புதன், ஜூலை 06, 2011

என் மனதை பாதித்த பத்து பெண்கள்...

ப்போதுமே பெண் தேவதைகளால் மட்டும் ஆசிர்வதிக்கப்பட்டவன்
நான். இதுவரைகால என் வாழ்க்கையில் அதிகமாக பெண்களால்தான்
நேசிக்கப்பட்டுள்ளேன் பாதுகாக்கப்பட்டுள்ளேன்,  அதனால் எனக்கு எப்போதுமே பெண்கள் மேல் தனி மரியாதையுண்டு நாங்கள் யாரை அதிகம் நேசிக்கிறோமோ அவர்களால்தான் அதிக காயமும் படுவோம் அந்தவகையில் என்னை பல சமயங்களில் காயப்படுத்திய பெருமையும் அதிகமாக பெண்களைத்தான் சேரும். என் மனதை பாதித்த பெண்கள் பலபேர் இருந்தாலும்,  அதிகமாய் என் மனதை பாதித்த பத்து  பெண்கள் இவர்கள்..

சூரியகலா (பள்ளி ஆசிரியர்)
சொந்த இடமான நெடுங்கேணியில் இருந்து அப்பாவின் வேலை மாற்றத்தால் வவுனியா வந்து புது பாடசாலையில் சேர்ந்தபோது எனது வகுப்பின் ஆசிரியராக இருந்தவர்,  அன்றில் இருந்து நான் ப்ராண்ட்ஸ் வரும்வரை என் வகுப்பாசிரியராகவே தொடர்ந்து வழி நடத்தியவர். அழகானவர்,  சாந்தமான முகம், அமைதியானவர் அமைதியை விரும்புகிறவரும் எங்கள் தமிழ் ஆசிரியரும் கூட,  அவர் பாடம் நடத்தினால் தெளிந்த நீரோடை மெதுவாக ஓடுவதைப்போல அவ்வளவு அமைதியாக அழகாக இருக்கும். நான் தமிழை அதிகம் நேசித்தாலேயோ என்னவோ அவரையும் அதிகமாகவே நேசித்தேன்.  எனக்கு அவரை
பிடிக்கும் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லைத்தான்  ஆனால் அவருக்கு என்னைத்தான் பிடிக்கும் என்பது ஆச்சரியம் ப்ளஸ் பெருமை எனக்கு. வகுப்பிலும் மற்ற பாடங்களிலும் நான்தான் முதன்மையானவன் என்று அடித்து சொல்லமுடியாவிட்டாலும் அவர் கற்பித்த தமிழ் பாடத்தில் எப்போதுமே நான்தான் முதல் மாணவன்.  ஒரு வகுப்பு ஆசிரியர் என்ற வகையில் எங்கள் வகுப்பில் கிடைக்கும் அத்தனை சலுகைகளையும் எனக்கே வழங்கி என்னை என் சக மாணவர்களால் பொறமையாய் பார்க்க வைத்தவர்.  அவர் வகுப்பில் இருக்கும் சமயங்களில் அதிகம் உச்சரிப்பது என் பெயரைத்தான்,  வகுப்பில் அவர் படிப்பித்துகொண்டிருக்கும் போது திடீரென " துஷியந்தன் மிச்சத்த நீ விளங்கப்படுத்து.."  என்று சொல்லி என்னை தன் இடத்தில் வைத்து அழகுபாப்பவர் அதை தன் சக ஆசிரியர்களிடமும் சொல்லி பெருமைப்பட்டுகொள்பவர்.  எங்கு இலக்கிய போட்டிகள் நடந்தாலும் என்னைக்கேட்காமலே என் பெயரை கொடுத்து நம்பிக்கையுடன் தாய் அன்போடு வழியனுப்பி வைப்பவர்,  என் பாடசாலையில் உள்ள பல ஆயிரம் மாணவர்களுல் என்னை தனித்து தெரிய வைத்தவர்.  பாடசாலை அதிபர் தொடங்கி முதலாம் ஆண்டு படிக்கும் சிறு மாணவன் வரை என்னை உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கவைத்த பெருமைக்கு உரியவர்.  நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது என் முதல் சிறுகதை "இடி" வார இதழில் வெளிவந்த போது அந்த பத்திரிகையை தூக்கிக்கொண்டு அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் என ஒவ்வொருவரிடமும் காட்டி காட்டி துஷ்யந்தன் என் மாணவன்  என்று  பெருமைப்பட்டு அவர் குதுகளித்த அந்த நிமிடங்கள் இப்போதும் என் கண் முன் நிழலாடுகின்றது.  பிராண்ட்ஸ் வந்து இத்தனை வருடங்கள் உருண்டோடிவிட்ட பின்னும் இன்னும் பசுமையாகவே இருக்கிறது அவர் நினைவுகள்.  நான் படித்த பாடசாலையில் இப்போது படிக்கும் என் சொந்தங்கள் என்னுடன் தொலைபேசியில் பேசும் போது "துஷியந்தன் போல ஒரு மாணவன் எனக்கு இனி எப்போதும் கிடைக்காது என்று சொல்லி உன் சூரியகலா மிஸ் அடிக்கடி பீல் பண்ணுவாங்கடா " என்று சொல்லி என்னை நெகிழ வைத்துவிடுவார்கள்.  சில நேரங்களில் நல்ல ஆசிரியர்கள் கிடைப்பதும் இறைவன்  கொடுத்த வரம்தான். 

62 கருத்துகள்:

 1. நண்பா உங்களை பாதித்த பெண்களை அருமையாக வர்ணித்துள்ளீர்கள்

  பதிலளிநீக்கு
 2. எப்போதுமே பெண் தேவதைகளால் மட்டும் ஆசிர்வதிக்கப்பட்டவன்
  நான். இதுவரைகால என் வாழ்க்கையில் அதிகமாக பெண்களால்தான்
  நேசிக்கப்பட்டுள்ளேன் பாதுகாக்கப்பட்டுள்ளேன்
  அப்படியா சங்கதி நடக்கட்டும் .

  பதிலளிநீக்கு
 3. தன்னை பாதித்த பெண்களை கௌரவப்படுத்தும் ஒரு சிறந்த பதிவு.

  பதிலளிநீக்கு
 4. பெண்ணின் பெருமை பேசிய உன்னத பதிவு தலைவரே

  பதிலளிநீக்கு
 5. மிகவும் ஈர்ப்பான விடயங்களை அழகான சுவாரசியமாக தொடங்கியிருக்கிறீர்கள் மற்றத்தொடரையும் விரைவில் தாருங்கள் இப்படி தைரியமாக எழுத உங்களால் முடிகிறது நஸ்ரிமா அரபுலகத்தில் பிறந்த  பிரென்ஸ் நங்கை என நினைக்கிறேன் சரியா பாஸ்?

  பதிலளிநீக்கு
 6. பாஸ்... சூப்பரோ சூப்பர்....
  இப்ப அலுவலகத்தில நிக்கிறன்.... மிச்சத்துக்கு அப்புறமா வாறன்

  பதிலளிநீக்கு
 7. சிறப்பாகச் சொல்லிப்போகிறீர்கள்
  படங்களும் பதிவும் அருமை
  தொடர்ந்து வருகிறேன்
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. மாப்பிள உனக்கு கிடைத்த மாதிரியல்ல எனக்கு கிடைத்த வாத்தியார் இவர் ஒருவழியில் எங்களுக்கு சொந்தக்காரர் ஆனா இவர் அந்தக்காலங்களில்  உலக வரை படத்தில் இலங்கை எங்கு இருக்கிறது போன்ற கடினமான கேள்விக கேட்டு பதில் சொல்ல முடியாது நாங்கள் தடுமாறும்போது கையால் அடி பின்னுவார் இதை நாங்கள் அம்மாவிடமோ அப்பாவிடமோ சொன்னால் வாத்தியாரை விட இவர்கள் இரண்டு மடங்கு தருவார்கள் ஆகையால் ஆச்சியிடம்தான் புகார் செய்வோம் மறுநாள் ஆச்சியின் வருகையை எதிர்பாத்து வகுப்பறையில் இருந்தால் ஆச்சி ஒரு பிரம்புடன் வருவா டேய் தம்பிராசா(வாத்தியார் பெயர் அதுதான்)கையால் பிள்ளையை அடிக்காத இந்தா இந்த பிரம்பால அடிபோடு என்பார்..!?அன்றிலிருந்துதான் இரண்டு காச்சட்ட போட்டுக்கொண்டு பள்ளிகூடம் போய்வர தொடங்கினேன் மாப்பிள..

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் மச்சான்,

  இருங்க படிச்சிட்டு வாரேன்.

  பதிலளிநீக்கு
 10. எப்போதுமே பெண் தேவதைகளால் மட்டும் ஆசிர்வதிக்கப்பட்டவன்
  நான். இதுவரைகால என் வாழ்க்கையில் அதிகமாக பெண்களால்தான்//

  ஆஹா....அதிஷ்டக்காரப் பையன்....

  பதிலளிநீக்கு
 11. அதனால் எனக்கு எப்போதுமே பெண்கள் மேல் தனி மரியாதையுண்டு//

  யோ,
  நான் இதை நம்பலாமா;-))

  பதிலளிநீக்கு
 12. "துஷியந்தன் போல ஒரு மாணவன் எனக்கு இனி எப்போதும் கிடைக்காது என்று சொல்லி உன் சூரியகலா மிஸ் அடிக்கடி பீல் பண்ணுவாங்கடா " என்று சொல்லி என்னை நெகிழ வைத்துவிடுவார்கள். சில நேரங்களில் நல்ல ஆசிரியர்கள் கிடைப்பதும் இறைவன் கொடுத்த வரம்தான்//

  சான்ஸே இல்லை மச்சி...

  எனக்கும் இப்படி மகுடங்கள் பாடசாலை வாழ்வில் கிடைத்திருக்கின்றன.

  ஒரு ஆசிரியர் பெருமையடைவது, அவரது மாணவர்ன் சிறப்பான முன்னேற்றத்தை அடையும் போது தானாம்.

  அதனை நீங்கள் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறீங்க.

  பதிலளிநீக்கு
 13. வன்னியில் நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் நான் நாலாம் வகுப்பு படிக்கும் போது அறிமுகமான குட்டித்தேவதை,//

  அடிங்...படவா, ராஸ்கல்.

  நாலம் வகுப்பு படிக்கும் போதேவா...

  ஹி....

  பதிலளிநீக்கு
 14. ஆனால் யார் என்னை முந்தியது என் நேசத்துக்குரியவள்தானே என்பதில் ஆறுதல் எனக்கு, கணக்கு பாடத்தில் எப்போதும் பின்னால் நிப்பவன் நான//

  இது தவறு மாப்ளே,

  இப்படிச் சொல்லிச் சொல்லித் தான் நாம் எல்லாவற்றையும் எம் நேசத்திற்குரியோருக்கு விட்டுக் கொடுக்கிறோம்,.

  ஆனால் கல்வியில் எப்போதும் தனித்துவம் வேண்டும்.

  பதிலளிநீக்கு
 15. பார்வைகளாலே பேசிக்கொண்டோம்
  பார்வைகளாலே அன்பை பரிமாறிக்கொண்டோம்
  இறுதியில் - ஒருவொருக்கொருவர்
  சொல்லாமலே பிரிந்துவிட்டோம்.//

  மனதைக் கனக்க வைத்து விட்டீங்க பாஸ்.

  பதிலளிநீக்கு
 16. டிஸ்கி : இப்பதிவில் உறவுக்கார பெண்கள் தவிர்க்கப்பட்டுள்ளது,
  நீண்ட பதிவாகி விட்டதால் மிகுதி அடுத்த பதிவில்//

  ஏன் மச்சி, பூரிக் கட்டையுடன் பிரான்ஸிற்கு வந்திடுவாளுங்க என்று பயமா;-)))

  பதிலளிநீக்கு
 17. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 18. நிரூபன் கூறியது...
  மனதைப் பாதித்த பெண்கள் பற்றிய தொகுப்பினை, எம் மனதைத் தொடும் வண்ணம் பகிர்ந்திருக்கிறீங்க.

  பதிலளிநீக்கு
 19. இப்பதான் தெரியுது மாப்பிள ஏன் கல்வியில் பெண்கள் முன்னனியில் இருக்கின்றார்கள் என்று இப்படி தங்கள் தேவதைதானே என்று எல்லோரும் விட்டு கொடுத்தால்..?

  பதிலளிநீக்கு
 20. காதல் காதல் :)

  நல்ல பகிர்வுகள் ....
  மச்சி நீங்க பிரான்ஸ்சா?

  பதிலளிநீக்கு
 21. என்ன பாஸ் உங்க பதிவுகள் என் டஷ்போர்ட் ல விளுகுதில்ல..

  பதிலளிநீக்கு
 22. ///அதனால் எனக்கு எப்போதுமே பெண்கள் மேல் தனி மரியாதையுண்டு நாங்கள் யாரை அதிகம் நேசிக்கிறோமோ அவர்களால்தான் அதிக காயமும் படுவோம் அந்தவகையில் என்னை பல சமயங்களில் காயப்படுத்திய பெருமையும் அதிகமாக பெண்களைத்தான் சேரும். என் மனதை பாதித்த பெண்கள் பலபேர் இருந்தாலும், /// ஒரு மார்க்கமான ஆள் தான் நீங்க ..ஹிஹிஹி

  பதிலளிநீக்கு
 23. ///ஒரு வகுப்பு ஆசிரியர் என்ற வகையில் எங்கள் வகுப்பில் கிடைக்கும் அத்தனை சலுகைகளையும் எனக்கே வழங்கி என்னை என் சக மாணவர்களால் பொறமையாய் பார்க்க வைத்தவர். அவர் வகுப்பில் இருக்கும் சமயங்களில் அதிகம் உச்சரிப்பது என் பெயரைத்தான், வகுப்பில் அவர் படிப்பித்துகொண்டிருக்கும் போது திடீரென " துஷியந்தன் மிச்சத்த நீ விளங்கப்படுத்து.." என்று சொல்லி என்னை தன் இடத்தில் வைத்து அழகுபாப்பவர் அதை தன் சக ஆசிரியர்களிடமும் சொல்லி பெருமைப்பட்டுகொள்பவர். // அதிஷ்டசாலி நீங்க ..)))

  பதிலளிநீக்கு
 24. ///இவை எல்லாத்தையும் விட அவளை நினைக்கும் போதெல்லாம் என் மனம் வாட்டும் வேதனை அவள் அருகில் இருந்த கடந்த அந்த வசந்தகாலங்களில் ஒருநாள் கூட அவளுடன் ஒரு வார்த்தைகூட நான் பேசியது இல்லை என்பதுதான்.
  பார்வைகளாலே பேசிக்கொண்டோம்
  பார்வைகளாலே அன்பை பரிமாறிக்கொண்டோம்
  இறுதியில் - ஒருவொருக்கொருவர்
  சொல்லாமலே பிரிந்துவிட்டோம்./// பாருங்கோ இதை பார்த்துவிட்டு அந்த பெண் உங்களை நினச்சு உருகப்போறா ...)) யாராவது லிங்க் அனுப்புங்கப்பா ))

  பதிலளிநீக்கு
 25. ///ஓ.. உங்க வீட்டுல பிரஞ்சுகாரியை கல்யாணம் பண்ணினா கேவலமா உன்னை பாப்பாங்க இல்ல.. என்று அவள் உதடு சுளித்து சொல்லி மிகப்பெரிய நகைச்சுவை சொன்னவளைப்போல் வாய்விட்டு சிரிக்கும் போது அவர்களைப்பற்றி நாம் நினைக்கும் தப்பான கண்ணோட்டத்துக்கு பின்னந்தலையில் சமட்டியால் அடித்தது போல் இருக்கும்.///ஹஹஹா என்னை அறியாமலே சிரிக்க வைத்துவிட்டின்களே, இருந்தாலும் நம்ம ஆக்களை நன்றாக தான் புரிந்து வச்சுக்கிறா !!

  பதிலளிநீக்கு
 26. அழகா அன்பா சுவாரஸ்யமா சொல்லத் தொடங்கியிருக்கிறீங்கள்.மிச்சப்பேரையும் சொல்லுங்கோ துஷி !

  பதிலளிநீக்கு
 27. //Mahan.Thamesh கூறியது...
  நண்பா உங்களை பாதித்த பெண்களை அருமையாக வர்ணித்துள்ளீர்கள்
  //

  தேங்க்ஸ் நண்பா

  பதிலளிநீக்கு
 28. ///Mahan.Thamesh கூறியது...
  எப்போதுமே பெண் தேவதைகளால் மட்டும் ஆசிர்வதிக்கப்பட்டவன்
  நான். இதுவரைகால என் வாழ்க்கையில் அதிகமாக பெண்களால்தான்
  நேசிக்கப்பட்டுள்ளேன் பாதுகாக்கப்பட்டுள்ளேன்
  அப்படியா சங்கதி நடக்கட்டும் .
  ///

  ஹி ஹி
  கண்டுக்காதீங்க பாஸ்

  பதிலளிநீக்கு
 29. //தமிழ் உதயம் கூறியது...
  தன்னை பாதித்த பெண்களை கௌரவப்படுத்தும் ஒரு சிறந்த பதிவு.//

  நன்றி நண்பா

  பதிலளிநீக்கு
 30. //வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
  Nice post..

  வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
  Thanks for sharing..
  //

  ரெம்ப தேங்க்ஸ் பாஸ்

  பதிலளிநீக்கு
 31. //A.R.ராஜகோபாலன் கூறியது...
  பெண்ணின் பெருமை பேசிய உன்னத பதிவு தலைவரே
  //

  வாழ்த்துக்களுக்கு நன்றி பாஸ்

  பதிலளிநீக்கு
 32. //கவி அழகன் கூறியது...
  கலக்குது நண்பா
  //

  நன்றி நண்பா
  அடிக்கடி வாங்க நண்பா

  பதிலளிநீக்கு
 33. //Nesan கூறியது...
  மிகவும் ஈர்ப்பான விடயங்களை அழகான சுவாரசியமாக தொடங்கியிருக்கிறீர்கள் மற்றத்தொடரையும் விரைவில் தாருங்கள் இப்படி தைரியமாக எழுத உங்களால் முடிகிறது நஸ்ரிமா அரபுலகத்தில் பிறந்த பிரென்ஸ் நங்கை என நினைக்கிறேன் சரியா பாஸ்?//

  தேங்க்ஸ் பாஸ்

  அடடடா, கரெட்டா கண்டு புடிச்சுட்டிங்க...

  பதிலளிநீக்கு
 34. //மதுரன் கூறியது...
  பாஸ்... சூப்பரோ சூப்பர்....
  இப்ப அலுவலகத்தில நிக்கிறன்.... மிச்சத்துக்கு அப்புறமா வாறன்
  //

  ரெம்ப தேங்க்ஸ் பாஸ்,

  ம்ம் நீங்க எல்லாம் இப்போ ரெம்ப பிஸி பாஸ்
  நடக்கட்டும் நடக்கட்டும்

  பதிலளிநீக்கு
 35. //Ramani கூறியது...
  சிறப்பாகச் சொல்லிப்போகிறீர்கள்
  படங்களும் பதிவும் அருமை
  தொடர்ந்து வருகிறேன்
  தொடர வாழ்த்துக்கள்
  //

  ரெம்ப தேங்க்ஸ் பாஸ்,

  பதிலளிநீக்கு
 36. //ATHAVAN கூறியது...
  மாப்பிள உனக்கு கிடைத்த மாதிரியல்ல எனக்கு கிடைத்த வாத்தியார் இவர் ஒருவழியில் எங்களுக்கு சொந்தக்காரர் ஆனா இவர் அந்தக்காலங்களில் உலக வரை படத்தில் இலங்கை எங்கு இருக்கிறது போன்ற கடினமான கேள்விக கேட்டு பதில் சொல்ல முடியாது நாங்கள் தடுமாறும்போது கையால் அடி பின்னுவார் இதை நாங்கள் அம்மாவிடமோ அப்பாவிடமோ சொன்னால் வாத்தியாரை விட இவர்கள் இரண்டு மடங்கு தருவார்கள் ஆகையால் ஆச்சியிடம்தான் புகார் செய்வோம் மறுநாள் ஆச்சியின் வருகையை எதிர்பாத்து வகுப்பறையில் இருந்தால் ஆச்சி ஒரு பிரம்புடன் வருவா டேய் தம்பிராசா(வாத்தியார் பெயர் அதுதான்)கையால் பிள்ளையை அடிக்காத இந்தா இந்த பிரம்பால அடிபோடு என்பார்..!?அன்றிலிருந்துதான் இரண்டு காச்சட்ட போட்டுக்கொண்டு பள்ளிகூடம் போய்வர தொடங்கினேன் மாப்பிள..//

  அப்போ காட்டான் ஊரில் பெரிய விளையாட்டு எல்லாம் விட்டுட்டுத்தான் இங்க வந்து இருக்கு போல
  ஹும்..... காட்டானின் பதிவை போல காட்டான் போடும் கருத்தும் அழகு
  சூப்பர்

  பதிலளிநீக்கு
 37. //நிரூபன் கூறியது...
  வணக்கம் மச்சான்,

  இருங்க படிச்சிட்டு வாரேன்.
  //

  ஓகே பாஸ்

  பதிலளிநீக்கு
 38. //நிரூபன் கூறியது...
  எப்போதுமே பெண் தேவதைகளால் மட்டும் ஆசிர்வதிக்கப்பட்டவன்
  நான். இதுவரைகால என் வாழ்க்கையில் அதிகமாக பெண்களால்தான்//

  ஆஹா....அதிஷ்டக்காரப் பையன்....//


  ஹி ஹி
  கண்ணு வைக்காதீங்க பாஸ் lol

  பதிலளிநீக்கு
 39. //நிரூபன் கூறியது...
  அதனால் எனக்கு எப்போதுமே பெண்கள் மேல் தனி மரியாதையுண்டு//

  யோ,
  நான் இதை நம்பலாமா;-))//

  பாஸ் துஷி சொன்னா நம்பனும் பாஸ் :))

  பதிலளிநீக்கு
 40. //நிரூபன் கூறியது...
  "துஷியந்தன் போல ஒரு மாணவன் எனக்கு இனி எப்போதும் கிடைக்காது என்று சொல்லி உன் சூரியகலா மிஸ் அடிக்கடி பீல் பண்ணுவாங்கடா " என்று சொல்லி என்னை நெகிழ வைத்துவிடுவார்கள். சில நேரங்களில் நல்ல ஆசிரியர்கள் கிடைப்பதும் இறைவன் கொடுத்த வரம்தான்//

  சான்ஸே இல்லை மச்சி...

  எனக்கும் இப்படி மகுடங்கள் பாடசாலை வாழ்வில் கிடைத்திருக்கின்றன.

  ஒரு ஆசிரியர் பெருமையடைவது, அவரது மாணவர்ன் சிறப்பான முன்னேற்றத்தை அடையும் போது தானாம்.

  அதனை நீங்கள் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறீங்க.//

  தேங்க்ஸ் பாஸ்

  பதிலளிநீக்கு
 41. //நிரூபன் கூறியது...
  வன்னியில் நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் நான் நாலாம் வகுப்பு படிக்கும் போது அறிமுகமான குட்டித்தேவதை,//

  அடிங்...படவா, ராஸ்கல்.

  நாலம் வகுப்பு படிக்கும் போதேவா...

  ஹி....
  //

  நீங்க வேற , நாங்க எல்லாம் நேசறி போகும்போதே லவ் பண்ணின ஆக்கள்
  ஹி ஹி ஹி ஹி

  பதிலளிநீக்கு
 42. //நிரூபன் கூறியது...
  ஆனால் யார் என்னை முந்தியது என் நேசத்துக்குரியவள்தானே என்பதில் ஆறுதல் எனக்கு, கணக்கு பாடத்தில் எப்போதும் பின்னால் நிப்பவன் நான//

  இது தவறு மாப்ளே,

  இப்படிச் சொல்லிச் சொல்லித் தான் நாம் எல்லாவற்றையும் எம் நேசத்திற்குரியோருக்கு விட்டுக் கொடுக்கிறோம்,.

  ஆனால் கல்வியில் எப்போதும் தனித்துவம் வேண்டும்.
  //

  உண்மைதான் பாஸ்
  ஆனால் காதல் மனசுக்கு இது தெரியாதே

  பதிலளிநீக்கு
 43. //நிரூபன் கூறியது...
  பார்வைகளாலே பேசிக்கொண்டோம்
  பார்வைகளாலே அன்பை பரிமாறிக்கொண்டோம்
  இறுதியில் - ஒருவொருக்கொருவர்
  சொல்லாமலே பிரிந்துவிட்டோம்.//

  மனதைக் கனக்க வைத்து விட்டீங்க பாஸ்.
  //


  :))))))

  பதிலளிநீக்கு
 44. //நிரூபன் கூறியது...
  டிஸ்கி : இப்பதிவில் உறவுக்கார பெண்கள் தவிர்க்கப்பட்டுள்ளது,
  நீண்ட பதிவாகி விட்டதால் மிகுதி அடுத்த பதிவில்//

  ஏன் மச்சி, பூரிக் கட்டையுடன் பிரான்ஸிற்கு வந்திடுவாளுங்க என்று பயமா;-)))
  //:

  ஹி ஹி
  கரெட்டா புரிஞ்சுகிட்டீங்களே....
  நீங்க ரெம்ப விவரமான ஆளுதான்

  பதிலளிநீக்கு
 45. //நிரூபன் கூறியது...
  நிரூபன் கூறியது...
  மனதைப் பாதித்த பெண்கள் பற்றிய தொகுப்பினை, எம் மனதைத் தொடும் வண்ணம் பகிர்ந்திருக்கிறீங்க.//


  தேங்க்ஸ் பாஸ்

  பதிலளிநீக்கு
 46. //ATHAVAN கூறியது...
  இப்பதான் தெரியுது மாப்பிள ஏன் கல்வியில் பெண்கள் முன்னனியில் இருக்கின்றார்கள் என்று இப்படி தங்கள் தேவதைதானே என்று எல்லோரும் விட்டு கொடுத்தால்..?
  //

  ஹி ஹி
  அதே அதே

  பதிலளிநீக்கு
 47. //குடிமகன் கூறியது...
  அழகான பதிவு நண்பரே!!
  //

  தேங்க்ஸ் பாஸ்

  பதிலளிநீக்கு
 48. //டி.சாய் கூறியது...
  காதல் காதல் :)

  நல்ல பகிர்வுகள் ....
  மச்சி நீங்க பிரான்ஸ்சா?//

  ஹி ஹி
  காதல் காதல் இது இல்லாட்டி வாழ்தல் ஒரு வாழ்வா பாஸ் lol

  யா பாஸ் பிரான்ஸ்தான் :))

  பதிலளிநீக்கு
 49. //கந்தசாமி. கூறியது...
  என்ன பாஸ் உங்க பதிவுகள் என் டஷ்போர்ட் ல விளுகுதில்ல..
  //

  தெரியல்லையே பாஸ்

  தேங்க்ஸ் பாஸ்

  பதிலளிநீக்கு
 50. //கந்தசாமி. கூறியது...
  ///அதனால் எனக்கு எப்போதுமே பெண்கள் மேல் தனி மரியாதையுண்டு நாங்கள் யாரை அதிகம் நேசிக்கிறோமோ அவர்களால்தான் அதிக காயமும் படுவோம் அந்தவகையில் என்னை பல சமயங்களில் காயப்படுத்திய பெருமையும் அதிகமாக பெண்களைத்தான் சேரும். என் மனதை பாதித்த பெண்கள் பலபேர் இருந்தாலும், /// ஒரு மார்க்கமான ஆள் தான் நீங்க ..ஹிஹிஹி//


  விடுங்க விடுங்க
  வெளிய சொல்லிராதீங்க பாஸ்
  இமேஜ் இமேஜ் lol

  பதிலளிநீக்கு
 51. //கந்தசாமி. கூறியது...
  ///ஒரு வகுப்பு ஆசிரியர் என்ற வகையில் எங்கள் வகுப்பில் கிடைக்கும் அத்தனை சலுகைகளையும் எனக்கே வழங்கி என்னை என் சக மாணவர்களால் பொறமையாய் பார்க்க வைத்தவர். அவர் வகுப்பில் இருக்கும் சமயங்களில் அதிகம் உச்சரிப்பது என் பெயரைத்தான், வகுப்பில் அவர் படிப்பித்துகொண்டிருக்கும் போது திடீரென " துஷியந்தன் மிச்சத்த நீ விளங்கப்படுத்து.." என்று சொல்லி என்னை தன் இடத்தில் வைத்து அழகுபாப்பவர் அதை தன் சக ஆசிரியர்களிடமும் சொல்லி பெருமைப்பட்டுகொள்பவர். // அதிஷ்டசாலி நீங்க ..)))
  //

  உண்மைதான் பாஸ்
  அப்படி ஒரு ஆசிரியர் கிடைக்க நான் ரெம்ப புண்ணியம் செய்து இருக்கேன்

  பதிலளிநீக்கு
 52. //கந்தசாமி. கூறியது...
  ///ஓ.. உங்க வீட்டுல பிரஞ்சுகாரியை கல்யாணம் பண்ணினா கேவலமா உன்னை பாப்பாங்க இல்ல.. என்று அவள் உதடு சுளித்து சொல்லி மிகப்பெரிய நகைச்சுவை சொன்னவளைப்போல் வாய்விட்டு சிரிக்கும் போது அவர்களைப்பற்றி நாம் நினைக்கும் தப்பான கண்ணோட்டத்துக்கு பின்னந்தலையில் சமட்டியால் அடித்தது போல் இருக்கும்.///ஹஹஹா என்னை அறியாமலே சிரிக்க வைத்துவிட்டின்களே, இருந்தாலும் நம்ம ஆக்களை நன்றாக தான் புரிந்து வச்சுக்கிறா !!
  //

  உண்மை பாஸ்
  நம்மவர் வியாக்கினம் பேசி பேசியே கொல்லுவோர் ஆச்சே

  பதிலளிநீக்கு
 53. //ஹேமா கூறியது...
  அழகா அன்பா சுவாரஸ்யமா சொல்லத் தொடங்கியிருக்கிறீங்கள்.மிச்சப்பேரையும் சொல்லுங்கோ துஷி !
  //

  நன்றி அக்கா
  உங்கள் வருகை ரெம்ப சந்தோஷத்தை கொடுக்குது
  அடிக்கடி வாங்கோ அக்கா

  பதிலளிநீக்கு
 54. அதனால் எனக்கு எப்போதுமே பெண்கள் மேல் தனி மரியாதையுண்டு//

  ஆகா அப்படியானால் நிட்சயமாக நீங்கள் எனது கூடிப் பிறவாத
  அருமைச் சகோதரமேதான்.....நன்றி சகோ பகிர்வுக்கு.

  பதிலளிநீக்கு
 55. உங்களை பாதித்த பெண்களில் இசைபிரியா என்னையும் பாதித்தவர். அவரின் கொடுமையான கடைசி கால காணொளியை பார்த்து மனம் கலங்கினேன்.

  பதிலளிநீக்கு
 56. உங்கள் பதிவினை படித்து விட்டு நசீமாவை சந்திக்க ஆசையாய் இருக்கிறது .

  பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...