ஞாயிறு, ஜூன் 12, 2011

ஒரு தடவைதான் காதல் வருமா..?

காதல் என்பது  ஒரு தடவைதான் வரும் அது ஒருத்தர் மேல தான் வரும் இது காதலித்துக்கொண்டு இருப்பவர்கள் அடிக்கடி சொல்லிக்கொள்வது. இது உண்மைதானா என்று உற்றுக்கவனித்தால் பதில் என்னவோ வெறும் பூச்சியம் தான். அதுவும் ஆண்கள் விசயத்தில் ஒரு தடவைதான் காதல் வரும் என்ற விடயம் எல்லாம் மொக்கை  காமெடி மேட்டர், குறிப்பாக சொல்ல போனால் ஒரு தடவை மட்டும் காதலித்த ஒரு பெண்ணை மட்டும்  காதலித்த அந்த என் சக ஆண்மகனை நான் இன்னும் என் வாழ்க்கையில் சந்திக்கவே இல்லை. 

பொதுவாகவே ஆண்களுக்கு மீசை அரும்பும் முன்னே காதல் அரும்பி விடுகிறது, ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்களின் காதல் உணர்வு மட்டும் மாறாமலே இருக்குறது ஆனால் காதலிக்கும் பெண்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள், அதற்க்கு அவர்கள் மட்டும் காரணம் இல்லையே அவர்கள் காதலிக்கும் சில பெண்கள் அல்லது  சூழ்நிலை   இவை இரண்டுமே காரணம் ஆகிவிடுகிறது.   காதல்  தோல்விக்காக  உயிரை  மாய்த்துக்கொள்ள பெரும்பாலும் யாருமே தயாராக இருப்பது  இல்லை( காதலுக்காக   உயிரை  விடுமளவுக்கும்  ஒருசிலர்  இருக்கத்தான்  செய்கிறார்கள் ஆனால்  அதுதான்  அவர்களுக்கு  முதல்  காதலா  என்பது  சந்தேகமே )அப்படி அவர்கள் முடிவெடுக்காதர்க்கு பெரும்பாலும் அவர்கள் குடும்பமே காரணமாகிவிடுகிறது,  ஏனெனில் காதலிக்கும் போது எல்லோரும்  உண்மையாகத்தான்  காதலிக்கிறார்கள் ஆனால் எதிர்பாராமல் அங்கே பிரிவு வரும்போது உடைந்து நொருங்கி வாழ்க்கையை வெறுக்கும் அவர்களுக்கு மேலே தொடர்ந்து வாழ்வதற்கு அவர்களை சுற்றி உள்ள குடும்ப உறவுகள் காரணம் ஆகிவிடுகிறது,  உறவுகளுக்காக வாழ தொடன்கின்றவர்கள் நாளடைவில் இன்னொரு காதலில் விழுவதும் பின் அங்கேயும் தோல்வி வருவதும்,   இப்படி அவர்கள்   வாழ்வில்  காதலும்  தோல்வியும் தொடர்கதை ஆகிவிடுவதுதான் நிதர்சனமான உண்மை.

ருதடவை வந்தால்தான் அது காதல்..!  இது நம்மிடையே இருக்கும்
மகா  நடிகர்கள்  சொல்லி கேட்டு இருக்கிறேன். அப்போ நீங்க இப்போ
கல்யாணம் பண்ணிக்க போறது நீங்க முதல் காதலிச்ச பொண்ணையா
என்று கேட்டால் அவர்கள் உதட்டில் தெரியும் நமட்டு சிரிப்பே
அவர்கள் யோக்கியத்தைக் காட்டிகொடுத்து விடும். ஆணோ பெண்ணோ
ஒருதடவைதான் காதல் வரும்   நான் உன்னைமட்டும்தான் காதலிக்குறேன்
போன்ற வசனங்களை அவர்களின் பாட்டனரிடம் ஒரு நம்பகத்தன்மையை
ஏற்படுத்தவே பயன் படுத்துகிறார்கள்.  அவர்கள் சொல்லும் அந்த வசனங்களின்  உண்மைத் தன்மை என்ன என்பது அவர்களுக்கு நன்றகவே
தெரியும், 

பிரான்சில் எனக்கொரு நண்பன் இருக்கிறான் நட்பில் கூட இவ்வளவு பிரியத்தை வைக்க முடியுமா என என்னை நெகிழ வைப்பவன். அவனைப்போலவே அவன் பேசும் தமிழும் அழகாக இருக்கும்,   பிரான்சில் பிறந்து வளந்ததாளவோ என்னவோ அவன் தமிழுக்கும் நமிதா தமிழுக்கும் பெரிசாக வித்தியாசம் இல்லை.  ஒரு நாள் வந்து ஒரு பெண்ணை அறிமுகப்படுத்துவான் மச்சி இதுதாண்டா நான் கட்டிக்க போற பொண்ணு என்று உடனே நானும் ஹாய் சிஸ்டர் (வேறுவழி, அவ்வ..)  என்று என்னை
அறிமுகப்படுத்தி வைப்பேன், சில மாதங்களின் பின் இன்னொரு பொண்ணுடன் வந்து இவ என் உயிரடா இவ இல்லாட்டி செத்துடுவண்டா எண்டு உருகுவான் நானும் வரும் கடுப்பை எல்லாம் மனசுக்க அடக்கி வைச்சுக்கொண்டு ஹாய் சிஸ்டர் எண்டு பழைய  பல்லவியை பாடி என்னை அறிமுகப்படுத்தி வைப்பேன் ஆனால் என்ன பயன் இன்னும் சில மாதங்களின் பின் இன்னொரு பொண்ணுடன் வந்து நிப்பான்   அதே அசடு வழியும் புன்னகையுடன்.  மச்சான் இதுவரை மொத்தம் எத்தனை காதலடா உன் வாழ்கையில் என்று கேட்டால் இரண்டு கைவிரல்களையும் எண்ணி முடித்து கால்விரல்களுக்கு சென்றுவிடுவான்.

ன் நண்பனின் காதல்கதைகள் கொஞ்சம் முகச்சுழிப்பை ஏற்படுத்தினாலும்
இன்றைய  அவசரகால வாழ்க்கையில் பெரும்பாலரின் காதல்களும் கிட்டத்தட்ட
இதே நிலையில்தான் இருக்கிறது.   என் வாழ்க்கையில் கூட பல காதல்கள்
கடந்து வந்து இருக்குறேன் இதை எப்போதும் யாரிடமும் நான் மறைத்ததும் இல்லை இதை சொல்வதற்காக வருத்தப்பட்டதும் இல்லை.
உண்மைகள் எப்பவும் கசப்பாகத்தான் இருக்கும் ஆனால் அந்த உண்மைகளை பேசி உண்மையாக இருக்கும் போது கிடைக்கும் மன நிறைவு எத்தகையது என்று அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.
ஒரு தடவைதான் காதலிக்க வேண்டும் அந்த முதல் காதலியைத்தான்
திருமணம் செய்யவேண்டும் என்றொரு நிலை வந்தால் இங்கே யாருமே   கல்யாணம் கட்ட முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. மொத்தத்தில் ஒரு தடவைதான் காதல் வரும் என்பது நம் தமிழ்  சினிமாவின்  நாயகன் நாயகிக்கு  மட்டுமே சாத்தியம்.

43 கருத்துகள்:

  1. காதல் என்பது ஒரு தடவைதான் வரும் அது ஒருத்தர் மேல தான் வரும் இது காதலித்துக்கொண்டு இருப்பவர்கள் அடிக்கடி சொல்லிக்கொள்வது. இது உண்மைதானா என்று உற்றுக்கவனித்தால் பதில் என்னவோ வெறும் பூச்சியம் தான்.

    இது உண்மைதான்! நானே 16 பெட்டையள லவ் பண்ணியிருக்கிறன். ஒவ்வொரு முறையும் லவ்வும் போதும் புதுசு புதுசாவே இருந்திச்சு!

    ஆனால் அந்த 16 ஒண்டுகூட என்னை லவ்வவில்லை!

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா9:02 PM, ஜூன் 12, 2011

    ///காதல் என்பது ஒரு தடவைதான் வரும் அது ஒருத்தர் மேல தான் வரும் இது காதலித்துக்கொண்டு இருப்பவர்கள் அடிக்கடி சொல்லிக்கொள்வது. இது உண்மைதானா என்று உற்றுக்கவனித்தால் பதில் என்னவோ வெறும் பூச்சியம் தான்/// உண்மை தான் பாஸ், அத்தோடு உந்த காதல் புனிதமானது காதல் தெய்வீகமானது எண்டு சொல்வதெல்லாம் கவிதைகளுக்கு மட்டும் தான் அழகு ....

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா9:03 PM, ஜூன் 12, 2011

    ///ஒரு நாள் வந்து ஒரு பெண்ணை அறிமுகப்படுத்துவான் மச்சி இதுதாண்டா நான் கட்டிக்க போற பொண்ணு என்று உடனே நானும் ஹாய் சிஸ்டர் (வேறுவழி, அவ்வ..) என்று என்னை
    அறிமுகப்படுத்தி வைப்பேன், சில மாதங்களின் பின் இன்னொரு பொண்ணுடன் வந்து இவ என் உயிரடா இவ இல்லாட்டி செத்துடுவண்டா எண்டு உருகுவான்// பொண்ணுங்க தமிழ் பொண்ணுங்களா இல்ல பிரஞ்சுகாரிகளா ...)))

    பதிலளிநீக்கு
  4. ""ஒரு நாள் வந்து ஒரு பெண்ணை அறிமுகப்படுத்துவான் மச்சி இதுதாண்டா நான் கட்டிக்க போற பொண்ணு என்று உடனே நானும் ஹாய் சிஸ்டர் (வேறுவழி, அவ்வ..) என்று என்னை
    அறிமுகப்படுத்தி வைப்பேன், சில மாதங்களின் பின் இன்னொரு பொண்ணுடன் வந்து இவ என் உயிரடா இவ இல்லாட்டி செத்துடுவண்டா எண்டு உருகுவான் நானும் வரும் கடுப்பை எல்லாம் மனசுக்க அடக்கி வைச்சுக்கொண்டு ஹாய் சிஸ்டர் எண்டு பழைய பல்லவியை பாடி என்னை அறிமுகப்படுத்தி வைப்பேன்""

    கொஞ்சம் ஜீரணிக்க கஷ்டமான விஷயம்தான், ஆனாலும் உங்கள் நண்பர் பெரிய மச்சக்காரர் தான்
    நல்ல சுவையான பதிவு பாஸ்

    பதிலளிநீக்கு
  5. காதல் பற்றிய அருமையான அலசலைத் தந்திருக்கிறீங்க சகோ,

    ஒரு தடவை காதல் வரும் என்பது பச்சப் பொய்,
    நானும் ஓட்ட வடை மாதிரி, நிறையப் பேரை லவ் பண்ணியிருக்கிறேன்.

    என் நேசரி டீச்சர் தொடங்கி....கம்பஸிலை கூடப் படிச்ச பொட்டை வரை ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு.

    அப்புறமா, காதல் ஒரு தடவை மாத்திரம் வரும் என்பது காதல் காதலியை நம்பப் பண்ணப் போடுற ஒரு உல்டா வித்தை.

    ஹி....ஹி...

    காதலிக்குத் தெரியாமல் காதலனும்,
    காதலனுக்குத் தெரியாமல் காதலனும்
    அட...சீ...இவனைக் காதலித்திருக்கலாமே எனும் நோக்கோடு மனசிற்குள் புதிதாக முளைக்கும் காதலால் பீல் பண்ணிக் கொண்டிருப்பாங்க.

    பதிலளிநீக்கு
  6. நல்ல அலசல் சகோ

    காதல் என்பது ஒரு தடவைதான் வரும் அது ஒருத்தர் மேல தான் வரும் இது காதலித்துக்கொண்டு இருப்பவர்கள் அடிக்கடி சொல்லிக்கொள்வது. இது உண்மைதானா என்று உற்றுக்கவனித்தால் பதில் என்னவோ வெறும் பூச்சியம் தான்
    . நிஜமாவே இது உல்ட பொய் தான் சகோ .எல்லோருடைய வாழ்க்கையிலையும் மிகப்பெரிய லிஸ்ட் இருக்கும் ஒவ்வொருத்திய கவுக்கிரத்துக்கும் காதலிக்கவும் சொல்லுற வார்த்தைகள் இவை .

    பதிலளிநீக்கு
  7. நம்ம ரஜீவன் ரொம்ப பீல் பண்ணியிருக்காரே?

    பதிலளிநீக்கு
  8. எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  9. ஹிஹி நல்ல தலைப்பு..
    ஆக்சுவலி,காதல் பல முறை வரலாம்..இது என் வாழ்க்கையில் க்கண்ட உண்மை...
    ஆனால் ஒரு காதலை வாழ்க்கையாக்கி,மற்றைய காதல்களை கெட்டித்தனமாக ஒதுக்கி விடுபவனே வாழ்வில் ஜொலிப்பான்!

    பதிலளிநீக்கு
  10. ஓட்டவடை சரியான பாவம் ஹிஹி

    பதிலளிநீக்கு
  11. உண்மை தான். இந்த 'காதல்' என்கின்ற வைரஸ் எத்தனை முறை தொற்றும் என்பதற்கு வரையறை இல்லை. ஆனால் பாதிப்பை ஏற்படுத்துவது முதலில் தொற்றியது மட்டுமே. அதற்கு பிறகு நோயெதிர்ப்பு சக்தி கூடிவிடுவதால் அடுத்து வருவதெல்லாம் பெரிதாக தாக்குவதில்லை.

    பதிலளிநீக்கு
  12. தாங்கள் சொன்னது உண்மை தான். ஆனால் எங்கோ, அரிதாக முதல் காதலே திருமணத்தில் முடிவதாகவும் உள்ளது.

    பதிலளிநீக்கு
  13. ///

    பிளாகர் ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...

    காதல் என்பது ஒரு தடவைதான் வரும் அது ஒருத்தர் மேல தான் வரும் இது காதலித்துக்கொண்டு இருப்பவர்கள் அடிக்கடி சொல்லிக்கொள்வது. இது உண்மைதானா என்று உற்றுக்கவனித்தால் பதில் என்னவோ வெறும் பூச்சியம் தான்.

    இது உண்மைதான்! நானே 16 பெட்டையள லவ் பண்ணியிருக்கிறன். ஒவ்வொரு முறையும் லவ்வும் போதும் புதுசு புதுசாவே இருந்திச்சு!

    ஆனால் அந்த 16 ஒண்டுகூட என்னை லவ்வவில்லை!

    ///

    அதுல ஒன்னாவது லவ் பன்னிருந்தாதான் ஆச்சர்யம்

    பதிலளிநீக்கு
  14. //ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…
    காதல் என்பது ஒரு தடவைதான் வரும் அது ஒருத்தர் மேல தான் வரும் இது காதலித்துக்கொண்டு இருப்பவர்கள் அடிக்கடி சொல்லிக்கொள்வது. இது உண்மைதானா என்று உற்றுக்கவனித்தால் பதில் என்னவோ வெறும் பூச்சியம் தான்.

    இது உண்மைதான்! நானே 16 பெட்டையள லவ் பண்ணியிருக்கிறன். ஒவ்வொரு முறையும் லவ்வும் போதும் புதுசு புதுசாவே இருந்திச்சு!

    ஆனால் அந்த 16 ஒண்டுகூட என்னை லவ்வவில்லை!//

    ம்க்கும்..... இவ்ளோ அழகான பையன் உங்களுக்கே 16 ஒண்டு கூட சிக்கவில்லை எண்டா, சுமார் பையன்கள் எங்க நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பாருங்க பாஸ் lol

    பதிலளிநீக்கு
  15. //கந்தசாமி. கூறியது...
    ///காதல் என்பது ஒரு தடவைதான் வரும் அது ஒருத்தர் மேல தான் வரும் இது காதலித்துக்கொண்டு இருப்பவர்கள் அடிக்கடி சொல்லிக்கொள்வது. இது உண்மைதானா என்று உற்றுக்கவனித்தால் பதில் என்னவோ வெறும் பூச்சியம் தான்/// உண்மை தான் பாஸ், அத்தோடு உந்த காதல் புனிதமானது காதல் தெய்வீகமானது எண்டு சொல்வதெல்லாம் கவிதைகளுக்கு மட்டும் தான் அழகு ....//

    அப்போ காதலும் கவிதையும் ஒன்றுன்னு சொல்ல வாறிங்க இல்ல பாஸ் ( அப்பாடா நாம தப்பிட்டோம்)

    பதிலளிநீக்கு
  16. //கந்தசாமி. கூறியது...
    ///ஒரு நாள் வந்து ஒரு பெண்ணை அறிமுகப்படுத்துவான் மச்சி இதுதாண்டா நான் கட்டிக்க போற பொண்ணு என்று உடனே நானும் ஹாய் சிஸ்டர் (வேறுவழி, அவ்வ..) என்று என்னை
    அறிமுகப்படுத்தி வைப்பேன், சில மாதங்களின் பின் இன்னொரு பொண்ணுடன் வந்து இவ என் உயிரடா இவ இல்லாட்டி செத்துடுவண்டா எண்டு உருகுவான்// பொண்ணுங்க தமிழ் பொண்ணுங்களா இல்ல பிரஞ்சுகாரிகளா ...)))//

    அத்தனையும் தமிழ் (இலங்கை-இந்தியா) பொண்ணுங்க என்பதுதான் வேதனையான விஷயம் பாஸ் :(

    பதிலளிநீக்கு
  17. // A.R.ராஜகோபாலன் கூறியது...
    ""ஒரு நாள் வந்து ஒரு பெண்ணை அறிமுகப்படுத்துவான் மச்சி இதுதாண்டா நான் கட்டிக்க போற பொண்ணு என்று உடனே நானும் ஹாய் சிஸ்டர் (வேறுவழி, அவ்வ..) என்று என்னை
    அறிமுகப்படுத்தி வைப்பேன், சில மாதங்களின் பின் இன்னொரு பொண்ணுடன் வந்து இவ என் உயிரடா இவ இல்லாட்டி செத்துடுவண்டா எண்டு உருகுவான் நானும் வரும் கடுப்பை எல்லாம் மனசுக்க அடக்கி வைச்சுக்கொண்டு ஹாய் சிஸ்டர் எண்டு பழைய பல்லவியை பாடி என்னை அறிமுகப்படுத்தி வைப்பேன்""

    கொஞ்சம் ஜீரணிக்க கஷ்டமான விஷயம்தான், ஆனாலும் உங்கள் நண்பர் பெரிய மச்சக்காரர் தான்
    நல்ல சுவையான பதிவு பாஸ்//

    நன்றி பாஸ்,

    உண்மைதான் அவன் 'இபோதைக்கு" மச்சக்கார பையன் பாஸ்

    பதிலளிநீக்கு
  18. // நிரூபன் கூறியது...
    காதல் பற்றிய அருமையான அலசலைத் தந்திருக்கிறீங்க சகோ,

    ஒரு தடவை காதல் வரும் என்பது பச்சப் பொய்,
    நானும் ஓட்ட வடை மாதிரி, நிறையப் பேரை லவ் பண்ணியிருக்கிறேன்.

    என் நேசரி டீச்சர் தொடங்கி....கம்பஸிலை கூடப் படிச்ச பொட்டை வரை ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு.

    அப்புறமா, காதல் ஒரு தடவை மாத்திரம் வரும் என்பது காதல் காதலியை நம்பப் பண்ணப் போடுற ஒரு உல்டா வித்தை.

    ஹி....ஹி...

    காதலிக்குத் தெரியாமல் காதலனும்,
    காதலனுக்குத் தெரியாமல் காதலனும்
    அட...சீ...இவனைக் காதலித்திருக்கலாமே எனும் நோக்கோடு மனசிற்குள் புதிதாக முளைக்கும் காதலால் பீல் பண்ணிக் கொண்டிருப்பாங்க
    //

    தேங்க்ஸ் பாஸ்,
    ரியலி பாஸ், எது எப்புடியோ எல்லோருக்கும் நிறைய காதல்கள் வருகிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

    பதிலளிநீக்கு
  19. //Mahan.Thamesh கூறியது...
    நல்ல அலசல் சகோ

    காதல் என்பது ஒரு தடவைதான் வரும் அது ஒருத்தர் மேல தான் வரும் இது காதலித்துக்கொண்டு இருப்பவர்கள் அடிக்கடி சொல்லிக்கொள்வது. இது உண்மைதானா என்று உற்றுக்கவனித்தால் பதில் என்னவோ வெறும் பூச்சியம் தான்
    . நிஜமாவே இது உல்ட பொய் தான் சகோ .எல்லோருடைய வாழ்க்கையிலையும் மிகப்பெரிய லிஸ்ட் இருக்கும் ஒவ்வொருத்திய கவுக்கிரத்துக்கும் காதலிக்கவும் சொல்லுற வார்த்தைகள் இவை .//

    நன்றி பாஸ்,

    உன்னை மட்டும்தான் காதலித்தேன் என்று இரு பாலரும் சொல்வது போய்யுன்னு இரு பாலருக்கும் தெரியும் தெரிந்து இருந்தும் அவர்கள் அதை உண்மை போல் கேட்டு நடிப்பதுதான் உலக மகா நடிப்பு சகோ

    பதிலளிநீக்கு
  20. //சி.பி.செந்தில்குமார் கூறியது...
    அவதானிப்பு அழகு//

    நச்சுன்னு ஒரு அழகான கவிதை போல கமெண்ட்ஸ்,

    தேங்க்ஸ் பாஸ்

    பதிலளிநீக்கு
  21. //!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
    நம்ம ரஜீவன் ரொம்ப பீல் பண்ணியிருக்காரே?//

    வருகைக்கு தேங்க்ஸ் பாஸ்,
    யார் பாஸ் ரஜீவன்..??

    பதிலளிநீக்கு
  22. //உலக சினிமா ரசிகன் கூறியது...
    எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்//

    வருகைக்கு நன்றி,

    பதிலளிநீக்கு
  23. மைந்தன் சிவா கூறியது...
    //ஹிஹி நல்ல தலைப்பு..
    ஆக்சுவலி,காதல் பல முறை வரலாம்..இது என் வாழ்க்கையில் க்கண்ட உண்மை...
    ஆனால் ஒரு காதலை வாழ்க்கையாக்கி,மற்றைய காதல்களை கெட்டித்தனமாக ஒதுக்கி விடுபவனே வாழ்வில் ஜொலிப்பான்!//

    உங்கள் தத்துவம் வெரி சூப்பர் பாஸ்,
    தேங்க்ஸ் பாஸ்

    பதிலளிநீக்கு
  24. //மைந்தன் சிவா கூறியது...
    ஓட்டவடை சரியான பாவம் ஹிஹி//

    ஓட்டவடைக்கு முந்திய காதல்கள்தான் எல்லாம் தோல்வி,
    இப்போ அந்தாள் ப்ரஞ்சுகாரியோட சுத்துறது பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்குத்தான் தெரியும்,

    இதுல போய் நீங்க வேற...

    பதிலளிநீக்கு
  25. //JAWID RAIZ (ஜாவிட் ரயிஸ்) கூறியது...
    உண்மை தான். இந்த 'காதல்' என்கின்ற வைரஸ் எத்தனை முறை தொற்றும் என்பதற்கு வரையறை இல்லை. ஆனால் பாதிப்பை ஏற்படுத்துவது முதலில் தொற்றியது மட்டுமே. அதற்கு பிறகு நோயெதிர்ப்பு சக்தி கூடிவிடுவதால் அடுத்து வருவதெல்லாம் பெரிதாக தாக்குவதில்லை.//

    முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ,

    நீங்கள் சொல்லியதுதான் நிதர்சன உண்மை பாஸ்

    பதிலளிநீக்கு
  26. //தமிழ் உதயம் கூறியது...
    தாங்கள் சொன்னது உண்மை தான். ஆனால் எங்கோ, அரிதாக முதல் காதலே திருமணத்தில் முடிவதாகவும் உள்ளது.//

    நன்றி பாஸ்,

    உண்மைதான் பட் அவர்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்று நினைக்குறேன்.

    பதிலளிநீக்கு
  27. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
    ///

    பிளாகர் ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...

    ஆனால் அந்த 16 ஒண்டுகூட என்னை லவ்வவில்லை!


    அதுல ஒன்னாவது லவ் பன்னிருந்தாதான் ஆச்சர்யம்///

    அவ்... பாவம் நம் பிரான்ஸ் காதல் மன்னன் ஓட்டவடை.

    பதிலளிநீக்கு
  28. நாம் எல்லோருமே காதல், காதல் என்று பேசுகிறோம், ஆனால் எல்லோரும் காதல் என்றால் என்ன என்று ஒரே மாதிரியாக புரிந்து கொண்டு பேசுகிறோமா என்று தெரியவில்லை. அதாவது, காதல் என்றால் என்ன என்று நம்மை கேட்டால், எல்லோரும் [கிட்டத் தட்ட] இதுதான் என்று ஒரே மாதிரியான பதிலைத் தருவோமா? இல்லை என்றே தோன்றுகிறது. நீங்கள் உங்கள் நண்பர் பற்றி சொல்கிறீர்கள், அவர் செய்தது இதுதான்: ஒரு பெண்ணைப் பார்க்கிறார், ஈர்க்கப் படுகிறார் [பாலியல் ரீதியாக], கல்யாணம் செய்து கொள்ளலாமா என நினைக்கிறார், ஆனால் அதற்க்கு முன்னரே இன்னொரு பெண்ணைப் பார்க்கிறார், தற்போது, முன்னவளை விட இவர் பெட்டராகத் தோன்றுகிறது[பாலியல் ரீதியாக], அவளை விட்டு விட்டு இவளுக்குத் தாவுகிறார், அப்புறம் வேறு ஒருத்தி....இது போய்க் கொண்டே இருக்கிறது. இதைதான் காதல் என்கிறீர்களா? முதலில் காதல் என்றால் என்ன என்று சொல்லுங்கள், அதுக்கப்புறம் யோசிப்போம் அது ஒரு முறை தான் வருமா, இல்லை பலமுறை வருமா என்று.

    பதிலளிநீக்கு
  29. //Jayadev Das சொன்னது…
    நாம் எல்லோருமே காதல், காதல் என்று பேசுகிறோம், ஆனால் எல்லோரும் காதல் என்றால் என்ன என்று ஒரே மாதிரியாக புரிந்து கொண்டு பேசுகிறோமா என்று தெரியவில்லை. அதாவது, காதல் என்றால் என்ன என்று நம்மை கேட்டால், எல்லோரும் [கிட்டத் தட்ட] இதுதான் என்று ஒரே மாதிரியான பதிலைத் தருவோமா? இல்லை என்றே தோன்றுகிறது. நீங்கள் உங்கள் நண்பர் பற்றி சொல்கிறீர்கள், அவர் செய்தது இதுதான்: ஒரு பெண்ணைப் பார்க்கிறார், ஈர்க்கப் படுகிறார் [பாலியல் ரீதியாக], கல்யாணம் செய்து கொள்ளலாமா என நினைக்கிறார், ஆனால் அதற்க்கு முன்னரே இன்னொரு பெண்ணைப் பார்க்கிறார், தற்போது, முன்னவளை விட இவர் பெட்டராகத் தோன்றுகிறது[பாலியல் ரீதியாக], அவளை விட்டு விட்டு இவளுக்குத் தாவுகிறார், அப்புறம் வேறு ஒருத்தி....இது போய்க் கொண்டே இருக்கிறது. இதைதான் காதல் என்கிறீர்களா? முதலில் காதல் என்றால் என்ன என்று சொல்லுங்கள், அதுக்கப்புறம் யோசிப்போம் அது ஒரு முறை தான் வருமா, இல்லை பலமுறை வருமா என்று.
    //

    இதற்க்கு என்னிடமும் பதில் இல்லை பாஸ்,

    பதிலளிநீக்கு
  30. //ஒரு பெண்ணைப் பார்க்கிறார், ஈர்க்கப் படுகிறார் [பாலியல் ரீதியாக], கல்யாணம் செய்து கொள்ளலாமா என நினைக்கிறார், ஆனால் அதற்க்கு முன்னரே இன்னொரு பெண்ணைப் பார்க்கிறார், தற்போது, முன்னவளை விட இவர் பெட்டராகத் தோன்றுகிறது[பாலியல் ரீதியாக], அவளை விட்டு விட்டு இவளுக்குத் தாவுகிறார், அப்புறம் வேறு ஒருத்தி....இது போய்க் கொண்டே இருக்கிறது//

    யாராலும் மறுக்க முடியாத உண்மை வார்த்தைகள் பாஸ், பட் இதுவரைகாலமும் நாம் இதைத்தானே காதல் என்கிறோம்

    பதிலளிநீக்கு
  31. \\பட் இதுவரைகாலமும் நாம் இதைத்தானே காதல் என்கிறோம்.\\ இதை காதல் என்று சொன்னால், அது கணக்கே இல்லாமல் எத்தனை தடவை வேண்டுமானாலும் வரும். பார்க்கிற பெண்களோடு எல்லாம் [அவள் எப்படி இருந்தாலும் சரி, எனக்கு புது டேஸ்ட் வேணும், அவளும் வேணும்] உடல் உறவு வைத்துக் கொள்ளத் தோன்றும், அப்படிப் பார்த்தால் எத்தனை பெண்கள் கண்ணில் படுகிறார்களோ அத்தனை தடவையும் காதல் வரும். ஹா..ஹா.ஹா...

    பதிலளிநீக்கு
  32. பதிவர்களுக்கு இன்று எனது வலைத்தளத்தில் ஒரு விருந்து வைத்துள்ளேன் சென்று அனுபவியுங்கள்
    வாழ்த்துக்கள்.........

    பதிலளிநீக்கு
  33. //அம்பாளடியாள் கூறியது...
    பதிவர்களுக்கு இன்று எனது வலைத்தளத்தில் ஒரு விருந்து வைத்துள்ளேன் சென்று அனுபவியுங்கள்
    வாழ்த்துக்கள்.........
    ///

    ஹாய்,
    ரெம்ப தேங்க்ஸ்..
    அடிக்கடி இங்கால பக்கமும் வந்து போங்க, உங்களை போன்றவர்களின் வருகை மிகுதியான சந்தோஷத்தை கொடுக்குது,

    பதிலளிநீக்கு
  34. அடடா எப்ப போட்டிங்க இந்த பதிவு... என் டாஸ்போர்ட்ல அப்டேட் ஆகல்லயே....... இருங்க படிச்சிட்டு வாறன்

    பதிலளிநீக்கு
  35. மன்னிக்கவும் துஷ்யந்தன். உங்களுடைய கருத்துக்களுடன் என்னால் ஒத்துப்போக முடியவில்லை. ஒருதடவை வந்தால் தான் அதற்கு பெயர் காதல். ஆனால் இன்று 90% ஆனவர்கள் அப்படியில்லை. அதற்காக காதலையே பொய்யாக்கிவிட்டீர்களே?. இவ்வாறு முறைகெட்டு காதலிப்பவர்களை சாடுங்கள். காதலை சாடாதீர்கள் நண்பா. ஏனெனில் உங்கள் கருத்து உண்மையாக காதலிப்பவர்கள் மனதில் காயத்தை ஏற்படுத்துகிறது.

    உங்களுடைய நண்பன் செய்ததிற்கு பெயர் காதலல்ல. அதற்கு எங்களூரில் வேறு பெயர் சொல்வார்கள். அவர் செய்ததை காதல் என்று நீங்கள் கருதினால் அது உங்கள் தவறு. காதலின் தவறு அல்ல.

    ஒருவர் பல தடவை காதல் செய்கிறார் என்றால் அவருடைய அடிப்படைகளை பாருங்கள். ஏனென்றால் உண்மையாக காதலிப்பவன் எவனும் வேறோர் காதலை நினைத்துக்கூட பார்க்கமாட்டான், பார்க்கவும் அவனால் முடியாது

    என் மீது நீங்கள் கோபம் கொள்ளலாம். நான் இப்படி கூறிவிட்டேன் என்பதற்காகவோ, அல்லது உங்கள் நண்பரை குறைவாக பேசிவிட்டேன் என்பதாலோ உங்கள் கோபம் என் மீது விழலாம். ஆனால் நான் காதலிக்கிறேன்.. உண்மையாக காதலிக்கிறேன்.. 11ஆம் தரம் படிக்கும் காலத்திலிருந்து காதலிக்கிறேன். இன்றும் என் காதலி எங்கு இருக்கிறாள், எப்படி இருக்கிறாள் என்று தெரியாமல் காதலிக்கிறேன். அப்படியானால் என் காதல் பொய்யானதா? பதில் சொல்லுங்கள்...

    காதலித்த பெண்ணை மறக்க முடியாமல் இன்னமும் வேறொரு பெண்ணை மணக்க முடியாமலும் பிரம்மச்சாரிகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் எத்தனையோ பேரை என் வாழ்வில் சந்தித்திருக்கிறேன்.. அப்படியானால் அவர்கள் காதல் எல்லாம் பொய்யானதா?

    பதிலளிநீக்கு
  36. //ஒருதடவை வந்தால்தான் அது காதல்..! இது நம்மிடையே இருக்கும்
    மகா நடிகர்கள் சொல்லி கேட்டு இருக்கிறேன். அப்போ நீங்க இப்போ
    கல்யாணம் பண்ணிக்க போறது நீங்க முதல் காதலிச்ச பொண்ணையா
    என்று கேட்டால் அவர்கள் உதட்டில் தெரியும் நமட்டு சிரிப்பே
    அவர்கள் யோக்கியத்தைக் காட்டிகொடுத்து விடும்.///

    எல்லோரும் அப்படியல்ல நண்பா

    பதிலளிநீக்கு
  37. நான் கூறியவற்றில் ஏதாவது தவறு இருந்தால் மன்னித்து விடுங்கள் துஷ்யந்தன்

    பதிலளிநீக்கு
  38. //மதுரன் சொன்னது…
    அடடா எப்ப போட்டிங்க இந்த பதிவு... என் டாஸ்போர்ட்ல அப்டேட் ஆகல்லயே....... இருங்க படிச்சிட்டு வாறன் //

    இப்பவாச்சு வந்திங்களே அதுவரைக்கும் ஹப்பி பாஸ் lolol,

    பதிலளிநீக்கு
  39. ////மதுரன் கூறியது...
    மன்னிக்கவும் துஷ்யந்தன். உங்களுடைய கருத்துக்களுடன் என்னால் ஒத்துப்போக முடியவில்லை. ஒருதடவை வந்தால் தான் அதற்கு பெயர் காதல். ஆனால் இன்று 90% ஆனவர்கள் அப்படியில்லை. அதற்காக காதலையே பொய்யாக்கிவிட்டீர்களே?. இவ்வாறு முறைகெட்டு காதலிப்பவர்களை சாடுங்கள். காதலை சாடாதீர்கள் நண்பா. ஏனெனில் உங்கள் கருத்து உண்மையாக காதலிப்பவர்கள் மனதில் காயத்தை ஏற்படுத்துகிறது.

    உங்களுடைய நண்பன் செய்ததிற்கு பெயர் காதலல்ல. அதற்கு எங்களூரில் வேறு பெயர் சொல்வார்கள். அவர் செய்ததை காதல் என்று நீங்கள் கருதினால் அது உங்கள் தவறு. காதலின் தவறு அல்ல.

    ஒருவர் பல தடவை காதல் செய்கிறார் என்றால் அவருடைய அடிப்படைகளை பாருங்கள். ஏனென்றால் உண்மையாக காதலிப்பவன் எவனும் வேறோர் காதலை நினைத்துக்கூட பார்க்கமாட்டான், பார்க்கவும் அவனால் முடியாது

    என் மீது நீங்கள் கோபம் கொள்ளலாம். நான் இப்படி கூறிவிட்டேன் என்பதற்காகவோ, அல்லது உங்கள் நண்பரை குறைவாக பேசிவிட்டேன் என்பதாலோ உங்கள் கோபம் என் மீது விழலாம். ஆனால் நான் காதலிக்கிறேன்.. உண்மையாக காதலிக்கிறேன்.. 11ஆம் தரம் படிக்கும் காலத்திலிருந்து காதலிக்கிறேன். இன்றும் என் காதலி எங்கு இருக்கிறாள், எப்படி இருக்கிறாள் என்று தெரியாமல் காதலிக்கிறேன். அப்படியானால் என் காதல் பொய்யானதா? பதில் சொல்லுங்கள்...

    காதலித்த பெண்ணை மறக்க முடியாமல் இன்னமும் வேறொரு பெண்ணை மணக்க முடியாமலும் பிரம்மச்சாரிகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் எத்தனையோ பேரை என் வாழ்வில் சந்தித்திருக்கிறேன்.. அப்படியானால் அவர்கள் காதல் எல்லாம் பொய்யானதா? ////

    நண்பா உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ள தக்கதே,
    ஆனாலும் பெரும்பாலானவர்களின் காதல் இத்தகையதே என்பது வருத்தத்துக்குரிய உண்மை நண்பா,
    இருந்தாலும் ஒரு சில உண்மைக்காதல்கள் இருப்பது உண்மைதான் அதை என் பதிவில் அழுத்தமாக குறிப்பிட்டு இருக்கலாம், தவறுக்கு மன்னிக்கவும்,
    இதுபோல் இனி ஒருமுறை வராமல் இருக்க உத்தரவாதம் தருகிறேன்,

    பதிலளிநீக்கு
  40. //11ஆம் தரம் படிக்கும் காலத்திலிருந்து காதலிக்கிறேன். இன்றும் என் காதலி எங்கு இருக்கிறாள், எப்படி இருக்கிறாள் என்று தெரியாமல் காதலிக்கிறேன். அப்படியானால் என் காதல் பொய்யானதா? பதில் சொல்லுங்கள்...//

    நண்பா உங்கள் காதல் உன்னதமானது அதை யாராலும் மறுக்க முடியாது, உங்களைப்போன்றவர்களின் காதலால்தான் இந்த பூமியில் இன்னும் காதலுக்கு மதிப்பும் மரியாதும் கிடைக்குறது. உங்களைப்போன்ற ஒருவர் கிடைக்க அந்த பொண்ணுக்கு கொடுத்து வைக்கவில்லை என்று நினைக்குறேன்,

    பதிலளிநீக்கு
  41. //மதுரன் கூறியது...
    நான் கூறியவற்றில் ஏதாவது தவறு இருந்தால் மன்னித்து விடுங்கள் துஷ்யந்தன்
    //

    மன்னிப்பு கேட்க்க வேண்டியது நான் நண்பா நீங்கள் அல்ல

    பதிலளிநீக்கு
  42. Arumaiyana valaithalam anbare...Vazhga nin pozhuthupokku sevai.

    பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...