திங்கள், ஏப்ரல் 25, 2011

வெறுக்கத்தான் நினைக்குறேன்..

சிணுங்கி சிணுங்கி பேசும் 
உன் செல்லக்குரலை - என் 
தேசியக்கீதமாய்  
மாற்றிவிட்டுப்போன
வித்தைக்காரியே...

ண்ணுமே தெரியாதவள்போல்
அருகில் வந்து
மோகத்தை தூண்டிவிட்டு
உன் தேவைகளை
பூர்த்தி செய்யும்
காரியக்காரியே...

டந்தால்  என் நிழலாக 
படித்தால் என் புத்தகமாக 
தூங்கினால் என் கனவாக 
வெகுதூரத்தில் இருந்தாலும்
அருகில் இருப்பதைப்போல்
என்னை ஆட்டிப்படைக்கும்
மாயக்காரியே...  

விருப்போ வெறுப்போ
துக்கமோ சந்தோசமோ 
எந் நிலையில் நான் இருந்தாலும்
உன்னைப்பார்த்ததும் - எல்லாம் மறந்து 
உன்னைக்காதலிக்க வெக்கும்
வசியக்காரியே..

ங்கேயும் எப்போதும் 
எந்நேரமும் 
உன்னையே உன்னைப்பற்றி 
மட்டுமே - பேச வெக்கும்
காதல்காரியே...

ன் கைப்பொம்மையாக  
என்னை சீண்டி
விளையாடும் உன்னை
வெறுக்கத்தான் நினைக்குறேன்
ஆனாலும்
என்னையே என்னால்
எப்படி - வெறுக்கமுடியும்
சொல்லடி என்னவளே.ஆக்கம் துஷ்யந்தன்

5 கருத்துகள்:

 1. நடந்தால் என் நிழலாக
  படித்தால் என் புத்தகமாக
  தூங்கினால் என் கனவாக
  வெகுதூரத்தில் இருந்தாலும்
  அருகில் இருப்பதைப்போல்
  என்னை ஆட்டிப்படைக்கும்
  மாயக்காரியே... //

  ஆக மொத்தத்தில், உங்கள் வசம் நீங்களே இல்லை...

  பதிலளிநீக்கு
 2. மெல்லவும் முடியாது, விழுங்கவும் முடியாது இருக்கும் ஒரு உணர்வின் வெளிப்பாடு- ய்தார்த்தம்.

  பதிலளிநீக்கு
 3. // நிரூபன் a dit…
  ஆக மொத்தத்தில், உங்கள் வசம் நீங்களே இல்லை... //

  நெசந்தான் அண்ணா..
  நான் அவள் வசம் போய் பல வருசங்கள் ஆச்சு ..

  பதிலளிநீக்கு
 4. // நிரூபன் a dit…
  மெல்லவும் முடியாது, விழுங்கவும் முடியாது இருக்கும் ஒரு உணர்வின் வெளிப்பாடு- ய்தார்த்தம்.
  //

  நம்மட கிறுக்கல்களை உங்கள போன்றவர்கள் வந்து பாப்பதே ரெம்ப பெரிய விஷயம்,
  இதில் உங்கள் பாராட்டு ரெம்ப சந்தோசத்த கொடுக்குது..
  ரெம்ப நன்றி அண்ணா.

  பதிலளிநீக்கு
 5. ரெம்ப சந்தோசத்த கொடுக்குது..
  ரெம்ப நன்றி அண்ணா.//

  என்னது, சந்தோசத்தை கெடுக்குதா...
  அவ்...

  பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...