வெள்ளி, செப்டம்பர் 14, 2012

ஊர் நினைவுகள்... (மறுபடியும் வந்துட்டோம் இல்ல..)

ரெம்ப பெரிய்ய்ய்..ய இடைவெளிகளுக்கு பின் மீண்டும் வலைப்பூ பக்கம் திரும்பி இருக்கோம்.
 இந்த இடைவெளிக்குள்ள வாழ்க்கையில் ரெம்ப பெரிய சந்தோஷங்கள் மாற்றங்கள் எல்லாம் நடந்திருக்கு.. அவை எல்லாத்தையும் இங்கே பகிர முடியாது என்பதால ஒரு சந்தோஷத்தை மட்டும் இங்கே பகிர்ந்துக்கிறேன்.

வவுனியா காட்டுக்குள்.. :))
என் சொந்த நாட்டிற்க்கு (இலங்கை) போயிட்டு வந்தோம் இல்ல :)) சின்ன வயசில் இலங்கையை விட்டு பிரிந்து வந்த பின் இப்போழுதுதான் முதல் முதலாய் இலங்கை போயிருந்தேன்.

அங்கு நின்ற ஒரு மாசம் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. அந்த ஒரு மாசத்தில் கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை, ஒட்டிசுட்டான், கிளி நெச்சி, முல்லைத்தீவு, நெடுங்கேணி என்று பார்க்க ஆசைப்பட்ட அத்தனை இடங்களையும் பார்த்தாச்சு.
 
முல்லைத்தீவு கடற்கரையில் "அவங்களோடு.." :))
முல்லைத்தீவு கடற்கரையில் குளித்துவிட்டு அப்படியே நந்திக்கடற்கரையோரம் நடந்த போது ஏதேதோ நினைவுகளில் மனசு கனத்துப்போய்விட்டது :((

அப்புறம் நெடுங்கேணி...
ஆச்சரியம் தான்.. இறுதியாக இருந்து வந்த வவுனியாவில் உள்ள இடங்களே மறந்துவிட்ட நிலையில்.. பிறந்து, 8 வயது வரையே வாழ்ந்த நெடுங்கேணியில் ஒவ்வொரு இடமும் நினைவில்...!

"அப்பா இவ்வடத்த ஒரு பெரிய புளியமரம் நின்றதல்லோ இப்போ கானல்ல.." "இந்த கொண்டை மரத்துக்கு கீழதான நாதம்பிரான் கோயில் இருந்திச்சு.. இப்போ மரம் மட்டும் நிக்குது..!" "இதானே ராஜலிங்கம் மாமா இருந்த வீடு.. சுவருகள் மட்டும் இன்னும் உடையாம இருக்குப்பா" "என்னப்பா இது..! முந்தி என் ப்ரெண்டுட்ட எல்லாம் எவ்ளோ பெருமையா சொல்லி கூட்டிக்கொண்டு வந்தெல்லாம் காட்டி இருக்கேன் எங்க காணிக்கேயே குளம் (ஆறு) இருக்கென்று.. இப்போ என்னப்பா இப்படி மணல்மேடா இருக்கு" இப்படி கேள்விமேல் கேள்வி கேட்டு துளைக்கும் என்னை ஆச்சரியமாய் பார்த்தபடி கனத்த மனத்துடன் பதில் சொல்லிக்கொண்டே வந்தார் அப்பா.
 
எங்கள் வீடு இருந்த இடம்.. இந்த மாமரம் துஷி நட்டது.. :))
எங்கள் வீடு இருந்த காணி..! என் மனசை ரெம்ப வேதனை படுத்திய இடம் அது :(( கேற்றில் ராட்ஷச உருவில் ஒரு கூழா மரம் அதன் கீழ் எங்கள் குல தெய்வம் வைரவர். பெரிய வீடு.. அதை சுற்றிய பூஞ்சோலை (இவை அம்மாவின் உயிர்) தென்னை,தேக்கு,விளாமரம்,மாமரம் என்று தேவையான எல்லாமே காணிக்குள் இருக்கும் (வன்னியில் பெரும்பாளும் எல்லோர் வீடுகளும் இப்படியே).
எங்கள் குலதெய்வம் வைரவர் :((
இன்று....
வேலிகள் அற்று அலங்கோலமாய்...
காணிக்குள் ஒரு விளாமரம் ஒரு மாமரம் மட்டுமே.. :(( உன்னிபற்றைகளுக்குள் அவை மட்டுமே கம்பீரமாய் நிக்க கேற்றடியில் கூழாமரமும் அதன் கீழ் சிறு சீமந்து கொட்டினுள் சருகுகளுக்குள் எங்கள் குல தெய்வம் வைரவர் (சீமந்து கொட்டில் போருக்கு பின் அண்ணா கட்டியது).

வவுனியாவில் இருந்து வேன் பிடித்து குடும்பத்தில் எல்லோரும் போயிருந்தோம்...
ரெம்ப நேரமாகியும் யாருக்குமே காணியை விட்டு வர மனமே இல்லை. நான் வருவேன் என்று தெரிந்தோ என்னவோ மாமரம், விளாத்தி, கூளாமரம் மூன்றும் பழங்களால் நிறைந்து போயிருந்தது.. மரங்களில் ஏறி பறித்து அங்கேயே இருந்து சாப்பிட்டு மிகுதியை வவுனியாவுக்கு கொண்டுவந்து பக்கத்து வீட்டுக்காரருக்கு எல்லாம் கொடுத்து ஃப்ராண்ஸ் வரை கொண்டு வந்தேன் :))

காணிக்குள் மரத்தில் ஏறி, ஒருவரை ஒருவர் துரத்தி உன்னிப்பற்றைகளுக்குள் ஓடி.. நானும் தம்பியும் தங்கச்சியும் பண்ணிய அட்டகாசங்கள் சமாளிக்க மிடியாமல் அப்பாவும் அம்மாவும்தான் தடுமாறிப்போனார்கள். நாம போட்ட சத்தத்தில் அயலவர்கள் எல்லாம் வந்து என்னை தம்பியை தங்கச்சியை அடையாளம் கண்டு பெயர் சொல்லி கட்டிதழுவி ஆனந்தகண்ணீர் விட்டது ஆச்சரியமான நெகிழ்ச்சி.
 
மணி படித்த பாடசாலை.. ( மீயும் இங்கேதான் மூன்றாம் வகுப்பு வரை. பெருமை.. பெருமை lol)
இறுதியில் இருட்ட தொடங்கியும் யாருக்கும் கிளம்ப மனசே இல்லை.. பிரிய மனமே இல்லாமல் கலங்கிய கண்களோடு வேனுக்குள் ஏறி புறப்பட்டோம். வரும் போது பாட்டு பேச்சு என்று அல்லோலப்பட்ட வேன் திரும்பும் போது அமைதியாகவே இருந்தது. யாரும் யாருடனும் பேச வில்லை.. ஒவ்வொருவர் மனசிலும் கனமான நினைவுகள்.

எனக்கு ரெம்ப பிடித்த பதிவர்களில் மிக முக்கியமானவர்கள் 'மருதமூரான்'அண்ணாவும் 'ஜீ'அண்ணாவும். இருவரையும் கண்டிப்பாய் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஹுமும்.. நாட்கள் படு வேகமாய் நகர்ந்ததில் அவர்களை சந்திக்கவே முடியவில்லை. அப்புறம் நம்ம தோஸ்த் ராஜ், மைந்தன், வரோ, சுதாண்ணா என்று யாரையுமே பார்க்க முடியவில்லை :((

பதிவர், நன்பன் என்று சந்தித்தது என்றால்.. நம்ம 'சிறகுகள்' மதுரனை மட்டுமே. (மதுரனை சந்திக்காமல் வந்தால் அப்புறம் ஃப்ராண்ஸுக்கு ஆள் அனுப்பியே போட்டுத்தள்ளிருவேன் என்று மிரட்டி வைத்திருந்தான்.. ஆவ்வ்வ்).

முன்பே இலங்கைக்கு போய் வரும் பல சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும் அதிக விருப்பம் இல்லாததால் இலங்கை பயணத்தை தவிர்த்துக்கொண்டே வந்தேன். இப்பொழுது இலங்கை சென்று வந்ததில் இருந்து இவ்ளோ நாளா அங்கே போகாமல் மிஸ் பண்ணிவிட்டேனே என்று கவளையாய் இருந்திச்சு. இப்போ முடிவே பண்ணியாச்சு.. இனி ஒவ்வொரு ஆண்டு விடுமுறையையும் இலங்கையில்தான் கழிப்பது என்று.
 


51 கருத்துகள்:

 1. வணக்கம் துஷி..
  நலமா??
  வெகு நீண்ட நாட்களுக்கு பின்னர் பதிவினூடே சந்திப்பதில் மகிழ்ச்சி ...
  பிறந்து வளர்ந்து ஊரின் அழகுக்கு இணை வரு எதுவும் கிடையாது..
  அதன் அழகையும் தன்மையையும் சொல்லிக்கொண்டே இருக்கலாம்...
  நிறைய நல்ல செய்திகளுடன் வந்துருக்கீங்க...
  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. பெற்ற தாயை வெகு நாட்கள் கழித்து
  பார்ப்பவர் மனதில் தோன்றும்
  மகிழ்ச்சி வெள்ளம் போல் தாங்க்கள்
  திரும்ப்வும் ஊர் வந்து பார்த்ததை
  உணர்ந்ததை தங்கள் பதிவு உணர்த்தியது
  மனம் தொட்ட பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. ஆகா தமிழ் மணமா அல்லது சாக்கடை மணமா திரும்பிய திசை எல்லாம் கோப்பி பேஸ்ட் பதிவுகள். தமிழ்மணம் அண்ணாக்கள் சொல்வார்கள் நாங்கள்தான் தமிழில் பெரிய லாடு லபக்குதாஸ்,

  இன்லி, தமிழ்வெளி, tamil10, ஐயாமார்கள் அமைதியா ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருகிறார்கள்.

  என்பா இஸ்கு உங்களிடம் பதிவிடும் பதிபவர்கள் நடத்தும் குடிமி சண்டை தெரியாதா? இந்த டுபுக்குகள் சொல்வார்கள் கோப்பி பேஸ்ட் பண்ணி எழுதினால் உடனே நீக்கி விடுவோம்,

  தமிழ் மணத்தில் வெளிவரும் ஒரு சில பதிவுகள் தவிர எல்லோரும் காப்பி தான். எல்லா பதிபவர்களும் ஏதோ நிருபர்கள் வைத்து செய்தி போடுவது போல். இது மட்டுமல்லாது பதிவை வெளியிடும்போதே சொல்வார்கள் தனிப்பட்ட தாக்குதல், மத சம்மந்தமாக தாக்குதல்கள் கூடாது என்று.

  ஆனால் அங்கே மதங்களை இழிவுபடுத்தி எழுதப்படும் விசயங்களும், தமிழர்களுக்குள்ளே சண்டையை உண்டாக்கும் விடயங்களுமே அதிகம். இந்த நாற்றம் பிடித்த திரட்டியில் எழுத நீயா நானா என்று போட்டி வேறு.

  பதிலளிநீக்கு
 4. ஆகா தமிழ் மணமா அல்லது சாக்கடை மணமா!!! திரும்பிய திசை எல்லாம் கோப்பி பேஸ்ட் பதிவுகள். தமிழ்மணம் அண்ணாக்கள் சொல்வார்கள் நாங்கள்தான் தமிழில் பெரிய லாடு லபக்குதாஸ்,

  இன்லி, தமிழ்வெளி, tamil10, ஐயாமார்கள் அமைதியா ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருகிறார்கள்.

  என்பா இஸ்கு உங்களிடம் பதிவிடும் பதிபவர்கள் நடத்தும் குடிமி சண்டை தெரியாதா? இந்த டுபுக்குகள் சொல்வார்கள் கோப்பி பேஸ்ட் பண்ணி எழுதினால் உடனே நீக்கி விடுவோம்,

  தமிழ் மணத்தில் வெளிவரும் ஒரு சில பதிவுகள் தவிர எல்லோரும் காப்பி தான். எல்லா பதிபவர்களும் ஏதோ நிருபர்கள் வைத்து செய்தி போடுவது போல். இது மட்டுமல்லாது பதிவை வெளியிடும்போதே சொல்வார்கள் தனிப்பட்ட தாக்குதல், மத சம்மந்தமாக தாக்குதல்கள் கூடாது என்று.

  ஆனால் அங்கே மதங்களை இழிவுபடுத்தி எழுதப்படும் விசயங்களும், தமிழர்களுக்குள்ளே சண்டையை உண்டாக்கும் விடயங்களுமே அதிகம். இந்த நாற்றம் பிடித்த திரட்டியில் எழுத நீயா நானா என்று போட்டி வேறு.

  பதிலளிநீக்கு
 5. முல்லைத்தீவில் இருந்து கொஞ்ச தூரம் போயிருந்தால் முள்ளிவாய்க்கால்,மாத்தளன் எல்லாம் பார்த்திருக்கலாம்.
  அதில் இருந்து கொஞ்ச தூரம் போயிருந்தால் புதுக்குடியிருப்பில் பிரபாகரன் அவர்களின் வீடு இருக்கு அது எல்லாம் போய் பார்த்திருக்கலாமே பாஸ்

  பதிலளிநீக்கு
 6. நெடுங்கேணியால் ஒவ்வொறு முறை கடந்து செல்லும் போதும் அந்த பாடசாலையை பார்கின்றபோது உங்கள் சின்ன வயசு பப்பி லவ்வும்(முன்பு ஒரு பதிவில் சொல்லியிருந்தீர்கள்) நீங்களும் ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்கமுடியவில்லை.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  பதிலளிநீக்கு
 7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 8. துஷி..!


  சில முக்கிய விடயங்கள் குறிப்பாக உங்களின் எதிர்காலம் குறித்த ரொமான்டிக் அறிமுக காட்சிகளை இங்கு பதிந்திருந்தால் கௌதம் மேனனின் படங்கள் பார்த்த அனுபவம் கிடைத்திருக்கும். ஆனாலும், பாருங்க அப்படியே அதை ஸ்கிப் பண்ணிட்டு பதிவ எழுதிட்டீங்களே...?


  ////எனக்கு ரெம்ப பிடித்த பதிவர்களில் மிக முக்கியமானவர்கள் 'மருதமூரான்'அண்ணாவும் 'ஜீ'அண்ணாவும். இருவரையும் கண்டிப்பாய் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஹுமும்.. நாட்கள் படு வேகமாய் நகர்ந்ததில் அவர்களை சந்திக்கவே முடியவில்லை. அப்புறம் நம்ம தோஸ்த் ராஜ், மைந்தன், வரோ, சுதாண்ணா என்று யாரையுமே பார்க்க முடியவில்லை :((////

  எனக்கு இதைவிட என்ன பெருமை. நான் வாழ்தலின் அர்த்தம் கிடைத்தவிட்டது:P

  உண்மையிலேயே துஷியை சந்திக்க வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கும் அதிகம் இருந்தது. ஆனாலும், அது சாத்தியமில்லாமல் போனது கலலைதான். பார்க்கலாம் இன்னொரு சந்தர்ப்பம் அமையாமலா போய்விடும்?

  பதிலளிநீக்கு
 9. காலை வணக்கம்,துஷி!நலமா?அப்புறம்"அவங்க"நலமா?நான் கூட பாதி வாழ் நாளுக்குப் பின் பிறந்த,வளர்ந்த,ஓடியாடி விளையாடிய சொந்த ஊரைப் பார்க்கப் போயிருந்தேன்,ஹும்..............................(போயிருந்தேன்,அவ்வளவு தான்!....)

  பதிலளிநீக்கு
 10. துஷி இதையெல்லாம் நாங்க நேரடியா பார்த்திட்டோமே உங்கள் முகநூளில்..

  பதிலளிநீக்கு
 11. அண்ணே எனக்கும் எல்லாம் நினைவிற்கு வருகுது..
  காலம் வரும் போது நானும் பொய் இப்படி ஒரு பதிவு போடுவன்...
  இப்பவே போகணும் போல இருக்குது...
  நான் வாழ்ந்த இடங்கள் அனைத்தும் எப்பவும் என் நினைவில்....

  பதிலளிநீக்கு
 12. ////எனக்கு ரெம்ப பிடித்த பதிவர்களில் மிக முக்கியமானவர்கள் 'மருதமூரான்'அண்ணாவும் 'ஜீ'அண்ணாவும். இருவரையும் கண்டிப்பாய் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஹுமும்.. நாட்கள் படு வேகமாய் நகர்ந்ததில் அவர்களை சந்திக்கவே முடியவில்லை. அப்புறம் நம்ம தோஸ்த் ராஜ், மைந்தன், வரோ, சுதாண்ணா என்று யாரையுமே பார்க்க முடியவில்லை :((////

  நமக்கும் மருதமூராரை சந்திக்க ஆசைதான் ஊர் வரும்போது கட்டாயம் அப்பாய்மைன் வாங்கிட்டுத்தான் போகணும் பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 13.  மகேந்திரன் கூறியது...
  வணக்கம் துஷி..
  நலமா??
  வெகு நீண்ட நாட்களுக்கு பின்னர் பதிவினூடே சந்திப்பதில் மகிழ்ச்சி ...
  பிறந்து வளர்ந்து ஊரின் அழகுக்கு இணை வரு எதுவும் கிடையாது..
  அதன் அழகையும் தன்மையையும் சொல்லிக்கொண்டே இருக்கலாம்...
  நிறைய நல்ல செய்திகளுடன் வந்துருக்கீங்க...
  வாழ்த்துக்கள்...<<<<<<<<<<<<<<<

  வணக்கம் அண்ணா..
  எப்படி இருக்கீங்க..??
  எனக்கும் நிறைய இடைவெளிகளுக்கு பின் உங்களை சந்திப்பதில் ரெம்ப ஹப்பி :))

  ச்சும்மாவா சொன்னார்கள் சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப்போல வருமா என்று :)))

  பதிலளிநீக்கு
 14.  Ramani கூறியது...
  பெற்ற தாயை வெகு நாட்கள் கழித்து
  பார்ப்பவர் மனதில் தோன்றும்
  மகிழ்ச்சி வெள்ளம் போல் தாங்க்கள்
  திரும்ப்வும் ஊர் வந்து பார்த்ததை
  உணர்ந்ததை தங்கள் பதிவு உணர்த்தியது
  மனம் தொட்ட பதிவு
  தொடர வாழ்த்துக்கள்
  <<<<<<<<<

  உண்மைதான் ரமணி சார்..
  இன்னும் துஷியை மறக்காமல் இருப்பதற்க்கு தேங்க்ஸ் :))

  பதிலளிநீக்கு
 15.  K.s.s.Rajh கூறியது...
  முல்லைத்தீவில் இருந்து கொஞ்ச தூரம் போயிருந்தால் முள்ளிவாய்க்கால்,மாத்தளன் எல்லாம் பார்த்திருக்கலாம்.அதில் இருந்து கொஞ்ச தூரம் போயிருந்தால் புதுக்குடியிருப்பில் பிரபாகரன் அவர்களின் வீடு இருக்கு அது எல்லாம் போய் பார்த்திருக்கலாமே பாஸ்<<<<<>>>>>>>>>>

  ஹாய் ராஜ்..
  எப்புடி இருக்கீங்க..?
  கொஞ்ச நாள் லீவில் வந்ததால் நிறைய இடங்களை பார்க்க முடியாமல் மிஸ் பண்ணியாச்சு பாஸ்ச்:(

  பிரபாகரன் வீடு போக இருந்து கடைசி டைம் மிஸ் பண்ணியது :(

  அடுத்த வருஷம் எல்லாத்தையும் பார்த்துடுவோம் பாஸ் :))

  பதிலளிநீக்கு
 16.  K.s.s.Rajh கூறியது...
  நெடுங்கேணியால் ஒவ்வொறு முறை கடந்து செல்லும் போதும் அந்த பாடசாலையை பார்கின்றபோது உங்கள் சின்ன வயசு பப்பி லவ்வும்(முன்பு ஒரு பதிவில் சொல்லியிருந்தீர்கள்) நீங்களும் ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்கமுடியவில்லை.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்<<<<<>>>>>>>>>>>

  அடப்பாவி........ :)

  எனக்கும் ஸ்கூல் பக்கம் போன போது அந்த பப்பி லவ் நினைவில் வந்திச்சு பாஸ்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  தேங்க்ஸ் ராஜ்

  பதிலளிநீக்கு
 17.  மருதமூரான். கூறியது...
  துஷி..!


  சில முக்கிய விடயங்கள் குறிப்பாக உங்களின் எதிர்காலம் குறித்த ரொமான்டிக் அறிமுக காட்சிகளை இங்கு பதிந்திருந்தால் கௌதம் மேனனின் படங்கள் பார்த்த அனுபவம் கிடைத்திருக்கும். ஆனாலும், பாருங்க அப்படியே அதை ஸ்கிப் பண்ணிட்டு பதிவ எழுதிட்டீங்களே...?>>>><<<<<<<<<

  ஹா ஹா............ ரெம்பத்தான் :ப்
  ஆனாலும் அது பற்றி நிறைய ரெம்ப அழகான விசயங்கள் எல்லாம்  நடந்திச்சு :) நான் தான் வேணும் என்று தவிர்த்தேன்..
  காரணம்..
  நமக்கு ஏக்கனவே ஏகப்பட்ட நல்ல பெயர் அதில் இது வேறய... ஆவ்வ்வ்வ்வ்

  பதிலளிநீக்கு
 18.  மருதமூரான். கூறியது...
  துஷி..!
  ////எனக்கு ரெம்ப பிடித்த பதிவர்களில் மிக முக்கியமானவர்கள் 'மருதமூரான்'அண்ணாவும் 'ஜீ'அண்ணாவும். இருவரையும் கண்டிப்பாய் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஹுமும்.. நாட்கள் படு வேகமாய் நகர்ந்ததில் அவர்களை சந்திக்கவே முடியவில்லை. அப்புறம் நம்ம தோஸ்த் ராஜ், மைந்தன், வரோ, சுதாண்ணா என்று யாரையுமே பார்க்க முடியவில்லை :((////

  எனக்கு இதைவிட என்ன பெருமை. நான் வாழ்தலின் அர்த்தம் கிடைத்தவிட்டது:P

  உண்மையிலேயே துஷியை சந்திக்க வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கும் அதிகம் இருந்தது. ஆனாலும், அது சாத்தியமில்லாமல் போனது கலலைதான். பார்க்கலாம் இன்னொரு சந்தர்ப்பம் அமையாமலா போய்விடும்?<<<<<<<<<<<<<<>>>>

   நிஜமாவே வரும் போது முதல் போட்ட பிளானே உங்களை சந்திக்கோணும் என்பதுதான்... அது நடைபெறாததில் எனக்கு ரெம்ப வருத்தம் :'(

  அடுத்த வருஷம் மிஸ் பண்ண மாட்டேன் ^_^

  பதிலளிநீக்கு
 19.  Yoga.S. கூறியது...
  காலை வணக்கம்,துஷி!நலமா?அப்புறம்"அவங்க"நலமா?நான் கூட பாதி வாழ் நாளுக்குப் பின் பிறந்த,வளர்ந்த,ஓடியாடி விளையாடிய சொந்த ஊரைப் பார்க்கப் போயிருந்தேன்,ஹும்..............................(போயிருந்தேன்,அவ்வளவு தான்!....)<<<<<<<<<<<<<

  ஹய்யோ அப்பா :)))
  எப்புடி இருக்கீங்க அப்பா :)
  அவிங்க நள்ளா இருக்காங்க :ப்

  நீங்களும் போயிருந்தீங்களா...???
  அப்பாவும் வக்கோன்ஸுக்கு ரெம்பத்தான் எஞ்சாய் பண்ணி இருக்கார் போல :))

  பதிலளிநீக்கு
 20.  காட்டான் கூறியது...
  துஷி இதையெல்லாம் நாங்க நேரடியா பார்த்திட்டோமே உங்கள் முகநூளில்..:<<<<<

  ஆமால்ல.... :))
  இது முகனூலில் இல்லதவர்க்கு :ப்

  அதென்ன புதுஷா துஷி ..?? :(

  மரியாதையா "மருமோன்" என்று கூப்பிடுங்கோ... கொர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு
 21.  ஆகுலன் கூறியது...
  அண்ணே எனக்கும் எல்லாம் நினைவிற்கு வருகுது..
  காலம் வரும் போது நானும் பொய் இப்படி ஒரு பதிவு போடுவன்... 
  இப்பவே போகணும் போல இருக்குது...
  நான் வாழ்ந்த இடங்கள் அனைத்தும் எப்பவும் என் நினைவில்....
  <<<<<<<<<<<<<

  ஹாய் ஆர்ணீ... 
  ஹாய் ஆகுலன் :))

  ஹும்.. இன்னும் நம்மல எல்லாம் மறக்கல்ல.. ஹப்பியா இருக்கு பாஸ்
  ரியலி தேங்க்ஸ் :))

  நாம் பெற்ற இன்பம் வையகமும் பெறுக...
  போயிட்டு வந்து பதிவா போடுங்க பாஸ்

  இப்பவே வெயிட்டிங் உங்க அனுபவ பதிவு  பார்க்க.

  பதிலளிநீக்கு
 22.  காட்டான் கூறியது...
  ////எனக்கு ரெம்ப பிடித்த பதிவர்களில் மிக முக்கியமானவர்கள் 'மருதமூரான்'அண்ணாவும் 'ஜீ'அண்ணாவும். இருவரையும் கண்டிப்பாய் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஹுமும்.. நாட்கள் படு வேகமாய் நகர்ந்ததில் அவர்களை சந்திக்கவே முடியவில்லை. அப்புறம் நம்ம தோஸ்த் ராஜ், மைந்தன், வரோ, சுதாண்ணா என்று யாரையுமே பார்க்க முடியவில்லை :((////

  நமக்கும் மருதமூராரை சந்திக்க ஆசைதான் ஊர் வரும்போது கட்டாயம் அப்பாய்மைன் வாங்கிட்டுத்தான் போகணும் பார்க்கலாம்.
  <<<>>>>>>>>>>>

  கண்டிப்பாய் போய் சந்தியுங்கள் மாமா..
  நாந்தான் மிஸ் பண்ணிவிட்டேன் :((

  மருதமூரான் அண்ணாவின் எழுத்துக்கள் ரெம்ப அருமை.. அவரின் ஆழமான ரசனையான எழுத்து யாருக்கும் வராது .

  எனக்கு ரெம்ப பிடிக்கும் மருதமூரான்பண்ணாவை ^_^

  பதிலளிநீக்கு
 23. வணக்கம் மச்சி

  ஆமா.. நீயும் பதிவரா? எனக்கு மறந்தே போச்சு :P

  அப்பப்போ பதிவு போடு. அப்பதான் நீ பதிவர் எண்டது ஞாபகத்துக்கு வரும் :D

  பதிலளிநீக்கு
 24. நீண்டநாள் பிரிந்திருந்த தாயகத்தை பார்ப்பதுகூட ஒரு சுகம் தான். அதற்காகவெ பிரிந்திருக்கலாம் போல

  பதிலளிநீக்கு
 25. வணக்கம் துஸி.

  ஊர் நினைவுகளில் நீங்களும் இன்புற்றிருந்ததோடு, எம்மையும் அழைத்துச் சென்றிருக்கிறீர்கள்.
  ரசித்தேன் ஐயா,
  மேலே போட்டிருக்கும் படம் உங்கள் சந்தோசத்தை அப்படியே காண்பிக்கிறது.

  வாழ்த்துக்கள் தோழா

  பதிலளிநீக்கு
 26. அப்பாவும் வக்கோன்ஸுக்கு ரெம்பத்தான் எஞ்சாய் பண்ணி இருக்கார் போல.!//////ஆங்,தம்பி!என் கருத்தை ஊன்றிக் கவனித்தால் புரியும்.வகன்ஸ்(VACANCES) பிள்ளைகளுக்கு.நான் சும்மா தான் இருக்கிறேன்.பொறுமையாகப் பேசலாம்!

  பதிலளிநீக்கு
 27. (மறுபடியும் வந்துட்டோம் இல்ல..)
  ரெம்ப பெரிய்ய்ய்..ய இடைவெளிகளுக்கு பின் மீண்டும் வலைப்பூ பக்கம்// வாருங்கள் கண்ணாம்மா ஆசிரியரே நலமா நீண்ட காலம் வலையில் காத்திருந்த வாசகன்!ம்ம்

  பதிலளிநீக்கு
 28. ஊர் ஞாபகத்தின் ஊடே காலமாற்றம் யுத்த மாற்றம் தலைமுறை இடைவெளி மாற்றம் சொல்லிய பதிவு! பகிர்வுக்கு நன்றி பாஸ்§

  பதிலளிநீக்கு
 29. பைரவர் அழகு தான் பார்த்தேன் படத்தில்!ஹீ வாகனம் இல்லாத் நிலையில் சூப்பர் காவலாளி!ம்ம் படம் தம்பி அழகு காட்சியில்!குலதெய்வம் முக்கியம் இல்லை!ம்ம் விளாத்திமரம் போல!ஹீ

  பதிலளிநீக்கு
 30. நட்டு வச்ச மரம் வளர்ந்து நிக்கும் காட்சி பார்க்கும் போது மனதில் ஒரு சிறுபிள்ளைத்தனம் வருமே அதை துசியை நான் முதலில் சந்தித்த போது பார்த்தேன்!முக்க்னியில் ஒரு க்னி அல்ல்வா மாம்ப்ழ்ம்!ம்ம் தொட்ர்ந்து ஊர் ஞாபகத்தை தொடர் ஆக்குங்க வாசிக்க தயார்!

  பதிலளிநீக்கு
 31. இது தங்களின் 50-ஆவது பதிவு போல் தோன்றுகிறதே?

  வாழ்த்துக்கள் நண்பரே!

  பதிலளிநீக்கு
 32. சொந்த ஊரை...நண்பர்களை... வெகு நாட்களுக்கு பிறகு திரும்பவும் பார்ப்பது..மனதில் ஒரு இனம் புரியாத உற்சாகத்தையும் சந்தோசத்தையும் ஏற்படுத்தும் என்பது உண்மையே!

  பதிவை சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள்..வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 33.  மதுரன் கூறியது...
  வணக்கம் மச்சி
  ஆமா.. நீயும் பதிவரா? எனக்கு மறந்தே போச்சு :P
  அப்பப்போ பதிவு போடு. அப்பதான் நீ பதிவர் எண்டது ஞாபகத்துக்கு வரும் :D
  <<<<

  ஒய் திஸ் கொலை வெறி மச்சி..
  டைம் இல்ல மச்சி :((

  பதிலளிநீக்கு
 34.  மதுரன் கூறியது...
  நீண்டநாள் பிரிந்திருந்த தாயகத்தை பார்ப்பதுகூட ஒரு சுகம் தான். அதற்காகவெ பிரிந்திருக்கலாம் போல
  <<<<<

  100% மச்சி

  பதிலளிநீக்கு
 35.  !!மத வெறியன் ஆப் மண்ணாங்கட்டி!! கூறியது...
  வணக்கம் துஸி.

  ஊர் நினைவுகளில் நீங்களும் இன்புற்றிருந்ததோடு, எம்மையும் அழைத்துச் சென்றிருக்கிறீர்கள்.
  ரசித்தேன் ஐயா,
  மேலே போட்டிருக்கும் படம் உங்கள் சந்தோசத்தை அப்படியே காண்பிக்கிறது.

  வாழ்த்துக்கள் தோழா
  <<<<

  தேங்க்ஸ் நிரூ

  பதிலளிநீக்கு
 36.  Yoga.S. கூறியது...
  அப்பாவும் வக்கோன்ஸுக்கு ரெம்பத்தான் எஞ்சாய் பண்ணி இருக்கார் போல.!//////ஆங்,தம்பி!என் கருத்தை ஊன்றிக் கவனித்தால் புரியும்.வகன்ஸ்(VACANCES) பிள்ளைகளுக்கு.நான் சும்மா தான் இருக்கிறேன்.பொறுமையாகப் பேசலாம்!<<<

  ஆவ்வ்வ்வ்வ்............
  பேசலாமே அப்பா :))

  எனக்கு ரெம்ப வேலையப்பா 
  5:30 க்கு போனால் இரவு 11:30 க்குத்தான் வீட்டை :((

  கிட்டத்தட்ட ப்ளாக்கை மறந்தே வேணாம் என்றே இருந்தேன்.. இப்போ மறுபடியும் ஒரு முக்கிய மேட்டருக்காவே வந்தேன்.. அது முடிந்ததும் சில வேளை மறுபடியும் விலகி விடுவேன்..

  அது என்ன என்று அடுத்த பதிவில் பாருங்க அப்பா^_^

  பதிலளிநீக்கு
 37. அடப்பாவி மைந்தா.. :ப்
  அதை வேணும் என்றே மிஸ் ஆக்கினோம் இல்ல.. ஹீ ஹீ..

  அது பற்றி முடிந்தால் பின் ஒரு நாள் பேசுவோமே  :)

  பதிலளிநீக்கு
 38.  தனிமரம் கூறியது...
  (மறுபடியும் வந்துட்டோம் இல்ல..)
  ரெம்ப பெரிய்ய்ய்..ய இடைவெளிகளுக்கு பின் மீண்டும் வலைப்பூ பக்கம்// வாருங்கள் கண்ணாம்மா ஆசிரியரே நலமா நீண்ட காலம் வலையில் காத்திருந்த வாசகன்!ம்ம்<<<<<

  ஹாய் அண்ணாச்சி
  நலம் தானே..??
  நல்லா இருக்கேன் நான் :)
  தேங்க்ஸ்

  என் வலை வாசகன் நேசன் அண்ணா என்பதை காட்டிலும் என்ன பெருமை எனக்கு பெருசு
  ஹப்பி 
  தேங்க்ஸ் :)

  பதிலளிநீக்கு
 39.  தனிமரம் கூறியது...
  ஊர் ஞாபகத்தின் ஊடே காலமாற்றம் யுத்த மாற்றம் தலைமுறை இடைவெளி மாற்றம் சொல்லிய பதிவு! பகிர்வுக்கு நன்றி பாஸ்§
  <<<<>>>>

  தேங்க்ஸ் அண்ணா
  உங்களை போன்றவர்களின் அன்புதான் மீண்டும் மீண்டும் பதிவுலகத்துக்கு என்னை இழுத்து வருது 

  பதிலளிநீக்கு
 40.  தனிமரம் கூறியது...
  பைரவர் அழகு தான் பார்த்தேன் படத்தில்!ஹீ வாகனம் இல்லாத் நிலையில் சூப்பர் காவலாளி!ம்ம் படம் தம்பி அழகு காட்சியில்!குலதெய்வம் முக்கியம் இல்லை!ம்ம் விளாத்திமரம் போல!ஹீ<<<<<

  வாகனத்த சிங்கள ஆமி அங்கிள் சுட்டுட்டுப்போயிட்டாரு... ஹீ ஹீ

  பதிலளிநீக்கு
 41.  தனிமரம் கூறியது...
  நட்டு வச்ச மரம் வளர்ந்து நிக்கும் காட்சி பார்க்கும் போது மனதில் ஒரு சிறுபிள்ளைத்தனம் வருமே அதை துசியை நான் முதலில் சந்தித்த போது பார்த்தேன்!முக்க்னியில் ஒரு க்னி அல்ல்வா மாம்ப்ழ்ம்!ம்ம் தொட்ர்ந்து ஊர் ஞாபகத்தை தொடர் ஆக்குங்க வாசிக்க தயார்!<<<>>>>>>>>

  உண்மைதான் அண்ணா..
  அந்த மரத்தை பார்த்த போது நானும் குழந்தையான உணர்வு
  பிரிய மனமே இல்ல..
  எனக்கு கண்ணே கலங்கிட்டுது :((
  ஹும்... இது எங்களின் சாபமெல்லோ... (

  பதிலளிநீக்கு
 42.  வரலாற்று சுவடுகள் கூறியது...
  இது தங்களின் 50-ஆவது பதிவு போல் தோன்றுகிறதே? 

  வாழ்த்துக்கள் நண்பரே!
  <>>>>>>>

  முதல் வாழ்த்து
  தேங்க்ஸ் நன்பா ^_^

  நானே இப்பொழுதுதான் கவனித்தேன்.. :)) ஆச்சரியமாய் இருந்திச்சு. வந்து இந்தனை நாட்களில் வெறும் 50 பதிவா..!! கொஞ்சம் கூச்சமாவும் இருக்கு ஹீ ஹீ

  தேங்க்ஸ் நன்பா :)

  பதிலளிநீக்கு
 43.  வரலாற்று சுவடுகள் கூறியது...
  சொந்த ஊரை...நண்பர்களை... வெகு நாட்களுக்கு பிறகு திரும்பவும் பார்ப்பது..மனதில் ஒரு இனம் புரியாத உற்சாகத்தையும் சந்தோசத்தையும் ஏற்படுத்தும் என்பது உண்மையே!

  பதிவை சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள்..வாழ்த்துக்கள்!
  <<>>>>>

  100% உண்மைதான் நன்பா..
  அந்த ஹப்பியை வார்த்தையில் வடித்து விட முடியுமா..? :(

  தேங்க்ஸ் நன்பா^_^

  பதிலளிநீக்கு
 44. துஷிக்குட்டி...வந்தாச்சு வந்தாச்சு !

  அட...இப்பத்தான் பாத்தன் துஷியா.முகப்புத்தகத்தில பார்த்துப் பொறாமைபட்டதா இப்ப கொஞ்சம் பொறாமை குறைஞ்சிருக்கு !

  இந்த முறை ஊர் ஏன் அதிகமாப் பிடிச்சிருக்கெண்டு சொல்லாம....அவருக்கு பழைய ஞாபகமும்,3 ம் வகுப்புப் படிச்ச பள்ளிக்கூடமுமாமெல்லோ பிடிச்சிருக்கு.பச்சைப் பொய்.இங்க வாசிச்ச ஆராச்சும் நம்பினீங்களோ...நம்பின ஆக்கள் கை தூக்குங்கோ பாப்பம் ஹிஹிஹி !

  பதிலளிநீக்கு
 45. புளியமரம்,பைரவர் கோவில் எனக்கும் ஞாபகம் வந்தாச்சு.ஆனால் ஒன்று....நாங்கள் பழைய கற்பனைகளோடுதான் ஊர் போகிறோம்.அங்கு எல்லாம் எல்லாமே தலைகீழாய் மாறிக்கிடக்கு.அப்பவே மனம் உடையுது.மக்களின் குணம்கூட !

  இன்னும் நிறைய எழுதியிருக்கலாம் துஷி.அந்த மரத்தில இருந்த படம் நல்ல வடிவு.ஏன் அதைப் போடேல்ல !?

  பதிலளிநீக்கு
 46. ஹேமா சொன்னது…
  துஷிக்குட்டி...வந்தாச்சு வந்தாச்சு !
  அட...இப்பத்தான் பாத்தன் துஷியா.முகப்புத்தகத்தில பார்த்துப் பொறாமைபட்டதா இப்ப கொஞ்சம் பொறாமை குறைஞ்சிருக்கு !
  இந்த முறை ஊர் ஏன் அதிகமாப் பிடிச்சிருக்கெண்டு சொல்லாம....அவருக்கு பழைய ஞாபகமும்,3 ம் வகுப்புப் படிச்ச பள்ளிக்கூடமுமாமெல்லோ பிடிச்சிருக்கு.பச்சைப் பொய்.இங்க வாசிச்ச ஆராச்சும் நம்பினீங்களோ...நம்பின ஆக்கள் கை தூக்குங்கோ பாப்பம் ஹிஹிஹி !////


  ஹையோ ஹையோ அக்காச்சி வந்துட்டா :))))))))

  ஆவ்வ்..... நிஜமா நினைவு இருக்கு அக்காச்சி.... அந்த பள்ளி அப்படியே நினைவில் அது மட்டுமா அப்போ வந்த பப்பி லவ் அந்த பொண்ணு எல்லாமே நினைவில் ஹீ ஹீ (இவன் திருந்த மாட்டான் அக்கா புலம்புறது கேக்குது :)

  இன்னொன்று பார்த்தீங்க?? இது நம்ம மணியும் படித்த பள்ளி :)))

  பதிலளிநீக்கு
 47. ஹேமா சொன்னது…
  புளியமரம்,பைரவர் கோவில் எனக்கும் ஞாபகம் வந்தாச்சு.ஆனால் ஒன்று....நாங்கள் பழைய கற்பனைகளோடுதான் ஊர் போகிறோம்.அங்கு எல்லாம் எல்லாமே தலைகீழாய் மாறிக்கிடக்கு.அப்பவே மனம் உடையுது.மக்களின் குணம்கூட !

  இன்னும் நிறைய எழுதியிருக்கலாம் துஷி.அந்த மரத்தில இருந்த படம் நல்ல வடிவு.ஏன் அதைப் போடேல்ல !?////

  உண்மைதான் அக்காச்சி போட்டு நிறைய எழுத இருந்திச்சு படிக்கிறவங்களுக்கு அலுப்படிக்கப்படாது என்று எழுதல்ல :)))))

  அந்த போட்டோவா,,, ஹீ ஹீ கண்ணு பட்டுடும் என்றுதான் போடல்ல அக்காச்சி :)))

  பதிலளிநீக்கு
 48. >ஆச்சரியம் தான்.. இறுதியாக இருந்து வந்த வவுனியாவில் உள்ள இடங்களே மறந்துவிட்ட நிலையில்.. பிறந்து, 8 வயது வரையே வாழ்ந்த நெடுங்கேணியில் ஒவ்வொரு இடமும் நினைவில்...!

  இந்த இடத்தில் ஜொலிக்கிறீர்கள் :-)

  பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...