ஞாயிறு, மே 15, 2011

வெற்றிபெற்ற ஜெயலலிதா.. மூக்குடைபட்ட நக்கீரன்.

தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டது,  ஜெயலலிதா அபார வெற்றி பெற்றுவிட்டார் எல்லாம் நாங்கள்  அறிந்ததுதான்,  ஆனால் தமிழ்நாட்டு அரசியலை அவதானித்து பார்த்துகொண்டிருப்பவர்கள் இப்போது எங்கேனும் சந்தித்துகொண்டால் ஆச்சரியப்பட்டு  பேசிக்கொள்வது  ஜெயலலிதா வெற்றிபற்றித்தான். ஆனால் இதில்  எனக்கு  எந்த வித  ஆச்சரியமும் இல்லை இது நான் எதிர் பார்த்ததுதான். அதுதான் தேர்தலுக்கு முதல் நாளே  ஜெயலலிதா அபார வெற்றி என்று இந்த பதிவை போட்டேன். (வெளிவந்தது தேர்தல் முடிவுகள்.. ஜெயலலிதா அபார வெற்றி, கொண்டாட்டத்தில் அதிமுகாவினர்)  எங்கள் வீட்டில் கூட அடுத்ததும் அய்யாதான் என்று வெறுப்பாக பேசிக்கொள்ளும் போது இடையில் நான் பூந்து அடுத்தது அம்மா என்று சொல்லி ஏளனமாக  பார்க்கபட்டுள்ளேன் ( அவர்கள் இப்போது என்னை  ஆச்சரியமாய்  பார்ப்பது வேறு விடயம்). அடுத்து அதிமுகாதான் ஆட்சியை புடிக்கும் திமுகா மோசமான தோல்வியை தழுவும் என்று நான் நினைப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதில் நான் முக்கியமானதாக நினைத்த  மூன்று காரணங்கள்.

1. ஈழ விவகாரத்தில் கருணாநிதியின் துரோகமும் பிரிக்கமுடியாத காங்கிரசின் உறவும்.
2.   கருணாநிதியின் குடும்ப ஆதிக்கமும் படித்தவர்களின்  வெறுப்பும்.
3. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்.

தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றது எவ்வளவு சந்தோஷத்தை கொடுத்ததோ அதைவிட அதிக சந்தோஷத்தை கொடுத்தது ஜெயலலிதாக்கு வெற்றி செய்தி கிடைத்ததும் ஈழ தமிழர் விசையமாக அவர் உதிர்த்த வார்த்தைகள்.   அவை....

இலங்கைத் தமிழர் பிரச்னை
:-இலங்கைத் தமிழர்கள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களின் துயரத்துக்குக் காரணம் இலங்கை அரசுதான்.

:-தமிழர்கள் என்ற முறையில், இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டியது நம் அனைவரின் கடமை. அதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும்.

:-தமிழக முதல்வர் என்ற முறையில் இதில் ஓரளவுக்குத்தான் செய்ய முடியும். ஏனென்றால், இது சர்வதேசப் பிரச்னை, இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னை. மத்திய அரசுதான் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று ஏற்கெனவே ஆலோசனைகள் வழங்கியிருக்கிறேன். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நான் மத்திய அரசை வலியுறுத்துவேன்.
இதில் இந்தியா இரண்டு வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஒன்று, போர்க்குற்றங்களுக்காக ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

-:இலங்கை வாழ் தமிழர்களுக்குக் கௌரவமான, கண்ணியமான வாழ்க்கையை அமைத்துத் தர அந்த நாட்டு அரசை வற்புறுத்த வேண்டும். இலங்கை அரசு பணியவில்லை என்றால் அந்த நாட்டுக்கு எதிராக பிற நாடுகளுடன் இணைந்து பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.


ஜெயலலிதா தேர்தலுக்கு முதல் இதை சொல்லி இருந்தால் அவர் ஓட்டுவாங்க இதை சொல்லுகிறார் என்று சொல்லி இருப்பார்கள், தேர்தலில் வெற்றி பெற்ற பின் இதை அவர் சொல்லுவது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இதை கண்டிப்பாக அவர் செய்வார் எனவும் நான் நினைக்கிறன். கருணாநிதியை விட ஈழமக்கள் மீது ஜெயலலிதா அக்கறையானவர் என்பது என் கருத்து, ஆனால் பிரபாகரன்  விசயத்தில் அவர் எதிர் ஆனவர்தான் இது எனக்கு வருத்தத்தை குடுத்தாலும் அவர் பக்கம் இருக்கும் நியாயத்தையும் புரிந்துகொள்கிறேன். ( இதை பற்றி தனி பதிவு போடா ஆசை ஆனால் வீண் எதிர்ப்பை சந்திக்க விருப்பம் இல்லை ) 

கருத்துக் கணிப்புக்கள்  

தேர்தல் அறிவிப்பு வந்த ஆரம்பத்திலேயே அதிமுக்கா அலை அடிக்க ஆரம்பித்து விட்டது அதை மறைத்த முதல்  பெருமை நக்கீரனுக்குத்தான் சேரும், முதலாம் கட்ட கருத்துக்கணுப்பு இரண்டாங்கட்ட  கருத்துகணுப்பு என்று சொல்லி சொல்லியே மக்களை குழப்பி விட்டு கருணாநிதிக்கு ஜால்ரா அடித்தார்கள், இவர்களுடைய திமுகா பாசம் தெரிந்தும் இவர்களுடைய கருத்துகணிப்பை நம்பியவர்கள் ஏராளம் பேர்.  இந்த தேர்தல் முடிவுகள் திமுகாவுக்கு எவ்வளவு அவமானத்தை கொடுத்ததோ அதில் பாதியை நக்கீரனுக்கும் கொடுத்துவிட்டு போய்விட்டது. நாங்கள் கணிப்பதுதான் நடக்கும் என்ற நக்கீரனின் ஆணவத்துக்கு கிடைத்த அடி இது. இந்த மரண அடியில் நக்கீரனின்  நடுநிலையான பத்திரிக்கை என்ற முகமூடி கிழிந்து அவர்களின் உண்மை முகமான திமுகா விசுவாச முகம் தெரிந்து விட்டது. 

நக்கீரன் 1வது கட்ட கருத்துக் கணிப்பு:
திமுக கூட்டணி 146. அதிமுக கூட்டணி 80. 

நக்கீரன் 2வது கட்ட கருத்துக் கணிப்பு:
திமுக கூட்டணி 140.  அதிமுக கூட்டணி 94.

ஆனால் இப்போது நடந்தது:
தி.மு.க. கூட்டணி  31. அ.தி.மு.க. கூட்டணி  203.

இந்த காமெடி  பத்தாது என்று தேர்தல் முடிந்த பிறகும் திமுகாதான் ஜெயிக்கும் என்று ஒரு கருத்து கணிப்பு  வெளியிட்டார்கள். அவர்கள் மேல் பல அவநம்பிக்கை இருந்தாலும் ஒரு விசயத்தில் அவர்களை ஆச்சரியமாய்  பார்த்து இருக்குறேன் அது அவர்களின் புலனாய்வு திறமை. நக்கீரனின் நிருபர்கள் திறமையானவர்கள்  நிச்சயமாக அதிமுகா ஜெயிக்கும் என்று அவர்களுக்கு கொஞ்சமாவது தெரிந்து இருக்கும்  அப்படி இருக்கும் போது எப்படி இந்த தவறு நடந்தது.  எல்லாமே  திமுகா பாசத்தால் வந்த வினை,  நக்கீரன் கோபாலின் திமுகா பாசத்துக்கு (ஜால்ரா) அந்த திறமையான நிருபர்களின் உழைப்பு  பலியாகிவிட்டது.

நக்கீரனின் பழைய வாசகன் என்ற முறையில்  நக்கீரன் கோபால் அவர்களிடம் சில வார்த்தைகள்..
90 களில் நக்கீரன் விற்பனையில் சாதனை படைத்தது. அதற்க்கு காரணம்  நக்கீரனின் துணிச்சல் மட்டும் அல்ல நக்கீரனின்   நடுநிலையான செய்திகளும்  தான், ஆனால் இப்போது...! 
எப்போ நீங்கள் உங்கள்  திமுகா பாசத்துக்கு நக்கீரனை பயன்படுத்த தொடங்கினீர்களோ  அப்பவே நக்கீரனின் விற்பனை மட்டும் அல்ல வாசகர்களின் மனங்களின் இருந்தும் நக்கீரன் இறங்க தொடக்கி விட்டது.  உங்கள் சொந்த விருப்பு வெறுப்புக்கு பெரிய வாசகர் வட்டத்தை வைத்து இருக்கும் நக்கீரனை பயன்படுத்தி அதை அழிவு பாதைக்கு இட்டு செல்லாதீர்கள். உங்களிடம் நக்கீரன் வாசகர்கள் எதிர் பார்ப்பது ஒன்றே ஒன்றைத்தான் அது  அதிமுக்க திமுகா எது ஆட்சிக்கு வந்தாலும் நீங்கள் எதிர்கட்சி  வரிசையிலேயே இருங்கள் அதுதான் சிறந்த பத்திரிகைக்கு அடையாளம் மட்டும் அல்ல இபோதைய நிலைமையில் நக்கீரனுக்கும் மக்களுக்கும் நல்லது.
செய்வீர்களா..?


14 கருத்துகள்:

  1. நக்கீரன் மானமே போச்சு பாஸ்

    பதிலளிநீக்கு
  2. //90 களில் நக்கீரன் விற்பனையில் சாதனை படைத்தது. அதற்க்கு காரணம் நக்கீரனின் துணிச்சல் மட்டும் அல்ல நக்கீரனின் நடுநிலையான செய்திகளும் தான், ஆனால் இப்போது...!
    எப்போ நீங்கள் உங்கள் திமுகா பாசத்துக்கு நக்கீரனை பயன்படுத்த தொடங்கினீர்களோ அப்பவே நக்கீரனின் விற்பனை மட்டும் அல்ல வாசகர்களின் மனங்களின் இருந்தும் நக்கீரன் இறங்க தொடக்கி விட்டது. //

    மறுக்கமுடியாத உண்மை

    பதிலளிநீக்கு
  3. இன்ட்லியில் வாக்களிக்கமுடியாதுள்ளது..... சரி செய்யுங்கள்

    பதிலளிநீக்கு
  4. //மதுரன் a dit…
    நக்கீரன் மானமே போச்சு பாஸ்//

    அது அவங்களுக்கு இப்போ இருக்கா பாஸ்,
    ஒரு காலத்தில் வைச்சு இருந்தாங்க எண்டு நினைக்குறேன்..

    பதிலளிநீக்கு
  5. //மதுரன் a dit…
    இன்ட்லியில் வாக்களிக்கமுடியாதுள்ளது..... சரி செய்யுங்கள்//

    இன்ட்லியில் இணைக்க மறந்துட்டன் பாஸ்
    இப்போத்தான் இணைத்தேன், நன்றி பாஸ்.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா3:13 PM, மே 15, 2011

    நல்ல அச்சல் பாஸ்.
    நக்கீரன் கணக்கு இப்போ காமெடியாய் போச்சு.
    ஆனால் ஜெயா மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை எல்லாம் ஒரே ............. தான்

    பதிலளிநீக்கு
  7. //கந்தசாமி. a dit…
    நல்ல அச்சல் பாஸ்.
    நக்கீரன் கணக்கு இப்போ காமெடியாய் போச்சு.
    ஆனால் ஜெயா மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை எல்லாம் ஒரே ............. தான்
    //

    ஆரம்பத்தில் ஜெயலலிதா நல்லவிதமாகத்தான் இருந்தார், இடையில் தான் மாறினார் மாறியதால் நிறைய கெட்ட பெயரையும் வாங்கி விட்டார், இப்போது காலம் அவரை பழைய ஜெயலலிதாவாக மாற்றி விட்டது என்று நம்புகிறேன் நம்பித்தான் ஆகணும், அதைவிட கருணாநிதியை விட ஜெயா ஒன்றும் மோசம் இல்லை என்பது என் கருத்து நண்பா

    பதிலளிநீக்கு
  8. ஒரு காலத்தில் காங்கிரசிடம் கூட்டணி வைத்துக்கொள்ளும் சுயலாப அரசியல் நோக்கிற்காக எமது தேசியத்தலைவரை தூக்கில் போடவேண்டும் எண்டு அறிக்கை விட்டவர்தான் ஜெயலலிதா அப்படி இருக்கும் ஜெயலலிதாவுக்கு நீங்கள் ஏன் வக்காளத்து வாங்குகின்றீர்கள் என்று எனக்கு புரியவில்லை ஆனால் எமது ஈழத்தமிழினத்துக்கு பெருந்துரோகம் இழைத்த கருநாய்நிதி குடும்பத்தினை பழி வாங்கக்கூடியவர் ஜெயலலிதா என்பது மட்டும்தான் எமக்கான ஆறுதல்..........(நவீனன் )

    பதிலளிநீக்கு
  9. //90 களில் நக்கீரன் விற்பனையில் சாதனை படைத்தது. அதற்க்கு காரணம் நக்கீரனின் துணிச்சல் மட்டும் அல்ல நக்கீரனின் நடுநிலையான செய்திகளும் தான், ஆனால் இப்போது...!
    எப்போ நீங்கள் உங்கள் திமுகா பாசத்துக்கு நக்கீரனை பயன்படுத்த தொடங்கினீர்களோ அப்பவே நக்கீரனின் விற்பனை மட்டும் அல்ல வாசகர்களின் மனங்களின் இருந்தும் நக்கீரன் இறங்க தொடக்கி விட்டது. /நன்றி.கருணாநிதியை விட ஜெயா ஒன்றும் மோசம் இல்லை

    பதிலளிநீக்கு
  10. இந்த படு அவமானத்துக்கு புதுசா விளக்கம் கொடுக்கிறாரு நக்கீரன் கோபால்

    பதிலளிநீக்கு
  11. //:-இலங்கைத் தமிழர்கள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களின் துயரத்துக்குக் காரணம் இலங்கை அரசுதான்.

    :-தமிழர்கள் என்ற முறையில், இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டியது நம் அனைவரின் கடமை. அதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும்.//

    பதிலளிநீக்கு
  12. ///போளூர் தயாநிதி a dit…
    நன்றி.கருணாநிதியை விட ஜெயா ஒன்றும் மோசம் இல்லை ////

    உண்மைதான்
    இதுதான் என் அசைக்க முடியாத நம்பிக்கை பாஸ்

    பதிலளிநீக்கு
  13. //Mahan.Thamesh a dit…
    இந்த படு அவமானத்துக்கு புதுசா விளக்கம் கொடுக்கிறாரு நக்கீரன் கோபால்
    //

    விழுந்தாலும் மீசையில மண் படல்ல எண்டு சொல்லுவாங்களே அது இது தானோ பாஸ்

    பதிலளிநீக்கு
  14. //போளூர் தயாநிதி a dit…
    //:-இலங்கைத் தமிழர்கள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களின் துயரத்துக்குக் காரணம் இலங்கை அரசுதான்.

    :-தமிழர்கள் என்ற முறையில், இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டியது நம் அனைவரின் கடமை. அதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும்.//
    சத்யமான வார்த்தை பாஸ்

    ஒரு ஈழ தமிழனாய் உங்கள் வார்த்தை எனக்கு ரெம்ப சந்தோசத்தை கொடுக்குது பாஸ்
    ரெம்ப தேங்க்ஸ் உங்க வார்த்தைக்கும் என் ப்ளாக் பக்க வருகைக்கும்..
    அடிகடி வாங்க பாஸ்.

    பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...