ஞாயிறு, அக்டோபர் 28, 2012

குட்டிம்மாவும் நானும் ஒரு 'டெரார்' டிஸ்கஷன்.


நமக்கு மட்டும் ஏந்தான் எல்லாமே இப்படி ஆகுதோ தெரில்ல.. :((
நமக்கும் குட்டிம்மாவுக்கும் கல்யாணம் பிக்ஸான உடனேயே நம்ம வீட்டு பெரியவங்க எல்லாம் ஒன்று சேர்ந்து 'அதான் முடிவாயிட்டெல்ல, இனி பொண்ணு பையன் வீட்டையே நிக்கட்டும்.. என்னதான் ஒண்டுக்க ஒண்டா இருந்தாலும் இனி கொஞ்சம் அதிகமாவே ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சு நல்லா பழகிக்கணும் இல்ல..' அப்படிண்ணு சொன்னத கேட்டதுமே நாம அப்படியே ஷாக்'காகிட்டோம் என்றா பாருங்களேன்.

அடியாத்தீ... வழமையா இவிங்க வில்லங்கமா பேசி கல்யாணம் வரைக்கும் பக்கத்திலேயே அண்ட விட மாட்டாங்களே, ஆனா இங்கே எல்லாமே தலைகீழா நடக்குதே...! என்று குழப்பிட்டே இருந்தோமா, அப்புறந்தான் புரிஞ்சுது அவிங்க பொண்ண பழக கூட்டியாந்தது நம்ம கூட இல்லயாம் பெரியவங்க அவிங்க கூடவாம். அவ்வ்வ்வ்... என்ன ஒரு வில்லத்தனம். :((

சரி வுட்றா துஷி, வாழ்கையென்றாலே இப்படியான துரோகங்களும் ஏமாற்றங்களும் சகஜம்தானேடா.. அப்படிண்டுட்டு நாமளும் ஃப்ராண்ஸ் வந்து சரி ஃபோனிலேயாவது பழகலாமே என்று வீட்டுக்கு ஃபோனைப்போட்டா.., அங்காலப்பக்கம் அவள சுத்தி ஒரு கிராமமே ஆ'வென்று பாத்துக்கிட்டு ஒக்காந்திருக்கும். நாம ஏதாவது அவ கிட்ட கேட்டா சுத்தி இருக்கிறவங்க எல்லாம் நமட்டு சிரிப்போட பதில் சொல்லுறது இங்கிட்டு நமக்கு கேக்கும். நாமளும் அசடு வழிஞ்சுக்கிட்டே ஃபோனை வைச்சுடுவோம்.


இப்படியே நம்ம 'பழகணும்' என்ற ஆசை நிறைவேறாமலே இருக்கும் போதுதான் ஒரு நாள் எதார்த்தமா அங்கால ஃபோனை போட்டா, ஆச்சரியமா அதிசயமா நம்ம குட்டிம்மா 'ஹலோ..' எங்கிறா. நமக்கு கையும் ஓடல்ல காலும் ஓடல்ல நம்பவும் முடியல்ல. இதற்கிடையில் அவ நாலு வாட்டி 'ஹலோ.. ஹலோ..' என்றுட்டு பதிலே இல்லாததால டொக்'குண்ணு ஃபோனை வேற வைச்சுட்டா. வைச்சுட்டா மட்டும் விட்றவமா நாங்க..? விட்றவமா எங்கிறேன்.. விட்டா இப்படி ஒரு சான்ஸ் மறுபடியும் கிடைச்சுடுமா என்ன.. ??

மறுபடியும் ஃபோனைப்போட்டு நாமளும் 'ஹலோ..'என்ற, 'ஹய்யோ நீயா.... எப்படிடா இருக்க..' என்று அங்காலப்பக்கமும் சந்தோஷத்தில் திக்குமுக்காட. உடனே நாம, 'ஹேய்ய்ய்.. குட்டிம்மா, வழமையா எப்பவுமே உன்ன சுற்றி ஒரு கிராமமே ஒக்காந்திருக்குமே எங்கப்பா அதுங்க எல்லாம்..? என்று சந்தேகமாவே கேக்க', அவ கடுப்பா 'பெரியவங்கள இப்படியா பேசுவ..' என்று சொல்லியபடியே அவங்க ஒவ்வொருத்தரும் போன இடங்கள விலாவாரியா சொல்லீட்டே போக உடனே 'ஹய்யோ....... எங்காவது போயிருக்கட்டும் அத விடு, ஹேய் குட்டிம்மா அவிங்க வாறதுக்குள்ள நாம ரெண்டு பேரும் பழகுவோமா..' என்று நாம கேட்டோமா... சட்டுண்ணு அங்காலப்பக்கம் பேச்சுமூச்சே இல்ல.

ஆனா.., அங்கிட்டு அவ திக்'குண்ணு ஆயிட்டா என்று மட்டும் நமக்கு புரிஞ்சு போச்சு. நாம உடனேயே உசாராகி 'ஹேய்.. ஹேய்.. நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒண்ணுமில்லப்பா.. ச்சும்மா பேசி பேசி ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சு பழகிப்போம் என்றுதான் சொல்ல வந்தேன்' என்று சொன்னாப்பிறம்தான் 'ஓ.. அதுவா.. ஓக்கே ஓக்கே' என்று அங்காலப்பக்கம் சத்தமே (மூச்சே) வந்திச்சு. (ஹீ..ஹீ....).

அப்பாடா.. நெருங்கீட்டோம் இல்ல என்று நம்மளுக்கு ஒரே குஷியாப்போச்சு. சரி எல்லோரும் எங்க இருந்து தொடங்குவாங்க நாமளும் அங்கேயிருந்தே தொடங்குவோம் என்று நினைச்சவாறே... 'குட்டிம்மா உனக்கு என்னென்ன பிடிக்கும் பிடிக்காது என்று சொல்லேன்' என்றமா 'சின்ன வயசிலேருந்து பார்த்துட்டே இருக்கே, உனக்கு தெரியாதா எனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்று..? உடனே அவ வார, நாம கடுப்போட 'அடி லூஸு.. கேட்டா கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லுடி..' என்று எகிற அவ சிரித்தபடியே.. 'ஓக்கே துஷிக்குட்டி (அவ்வ்வ்) உனக்கு பிடிச்ச எல்லாமே எனக்கும் பிடிக்கும்.. உனக்கு பிடிக்காத எதுவுமே எனக்கும் பிடிக்காது' என்று சொ(ஜொ)ல்ல நாம அப்படியே உருகிப்போயிட்டம் அப்படிண்ணு சொல்லப்போறேன் என்று தானே நீங்க நினைக்கிறீங்க..!! ஆனா அதான் இல்ல நாம பதிலுக்கு செம காண்டாகிட்டோம் இல்ல. 

'அடியே மக்கு.. மக்கு.., இப்படி ஊரில எத்தன பேரடி கிளம்பியிருக்கீங்க.. அதெப்படி எனக்கு பிடிச்சது எல்லாமே உனக்கும் பிடிக்கும்..?! பொய் சொல்லுறதுக்கு ஒரு அளவே வேணாம்.. பொண்ணுங்க எல்லோருமே இப்படித்தாண்டி பசங்கள பற்றி தப்புக்கணக்கு போடுறீங்க.. இப்படி சொல்லுற பொண்ணுங்களத்தான் பசங்களுக்கு பிடிக்குமுண்ணு நீங்களாவே நினைச்சுக்கிட்டு இப்படியெல்லாம் அடிச்சுவிட்டே இம்சை பண்றீங்க.. நிஜமாவே இப்படியான பொண்ணுங்கள பசங்களுக்கு கொஞ்சமும் பிடிக்காது தெரியுமா..' என்று நாம கொஞ்சம் சூடாவே எகிற.

பதிலுக்கு அவ 'நா ஒண்ணும் பொய் சொல்லல நெசமாவே அப்படித்தான்.. அதெல்லாம் தன் பார்ட்டனர ரெம்ப நேசிக்கிறவங்களாலதான் புரிஞ்சுக்க முடியும்.. உன்னால எல்லாம் புரிஞ்சுக்க முடியாதிடா..' என்று கடுப்பாக, அப்போத்தான் நமக்கு ஆஹா... கொஞ்சம் ஓவறாத்தான் போயிட்டோமோ என்று ஒரே பீலிங்காப்போச்சு.

அப்புறம் சட்டுண்ணு நாமளும் கூலாகி 'கோவிச்சுக்காத குட்டிம்மா.. ஏதோ கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்(!) ஹீ..ஹீ... சரி வுடு., பசங்களுக்கு எப்படியான பொண்ணுங்கள பிடிக்குமுண்ணு சொல்லுறேன்.. சரி வாணாம் (அவ்வ்வ்..). துஷி கூட குட்டிம்மா எப்படி எல்லாம் இருக்கணும், எப்படி எப்படி எல்லாம் நடந்துக்கணும் என்று துஷி ஆசைப்படுதுண்ணு சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோ.. நோட் பாயிண்ட் செல்லம்.. :))' ஆங்...... 


"அஜீத் என்றா எனக்கு ரெம்ப பிடிக்கும் தெரியுமா..? என்ன ஒரு அழகு.. என்ன ஸ்டையில்.. ஹீரோண்ணா அது அஜீத்'தான்" அப்படிண்ணு நா சொல்லுவேன். உடனே, "யாரு... மாசமா இருக்கிற பொண்ணு மாதிரியே இருப்பாரு.. டான்ஸாடுவாரு அவரா...? அதுசரி.... :)) என்னதான் இருந்தாலும் நம்ம விஜய் மாதிரி வருமாண்ணு.." நீ சொல்லணும். 

"சாண்டில்யன் புத்தகங்கள் படிச்சுப்பாறேன்.. அவர் புத்தகங்கள் பெரும்பாலும் எல்லாமே படிச்சுட்டேன் தெரியுமா..? ஒரு அறையில் சாண்டில்யன் புத்தகங்களை நிறைச்சுப்போட்டு எனக்கு சாப்பாடு தண்ணி தராமா அடைச்சு வைச்சாக்கூட அங்கேயே இருக்க சம்மதிப்பேன். சாண்டில்யன் புத்தகம் என்றால் எனக்கு உசிரு.. ஜ லவ் சாண்டில்யன்" அப்படிண்ணு நா சொல்லுவேன் உடனே நீ "அடப்பாவி.. எப்ப பார்தாலும் கடலு.. கொள்ளை.. பொண்ணு.. என்று கற்பனையிலேயே கட்டு கட்டா எழுதுவாரே.. அவரா..??ஹய்யே... அவரு புத்தகம் எனக்கு ஆகவே ஆகாதுப்பா... நமக்கு இந்த கனவு கற்பனை என்று எதுக்குமே பிரயோசனம் இல்லா புத்தகங்க எழுதுறவங்கள கொஞ்சமும் பிடிக்காது நமக்கு எப்பவுமே சுஜாதா'தான். ரியலி கிரேட் சுஜாதா தெரியுமா.." என்றணும். 

"ஹேய்ய்.. நீ உன் கண்களுக்கு மட்டும் தான் அழகா லேசா மை தீட்ற.. மற்றும் படி அதிகம் நீ மேக்கப் போட்டுக்கிறதே இல்ல.. இது எனக்கு பிடிக்கவே இல்ல தெரியுமா.. நீ ரெம்ப அழகுதான் ஒத்துக்கிறேன் ஆனாலும் அந்த அழக இன்னும் பளிச்சுண்ணு காட்ட லைட்டா மேக்கப் போட்டுக்கிறது ஒண்ணும் தப்பில்லையே. குறிப்பா.. உன் உதடு செகப்பா கிளிச்சொண்டு போல் அவ்ளோ அழகு.. இதனாலேயே என்னவோ அதற்கு நீ லிப்டிக் என்ற ஒரு ஜட்டத்தை கண்ணுலேயே காட்டுறது இல்ல.. அந்த செவந்த சின்ன உதட்டுக்கு கொஞ்சம் லைட்டா லிப்டிக் போட்டு பாறேன்.. சான்ஸே இல்ல.. அவ்ளோ அழகா இருக்கும் தெரியுமா..??" இது நானு, உடனே நீ... "ஹேய்.. ஸ்டாப் ஸ்டாப்... என்னடா சொல்லுற... ஸப்பா... இதெல்லாம் எனக்கு பிடிக்கவே பிடிக்காது.. முகத்துல ஒரு கிலோ ரோஸ் பவுடர அள்ளி தப்பிறதும் உதட்டுக்கு கலர் கலரா லிப்டிக் அடிக்கிறதும் நல்லாவா இருக்கும்..?! எப்பவும் இயர்க்கையா கடவுள் கொடுத்த அழகு  மட்டுமே  அழகு அதுவே எனக்கு போதும் இந்த ஆடம்பர அலங்காரம் எல்லாம் எனக்கு பிடிக்கவும் மாட்டுது எனக்கு அது தேவையும் இல்லை" என்று மூஞ்சல அடிச்சாப்ல சொல்லணும். 

"ஹேய்ய்ய்... குட்டிம்மா, பிடுங்கியெடுத்து ஃபிரஸா கழுவி வைச்ச மஞ்சள் கிழங்கு மாதிரி என்னமா கலரு உன் கலரு...!! ஃப்ராண்ஸில எனக்கு Riitou's Rts  என்று ஒரு மச்சாள் இருக்கா, அப்படியே உன் கலரு.. உன் அழகு. அவ போன சண்டே ஒரு விழாவுக்கு வந்திருந்தா.. மஞ்சள் நிற சுடிதார், மஞ்சள் நிற வளையல்கள், மஞ்சள் நிற மாலை என்று எல்லாமே மஞ்சள் மஞ்சளாவே. அவ கலருக்கும் அழகுக்கும் மஞ்சள் அவ்ளோ பொருத்தமா எடுப்பா இருந்திச்சு தெரியுமா..? ஏதோ தேவதையே நேரில வந்தா போல இருந்திச்சு. ஹேய்ய்.. ஹேய்ய்ய்... ப்ளீஸ் ப்ளீஸ் நீயும் அப்படி ரெஸ்ட் பண்ணிப்பாறேன் செமையா இருக்கும் தெரியுமா..?" அப்படின்பேன், உடனே நீ "அடேய்ய்ய்... தெரியாமாத்தான் கேக்குறேன் உன் Riitou  மச்சாள் என்ன ராமராஜன் ஃபானா..?? மஞ்சள் பச்சைண்ணு கலர் கலரா ரெஸ்ட் பண்ண.. ஆள விடு இப்படியான மட்டமான ரசனையெல்லாம் எனக்கில்லைப்பா.." அப்படிண்ணு சொல்லனனும்.

இப்படி எல்லா மேட்டரிலும் அவ (நீ தாண்டி.. அவ்வ்வ்) நினைச்சதையே பேசணும் அவளுக்கு பிடிச்சதையே செய்யணும். அவ எப்பவும் அவளாவே இருக்கணும். அழகில அன்பில மட்டும் இல்ல கோபத்திலயும் பிடிவாதத்திலயும் ஏன் திமிரில கூடவும் ராட்சஷியா இருக்கணும். அவ எனக்காக விட்டுக்கொடுத்தும் போகக்கூடாது என்னோடு எந்த விடயத்திலும் அனுசரிச்சும் போகக்கூடாது.. எப்போ பார்த்தாலும் எதுக்கெடுத்தாலும் என் கூட ஃபைட் பண்ணிக்கிட்டே இருக்கணும்.

இப்படி நம்ம ஆசை'கள சொல்லிட்டே போனமா.. அங்காலப்பக்கம் சத்தமே இல்ல. நாமளும் ஒரு டவுட்டாகி "குட்டிம்மா... லைன்ல தான இருக்க..??" அப்படிண்ண. அங்கிட்டு... "ஆமா... எல்லாம் சொல்லி முடிஞ்சுதா சார்.. சரி வைச்சுடட்டுமா ஃபோன.. ?" உடனே நாம... "என்ன குட்டிம்மா.. இவ்வ்வ்ளோ...... நேரமா நானும் தம் கட்டி என் ஆசை'களை எல்லாம் கொட்டி கொட்டி சொன்னேனே.. நீ பதிலே சொல்லலேயே...?' என்றோமா  அப்பாவியா.

அவ "இப்போ என்ன.. உன்னோட சண்டை போடணும் அவ்ளோ தானே..? உன்ன......... பாரு இப்படியே பேசிட்டு இருந்த இனி மாமாக்கிட்ட தான் சொல்லுவேன். நீ வழமை போல அத்த மாமா வீட்ட நிக்கும் போதே இனி கால் பண்ணு சரியா....? ப்ளாக்'ல எழுதுறேன் எழுதுறேன் என்றுட்டு அங்க யாரோடயாவது வம்பிழுத்து சண்டை போட்டுப்போட்டே அந்தப்பழக்கம் இப்ப வீடு வரைக்கும் வருது. முதல்ல உன் ப்ளாக் ப்ரெண்ஷிப்'க்ல கட் பண்ணுடா... முடிஞ்சா ப்ளாக்'ல எழுதுறேன் என்ற பேர்ல குப்பை கொட்டுறதையும் நிப்பாட்டு.. "டொக்க்க்க்க்.........." யோவ் அவ ஃபோனை வைச்சுட்டாய்யா வைச்சுட்டா... இப்போ மறுபடியும் முதல் வரிய படியுங்க.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.


56 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. அப்போ எல்லோருக்கும் இப்படித்தான் ஆவுதா......?? ஆஹா...... :)

   நீக்கு
 2. மிக மிக சுவாரஸ்யம்
  சொல்லிச் சென்றவிதம் அருமை
  தொடர (பதிவிலும் )வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேங்க்ஸ் ரமணி சார்....
   ஹா ஹா... நானும் பதிவில் தொடர்ந்து இருக்கோணும் என்றுதான் நினைக்கிறேன்.... எங்கே இருக்கிற வேலை பளுவில் முடியுறதே இல்ல :( அன்புக்கு நன்றி சார்.

   நீக்கு
 3. இது ரொமான்ஸ் ஆ இல்லையே. ஒரே குழப்பமா இருக்குது.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாய் ஆர்னிக்குட்டி, எப்படி இருக்க????

   ஹா ஹா...... நாம அதான் மேலேயே சொல்லிட்டோம் இல்ல இது "டெரார்" டிஸ்கஷன் என்று :))))) அப்புறம் ரொமான்ஸ் எதிர்பார்த்தா எப்புடிப்பா :))

   நீக்கு
 4. மச்சி சூப்பர்டா.... ரொமான்டிக் ரைட்டிங்ல உன்னை அடிச்சுக்க ஆளே இல்லடா...

  போன்ல தமிழ் டைப் பண்ணகஸ்டமா இருக்கு. விரிவான கருத்துக்களோடு காலை வாறேன்

  மதுரன்

  பதிலளிநீக்கு
 5. மச்சி சூப்பர்டா.... ரொமான்டிக் ரைட்டிங்ல உன்னை அடிச்சுக்க ஆளே இல்லடா...

  போன்ல தமிழ் டைப் பண்ணகஸ்டமா இருக்கு. விரிவான கருத்துக்களோடு காலை வாறேன்

  மதுரன்

  பதிலளிநீக்கு
 6. மச்சி சூப்பர்டா.... ரொமான்டிக் ரைட்டிங்ல உன்னை அடிச்சுக்க ஆளே இல்லடா...

  போன்ல தமிழ் டைப் பண்ணகஸ்டமா இருக்கு. விரிவான கருத்துக்களோடு காலை வாறேன்

  மதுரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹை..... நம்மா ஆளு... சாரி சாரி ஒரு புளோவுல வந்துட்டுது :)) நம்ம நண்பன் :)))))) மச்சி உங்க ஏரியாவுல கரண்ட இல்லையாமே.... ஹா ஹா.....

   //ரொமான்டிக் ரைட்டிங்ல உன்னை அடிச்சுக்க ஆளே இல்லடா...//

   நெசமாத்தான் சொல்லுறீயா?? (கற்றது தமிழ் அஞ்சலி ஸ்டையிலில் படிக்கவும்)

   தேங்க்ஸ் டா.... மச்சி :))))

   நீக்கு
 7. ///நமக்கு மட்டும் ஏந்தான் எல்லாமே இப்படி ஆகுதோ தெரில்ல.. :((//

  நீங்க கன்னி ராசி பாஸ் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்களும் கன்னி ராசி என்று கேள்விப்பட்டோமே..... அப்போ அங்காலப்பக்கமும் இப்படியா..... ஹா ஹா...............

   நீக்கு
  2. நாமெல்லாம் கன்னி ராசியின் கடைசிக்காலத்தில பிறந்திருக்கமாக்கும் :)

   நீக்கு
  3. இப்படி சொல்லி சொல்லியே ஆட்டைய போடுங்க...... என்னத்தை என்று கன்னி ராசிக்காரனுக்கு நான் சொல்லியா தெரியனும் lol

   நீக்கு
 8. பதில்கள்
  1. மச்சி மூஞ்சிக்கு நேர புகழாதடா... அவ்வவ்

   நீக்கு
  2. இப்படி சொல்லி சொல்லியே ஆட்டைய போடுங்க...... என்னத்தை என்று கன்னி ராசிக்காரனுக்கு நான் சொல்லியா தெரியனும் lol

   நீக்கு
 9. ///அப்புறந்தான் புரிஞ்சுது அவிங்க பொண்ண பழக கூட்டியாந்தது நம்ம கூட இல்லயாம் பெரியவங்க அவிங்க கூடவாம். /// இது அநியாயம்.. அவங்களா கல்யாணம் கட்ட போறாங்க.. சின்னஞ்சிறுசுகளை சந்தோசமா இருக்க விடாம..ஹிஹி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "பெரியவர்" உங்களுக்கு தெரிஞ்சு இருக்கு... அந்த "பெரியவங்களுக்கு தெரில்லயே :(( lol

   நீக்கு
 10. //// சாண்டில்யன் புத்தகம் என்றால் எனக்கு உசிரு.. ஜ லவ் சாண்டில்யன்" அப்படிண்ணு நா சொல்லுவேன்///

  இந்த இடத்தை தேவயானியை பற்றியும் வரணுமே ??? :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வரணும் ஆனா வராது(வரல்ல)..... ஹீ ஹீ.... அது நம்ம ஸ்வீட் செல்லம் இல்ல இங்க இழுத்து ஏன் நாறடிப்பான் என்று விட்டுட்டோம் :))))))))

   நீக்கு
 11. //// ப்ளாக்'ல எழுதுறேன் எழுதுறேன் என்றுட்டு அங்க யாரோடயாவது வம்பிழுத்து சண்டை போட்டுப்போட்டே அந்தப்பழக்கம் இப்ப வீடு வரைக்கும் வருது. முதல்ல உன் ப்ளாக் ப்ரெண்ஷிப்'க்ல கட் பண்ணுடா...///

  என்னைய திட்டுற மாதிரியே ஒரு பீலிங்ஸ் அவ்வ்வ்வ் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா..... பையன் கற்பூரம் மாதிரி கவ்வி பிடிச்சுட்டானே..... ஆவ்வ்வ்வ்......

   நீக்கு
  2. சரி விட்ரா நண்பா , நாம எல்லாம் எப்போ ஆள் சொன்னத கேட்டு நடந்திருக்கோம்.... ஹீ ஹீ

   நீக்கு
 12. நீங்க ஊருக்கு போகும் போது பாரதிராஜா சாரையும் கூடவே கூட்டிட்டு போயிருந்துக்கலாம்.. நல்ல ஒரு காதல் காவியத்தை ஒப்பேற்றியிருப்பார் :P

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடப்பாவி......... அவ்ளத்துக்கு ரோமான்ஷாவா இருக்கு??!!!! ஆனாலும் ரெம்ப டெராரா எழுதினமே...!!! எங்கையோ தப்பு நடந்துபோச்சு..... :(((

   நீக்கு
  2. டெரரா எழுதினதே இப்பிடின்னா........... நாம இன்னும் எதிர்பார்க்கிறம் பாஸ் :)

   நீக்கு
  3. ஆஹா....... ஒரு மார்க்கமாத்தான் கிளம்பி இருக்கீங்க போல...... இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே எல்லா மேட்டரையும் காக்க வைக்கிற ஜடியாவா.... அதானே நடக்காது..... நாமள்லாம்..... ஹா ஹா

   நீக்கு
 13. ////"அடேய்ய்ய்... தெரியாமாத்தான் கேக்குறேன் உன் Riitou மச்சாள் என்ன ராமராஜன் ஃபானா..?? மஞ்சள் பச்சைண்ணு கலர் கலரா ரெஸ்ட் பண்ண.. ஆள விடு இப்படியான மட்டமான ரசனையெல்லாம் எனக்கில்லைப்பா.." அப்படிண்ணு சொல்லனனும்.
  ////இதுதான் உள்குத்தா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... என்னையும் மச்சாளையும் பிரிக்காம விட மாட்டாங்க போல இருக்கே :(

   நீக்கு
 14. ////முதல்ல உன் ப்ளாக் ப்ரெண்ஷிப்'க்ல கட் பண்ணுடா... முடிஞ்சா ப்ளாக்'ல எழுதுறேன் என்ற பேர்ல குப்பை கொட்டுறதையும் நிப்பாட்டு..////

  ”என் கதை முடியும் நேரமிது என்பதை சொல்லும் (பதிவு)ராகம் இது” ஒரு பெரபல பதிவர் பதிவுலகைவிட்டு விலகுகின்றார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏன்ய்யா நான் பதிவுலகை விட்டு போறதில் அப்படி உனக்கு என்னதான் இன்பம் யய்யா... :((

   நீக்கு
 15. ஆகா கடைசி வரிகளை பின்பற்ற உத்தேசமோ?
  நல்லா இருக்கு ஏன இந்த மொழிநடை ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன பாஸ் சொல்லுறீங்க.... ஒன்றுமே புரியல்லையே..... ?? ஆவ்வ்

   நீக்கு
 16. ////குட்டிம்மாவும் நானும் ஒரு 'டெரார்' டிஸ்கஷன்.
  ////
  குட்டிமாவும் கல்யாணநாளும்

  கல்யாண கனவில் குட்டிமாவும் நானும்

  முடிகின்றது பேச்சுலர் லைப்

  ஒரு பதிவர் சம்சாரி ஆகுகின்றார்

  நான் மீண்டும் பிறந்தேன் இன்று(கல்யாணநாள் பற்றிய பதிவாக இருக்கும்)

  என் குட்டிதேவதை(இது குழந்தை பிறந்த பின்பு போடும் பதிவாக இருக்கும்)

  குடும்பம் ஒரு கோவில் அதில் குட்டிம்மா என் கடவுள்

  என்ன வாழ்கடா இது பேச்சுலராகவே இருந்திருக்கலாம் போல (கண்டிப்பாக இந்த தலைப்பில் ஒரு பதிவு வரும்)ஹி.ஹி.ஹி.ஹி....

  இப்படியான தலைப்புக்களில் இனிவரும் காலங்களில் பல பதிவுகள் துஷி அவர்கள் தேத்திவிடுவார் என்று நினைக்கின்றோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா......
   மச்சி... ஒரு டெராராத்தான் கமெண்ட்ஸ் போடுற இல்ல :))))

   அப்புறம் தேங்க்ஸ் மச்சி.... இனி வரும் காலங்களில் பதிவெழுத எனக்கு தலைப்பு எடுத்து தந்ததுக்கு :)))))

   பதிவு எழுதுறத விட தலைப்பு வைக்கிறதுதானே ரெம்ப கஸ்ரம்... lol

   நீக்கு
 17. //// இப்படி ஊரில எத்தன பேரடி கிளம்பியிருக்கீங்க.. அதெப்படி எனக்கு பிடிச்சது எல்லாமே உனக்கும் பிடிக்கும்..?! பொய் சொல்லுறதுக்கு ஒரு அளவே வேணாம்.. பொண்ணுங்க எல்லோருமே இப்படித்தாண்டி பசங்கள பற்றி தப்புக்கணக்கு போடுறீங்க.. இப்படி சொல்லுற பொண்ணுங்களத்தான் பசங்களுக்கு பிடிக்குமுண்ணு நீங்களாவே நினைச்சுக்கிட்டு இப்படியெல்லாம் அடிச்சுவிட்டே இம்சை பண்றீங்க.. நிஜமாவே இப்படியான பொண்ணுங்கள பசங்களுக்கு கொஞ்சமும் பிடிக்காது தெரியுமா..' /////
  நிறைய பொண்ணுங்க இப்படித்தான் நினைக்கிறாங்க.அது காதலியாக இருந்தாலும் சரி,நண்பியாக இருந்தாலும் சரி,மனைவியாக இருந்தாலும் சரி.
  நாங்களும் அப்படியே இருக்கனும் என்று எதிர்பாக்கிறாங்க ஆனால் நாங்கள்வெளிப்படையாக இருக்கும் போது அவர்கள் பார்வையில் வில்லனாகிடுறோம்.

  போலி முகமூடியுடன் ஹீரோவாக இருப்பதைவிட மனதில் பட்டதை சொல்லி வில்லனாக இருந்துவிட்டு போய்விடலாம்.

  பதிலளிநீக்கு
 18. பதில்கள்
  1. ஹா ஹா...
   வாங்கோ வாங்கோ பாஸ்....
   அவ்வ.... அடி பலமாவோ????
   அந்த கொடுமையை ஏன் கேக்குறீங்க :(

   நீக்கு
 19. குட்டிம்மாவும் நானும் ஒரு 'டெரார்' டிஸ்கஷன்.//குட்டித்தொடர் எழுதும் அளவுக்கு விடயம் இதில் இருக்கே துசி !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடரா....??? ஆஹா.... ஹும் ஒரு தொடர் எழுத ஆசைதான் பார்ப்போம் :))

   நீக்கு
 20. ன் Riitou மச்சாள் என்ன ராமராஜன் ஃபானா..?? மஞ்சள் பச்சைண்ணு கலர் கலரா ரெஸ்ட் பண்ண.. ஆள விடு இப்படியான மட்டமான ரசனையெல்லாம் எனக்கில்லைப்பா.." அப்படிண்ணு சொல்லனனும்.// நீங்க இப்படி ராமராஜனை அவமதிப்பது அடுக்குமா இதே டாக்குத்தர் என்றாலும் ஒத்துக்கொள்லலாம்!ஹீ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா.... இருங்கோ இருங்கோ அம்மணிட்ட போட்டுக்கொடுக்கிறேன் lol

   நீக்கு
 21. முதல்ல உன் ப்ளாக் ப்ரெண்ஷிப்'க்ல கட் பண்ணுடா... முடிஞ்சா ப்ளாக்'ல எழுதுறேன் என்ற பேர்ல குப்பை //ஹீ அடிபலமோ அம்மணி செமஜாக சூடாக்கிவிட்டாங்க!

  பதிலளிநீக்கு
 22. இது நானு, உடனே நீ... "ஹேய்.. ஸ்டாப் ஸ்டாப்... என்னடா சொல்லுற... ஸப்பா... இதெல்லாம் எனக்கு பிடிக்கவே பிடிக்காது.. முகத்துல ஒரு கிலோ ரோஸ் பவுடர அள்ளி தப்பிறதும் உதட்டுக்கு கலர் கலரா லிப்டிக் அடிக்கிறதும் நல்லாவா இருக்கும்..?! எப்பவும் இயர்க்கையா கடவுள் கொடுத்த அழகு மட்டுமே அழகு அதுவே எனக்கு போதும் இந்த ஆடம்பர அலங்காரம் எல்லாம் எனக்கு பிடிக்கவும் மாட்டுது எனக்கு அது தேவையும் இல்லை" என்று மூஞ்சல அடிச்சாப்ல சொல்லணும். // ஆஹா பயப்புள்ள ஒரே மார்க்கமாகத்தான் இருக்கின்றார்!கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு
 23. துஷி, காலக்கொடுமையொ இது. முடியேல்ல இனி கல்யாணம் என்று திகதி வச்சிட்டு சொல்லுங்கோ இந்தப்பக்கம் வாறன் சரியோ. :)


  வேற விசேசம் எண்டால் தனிமடலனுப்பவும். :)

  பதிலளிநீக்கு
 24. ஹய்யய் .... ரதியக்கா :))
  வாங்கோ வாங்கோ அக்கா :)))
  எப்படி இருக்கீங்க அக்கா??

  ஹீ ஹீ.... கிட்டடியில் திகதி சொல்லுறேன்.... அப்புறம் நான் பிஸி வரமுடியாது என்று சொல்லுறது இல்ல :((

  பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...