வெள்ளி, ஆகஸ்ட் 26, 2011

அம்மா என்ற வார்த்தையின் புனிதத்தை காப்பாற்றுங்கள் ஜெயலலிதா..


ராஜீவ்காந்தி கொலை எப்போது நடந்ததோ அன்றில் இருந்து
இந்தியாவின் ஈழதமிழர்  மேலான  பழிவாங்கும்  நடவடிக்கை  ஆரம்பித்துவிட்டது. ஆனால் அந்த  ராஜீவ்  படுகொலையையே  எதனால் நடந்தது என்பதைத்தான்   இந்தியா கொஞ்சமும்   சிந்தித்து
பார்க்க மறுக்கிறது. இப்போது வன்னியில் நடந்த இறுதி போரில் எவ்வளவுக்கு எவ்வளவு ஈழதமிழர் மீது வன்முறைகள் கட்டவுழ்த்து  விடப்பட்டதோ அதற்க்கு சற்றும் குறைவு இல்லாமல்தானே
ராஜீவ்காந்தியின் அமைதிப்படையின் அட்டகாசங்கள் அன்று
இருந்தது. இப்போது ராஜபக்ஷா மேல் போர்குற்ற நடவடிக்கைக்கு
நாம் காட்டும் ஆர்வத்தை ஒருவேளை ராஜீவ் உயிரோடு இருந்து இருந்தால் காட்டி இருப்போமோ என்னவோ.. என்னை பொறுத்தவரை   ராஜபஷாவால் ஏற்பட்ட வலியை விட ராஜீவ்வால் நமக்கு ஏற்பட்ட வலிதான் அதிகம்.  ஏனெனில் நம்  எதிரி  நெஞ்சில்  குத்துவதைவிட நம் நண்பன்  முதுகில்  குத்தும்  போதுதான்  வலியும்  வேதனையும்  அதிகம்.

ராஜீவ்வால் நாம் நிறைய இழந்து இருக்குறோம் அனுபவித்து 
இருக்கிறோம்.ஆனால் நான்   எப்போதுமே ராஜீவ்வின் கொலையை நியாயப்படுத்த முன் வரவில்லை. 1991 ஆம் ஆண்டு  ஸ்ரீ பெரும்புத்தூரின் நடந்த ராஜீவ் கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட
நிலையில் கருணை மனுவிலாவது தங்கள் உயிர்கள் காப்பாற்றப்படும் என்ற  நம்பிக்கையில் மட்டும் வாழ்ந்து வந்தவர்களை அவர்களின் கருணைமனு நிராகரிப்பு அந்த நம்பிக்கையையே தூக்கி புதைத்துவிட்டது.  இவர்களுக்கு இந்த தண்டனை நியாமானதுதானா..? என்று எவ்வித சார்பு தன்மை இல்லாமல்
கூட ஆராய்ந்து பார்த்தாலும் அங்கு நியாயத்துக்கு பதில் இந்திய அரசின்
உயிருக்கு உயிர் என்ற பழிவாங்கும் கொடூர எண்ணம்தான் கைகொட்டி
சிரிக்கிறது.  ராஜீவ் கொலையைப்பற்றி எதுவும் தெரியாமல் ஒரு சக தமிழனுக்கு  ஒரு பேட்டரி வேண்டி கொடுத்ததுக்கு கூடவா மரண தண்டனை. அப்பப்பா.... இந்திய அரசின் சட்டம் எவ்வளவு விசித்திரமாக
இருக்கு. இப்படி பார்த்து பார்த்து மரண தண்டனையை கொடுக்க வெளிக்கிட்டால்  இந்தியாவில் மக்கள் தொகை வெறும் ஆயிரத்தை
தொட்டுவிடும்.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனை நியாயமானது தானா என்று அவர்களை கேள்விகேட்டு விவாதிப்பதே
மடத்தனமாது ஏனெனில் அவர்களுக்கே தெரியும் இந்த தீர்ப்பு
எவ்வளவு நேர்மைநியாயம் அற்றது என்று. ஒரு ஆளும்வர்க்க   
குடும்பத்தை குதுகலப்படுத்த எடுக்கப்பட்ட முடுவு இது.  அந்த
இத்தாலி குடும்பத்தின் ஒரு உயிர் இழப்பு என்பது உண்மையில் வருந்ததக்கமைதான் ஆனால் அந்த இழப்பை சரிசெய்ய மூன்று
அப்பாவி உயிர்களின் இரத்தத்தை குடிக்க வேண்டும் என்று
அலையும் இந்த காட்டேரிகளை நம்பித்தான் இந்தியாவே
இருக்கின்றதா என்பதுதான் வேதனை. இந்த இத்தாலியில்
இருந்து வந்த மருமகள் ஈழதமிழர் எங்களை அடியோடு
வெறுக்கிறார் காரணம் அவர் கணவர் கொலைக்கு காரணம்
நாங்கலாம் . சரி இருக்கட்டும்...  இதே குடும்பத்தில் நடந்த
இந்திராகாந்தி படுகொலைக்கு யார் காரணம், ஒரு சீக்கியன்
தானே..  அப்படியானால் இந்த இத்தாலியில் இருந்து வந்த
மருமகள் எம் இணைத்தை வெறுப்பது போல் ஏன் சீக்கிய
இனத்தை வெறுக்கவில்லை, அதுக்கு பதில் தன் கோட்டையிலேயே நம்பிக்கைக்கு உரிய பாதுகாப்பு பதவியை கூட சீக்கிய
இனத்தவருக்கு கொடுத்து  சீக்கிய இனத்தை சேர்ந்த சிங்க்கு
பிரதமர்  பதவியை  கொடுத்து மகிழ்கிறார். ஓஹோ..  தன் ஆசை
கணவரை கொலை செய்தவர்கள் என்று   சந்தேகப்படுபவர்கள்
மீது கொலைவெறி... அதே தனக்கு பிடிக்காத தன்  மாமியாரை
படுகொலை செய்தவர்களுக்கு 'தானே தன் கண்ணால்  பார்த்தபின்பும்'  பதவிகளும் மரியாதையும் பாசமும்.  எந்த
காலத்தில் மாமியாரை மருமகளுக்கு பிடித்து இருக்கு.
பதவியிருப்பதால் தங்களுக்கு தகுந்தால் போல் சட்டத்தையை வளைக்கிறார்கள்  
என்ன உலகமடா இது.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரணதண்டனையை
நிராகரிக்க சொல்லி போராட்டங்கள் தமிழ்நாட்டில் மெது மெதுவாக
வெடித்துகிளம்ப தொடங்கி இருக்கு. கட்சிசார்பு இன்றி  பேரறிவாளன்
பெற்றோர் உட்பட "நீங்கள் தலையிட்டு காப்பாற்றுங்கள்" என்று
கோரிக்கைகள் முதல்வர் ஜெயலலிதாவை நோக்கி வந்துகொண்டே
இருக்கு என்ன செய்யபோறார் ஜெயலலிதா என்று உலக தமிழினமே
விரக்தியுடனும் எஞ்சியுள்ள நம்பிக்கையுடனும் பார்த்துகொண்டு 
இருக்கிறார்கள்.  இந்த   நேரத்தில் ஜெயலலிதாவிடம்  சில வார்த்தைகள்..

ஜெயலலிதாவுக்கு: இது நீங்கள் அமைதியாக இருக்கும் நேரம்
அல்ல.கொஞ்சம் வெளியே பாருங்கள்.. கட்சி சார்புகள் மத சார்புகள் மொழிசார்புகள் இன்றி அந்த அப்பாவி உயிர்களுக்காக
போராடுகிறார்கள். இந்த விசயத்திலும் "அவர்கள் சொல்லி நான்
என்ன கேட்பது" என்ற இறுமாப்புடன் இருந்து விடாதீர்கள். இப்போது எல்லாம் நாங்கள் உங்களைத்தான் அதிகம் நம்புகிறோம். தமிழின தலைவன் என்று கருணாநிதிக்கு முடிசூட்டிய காலம் எல்லாம் போய்விட்டது அவர் எங்களை நம்ப வைத்து முதுகில் குத்தி விட்டார், கடந்த தேர்தலில் நீங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என உங்களை
விட அதிகம் ஆசைப்பட்டவர்கள்தான் நாங்கள்.  அம்மா வரணும்..
அம்மா வந்தால்தான் எங்களுக்கு ஒரு விடிவு  கிடைக்கும்.. அம்மா துணிச்சல் மிக்கவர் எங்களுக்காக போராடுவார்.. அம்மா முகத்துக்கு
நேரே பேசுபவர் செய்பவர் அவருக்கு கருணாநிதி போல் நடிக்கவோ முதுகில் குத்தவோ தெரியாது..இப்படி கூடும் இடங்களில் எல்லாம் உங்களுக்காக வக்காலத்து வாங்கி பேசிய ஈழதமிழன்தான் அதிகம். அதேபோலவே நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள் போகுமிடமெல்லாம் சந்தோஷத்தை கொண்டாடினோம் நாங்கள், எங்கள் சந்தோஷவரவேற்ப்பு உங்கள்  காதுக்கு எட்டியதோ என்னவோ நீங்கள் பதவியேற்ற
உடனேயே உங்கள் பார்வை எங்கள் பக்கம் திரும்பியது எங்களுக்காக எங்கள் நலனுக்காக அடுத்தடுத்து  நல்ல முடிவுகளை  எடுத்தீர்கள்  பேசினீர்கள். ஆதரவற்று நிர்கதியாய்  நாங்கள்  நின்றவேளை உங்களின்  ஆதரவு  கண்டு  நாம்  பெற்ற  ஆனந்தத்தை   வார்த்தைகளால்
சொல்லிவிட முடியாது. இப்போது மீண்டும் உங்களிடமே
உயிர்பிச்சை கேட்க்கவந்து இருக்கிறோம். தாயிடம்தானே முறையிட
முடியும் தாயன்பால் மட்டுமே சலிக்காமல் உதவிட முடியும்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின்  உயிர்களை நீங்கள் நினைத்தால் காப்பாற்றலாம்.  நீங்கள் ஒன்றை நினைத்தால் அதை
செய்துமுடிக்காமல் விட மாட்டீர்கள். உங்களை விட உங்கள் மீது
எங்களுக்கு அதிக நம்பிக்கை இருக்கு. 20  வருடங்களாக தனிமை
சிறைவாழ்க்கையை அனுபவித்துவிட்ட அவர்களுக்கு மேலும் தண்டனையை கொடுப்பது முறையல்ல,  அவர்களை காப்பாற்ற
சட்டத்தில் கூட இடமிருக்கிறது ஒருவரின் கருணை மனு மீது முடிவெடுப்பதில் காலதாமதம் செய்யப்பட்டால், அவருடைய தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் எத்தனையோ தீர்ப்புகளை வழங்கியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்த தேவீந்தர் சிங்பால் புல்லார் என்பவரின் கருணை மனு மே மாதம் தள்ளுபடி
செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை கடந்த 23ஆம்
திகதி  விசாரித்த உச்சநீதிமன்றம், அவரது கருணை மனு மீது முடிவெடுப்பதில் தாமதம் காட்டப்பட்டது சரியல்ல என்றும், இதை அடிப்படையாக வைத்து அவரது தண்டனையை குறைப்பது குறித்த கோரிக்கை மீது முடிவெடுக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்து முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் மரண தண்டனையில் இருந்து காப்பாற்றவும் பொருந்தும். உங்களை அம்மா என்று வாய்நிறைய அழைத்து
மகிழ்கிறோம். அந்த அம்மா என்ற வார்த்தையின் புனிதத்தையாவது காப்பாற்றுங்கள். உங்கள் ஆட்சியில் நீங்கள் செய்த எத்தனையோ
விடயங்களை சொல்லி சொல்லி பெருமை பட்டு உள்ளீர்கள்.
உலகத்திலேயே உயிர்பிச்சை கொடுப்பதைப்போல் உயர்ந்தது
வேறெதுவும் இல்லை, அவர்களை காப்பாற்றுங்கள் அந்த பெருமை
காலகாலத்துக்கு உங்கள் புகழ்பாடும்.அந்த அப்பாவி உயிர்களை
காப்பாற்றி தாருங்கள். இதை எங்கள் வாழ்நாளில் மறக்கவே
மாட்டோம்.. எங்கள் வருங்கால சந்ததிகள் கூட உங்களை தங்கள் வரலாற்றில் போறித்துவைத்து அன்புகாட்டுவார்கள், இப்போதைய
எங்கள் நிலையில் எங்களுக்கு தனி ஈழமோ ராஜபக்ஷாவின்
போர்குற்ற விசாரணையோ எதுவும் வேண்டாம் அந்த மூன்று
அப்பாவி உயிர்களைவிட இவை ஒன்றும் பெரிது இல்லை
எங்களுக்கு. விரைந்து நடவடிக்கை எடுங்கள்  காலமெல்லாம்
கடமைப்பட்டு இருப்போம் உங்களுக்கு.
22 கருத்துகள்:

 1. காலாவதியான தடா சட்டங்களின்படி வழங்கபட்ட தண்டனைகளை ரத்து செய்யவேண்டும். இவர்களின் மீது சுமத்த பட்டுள்ள குற்றசாட்டுகள் கடுமையனவைகள் அல்ல. அப்படியே குற்றம் என்றாலும், அவர்கள் ஏற்கனேவே சுமார் 20 ஆண்டுகள் தனிமை சிறையில் அனுபவித்த தண்டனைகளை கருத்தில் கொண்டு, அவர்களை விடுவிக்கவேண்டும். அப்படி விடுவிகமுடியவிட்டால், தூக்கு தண்டனையை மாற்றி, அரசாங்கம் விரும்பும் வரை சிறையிலாவது உயிருடன் இருக்கவிடுங்கள்...

  ஆனால் நடப்பவை கவலை அளிபதாக உள்ளது, இந்த பிரச்னையை சட்டசபையில் பற்றி பேச 15 முறை அனுமதி கேட்டும் அனுமதி மறுப்பு. சட்டசபையில் பேசியதும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கம். இலங்கைத் தமிழர்களுக்காக திடீர் குபீர் ஆதரவு தெரிவித்தவர்கள் இப்படி திடீர் என்று மாறி சட்டசபையில் பேசக்கூட முடியாத நிலைமை.

  தங்களால் முடியாத, தான் நேரடியாக செய்யமுடியாத ஒன்றிற்காக ஆவேசமாக தீர்மானம் நிறைவேறும் போது, தனது அரசு சமந்தப்பட்ட, தன்னால் நேரடியாக செய்யமுடிந்த ஒன்றை பற்றி, குறைந்தபட்சம் சட்டசபையில் பேச கூட அனுமதி இல்லை..
  அடுத்தது என்ன நடக்கும் என்று தெரியவில்லை...

  கருணாநிதியும் மற்ற அனைத்து தமிழகத்து தலைவர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து விட்டனர், காங்கிரேசை தவிர. இன்னும் ஜெயா இதுகுறித்து எந்த கருதும் தெரிவிக்கவில்லை...சோனியா இந்த முறையாவது கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்பாரா ?..
  அப்படி செய்தல், ஈழ துரோகத்தால் காயம்பட்டு உள்ளவர்களுக்கு , சிறிது மருந்திடுவது போல இருக்கும்...செய்வாரா ?

  பதிலளிநீக்கு
 2. துஷி முக்கியமான காலத்தில் வந்த அருமையான கருத்து.. அம்மா என்ன செய்யப்போகிறாவென்று பார்போம்.. இதில எங்களை போன்றவர்களுக்கு இரட்டிப்பு சோகம்...

  பதிலளிநீக்கு
 3. துஷி, தர்க்க பூர்வமா, நன்றாக,நாகைப் புடுங்குவது போல எழுதியிருக்கீங்க! நல்லது நடக்கவேண்டும்! காத்திருப்போம்!!

  பதிலளிநீக்கு
 4. இன்றுதான் இந்த விடயம் என்னை முழுமையாக பாதித்தது.........
  ஜெயலலிதா என்ன செய்ய போகிறார் எண்டு பார்போம்...

  பதிலளிநீக்கு
 5. துஷ்யந்தன், பிரகாஷ் சொன்னது போல் இவர்கள் மீதான வழக்கு தடா சட்டத்தின் கீழ் தான், குறிப்பாக பேரறிவாளன், ஜோடிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். இது எப்படி தடாவின் கீழ் வந்தது என்பதே வினோதம். இதெல்லாம் இப்போது இந்தியாவின் ஊழல் குறித்த சர்ச்சைகளை கவனம் திருப்பவே இந்த அப்பாவிகள் குறித்த கருணை மனு நிராகரிப்பு நாடகம்.

  பார்க்கலாம் என்ன நடக்கிறது.

  பதிலளிநீக்கு
 6. ஆத்தா ஜெயலலிதாவே.. உனக்கு ஒரு நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு.. நீ செத்த பின்னாடியும் உன் பேரு தமிழர்கள் மத்தில நிலைச்சு நிக்கணும்னா இவங்க மூணு பேரையும் காப்பாத்திரு..! இல்லைன்னா அவங்க தொங்குற அதே தூக்குல, அன்னிக்கே உன்னோட பெயரும் தூக்குல தொங்கிரும்..என்று உண்மைத்தமிழன் சொன்னது தான் ஞாபகம் வருது!!

  பதிலளிநீக்கு
 7. //விரைந்து நடவடிக்கை எடுங்கள் காலமெல்லாம்
  கடமைப்பட்டு இருப்போம் உங்களுக்கு//
  TRUE!

  பதிலளிநீக்கு
 8. ஜெயலலிதாவின் பெயர் தமிழர்கள் மத்தியில் நிலைத்திருக்க இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்வாரா??

  பதிலளிநீக்கு
 9. இந்திரா அம்மையாரை சோனியா அம்மையாருக்கு பிடிக்காது அது தான் சீக்கியரை பிரதமர் பதவியில் வைத்தார்..
  ஆனால் தமிழரை பழி வாங்குவதற்கு ராஜீவ் மீது வைத்த பாசம் தான் காரணம் என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,அப்படி ஒன்று இருந்தால் நியாயமான விசாரணையை முன்னின்று நடத்தியிருப்பாரே !!!

  பதிலளிநீக்கு
 10. நிச்சயம் அம்மா உதவுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கு காத்திருப்போம் நம்பிக்கையுடன் காத்திரமான பதிவு!

  பதிலளிநீக்கு
 11. //அந்த அம்மா என்ற வார்த்தையின் புனிதத்தையாவது காப்பாற்றுங்கள். உங்கள் ஆட்சியில் நீங்கள் செய்த எத்தனையோ
  விடயங்களை சொல்லி சொல்லி பெருமை பட்டு உள்ளீர்கள்.
  உலகத்திலேயே உயிர்பிச்சை கொடுப்பதைப்போல் உயர்ந்தது
  வேறெதுவும் இல்லை, அவர்களை காப்பாற்றுங்கள் அந்த பெருமை
  காலகாலத்துக்கு உங்கள் புகழ்பாடும்//

  இந்த விடயத்தில் வெளிப்பட்டு விடும் ஜெயலலிதாவின் உண்மை முகம்.ஜெயலலிதா மேடம் மாறிவிட்டாரா இல்லை வழமை மாதிரி மாறிவிட்டதாக நடிக்கின்றா என்று.

  அந்த மூவறுக்கும் இறைவனிடம் பிராத்திப்போம்.

  பதிலளிநீக்கு
 12. மூன்று உயிர்களின் துருப்பு சீட்டே அவர் கையில்தான் உள்ளது. நம்பிக்கை வைக்கிறோம்.அதற்கு மேல் இறைவனே துணை.

  பதிலளிநீக்கு
 13. உணர்வு பூர்வமான கடிதம்

  மூச்சு இழுக்க மூக்கிருந்தும்
  காற்று வாங்க உரிமை இழந்த
  இனத்தில் பிறந்துவிட்டோம்

  பதிலளிநீக்கு
 14. ஆய்ந்து எழுதிய பதிவு நன்று!
  அப்படியே நான எழுதியுள்ள
  கவிதையை படித்துப்பாருங்கள்
  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 15. வேதனை ஐயா வேதனை .
  அது இருக்கட்டும், யோ துசியந்தா நீர் வன்னிக் காட்டில இருந்தா வந்தீர்?...அட சொல்லவே இல்லையே அதே காடு உருத்திரபுரம் உன் நட்பைத் தொடர்ந்தாச்சு.இனி உரிமையுடன் திட்டலாம்.என்னோட தளத்தில இணைஞ்சாச்சா?..
  மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ......மறவாமல்
  நம்ம கடப்பக்கம் வாரும்

  பதிலளிநீக்கு
 16. காத்திரமான பதிவு துஸி,
  தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்,


  உங்கள் பதிவில் உள்ள தர்க்க நியாயங்கள் நிச்சயம் தமிழக அரசின் செவிப்பறையினை எட்ட வேண்டும் என்பது தான் என் அவா.

  பதிலளிநீக்கு
 17. உணர்வுபூர்வமாகவும் தர்க்கரீதியாகவும்
  எழுதப்பட்ட தரமான பதிவு
  நல்லதையே நினைத்திருப்போம்

  பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...