ஞாயிறு, ஏப்ரல் 10, 2011

களவானி

நீ களவாடி சென்றது
என் கனவுகள்  மட்டும் அல்ல
என் நினவுகளையும் தான்..

உன் மேல் வெரும்
கோவங்கள் எல்லாம்
உன்னை  பாத்ததும் ஏன்
மாயமாகின்றது..

கொடுத்து மட்டும்
பழக்கப்பட்ட எனக்கு 
திருடவும் (இதயம்) ஏன்
சொல்லிகொடுதாய் ..
கொஞ்சம் கோவம் 
கொஞ்சம் நேசம் என 
வரம் தரும்  இந்த திமிரை 
யார் தந்தார் உனக்கு ..

சண்டை போட்டால் 
முத்தம் தருகுறாய் 
உன்னை பாக்கும் போதெல்லாம் 
சண்டை போடச்சொல்லியல்லவா   
உதடு துடிக்குது .. 

ஆக்கம்:- துஷ்யந்தன்


5 கருத்துகள்:

 1. உன் மேல் வெரும்
  கோவங்கள் எல்லாம்
  உன்னை பாத்ததும் ஏன்
  மாயமாகின்றது..//

  வரும் கோபங்கள் என்றால் சிறப்பாக இருக்கும் சகோதரம்.

  பதிலளிநீக்கு
 2. சண்டை போட்டால்
  முத்தம் தருகுறாய்
  உன்னை பாக்கும் போதெல்லாம்
  சண்டை போடச்சொல்லியல்லவா
  உதடு துடிக்குது ..//

  சகோதரம், நீங்கள் பதிவேற்றிய முதற் கவிதையிலே காதல் ரசம், இலக்கிய நயம் பொங்கி வழிகிறதே. வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.

  களவாணி, களவானி, சண்டை போட்டு முத்தம் வாங்கத் துடிக்கும் இளைஞனின் உணர்வுகளைப் பாடி நிற்கிறது.

  பதிலளிநீக்கு
 3. நன்றி பாஸ் (நிரூபன்),
  சாரி பாஸ்,
  அடுத்த முறை எளுதும் போது
  இந்த தவறு வராம பாத்துக்குறன்,
  உங்க பெயர் சொல்லும் போதே ஒரு பாசம் வருது
  ஏன் தெரியுமா..?? இலங்கையில் இருக்கும்
  என் கடைக்குட்டி தம்பியின் பெயரும் நிரூபன் தான்.

  பதிலளிநீக்கு
 4. அடிக்கடி இங்கால பக்கமும் வாங்க பாஸ்
  என்னை பாராட்ட மட்டும் இல்ல,
  உருமையுடன் திட்டவும்
  உங்களுக்கு உரிமை இருக்கு பாஸ்..

  பதிலளிநீக்கு
 5. ரொம்ப சந்தோசம் உங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வந்ததற்கு திறமை இருந்தால் மட்டும் போதாது அது வெளியில் வந்து மற்றவர்களும் பயன் பெற வேண்டும் வானத்தில் மேகம் இருந்து பிரயோசனம் இல்லை அது மழையாக பொழிந்து தண்ணீரை தர வேண்டும் உங்கள் அறிவு திறமை எல்லாம் வெளியில் வந்து எங்களுக்கு பயன் தர வேண்டும் என்று ஆசைப்படுவதுடன் உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகின்றேன் என்றும் அன்புடன் நவீனன்

  பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...