வியாழன், செப்டம்பர் 15, 2011

ஊரில் இருப்பவர்கள் ஏன் இப்படி..??


வெளிநாட்டில் இருப்பவன் எல்லோரும் தண்ணி பொண்ணு என்றுதான்
நித்தம் திரிகிறான் என்று  ஏன் நினைக்கிறார்கள்.

எப்போது போன் எடுத்தாலும் இன்னைக்கு வேலை இல்லையோ
என்பதைத்தான் முதல் கேள்வியாக ஏன் கேட்கிறார்கள்.

வெளிநாட்டில் இருப்பவர்கள் எல்லோர்  வீட்டிலும்  காசு மரம்
இருப்பது போலவே ஏன் நினைக்கிறார்கள்.

கேக்கும் போதெல்லாம் பணம் கொடுக்க வேண்டும்,  இல்லையோ
அவன் மாறிவிட்டான் என்று நா கூசாமல் ஏன் சொல்கிறார்கள்.

அங்கே அவர்கள் ஜபோன் ஜபேட்  என்று வசதியாக இருந்து கொண்டு
அதேயே நாங்கள் இங்கே வைத்து இருந்தால் பழசை மறந்து
பந்தா காட்டுது பார் என்று ஏன் குசுகுசுக்கிறார்கள்.

திருமண வயதை தாண்டினால் கூட வருவாய் நின்றுவிடும் என்று
நினைத்து நீ இன்னும் சின்னபிள்ளை என்று சொல்லி சொல்லியே
ஏன் வஞ்சிக்கிறார்கள்.

இங்கிருப்பவர்கள் பணத்தில் செத்த வீட்டைக்கூட  திருவிழா போல
பகட்டாய்  ஏன்  கொண்டாடுகின்றார்கள்.

இங்கிருப்பவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அவர்களை 
ஒரு  பணம் தரும் இயந்திரமாகவே ஏன் பார்க்கிறார்கள்.

அவர்கள் பேஸ்புக், ஸ்கேப்  என்று அரட்டை அடித்தால் அது பொழுது 
போக்கு, வளர்ச்சி.   அதையே நாங்கள் செய்தால்,  பாரு  போன இடத்தில் 
உழைத்து முன்னேறாமல் தறுதலையா எந்த நேரமும் இதிலேயே 
நிக்குது  என்று ஏன் சொல்கிறார்கள். 

வசதியாக இருந்தால் கூட  வெளிநாட்டில் இருப்பவர்களிடம் தங்கள்
கஸ்ரங்களை மட்டும் எந்நேரமும் சொல்லி ஏன் புலம்புகிறார்கள்.

வீடாக இருந்தாலும் சரி விழாவாக இருந்தாலும் சரி,  எல்லாம்
வெளிநாட்டு முறையில்தான் செய்ய வேண்டும் என்று சொல்லி ஏன் அடம்பிடிக்கிறார்கள்.

ஆ.. ஊ..  என்றால் உடனே நீங்கள் வெள்ளைக்காரனுக்கு கோப்பை
கழுவது எங்களுக்கு தெரியாதாக்கும் என்ற தோணியில்
ஏன் பேசுகிறார்கள்.

தங்களுக்கு காதல் வந்தால் அது தெய்வீகம், அதே எங்களுக்கு வந்தால் 
போன இடத்தில் இந்த கண்றாவி எல்லாம் தேவையா என்று ஏன் 
சீறுகிறார்கள்.

ஊரில்  தங்கள் தாங்கள் பார்க்கும் பெண்ணைத்தான்  இங்கிருப்பவர்கள்
திருமணம் செய்ய வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறார்கள்.


டிஸ்கி:  இதில் எதுவும் என் அனுபவம் இல்லை என்ற போதிலும்,
எங்காவது ஒரு விழாவில் இங்கிருப்பவர்கள் ஒன்று கூடினால்
ஊரில் இருப்பவர்கள் ஏன் இப்படி.. என்று இவற்றை கூறுவதை
பார்த்து இருக்கேன் அதேயே இங்கேயும் தொகுத்துள்ளேன்.
ஊரில் இருப்பவர்கள் எல்லோரும் இப்படி இல்லை என்பது
என் அசைக்க முடியாத கருத்து அனுபவம். ஆகவே வழமைபோல்
இந்த பதிவிலும் என்னை கும்மாதீங்கப்பா..நானே சரண்டர்
ஆகிட்டேன் போதுமா... அவ்வ்.

                   
              

96 கருத்துகள்:

  1. நியாயமான கேள்விகள் தான் நண்பா . வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானட நண்பா .

    பதிலளிநீக்கு
  2. நண்பா பதிவ திருடிட்டான்களா விடுங்க பாஸ் அவங்க சுயமாக சிந்திக்க , தேட இயலாதவங்க . நம்ம பதிவ நாளும் திருடுரானுங்க பாஸ் . நம்ம பதிவ வேற வலைத்தளத்தில் பார்த்தால் வோர்ட் , நேரம் இருந்தால் கமெண்ட் போடுறன் பாஸ் இது எப்பிடி

    பதிலளிநீக்கு
  3. ஜயா வணக்கமுங்க...அம்மா வணக்கமுங்க.......நான் தாங்க ஸ்டையில் நாராயணன் கஞ்சிபஜார் வலைப்பதிவின் உரிமையாளர்.இன்றைக்குதானுங்க வலைப்பதிவு எழுதவந்து இருக்கேன்.

    என்னையும் இந்த வலையுலகில் ஏற்றுக்கொள்ளுங்கள் பிரபல பதிவர் பெருமக்களே..நீங்களை எல்லாம் வந்து விடுவீங்கனு நினைக்கிறன்.....எனவே எல்லா பிரபல பதிவரும் வாருங்க உங்க ஆதரவை அள்ளிதாருங்க.

    பதிலளிநீக்கு
  4. நியாய மான ஆதங்கமுங்கோ....

    அருமையா இருக்குங்கோ ஒங்க பதிவு...

    பதிலளிநீக்கு
  5. காப்பி அடிக்கும் பயலுகலுக்கு எதும் செய்யனுமுங்கோ........

    பதிலளிநீக்கு
  6. பதிவுத்திருடர்களைத் திருத்தவோ தண்டிக்கவோ வழி ஏதும் உண்டா??????

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் மருமோனே என்னையா ஏன் ஏன் என்று போட்டுட்டு கேள்விகுறிய போடல அதபோட்டாதான்யா எனக்கு விளங்குமையா நீங்க கேள்வி கேட்டிருக்கீங்கன்னு.. ஹி ஹி

    பதிலளிநீக்கு
  8. வெளிநாட்டில இருக்கிறவங்க ஏன்யா வட்டிக்கு வாங்கி காச அனுப்பி கிலுக்குறீங்க..? அப்ப அவங்க நீங்க காசு மரம் வைச்சிருக்காங்கண்னு நினைப்பாங்கதானேயா..!!?

    பதிலளிநீக்கு
  9. இஞ்ச எப்படா சிலோன் மரக்கறி,சிலோன்மீன்(இதுமட்டும் எனக்கு விளங்கள இஞ்ச கடல்ல என்ன நல்ல தண்ணி மீனா இருக்கையா...?) தமிழ்கடையில கொத்து பரோட்டான்னு சாப்பிட்டுட்டு அங்க போய் நாங்க சீஸ்சும் பிஸ்ஸாவும் தான் சாப்பிவோம்ன்னு றீலு விட்டா அவங்க அதபாத்திட்டு.. எங்களையே திருப்பி தாக்கிறாங்கையா...!!!))

    பதிலளிநீக்கு
  10.  எல்லோரும் அப்படியில்லங்கோ.. இஞ்ச இருக்கிறவர்களால்தான்யா அங்க இப்படி நடக்குது.. தாங்க அனுப்புற காசு எப்படி செலவாகிறதுன்னு இவர்கள் கணக்கு கேட்கவேண்டும்..? இப்பிடி இஞ்ச கஸ்டப்பட்டு அனுப்புற காசை சிலபேர் தேவையில்லா ஆடம்பரங்களுக்கு செலவளிக்கும்போது.. மற்றவர்கள் மனசில் வெளிநாட்டு ஆசையை தூண்டி விடுகிறோம்..அவர்கள்  நன்றக படிக்கும் பிள்ளைகளையும் படிப்பை நிறுத்தி இங்கு அனுப்புகிறார்கள்..இங்கு வந்து அவர்கள் படும்பாடுதான்யா சொல்லி மாலாது.. பேந்து வாறேன்யா நானே தனிய கும்மியடிக்கவிரும்பல...ஹி ஹி

    பதிலளிநீக்கு
  11. என்ன மருமோனே உன்ர எழுத்தையும் கொப்பியடிக்கிறாங்களா..?? அப்ப நீயும் பிரபல பதிவர்தான்யா..!!!!  இனி நீங்க வாந்திஎடுத்தாலும் அமுதம்ன்னு அள்ளிச்சாப்பிட போறாங்கையா இந்த நரகம் பிடிச்சவங்க..!!?? இவ்வளவு நாளும் பெரிய பெரிய தளங்கள்தான் இப்பிடி செய்ததென்னா இப்ப சகோதர பதிவர்களே இப்படியா..!!?வெட்கம்,வெட்கம் தானா யோசிக்க மாட்டாங்களா..?? இல்ல தலையில ஒன்னுமே இல்லையா..??

    பதிலளிநீக்கு
  12. வசதியாக இருந்தால் கூட வெளிநாட்டில் இருப்பவர்களிடம் தங்கள்
    கஸ்ரங்களை மட்டும் எந்நேரமும் சொல்லி ஏன் புலம்புகிறார்கள்.//


    ஆமாய்யா என் அனுபவமும் அதுதான், லீவுக்கு போயிட்டு வெளிநாடு வந்த பத்தாவது நாளே பணம் அனுப்புன்னு கேக்குறாங்க கஷ்டமா இருக்கு, இவங்க திருந்தமாட்டாங்க!!!!

    பதிலளிநீக்கு
  13. என்னாது பதிவை சுட்டுட்டானா எட்றா அந்த வீச்சறுவாளை, எட்றா பசுபதி வண்டியை வீசிருறேன் வீசி....

    பதிலளிநீக்கு
  14. ஒரு ஆணும் இன்னொரு ஆணும் திருமணம் செய்வதையெல்லாம் நியாயப் படுத்தத் தெரிந்த உங்களுக்கு இந்த சப்பை மேட்டர்களை நியாயப் படுத்த முடியாதா? நீங்க பண்ணுவதெல்லாம் உங்க தனி மனித உரிமை அதில் யாரும் நுழைய முடியாது, உங்க ஊர்க்காரப் பயல்கள் பேசுவது நினைப்பது எல்லாம் அவனுங்க தனி மனித உரிமை, அதுல நீங்க தலையிடாதீங்க, முடிஞ்சது மேட்டர்.

    பதிலளிநீக்கு
  15. நண்பரே நமக்கு எப்போதுமே அக்கரைப்பச்சைதான். அதனால் வருவதுதான் இந்த கேள்விகள், மற்றும் கருத்துக்கள்.

    அப்புறம் காப்பி அடிக்கும் ஜென்மங்களை என்ன செய்வதேன்றே தெரியவில்லை. எனக்கு தெரிந்து இவர்கள் நெடுநாள் பதிவுலகில் நிலைத்ததில்லை.

    பதிலளிநீக்கு
  16. சேம் பிளேட் ))

    உண்மையிலே நாட்டில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு புலம்பெயர்ந்து உள்ள தம் உறவுகளின் நிலையில் புரிதல் இல்லை

    பதிலளிநீக்கு
  17. ///இங்கிருப்பவர்கள் பணத்தில் செத்த வீட்டைக்கூட திருவிழா போல
    பகட்டாய் ஏன் கொண்டாடுகின்றார்கள்./// இது நாட்டில் இருக்கும் போதே நேரில் கண்டது )))

    பதிலளிநீக்கு
  18. ///ஆ.. ஊ.. என்றால் உடனே நீங்கள் வெள்ளைக்காரனுக்கு கோப்பை
    கழுவது எங்களுக்கு தெரியாதாக்கும் என்ற தோணியில்
    ஏன் பேசுகிறார்கள்.// இன்று இலங்கையின் வருவாயில் பெரும் பகுதி தங்கி நிற்ப்பது அதே கோப்பை கழுவும் மக்களிடம் இருந்தான அந்நிய செலாவணி தான் என்று சொல்ல வெந்டியதூ தானே ))

    பதிலளிநீக்கு
  19. வெளிநாட்டுக்காரர் பற்றி நீங்கள் கூறியது உண்மைதான்!

    அப்புறம் பதிவு திருட்டு! என்னுடைய பதிவொன்றையும் (தமிழ்ப்பெண்களா இப்பிடி?) அப்பிடியே படங்களோட ஒரு இணையத்தளம் சுட்டுடிச்சு!
    இன்னும் எத்தனையோ? நம்ம மொக்கராசு மாமா தான் இதைச் சொன்னார்! என்ன செய்வது...விடுங்க பாஸ்!

    பதிலளிநீக்கு
  20. சாரி மச்சி உங்கள் பதிவை முதல்லே படிச்சேன் ஆனால் கருத்துரை போடமுடியவில்லை..காரணம்..மச்சான்சாரின் தளத்தில் ஒரு காரசாரமான விவாதம் போய்க்கொண்டு இருந்தது...எனவே மன்னிக்கவும்..

    உங்கள் ஆதங்கம் மிகச்சரியானதே...அப்படியே ஊரில் உள்ளவர்கள் என்ன கதைக்கின்றார்கள் என்பதை சரியாகச்சொல்லி இருக்கின்றீங்கள்..இதான் உண்மை.யதார்த்தம்.

    வெளிநாட்டில் இருந்தால் அவர்களும் மனிதர்கள் தானே அவருக்குள்ளும் ஆசைகள் கனவுகள் இருக்கும் தானே இதைபுரிந்து கொள்ள ஏன் மறுக்கின்றார்களே?அது அவர்களுக்கே வெளிச்சம்.

    அப்பறம் காப்பி அடிப்பவர்களை என்ன சொல்ல....உங்களுக்குத்தான் தெரியுமே என் நிலமை...அவங்களாக பார்த்து திருந்தினால்தான் உண்டு

    பதிலளிநீக்கு
  21. சாட்டையடி பதிவு துசி!
    ஒவ்வொரு வரிகளும் உறைக்கின்றது.

    இதே போன்று வெளிநாடுகளில் இருந்து கொண்டு உள்ளூரை பற்றி பேசுபவர்கள் பற்றியும் எழுத வேண்டும். (ஹீ ஹீ சமநிலை)

    பதிவுத்திருட்டு. நோ கமெண்ட்ஸ்

    பதிலளிநீக்கு
  22. வெளினாட்டில் வாழும் மக்களின் ஆதங்கங்களை தெளிவா சொல்லி இருக்கீங்க. பதிவுத்திருட்டும் சகிக்க முடியாத விஷயமா இருக்கு.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் சார்! இனிய வியாழக்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்க!

    புலம்பெயர் தமிழர்கள் பற்றி, ஊரில் இருப்பவர்களின் மனநிலை என்ன? என்பதை அழகாக எழுதியிருக்கீங்க!

    ஊரில் உள்ள மக்களுக்கு வெளிநாட்டு மக்களின் அரசியல் நிலைப்பாடு மட்டுமல்ல, சமூக நிலைப்பாடும் புரியாத புதிர்தான் போலும்!

    மேலும் காப்பியடிப்பவர்களுக்கு....... என்னத்தை சொல்வது? மனிதர்களா அவர்கள்?

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் துசி மிகவும் சிக்கலான விடயம் இது இக்கரையில் நாம் படும் துயரங்களை படம்போட்டுச் சொல்வது என்பது உள்வீட்டில் மரனம் நடக்கும் போது அயல்வீட்டில் கலியாணம் நடப்பதைப் போன்றது இன்னும் விரிவாகப் பேசலாம் இரவு வருகின்றேன்!
    பதிவு திருட்டு நீங்கள் சொன்னது போல் எனக்கும் நேரம் இல்லை இவர்களுக்கு கருத்துச்சொல்வதற்கு!

    பதிலளிநீக்கு
  25. என்ன மருமோனே உன்ர எழுத்தையும் கொப்பியடிக்கிறாங்களா..?? அப்ப நீயும் பிரபல பதிவர்தான்யா..!!!! ////

    வாழ்த்துக்கள் பாஸ்.....

    பதிலளிநீக்கு
  26. உந்த வெளிநாட்டு மேட்டர் பெரிய பிரச்சனை தான்.........
    உங்களுக்கும் ஆப்பு அடிக்கிராங்களா....

    பதிலளிநீக்கு
  27. நியாயம் தான்
    என்ன செய்ய உறவுகள் நம்மை ஒரு ATM ஆக பாவிப்பது கொடுமை தான்..

    பதிலளிநீக்கு
  28. உங்கள் ஆதங்கம் நியாயமானதுதான்..
    துஷி...

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் பாஸ்.

    தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்,

    அதிக கமெண்டுகள் போட முடியாத காரணத்தினால் ஓரிரு கமெண்டுகளோடு நிறுத்திக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  30. புலம் பெயர் உறவுகளை பணம் காய்க்கும் மெசினாக எம்மவர்கள் நோக்குவதை அருமையாகப் பதிவிட்டிருக்கிறீங்க...

    இதெல்லாம் ஹலோ என்று சொல்லியதும் கிலோவில கிடைக்கும் என்று வாழும் உறவுகளுக்கு எப்படிப் புரியப் போகிறது?

    பதிவுத் திருட்டு: சுறணையற்ற ஜென்மங்களின் செயல்.

    பதிலளிநீக்கு
  31. மருமோனே எனக்கு அன்மையில் அதிகாலை 4மணிக்கு இலங்கையில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.. இங்கு இருக்கும் நண்பரின் தந்தையார் இறந்த செய்தியை தெரிவுக்கும்படி.. ஏன் அவரிடம்தானே ஒன்றுக்கு முன்று தொலைபேசிகள் இருக்கின்றனவே என்றால் மூன்றும் வேலை செய்யவில்லைன்னு கூறுகிறார்கள்...!!!!????

    தந்தையின் மரணச்செய்தியை கூட தெரிவிக்க விடாமல் செய்தது எது..!!!????)))

    பதிலளிநீக்கு
  32. இவர்களுக்கு நாம்  பணம் கொட்டும் இயந்திரம்தான் நமக்கு இருக்கும் ஆசாபாசங்களை ஒரு சிலர் புரிந்து கொள்வதில்லை போட்டி மனப்பாண்மையில் ஒரு சிலர் செய்யும் ஆடம்பரச் செலவுகள் மற்றவர் அர்த்தராத்திரியில் புதுப்பணக்காரன் குடைபிடிப்பான்  என்பதை வழிமொழிகின்றார்கள் நாம் அதிக நேரம் கோப்பை கழுவி சிலரை தூக்கிவிட இரக்கப்பட்டால் அவர்கள் எங்களை மிதித்துவிட்டு சுயநலமாக செயல்படும் நிலையில் இருக்கும் போது என்ன செய்வது ?
    ஒரு சிலர் யுத்தம் என்ற சாட்டில் சோம்போறிகளாக இருக்கின்றார்கள் நாம் இங்கு 20 மணிநேரம் வேலை செய்து அனுப்பும் பணத்தில் நடிகர்களுக்கு பால் ஊத்தும் சகோதரங்கள் ஒரு புறம் அவன் வேலைக்குப் போய் உழைத்துத்த தருவான் என வக்காலத்து வாங்கும் தாய்க்குலத்திற்கு தெரிவதில்லை பிள்ளைகள் இங்கு நாய் போல் ஓடும் அவசர இயந்திரவாழ்க்கை! 
    அது மட்டுமல்ல அண்ணன்மார் சிலர்  இங்கு கலியாணம் முடிக்காமல் கடன் சுமையில் வாட தம்பிமார் ஒருத்தியை காதலித்து குடும்பமாகி அக்குழந்தைக்கும் பால் வாங்கி குடுத்து அந்தக் குடும்பத்தையும் தாங்கும் சிலரையும் நான் பார்க்கின்றேன் இங்கு! இப்படி இருக்கும் போது அங்கு இருப்போர் செய்யும் ஆடம்பரங்களை எண்ணினால் சில வேலை வெள்ளைத்தோல் போல் சுயநலமாக நாம் உழைப்பது நமக்கு என்று போவது மேல் என்பது என் கருத்து சகோ!




    பதிலளிநீக்கு
  33. இவர்களுக்கு நாம்  பணம் கொட்டும் இயந்திரம்தான் நமக்கு இருக்கும் ஆசாபாசங்களை ஒரு சிலர் புரிந்து கொள்வதில்லை போட்டி மனப்பாண்மையில் ஒரு சிலர் செய்யும் ஆடம்பரச் செலவுகள் மற்றவர் அர்த்தராத்திரியில் புதுப்பணக்காரன் குடைபிடிப்பான்  என்பதை வழிமொழிகின்றார்கள் நாம் அதிக நேரம் கோப்பை கழுவி சிலரை தூக்கிவிட இரக்கப்பட்டால் அவர்கள் எங்களை மிதித்துவிட்டு சுயநலமாக செயல்படும் நிலையில் இருக்கும் போது என்ன செய்வது ?
    ஒரு சிலர் யுத்தம் என்ற சாட்டில் சோம்போறிகளாக இருக்கின்றார்கள் நாம் இங்கு 20 மணிநேரம் வேலை செய்து அனுப்பும் பணத்தில் நடிகர்களுக்கு பால் ஊத்தும் சகோதரங்கள் ஒரு புறம் அவன் வேலைக்குப் போய் உழைத்துத்த தருவான் என வக்காலத்து வாங்கும் தாய்க்குலத்திற்கு தெரிவதில்லை பிள்ளைகள் இங்கு நாய் போல் ஓடும் அவசர இயந்திரவாழ்க்கை! 
    அது மட்டுமல்ல அண்ணன்மார் சிலர்  இங்கு கலியாணம் முடிக்காமல் கடன் சுமையில் வாட தம்பிமார் ஒருத்தியை காதலித்து குடும்பமாகி அக்குழந்தைக்கும் பால் வாங்கி குடுத்து அந்தக் குடும்பத்தையும் தாங்கும் சிலரையும் நான் பார்க்கின்றேன் இங்கு! இப்படி இருக்கும் போது அங்கு இருப்போர் செய்யும் ஆடம்பரங்களை எண்ணினால் சில வேலை வெள்ளைத்தோல் போல் சுயநலமாக நாம் உழைப்பது நமக்கு என்று போவது மேல் என்பது என் கருத்து சகோ!




    பதிலளிநீக்கு
  34. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  35. இங்கே அரபு நாடுகளில் வேலை செய்யும் பெரும்பாலான தொழிலாளர்களின் நிலையும் அது தான். இங்கே அவர்கள் வெயிலில் சாக, அங்கே பந்தா பண்ணி நம் மக்கள் ஜொலிப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  36. அனுப்பிய பணத்திற்கு கணக்குக் கேட்பதும், தேவையில்லாத விஷயங்களுக்கு பணம் அனுப்பாமல் விடுவதும் நல்லது.

    பதிலளிநீக்கு
  37. //அங்கே அவர்கள் ஜபோன் ஜபேட் என்று வசதியாக இருந்து கொண்டு
    அதேயே நாங்கள் இங்கே வைத்து இருந்தால் பழசை மறந்து
    பந்தா காட்டுது பார் என்று ஏன் குசுகுசுக்கிறார்கள்.//

    இது வெளிநாட்டில் இருந்தால் மட்டுமல்ல, உள்ளூரில் வைத்திருந்தால்கூட குசுகுசுப்பு வரவே செய்யும்..

    பதிலளிநீக்கு
  38. குடும்பத்தில் மூத்தவன் பலமணிநேரம் அடுப்பு வெக்கையில் நின்று வாங்கி அனுப்பும் பணத்தின் பெறுமதி தெரியாமல் நவீன மோட்டார் சைக்கிளும் கைபேசியோடும் திரியும் தம்பிமார் சிலருக்குப் புரிவதில்லை அண்ணணின் முதுகுவலி ! தட்டிக் கேட்டால் நீங்கள் படிக்கவில்லை  உங்களுக்கு என்ஜாய் பண்ணத் தெரியவில்லை என்று சொல்லும் தம்பி மாரை இங்கு கொண்டுவந்து குளிரில் கோப்பை கழுவவிட்டால் தான் தெரியும் அண்ணனின் கோப்பை கழுவும் பணத்தின் வலி தெரியும் ? இப்படியான சிலரால் உண்மையில் தேவையான உதவியோருக்கு கூட உதவமுடியாத நிலையை தாயகத்தில் இருப்போர் உருவாக்கின்றனர்.
    இன்னொருவகையினர் சிலர்  வெளிநாட்டில் சகோதரங்கள் இருப்போரின் தங்கைமாரை காதல் வலையில் வீழ்த்தி அவர்களின் அறியாமையை பயன்படுதி விட்டு கலியாணம் என்று வரும் போது கோடியில் சீதனம் கேட்கின்றனர் அவர்களுக்குத் தெரிவதில்லை இங்கு இருப்போர் கோடியை பேப்பரில் எழுதித்தான் பார்த்திருப்பார்கள் என்று இங்கு இருப்பது தொடர் மாடி ஊர் என்றாளும் தனி வீட்டின் பின்புறம் கோடி இருக்கும் கூட்டியந்து காட்டமுடியும் இங்கு எதைக் காட்டுவது!
    யுத்தம் என்ற சாட்டில் நாம் சிலர் செய்யும் செயல்கள் சமுகத்தையே சுயநலவாதிகளாக மாற்றுகின்றது. நாம் ஒரு படம் பார்க்க எத்தனை தரம் ஜோசிக்கின்றோம் வருமானவரி கட்டனும் வட்டி கட்டனும் என்று ஓடும் போது அவர்கள் மாலை என்றாள் ரைஜின்,மெண்டிஸ் என்று கொண்டாட்டம் போடுகின்றார்கள் சிலர் அவர்களுக்கு பணம் அனுப்புவதை தவிர்த்தால் எல்லாம் சரியாகும் இரக்கப்பட்டால் இழப்பது அதிகம்!

    பதிலளிநீக்கு
  39. //வெளிநாட்டில் இருப்பவன் எல்லோரும் தண்ணி பொண்ணு என்றுதான்
    நித்தம் திரிகிறான் என்று ஏன் நினைக்கிறார்கள்.//

    வெளிநாட்டை விட நம்மூரில் தான் இவையெல்லாம் எளிதாகக் கிடைக்கின்றன இப்போது!

    பதிலளிநீக்கு
  40. திருமண வயதை தாண்டினால் கூட வருவாய் நின்றுவிடும் என்று
    நினைத்து நீ இன்னும் சின்னபிள்ளை என்று சொல்லி சொல்லியே
    ஏன் வஞ்சிக்கிறார்கள்.

    பாவிகள்

    பதிலளிநீக்கு
  41. தங்களுக்கு காதல் வந்தால் அது தெய்வீகம், அதே எங்களுக்கு வந்தால்
    போன இடத்தில் இந்த கண்றாவி எல்லாம் தேவையா என்று ஏன்
    சீறுகிறார்கள்.//

    ஆதங்கம் புரிகிறது நண்பா!

    பதிலளிநீக்கு
  42. வணக்கம் துஷ்யந்தன்!என்ன செய்ய?வெளி நாட்டிலிருந்து சுயாதீன அமைப்புக்கள் துன்பம் சுமந்த மக்களுக்கு உதவுவதற்காக,அனுப்பி வைக்கும் உதவிப் பொருள்களை தம் சுய விளம்பரத்துக்காக பயன்படுத்திக் கொள்ளும் புல்லுருவிகளின் செயல் போன்றது தான் இந்தப் பதிவுத் திருட்டும்!சுயமாக சிந்திக்கத் தெரியாவிடில் எதற்கு ப்ளாக்?அடுத்தவன் நெருப்பில் குளிர் காயும் ஜென்மங்கள்,த்தூ..................!

    பதிலளிநீக்கு
  43. வணக்கம் உங்கள் ஆதங்கம் புரிகின்றது..ஒவ்வொறு வெளிநாடு வாழ் மக்களின் குரலாக உங்கள் பதிவு இருக்கின்றது...நான் ஒருபுதுப்பதிவர் எதும் தப்பா சொல்லி இருந்தால் மன்னிச்சுக்கோங்கோ...என் தளத்திற்கும் வந்து ஆதரவைதாங்கோ.

    பதிலளிநீக்கு
  44. இருப்பவனுக்கோ வந்து விட ஆசை
    வந்தவனுக்கோ சென்று விட ஆசை
    இதுதான்யா வெளிநாட்டு வாழ்க்கை
    ரொம்ப அருமையான பதிவு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  45. பதிவை திருடுபவர்களை ஹிட்லரின் வதை முகாம்களுக்கு அனுப்பமுடியுமா???

    பதிலளிநீக்கு
  46. Mahan.Thamesh சொன்னது…
    நியாயமான கேள்விகள் தான் நண்பா . வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானட நண்பா .<<<<<

    தேங்க்ஸ் பாஸ், அதுவும் நெசம்தான் பாஸ்

    பதிலளிநீக்கு
  47. Mahan.Thamesh கூறியது...
    நண்பா பதிவ திருடிட்டான்களா விடுங்க பாஸ் அவங்க சுயமாக சிந்திக்க , தேட இயலாதவங்க . நம்ம பதிவ நாளும் திருடுரானுங்க பாஸ் . நம்ம பதிவ வேற வலைத்தளத்தில் பார்த்தால் வோர்ட் , நேரம் இருந்தால் கமெண்ட் போடுறன் பாஸ் இது எப்பிடி<<<<<<<<<<<<<<

    ஹா ஹா. ஆனாலும் உங்கள் கொள்கை எனக்கு பிடிச்சு இருக்கு... இனி நானும் இதையே செய்யுறேன் ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  48. ஸ்டைல் நாராயணன் உரிமையாளர் கஞ்சிபஜார் கூறியது...
    ஜயா வணக்கமுங்க...அம்மா வணக்கமுங்க.......நான் தாங்க ஸ்டையில் நாராயணன் கஞ்சிபஜார் வலைப்பதிவின் உரிமையாளர்.இன்றைக்குதானுங்க வலைப்பதிவு எழுதவந்து இருக்கேன்.

    என்னையும் இந்த வலையுலகில் ஏற்றுக்கொள்ளுங்கள் பிரபல பதிவர் பெருமக்களே..நீங்களை எல்லாம் வந்து விடுவீங்கனு நினைக்கிறன்.....எனவே எல்லா பிரபல பதிவரும் வாருங்க உங்க ஆதரவை அள்ளிதாருங்க.<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    வாறது எல்லாம் ஒக்கே...... யார பிரபல பதிவர் எண்டு சொன்னீங்க???என்னய்யா???? அவ்வ்வவ்வ்

    பதிலளிநீக்கு
  49. ஸ்டைல் நாராயணன் உரிமையாளர் கஞ்சிபஜார் சொன்னது…
    நியாய மான ஆதங்கமுங்கோ....

    அருமையா இருக்குங்கோ ஒங்க பதிவு...<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    தேங்க்ஸ் தல

    பதிலளிநீக்கு
  50. ஸ்டைல் நாராயணன் உரிமையாளர் கஞ்சிபஜார் சொன்னது…
    காப்பி அடிக்கும் பயலுகலுக்கு எதும் செய்யனுமுங்கோ........<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<


    அதுதானே நமக்கும் தெரியாம இருக்கு
    அவ்வவ்

    பதிலளிநீக்கு
  51. !* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…
    உங்கள் ஆதங்கம் நியாயமானதுதான்..<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    தேங்க்ஸ் பாஸ்

    பதிலளிநீக்கு
  52. துளசி கோபால் சொன்னது…
    பதிவுத்திருடர்களைத் திருத்தவோ தண்டிக்கவோ வழி ஏதும் உண்டா????<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    அவர்களே திருந்தினால் சரி பாஸ் :(

    பதிலளிநீக்கு
  53. காட்டான் சொன்னது…
    வணக்கம் மருமோனே என்னையா ஏன் ஏன் என்று போட்டுட்டு கேள்விகுறிய போடல அதபோட்டாதான்யா எனக்கு விளங்குமையா நீங்க கேள்வி கேட்டிருக்கீங்கன்னு.. ஹி ஹி <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    அவ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  54. காட்டான் சொன்னது…
    வணக்கம் மருமோனே என்னையா ஏன் ஏன் என்று போட்டுட்டு கேள்விகுறிய போடல அதபோட்டாதான்யா எனக்கு விளங்குமையா நீங்க கேள்வி கேட்டிருக்கீங்கன்னு.. ஹி ஹி <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    அவ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  55. காட்டான் சொன்னது…
    வெளிநாட்டில இருக்கிறவங்க ஏன்யா வட்டிக்கு வாங்கி காச அனுப்பி கிலுக்குறீங்க..? அப்ப அவங்க நீங்க காசு மரம் வைச்சிருக்காங்கண்னு நினைப்பாங்கதானேயா..!!? <<<<<<<<<<<<<<<<<<<<<<<<


    இதுவும் சரியாத்தான் இருக்கு மாமா

    பதிலளிநீக்கு
  56. காட்டான் சொன்னது…
    இஞ்ச எப்படா சிலோன் மரக்கறி,சிலோன்மீன்(இதுமட்டும் எனக்கு விளங்கள இஞ்ச கடல்ல என்ன நல்ல தண்ணி மீனா இருக்கையா...?) தமிழ்கடையில கொத்து பரோட்டான்னு சாப்பிட்டுட்டு அங்க போய் நாங்க சீஸ்சும் பிஸ்ஸாவும் தான் சாப்பிவோம்ன்னு றீலு விட்டா அவங்க அதபாத்திட்டு.. எங்களையே திருப்பி தாக்கிறாங்கையா...!!!)) <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    எல்லாப்பக்கம் நல்லவங்களும் இருக்காங்க கெட்டவங்களும் இருக்காங்க இத நானும் ஒத்துக்கிறேன், மாமா பேச்சுக்கு பதில் பேச்சு உண்டோ. ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  57. காட்டான் சொன்னது…
    எல்லோரும் அப்படியில்லங்கோ.. இஞ்ச இருக்கிறவர்களால்தான்யா அங்க இப்படி நடக்குது.. தாங்க அனுப்புற காசு எப்படி செலவாகிறதுன்னு இவர்கள் கணக்கு கேட்கவேண்டும்..? இப்பிடி இஞ்ச கஸ்டப்பட்டு அனுப்புற காசை சிலபேர் தேவையில்லா ஆடம்பரங்களுக்கு செலவளிக்கும்போது.. மற்றவர்கள் மனசில் வெளிநாட்டு ஆசையை தூண்டி விடுகிறோம்..அவர்கள் நன்றக படிக்கும் பிள்ளைகளையும் படிப்பை நிறுத்தி இங்கு அனுப்புகிறார்கள்..இங்கு வந்து அவர்கள் படும்பாடுதான்யா சொல்லி மாலாது.. பேந்து வாறேன்யா நானே தனிய கும்மியடிக்கவிரும்பல...ஹி ஹி <<<<<<<<<<<<<<<<<<<<<<


    உண்மை உண்மை , இதைப்பற்றி ஏன் நீங்கள் ஒரு பதிவு போடா படாது ( கோர்த்துவிட்டோம் இல்ல )

    பதிலளிநீக்கு
  58. காட்டான் சொன்னது…
    என்ன மருமோனே உன்ர எழுத்தையும் கொப்பியடிக்கிறாங்களா..?? அப்ப நீயும் பிரபல பதிவர்தான்யா..!!!! இனி நீங்க வாந்திஎடுத்தாலும் அமுதம்ன்னு அள்ளிச்சாப்பிட போறாங்கையா இந்த நரகம் பிடிச்சவங்க..!!?? இவ்வளவு நாளும் பெரிய பெரிய தளங்கள்தான் இப்பிடி செய்ததென்னா இப்ப சகோதர பதிவர்களே இப்படியா..!!?வெட்கம்,வெட்கம் தானா யோசிக்க மாட்டாங்களா..?? இல்ல தலையில ஒன்னுமே இல்லையா..?? <<<<<<<<<<<<<<<<<

    ஹும்....... இவர்கள் எல்லாம் என்ன ஒரு பிறப்போ ???? :(((

    பதிலளிநீக்கு
  59. MANO நாஞ்சில் மனோ சொன்னது…
    வசதியாக இருந்தால் கூட வெளிநாட்டில் இருப்பவர்களிடம் தங்கள்
    கஸ்ரங்களை மட்டும் எந்நேரமும் சொல்லி ஏன் புலம்புகிறார்கள்.//


    ஆமாய்யா என் அனுபவமும் அதுதான், லீவுக்கு போயிட்டு வெளிநாடு வந்த பத்தாவது நாளே பணம் அனுப்புன்னு கேக்குறாங்க கஷ்டமா இருக்கு, இவங்க திருந்தமாட்டாங்க!!!!<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<


    அழகா உண்மையை போட்டு உடைச்சீங்க அண்ணே..... இப்படித்தான் பலர் அனுபவம் , நீங்கள் சொன்னது நான் நேரில் அடிக்கடி பார்க்கும் ஒன்று :(

    பதிலளிநீக்கு
  60. MANO நாஞ்சில் மனோ சொன்னது…
    என்னாது பதிவை சுட்டுட்டானா எட்றா அந்த வீச்சறுவாளை, எட்றா பசுபதி வண்டியை வீசிருறேன் வீசி....<<<<<<<<<<<<<<<<<<<<<<

    நாட்டாமை கிளம்பிட்டுது சின்ராசு எடுரா வண்டியை, ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  61. Jayadev Das சொன்னது…
    ஒரு ஆணும் இன்னொரு ஆணும் திருமணம் செய்வதையெல்லாம் நியாயப் படுத்தத் தெரிந்த உங்களுக்கு இந்த சப்பை மேட்டர்களை நியாயப் படுத்த முடியாதா? நீங்க பண்ணுவதெல்லாம் உங்க தனி மனித உரிமை அதில் யாரும் நுழைய முடியாது, உங்க ஊர்க்காரப் பயல்கள் பேசுவது நினைப்பது எல்லாம் அவனுங்க தனி மனித உரிமை, அதுல நீங்க தலையிடாதீங்க, முடிஞ்சது மேட்டர். <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    எங்கடா ரெண்டு பதிவில் நம்ம தலையை காணோம் என்று பார்த்தேன்.ஹா ஹா, இந்த பதிவில் இதை பற்றி மட்டும் பேசுங்கள். இதை முதல் பதிவிலேயே வந்து சொல்லி இருக்கலாம் இல்ல ??அப்போ என்ன துங்கிட்டா இருந்தீங்க????? சம்மந்தம் சம்மந்தம் இல்லாம பேசுறதே உங்க வேலையா போச்சு பாஸ் கொஞ்சம் நிதானத்தில் இருந்து கமெண்ட்ஸ் போடலாமே பாஸ், ப்ளீஸ்

    பதிலளிநீக்கு
  62. பாலா சொன்னது…
    நண்பரே நமக்கு எப்போதுமே அக்கரைப்பச்சைதான். அதனால் வருவதுதான் இந்த கேள்விகள், மற்றும் கருத்துக்கள்.

    அப்புறம் காப்பி அடிக்கும் ஜென்மங்களை என்ன செய்வதேன்றே தெரியவில்லை. எனக்கு தெரிந்து இவர்கள் நெடுநாள் பதிவுலகில் நிலைத்ததில்லை. <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    நன்றி பாஸ்

    பதிலளிநீக்கு
  63. கந்தசாமி. சொன்னது…
    சேம் பிளேட் ))

    உண்மையிலே நாட்டில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு புலம்பெயர்ந்து உள்ள தம் உறவுகளின் நிலையில் புரிதல் இல்லை<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    உண்மை பாஸ்

    பதிலளிநீக்கு
  64. கந்தசாமி. சொன்னது…
    ///இங்கிருப்பவர்கள் பணத்தில் செத்த வீட்டைக்கூட திருவிழா போல
    பகட்டாய் ஏன் கொண்டாடுகின்றார்கள்./// இது நாட்டில் இருக்கும் போதே நேரில் கண்டது )))<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    நான் கேள்விப்பட்டு உள்ளேன்.... ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  65. கந்தசாமி. சொன்னது…
    ///ஆ.. ஊ.. என்றால் உடனே நீங்கள் வெள்ளைக்காரனுக்கு கோப்பை
    கழுவது எங்களுக்கு தெரியாதாக்கும் என்ற தோணியில்
    ஏன் பேசுகிறார்கள்.// இன்று இலங்கையின் வருவாயில் பெரும் பகுதி தங்கி நிற்ப்பது அதே கோப்பை கழுவும் மக்களிடம் இருந்தான அந்நிய செலாவணி தான் என்று சொல்ல வெந்டியதூ தானே ))<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<


    சொன்னால் புரிஞ்சுட்டாலும் .................... அவ்வ்

    பதிலளிநீக்கு
  66. ஜீ... சொன்னது…
    வெளிநாட்டுக்காரர் பற்றி நீங்கள் கூறியது உண்மைதான்!

    அப்புறம் பதிவு திருட்டு! என்னுடைய பதிவொன்றையும் (தமிழ்ப்பெண்களா இப்பிடி?) அப்பிடியே படங்களோட ஒரு இணையத்தளம் சுட்டுடிச்சு!
    இன்னும் எத்தனையோ? நம்ம மொக்கராசு மாமா தான் இதைச் சொன்னார்! என்ன செய்வது...விடுங்க பாஸ்! <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<


    தேங்க்ஸ் பாஸ்,

    திருடுவதும் இப்போ ஒரு தொழிலா போச்சு பாஸ்

    பதிலளிநீக்கு
  67. Rathi சொன்னது…
    :))) <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<


    அவ்வ்.... இதுக்கு என்ன அர்த்தம் அக்கா.?? இருங்க இருங்க வேலாயுதம் வரட்டும் உங்க வீட்டுக்கு நாலு dvd அனுப்பிவிடுறேன், அதான் உங்களுக்கு தண்டனை ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  68. K.s.s.Rajh சொன்னது…
    சாரி மச்சி உங்கள் பதிவை முதல்லே படிச்சேன் ஆனால் கருத்துரை போடமுடியவில்லை..காரணம்..மச்சான்சாரின் தளத்தில் ஒரு காரசாரமான விவாதம் போய்க்கொண்டு இருந்தது...எனவே மன்னிக்கவும்..

    உங்கள் ஆதங்கம் மிகச்சரியானதே...அப்படியே ஊரில் உள்ளவர்கள் என்ன கதைக்கின்றார்கள் என்பதை சரியாகச்சொல்லி இருக்கின்றீங்கள்..இதான் உண்மை.யதார்த்தம்.

    வெளிநாட்டில் இருந்தால் அவர்களும் மனிதர்கள் தானே அவருக்குள்ளும் ஆசைகள் கனவுகள் இருக்கும் தானே இதைபுரிந்து கொள்ள ஏன் மறுக்கின்றார்களே?அது அவர்களுக்கே வெளிச்சம்.

    அப்பறம் காப்பி அடிப்பவர்களை என்ன சொல்ல....உங்களுக்குத்தான் தெரியுமே என் நிலமை...அவங்களாக பார்த்து திருந்தினால்தான் உண்டு <<<<<<<<<<<<<<<<<<<<<<<<


    தேங்க்ஸ் பாஸ், விரிவான கருத்துரைக்கும்.

    பதிலளிநீக்கு
  69. KANA VARO சொன்னது…
    சாட்டையடி பதிவு துசி!
    ஒவ்வொரு வரிகளும் உறைக்கின்றது.

    இதே போன்று வெளிநாடுகளில் இருந்து கொண்டு உள்ளூரை பற்றி பேசுபவர்கள் பற்றியும் எழுத வேண்டும். (ஹீ ஹீ சமநிலை)

    பதிவுத்திருட்டு. நோ கமெண்ட்ஸ்

    <<<<<<<<<<<<<<<<<<


    தேங்க்ஸ் பாஸ்,

    எழுதினா போச்சு பட் அதில் நீங்களும் மாட்டுவீங்க டீல் ஒக்கே வா ?? ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  70. Lakshmi சொன்னது…
    வெளினாட்டில் வாழும் மக்களின் ஆதங்கங்களை தெளிவா சொல்லி இருக்கீங்க. பதிவுத்திருட்டும் சகிக்க முடியாத விஷயமா இருக்கு.<<<<<<<<<<<<<<<<<<<<<<<<


    தேங்க்ஸ் மேம்.... சந்தோஷமாய் இருக்கு உங்க வருகை.

    பதிலளிநீக்கு
  71. ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw சொன்னது…
    வணக்கம் சார்! இனிய வியாழக்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்க!

    புலம்பெயர் தமிழர்கள் பற்றி, ஊரில் இருப்பவர்களின் மனநிலை என்ன? என்பதை அழகாக எழுதியிருக்கீங்க!

    ஊரில் உள்ள மக்களுக்கு வெளிநாட்டு மக்களின் அரசியல் நிலைப்பாடு மட்டுமல்ல, சமூக நிலைப்பாடும் புரியாத புதிர்தான் போலும்!

    மேலும் காப்பியடிப்பவர்களுக்கு....... என்னத்தை சொல்வது? மனிதர்களா அவர்கள்?

    <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    தேங்க்ஸ் பாஸ்

    மறந்துட்டேன் வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள் பாஸ்
    ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  72. Nesan சொன்னது…
    வணக்கம் துசி மிகவும் சிக்கலான விடயம் இது இக்கரையில் நாம் படும் துயரங்களை படம்போட்டுச் சொல்வது என்பது உள்வீட்டில் மரனம் நடக்கும் போது அயல்வீட்டில் கலியாணம் நடப்பதைப் போன்றது இன்னும் விரிவாகப் பேசலாம் இரவு வருகின்றேன்!
    பதிவு திருட்டு நீங்கள் சொன்னது போல் எனக்கும் நேரம் இல்லை இவர்களுக்கு கருத்துச்சொல்வதற்கு!
    <<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    தேங்க்ஸ் நேசன் அண்ணா

    பதிலளிநீக்கு
  73. ஆகுலன் சொன்னது…
    என்ன மருமோனே உன்ர எழுத்தையும் கொப்பியடிக்கிறாங்களா..?? அப்ப நீயும் பிரபல பதிவர்தான்யா..!!!! ////

    வாழ்த்துக்கள் பாஸ்.....
    <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    ஹீ ஹீ
    தேங்க்ஸ் டா

    பதிலளிநீக்கு
  74. ஆகுலன் சொன்னது…
    உந்த வெளிநாட்டு மேட்டர் பெரிய பிரச்சனை தான்.........
    உங்களுக்கும் ஆப்பு அடிக்கிராங்களா....
    <<<<<<<<<<<<<<<<<<<<<<<<


    அடப்பாவி, இதுதான் மேலே டிஸ்கி யில் இது ஏன் அனுபவம் இல்லைன்னு சொல்லி இருக்கேன்
    படிக்கவில்லையா, அவ்வவ்

    பதிலளிநீக்கு
  75. ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…
    நியாயம் தான்
    என்ன செய்ய உறவுகள் நம்மை ஒரு ATM ஆக பாவிப்பது கொடுமை தான்..
    <<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    நிஜம் பாஸ்

    பதிலளிநீக்கு
  76. ரெவெரி சொன்னது…
    உங்கள் ஆதங்கம் நியாயமானதுதான்..
    துஷி...

    <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<


    தேங்க்ஸ் பாஸ்

    பதிலளிநீக்கு
  77. நிரூபன் சொன்னது…
    வணக்கம் பாஸ்.

    தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்,

    அதிக கமெண்டுகள் போட முடியாத காரணத்தினால் ஓரிரு கமெண்டுகளோடு நிறுத்திக் கொள்கிறேன்.4
    <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    வணக்கம் பாஸ்,
    நீங்க எப்பவும் பிஸி என்று தெரியும் தானே பாஸ்,
    நீங்கள் அதிக கருத்து போடாட்டியும் வந்ததுக்கான சிறு அடையாளம்
    விட்டுப்போனாலே போதும் , நீங்கள் ஏன் பதிவை படித்தாலே சந்தோசம் தான் பாஸ்

    பதிலளிநீக்கு
  78. நிரூபன் சொன்னது…
    புலம் பெயர் உறவுகளை பணம் காய்க்கும் மெசினாக எம்மவர்கள் நோக்குவதை அருமையாகப் பதிவிட்டிருக்கிறீங்க...

    இதெல்லாம் ஹலோ என்று சொல்லியதும் கிலோவில கிடைக்கும் என்று வாழும் உறவுகளுக்கு எப்படிப் புரியப் போகிறது?

    பதிவுத் திருட்டு: சுறணையற்ற ஜென்மங்களின் செயல்.
    <<<<<<<<<<<<<<<<<<<<<

    உங்கள் கருத்துக்கள் அத்தனையும் சரியே தேங்க்ஸ் பாஸ்

    பதிலளிநீக்கு
  79. காட்டான் சொன்னது…
    மருமோனே எனக்கு அன்மையில் அதிகாலை 4மணிக்கு இலங்கையில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.. இங்கு இருக்கும் நண்பரின் தந்தையார் இறந்த செய்தியை தெரிவுக்கும்படி.. ஏன் அவரிடம்தானே ஒன்றுக்கு முன்று தொலைபேசிகள் இருக்கின்றனவே என்றால் மூன்றும் வேலை செய்யவில்லைன்னு கூறுகிறார்கள்...!!!!????

    தந்தையின் மரணச்செய்தியை கூட தெரிவிக்க விடாமல் செய்தது எது..!!!????)))

    <<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    உறைக்கும் உண்மை இது,
    இது பற்றி ஒரு பதிவு போடலாமே மாமா???

    பதிலளிநீக்கு
  80. Nesan சொன்னது…
    இவர்களுக்கு நாம் பணம் கொட்டும் இயந்திரம்தான் நமக்கு இருக்கும் ஆசாபாசங்களை ஒரு சிலர் புரிந்து கொள்வதில்லை போட்டி மனப்பாண்மையில் ஒரு சிலர் செய்யும் ஆடம்பரச் செலவுகள் மற்றவர் அர்த்தராத்திரியில் புதுப்பணக்காரன் குடைபிடிப்பான் என்பதை வழிமொழிகின்றார்கள் நாம் அதிக நேரம் கோப்பை கழுவி சிலரை தூக்கிவிட இரக்கப்பட்டால் அவர்கள் எங்களை மிதித்துவிட்டு சுயநலமாக செயல்படும் நிலையில் இருக்கும் போது என்ன செய்வது ?
    ஒரு சிலர் யுத்தம் என்ற சாட்டில் சோம்போறிகளாக இருக்கின்றார்கள் நாம் இங்கு 20 மணிநேரம் வேலை செய்து அனுப்பும் பணத்தில் நடிகர்களுக்கு பால் ஊத்தும் சகோதரங்கள் ஒரு புறம் அவன் வேலைக்குப் போய் உழைத்துத்த தருவான் என வக்காலத்து வாங்கும் தாய்க்குலத்திற்கு தெரிவதில்லை பிள்ளைகள் இங்கு நாய் போல் ஓடும் அவசர இயந்திரவாழ்க்கை!
    அது மட்டுமல்ல அண்ணன்மார் சிலர் இங்கு கலியாணம் முடிக்காமல் கடன் சுமையில் வாட தம்பிமார் ஒருத்தியை காதலித்து குடும்பமாகி அக்குழந்தைக்கும் பால் வாங்கி குடுத்து அந்தக் குடும்பத்தையும் தாங்கும் சிலரையும் நான் பார்க்கின்றேன் இங்கு! இப்படி இருக்கும் போது அங்கு இருப்போர் செய்யும் ஆடம்பரங்களை எண்ணினால் சில வேலை வெள்ளைத்தோல் போல் சுயநலமாக நாம் உழைப்பது நமக்கு என்று போவது மேல் என்பது என் கருத்து சகோ!
    <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    அத்தனையும் அருமையான கருத்துக்கள்,நன்றி பாஸ்

    பதிலளிநீக்கு
  81. செங்கோவி சொன்னது…
    இங்கே அரபு நாடுகளில் வேலை செய்யும் பெரும்பாலான தொழிலாளர்களின் நிலையும் அது தான். இங்கே அவர்கள் வெயிலில் சாக, அங்கே பந்தா பண்ணி நம் மக்கள் ஜொலிப்பார்கள்.
    <<<<<<<<<<<<<<<<<

    நிஜத்தியோ சொல்லுறீங்க பாஸ்,
    தேங்க்ஸ் பாஸ் வருகைக்கு

    பதிலளிநீக்கு
  82. செங்கோவி சொன்னது…
    அனுப்பிய பணத்திற்கு கணக்குக் கேட்பதும், தேவையில்லாத விஷயங்களுக்கு பணம் அனுப்பாமல் விடுவதும் நல்லது.
    <<<<<<<<<<<<<<<<<<<<<<<


    உண்மைதான், பாதிக்கப்பட்டவர்கள் இதை பின்பற்றலாமே!!!!

    பதிலளிநீக்கு
  83. செங்கோவி சொன்னது…
    //அங்கே அவர்கள் ஜபோன் ஜபேட் என்று வசதியாக இருந்து கொண்டு
    அதேயே நாங்கள் இங்கே வைத்து இருந்தால் பழசை மறந்து
    பந்தா காட்டுது பார் என்று ஏன் குசுகுசுக்கிறார்கள்.//

    இது வெளிநாட்டில் இருந்தால் மட்டுமல்ல, உள்ளூரில் வைத்திருந்தால்கூட குசுகுசுப்பு வரவே செய்யும்..
    <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<


    லீவுக்கு ஊருக்கு போன போது கிடைத்த அனுபவமா இது???? ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  84. Nesan சொன்னது…
    குடும்பத்தில் மூத்தவன் பலமணிநேரம் அடுப்பு வெக்கையில் நின்று வாங்கி அனுப்பும் பணத்தின் பெறுமதி தெரியாமல் நவீன மோட்டார் சைக்கிளும் கைபேசியோடும் திரியும் தம்பிமார் சிலருக்குப் புரிவதில்லை அண்ணணின் முதுகுவலி ! தட்டிக் கேட்டால் நீங்கள் படிக்கவில்லை உங்களுக்கு என்ஜாய் பண்ணத் தெரியவில்லை என்று சொல்லும் தம்பி மாரை இங்கு கொண்டுவந்து குளிரில் கோப்பை கழுவவிட்டால் தான் தெரியும் அண்ணனின் கோப்பை கழுவும் பணத்தின் வலி தெரியும் ? இப்படியான சிலரால் உண்மையில் தேவையான உதவியோருக்கு கூட உதவமுடியாத நிலையை தாயகத்தில் இருப்போர் உருவாக்கின்றனர்.
    இன்னொருவகையினர் சிலர் வெளிநாட்டில் சகோதரங்கள் இருப்போரின் தங்கைமாரை காதல் வலையில் வீழ்த்தி அவர்களின் அறியாமையை பயன்படுதி விட்டு கலியாணம் என்று வரும் போது கோடியில் சீதனம் கேட்கின்றனர் அவர்களுக்குத் தெரிவதில்லை இங்கு இருப்போர் கோடியை பேப்பரில் எழுதித்தான் பார்த்திருப்பார்கள் என்று இங்கு இருப்பது தொடர் மாடி ஊர் என்றாளும் தனி வீட்டின் பின்புறம் கோடி இருக்கும் கூட்டியந்து காட்டமுடியும் இங்கு எதைக் காட்டுவது!
    யுத்தம் என்ற சாட்டில் நாம் சிலர் செய்யும் செயல்கள் சமுகத்தையே சுயநலவாதிகளாக மாற்றுகின்றது. நாம் ஒரு படம் பார்க்க எத்தனை தரம் ஜோசிக்கின்றோம் வருமானவரி கட்டனும் வட்டி கட்டனும் என்று ஓடும் போது அவர்கள் மாலை என்றாள் ரைஜின்,மெண்டிஸ் என்று கொண்டாட்டம் போடுகின்றார்கள் சிலர் அவர்களுக்கு பணம் அனுப்புவதை தவிர்த்தால் எல்லாம் சரியாகும் இரக்கப்பட்டால் இழப்பது அதிகம்!
    <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    நேசன் அண்ணா , உங்கள் கருத்துக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பதிவு போல் நிறைய தகவல்களை அள்ளி போகுது பிரமாதம் பாஸ், நேசன் அண்ணா நீங்க ரெம்ப பெரிய ஆள்தான், தேங்க்ஸ் அண்ணா

    பதிலளிநீக்கு
  85. செங்கோவி சொன்னது…
    //வெளிநாட்டில் இருப்பவன் எல்லோரும் தண்ணி பொண்ணு என்றுதான்
    நித்தம் திரிகிறான் என்று ஏன் நினைக்கிறார்கள்.//

    வெளிநாட்டை விட நம்மூரில் தான் இவையெல்லாம் எளிதாகக் கிடைக்கின்றன இப்போது!
    <<<<<<<<<<<<<<<<<<<<<


    சின்ராசு எடுரா வண்டியை ஊருக்கு ................. ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  86. எஸ் சக்திவேல் சொன்னது…
    100 % ஆதரிக்கிறேன்.

    தேங்க்ஸ் பாஸ்

    பதிலளிநீக்கு
  87. கவி அழகன் சொன்னது…
    திருமண வயதை தாண்டினால் கூட வருவாய் நின்றுவிடும் என்று
    நினைத்து நீ இன்னும் சின்னபிள்ளை என்று சொல்லி சொல்லியே
    ஏன் வஞ்சிக்கிறார்கள்.

    பாவிகள்
    <<<<<<<<<<<<<<<<<<

    உண்மைதான் பாஸ் :(

    பதிலளிநீக்கு
  88. கோகுல் சொன்னது…
    தங்களுக்கு காதல் வந்தால் அது தெய்வீகம், அதே எங்களுக்கு வந்தால்
    போன இடத்தில் இந்த கண்றாவி எல்லாம் தேவையா என்று ஏன்
    சீறுகிறார்கள்.//

    ஆதங்கம் புரிகிறது நண்பா!
    <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<


    தேங்க்ஸ் நண்பா, ஆனால் இது என் அனுபவம் இல்லை நண்பா,
    என் காதலுக்கு வீட்டில் எப்போதும் பச்சை கொடிதான் காட்டுகின்றார்கள்
    ஹா ஹா

    பதிலளிநீக்கு
  89. oga.s.FR சொன்னது…
    வணக்கம் துஷ்யந்தன்!என்ன செய்ய?வெளி நாட்டிலிருந்து சுயாதீன அமைப்புக்கள் துன்பம் சுமந்த மக்களுக்கு உதவுவதற்காக,அனுப்பி வைக்கும் உதவிப் பொருள்களை தம் சுய விளம்பரத்துக்காக பயன்படுத்திக் கொள்ளும் புல்லுருவிகளின் செயல் போன்றது தான் இந்தப் பதிவுத் திருட்டும்!சுயமாக சிந்திக்கத் தெரியாவிடில் எதற்கு ப்ளாக்?அடுத்தவன் நெருப்பில் குளிர் காயும் ஜென்மங்கள்,த்தூ..................!<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    உண்மை பாஸ், ஆனால் இது அவர்களுக்கு உறைக்காது பாஸ்

    பதிலளிநீக்கு
  90. ஸ்டைல் நாராயணன் உரிமையாளர் கஞ்சிபஜார் சொன்னது…
    வணக்கம் உங்கள் ஆதங்கம் புரிகின்றது..ஒவ்வொறு வெளிநாடு வாழ் மக்களின் குரலாக உங்கள் பதிவு இருக்கின்றது...நான் ஒருபுதுப்பதிவர் எதும் தப்பா சொல்லி இருந்தால் மன்னிச்சுக்கோங்கோ...என் தளத்திற்கும் வந்து ஆதரவைதாங்கோ.<<<<<<

    வந்துட்டோம் இல்ல
    ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  91. Riitou's Rts சொன்னது…
    இருப்பவனுக்கோ வந்து விட ஆசை
    வந்தவனுக்கோ சென்று விட ஆசை
    இதுதான்யா வெளிநாட்டு வாழ்க்கை
    ரொம்ப அருமையான பதிவு வாழ்த்துக்கள்.
    <<<<<<<<<<<<<<<<<<<<<

    அதே அதே மச்சாள்.

    வாழ்த்துக்கள் உங்கள் ப்ளாக் வருகைக்கு

    பதிலளிநீக்கு
  92. சி.பி.செந்தில்குமார் சொன்னது…
    நீங்க ஹிட்னு அர்த்தம்!!!!!!!!
    <<<<<<<<<<<<<<<<<<<<<<

    இந்த வார்த்தையை ஒரு பதிவுலக சூப்பர் ஸ்டார் வாயால் கேப்பதுதான் பெருமையா இருக்கு.. தேங்க்ஸ் பாஸ்.

    பதிலளிநீக்கு
  93. ஜெயசீலன் சொன்னது…
    பதிவை திருடுபவர்களை ஹிட்லரின் வதை முகாம்களுக்கு அனுப்பமுடியுமா???
    <<<<<<<<<<<<<<<<<<<<<<<

    அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால்
    இவர்கல்மை கண்டிப்பாய் அனுப்ப வேண்டும் பாஸ்...
    ஹா ஹா தேங்க்ஸ் பாஸ் உங்கள் முதல் வருகைக்கு.

    பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...