடியாக தேவயாணி நடித்திருக்கும் "சர்க்கார்  காலனி" திரைப்படத்தில் இருந்து..
ரு நடிகைக்கு இருக்கும் செல்வாக்கு அவர் திருமணத்தின் பின் எப்படி குறைந்து போகும் என்பதுதான் எனக்கும் ஆச்சரியமான  விடையம்.
மலையாள பக்கம் போனால் அங்கே இப்போதும் தேவயாணி ஹீரோயினாக நடித்துக்கொண்டுதான்  இருக்குறார். அடுத்தமாசம் தேவயாணி முகேஷுடன் ஜோடிபோட்ட "சர்க்கார்  காலனி"  திரைப்படம் வெளிவர இருக்கின்றது. ஏன் சுகன்யா சோபனா  எல்லாம் இப்பவும் கதாநாயகிகளாக மலையாளத்தை  வலம் வருகிறார்கள். ஏன் இந்திய சினிமாக்களுக்கே முன்னோடிகளாக இருக்கும் ஹிந்தி சினிமாக்களில் கூட நடிகைகள் விடையத்தில் நியாயமாகவே நடந்து கொள்கிறார்கள். திருமணத்தின் பின் கூட  ஐஸ்வர்யா  ராய்  அங்கே இப்போதும் முன்னணி நடிகைதான் அவர்  திருமணம் அவர் செல்வாக்கையோ திரைப்பட வாய்ப்புக்களையோ எந்த விதத்திலும் பாதிக்க வில்லை. ஏன் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான பின்பு கூட  கஜோல் ஷாருக்கானுடன் ஜோடிபோட்டு அசத்துகிறார். இப்போது கூட கஜோளுடன் ஜோடிபோட பாலிவுட் ஹீரோக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால் நம்மூர் ஹீரோக்கள்..?? ஹீரோயினை தலையில் வைத்து கொண்டாடும் இவர்கள் அவர்களுக்கு திருமணமாம் என்ற செய்தி வந்தாலே போதும்  எவ்வளவு தூரம்  தூக்கினார்களோ அங்கே இருந்தே கீழே போட்டுவிடுவார்கள். இதற்க்கு நல்ல உதாரணம் சிம்ரன். தமிழ்சினிமாவில் முன்னியில் இருந்தபோது  சிம்ரனுடன்  ஒரு  படத்தில் ஆவது ஜோடி போட்டுவிடவேனும் என்று அலைந்த ஹீரோக்களே நம் ஹீரோக்கள்.  பரபரப்பாக இருக்கும்போதே  திருமணம் செய்துகொண்ட சிம்ரன் திருமணத்தின் பின்பு நடிக்கவந்து முட்டிமோதிப்பார்த்தார் கதாநாயகி வாய்ப்புக்கொடுப்போர்தான் யாருமில்லை. முன்பு யார்யாரெல்லாம் சிம்ரனுடன் ஜோடிபோட துடியாய் துடித்தார்களோ அவர்களே சிம்ரனை தங்களுக்கு அம்மாவாகவும் அக்காவாகவும் நடிக்க அழைத்ததுதான் வேதனை. இதுதான் இன்று தமிழ்சினிமாவில் நடிகைகளுக்கு உள்ள நிலைமை.

அஜித்-தேவயாணி  ஜோடி.
ண்மையிலேயே தமிழ்சினிமாவில் அதிததிறமை இருந்தாலும் திருமணமாகிவிட்டால் அவர்கள் ஹிரோயினாக நடிப்பதை ரசிகர்கள் விரும்பவில்லையா?? அல்லது தமிழ்சினிமாவை மிகஅதிகமாக ஆண்களே
ஆக்கிரமித்து இருப்பதால் திருமணமான ஹீரோயின்களை தங்கள் படங்களில் பயன்படுத்தினால் அவர்களால் பல வழிகளில் தங்களுக்கு
ஒத்துழைப்பு தரமுடியாது என்று நினைக்கிறார்களா?? இதில் எது உண்மை??
கடந்தகால தமிழ்சினிமாவில் இப்படிப்பட்ட அவல நிலை இல்லை என்றே சொல்லவேண்டும். திருமணத்தின் பின்பு கூட சொவ்கார்ஜானகி, கே.ஆர் விஜயா, சாவித்திரி போன்றவர்கள் ஒரு கலக்கு கலக்கினார்கள்.  ஏன் இப்போது கூட நாங்கள் பழைய திரைப்படங்களைப்பார்க்கும் போது கே.ஆர் விஜயா சாவித்திரி போன்றவர்கள் தொலைக்காட்சி பெட்டியை மறைக்கும் உருவத்துடன் நின்று கொண்டு அத்தான் எனக்கு வெக்கமாக இருக்கு என்றோ..  அத்தான் என்னை கைவிட்டு விடாதீர்கள்.. என்று காதல் வசனம் பேசுவது ஆச்சரியத்தை கொடுக்கும். அப்போது சினிமாவில் இருந்தவர்கள் கதையையும் நடிகர்கள் திறமையையும்தான் நம்பினார்கள் போல்.

ப்போது தேவயானியை எடுத்துகொண்டாள் கூட 1995  ஆண்டு காலப்பகுதியில் தமிழ்சினிமாவில் எவ்வித பின்பலமும்  இன்றி ஒரு குத்தாட்ட நடிகையாக ஒரு பாடல் காட்சியில் அறிமுகமாகி  தன் நடிப்பாற்றலால் முன்னனி நடிகையாக  முன்னேறியவர்.  அவர்  பிஸியாக   நடித்துகொண்டிருந்த காலப்பகுதியிலேயே "தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகைக்கான  விருதை"  நான்கு முறை  பெற்றதே அவரின் சிறந்த நடிப்புக்கு உதாரணம்.  பரபரப்பாக நடித்துகொண்டிருக்கும்போதே  திடீர் என காதல் திருமணம் செய்துகொண்டார். தமிழ்சினிமாவின் சாபம் அவருக்கு மட்டும் விதிவிலக்கா என்ன..??  அவர் ஒப்பந்தம் ஆன "மானஸ்தன்" போன்ற பல படங்களில் இருந்து காரணமே இன்றி தூக்கி வீசப்பட்டார், அவர் நடித்து கொண்டிருந்த படங்கள் ஆன " ரோசாப்பு சின்ன ரோசாப்பு"  "தவமணி"  "க்ளிக்" போன்ற திரைப்படங்கள் பாதிவளர்ந்த நிலையில் நிறுத்தப்பட்டன.  "லவ்லி "  "பம்மல் கே சம்மந்தம்" படங்களில் பல காட்சிகளில் நடித்துகொண்டிருந்த நிலையிலேயே தேவயாணி நீக்கப்பட்டு அவருக்கு பதில் மாளவிகா சினேகா போன்ற நடிகைகளை ஒப்பந்தம்
செய்யப்பட்டார்கள்.  இதில் பம்மல்  கே சம்மந்தம்  கமலின் திரைப்படம். ஒரு நல்ல நடிகையை திருமணம் செய்துகொண்டார் என்ற ஒரே காரணத்துக்காக நீக்குகிறார்கள் இதற்க்கு கமல் கூட மவுனமாக இருந்து  ஆதரித்தமைதான் ஆச்சரியம். எது எப்படியோ "திருமணமாகிவிட்டது"   என்ற ஒரே காரணத்துக்காக பல திறமையான நடிகைகளை ஒதுக்கி வைப்பது  என்பது தமிழ்சினிமாவுக்கு ஆரோக்கியமான விடயம் அல்ல.


ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2011

ஆமாம்.. ஜெயலலிதா உத்தமிதான்.

நான் பதிவுலகம் வந்து ஐந்து மாதங்கள் கூட நிறைவடையவில்லை
அதற்குள்  மிக குறைவான பதிவுகளேயே எழுதி இத்தனை பக்க 
காட்சிகளையும்  நண்பர்களையும்  பெற்று இருப்பது உண்மையில் மிக சந்தோஷத்தை கொடுக்குது.  ஆழமாகவும் அழகாகவும் எழுதும் மிக
திறமையான பதிவர்கள் இருக்கும் இந்த வலையுலகில் என்னுடைய
கிறுக்கல்களை நினைத்து பல நேரங்களில் சங்கடப்பட்டாலும்
இதுவரை நான் எழுதிய எந்த பதிவுக்கும் எனக்கு எதிரான கருத்தையோ, மைனஸ் ஓட்டோ, மோசமான மின்னஞ்சல்கலையோ பெற்றது இல்லை
முதல்முறையாக என் கடந்த பதிவானா "பாராட்டலாமே ஜெயலலிதாவை" 
என்ற பதிவுக்கு இவை அணைத்தையும் ஒன்றுசேர பெற்று உள்ளேன்.
அப்படி கடந்த பதிவில் என்ன கூறிவிட்டேன் என்ற சந்தேகத்தில்
மீண்டும் அந்த பதிவை படித்து பார்த்தேன் சத்தியமாக அப்படி  தவறு
ஒன்றும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை,   முன்பு செய்த
தவறுகளை மறந்து இப்போது அவர் செய்யும் நல்லவற்றை
பாராட்டுங்கள் என்று சொல்லியது அவ்வளவு பெரிய குற்றமா என்ன?? அப்படி இருக்கும் போது ஏன் இப்படி?? தவறான புரிதலும், நிதானமாக படிக்காததும்தான் இவற்றுக்கான காரணம்.

ஜெயலலிதா ஒன்றும் உத்தமி இல்லை உத்தமி இல்லை என்று திரும்ப திரும்ப சொல்லுகிறார்கள், அட பாவீங்களா இங்கே நான் எங்கே சொல்லியுள்ளேன் அவர் உத்தமர்தான் என்று..?? கடந்த காலங்களில்
அவர் தப்பு செய்துள்ளார்  அதை நானும் ஒத்துகொண்டுதான் உள்ளேன்.
அதற்காக அவர் இப்போது செய்யும் நல்லவை எல்லாவற்றையும்
விமர்சிப்பது எந்த வகையில் நியாயம்..?? தவறு செய்பவர்கள் திருந்தவே
மாட்டார்களா??  ஜெயிலில் இருந்து வருபவன் மீண்டும் மீண்டும்
தவறு  செய்துகொண்டேதான் இருப்பான் என்றால் நான் என்னத்தை சொல்வது??  திருந்தி வாழ்வது என்பது நம் சமூகத்தில் மறுக்கப்பட்ட  உரிமையா  என்ன?? இல்லை இல்லை அவர் ஆரம்பத்தில் தவறு செய்துவிட்டார் ஆகவே இனி அவர் என்ன நல்லது செய்தாலும்
நாங்கள் விமர்சித்துக்கொண்டுதான் இருப்போம் என்பவர்கள்
வாழ்க்கையில் இதுவரை தவறே செய்தது இல்லையா?? இவர்களுக்கு
ஒரு ஆதிகால சம்பவம் ஒன்றை நினைவு படுத்தலாம் என்று நினைக்குறேன்.  ஒரு கிராமவாசிகள் இயேசுவிடம் ஒரு பெண்ணை
தர தர வென்று இழுத்து வந்து, இயேசுவே இவள் தவறு செய்துவிட்டால்
ஆகவே இவளை கல்லால் அடித்து கொலை செய்ய நீங்கள் அனுமதிக்க
வேண்டும் என்று வேண்டி நின்றார்களாம். அதற்க்கு இயேசு,  அன்பர்களே
உங்கள் முடிவுக்கு நானும் கட்டுப்படுகிறேன் ஆனால் ஒன்று இதுவரை
உங்கள் வாழ்க்கையில் யார் ஒருவர் எந்த தவறும் செய்யவில்லையோ
அவர் அப்பெண்ணின் மேல் முதல் கல்லை விட்டு வீசுங்கள் என்று
சொல்லி கண்களை  மூடிக்கொன்றாராம், சற்று நேரம் விட்டு கண்களை
திறந்து பார்த்த போது அங்கே அந்த பெண் மட்டும் நின்று கொண்டிருந்தாளாம் அவளை இழுத்துவந்தவர்கள் யாருமே அங்கே இல்லை. இதற்க்கான விளக்கம் சொல்ல தேவையில்லை உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்குறேன்.

ஸ்பெக்ரம் ஊழல் பிரச்சினையை  ஜெயலலிதா சரியாக கையாளவில்லை
என்கிறார்கள். என்னைப்பொறுத்தவரை தமிழக அரசியல்வாதிகளில்
அதை சரியாக கை ஆண்டவர் ஜெயலலிதாதான், கிராமமங்களில் கூட
இப்போது ஸ்பெக்ரம் ஊழல் பற்றி தெரிந்து இருக்கிறார்கள் என்றால் 
அதற்க்கு ஜெயலலிதாவும் அதிமுகாவுமே காரணம், ஸ்பெக்ரம் ஊழல்
பிரச்சனை என்பது கருணாநிதியை சந்திசிரிக்க வைக்க ஜெயாவுக்கு
கிடைத்த புதையல் போன்றது அதை விட்டு வைக்க அவர் என்ன
இளிச்சவாயா??  புலி எதர்ப்பு என்பது ராஜீவ் கொலைக்கு முன்னமே
ஜெயா எடுத்த அரசியல் ஆயுதமாம். இருக்கட்டுமே... இப்போது
இலங்கை தமிழர் எங்களில் எல்லோருமே புலி ஆதரவாளர்களா
என்ன?? ஏன் வன்னியில் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டே
அவர்களை எதிர்த்தவர்கள் எத்தனை பேர்??  உங்கள் பார்வையில்
அவர்கள் அத்தனை பெரும் துரோகிகளா என்ன?? ஜெயலலிதா
அரசியலுக்கு வந்த புதிதில் இலங்கை அரசாங்கத்தை கண்டித்து
புலிகளுக்கு ஆதரவாக தன் தலைமையில் நடத்திய பிரமாண்ட
பேரணியை இப்போதும் நினைத்து  சிலாகிப்போர் ஏராளம், அப்படிப்பட்டவர்
புலி எதிர்பாலராக  மாறினார் என்றால்  அதற்கும் அவரிடம் ஏதாவது 
காரணம்  இருக்கும் இல்லையா?? இங்கே எங்காவது புலிகளுடன் சேர்த்து
இலங்கை ஓட்டுமொத்த  தமிழரையும் எதிர்ப்பதாக சொன்னாரா என்ன??
அப்புறம் வைகோவை  விலக்கி வைத்துவிட்டாராம்.  அட ராமா...
வைகோவுக்கு முப்பது நாப்பது இடங்களை கொடுக்க வைகோவுக்கு
தமிழ் நாட்டில் இப்போது உள்ள செல்வாக்கு என்ன என்பதை ஜெயா அறியாதவரா ??  அல்லது வைகோவுக்காக முதல்வர் பதவியை
கருணாநிதிக்கு தாரை வார்க்கத்தான் முடியுமா??  தேர்தல் மூட்டம்
டி.ராஜேந்தர் தன கட்சி சார்பாகா போட்டியிட அம்மாவிடம் முப்பது
இடம் கேட்டு தூது அனுப்பினாராம் அதற்க்கு அம்மா, அவரை
ஆணியே புடுங்க சொல்லல சும்மா படுத்து ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க
என்று சொன்னதாக எங்கோ படித்து அடக்கமுடியாமல் சிரித்தேன்,
அதற்க்கு கிட்டத்தட்ட நெருங்கிறது அல்லவா வைகோவின் சீட் ஆசை.
ஆனாலும் அந்த நேரம் வைகோ மேல் உள்ள மதிப்பாலும் இரக்கத்தாலும்
தன நிலையில் இருந்து இறங்கி வைகோவுக்கு ஜெயா கடிதம்  எழுதியதை
மறந்தா விட்டீர்கள்??  போங்கப்பா அது கூட அரசியல் சதுரங்கம் என்பீர்கள்.
இதற்க்கு பின் கூட இவ்வளவு காலமும் யாரை விமர்சித்தோம் என்ற
சுய நினைவையே இழந்து "இலை கருகி சூரியன் உதிக்கட்டும்" என்று
இவர்கள் கருணாநிதிக்கு ஆதரவு அளித்த பின் கூட ஜெயா மாபெரும்
வெற்றி பெற்ற பின்பு தன பதவியேர்ப்பு விழாவுக்கு வைகோவுக்கு
முறையாகா அழைப்பிதல் அனுப்பி முதல் வரிசையில் இடம் ஒதுக்கியதை கூடவா மறந்து ஜெயா மாறவே இல்லை என்று
மாங்கு மாங்கு என்று விமர்சிக்கிறீர்கள்?? அடுத்து சமச்சீர் பாடத்திட்ட
பிரச்சனை.  கடவுளே கடவுளே  சமசீர் பாடத்திட்டம் என்ன கருணாநிதியின்
வாழ்க்கை வரலாறா என்ன??  வயசு போன நேரத்தில் கிளு கிளு நடிகைங்களை புகழவிட்டு கேட்டார் பாவம்   அனுபவித்துவிட்டு போகட்டும் என்று பொறுத்துகொண்டோம் ஆனால் அதே விளையாட்டை
பிள்ளைகளின் பாடப்புத்தகங்களிலும் காட்டினால் பொறுத்துகொள்ளவா 
முடியும்??  இப்போதுமட்டும் என்ன  "அந்த" பக்கங்களை நீக்கி விட்டுத்தானே
கொடுத்து உள்ளார் அதை அப்போதே செய்து இருக்கலாமே என்போருக்கு
எல்லா நேரமும் எல்லோருக்கும் பிடித்த மாதிரி செய்ய அவர் என்ன
கடவுளா என்ன?? ஆனாலும் இப்படிப்பட்ட தவறுகளை விமர்சியுங்கள்
அதற்காக   கண்ணை மூடிக்கொண்டு செய்யும் நல்லவற்றையும்
விமர்சிக்காதீர்கள் அவற்றை மனசை திறந்து பாராட்டுங்கள் என்பதுதானே என் வாதம் அதையேன் புரிந்துகொள்கிறீர்கள் இல்லை.

ப்புறம் ஜெயலலிதா உத்தமியா உத்தமியா என்று உளருபவர்களிடம்
சில வார்த்தைகள்.  வாங்க சார் வாங்க.. "போர் என்றால்  மக்கள் சாகத்தான் செய்வார்கள்" என்று சொன்ன ஜெயலலிதா உத்தமியா  என்று நீங்கள் என்னிடம் கேட்டால் வன்னியில் கொத்து கொத்தாக மக்களை இலங்கை
ராணுவம் கொன்று குவிக்க இங்கே  சோனியாவுக்கு தந்தி மட்டும் அடித்துக்கொண்டு நாளொரு நடிகையை சந்தித்துக்கொண்டு 
இருந்துவிட்டு தன் குடும்பத்துக்கு பதவி வேண்ட மட்டும்  தள்ளாத
வயதிலும் தள்ளு வண்டியில் டெல்லி சென்ற கருணாநிதி உங்கள்
பார்வையில் உத்தமர் என்றால்   ஜெயலலிதா உத்தமி என்று வாதாடுவதில்
எந்த தயக்கமும் இல்லை எனக்கு.  காலை சாப்பாட்டை முடித்துக்கொண்டு
மதிய சாப்பாடு வரை  வள்ளி தெய்வானைபோல் மனைவி துணைவியுடன் உண்ணாவிரதம் என்ற பேரில் மெரினாவில் காத்து  வாங்கி  போர்  ஓய்ந்து விட்டது என்று சொல்லி சென்றவரிடம் ஓயாத போரையும் கொத்து கொத்தாக இறக்கும் அந்த அப்பாவி மக்கள் பற்றியும் கேட்டபோது
"மழை விட்டாலும் இன்னும் தூவானம் விடவில்லை" என்று நாங்கள்
பதறி துடித்த நேரத்திலும் கவி வடித்த கருணாநிதி உங்கள் பார்வையில்
உத்தமர் என்றால் "போர் என்றால்  மக்கள் சாகத்தான் செய்வார்கள்" என்று
சொல்லிவிட்டு   தன் உளறலுக்கு கேட்க்கும் மன்னிப்பு போல் இப்போது ஆட்சிக்கு வந்த உடனேயே இலங்கை தமிழருக்காக அடுதடுத்து
நல்ல முடிவுகளை அறிவிக்கும் ஜெயலலிதாவை    மன்னித்து அவர் உத்தமிதான் என்று அடித்து சொல்வதில் எந்த வெக்கமும் இல்லை எனக்கு. கடைசி நேரத்தில் போரை நிறுத்த சொல்லி புலிகள் கனிமொழிக்கு  கடிதம் வரைந்த போதும் கூட புலி ஆதரவாளராக
தன்னைக்காட்டிக்கொள்ளும் கனிமொழி கடைசிவரை அமைதிகாத்து
எல்லாத்தையும் மூடி மறைத்த போதும் உங்கள் பார்வையில் கனிமொழி
உத்தமி என்றால் ஜெயலலிதாவை உத்தமி என்பதில் என்ன தயக்கம் எனக்கு??.  காங்கிரசை அழிப்போம் என்று முழங்கிவிட்டு அந்த சோனியாவுடனே நின்று போஸ் கொடுத்து ஓட்டுகேட்ட ராமதாஸ்,
வாயை திறந்தாள்   நானுறுதடவை புலி புலி என்று சொல்லும்
திருமாளவன் இங்கே புலியாக உறுமி படம் காட்டி விட்டு இலங்கை
வந்து பூனையாக ராஜபக்ஷ அருகில் இருந்து கைகுலுக்கி பரிசு பொதி 
வாங்கிவந்ததை மறந்து அவர்கள்  உத்தமர்கள் தான் என்றால், இப்போது  
வருக வருக என ஜெயலலிதாவை சிகப்பு கம்பளம் போட்டு
வரவேற்கும் ராஜபக்ஷக்கு பதிலே சொல்லாமல் அவரை கணக்கே எடுக்காமல் அவமதிக்கும் ஜெயலலிதாக்கு பாராட்டு கவிதை வரைந்து அவர் உத்தமிதான் என்று பறை சாட்டுவதில் சிறு தயக்கமோ வெக்கமோ எந்த வருத்தமோ இல்லை எனக்கு.


குறிப்பு 01 : ஜெயலலிதா இப்போது இலங்கை மக்கள் மீது கருணை காட்டுவது  தன் ஆட்சியை தொடர்ந்து தக்க வைக்கவாம், இதுதான் இந்தவார  செம காமெடி. இதற்க்கு நான் பதில் சொல்வதை
விட மதுரனின் பதிவில் மூத்த பதிவர் "செங்கோவி" அண்ணனின் கருத்துரையில் இருந்து சிலதை தருகிறேன் இதுதான் நிஜம். தமிழகத் தமிழ்ர்களுக்கு ஈழப் படுகொலை ஒரு தேர்தல் பிரச்சினை அல்ல.. அதற்கு ஆதாரமாக சென்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளும் காங்கிரசின் வெற்றியும்..ஜெ.விற்கும் இது நன்றாகவே தெரியும்..
மேலும் ஆட்சியைத் தக்கவைக்க இதைச் செய்ய வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது, ஏனெனில் தனிப் பெரும்பான்மையுடனே
ஜெ. ஆட்சிக்கு வந்துள்ளார் அவர் என்ன முடிவெடுத்தாலும் அது அவரது ஆட்சியைப் பாதிக்காது.

குறிப்பு 02  :  இது கடந்த என் பதிவுக்கு, என் சம்மதத்துடன் எதிர் பதிவு போட்ட என் நண்பன் "மதுரன்" அவர்களுக்கு  மட்டுமான  எதிர் பதிவு அல்ல. 

புதன், ஆகஸ்ட் 10, 2011

பாராட்டலாமே ஜெயலலிதாவை..!

ண்மைக்காலமாக என் மனதில் இருக்கும் ஆதங்கம் இது. இதை பல தடவை எழுத முயன்று பின் இதனால் பலரின் நக்கல் நய்யாண்டி கருத்துரைகளை சம்பாதிக்க வேண்டி வரும் என்று தவிர்த்துவிட்டேன். ஆனாலும் இப்படியான கருத்துரைகளுக்கு பயப்படுபவன் நான் அல்ல. ஒருவிசயத்தை எத்தனை பேர் ஆதரித்தாலும் அதில் எனக்கு உடன்பாடு இல்லை எனில் நான் தனி ஒருவனாகவே அதை எதிர்த்து நிக்க தயங்க மாட்டேன்.  ஜெயலலிதா விசயத்தில் நான் இதுவரை அமைதியாக
இருந்தமைக்கு காரணம் நான் மேற்குறிப்பிட்ட கருத்துரைகளுக்கு பதில் அளிக்க என்னிடமும் ஆதாரங்கள் இருக்க வேண்டும் அதை விட அவர்களைப்போல் அவசரம் கொள்ளாமால் கொஞ்சம் ஜெயலலிதாவையும் அவதானிப்போமே என்பதுதான். இதுவரை நான் ஜெயலலிதாவை அவதானித்தவரை தமிழ்நாட்டு மக்கள் விடையத்திலும் சரி இலங்கை தமிழர்கள் விடையத்திலும் சரி முன்னைய தாத்தா ஆட்சியை விட மிக  அதிகமாகவே மிக நல்ல விடயங்களை இப்போது  செய்துள்ளார். 
ஆனாலும் அவரை பாராட்டுவோர்தான் யாரும் இல்லை சில பத்திரிகைகளை பொறுத்தவரை இந்த விசயத்தில் அவர்கள் கொஞ்சம் நியாயமாகவே இருக்கிறார்கள். ஆனால் பதிவர்களை  பொறுத்தவரை இந்த விசயத்தில் மிக மோசமாக நடந்து கொள்கிறார்கள். முன்பு கருணாநிதி ஆட்சியில் பதிவர்கள் அனைவரும் சேர்ந்து தாத்தாவை கும்மியது மறக்க முடியாது. ஆனால் அதில் ஒரு நியாயமான கோவம் இருந்தது கருணாநிதியின்  ஈழ  துரோகத்தின் நிஜமுகம் வெளிவந்ததுடன் அவரின் பல தில்லு முல்லுகள் வெளிவந்த  காலம் அது அப்போது அவரை கும்மினார்கள் அதில் ஒரு நியாமம் இருந்தது. ஆனால் இப்போது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து தான் கொடுத்த உறுதிமொழிகளை விரைந்து செயல் படுத்திக்கொண்டு இருக்கிறார். இந்த வாக்குறுதிகளை ஜெயலலிதா தேர்தலின் போது சொல்லியபோது கூட இவ்வளவு  ஆடுமாடு எங்கிருந்து 
கிடைக்கும் அது  முடியாது இது முடியாது என்று சொல்லிய எதிர்கட்சிகள் கூட இப்போது வாயடைத்து நிக்கும் அளவுக்கு ஜெயலலிதாவின் செயற்பாடுகள் அமைந்து இருக்கு. நான் முன்பொரு பதிவில் குறிப்பட்டது போல் ஆடம்பர விசயத்தில் ஜெயலலிதா அடக்கிவாசிப்பதே எதிர்பாரா இன்ப அதிர்ச்சி குறிப்பாக சொல்லப்போனால் ஆடம்பர விசயத்தில் முந்திய ஆட்சியை விட ஜெயலலிதா ஆட்சியில் இது  ரெம்பகுறைவே.  இன்னும்  சொல்லப்போனால்   மேடைபோட்டு  யாரையாவது புகழவிட்டு  கேட்பதாகட்டும் இரண்டு பக்கமும் கிளுகிளு நடிகையை ஜிங்குஜக்கா என்று ஆடவிட்டு ரசிப்பதாகட்டும் இப்படிப்பட்ட கடந்தகால ஆட்சியின் அசிங்கங்களை ஜெயலலிதா செய்யாதர்க்கே ஜெயாவை மேடை போட்டு பாராட்டலாமே ..! அப்புறம் ஏன்இவ்வளவு வெறுப்பை அவர் மேல் பல பதிவர்கள் உமிழ்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை.

சில இந்திய பதிவர்களுடன் சேர்ந்து சில இலங்கை பதிவர்களும்  ஜெயலலிதாவை கும்முவதுதான் வேடிக்கை ப்ளஸ் வேதனையானது. கடந்த ஆட்சியில் தாத்தா நமக்கு தந்த அதிர்ச்சி வைத்தியம் ஏராளம் அதை எல்லாம் அனுபவித்த பின்னுமா இப்படி..??  சரி இவர்கள் எல்லாம் ஜெயலலிதாவிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று சத்தியமாக எனக்கு தெரியவில்லை.. ஜெயாவை கும்மி பதிவிடும் பதிவர்களில் யாராவது ஒருவர் இதற்க்கு பதில் தந்தாள் தேவலாம்.  இலங்கை விடயத்தில் தேர்தல் சமையத்தில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு  அமைய ஆட்சிக்கு வந்ததும் வரலாற்று  சிறப்பு மிக்க தீர்மானத்துடன் இலங்கை அரசாங்கத்தை போர்க்குற்றம், மற்றும் மனித  குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்த அரசாக பிரகடனம் செய்ய, ஐக்கிய நாடுகள் சபையை இந்தியா வலியுறுத்த வேண்டும் எனவும், இலங்கை அரசாங்கம் மீது பொருண்மியத்  தடை ஏற்படுத்தி, அடிபணிய வைக்க வேண்டும் எனவும் ஈழத் தமிழர்கள் சிங்கள மக்கள் போன்று சம உரிமையுடன் வாழ வழிசெய்ய செய்ய வேண்டும் எனவும், இடம்பெயர்ந்த மக்கள் உடனடியாக தமது சொந்த இடங்களில் மீளக் குடியேற்றப்பட வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்ததுடன்
மேலும் அண்மையில் அமெரிக்க வெளிவிவகாரச் செயலர்  திருமதி ஹிலாரி கிளின்டன்  ஜெயலலிதாவை  சந்தித்ததும்,  இந்த சந்திப்பில் பேச எவ்வளவோ விடயங்கள் இருந்தும்  காலத்தின் தேவையுணர்ந்து   ஈழத்தமிழ் மக்களின் விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விவாதித்திருப்பதையும் இவர்கள் இலகுவில் மறந்ததுதான் வேதனை.  இவைமட்டுமா..!  ஈழத்தமிழ் மக்கள் விடயத்தை இந்திய நாடாளுமன்றில் எழுப்பி, அதனை இந்தியாவின் ஏனைய மாநிலங்களும் அறிய  செய்வதுடன், அவர்களின் ஆதரவையும் பெறும் நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக  ஜெயலலிதா  அறிவித்துள்ளமை  அவர் இலங்கை மக்கள் மீது கொண்டுள்ள பற்றை வெளிப்படுத்தி நிற்கின்றது. தமிழின அழிப்பை மேற்கொண்டு போர்க்குற்றம் புரிந்த இலங்கை  அரசாங்கத்தின் நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் நாடாளுன்றக் குழுவினர்  01-08 2011  அன்று இந்திய நாடாளுமன்றத்திற்கு
சென்றபோது அவர்களுக்கு எதிர்க்குரல் எழுப்பிய அ.தி.மு.க
நாடாளுமன்ற உறுப்பினர் அதை ஆதரித்த ஜெயலலிதா எல்லாத்தையும் மறந்துவிட்டு எல்லோரும் கும்முறாங்கப்பா நானும் என் பங்குக்கு கும்முகுறேன் என்று ஜெயலலிதாவை மிக கேவலமாக விமர்சித்தும் கருத்துப்படம் வரைந்தும் கவி வடித்தும் பல பிரபல பதிவர்கள் கூட பரபரப்பு தேடுவதுதான் வேதனையாக இருக்குறது. ஒருவர் தப்பு செய்யும்  போது தட்டிக்கேட்கலாம் தப்பு இல்லை ஆனால் அவர் நல்லது செய்யும் போது கூட அதை பாராட்டி அவரை ஊக்கப்படுத்தாமல் அதை விமர்சிப்பது எந்த வகையில் நியாயம்..?  இது அவர் செய்யும் நல்ல காரியங்களை கூட
முடக்கிப்போட்டு விடுமல்லவா..?  பதிவுலகில் நம் பதிவுகளை பரபரப்பாக்க கிடைப்பதெல்லாத்தையும் கண் மூடித்தனமாக எதிர்ப்பது எந்தவகையில் நியாயம்..?

பின் குறிப்பு:- னக்கு தெரிந்து ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததில் இருந்து இன்றுவரை அவர் ஆட்சியில் செய்த தவறு என்றால் அது சமசீர் பாடதிட்டத்தைதான் சொல்ல முடியும், அது கூடதவறு என்று சொல்ல முடியாது சறுக்கி விட்டார் என்றே சொல்ல முடியும். ஏனெனில் சமசீர் பாடத்திட்டத்தை ஆதரிப்பவர்களில் எத்தனை பேர் அப்புத்தகங்களை பார்வை இட்டார்கள் என்று தெரியவில்லை காரணம் அப்புத்தங்களின் தரமே.. அப்புத்தகங்களில் தேவையின்றி கருணாநிதியின் சுயபுராணமும்
கவிதைகளும் ஏன்  ஏதோ திருவள்ளுவர் கூட கருணாநிதியின்
தூரத்து சொந்தம்போல் காட்டுவது முகம்சுழிக்க வைப்பவை. அதிவிட அப்புத்தங்கங்களில் இருக்கும் இந்துமத விரோத கருத்துக்கள்
போன்றவை  பின் மதக்கலவரத்தை உண்டு பண்ண வழிவகுக்கும்.
இப்போது  சமசீர் பாடத்திட்டத்தை உச்ச நீதிமன்றம் செயல்படுத்தச்சொல்லி தீர்ப்பு கொடுத்த நிலையில் ஜெயலலிதாவும் நீதிமன்றத்தின் முடிவுக்கு தலை அசைத்த நிலையில் அப்புத்தகங்களை அடியோடு ஒதுக்கமுடியாவிட்டாலும் அவற்றில் பல திருத்தங்களை செய்யலாம் என்பது என்  கருத்து இதை  இலகுவில் நடைமுறைப்படுத்துவதில்  உள்ள சிக்கல்கள் தெரிகிறது ஆனாலும் இது  மாணவர்களின் படிப்பின் தரத்தை நிர்னைக்கும் என்பதால் சிரமம் பாராது திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்பது என்  தாழ்மையான கருத்து.

திங்கள், ஆகஸ்ட் 01, 2011

இவர்களா...? வெளிநாட்டு மாப்பிள்ளை.

ஊரில் பழைய காலத்தில் அரசாங்கத்தில்   ஏதாவது  ஒரு வேலையில்    இருப்பவர்களுக்குத்தான் என் பெண்ணைக்கட்டிக்கொடுப்பேன்
என்று  பெண்ணைப்பெற்ற பெற்றோர் வீம்பாக இருப்பார்கள் என்று
என் தாத்தா பாட்டி பேசும் போது கேட்டு இருக்கேன்.  ஆனால்
இப்போது அந்த நிலை கொஞ்சம் வலுவிழந்து யாராவது ஒரு
வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு தங்கள் பெண்பிள்ளைகளை
கட்டி வைக்க ஊரில் இருப்பவர்கள்   நாயாய் பேயாய் அலைவது
மிக வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கு.
ஊரில் இருந்து யாராவது பெண் கேட்டு வந்துவிட்டால் மட்டும்
அவன் குணம், குடும்பம், படிப்பு, வேலை, சம்பளம், என தெளிவாக விசாரிக்கும் இந்த அறிவு ஜீவிகள் அதே ஒரு வெளிநாட்டு
மாப்பிள்ளை கிடைத்துவிட்டால் எந்த விசாரிப்புக்களும் இன்றி
முன்பின் தெரியாதவனுக்கு வெளிநாட்டில் இருக்கிறான் என்ற ஒரே காரணத்துக்காக பொத்தி பொத்தி வளர்த்த அந்த அப்பாவிகளை
அவனுடன் அனுப்பிவைப்பது எந்த வகையில் நியாயம்..!

வெளிநாட்டில் இருக்கிறான் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக
கட்டிக்கொடுத்துவிட்டு அவர்கள் அங்கே நிம்மதியாக!  இருந்து விடுகிறார்கள் ஆனால் இந்த  அப்பாவிகள் இங்கே படும் பாட்டை
இவர்கள் அறிகிறார்களா..?  "பாவம் இவர்கள் அறிவதில்லை" என்ற
ஒரே வசனத்தில் இவர்களை தப்பவிட முடியாது,  முன்பு ஒரு
காலத்தில் வேண்டுமானால் இங்கு நடப்பது இவர்களுக்கு
தெரியாமல் இருக்கலாம் ஆனால் இப்போது நிலமை
அப்படி இல்லை எல்லாம் தெரிந்து இருந்தும் இவர்கள்
வெளிநாட்டு மோகம் எல்லாத்தையும் மறைத்து விடுகிறது.  இந்த வெளிநாட்டு மோகத்துக்கு எங்கள் குடும்பத்தில் உள்ள
ஒருவருடைய வாழ்க்கையையும் பலி கொடுத்துள்ளோம். 
என் அத்தை. நன்றாக படித்தவர் அழகானவர், எனக்கு தெரிந்தே ஊரில் இவரை நிறைய பேர் பெண் கேட்டு வந்தார்கள் ஆனால் என் தாத்தா கட்டிக்கொடுத்தால் வெளிநாட்டு மாப்பிள்ளைக்குத்தான்
கட்டிக்கொடுப்பேன் என்று பிடிவாதமாய் நின்று புரோக்கர் மூலம்
வந்த ஒரு நோர்வை மாப்பிள்ளையை தெரிவுசெய்து,
அத்தை தாத்தாவுக்கு கடைசி பெண் ஒரே பெண் என்பதால்
அதிக சீதனம் கொடுத்து இந்தியா கூட்டிச்சென்று மிக பிரமாண்டமாக திருமணம் செய்துவைத்து அவனுடன் நோர்வை அனுப்பிவைத்தார். நோர்வை சென்ற சில மாதங்களிலேயே அவன் வண்டவாளங்கள் ஒவ்வொன்றாக வெளிவர தொடங்கியது, எல்லாவற்றுக்கும் உச்சமாக அவனுக்கு நோர்வையில் ஒரு நோர்வைக்காரியுடன் திருமணமாகி (எழுத்தில் இல்லாமல்) இரண்டு குழந்தைகளும் இருப்பது தெரிய வந்தது. நியாம் கேட்ட அத்தைக்கு கிடைத்தது அடி உதைதான். யாருடைய ஆதரவும் இன்றி அவனுடன் போராடி விவகாரத்து வேண்டி அத்தை வெளியே வந்த போது அவருடன் வந்த ஒரே சொத்து அவன் கொடுத்த பெண் குழந்தைதான். இனி என் வாழ்க்கையில் திருமணம் என்ற
பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லி அந்த பெண் குழந்தையுடன் தனியே வாழ்ந்து வருகிறார் அத்தை. அத்தையின் இந்த நிலைக்கு தான்தான் காரணம் என்று நினைத்து வேதனைபட்டே தாத்தாவும்
இறந்து விட்டார். இதில் அசிங்கம் என்ன வென்றால்  எங்கள்  தாத்தாவை  ஏமாத்திய அந்த அயோக்கியனின் செய்கைகள்
எல்லாத்துக்கு அவன் தாயும் சப்போட் என்பதுதான்.
இப்போது அவனுக்கு மீண்டும் திருமணம் பேசுபடுதாம் பாவம் எந்த அப்பாவி பெண்ணின் வாழ்க்கை சீரழியப்படப்போகுதோ..

ஊரில் இருப்பவர்களின் வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தை இங்குள்ளவர்களும் அழகாக பயன் படுத்திக்கொள்கிறார்கள். அங்கிருப்பவர்களிடம் ஏதோ சொர்க்கத்துக்கே அதிபதிபோல் காட்டிக்கொள்ளும் இவர்களின் உண்மை நிலை இங்கிருக்கும் எங்களுக்குத்தானே வெளிச்சம். இப்படியான இவர்களின் பந்தாவைக்கூட ஓரளவு சகித்துக்கொள்ளலாம் ஆனால் ஊரில் தங்களுக்கு பெண் பாப்பவர்களிடம் பொண்ணு த்ரிஷா மாதிரி மெல்லிசா இருக்கனும்
தமணா கலரில் இருக்கனும் என்று சொல்லுவது இருக்கே..
கடவுளே, இந்த ஆணழகன்கள் தங்கள் முகத்தை கண்ணாடியில் பாப்பதே இல்லைப்போல் இவர்களைப்போலவே அந்த பெண்களும் எங்களுக்கு வரும் மாப்பிள்ளைமார் சூர்யா மாதிரியோ ஆர்யா மாதிரியோதான் இருக்கணும் என்றாள் இவர்களுக்கு எல்லாம் எப்படி கல்யாணம் ஆகிறதாம்! அண்மையில் கூட இப்படிப்பட்ட ஒரு வெளி நாட்டு மாப்பிள்ளையின் கூத்தைப்பார்த்து அழுவதா சிரிப்பதா என்றே எனக்கு தெரியாமல் போச்சு. அவர் என் அண்ணாவின் ப்ரண்ட் இங்கே தனியேதான் இருக்காரு அவரின் அப்பா செத்து மூன்றே மாதங்கள் ஆன நிலையில்
நானும் அண்ணாவும் அவர் வீட்டுக்கு போய் இருந்தோம். எங்களை வரவேற்று பேசிக்கொண்டு இருந்தவர் தான் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக சொன்னபோது அண்ணா பொண்ணு யாரு
எங்க இருக்கா எப்படி தெரியும் என்று விசாரித்த போதுதான் அந்த வெக்கம்கெட்ட செயலை கொஞ்சமும் கூச்சமும் இல்லாமல் அவர் சொன்னார்.  தன்னுடைய தந்தையின் இறந்தவீட்டை தான் வீடியோ எல்லாம் எடுத்து பெருசாக செய்ததாவும் அந்த வீடியோ கொப்பி தனக்கு அனுப்பட்டபோது அதில் ஒரு அழகான பொண்ணு ஒடியாடி வேலை செய்துகொண்டு இருந்ததாகவும், தன் தாயிடம் போன் பண்ணி அது யார் என்று கேட்ட போது அது பக்கத்துவீட்டு பொண்ணு என்று விவரம் சொன்னதும் அவளை தனக்கு புடித்து இருப்பதாக சொல்லி பொண்ணு கேட்க்க சொன்னாராம்,  தந்தை இறந்து சில வாரங்களே ஆனதால் இப்போது போய் பெண்கேட்டால் அவர்கள் தன்னை தப்பா நினைப்பார்கள் என்று அந்த தாய் மறுத்துவிட அதை இவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையாம் ஏனெனில் அந்த அழகான பெண்ணை அதர்குள் யாராவது கொத்திப்போய் விடுவார்களாம். பின் ஒரு வழியாகா தாயை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாராம். இப்போது எல்லாம் ஓக்கே ஆகி அந்த பெண்ணுடன் போனில் பேசுவதாகவும் அவர் சொன்ன போது என் எதிரே இருந்த அவரை நிமிர்ந்து பார்த்தேன். சத்தியமாக என் கண்ணுக்கு அவர் ஒரு மனிதப்பிறப்பாகவே தெரியவில்லை ஒரு அருவருக்கத்தக்க புளுவாகவே கண்ணுக்கு தெரிந்தார். தங்களுக்கு மாப்பிள்ளையாக  வருபவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் சரி வெளிநாட்டில் இருந்தால் மட்டும் போதும் என் ஊரில் இருப்பவர்கள் நினைப்பதும், தங்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் ஒரு தகுதியே போதும் ஜஸ்வர்யாராயைக்கூட
பொண்ணு கேட்கலாம் என இங்கு இருப்பவர்கள் நினைப்பதும் கொடுமையின் உச்சம். சிந்திப்பார்களா இவர்கள்..?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...