சனி, ஏப்ரல் 28, 2012

ஈழ தமிழனுக்கும் கருணாநிதியை பிடிக்கும். காரணங்கள் சில..

ரு காலத்தில் புலிகள் வேறு ஈழத்தமிழர்கள் வேறு இல்லை என்று
சொன்னவர் நீங்கள். ஆனால்  உங்கள் தொண்டன் வைகோவுக்கு
கிடைத்த  செல்வாக்கை பார்த்து எங்கே நான் பூதம் போல் பாதுகாத்து
வைத்திருக்கும் திமுகா என்ற சொத்து எனக்கு பின் என் வாரிசுகளுக்கு
போகாமல் வைகோவுக்கு போய்விடுமோ என்ற அச்சத்தில் கொஞ்சமும்
நா கூசாமல் "வைகோ புலிகளை வைத்து என்னை கொலை செய்ய
திட்டம் போடுகிறார்" என்று அத்தனை மீடியாவையும் அழைத்துவைத்து
அசராமல் பொய் சொன்னீர்களே அப்போதே உங்களை ஈழ தமிழனுக்கு   
ரெம்ப பிடித்துப்போய்விட்டது.

ல்லா நாட்டு, மாநில முதல்வர்களும் எப்போது பார்த்தாலும் நேரம் இல்லை நேரம் காணாது என்று பந்தா பண்ணுகிறார்கள், ஆனால் நீங்கள் இவ்வளவு பிஸியிலும் "சித்தி" மெகா தொடர் வெற்றி விழாவிலும் "மெட்டி ஒலி" மெகா  தொடர் வெற்றி விழாவிலும்  மேடை ஏறி ஒரு எபிசோட் கூட தவறாமல்  பார்த்தேன் என்று சொல்லி புகழ்ந்து தள்ளி அண்டை மாநில முதல்வர்களை மட்டும் அல்ல கழக கண்மணிகளையும் வீட்டு பெண்மணிகளையும் உங்கள்
கலைத்தாகத்தை பார்த்து மூக்கில் விரலை வைக்க வைத்தீர்களே அப்போதும்  உங்களை ஈழ தமிழனுக்கு ரெம்ப பிடித்துப்விட்டது.

ம்மையார் ஆட்சிக்கு வந்துவிட்டார். உங்கள் கைதும் நெருங்கி விட்டது, உங்களை கைது செய்யும் நாளும் தெரிந்துவிட்டது. அட நேரம் கூட தெரிந்து விட்டது. சன் டிவிக்காரனுக்கு அதான் உங்க பேரனுக்கு போனைப்போட்டு   உங்கள் வீட்டுக்கு வெளியேயும் உள்ளேயும் ஒளிந்து இருக்க செய்து விட்டு, போலிஸ் உங்கள் வீடு வந்து கைது செய்த போது எதுவுமே தெரியாதவர் போல "லுங்கியுடன்"  நின்று "ஐய்யோ  கொல்லுறாங்களே.."  "அய்யோ கொல்லுறாங்களே.."  என்று   கொஞ்சமும் கூச்சமே இல்லாமல் கத்தி,  ஒளிந்து நின்ற பேரன்களைக்கொண்டு  படம் பிடித்து அதை உங்கள் பேரன்கள் டிவியில்  ஒளிபரப்பும் செய்து உலக தமிழருக்கே உங்கள் நடிப்பு திறமையை காட்டினீர்களே அப்போதும்  உங்களை  ஈழ தமிழனுக்கு ரெம்ப பிடித்துப்போய்விட்டது.


நீங்கள் ஒரு மிக சிறந்த நாத்திகவாதி(!!). ஆனால் பேரன்களோ தங்கள் டிவியிலும் பத்திரிகைகளிலும் ஆன்மிகம் வளர்த்து கல்லா கட்டுகிறார்கள்.  ஏன் உங்கள் தொலைக்காட்சியிலேயே விநாயகர் சதுர்த்திக்கு  விடுமுறை  தினமென்று சொல்லி சிறப்பு படம் காட்டுகிறீர்கள். உங்கள்  வீட்டு மனைவி-துணைவி உட்பட்ட உறவுகளே  கோயில் கோயிலாக ஏறி இறங்கி உங்கள் நலம் வேண்டி பிரார்த்திக்கிறார்கள். இது கூட பெரிய விடயம் இல்லை. பாபா என்ற சாமியாரை வீட்டுக்கு அழைத்து அவர் மந்திரமாக வரவழைத்து தந்த மோதிரத்தை கைவிரலில் ஆசையாக பாதுகாப்பாக போட்டு வைத்தீர்களே  அப்போதும் உங்களை ஈழ தமிழனுக்கு ரெம்ப பிடித்துப்போய்விட்டது.

ஜெயலலிதா-சசிகலா ஒரு  கோயில் விழாவில் பங்கேற்ற போது, ஜெயலலிதா தனக்கு அணிவித்த மாலையை கழட்டி சசிகலா கழுத்தில்  போட்டார், உடனே நீங்கள் உங்கள் ஆக்களைகொண்டு அதை படம் பிடித்து உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில்  திரும்ப  திரும்ப  ஒளிபரப்பாக்கி ஜெயாவும்-சசியும் மாலை மாற்றினார்கள் என்று அவர்கள் இருவரும் "ஓரினசெயர்க்கையாளர்கள்"  என்ற ரேஞ்சில் சொல்லி நல்ல மனிதர்கள் பலரை உங்கள் முகத்தில் காறி துப்ப வைத்தீர்களே (எழுத்தாளர் ஞானி கூட உங்களை குமுதத்தில் கண்டித்து இருந்தார்) அப்போதும் உங்களை ஈழ தமிழனுக்கு ரெம்ப பிடித்துப்போய்விட்டது.

ருத்துக்கணிப்பு என்ற பெயரில் உங்கள் பேரன்-மகன்களுக்குள்
நடந்த பொழுது போக்கு சண்டையில் "தினகரன்" அலுவலகம்
கொளுத்தப்பட்டு அப்பாவி உயிர்கள் சில பலியாக, பெரிய நாட்டாமை போல் அவர்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இனி  இல்லை என்று பேரங்களை தள்ளி வைத்தீர்களே.. அவர்களின் சன் டிவிக்கு போட்டியாக மக்கள் சொத்தில் உங்கள் சொத்தாக கலைஞர் தொலைக்காட்சியையும்  ஆரம்பித்தீர்களே  எல்லாம் ஒக்கேதான் ஆனால்.. திடீர் என ஒருநாள் உங்களுக்கு "இதயம் இனிக்க கண்கள் பனிக்க" சில லாபம் தேடி ஒட்டிவிட்டீர்கள் பேரன்களுடன். கழக கண்மணிகள் கூட ஒருநிமிடம் ஆடித்தான் போய்விட்டார்கள். ஆனால் இதில் உள்ள உங்கள் ராஜ தந்திரங்களையும் அதில் உள்ள உங்களின் நரி மூளையையும் பார்த்து அப்போதே உங்களை ஈழ தமிழனுக்கு ரெம்ப பிடித்துப்போய்விட்டது.

ழத்தில் இறுதிப்போர் ஆரம்பமாகிவிட்டது, கொத்து கொத்தாக எம்
சனத்தை எல்லாம் கொன்று குவிக்க ஆரம்பித்து விட்டான் சிங்கள
இனவெறியன். நாங்கள் கத்தினோம் கதறினோம் தமிழ்நாட்டில் மக்கள் கொந்தளித்து வீதியில் இறங்கி போராட ஆரம்பித்துவிட்டார்கள்.
"முத்துகுமார்" என்ற ஒரு புனித உயிர் எங்களுக்காக உங்களிடம் மன்றாடி தீக்கு இரையாகிவிட்டது, உலக தமிழினமே உங்களிடம் கையேந்தி நிக்குது அசைந்தீர்களா  நீங்கள்..? இப்போ பாருங்கள் பாஷிச..!  ஜெயலலிதாவை  தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற என்னால் முடியாது என்றவர் இந்த சிறு மக்கள் கொந்தளிப்பை பார்த்தே மனம்மாறி அவர்களை காப்பாற்ற சட்டமன்றத்திலேயே தீர்மானம் கொண்டு வந்து அந்த உயிர்களை அப்போதேனும் தூக்கில் பலி போகாமால் காப்பாற்றினார். அடிக்கடி  முடிவை மாற்றும் இவர் எல்லாம் ஒரு முதல்வரா?? ஆனால் நீங்கள் அப்படியா கடிதம் எழுதி எழுதி, ஆர்ப்பாட்டக்காரர்களை  கைது செய்தும் கடைசி வரை
காங்கிரஸின் ஆசையை நிறைவேற்ற இத்தாலி அன்னைக்கு ஆதரவாகவும்  பக்க பலமாக இருந்தீர்களே, நீங்கள் அல்லவா முதல்வர்!! அப்போதும் உங்களை ஈழ தமிழனுக்கு ரெம்ப பிடித்துப்போய்விட்டது.

ழத்தின் இன அழிப்பு வெற்றிகரமாக இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது.
மக்கள் கொந்தளிப்பையும் மீடியாக்கள் கேள்விக்கனைகனைகளையும்
சமாளிக்க முடியவில்லை உங்களால், திடீரென ஒருநாள்   காலையில்
பிரேக் பாஸ்ட் சாப்பிட்டுவிட்டு செரிக்காமல் மெரினாவீச்சுக்கு
காத்து வாங்க வந்த நீங்கள் சட்டென மனைவி தலைமாட்டுக்கும்
துணைவி கால்மாட்டுக்கும் இருக்க படுத்துவிட்டீர்கள் "உண்ணாவிரதம்"
என்ற பெயரில் மெரினாவில். சில மணித்தியாலங்கள் கரைய பசி
குடலை புடுங்க லஞ்சுக்கு வூட்டுக்கு போகணும் என்ற பரிதவிப்பில் "அங்கே" இருந்து போன் அடிச்சாங்க யுத்தம் எல்லாம் நின்னுட்டாம்.
என்று   சொல்லி விட்டு உண்ணாவிரதத்தை! நிறைவு செய்தீங்க
பாருங்க அப்பொழுதும் உங்களை ஈழ தமிழனுக்கு ரெம்ப பிடித்துப்போய்விட்டது.

டுத்த நாள் மீடியாவே திரண்டு வந்து உங்களை செருப்பால
அடிக்காத குறையாக, யுத்தம் எல்லாம் நின்னுட்டாம் என்று சொல்லி உண்ணாவிரதத்தை முடித்த பின்னர்தான்  கொத்துக்குண்டுகளில்
கொத்துகொத்தாக எம் இனம்  கொலைசெய்யப்பட்டதை சொன்ன போது
அசராமல்  உங்கள் அக்மார்க் புன்னகையோடு "மழை விட்டாலும்
தூறல் இன்னும் விடவில்லைப்போல்" என்று அந்த நேரத்திலும்
உங்கள் இலக்கிய திறமைய காட்டினீர்களே.. அப்போதும் உங்களை
ஈழ தமிழனுக்கு ரெம்ப பிடித்துப்போய்விட்டது.

ல்லாமே முடிந்துவிட்டது. சொந்த நாட்டிலேயே அகதி ஆகி
விட்டோம் நாங்கள். எங்களிடம் இருந்து உறிஞ்சப்பட்ட ரத்தம்
காங்கிரஸ் பற்களிலும் தெரிகிறது, அது உங்கள் கண்களுக்கும்
தெரிகிறது.அப்போது கூட நீங்கலாக விலக்க வேண்டாம் காங்கிரசை,
பிடிச்ச  சனியன் லேசில் போகாது இங்கே உங்களை விட்டு தானே
காங்கிரஸ் போகிறேன் என்று அடம்பிடிக்குது விட்டீர்களா நீங்கள்..?
கோவிச்சுக்கொண்டு அம்மா வீட்டுக்கு போன புது மனுசியை
சமாதானப்படுத்துவது போல் போய் கையில் காலில் விழுந்து
கூட்டி வந்து தேர்தலில் அத்தனை இடங்களை அள்ளி கொடுத்து
பார்த்து பார்த்து இடங்களை கூட தெரிவு செய்து கொடுத்தீர்களே
அப்போதும் உங்களை ஈழ தமிழனுக்கு ரெம்ப பிடித்துப்போய்விட்டது.

யுத்தம் என்ற பெயரில் சிங்கள காடையன் எங்களை  அழித்து கொண்டிருந்த  நேரத்தில் தமிழ் நாடே  கொந்தளித்துக் கொண்டு இருக்கும் போது தமிழ் நாட்டின் முக்கிய தலைவர்கள் சோனா நமிதா பாபிலோனா எல்லோரையும் அறிவாலயம் அழைத்து பேசி நாளொரு வண்ண வண்ண புகைப்படத்தை முரசொலியில் பிரசுரித்து சுய இன்பம் கண்டுகொண்டு  
இருந்தீர்களே   அப்போதும் உங்களை ஈழ தமிழனுக்கு ரெம்ப பிடித்துப்போய்விட்டது.

ழத்து உயிர்களை  காப்பாற்ற சொல்லி  மத்தியரசுக்கு வெறும்  தந்தி
மட்டும் அடித்துக்கொண்டு இருந்த நீங்கள் உங்கள் வாரிசுகளுக்கு
பதவி வேண்ட மட்டும் புள்ளைகள் படை சூழ இந்த தள்ளாத
வயதிலும் தள்ளு வண்டியில் டெல்லி விரைந்தீர்களே அன்று அப்போதும்
உங்களை ஈழ தமிழனுக்கு ரெம்ப பிடித்துப்போய்விட்டது.

னிமொழி மகளை முக்கிய புள்ளியாக வைத்து 2ஜி ஸ்பெக்ட்ரம் 
ஊழலில் மக்கள் பணம் ரூ. 1.76 லட்சம் கோடியை அலாக்கா கொள்ளை அடித்துவிட்டு அந்த பணத்தை மனைவி துணைவி மகள் என்று
எல்லோர் பெயரிலும் போட்டு கலைஞர் தொலைக்காட்சி வேறு ஆரம்பித்துவிட்டு கொஞ்சம்  கூட குற்ற உணர்வு இன்றி இப்படிப்பட்ட 
ஒரு ஊழல்  நடக்கவே இல்லை என்று சத்தியம் பண்ணாத 
குறையாக  அண்டைப்புளுகு புளுகினீர்களே அப்போதும் உங்களை
ஈழ தமிழனுக்கு ரெம்ப பிடித்துப்போய்விட்டது.

திமுகாவை அதன் முந்தைய தலைவர்கள் வளர்த்து இந்த நிலைக்கு
கொண்டுவர எவ்வளவு பாடுபட்டு இருப்பார்கள். ஆனால் இன்று
நீங்கள் பார்த்துகொண்டு இருக்கவே ஸ்டாலின்&அழகிரி பதவி வெறி கோஸ்டி சண்டையில்  மெல்ல மெல்ல திமுகாவை சிதறித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் "திமுகா என்ன அப்பன் வீட்டு சொத்தா" என்ற கணக்கில் திமுகாவை விட என் உறவுகள்தான் முக்கியம் என்று கன்றும் காணாததுபோல் இருக்கிறீர்களே இப்போதும் உங்களை ஈழ தமிழனுக்கு ரெம்ப பிடித்துப்போய்விட்டது.

ண்மையில் ராஜீவ் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு
தூக்கு தண்டனையை நிறைவேற்ற முயன்ற போது,  குற்றம் சாட்டப்பட்ட
அந்த மூவரையும் தூக்கில் போட பரிந்துரைத்தவர்  சிபாரிசு  செய்தவர் 
நீங்கள்தான் என்பதையும் மற(றைத்)ந்து, ஐயோ காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்  என்று  அம்மையாருக்கு அன்பாகா  கருணை மடல் வரைந்து கபட நாடகத்தை ஜோராக அரங்கேற்றினீர்களே அப்போதும் உங்களை ஈழ தமிழனுக்கு ரெம்ப பிடித்துப்போய்விட்டது.

ட அது மட்டுமா  அதை தொடர்ந்து  பேரறிவாளன் முருகன் சாந்தன்
ஆகியோரை காப்பாற்ற(!)  சட்டமன்றத்தில் அம்மையார் தீர்மானம் கொண்டுவந்தது. நான் இந்த விடயத்தை கையில் எடுத்ததை பார்த்து பயந்துதான் என்று நேர்மையாக உண்மையாக அறிக்கை விட்டீர்கள் பாருங்கள் இப்போதும் உங்களை ஈழ தமிழனுக்கு ரெம்ப பிடித்துபோய்விட்டது.
ல்லாம் முடிந்துவிட்டது. ஈழதமிழன் நடுத்தெருவுக்கு வந்துவிட்டான். சொந்த நாட்டிலேயே அகதி ஆகிவிட்டான். நடக்க கூடாதது எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. நீங்கள் நினைத்து இருந்தால் எவ்ளோவோ செய்து இருக்கலாம். எந்தனையோ ஆயிரம் உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். பதவி ஆசை உங்கள் கண்களை மறைத்துவிட்டது. சரி விடுங்கள் போகட்டும் உங்களை நம்பியது எங்கள் தப்புத்தான் அந்த தவறுக்கு நன்றாக அனுபவித்து உணர்ந்து சுதாரித்துக்கொண்டோம். ஆனால்.. நீங்கள்!!  திமுகா கேவலமாக  விஜயகாந்த் கட்சிக்கு அடுத்த நிலைக்கு போய் தமிழக அரசியலில் இருந்து மறையும் நாட்கள் நெருங்குவதை பார்த்து நாடாளுமன்ற தேர்தலும் நெருங்குவது  உறைக்க உங்களை தக்க வைக்க இப்போதும் கொஞ்சமும் மனச்சாட்சியே இல்லாமல் தமிழீழம் அமைப்பதுதான் என் குறிக்கோள், ஈழத்துக்காகா காந்தி வழியில் போராடுவேன் என்று கண்டபடி உளறி  மீண்டும் நொந்துபோய் இருக்கும் எங்களை வைத்தே அரசியல்  நடத்த&நடத்தி பார்க்கிறீர்களே இப்போதும் இந்த ஈழ தமிழனுக்கு உங்களை ரெம்ப கொலைவெறியோடு பிடித்துப்போய்விட்டது.
                                           
                                                *** .... *** .... *** .... *** .... ***
'அபி அப்பா' என்ற ஒரு அரைகுறை எழுதிய மஞ்சள் பதிவை சாரி.. மஞ்சள் துண்டுக்காரனுக்கு ஜால்ரா அடித்த பதிவைத்தொடர்ந்து ஈழபதிவர்கள் சிலருக்கும் கருணாநிதியின் வால்களுக்கும் இடையே  நடக்கும் சண்டையில் பெரும்பாலான முகா எடுபிடிகள் கேக்கும் ஒரே கேள்வி   ஈழ தமிழனுக்கு ஏன் கருணாநிதியை பிடிக்கவில்லை என்பதே (பார்டா). அதற்கான விடையே இந்த பதிவு. இது ஒரு மீள் பதிவு ஆனாலும் இப்போதைய நிலையில் இந்த பதிவு சிறந்தது என்பதால் பதிவில் சில மாற்றங்கள் செய்து வெளியிடுகிறேன். இதில் கருணாநிதியை பிடித்ததற்கான காரணங்கள்  சொன்னது கொஞ்சம்தான்.  சொல்லாதது  இன்னும்  இன்னும்...... :(

மீண்டும் ஒரு கருணாநிதி புகழ் பதிவோடு சந்திப்போம்.
துஷ்யந்தன்.

15 கருத்துகள்:

 1. நல்ல தரமான பதிவு
  பாராட்டுக்கள்...

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் துஷி!இது போதாதே ராசா?(அந்த ராசா இல்லை,உங்களைத்தான் ராசா என்று சொன்னேன்!)இவர்களுக்கெல்லாம்(அபிஅப்பா போன்றோருக்கு)உறைக்காது தான்.30-ஆம் திகதி கூட்டம் போடுகிறார்களாம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாய் யோகா அப்பா.. எப்படி இருக்கீங்க?? ரெம்ப நாளைக்கு அப்புறம் சந்திக்கிறோம் இல்ல :) :) ராசாவா ??? ஹா ஹா ... கருணாநிதியோடு இருந்தால்தான் ராசா கூட ராசாவாக (பணக்காரனாக) இருக்க முடியும் போல.... :)))))

   அந்த அபியின் அப்பாவுக்கு எப்படி உறைக்கும் முகா போல்தானே அவன் தொண்டனும் இருப்பான்.... :(

   நீக்கு
 3. வேல் தர்மா.....

  நல்ல தரமான பதிவு
  பாராட்டுக்கள்..///வணக்கம் வேல் தர்மா!நீண்ட நாட்களுக்கு அப்புறம்.நல்லாயிருக்கிறீர்களா?

  பதிலளிநீக்கு
 4. சாட்டையடி. தி.மு.க வை ஆதரிக்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய பதிவு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி மோகன் அண்ணா.... அவர்களுக்கு (திமுகா) எதை படித்தாலும் உறைக்காது அண்ணா.... அவர்கள் எல்லாம் மனச்சாட்சியே இல்லாதவர்கள் இவர்களிடம் எல்லாம் இதை எதிர்பார்ப்பது எங்கள் தப்புத்தான் :(

   நீக்கு
 5. நண்பரே எனக்கு என்னமோ அபிஅப்பா அவர்கள் திமுக அனுதாபி இல்லை என்று தோன்றுகிறது. வேண்டுமென்றே ஒரு பதிவை எழுதி, சும்மா இருந்த எல்லோரையும் கலைஞரை கழுவி ஊத்துமாறு செய்து விட்டாரே....

  :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாய் பாலா அண்ணா.. எப்படி இருக்கீங்க.... ரெம்ப இடைவெளிக்கு பின் சந்திக்கிறோம் இல்ல. :))

   ஹா ஹா..... எனக்கும் உங்களைப்போலத்தான் தோனுகிறது , அபி அப்பா அதிமுகாவை சேர்ந்தவரோ!!!! ஏனெனில் நீங்கள் சொன்னது போல் முகாவுக்கு ஒரு ஆதரவு பதிவு போட்டு இப்படி பதிவுலகில் இப்படி ஆயிரத்தெட்டு முகா எதிர்ப்பு பதிவு வர வைத்துவிட்டாரே...... :) :))

   ஒரு வேலை இதைத்தான் அவரும் எதிர் பார்த்தாரோ.....!!!!!!!!!!! ஆவ்வ்வ்.....

   நீக்கு
 6. சொல்ல வேண்டியதெல்லாம் பதிவில் சொல்லி விட்டதால் இங்கு ஏஸ்கேப் துசி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹும்... சுதா அண்ணா உங்கள் பதிவும் பார்த்தேன், செம சாட்டையடி பதிவு... அந்த ஜென்மங்களுக்கு உறைக்குமா?????????? சந்தேகம்தான் :(

   நீக்கு
 7. Good to hear from you Thushi...Where have you been all these days?

  அது ஒரு செத்த பாம்பு...அடித்து ப்ரோயோஜனம் இல்லை...

  பதிலளிநீக்கு
 8. திரும்ப திரும்ப நினைவு படுத்தலும் நன்றே!

  @ரெவரி!இது ரெண்டாவது ஷோ என்பதால் நம்ம அரசியல்வாதிகள் பாணியில் ஒரு உதாரணம்.கட்டை பிரம்மசாரிகளுக்கும்,வீட்டில் சமையல் எல்லாம் முடிந்து ஜாலியா படம் பார்க்க் போகலாமென்று நினைக்கும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ரெண்டாவது ஷோ சினிமாவுக்குப் போவதுதான் வசதி.பாம்பு சாகாமல் அடிபட்டு நெளிந்து கொண்டிருந்தால் பின்னால் நடந்து வந்து கொண்டிருப்பவர்களுக்கு எச்சரிக்கையாக “ஏய் தம்பி!அங்கே ஒரு பாம்பை அடிச்சுப்போட்டிருக்குது.பார்த்து வாங்கன்னு” சத்தம் விட்டுட்டுப் போவது வழக்கம்.

  பதிலளிநீக்கு
 9. @பாலா!புது மாப்பிள்ளை!

  அபி அப்பா கூட நம்ம பதிவுலக மத போதகர்கள் மாதிரிதான்.கூடுதலான தகவலாக அவரே சொன்னது இப்ப அவர் பேராசிரியர் அன்பழகன் கட்சியாம்:)

  பதிலளிநீக்கு
 10. நீண்ட இடைவெளிக்கு பின் வந்து இருக்கீங்க... சந்தோஷமா இருக்கு தேங்க்ஸ் ராஜ நடராஜன் அண்ணா :))

  பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...