ஞாயிறு, நவம்பர் 27, 2011

துஷ்யந்தனின் காதல்...



துஷ்யந்தன் என்பவன் ஓர் அரசன். அவன் வேட்டையாட விருப்பம் கொண்டு கானகம் சென்றான். அங்கே ஓர் அழகிய புள்ளிமானைக் கண்டு, அதனைத் துரத்திச் சென்றான். வழியில் ஒரு முனிவர் அவனை வழிமறித்தார். “மன்னா, இது தவத்திற் சிறந்த கண்வ முனிவரின் ஆசிரமம் இருக்குமிடம். இங்குள்ள மிருகம் எதனையும் வேட்டையாடலாகாது” என்று எச்சரித்துச் சென்றார். கண்வ மகரிஷியைப் பற்றித் துஷ்யந்தன் ஏற்கனவே கேள்வியுற்றிருக்கிறான். அத்தவ மேலோரின் கோபத்திற்கு ஆளாகக்கூடாது என அஞ்சினான். வேட்டையாடும் எண்ணத்தை விடுத்தான். ஆனால், அக்கானகத்தின் எழிற்காட்சியினை இரசித்துக் கொண்டே மெல்ல நடந்து சென்றான். சற்றுத் தொலைவில் பெண்டிரின் சிரிப்பொலி அருவி போல் ஒலித்தது. அந்தச் சிரிப்பொலி வர வர துஷ்யந்தனுக்கு வெகு அருகில் ஒலித்தது. சிரிப்பொலி கேட்கும் திசையில் தன் பார்வையைச் செலுத்தினான் மன்னன்.


அழகு கொழிக்கும் ஆரணங்குகள் மூவர் மன்னன் பார்வைக்கு விருந்தாயினர். அவர்களுள் ஒருத்தி, அழகாலும் தகுதியாலும் அவர்களுக்குத் தலைவியாகத் தோற்றமளிப்பதைக் கண்டான் துஷ்யந்தன். அந்தத் தலைவியின் எழில் அவன் உள்ளத்தைக் கவர்ந்தது. நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் அவளை!. அழகு! அந்த அழகுக்கு மெருகேற்றும் பருவம்! அந்தப் பருவத்தை மிகைப்படுத்திக் காட்டும் அந்த உருவம்! ஆ! இவளன்றோ அப்சரஸ்’! எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறான் இந்தத் துஷ்யந்தன். ஆனால், இப்படியொரு திருவுருவை அவன் வாழ்நாளில் கண்டதே இல்லை! அவனையும் அறியாமல் அவன் பாதங்களை ஈர்த்தன, அப்பெண்ணின் உருவமும் நடையின் ஒயிலும் சிரிப்பின் சாகசமும்!. மெல்ல அவன், பெண்களுக்கு அருகில் வந்து நின்றான். அவனுக்கும் அப்பெண்களுக்கும் இடையில் அடர்ந்த மல்லிகைக் கொடியே மறைப்பாக இருந்தது. துஷ்யந்தனுக்கு ஓர் ஐயம் எழுந்தது. ‘இவள் முனிவரின் மகளாய் இருக்க மாட்டாள். என் போன்ற மன்னர் குடும்பத்தில் உதித்தவளாய் இருப்பாள். அதனால் தான் எனக்கு இவள்பால் காதல் உண்டாகின்றதோ?’ என்று மனத்துள் எண்ணிப் பெருமூச்செறிந்தான்.


அச்சமயம் விதியின் பலனாகவோ என்னவோ ஒரு கருவண்டு மல்லிகைக் கொடியினை நோக்கிப் பறந்து வந்தது. அங்கே சகுந்தலை நிற்பதைக் கண்டு, அவள் கூந்தலின் மணத்தில் மயங்கி, அக்கூந்தலைச் சுற்றி ரீங்காரம் பாடத் தொடங்கியது. வண்டினைக் கண்ட சகுந்தலை அச்சமேலீட்டால் வீறிட்டு அலறினாள். “அடி அனுசூயே! பிரியம்வதே! இந்த வண்டை விரட்ட வாருங்களேன்” என்று கூவியபடி மல்லிகைக் கொடியை நீக்கிக் கொண்டு மறுபக்கமாய் ஓடினாள். ஓடிய சகுந்தலை, தன்னை அறியாமலேயே, அங்கு நின்றிருந்த துஷ்யந்தனின் மேல் மோதிக்கொண்டாள். எதிரே ஓர் ஆடவன் நிற்பதைக் கண்டு பிரமித்து நின்றாள். அதே நேரத்தில் சகுந்தலையின் கூக்குரலைக் கேட்டு ஓடிவந்தனர் பிரியம்வதையும் அனுசூயையும். அங்கு சகுந்தலை முன் ஓர் ஆடவன் நிற்பதைக் கண்டு திகைத்தனர். ஆனால், அந்த ஆடவனின் அழகு அவர்களை மயங்கச் செய்தது.


துஷ்யந்தன், “மன்னிக்க வேண்டும். பெண்கள் தங்கியிருக்கும் உத்தியானவனத்திற்குள் அத்துமீறி வந்தது குற்றந்தான். வழி தவறித்தான் இப்பக்கம் வந்து விட்டேன்” என்று மன்னிப்புக் கோரினான்.
துஷ்யந்தனின் நெடிய உருவமும் திண்தோளும் இனிய தோற்றமும் எழிலார்ந்த  முகப்பொலிவும் சகுந்தலையை மெய்மறக்கச் செய்தன. அவள் தலைகுனிந்தபடி நின்றிருந்தாள். அவள் ஓரக்கண்ணால் துஷ்யந்தனின் அழகைப் பருகினாள். “இந்த ஆணழகர் அரச குடும்பத்தைச் சார்ந்தவராய்த் தோன்றுகிறாரே! எந்த நாட்டு மன்னராய் இருப்பார்?’ என்றெல்லாம் நெஞ்சுக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள் சகுந்தலை. “ஐயா, நீர் வழிதவறி வந்ததை நாங்கள் தவறாகவோ குற்றமாகவோ எடுத்துக்கொள்ளவில்லை. எனினும், நீர் எந்த நாட்டு மன்னர் என்பதை நாங்கள் அறிந்துகொண்டால் அதற்கேற்றவாறு உம்மை உபசரிக்கலாம் என்று கருதுகிறோம்” என்றாள் பிரியம்வதை. ஏனென்றால், அவள்தான் அனுசூயையைவிடச் சற்றுத் துடுக்கானவள். அதைக் கேட்ட துஷ்யந்தன், தான் யார் என்பதைக் கூறவில்லை. மாறாக, மன்னன் துஷ்யந்தன் ஆளுகைக்குட்பட்டுள்ள கானகங்களைக் கண்காணிக்கும் அதிகாரி என்றும், அப்பொழுது அக்கானகத்தின் நடப்பினை ஆராய்ந்து செல்ல வந்திருப்பதாகவும் கூறினான். பின் “ஆமாம், கண்வ முனிவருக்குப் பெண் இருப்பதாக நான் கேள்விப்பட்டதில்லையே!’ என்று மெல்லப் பீடிகை போட்டான்.


அவன் ஐயத்தைப் போக்கும் வகையில் பிரியம்வதை கூறினாள்:  ‘எங்கள் சகுந்தலை கண்வ முனிவர் மகள் அல்லள், வளர்ப்புப் பெண். கௌசிக வமிசத்தைச் சார்ந்த இராஜரிஷியான விசுவாமித்திரரின் அருந்தவப் புதல்வி இவள். தனிமையில் அழுதுகொண்டிருந்த குழந்தையை, எங்கள் கண்வ முனிவர் கண்டெடுத்து, சகுந்தலை என்று பெயர் சூட்டி வளர்த்து வருகின்றார். இவள் தாய் மேனகை ஆவாள். “ஓ! தேவமகள் பேரழகி மேனகையின் மகளா! அவள் வயிற்றில் பிறந்ததால் தான் இந்தச் சகுந்தலை இவ்வளவு அழகு வாய்ந்தவளாய் இருக்கிறாள்!” என மனத்துள் வியப்புற்றான் துஷ்யந்தன். “இவளை நான் அடைய முடியுமா? நான் இவளை விரும்புவதுபோல் இவளும் என்னை விரும்பவேண்டுமே!’ என்றும் ஐயப்பட்டான்.


அப்போது சகுந்தலை நாணத்தால் முகம் சிவந்து, “அடி பிரியம்வதை, எனக்குத் தலை சுற்றுவதுபோல் இருக்கிறது. அப்பால் சென்று ஓய்வெடுத்துக் கொள்கிறேன்” என்று கூறி, துஷ்யந்தனை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டுச் சென்றாள். அவள் ஏதோ சொல்லி அவ்விடத்தை விட்டுச் செல்லப் பார்க்கிறாள் என்பது தோழிகளுக்குப் புரிந்துவிட்டது. ஆகவே, அவளைப் போகவிடாமல் தடுக்க எண்ணிய பிரியம்வதை, ‘அடி சகுந்தலை, உன் சாகசமெல்லாம் நானறிவேன்! மரங்களுக்கு நீர் ஊற்ற வேண்டியது உன்னுடைய முறையாகும். நீ எப்படியடி ஓய்வெடுக்கச் செல்லலாம்! உன் கடனைத் தீர்த்துவிட்டுச் செல்” என்றாள், சற்றே கடுமையான குரலில். அது வெறும் நடிப்பு என்பதை அறியாத துஷ்யந்தன், “அவளைப் போகவிடுங்கள். அவள் கடனை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறியவாறு தன் விரலில் அணிந்திருந்த கணையாழியைக் கழற்றிப் பிரியம்வதையிடம் கொடுத்துவிட்டு, தரையிலிருந்த குடத்தை எடுக்கப் போனான்.
கணையாழியைப் பெற்றுக்கொண்ட பிரியம்வதை, அதிலும் பொறிக்கப்பட்ட ராஜமுத்திரையைக் கண்டு, “இது அரசருக்குரிய கணையாழியன்றோ!” என்று ஐயம் தொனிக்கக் கேட்டாள். மன்னன் சமாளித்துக்கொண்டு, “அரசருக்குரிய கணையாழிதான். அதை அவர் எனக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறார்” என்றான்.


இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த சகுந்தலை மேற்கொண்டு நடக்காமல், பிரியம்வதையைத் திரும்பிப் பார்த்தாள். “சகுந்தலை, இம்மன்னன் உன் கடனை ஏற்றுக் கொண்டார். அதனால் நீ போகலாம்” என்றாள் பிரியம்வதை. சகுந்தலை செல்லமாகச் சிணுங்கினாள்: “என்னைப் போகச் சொல்லவும் நிறுத்தவும் நீ யாரடி?” சகுந்தலையின் உள் மனத்தை ஓரளவு புரிந்துகொண்டான் துஷ்யந்தன். அவன் மனம் இவ்வாறு எண்ணியது:  “இவள் என்னை நேருக்கு நேர் பார்க்க மாட்டேன் என்கிறாள். ஆனால் தன் கடைக்கண்ணை மட்டும் என் மேல் வீசுகிறாளே! வாய் திறந்து ஒரு வார்த்தையும் என்னுடன் பேசவில்லை. எனினும் நான் பேசும்போது எல்லாவற்றையும் காது கொடுத்து உற்றுக் கேட்கிறாளே! இதற்கு என்ன காரணம்?’ இவ்வாறாகத் துஷ்யந்தனும் சகுந்தலையும் தனித்தனியே தமக்குள் காதலை வளர்த்துக் கொண்டிருந்தபோது யாரோ சிலர் ஓடுவது கேட்டது. அவர்கள் உரத்த குரலில் “மதங்கொண்ட யானை ஒன்று மரங்களை ஒடித்து எறிந்துகொண்டு வருகிறது. எல்லோரும் எச்சரிக்கையாய் இருங்கள்” என்று எச்சரிக்கை செய்து கொண்டு சென்றனர்.


அதுகேட்டுத் தோழிகள் மருண்டு, துஷ்யந்தனைப் பரிதாபமாகப் பார்த்தனர். துஷ்யந்தன் அவர்களுக்குத் தைரியமூட்டும் வகையில், “நீங்கள் ஆசிரமத்திற்கு விரைந்து செல்லுங்கள். நான் அந்த யானையை அடக்கி விரட்டுகிறேன். வாய்ப்புக் கிட்டுமாயின் மீண்டும் சந்திப்போம்” எனக் கூறி அவர்களைப் போய்விடுமாறு தூண்டினான் துஷ்யந்தன். தோழியர் இருவரும் புறப்பட்டனர். சகுந்தலை இரண்டடி எடுத்து வைத்தவள், 
“ஆ! அனுசூயே, என் காலில் முள் தைத்துவிட்டதே!” என்று கூறி பாதத்தைத் தூக்கிப் பிடித்தபடி, துஷ்யந்தனைத் திரும்பிப் பார்த்தாள். துஷ்யந்தனும் அவளை ஆழமாக நோக்கினான். அந்த ஒரு கணப் பொழுதில்.. துஷ்யந்தனின் பார்வையைச் சகுந்தலை பார்வையும், சகுந்தலையின் பார்வையைத் துஷ்யந்தன் பார்வையும் கவ்வி இழுத்தன. அதற்குப் பிறகு துஷ்யந்தன் செயலற்றவனாய் ஆசிரமத்தை வளைய வந்து கொண்டிருப்பதில் ஆனந்தம் கொண்டான். சகுந்தலை அறியாவண்ணம் மறைந்திருந்து அவள் எழிலைப் பார்த்துப் பரவசப்பட்டான். நகர் திரும்பவேண்டும் என்கின்ற எண்ணமே எழவில்லை. ஆசிரமத்தருகிலே முகாமிட முடிவு செய்தான் துஷ்யந்தன். சகுந்தலையும் சமயம் கிட்டும் பொழுதெல்லாம் ஆசிரமத்து உத்தியாவனத்தில் திரிந்தாள். துஷ்யந்தன் தன் கண்ணில் பட மாட்டானா, அவனிடம் தனிமையில் பேச மாட்டோமா என்று எப்போதும் மன்னனையே நினைத்து ஏங்குவாளானாள்.


மேலே உள்ளவை நான் எழுதியவை அல்ல.. 'உலக பிரசித்தி பெற்ற காதலர்கள் துஷ்யந்தன்-சகுந்தலா' என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி..  விஸ்வாமித்ர முனிவருக்கும் மேனகா என்ற வானுலக நாட்டிய தேவதைக்கு பிறக்கும் பெண்தான் சகுந்தலா. காட்டில் ஆசிரமத்தில் வாழும் சகுந்தலாவை வேட்டையாட வரும் அரசன் துஷ்யந்தன் காதல் கொண்டு காந்தர்வமணம் செய்து அதன் அடையாளமாய் தங்கள் அரசகுல மோதிரம் ஒன்றை கொடுத்துவிட்டு 
செல்கிறான். ஒரு நாள் காட்டில் சகுந்தலா துஷ்யந்தன் நினைவில் உருகி நின்ற வேளை அங்கு வந்த துர்வாசர் முனிவரை கவனியாது இருக்க கோபம் கொண்ட முனிவர் நீ யாரை நினைத்து உருகிறாயோ அவர் உன்னை மறப்பாறாக என்று சபிக்கிறார்.. பின் சகுந்தலை மேல் இரக்கம் கொண்டு இப்போது உன்னை மறந்து இருக்கும் துஷ்யந்தன் அவன் உனக்கு தந்த தனிப்பட ஒரு பரிசு பொருளை உன்னிடம் கண்டு நினைவு வந்து உன்னை அடையாளம் கண்டுகொள்வான் என்று கூறி விடைபெறுகிறார்.

துஷ்யந்தன் தன்னை தேடிவராததால் கவலை கொண்ட சகுந்தலா துஷ்யந்தனை தேடி காட்டைவிட்டு நாட்டுக்கு துஷ்யந்தன் அரண்மனைக்கு போகும் போது இடையில் ஆற்ரைகடக்கும் போது துஷ்யந்தன் தந்த மோதிரத்தை ஆற்றுக்குள் தவற விட்டு செல்கிறாள். துஷ்யந்தன் அரண்மனை வந்த சகுந்தலா துஷ்யந்தனால் அடையாளம் கண்டுகொள்ள முடியாத நிலையில் அரண்மனையில் உள்ளோரால் அவமானப்படுத்தப்பட்டு நாட்டைவிட்டு துரத்தியடிக்கப்படுகிறாள். அவமானத்துடனும் வேதனையுடனும் கானகம் திரும்பும் சகுந்தலா கானகத்தில் தனியே குடில் அமைத்து துஷ்யந்தனுக்கும் தனக்கும் பிறந்த பரதனை ஒரு அரசனுக்கு உரிய தகுதியுடன் பலம் பொருந்தியவனாக வளர்க்கிறாள்.

சகுந்தலா ஆற்றில் தவறவிட்ட மோதிரம் மீனின் வயிற்றுக்குள் இருந்து மீனவனால் கண்டுபிடிக்கப்பட்டு துஷ்யந்தன் பார்வைக்கு போகிறது.. முனிவரின் சாபம் தீர்ந்து பழைய நினைவுக்கு வரும் துஷ்யந்தன் சகுந்தலா நினைவுவந்து தன்னை தேடிவந்து தன அரண்மனையால் சகுந்தலா அவமானப்பட்டு துரத்தி அடிக்கப்பட்டதை அறிந்து துடிதுடித்து போகிறான்.. அரண்மனை வாழ்க்கையை தூக்கி எறிந்துவிட்டு சகுந்தலாவை தேடி கானகம் செல்லும் துஷ்யந்தன் அங்கு பரதனை கண்டு அவன் மூலம் சகுந்தலாவை கண்டு மனைவி சகுந்தலாவுடனும் மகன் பரதனுடனும் ஒன்று சேர்கிறான். பாண்டவர் பிறப்புக்கு முன் அவ்விடத்தை சிறப்பாக ஆட்சி செய்தவர்கள் துஷ்யந்தன்-சகுந்தலா-பரதன் ஆகிய மன்னன் குடும்பமே என்று மகாபாரதம் சொல்லுகிறது.

நட்புக்கு பிறந்த நாளு....

வரும் 01 -12 -2011 நம்ம சக பதிவர்.. என் ரெம்ப நெருங்கிய  பெஸ்ட் நண்பன் மதுரனுக்கு பிறந்த நாள். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மச்சி.. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை மச்சி அப்படி கடவுள் இருந்தால்! எப்போதும் நீ சந்தோஷமாய் இருக்க வேண்டிக்கிறேன்.. அப்புறம் மச்சி வாழ்க்கை என்கிறது நதி மாதிரி ஓடிட்டே இருக்கணும் யாருக்காகவாதும் தேங்கி நின்றோம் என்றா குட்டை ஆகிடுவோம்.. அப்படித்தான் பலரை காதல் குட்டையாக்கிடுது.. காதலே வாழ்க்கை இல்லை நம் வாழ்க்கையில் ஒரு பகுதிதான் காதல்.. இதெல்லாம் இப்போ ஏன் சொல்லுறேன் என்று உனக்கு புரியும் என்று நினைக்கிறேன்..! இப்போ என்ன சொல்ல வாறேன் என்றால் உன் அடுத்த பிறந்தநாளுக்கு இடையில் ஒரு நல்ல நியூஸ் சொல்லணும் மச்சி.. இல்லைன்னுவை நானே உங்க ஒராளை அனுப்பி... அப்புறம் நீ.. அதுதான் எல்லாம்தான் முடிஞ்சுதே இனி அவாதானே நமக்கு வாழ்க்கை கொடுக்கணும் என்று சொல்லுற முடிவுக்கு கொண்டுவந்திருவேன்... புரியல்லையா..!! CHATக்கு வா சொல்லுறேன்.. 
ஹீ.. ஹீ.
மதுக்கு நான் அனுப்பிய Birthaday Card
                   


என் ப்ளாக் நண்பர்களுக்கு......
நானும் எவ்ளோ நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது... அவ்வவ்... நிஜமாவே முடில்ல.. இப்போ துஷி நம்ம பக்கம் வாறதே இல்லையே என்று என்று எல்லோரும் நினைப்பீங்க..வேலைப்பளு அதிகம் அதுதான் ப்ளாக் வாறதே இல்லை. சாப்பிட கூட நேரமின்றி ஓடிட்டே இருக்கேன். சண்டே ஒருநாள்தான் விடுமுறை.. அதுவும் என் நண்பர்களுடன் ஊர் சுத்த கிளம்பிவிடுவதால் அன்றும் ப்ளாக் வரமுடிவதில்லை. ஆனால் இன்றில் இருந்து சண்டே புள்ளா வீட்டில் இருந்து என் ப்ளாக் நண்பர்களுக்கு ஒதுக்குவதாக முடிவுபண்ணியுள்ளேன். அப்போ இனி வாரத்தில் சண்டே மட்டுமே ப்ளாக் வருவேன்.. அன்று என் எல்லா நண்பர்கள் ப்ளாக்குக்கும் வருவேன். வாரத்தில் ஒருநாள் மட்டும் ப்ளாக் வருவதால் என்னால் அதிகம் பதிவு போட முடியாவிட்டாலும் என் நண்பர்கள் பதிவுகளில் கண்டிப்பாக நிற்பேன். இடையிடையே நேரம் கிடைத்தாலும்...!! வருகிறேன். நன்றி.


முக்கிய குறிப்பு: தலைப்பை பார்த்து யாராவது வில்லங்கமான எண்ணத்துடன் ஓடி வந்திருந்தால்! அதற்க்கு நான் பொறுப்பல்ல.. ஹே.. ஹே.




ஞாயிறு, நவம்பர் 20, 2011

முகமூடி கிழிந்த பிரபல 'மணி'ப்பதிவர்


எனக்கும் அந்த பிரபல பதிவருக்கும் கிட்டத்தட்ட நாலு ஜந்து மாதங்கள் நடந்த இந்த கண்ணாம்பூச்சி விளையாட்டை சொல்ல எனக்கும் நேரமும் இல்லை பொறுமையும் இல்லை ஆகையால் நாற்றில் நிரூபன் போட்ட status  பாருங்கள்.. மிகுதியை நான் சொல்லுகிறேன்.

Selvarajah நிருபன்"நான் மதுரனின் உதவியோடு ஒரு குறும்படம் எடுக்கலாம் என்று ப்ளான் பண்ணியுள்ளேன். வழமையான தமிழ் சினிமா சாயலிலில் நின்றும் விலகி பதிவர்களைப் பற்றிய கருவினை படத்தில் உள்ளடக்கலாம் என்று நினைத்து இக் குறும்படத்திற்கான கதையினை எழுதியுள்ளேன். படத்தின் முக்கிய கட்டம்,
திவர்கள் இருவர் அவர்களின் வலைப் பதிவு எழுத்தால் கவரப்பட்டு ஒருவரை ஒருவர் பார்த்துப் பேச வேண்டும் எனும் ஆவல் நீண்ட நாட்களாய் மனதில் குடி கொண்டிருக்க, இருவருமே சந்திக்க வேண்டும் எனத் தவித்துக் கொண்டிருப்பார்களாம், ஆனால் நேரில் இரு பதிவர்களும், இவர்கள் பதிவர்கள் இல்லை என்ற ரீதியில் ஒவ்வோர் நாளும் சந்தித்துக் கொள்வார்களாம்! அப்போது ஒரு பதிவருக்கு மற்றைய பதிவரைப் பற்றித் தெரியுமாம். ஆனால் மற்றப் பதிவருக்கு இவர் பதிவர் தான் என்று தெரியாதாம்! இப்படி சஸ்பென்ஸுடனும், ஆவலைத் தூண்டும் வகையில் ஒரு சம்பவம் நிஜ வாழ்க்கையில் நடந்தால் எப்படி இருக்கும்..??"

தில் சித்தரிக்கப்படும்  பதிவர்களில் ஒருவர் நான், மற்றவர் அந்த பிரபல 
மணிப்பதிவர்.இதைப்பார்த்ததும் எனக்கும் சிரிப்பு வந்தாலும் கூடவே 
இன்னொரு உண்மையும் தெரிய வந்தது.. சிரிப்பு வந்ததின் காரணம் 
சில நாட்களின் முன்புதான் நான் அவரை அடையாளம் கண்டேன்.
இப்போது தெரிய வந்த உண்மை இவ்ளோ நாளா எங்களுக்குள் நடந்த இந்த 
விளையாட்டு எங்கள் இருவருக்கு மட்டும்தான் தெரியும் என்று நினைத்து இருந்தேன் ஆனால் மூன்றாவதாக இன்னொரு நபருக்கும் இது தெரிந்து 
இருக்கிறது என்பதுதான்.

அந்த பதிவருக்கும் எனக்குமான தொடர்பு எத்தகையது..?
பதிவுலகத்துக்காக எப்பவுமே என் நேரத்தை நான் ஒதுக்கியது இல்லை. எனக்கு கிடைக்கும் நேரங்களில்தான் பதிவுலகை டைம் பாஸுக்கு பயன்படுத்தி வருகிறேன்.  விளையாட்டாய்  எழுதவந்த எனக்கு இவ்ளோ நண்பர்களும் பதிவுலகில் கிடைத்த சிறு அங்கீகாரமும் உண்மையில் 
புரியாத ஆச்சரியம்தான் இத்தனைக்கும் நான் எழுதியது வெறும் 30பதிவுகள்தான். என்னுடைய நண்பர்கள் பதிவுகளுக்கு மட்டுமே போய் 
கருத்துரைகளும் வோட்டும் போட்டு வந்தேன். என் நட்பு வட்டத்துக்குள் புதிதாய் யாரையும் நான் சேர்ப்பதும் இல்லை.

இந்த நிலையில்தான் எனக்கு அந்த பதிவரின் ப்ளாக் அறிமுகம் கிடைத்தது.
நான் ஒரு மொக்கைப்பதிவர் என்று அவர் தன்னை சொல்லிக்கொண்டாலும் 
அவர் பதிவுகளை மொக்கை என்று ஒதுக்கி விட முடியாது.. அத்தனை ஈர்ப்பு ரசனை அவர் எழுத்தில். படித்த மாத்திரத்திலேயே அவர் எழுத்துக்கு அடிமையாகிவிட்டேன்.  சாண்டில்யனின் கட்டு புத்தகங்களை இடைவெளி இன்றி படித்தது போல் அவரில் பழைய பதிவுகளை இரவு இரவாய் நித்திரை முழித்து படித்த நாட்களும் உண்டு. அதன் பின் நானும் அவருடைய புதிய பதிவுகளுக்கு போய் கருத்துரை வோட் போட்டு வந்தாலும்   அவர் நம்ம ப்ளாக்பக்கம் வருவதே இல்லை. என் ப்ளாக் வரும் எல்லா நண்பர்கள் ப்ளாக் பக்கமும் நான் போவதும் இல்லை, நான் போகும் ப்ளாக் நண்பர்கள் எல்லோரும் என் பக்கம் வருவதும் இல்லை. ஆகவே இதை நான் பெருசாக நினைக்காவிட்டாலும் அவர் எனக்கு பிடித்த பதிவர் என்ற முறையில் அவர் கருத்துக்களுக்காக மனம் ஏங்கத்தான் செய்தது. இந்த நிலையில் ஒரு நாள் நான் பதிவிட்ட  பாசமாவது.. பந்தமாவது.. இது வெளிநாடு. என்ற பதிவுக்கு  முதன் முறையாக என் ப்ளாக் வந்த அவர் என்னையும் என் பதிவையும் மிகவும் பாராட்டி கருத்துரைகளை அள்ளி வழங்கியதுடன் என் பதிவை தன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து விட்டதுடன் தனிபட்ட முறையில் என்னுடன் பேசினார். பதிவுலகம் வந்து நான் மிகவும் சந்தோஷமாய் இருந்த நாட்களில் அந்த நாளும் ஒன்று. நமக்கு பிடித்த பதிவர் அதுவும் பதிவுலகில் தனிக்காட்டு ராஜாவாக கொடிகட்டி பறக்கும் பிரபல பதிவர் நம்மை வந்து பாராட்டுகிறார் என்றால் சும்மாவா?? அந்த சந்தோஷத்தை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. இதன் பின் ப்ளாக்-பேஸ்புக் என்று எனக்கும் அவருக்குமான நட்பு மிகவும் நெருங்க தொடங்கிவிட்டது.

யார் அந்த பதிவர்..?
உலகம் ரெம்ப சிறியது என்று சொல்லுவார்கள். இந்த பதிவர் விடயத்தில்
நான் ரெம்ப ரெம்ப சின்னன் என்று உலகம் எனக்கு உணர்த்திவிட்டது. இந்த பதிவர் என் சொந்தகாரர் ஏன் எங்கள் வீட்டுக்கு கூட அடிகடி வரும் ஒரு நபர். அந்த பதிவர் மேல் வைத்த அன்பால் பிரான்சில் அவரை தேடி இருக்கேன்
அவரிடமே விசாரித்து இருக்கேன்.. அவரை பார்க்க ஆசைப்பட்டு இருக்கேன்.
இத்தனைக்கும் அவர் என் முன்னாலேயே  இருந்து எனக்கே கை தந்து என் வீட்டுக்கே வந்து போயிருக்கார் போய்க்கொண்டு இருக்கார்.
அடக்கடவுளே.......!!!!! அவர் எங்கள் வீட்டுக்கு வந்த போதெல்லாம் எப்போதுமே ஹாய்.. ஹலோ.. என்பதை தவிர நான் வேறு வார்த்தை பேசியது இல்லை. காரணம் நான் யாருடனும் அதிகம் பேச மாட்டேன் அதிலும் தமிழ் ஆக்களை பார்த்தால் ஒருவித பதட்டம் நாணமே.. இங்கு எனது நண்பர்கள் லிஸ்ட்டில் தமிழர்கள் இல்லாததும் இதுக்கு ஒரு காரணமாய் இருக்கலாம். நான் தமிழ் நண்பர்களை சம்பாதித்துக்கொண்டதே ப்ளாக் எழுத வந்த பின்புதான். இப்படியான ஒரு சூழ்நிலையில் அந்த பதிவர் வீட்டுக்கு வரும் நேரங்களில் அவர் யார் என்று அடையாளம் தெரியா நிலையில் நான் அவருடன் பேசாமால் ஒரு புன்னகையுடன் அவரை கடந்து போனதில் ஆச்சரியம் இல்லைத்தானே...?
உண்மையில் எங்கள் வீட்டுக்கு வந்தும் அவர் ஆரம்பத்தில் என்னை அடையாளம் காணவில்லைத்தான். அதுவும் "நான்" எல்லாம் ப்ளாக் எழுதுவேன் என்று அவர் கனவிலும் நினைத்து இருக்க மாட்டார். என் ப்ளாக்கில் என்னுடைய புகைப்படத்துடன் என்னைப்பற்றிய தகவல்களும் கிடைப்பதால் பின்பு அவர் என்னை அடையாளம் கொண்டதிலும்  ஆச்சரியம் ஒன்றும் இல்லை. என்னை அடையாளம் தெரிந்து கொண்டும் தான் யாரோ ஒருவர் போல் இருந்து என்னோடு சஸ்பென்ஸ் வைச்சு கண்ணாம்பூச்சி விளையாடியதுதான் எனக்கு ஆச்சரியம் கொஞ்சம் கோவமும்.

நான் எப்படி அந்த பதிவரை கண்டு  பிடித்தேன்..?
அவருடைய முதல் எழுதிய ப்ளாக் பெயரும் வேறு இப்போது எழுதும் ப்ளாக் பெயரும் வேறு இருந்தும் அவர் உண்மையான  பெயர் ரஜீவன் என்றதுமே அவர் மேல் எனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்துவிட்டது. அதன் பின் அவர் ஒரு ஆங்கில ஆசிரியர் என்றதுமே அவர் மேல் சந்தேகம் உறுதியாகி நாமளும் புலனாய்வு புலியாகி அவரைப்பற்றிய தகவல்களை சேகரிக்க தொடங்கிய வேளையில் தவளையும் தன் வாயால் கெடும் என்பதைப்போல் "அத்தை பெற்ற
அழகிய ராட்சஷிகள்" என்று என் சமீபத்திய  பதிவொன்றில் நான் புலிகள் அமைப்பில் சேர்ந்த என் மச்சாள் பற்றியும் இறந்த மச்சாள் பற்றியும் சொல்ல அதில் நான் சொல்லாமல் விட்டதை இவர் சொல்லியதுடன் அந்த மச்சாள்மாரின் அப்பாக்கள் (என் மாம்ஸ்) பெயரை சொல்லியதுடன் பல தகவல்களை சொல்லி என்னை ஆச்சரியப்பட வைக்க நினைத்து அதனுடே தன்னைப்பற்றிய தகவல்களையும் உளறிவிட்டுப்போனார். இதேநேரத்தில்  என் புலனாய்வாலும் அவரைப்பற்றிய பல தகவல்கள் எனக்கு கிடைக்க (அவரின் பாதுகாப்பு கருதி அத்தகவல்கள் இங்கே மறைக்கப்பட்டு உள்ளது) இவர்தான் அவர்.. அவர்தான் இவர்.. என்று சுலபமாக நான் அடையாளம் கண்டு கொண்டு விட்டேன்.

அவரை நான் அடையாளம் கண்டு கொண்ட  பின்னும் வழமை போல் 
எதுவும் தெரியாதவன் போல் அவரின் சஸ்பென்ஸ் விளையாட்டை ரசித்துக்கொண்டிருக்க எப்படியோ நான் அவரை நெருங்கிக்கொண்டுப்பதை உணர்ந்துகொண்டவர். நாடகம் முடிந்த பின்னும் தன்னை காப்பாற்றிக்கொள்ள
அவர் போட்ட நாடகங்களும் துடிப்பும் இருக்கே...!! ஒரு உயிரின் கடைசி துடிப்பைப்போல் அந்த பதிவர் தன் முகமூடியை காப்பாற்ற கடைசி வரை போரா(டியது)க்கொண்டிருப்பது உண்மையில் எனக்கே மனசுக்கு கஸ்ரமாய்  போய்விட்டது. நான் உங்களை பார்க்கவில்லை பேசவில்லை நீங்கள் யார் என்றே எனக்கு தெரியாது என்று சொல்லிவிட்டு ஒன்றும் தெரிந்து கொள்ளாதவன் போல் பழைய மாதிரி இருந்துவிடுவோமா என்று கூட ஜோசித்தேன்.. அவ்ளோ பரிதாபமாக இருந்தது.

சரி இவ்ளோ நடந்து முடிந்துவிட்டது, என்னை ஏமாற்றிய அந்த பதிவருடன்
நட்பை தொடரலாமா..?
ஏன் தொடரப்படாது... ப்ளாக்கில் அவருக்கும் எனக்குமான நட்பு இன்றுவரை
ஆரோக்கியமாகவும் அன்பாகவும் தானே இருக்கு. ப்ளாக் நண்பனாக இந்த நிமிஷம் வரை என் மேல் அன்பு செலுத்திக்கொண்டுதானே இருக்கார். தான் யார் என்று என்னிடம் வெளிப்படுத்தி ஒரு உறவாக அவர் என்னிடம் தன்னை காட்டிக்கொள்ள விரும்பாமல் இருந்து இருக்கலாம்! அல்லது சஸ்பென்ஸ் வைத்து இருக்கலாம்! ஆனால் பொய்களுக்கு ஆயுசு கம்மி என்பதை அவர் உணராமல் விட்டுவிட்டார். எது எப்படியோ இந்த கண்ணாம்பூச்சி விளையாட்டில் அவர் மேல் எனக்கு துளி கோபம் இல்லை என்பதை இங்கேயே சொல்லிக்கொள்கிறேன். அவர் எப்போதும் நான் நேசிக்கும் பதிவர்தான் நண்பர்தான் இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்னிடம்.

அப்போ ரஜீவன்...?
போங்கப்பா...... அவர் பிரான்ஸ் வந்த இந்த சில வருடங்களில்  பல தடவை எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார்.. அதில் பல நேரங்களில் சிறு புன்னகையுடன் அவரைக்கடந்து என் அறைக்கு போயிருக்கேன்.  அதில் ஜந்து தடவை ஹாய்.. சொல்லி கைகொடுத்து இருப்பேன்,  மூன்று தடவை என் கையால் தேநீர் போட்டு கொடுத்திருப்பேன், ஒரு தடவை சாப்பாடு போட்டுக்கொண்டுவந்து கொடுத்ததாய் நினைவு.. இப்படியான ஒரு சூழ் நிலையில் உனக்கும் அவருக்கும் நட்பு தொடருமா என்று கேட்டால் கெக்கே பேக்கே என்று சிரிப்பு வராது..!!

குறிப்பு: இப்பதிவு அந்த பிரபல  'மணி'ப்பதிவரை மனம் நோகும்படி செய்திருந்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவர் மனதை 
நோகடிப்பது என் நோக்கமும் அல்ல.  நான் யாரிடமும் இலகுவில் ஒட்டவும் மாட்டேன் எதுவும் வாங்கவும்  மாட்டேன். ஒட்டினால் ரெம்ப ஒட்டிவிடுவேன் வாங்கினால் ரெண்டு மடங்காக திருப்பிக்கொடுத்துவிடுவேன். அவரை யார் என்று அடையாளம் கண்டபின் எனக்கு கிடைத்தை அவர் தந்த 'ஷாக்கை' இப்போது நான் அவரை அடையாளம் கண்டதை சொல்லி திருப்பி கொடுக்க வேண்டும் என்பதே இப்பதிவின் நேக்கம். ஹே.. ஹே.













LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...