எனது வலைப்பூவில் வெளிவந்த "வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.." தொடர் பற்றி நிறைய பேசி விட்டாச்சு என்று நினைக்கிறேன். ஆகவே இந்த பதிவு என்பது இந்த தொடருக்கு அங்கீகாரம் தந்த என் நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்க மட்டுமே.
தொடர் வெளிவந்து முடிவடைந்த நிலையில் திடீரென என் நண்பன் மதுரன் "வார்த்தை தவறி விட்டாய் கண்ணமாவை.." மின் நூல் ஆக்கி அதை நாற்றில் வெளியிடப்போவதாக அறிவிக்க "நாற்று" குமத்தில் இருந்து நிரூபன், மணி, காட்டான், அம்பலத்தார், கந்தசாமி எல்லோரும் தங்கள் தொடர் வேலைப்பளுவுக்கு மத்தியில் கடந்த ஒரு மாதமாக இது சமந்தமாக ஒழுங்குகள் செய்து மற்றும் பல நண்பர்களுடன் சேர்ந்து சென்ற (29.04.2012) அன்று நாற்றில் "வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா .." மின் நூல் வெளியீட்டை மிக விமர்சையாக கொண்டாடினார்கள்.
இனி விழாவில் இருந்து...
"வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.." மின் நூல் வெளியீட்டு நிகழ்வை நம்ம "வசந்த மண்டபம்" மகேந்திரன் அண்ணா தலைமையேற்று நடத்தினார்.
நிகழ்ச்சியை "விக்கியுலகம்" விக்கி மாமா விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.
அதை தொடர்ந்து என் நண்பன் "சிறகுகள்" மதுரன் வரவேற்பு உரை நிகழ்த்தினான்.
அதை தொடர்ந்து "வீடு" சுரேஷ்குமார் அண்ணா "வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.." மின் நூலை "நாற்று" குழுமத்தில் வெளியிட்டார்.
அதனை தொடர்ந்து நம்ம "மாத்தியோசி" மணி நூல் விமர்சன உரையை நிகழ்த்தினார்.
நாற்றில் மிக சந்தோஷமாக நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சியின் இறுதியில் நம்ம "விழியில் விழுந்தவை.." கலைவிழி அக்கா நன்றியுரை நிகழ்த்தி நிகழ்ச்சியை இனிதே நிறைவடைய செய்தார்.
நாற்றில் மிக சந்தோஷமாக நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சியின் இறுதியில் நம்ம "விழியில் விழுந்தவை.." கலைவிழி அக்கா நன்றியுரை நிகழ்த்தி நிகழ்ச்சியை இனிதே நிறைவடைய செய்தார்.
"வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.." தொடரை மின் நூல் ஆக்கி வெளியிட்ட நாற்று குழுமத்துக்கும், நிகழ்வில் கலந்து கொண்ட எல்லோருக்கும் என் நன்றிகள்.
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.. மின் நூலை தரவிறக்க இங்கே கிளிக் செய்யவும் / இணைய வேகம் குறைவாக இருப்பவர்கள் இங்கே கிளிக் செய்யவும்.
இந்த நிகழ்வு பற்றியும் தொடரின் பாதிப்பிலும் "வீடு" சுரேஷ் அண்ணா எழுதிய கவிதை பதிவை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.