ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2011

ஆமாம்.. ஜெயலலிதா உத்தமிதான்.

நான் பதிவுலகம் வந்து ஐந்து மாதங்கள் கூட நிறைவடையவில்லை
அதற்குள்  மிக குறைவான பதிவுகளேயே எழுதி இத்தனை பக்க 
காட்சிகளையும்  நண்பர்களையும்  பெற்று இருப்பது உண்மையில் மிக சந்தோஷத்தை கொடுக்குது.  ஆழமாகவும் அழகாகவும் எழுதும் மிக
திறமையான பதிவர்கள் இருக்கும் இந்த வலையுலகில் என்னுடைய
கிறுக்கல்களை நினைத்து பல நேரங்களில் சங்கடப்பட்டாலும்
இதுவரை நான் எழுதிய எந்த பதிவுக்கும் எனக்கு எதிரான கருத்தையோ, மைனஸ் ஓட்டோ, மோசமான மின்னஞ்சல்கலையோ பெற்றது இல்லை
முதல்முறையாக என் கடந்த பதிவானா "பாராட்டலாமே ஜெயலலிதாவை" 
என்ற பதிவுக்கு இவை அணைத்தையும் ஒன்றுசேர பெற்று உள்ளேன்.
அப்படி கடந்த பதிவில் என்ன கூறிவிட்டேன் என்ற சந்தேகத்தில்
மீண்டும் அந்த பதிவை படித்து பார்த்தேன் சத்தியமாக அப்படி  தவறு
ஒன்றும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை,   முன்பு செய்த
தவறுகளை மறந்து இப்போது அவர் செய்யும் நல்லவற்றை
பாராட்டுங்கள் என்று சொல்லியது அவ்வளவு பெரிய குற்றமா என்ன?? அப்படி இருக்கும் போது ஏன் இப்படி?? தவறான புரிதலும், நிதானமாக படிக்காததும்தான் இவற்றுக்கான காரணம்.

ஜெயலலிதா ஒன்றும் உத்தமி இல்லை உத்தமி இல்லை என்று திரும்ப திரும்ப சொல்லுகிறார்கள், அட பாவீங்களா இங்கே நான் எங்கே சொல்லியுள்ளேன் அவர் உத்தமர்தான் என்று..?? கடந்த காலங்களில்
அவர் தப்பு செய்துள்ளார்  அதை நானும் ஒத்துகொண்டுதான் உள்ளேன்.
அதற்காக அவர் இப்போது செய்யும் நல்லவை எல்லாவற்றையும்
விமர்சிப்பது எந்த வகையில் நியாயம்..?? தவறு செய்பவர்கள் திருந்தவே
மாட்டார்களா??  ஜெயிலில் இருந்து வருபவன் மீண்டும் மீண்டும்
தவறு  செய்துகொண்டேதான் இருப்பான் என்றால் நான் என்னத்தை சொல்வது??  திருந்தி வாழ்வது என்பது நம் சமூகத்தில் மறுக்கப்பட்ட  உரிமையா  என்ன?? இல்லை இல்லை அவர் ஆரம்பத்தில் தவறு செய்துவிட்டார் ஆகவே இனி அவர் என்ன நல்லது செய்தாலும்
நாங்கள் விமர்சித்துக்கொண்டுதான் இருப்போம் என்பவர்கள்
வாழ்க்கையில் இதுவரை தவறே செய்தது இல்லையா?? இவர்களுக்கு
ஒரு ஆதிகால சம்பவம் ஒன்றை நினைவு படுத்தலாம் என்று நினைக்குறேன்.  ஒரு கிராமவாசிகள் இயேசுவிடம் ஒரு பெண்ணை
தர தர வென்று இழுத்து வந்து, இயேசுவே இவள் தவறு செய்துவிட்டால்
ஆகவே இவளை கல்லால் அடித்து கொலை செய்ய நீங்கள் அனுமதிக்க
வேண்டும் என்று வேண்டி நின்றார்களாம். அதற்க்கு இயேசு,  அன்பர்களே
உங்கள் முடிவுக்கு நானும் கட்டுப்படுகிறேன் ஆனால் ஒன்று இதுவரை
உங்கள் வாழ்க்கையில் யார் ஒருவர் எந்த தவறும் செய்யவில்லையோ
அவர் அப்பெண்ணின் மேல் முதல் கல்லை விட்டு வீசுங்கள் என்று
சொல்லி கண்களை  மூடிக்கொன்றாராம், சற்று நேரம் விட்டு கண்களை
திறந்து பார்த்த போது அங்கே அந்த பெண் மட்டும் நின்று கொண்டிருந்தாளாம் அவளை இழுத்துவந்தவர்கள் யாருமே அங்கே இல்லை. இதற்க்கான விளக்கம் சொல்ல தேவையில்லை உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்குறேன்.

ஸ்பெக்ரம் ஊழல் பிரச்சினையை  ஜெயலலிதா சரியாக கையாளவில்லை
என்கிறார்கள். என்னைப்பொறுத்தவரை தமிழக அரசியல்வாதிகளில்
அதை சரியாக கை ஆண்டவர் ஜெயலலிதாதான், கிராமமங்களில் கூட
இப்போது ஸ்பெக்ரம் ஊழல் பற்றி தெரிந்து இருக்கிறார்கள் என்றால் 
அதற்க்கு ஜெயலலிதாவும் அதிமுகாவுமே காரணம், ஸ்பெக்ரம் ஊழல்
பிரச்சனை என்பது கருணாநிதியை சந்திசிரிக்க வைக்க ஜெயாவுக்கு
கிடைத்த புதையல் போன்றது அதை விட்டு வைக்க அவர் என்ன
இளிச்சவாயா??  புலி எதர்ப்பு என்பது ராஜீவ் கொலைக்கு முன்னமே
ஜெயா எடுத்த அரசியல் ஆயுதமாம். இருக்கட்டுமே... இப்போது
இலங்கை தமிழர் எங்களில் எல்லோருமே புலி ஆதரவாளர்களா
என்ன?? ஏன் வன்னியில் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டே
அவர்களை எதிர்த்தவர்கள் எத்தனை பேர்??  உங்கள் பார்வையில்
அவர்கள் அத்தனை பெரும் துரோகிகளா என்ன?? ஜெயலலிதா
அரசியலுக்கு வந்த புதிதில் இலங்கை அரசாங்கத்தை கண்டித்து
புலிகளுக்கு ஆதரவாக தன் தலைமையில் நடத்திய பிரமாண்ட
பேரணியை இப்போதும் நினைத்து  சிலாகிப்போர் ஏராளம், அப்படிப்பட்டவர்
புலி எதிர்பாலராக  மாறினார் என்றால்  அதற்கும் அவரிடம் ஏதாவது 
காரணம்  இருக்கும் இல்லையா?? இங்கே எங்காவது புலிகளுடன் சேர்த்து
இலங்கை ஓட்டுமொத்த  தமிழரையும் எதிர்ப்பதாக சொன்னாரா என்ன??
அப்புறம் வைகோவை  விலக்கி வைத்துவிட்டாராம்.  அட ராமா...
வைகோவுக்கு முப்பது நாப்பது இடங்களை கொடுக்க வைகோவுக்கு
தமிழ் நாட்டில் இப்போது உள்ள செல்வாக்கு என்ன என்பதை ஜெயா அறியாதவரா ??  அல்லது வைகோவுக்காக முதல்வர் பதவியை
கருணாநிதிக்கு தாரை வார்க்கத்தான் முடியுமா??  தேர்தல் மூட்டம்
டி.ராஜேந்தர் தன கட்சி சார்பாகா போட்டியிட அம்மாவிடம் முப்பது
இடம் கேட்டு தூது அனுப்பினாராம் அதற்க்கு அம்மா, அவரை
ஆணியே புடுங்க சொல்லல சும்மா படுத்து ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க
என்று சொன்னதாக எங்கோ படித்து அடக்கமுடியாமல் சிரித்தேன்,
அதற்க்கு கிட்டத்தட்ட நெருங்கிறது அல்லவா வைகோவின் சீட் ஆசை.
ஆனாலும் அந்த நேரம் வைகோ மேல் உள்ள மதிப்பாலும் இரக்கத்தாலும்
தன நிலையில் இருந்து இறங்கி வைகோவுக்கு ஜெயா கடிதம்  எழுதியதை
மறந்தா விட்டீர்கள்??  போங்கப்பா அது கூட அரசியல் சதுரங்கம் என்பீர்கள்.
இதற்க்கு பின் கூட இவ்வளவு காலமும் யாரை விமர்சித்தோம் என்ற
சுய நினைவையே இழந்து "இலை கருகி சூரியன் உதிக்கட்டும்" என்று
இவர்கள் கருணாநிதிக்கு ஆதரவு அளித்த பின் கூட ஜெயா மாபெரும்
வெற்றி பெற்ற பின்பு தன பதவியேர்ப்பு விழாவுக்கு வைகோவுக்கு
முறையாகா அழைப்பிதல் அனுப்பி முதல் வரிசையில் இடம் ஒதுக்கியதை கூடவா மறந்து ஜெயா மாறவே இல்லை என்று
மாங்கு மாங்கு என்று விமர்சிக்கிறீர்கள்?? அடுத்து சமச்சீர் பாடத்திட்ட
பிரச்சனை.  கடவுளே கடவுளே  சமசீர் பாடத்திட்டம் என்ன கருணாநிதியின்
வாழ்க்கை வரலாறா என்ன??  வயசு போன நேரத்தில் கிளு கிளு நடிகைங்களை புகழவிட்டு கேட்டார் பாவம்   அனுபவித்துவிட்டு போகட்டும் என்று பொறுத்துகொண்டோம் ஆனால் அதே விளையாட்டை
பிள்ளைகளின் பாடப்புத்தகங்களிலும் காட்டினால் பொறுத்துகொள்ளவா 
முடியும்??  இப்போதுமட்டும் என்ன  "அந்த" பக்கங்களை நீக்கி விட்டுத்தானே
கொடுத்து உள்ளார் அதை அப்போதே செய்து இருக்கலாமே என்போருக்கு
எல்லா நேரமும் எல்லோருக்கும் பிடித்த மாதிரி செய்ய அவர் என்ன
கடவுளா என்ன?? ஆனாலும் இப்படிப்பட்ட தவறுகளை விமர்சியுங்கள்
அதற்காக   கண்ணை மூடிக்கொண்டு செய்யும் நல்லவற்றையும்
விமர்சிக்காதீர்கள் அவற்றை மனசை திறந்து பாராட்டுங்கள் என்பதுதானே என் வாதம் அதையேன் புரிந்துகொள்கிறீர்கள் இல்லை.

ப்புறம் ஜெயலலிதா உத்தமியா உத்தமியா என்று உளருபவர்களிடம்
சில வார்த்தைகள்.  வாங்க சார் வாங்க.. "போர் என்றால்  மக்கள் சாகத்தான் செய்வார்கள்" என்று சொன்ன ஜெயலலிதா உத்தமியா  என்று நீங்கள் என்னிடம் கேட்டால் வன்னியில் கொத்து கொத்தாக மக்களை இலங்கை
ராணுவம் கொன்று குவிக்க இங்கே  சோனியாவுக்கு தந்தி மட்டும் அடித்துக்கொண்டு நாளொரு நடிகையை சந்தித்துக்கொண்டு 
இருந்துவிட்டு தன் குடும்பத்துக்கு பதவி வேண்ட மட்டும்  தள்ளாத
வயதிலும் தள்ளு வண்டியில் டெல்லி சென்ற கருணாநிதி உங்கள்
பார்வையில் உத்தமர் என்றால்   ஜெயலலிதா உத்தமி என்று வாதாடுவதில்
எந்த தயக்கமும் இல்லை எனக்கு.  காலை சாப்பாட்டை முடித்துக்கொண்டு
மதிய சாப்பாடு வரை  வள்ளி தெய்வானைபோல் மனைவி துணைவியுடன் உண்ணாவிரதம் என்ற பேரில் மெரினாவில் காத்து  வாங்கி  போர்  ஓய்ந்து விட்டது என்று சொல்லி சென்றவரிடம் ஓயாத போரையும் கொத்து கொத்தாக இறக்கும் அந்த அப்பாவி மக்கள் பற்றியும் கேட்டபோது
"மழை விட்டாலும் இன்னும் தூவானம் விடவில்லை" என்று நாங்கள்
பதறி துடித்த நேரத்திலும் கவி வடித்த கருணாநிதி உங்கள் பார்வையில்
உத்தமர் என்றால் "போர் என்றால்  மக்கள் சாகத்தான் செய்வார்கள்" என்று
சொல்லிவிட்டு   தன் உளறலுக்கு கேட்க்கும் மன்னிப்பு போல் இப்போது ஆட்சிக்கு வந்த உடனேயே இலங்கை தமிழருக்காக அடுதடுத்து
நல்ல முடிவுகளை அறிவிக்கும் ஜெயலலிதாவை    மன்னித்து அவர் உத்தமிதான் என்று அடித்து சொல்வதில் எந்த வெக்கமும் இல்லை எனக்கு. கடைசி நேரத்தில் போரை நிறுத்த சொல்லி புலிகள் கனிமொழிக்கு  கடிதம் வரைந்த போதும் கூட புலி ஆதரவாளராக
தன்னைக்காட்டிக்கொள்ளும் கனிமொழி கடைசிவரை அமைதிகாத்து
எல்லாத்தையும் மூடி மறைத்த போதும் உங்கள் பார்வையில் கனிமொழி
உத்தமி என்றால் ஜெயலலிதாவை உத்தமி என்பதில் என்ன தயக்கம் எனக்கு??.  காங்கிரசை அழிப்போம் என்று முழங்கிவிட்டு அந்த சோனியாவுடனே நின்று போஸ் கொடுத்து ஓட்டுகேட்ட ராமதாஸ்,
வாயை திறந்தாள்   நானுறுதடவை புலி புலி என்று சொல்லும்
திருமாளவன் இங்கே புலியாக உறுமி படம் காட்டி விட்டு இலங்கை
வந்து பூனையாக ராஜபக்ஷ அருகில் இருந்து கைகுலுக்கி பரிசு பொதி 
வாங்கிவந்ததை மறந்து அவர்கள்  உத்தமர்கள் தான் என்றால், இப்போது  
வருக வருக என ஜெயலலிதாவை சிகப்பு கம்பளம் போட்டு
வரவேற்கும் ராஜபக்ஷக்கு பதிலே சொல்லாமல் அவரை கணக்கே எடுக்காமல் அவமதிக்கும் ஜெயலலிதாக்கு பாராட்டு கவிதை வரைந்து அவர் உத்தமிதான் என்று பறை சாட்டுவதில் சிறு தயக்கமோ வெக்கமோ எந்த வருத்தமோ இல்லை எனக்கு.


குறிப்பு 01 : ஜெயலலிதா இப்போது இலங்கை மக்கள் மீது கருணை காட்டுவது  தன் ஆட்சியை தொடர்ந்து தக்க வைக்கவாம், இதுதான் இந்தவார  செம காமெடி. இதற்க்கு நான் பதில் சொல்வதை
விட மதுரனின் பதிவில் மூத்த பதிவர் "செங்கோவி" அண்ணனின் கருத்துரையில் இருந்து சிலதை தருகிறேன் இதுதான் நிஜம். தமிழகத் தமிழ்ர்களுக்கு ஈழப் படுகொலை ஒரு தேர்தல் பிரச்சினை அல்ல.. அதற்கு ஆதாரமாக சென்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளும் காங்கிரசின் வெற்றியும்..ஜெ.விற்கும் இது நன்றாகவே தெரியும்..
மேலும் ஆட்சியைத் தக்கவைக்க இதைச் செய்ய வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது, ஏனெனில் தனிப் பெரும்பான்மையுடனே
ஜெ. ஆட்சிக்கு வந்துள்ளார் அவர் என்ன முடிவெடுத்தாலும் அது அவரது ஆட்சியைப் பாதிக்காது.

குறிப்பு 02  :  இது கடந்த என் பதிவுக்கு, என் சம்மதத்துடன் எதிர் பதிவு போட்ட என் நண்பன் "மதுரன்" அவர்களுக்கு  மட்டுமான  எதிர் பதிவு அல்ல. 

63 கருத்துகள்:

  1. //இதுவரை நான் எழுதிய எந்த பதிவுக்கும் எனக்கு எதிரான கருத்தையோ, மைனஸ் ஓட்டோ, மோசமான மின்னஞ்சல்கலையோ பெற்றது இல்லை
    முதல்முறையாக என் கடந்த பதிவானா "பாராட்டலாமே ஜெயலலிதாவை"
    என்ற பதிவுக்கு இவை அணைத்தையும் ஒன்றுசேர பெற்று உள்ளேன்.//

    அப்படியா...வாழ்த்துகள் பாஸ்..பிரபலப் பதிவர் ஆகறதுன்னா சும்மாவா..இது மாதிரி பல கேவலங்களைச் சந்திச்சுத் தான் ஆகணும்..ரொம்ப கஷ்டமா இருந்தா நச்சுன்னு நமீதா படம் போட்டு மனசை ஆத்திக்கணும்..புரியுதா?

    பதிலளிநீக்கு
  2. //ஜெயலலிதா ஒன்றும் உத்தமி இல்லை உத்தமி இல்லை என்று திரும்ப திரும்ப சொல்லுகிறார்கள், அட பாவீங்களா இங்கே நான் எங்கே சொல்லியுள்ளேன் அவர் உத்தமர்தான் என்று..?? கடந்த காலங்களில்
    அவர் தப்பு செய்துள்ளார் //

    ஆமாம்..இனியும் செய்வார்..அதையும் சேர்த்துக்கோங்க..அதைச் சொல்லாம விட்டது தான் உங்க தப்போ என்னவோ?

    பதிலளிநீக்கு
  3. முதலில் உங்கள் துணிச்சலுக்குப் பாராட்டுக்கள்!அடுத்து,சுதந்திர தின நல வாழ்த்துக்கள் உங்களுக்கும்!(செங்கோவி பதிவு பார்த்து விட்டு வந்தேன்.)

    பதிலளிநீக்கு
  4. //இதற்க்கு நான் பதில் சொல்வதை
    விட மதுரனின் பதிவில் மூத்த பதிவர் "செங்கோவி" அண்ணனின் கருத்துரையில் இருந்து சிலதை தருகிறேன் இதுதான் நிஜம். //

    ரைட்டு..இப்பவே நாலு நமீதா படத்தை எடுத்து வச்சிக்க வேண்டியது தான்...!

    பதிலளிநீக்கு
  5. //செங்கோவி கூறியது...
    //இதுவரை நான் எழுதிய எந்த பதிவுக்கும் எனக்கு எதிரான கருத்தையோ, மைனஸ் ஓட்டோ, மோசமான மின்னஞ்சல்கலையோ பெற்றது இல்லை
    முதல்முறையாக என் கடந்த பதிவானா "பாராட்டலாமே ஜெயலலிதாவை"
    என்ற பதிவுக்கு இவை அணைத்தையும் ஒன்றுசேர பெற்று உள்ளேன்.//

    அப்படியா...வாழ்த்துகள் பாஸ்..பிரபலப் பதிவர் ஆகறதுன்னா சும்மாவா..இது மாதிரி பல கேவலங்களைச் சந்திச்சுத் தான் ஆகணும்..ரொம்ப கஷ்டமா இருந்தா நச்சுன்னு நமீதா படம் போட்டு மனசை ஆத்திக்கணும்..புரியுதா?//


    ஆஹா இதில இம்புட்டு விஷயம் இருக்கா அட அப்ப நாமும் பிரபல பதிவர் ஆகிட்டு இருக்கோமோ??
    அண்ணன் சொன்னா தம்பி கேட்டுப்பான் இல்ல
    அப்புறம் யாரு நமீதா??

    பதிலளிநீக்கு
  6. //செங்கோவி கூறியது...
    //ஜெயலலிதா ஒன்றும் உத்தமி இல்லை உத்தமி இல்லை என்று திரும்ப திரும்ப சொல்லுகிறார்கள், அட பாவீங்களா இங்கே நான் எங்கே சொல்லியுள்ளேன் அவர் உத்தமர்தான் என்று..?? கடந்த காலங்களில்
    அவர் தப்பு செய்துள்ளார் //

    ஆமாம்..இனியும் செய்வார்..அதையும் சேர்த்துக்கோங்க..அதைச் சொல்லாம விட்டது தான் உங்க தப்போ என்னவோ?
    //

    அவ்வ்வ்வ்
    ஏன் பாஸ் மறுபடியும் மறுபடியும்
    அவங்க தவறு செய்வாங்க செய்வாங்க என்று
    எல்லோரும் ஒற்றைகாலிலேயே நிக்கீங்க,
    அவங்க திருந்தவே மாட்டாங்களோ ??
    அல்லது எப்போதும் எதிலும் சந்தேகத்துடன் நோக்குவதுதான்
    சிறந்த எழுத்தாளனின் குணமோ
    மறுபடியும் ஒரு அவ்வ்வவ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  7. //Yoga.s.FR கூறியது...
    முதலில் உங்கள் துணிச்சலுக்குப் பாராட்டுக்கள்!அடுத்து,சுதந்திர தின நல வாழ்த்துக்கள் உங்களுக்கும்!(செங்கோவி பதிவு பார்த்து விட்டு வந்தேன்.)
    //

    நன்றி பாஸ்
    உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்,
    எனது சுதந்திர தின வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

    அப்புறம் நிறைய நாள் அப்புறம்
    என் பக்கம் வந்து இருக்கீங்க
    தேங்க்ஸ் பாஸ்

    பதிலளிநீக்கு
  8. //செங்கோவி கூறியது...
    //இதற்க்கு நான் பதில் சொல்வதை
    விட மதுரனின் பதிவில் மூத்த பதிவர் "செங்கோவி" அண்ணனின் கருத்துரையில் இருந்து சிலதை தருகிறேன் இதுதான் நிஜம். //

    ரைட்டு..இப்பவே நாலு நமீதா படத்தை எடுத்து வச்சிக்க வேண்டியது தான்...!//


    ஹி ஹி
    லொள்ளோட ஜொல்லும் வடியுது பாஸ்.....

    இவரு ரெம்ப பெரிய்ய்ய்ய நமீதா ரசிகரா
    இருப்பாரோ ??

    பதிலளிநீக்கு
  9. துஷ்யந்தன், நமக்கு எதிர்மறை வாக்கு போட்டும் பழக்கமில்லை. அது என் தளத்தில் விழுந்தாலும் கவலைப்படுவதில்லை. அப்படி யாராவது எதிர்மை வாக்குப் போட்டால் யாரையோ எங்கள் எழுத்து பாதித்து, யோசிக்க வைக்கிறது என்று நினையுங்கள். இதுக்குப்போய்......

    பிறகு, ஜெயலலிதாவின் தனிப்பட்டஆளுமைகள் நிறையப்பேருக்கு பிடிக்கும் என்று தான் தோன்றுகிறது. கடந்த தேர்தலுக்கு முன் ம.தி.மு.க. வை ஜெயலலிதா ஓரங்கட்டிய பின் ம.தி.மு.க. வின் கொள்கை பரப்பு செயலாளர், அவர் பெயர் சட்டென்று ஞாபகம் வரவில்லை, (ராஜேந்திரன்???) அவரிடத்தில் ஜெயலலிதா பற்றிக் கேட்ட போது அவரிடம் (ஜெயலலிதாவிடம்) தனக்குப் பிடித்தது, ஒன்று, ஜெயலலிதாவின் வாசிப்பும், அதன் ஆழமும்; மன்றொன்று அவருடைய ஆங்கிலம் என்று குறிப்பிட்டதாய் ஞாபகம்.

    நீங்கள் முந்திய பதிவில் எழுதும் போது தான் யோசித்தேன் நீங்கள் ஜெயலலிதாவின் தனிமனித ஆளுமைகளை மனதில் பதித்துக்கொண்டு எழுதுகிறீர்களா. அல்லது, அவருடைய அரசியல் ஆளுமைகளை குறிப்பிடுகிறீர்களா என்று. அரசியல் என்று வரும்போது எனக்கும் அவர் மீது விமர்சனம் உண்டு. அரசியல்வாதிகள் எப்போது நிறம் மாறுவார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

    இதே ஜெயலலிதா எதிர்காலத்தில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான கருத்தை சொல்லமாட்டார் என்பதையும் உறுதியாய் சொல்ல முடியாது. காரணம், கடந்தகாலத்தில் அவர் நடந்துகொண்ட விதம் அப்படி.

    என் வரையில் ஈழவிடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்தியவர்களில் ஜெயலலிதாவும் ஒருவர். அதை மறப்போம், மன்னிப்போம் என்கிறீர்களா? காலம் இவர்களுக்கு கொடுத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எங்கள் முதுகில் குத்தியது தான் வஞ்சம். இப்போதும் காலம் கொடுத்த அதே சந்தர்ப்பத்தை பயன்படுத்தி என்ன செய்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  10. மாப்பிள இப்பதானே உறுப்பினர் ஆனோம்....
    அது எப்படி உனக்கு மட்டும் அம்மா கொள்கை பரப்பு செயளாளர் பதவிய தந்தா... இது நல்லாவே இல்லை மாப்பிள....?????

    காட்டான் குழ போட்டான்....

    பதிலளிநீக்கு
  11. மாப்பிள கருத்து சுதந்திரத்தை மதுரன் மதிப்பதாய் இருந்தால் உங்களிடம் தனது பதிவுக்கு அனுமதி வாங்க வேண்டியதில்லை....!!!????? அவருடைய கருத்தை எவருடனும் அனுமதி கேட்காமலே பதியலாம் என்ன நான் சொல்லுறது சரியா மாப்பிள.... அது சரி செங்கோவியே சொல்லீட்டார்... நமிதா படத்துடன் எப்போது விமர்சனம் எழுதப்போறாய்????

    பதிலளிநீக்கு
  12. மாப்பிள இப்ப அதிகமான பதிவர்களின் பதிவை பார்க்கிறேன் இலை மறை காயாக புலிகள் எதிர்ப்பு மட்டுமே இருக்கின்றது உங்களிடமும் கொஞ்சம் கொஞ்சமாக அது வருகின்றது ஜெயலலிதாவை ஆதரிப்பதற்காக ஏன் அவர்களை மறை முகமாக சாடுகிறீர்கள்...???
    நீங்கள் புலிகளை விமர்சிப்பதென்றால் நேரடியாக விமர்சியுங்கள்... உங்களுக்கும் கருத்து சுதந்திரம் உண்டு மாப்பிள!!!!!!!!??????????

    பதிலளிநீக்கு
  13. //Rathi கூறியது...
    துஷ்யந்தன், நமக்கு எதிர்மறை வாக்கு போட்டும் பழக்கமில்லை. அது என் தளத்தில் விழுந்தாலும் கவலைப்படுவதில்லை. அப்படி யாராவது எதிர்மை வாக்குப் போட்டால் யாரையோ எங்கள் எழுத்து பாதித்து, யோசிக்க வைக்கிறது என்று நினையுங்கள். இதுக்குப்போய்......

    பிறகு, ஜெயலலிதாவின் தனிப்பட்டஆளுமைகள் நிறையப்பேருக்கு பிடிக்கும் என்று தான் தோன்றுகிறது. கடந்த தேர்தலுக்கு முன் ம.தி.மு.க. வை ஜெயலலிதா ஓரங்கட்டிய பின் ம.தி.மு.க. வின் கொள்கை பரப்பு செயலாளர், அவர் பெயர் சட்டென்று ஞாபகம் வரவில்லை, (ராஜேந்திரன்???) அவரிடத்தில் ஜெயலலிதா பற்றிக் கேட்ட போது அவரிடம் (ஜெயலலிதாவிடம்) தனக்குப் பிடித்தது, ஒன்று, ஜெயலலிதாவின் வாசிப்பும், அதன் ஆழமும்; மன்றொன்று அவருடைய ஆங்கிலம் என்று குறிப்பிட்டதாய் ஞாபகம்.

    நீங்கள் முந்திய பதிவில் எழுதும் போது தான் யோசித்தேன் நீங்கள் ஜெயலலிதாவின் தனிமனித ஆளுமைகளை மனதில் பதித்துக்கொண்டு எழுதுகிறீர்களா. அல்லது, அவருடைய அரசியல் ஆளுமைகளை குறிப்பிடுகிறீர்களா என்று. அரசியல் என்று வரும்போது எனக்கும் அவர் மீது விமர்சனம் உண்டு. அரசியல்வாதிகள் எப்போது நிறம் மாறுவார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

    இதே ஜெயலலிதா எதிர்காலத்தில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான கருத்தை சொல்லமாட்டார் என்பதையும் உறுதியாய் சொல்ல முடியாது. காரணம், கடந்தகாலத்தில் அவர் நடந்துகொண்ட விதம் அப்படி.

    என் வரையில் ஈழவிடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்தியவர்களில் ஜெயலலிதாவும் ஒருவர். அதை மறப்போம், மன்னிப்போம் என்கிறீர்களா? காலம் இவர்களுக்கு கொடுத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எங்கள் முதுகில் குத்தியது தான் வஞ்சம். இப்போதும் காலம் கொடுத்த அதே சந்தர்ப்பத்தை பயன்படுத்தி என்ன செய்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.//



    வணக்கம் அக்கா.
    உண்மைதான் எதிர்மறைக்கருத்துக்களில்
    உங்கள் நிலைப்பாடுதான் என் நிலைப்பாடும்.அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை என்னிடம்.

    நிஜம்தான் ஜெயலலிதாவின் ஆளுமை ரெம்ப பேருக்கு புடிக்கும் அதில் நானும் ஒருவன் ஆனாலும் ஜெயலலிதாவிடம் எனக்கு அதிகம் புடித்ததே அவருடைய முகத்துக்கு நேரான பேச்சுத்தான் அரசியல் வாதிகளிடம் இல்லாத ஒன்று இது
    அரசியல்வாதிகள் அதிகம் முதுகுக்கு
    பின்னால்தான் குத்துவார்கள், ஜெயா எங்கள் நெஞ்சில் பலதடவை குத்தி இருந்தாலும் "முதுகில் குத்தாமல்
    நெஞ்சில் குத்தினார் என்ற ஆறுதல் எனக்கு.துரோகியை விட எதிரியே சிறந்தவன் அக்கா.

    ஜெயாவை நம்ப முடியாதுதான்
    ஆனாலும் நம்ப வேண்டிய நிலையில் இருக்குறோம் அக்கா
    இப்போது அதாள பாதாளத்தில் இருக்கும் நமக்கு தூக்கி விட கையை நீட்டுகிறார், கிடைக்கும் கை
    அழுக்கானது என்ற விவாதத்தை விட்டு அதை பற்றி மேலே வர முயற்சிப்போமே அக்கா.

    இம்முறை எங்கள் மேலே உண்மையான கருணையே காட்டுகிறார் என்று நம்பும் சில ஜீவன்களில் நானும் ஒருவன், ஏமாத்தாமல் இருக்க இறைவன்
    அருள் புரியட்டும்.

    பதிலளிநீக்கு
  14. //காட்டான் கூறியது...
    மாப்பிள இப்பதானே உறுப்பினர் ஆனோம்.... அது எப்படி உனக்கு மட்டும் அம்மா கொள்கை பரப்பு செயளாளர் பதவிய தந்தா... இது நல்லாவே இல்லை மாப்பிள....?????
    காட்டான் குழ போட்டான்....//


    ஹி ஹி
    இந்த பதவி தானா வந்தது இல்லை,
    நாமளா எடுத்துக்கொண்டது
    (இது ரெம்ப கேவலமா இருக்கோ?? அவ்வவ்....)

    பதிலளிநீக்கு
  15. //காட்டான் கூறியது...
    மாப்பிள கருத்து சுதந்திரத்தை மதுரன் மதிப்பதாய் இருந்தால் உங்களிடம் தனது பதிவுக்கு அனுமதி வாங்க வேண்டியதில்லை....!!!????? அவருடைய கருத்தை எவருடனும் அனுமதி கேட்காமலே பதியலாம் என்ன நான் சொல்லுறது சரியா மாப்பிள.... அது சரி செங்கோவியே சொல்லீட்டார்... நமிதா படத்துடன் எப்போது விமர்சனம் எழுதப்போறாய்????//


    உண்மைதான் காட்டான், மதுரன் என்னிடம் அனுமதி கேட்டு இருக்க தேவை இல்லை. அது மதுரனுக்கும் நல்லாவே தெரியும், ஆனாலும் அவன் கேட்டான் என்றால் அவன் என் மேல் வைத்த அன்பு அது "நீ என் நண்பேண்டா மதுரன்"


    என்னது நமீதா விமர்சனமோ??
    வெயிட் பாஸ் வெயிட், உங்க வீட்டுக்காரம்மாவுடன் பேசணும் கொஞ்சம் "ரெம்ப குளிர் விட்டுப்போச்சோ ??

    ஹி ஹி

    பதிலளிநீக்கு
  16. //காட்டான் கூறியது...
    மாப்பிள இப்ப அதிகமான பதிவர்களின் பதிவை பார்க்கிறேன் இலை மறை காயாக புலிகள் எதிர்ப்பு மட்டுமே இருக்கின்றது உங்களிடமும் கொஞ்சம் கொஞ்சமாக அது வருகின்றது ஜெயலலிதாவை ஆதரிப்பதற்காக ஏன் அவர்களை மறை முகமாக சாடுகிறீர்கள்...???
    நீங்கள் புலிகளை விமர்சிப்பதென்றால் நேரடியாக விமர்சியுங்கள்... உங்களுக்கும் கருத்து சுதந்திரம் உண்டு மாப்பிள!!!!!!!!??????????//



    அப்படியா?? நிறையப்பேர் விமர்சிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கும் இப்போதுதான் கருத்து சுதந்திரம் என்று ஒன்று இருப்பது தெரிய வந்து இருக்கோ என்னவோ?? ஆனாலும் அதுபற்றி நோ கமெண்ட்ஸ்.

    நான் இங்கே எங்கேயும் புலிகளை எதிர்க்கவும் இல்லை, விமர்சிக்கவும் இல்லை. ஜெயா புலிகைளை எதிர்கிறார் என்று சொல்லியவர்களுக்குதான்
    அதற்க்கான சிறிது விளக்கம் கொடுத்தேன். புலிகள் பற்றி நான் குறிப்பிட்டதை மறுபடியும் ஒருமுறை படித்து பாருங்கள் அதில் ஏதும் தவறு இருந்தால் சொல்ல முடியுமா?

    மறுபடியும் சொல்கிறேன்.. இதில் எங்கேயும் நான் புலிகளை விமர்சிக்கவே இல்லை ,
    அப்படியாயின் அவர்கள் விமர்சனத்துக்கு அப்பார்ப்படடவர்களா என்றால். அதற்கும் என்னிடம் பதில் இல்லை,

    நீங்கள் சொல்வதுபோல் என் கருத்து சுதந்திரத்தை பயன் படுத்தி அவர்களை விமர்சிக்க முடியும் , ஆனால் நான் அதை கடைசி வரை
    செய்யமாட்டேன் என்று உங்களுக்கு உறுதி தருகுறேன், "மல்லாக்க படுத்துக்கொண்டு காறித்துப்ப எனக்கு இஸ்ரம் இல்லை".

    பதிலளிநீக்கு
  17. சிறந்த பதிவு துசி ...எது நடந்ததோ அதுவும் நன்றாகவே நடந்தது ..எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது ..எது நடக்க போகின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும் .......

    பதிலளிநீக்கு
  18. ஆஹா..இம்புட்டு நடந்திருக்கா??நான் பத்து நாள் இந்தப்பக்கம் வரவே இல்ல...அது தான் போலும்...டோட்டலா பார்த்துவிட்டு வருகிறேன் !!

    பதிலளிநீக்கு
  19. பதிவுலகில் எதிர் கருத்து என்பது சகஜம்
    சிலர் வாதம் செய்வார்கள் அதை நாம் புரிந்து கொள்ளலாம்
    அதில் உள்ள கருத்து உடன் பாடானது எனில் ஏற்றுக் கொள்ளலாம்
    சர்யோ தவறோ சிலர் அவர்கள் கொள்கைகளில்
    பிடிவாதமாக இருப்பார்கள்
    அவர்களுக்குச் சொல்லி பயனில்லை
    என்வே இதில் சங்கடப்படுவதற்கோ
    பதிலுக்குப் பதில் பின்னூட்டமிட்டு காலவிரயம்
    செய்யவோ தேவையில்லை
    தங்கள் முந்தைய பதிவு சரியாகத்தான் இருந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  20. களம் ரொம்ப சூடா இருக்குது...ஆறவிட்டு வாறன்....

    பதிலளிநீக்கு
  21. காய்க்கிற மரத்துக்கு தான் கல்லெறி விழும் தம்பியோ
    நீ யோசிக்காம எழுது
    எழுத்தாலே எழும்பு
    எழுத்து உன் முதுகெலும்பு

    பதிலளிநீக்கு
  22. //காலை சாப்பாட்டை முடித்துக்கொண்டு
    மதிய சாப்பாடு வரை வள்ளி தெய்வானைபோல் மனைவி துணைவியுடன் உண்ணாவிரதம் என்ற பேரில் மெரினாவில் காத்து வாங்கி போர் ஓய்ந்து விட்டது என்று சொல்லி சென்றவரிடம் ஓயாத போரையும் கொத்து கொத்தாக இறக்கும் அந்த அப்பாவி மக்கள் பற்றியும் கேட்டபோது
    "மழை விட்டாலும் இன்னும் தூவானம் விடவில்லை" என்று நாங்கள்
    பதறி துடித்த நேரத்திலும் கவி வடித்த கருணாநிதி //

    சரியாச்சொன்னீங்க பாஸ்
    இதில் என்ன வேடிக்கை என்றால் இவர் இப்பவும் ஈழத்தமிழர் பிரச்சனை கதைக்கின்றாராம்..

    ஆனாலும் கொஞ்சம் பொறுத்துதான் என்னால் ஜெயலலிதா மேடத்தை நம்பமுடியும்.

    பதிலளிநீக்கு
  23. பிற திராவிட தலைகளுக்கு ஜெயலலிதா தேவலை

    பதிலளிநீக்கு
  24. என்ன ஆச்சரியம்? இந்த டைட்டிலுக்கு ஒரு மைனஸ் கூட விழலையே

    பதிலளிநீக்கு
  25. //"பாராட்டலாமே ஜெயலலிதாவை"
    என்ற பதிவுக்கு இவை அனைத்தையும் ஒன்றுசேர பெற்று உள்ளேன்//

    பிரபல்யமாகி விட்டீர்கள் பாராட்டுக்கள்.
    எவரும் நல்லது செய்யும் போது பாராட்டுவதில் தவறில்லை.

    தொடருங்கள்...நல்லதைப் பாராட்டி

    பதிலளிநீக்கு
  26. பெயரில்லா4:03 PM, ஆகஸ்ட் 15, 2011

    ஜெயா மேடம் ஈழத்தமிழர் ஆதரவோ, எதிர்ப்போ எந்த நிலையில் இருந்தாலும் இன்னும் ஐந்து வருடம் அவ தான் அரசி அவ தான் மந்திரி ..)

    பதிலளிநீக்கு
  27. பெயரில்லா4:06 PM, ஆகஸ்ட் 15, 2011

    ///அப்புறம் ஜெயலலிதா உத்தமியா உத்தமியா என்று உளருபவர்களிடம்
    சில வார்த்தைகள். வாங்க சார் வாங்க.. "போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்" என்று சொன்ன ஜெயலலிதா உத்தமியா என்று நீங்கள் என்னிடம் கேட்டால் வன்னியில் கொத்து கொத்தாக மக்களை இலங்கை
    ராணுவம் கொன்று குவிக்க இங்கே சோனியாவுக்கு தந்தி மட்டும் அடித்துக்கொண்டு நாளொரு நடிகையை சந்தித்துக்கொண்டு
    இருந்துவிட்டு தன் குடும்பத்துக்கு பதவி வேண்ட மட்டும் தள்ளாத
    வயதிலும் தள்ளு வண்டியில் டெல்லி சென்ற கருணாநிதி உங்கள்
    பார்வையில் உத்தமர் என்றால் ஜெயலலிதா உத்தமி என்று வாதாடுவதில்
    எந்த தயக்கமும் இல்லை எனக்கு. /// நீங்கள் இரண்டு பேரையும் ஒப்பிட்டு ஜெயா மேலானவர் என்ற கருத்தை சொல்லும் போது நான் ஒத்துக்கொள்கிறேன், ஆனால் அதையும் தாண்டி நடுநிலமையாளர்கள் 'ஜெயா உத்தமி' என்ற சொல் பதத்தை ஏற்றுக்கொள்வது கடினம் தான்..

    பதிலளிநீக்கு
  28. பெயரில்லா4:08 PM, ஆகஸ்ட் 15, 2011

    மற்றும் படி கருணாநிதியின் ஊழல் ஜெயா மேடத்துக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு வேண்டிய ஒண்டு..கரும்பு தின்ன கூலியா!!

    ஜெயா மேடமும் சசிகலாவும் சேர்ந்து செய்த ஊழல்கள் பற்றி அறிந்திருக்கிறேன்..ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை..

    ஒரு வேளை அவர் திருந்திவிட்டார் என்று சொல்லும் உங்கள் காரணத்தை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  29. பெயரில்லா4:09 PM, ஆகஸ்ட் 15, 2011

    மைனஸ் ஓட்டுக்கேல்லாம் பயப்படாதேங்கோ. உங்கள் கருத்தை நீங்கள் சொல்ல, எழுத யாரும் தடுத்துவிட முடியாது. தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  30. பெயரில்லா5:13 PM, ஆகஸ்ட் 15, 2011

    ஜெயலலிதா மீதி பெரிய அதிருப்தி ஏதும் மக்களிடம் இல்லை என்பதே உலகறிந்த உண்மை. உங்கள் வாதம் முற்றிலும் சரி.

    பதிலளிநீக்கு
  31. பெயரில்லா5:14 PM, ஆகஸ்ட் 15, 2011

    திருத்தம்: ஜெயலலிதா மீது பெரிய அதிருப்தி ஏதும் மக்களிடம் இல்லை என்பதே உலகறிந்த உண்மை. உங்கள் வாதம் முற்றிலும் சரி.

    பதிலளிநீக்கு
  32. பெயரில்லா7:03 PM, ஆகஸ்ட் 15, 2011

    நல்ல பதிவு...தனி மனித சாடலாய் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்...

    பதிலளிநீக்கு
  33. //Jathu கூறியது...
    சிறந்த பதிவு துசி ...எது நடந்ததோ அதுவும் நன்றாகவே நடந்தது ..எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது ..எது நடக்க போகின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும் .......//


    தேங்க்ஸ் பாஸ்

    பதிலளிநீக்கு
  34. //மைந்தன் சிவா கூறியது...
    ஆஹா..இம்புட்டு நடந்திருக்கா??நான் பத்து நாள் இந்தப்பக்கம் வரவே இல்ல...அது தான் போலும்...டோட்டலா பார்த்துவிட்டு வருகிறேன் !!
    //

    வாங்க பாஸ் வாங்க
    நீங்க பத்து நாள் ஊரில் இல்லை என்றதும் எல்லோருக்கும் குளிர் விட்டுப்போச்சு
    அதான் ஆளாளுக்கு நாட்டாமை பண்ணுறாங்க,
    ஹா ஹா

    பதிலளிநீக்கு
  35. ///Ramani கூறியது...
    பதிவுலகில் எதிர் கருத்து என்பது சகஜம்
    சிலர் வாதம் செய்வார்கள் அதை நாம் புரிந்து கொள்ளலாம்
    அதில் உள்ள கருத்து உடன் பாடானது எனில் ஏற்றுக் கொள்ளலாம்
    சர்யோ தவறோ சிலர் அவர்கள் கொள்கைகளில்
    பிடிவாதமாக இருப்பார்கள்
    அவர்களுக்குச் சொல்லி பயனில்லை
    என்வே இதில் சங்கடப்படுவதற்கோ
    பதிலுக்குப் பதில் பின்னூட்டமிட்டு காலவிரயம்
    செய்யவோ தேவையில்லை
    தங்கள் முந்தைய பதிவு சரியாகத்தான் இருந்தது
    தொடர வாழ்த்துக்கள்
    ///


    நன்றி பாஸ் ,
    உங்கள் புரிதலுக்கு என் நன்றிகள்
    உங்களைப்போன்றவர்களின் ஆதரவுதான் வலை உலகில் நிலைத்து
    நிக்க பெரிதும் உதவுகிறது
    மீண்டும் நன்றி பாஸ்
    உங்கள் அன்புக்கு நான் எப்போதும் அடிமை.

    பதிலளிநீக்கு
  36. //ஆகுலன் கூறியது...
    களம் ரொம்ப சூடா இருக்குது...ஆறவிட்டு வாறன்....//


    டேய்.... இப்படி சொல்லி சொல்லியே ஒவ்வொரு பதிவிலையும் நீ எஸ்கேப் ஆகிட்டு இருக்க, இருக்குடி உனக்கு... lol

    பதிலளிநீக்கு
  37. //கவி அழகன் கூறியது...
    காய்க்கிற மரத்துக்கு தான் கல்லெறி விழும் தம்பியோ
    நீ யோசிக்காம எழுது
    எழுத்தாலே எழும்பு
    எழுத்து உன் முதுகெலும்பு
    //

    தேங்க்ஸ் பாஸ்
    உங்கள் பதிவுகளைப்போலவே
    உங்கள் கருத்துரைகளும் அழகுதான்.

    பதிலளிநீக்கு
  38. //Kss.Rajh கூறியது...
    //காலை சாப்பாட்டை முடித்துக்கொண்டு
    மதிய சாப்பாடு வரை வள்ளி தெய்வானைபோல் மனைவி துணைவியுடன் உண்ணாவிரதம் என்ற பேரில் மெரினாவில் காத்து வாங்கி போர் ஓய்ந்து விட்டது என்று சொல்லி சென்றவரிடம் ஓயாத போரையும் கொத்து கொத்தாக இறக்கும் அந்த அப்பாவி மக்கள் பற்றியும் கேட்டபோது
    "மழை விட்டாலும் இன்னும் தூவானம் விடவில்லை" என்று நாங்கள்
    பதறி துடித்த நேரத்திலும் கவி வடித்த கருணாநிதி //

    சரியாச்சொன்னீங்க பாஸ்
    இதில் என்ன வேடிக்கை என்றால் இவர் இப்பவும் ஈழத்தமிழர் பிரச்சனை கதைக்கின்றாராம்..

    ஆனாலும் கொஞ்சம் பொறுத்துதான் என்னால் ஜெயலலிதா மேடத்தை நம்பமுடியும்.//


    தேங்க்ஸ் பாஸ்,

    பதிலளிநீக்கு
  39. //தமிழ் உதயம் கூறியது...
    பிற திராவிட தலைகளுக்கு ஜெயலலிதா தேவலை//


    ரியலி பாஸ்

    பதிலளிநீக்கு
  40. //சி.பி.செந்தில்குமார் கூறியது...
    என்ன ஆச்சரியம்? இந்த டைட்டிலுக்கு ஒரு மைனஸ் கூட விழலையே
    //

    அட ....
    நானும் இப்போதுதான் கவனித்தேன்,
    எல்லோரும் எங்கேயாவது லீவுல போய்ட்டான்களோ

    அவ்வ்

    பதிலளிநீக்கு
  41. //யோகன் பாரிஸ்(Johan-Paris) கூறியது...
    //"பாராட்டலாமே ஜெயலலிதாவை"
    என்ற பதிவுக்கு இவை அனைத்தையும் ஒன்றுசேர பெற்று உள்ளேன்//

    பிரபல்யமாகி விட்டீர்கள் பாராட்டுக்கள்.
    எவரும் நல்லது செய்யும் போது பாராட்டுவதில் தவறில்லை.

    தொடருங்கள்...நல்லதைப் பாராட்டி//


    உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்

    என் நன்றிகள் பாஸ்.
    அப்படியா???
    ஹா ஹா
    தேங்க்ஸ் பாஸ்

    பதிலளிநீக்கு
  42. //கந்தசாமி. கூறியது...
    ஜெயா மேடம் ஈழத்தமிழர் ஆதரவோ, எதிர்ப்போ எந்த நிலையில் இருந்தாலும் இன்னும் ஐந்து வருடம் அவ தான் அரசி அவ தான் மந்திரி ..)//


    ஹி ஹி

    பதிலளிநீக்கு
  43. //கந்தசாமி. கூறியது...
    ///அப்புறம் ஜெயலலிதா உத்தமியா உத்தமியா என்று உளருபவர்களிடம்
    சில வார்த்தைகள். வாங்க சார் வாங்க.. "போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்" என்று சொன்ன ஜெயலலிதா உத்தமியா என்று நீங்கள் என்னிடம் கேட்டால் வன்னியில் கொத்து கொத்தாக மக்களை இலங்கை
    ராணுவம் கொன்று குவிக்க இங்கே சோனியாவுக்கு தந்தி மட்டும் அடித்துக்கொண்டு நாளொரு நடிகையை சந்தித்துக்கொண்டு
    இருந்துவிட்டு தன் குடும்பத்துக்கு பதவி வேண்ட மட்டும் தள்ளாத
    வயதிலும் தள்ளு வண்டியில் டெல்லி சென்ற கருணாநிதி உங்கள்
    பார்வையில் உத்தமர் என்றால் ஜெயலலிதா உத்தமி என்று வாதாடுவதில்
    எந்த தயக்கமும் இல்லை எனக்கு. /// நீங்கள் இரண்டு பேரையும் ஒப்பிட்டு ஜெயா மேலானவர் என்ற கருத்தை சொல்லும் போது நான் ஒத்துக்கொள்கிறேன், ஆனால் அதையும் தாண்டி நடுநிலமையாளர்கள் 'ஜெயா உத்தமி' என்ற சொல் பதத்தை ஏற்றுக்கொள்வது கடினம் தான்..
    //

    இப்போது இருக்கும்
    அரசியல் வாதிகளில் அவர் உத்தமி என்பதுதான் என் வாதம் நண்பா

    பதிலளிநீக்கு
  44. கந்தசாமி. கூறியது...
    மற்றும் படி கருணாநிதியின் ஊழல் ஜெயா மேடத்துக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு வேண்டிய ஒண்டு..கரும்பு தின்ன கூலியா!!

    //ஜெயா மேடமும் சசிகலாவும் சேர்ந்து செய்த ஊழல்கள் பற்றி அறிந்திருக்கிறேன்..ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை..

    ஒரு வேளை அவர் திருந்திவிட்டார் என்று சொல்லும் உங்கள் காரணத்தை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.//


    காத்திருந்துதான் பார்ப்போமே நண்பா

    பதிலளிநீக்கு
  45. //கந்தசாமி. கூறியது...
    மைனஸ் ஓட்டுக்கேல்லாம் பயப்படாதேங்கோ. உங்கள் கருத்தை நீங்கள் சொல்ல, எழுத யாரும் தடுத்துவிட முடியாது. தொடர்ந்து எழுதுங்கள்.
    //

    தேங்க்ஸ் பாஸ்

    உங்கள் ஆதரவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  46. !// சிவகுமார் ! கூறியது...
    திருத்தம்: ஜெயலலிதா மீது பெரிய அதிருப்தி ஏதும் மக்களிடம் இல்லை என்பதே உலகறிந்த உண்மை. உங்கள் வாதம் முற்றிலும் சரி//


    நன்றி பாஸ் உங்கள் முதல் வருகைக்கு.

    நீங்கள் சொன்னதுதான் நிதர்சனம் பாஸ்

    பதிலளிநீக்கு
  47. //Reverie கூறியது...
    நல்ல பதிவு...தனி மனித சாடலாய் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்...//

    தேங்க்ஸ் பாஸ்

    பதிலளிநீக்கு
  48. மாப்பிள பின்னூட்டங்களுக்கு நீ தரும் பதில்கள் ஏற்கக்கூடியதாகவும் ரசிக்க கூடியதாகவும் இருக்கின்றது..
    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  49. மைனஸ் ஒட்டு கிடைச்ச சந்தோசப்படனும். என்ன. ஏது எண்டு வாசிக்காமல் பிளஸ் ஓட்டு போடுவாங்க, பதிவை ஒழுங்கா வாசிச்சவன் தான் மைனஸ் போடுவான்.

    பதிலளிநீக்கு
  50. தம்பி நீர், வவுனியா Jathu Siva வோட பிரண்ட் தானே!

    பதிலளிநீக்கு
  51. எனக்கும் ஜெயலலிதா மேல் கொஞ்ச அபிப்பிராயம் உள்ளது........... அவர் என்ன தப்பு செய்தார் என்பது பற்றி அவ்வளவா தெரியாது...இந்த ஆட்சி நல்லாத்தான் போய்கிட்டிருக்குது அதுவரைக்கும் போதும்........

    பதிலளிநீக்கு
  52. நான் பதிவுலகம் வந்து ஐந்து மாதங்கள் கூட நிறைவடையவில்லை

    நீங்க எனக்கு ஜூனியர்..ஹஹஹ...
    இங்க ராக்கிங் பண்ணலாமா.........

    பதிலளிநீக்கு
  53. திறமையான பதிவர்கள் இருக்கும் இந்த வலையுலகில் என்னுடைய
    கிறுக்கல்களை நினைத்து பல நேரங்களில் சங்கடப்பட்டாலும்

    உங்கட பதிவ பத்தி நீங்களே கவலை பட்டால் நான் என்ன செய்யுறது........................

    பதிலளிநீக்கு
  54. //காட்டான் சொன்னது…
    மாப்பிள பின்னூட்டங்களுக்கு நீ தரும் பதில்கள் ஏற்கக்கூடியதாகவும் ரசிக்க கூடியதாகவும் இருக்கின்றது..
    வாழ்த்துக்கள்...//

    உங்க மாப்புள்ளையை
    ரெம்ப புகழ்றீங்க என்று நினைக்குறேன்
    ரெம்ப தேங்க்ஸ் பாஸ்

    பதிலளிநீக்கு
  55. //KANA VARO கூறியது...
    மைனஸ் ஒட்டு கிடைச்ச சந்தோசப்படனும். என்ன. ஏது எண்டு வாசிக்காமல் பிளஸ் ஓட்டு போடுவாங்க, பதிவை ஒழுங்கா வாசிச்சவன் தான் மைனஸ் போடுவான்.
    //

    தேங்க்ஸ் பாஸ்
    உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ஆஹா... இது புதுசா இருக்கே
    அப்போ நீங்க எனக்கு
    ப்ள்ஸ் ஒட்டு போட்டீங்களா??
    மைனஸ் ஒட்டு போட்டீங்களா?
    ஹி ஹி ஹி

    பதிலளிநீக்கு
  56. //KANA VARO கூறியது...
    தம்பி நீர், வவுனியா Jathu Siva வோட பிரண்ட் தானே!//


    ஆமாம் பாஸ்
    விசாரிப்பைப்பார்த்தால்.. :)
    அடி விழும் போல இருக்கே.
    ஏதும் சம்திங் சம்திங்
    அவ்வ்வ்வ்..............

    பதிலளிநீக்கு
  57. //ஆகுலன் கூறியது...
    எனக்கும் ஜெயலலிதா மேல் கொஞ்ச அபிப்பிராயம் உள்ளது........... அவர் என்ன தப்பு செய்தார் என்பது பற்றி அவ்வளவா தெரியாது...இந்த ஆட்சி நல்லாத்தான் போய்கிட்டிருக்குது அதுவரைக்கும் போதும்........
    //

    ரெம்ப நல்லா
    தெரிஞ்சு வைச்சு இருக்கீங்க பாஸ்,
    இப்போ பெரும்பாலானவங்க ஜெயாவை
    ஆதரிக்கிறாங்க என்பதுதான் உண்மை

    பதிலளிநீக்கு
  58. //ஆகுலன் கூறியது...
    திறமையான பதிவர்கள் இருக்கும் இந்த வலையுலகில் என்னுடைய
    கிறுக்கல்களை நினைத்து பல நேரங்களில் சங்கடப்பட்டாலும்

    உங்கட பதிவ பத்தி நீங்களே கவலை பட்டால் நான் என்ன செய்யுறது........................//

    ஹி ஹி
    நீங்க சொல்லீட்டிங்க இல்ல
    இனி கவலைப்பட மாட்டோமில்ல

    பதிலளிநீக்கு
  59. //ஆகுலன் கூறியது...
    நான் பதிவுலகம் வந்து ஐந்து மாதங்கள் கூட நிறைவடையவில்லை

    நீங்க எனக்கு ஜூனியர்..ஹஹஹ...
    இங்க ராக்கிங் பண்ணலாமா.........
    //

    அடப்பாவி
    அப்போ ஒரு தினுஷாத்தான் இருக்க போல
    அவ்வ்வவ்வ்...

    பதிலளிநீக்கு
  60. தலைவா!!
    அவங்கதான் பேசறாங்க னா... நீங்களும் இதனை விடுவதாக இல்லைபோலும்...

    //காட்டான் சொன்னது…
    மாப்பிள பின்னூட்டங்களுக்கு நீ தரும் பதில்கள் ஏற்கக்கூடியதாகவும் ரசிக்க கூடியதாகவும் இருக்கின்றது..
    வாழ்த்துக்கள்...//

    காட்டான் அவர்கள் சொன்னதை நான் வழிமொழிகிறேன், இதனை கட்டாயம் தொடர உங்கள் ரசிகன் கட்டளையிடுகிறான்...

    பதிலளிநீக்கு
  61. தெளிவான விளக்கங்கள் பல அருமையாகவுள்ளது உங்க அளவுக்கு அரசியல் எல்லாம நமக்கு தெரியாது பாஸ்.

    பதிலளிநீக்கு
  62. "சரி இவர்கள் எல்லாம் ஜெயலலிதாவிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று சத்தியமாக எனக்கு தெரியவில்லை.. ஜெயாவை கும்மி பதிவிடும் பதிவர்களில் யாராவது ஒருவர் இதற்க்கு பதில் தந்தாள் தேவலாம். "

    நீங்களே பதிலை கேப்பீங்களாம், கேட்டா கோவிச்சுக்குவீன்கலாம்.. போங்கயா நீங்களும் உங்க போங்கு ஆட்டமும்..

    பதிலளிநீக்கு
  63. கருணாநிதியை உத்தமர் என்று எந்த மடையன் சொன்னான், என்று நான் கேட்டால்..
    அதற்க்கு இன்னொரு அர்த்தமும் உண்டு ஜெயாவை எந்த மடையன் உத்தமி என்று சொன்னான்..

    பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...