ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார் அதை தொடர்ந்து பேசியவர், மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படவுள்ளது தமிழக மக்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மக்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் இந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இவ் முடிவு
எடுக்கப்படுகிறது என்று அறிவித்தார். இது உண்மையில் மிக பெரிய விடயம், ஜெயலலிதாவிடம் அந்த மூவரையும் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கோரிக்கை மேல் கோரிக்கை வைத்தவர்கள்
கூட இதை எதிர் பார்த்து இருக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை.
ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க
வேண்டும் என்று கோரி ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தது பாராட்ட தக்க மிகப்பெரிய விடயம் இது மிகப்பெரிய சாதனை என்பதை விட தமிழ் உணர்வாளர்களின் ஒட்டுமொத்த அபிமானத்தையும்
ஒருங்கே சம்பாதித்து விட்டார் ஜெயலலிதா. ஏனெனில் மத்தியஅரசு ஆதரவுடன் ஜனாதிபதியால் உறுதிப்படுத்தபட்ட மரணதண்டனையை ஒரு மாநில முதல்வர் குறைப்பதோ நிறுத்தி வைப்பதோ மிக சிக்கலானது.
அதைவிட அவர்கள் மீது சாட்டபட்டுள்ள குற்றம் சாதாரணமானது
அல்ல ஒரு பிரதமரை அவர் நாட்டில் வைத்தே கொலை செய்த குற்றம்.
இது ஒரு தவறான குற்றசாட்டு அவர்கள் நிரபராதி என்பது உண்மையாக
இருக்கும் பட்சத்திலும் பல விசாரணைகள் நடத்தப்பட்டு நீதிவான்களால்
தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், பின்பு உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தாபோதும். இதனையும் அன்று உச்ச நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது, பின் தமிழக ஆளுநருக்கு கருணை மனுக்களை சமர்ப்பித்தார்கள் ஆனால் தமிழக ஆளுநரும் இவர்களின் கருணை மனுக்களை நிராகரித்தார். அதன் பின்பு பேரறிவாளன் முருகன் சாந்தன்
ஆகிய மூன்று நபர்களும் குடியரசுத் தலைவருக்கு அளித்த கருணை மனுக்களை இந்தியக் குடியரசுத் தலைவரும் நிராகரித்த நிலையில் அதன் பின்பு ஒரு மாநில முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிடுவது என்பது எத்தகைய சிக்கல்களை உருவாக்கும் என்பது நாம் அறியாதது அல்ல.
இந்த உண்மையைத்தான் முந்தைய ஜெயலலிவாவின் தன்னால் எதுவும்
செய்யமுடியாது என்ற அறிக்கை சொல்லிப்போனது. இந்நிலையில்
தமிழ் உணர்வாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஜெயலலிதாவால்
சட்டபேரவையில் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானமானது ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் ஒரு மைல் கல், மீண்டும்
ஒருமுறை மனிதாபிமானத்துடன் தன் துணிச்சலை நிரூபித்து உள்ள ஜெயலலிதாவுக்கு பேரறிவாளன் தாயார், சீமான், வைகோ போன்றவர்களும் பல தமிழ் உணர்வாளர்களும் தெரிவிக்கும் பாராட்டுகளுடனும் என் பாராட்டுக்களையும் தெரிவிக்கும் இந்த நேரத்தில் கருணாநிதி பற்றி பேசுவது தேவையற்றதுதான். ஆனாலும் இந்த உத்தமபுத்திரன் போல் வேஷம் போடும் கருணாநிதியின் உண்மை முகத்தின் சில பகுதிகளையேனும் காட்டியே ஆக வேண்டும்.புள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது கருணாநிதிக்கு. ஒன்றும் புதுசு இல்லைத்தான். ஆனால் இந்த மூவர் மரணதண்டனை விடயத்தில் தன் கபட நாடகத்தை அரங்கேற்றுவதுதான் மன்னிக்க முடியாதபடி உள்ளது. நில அபகரிப்பின் நியாயமான நடவடிக்கையில் திமுகாவின் முக்கிய புள்ளிகளே உள்ளே போக வெகுண்டெழுந்த கருணாநிதி மிக பெரிய பேரணி நடத்தி தன் எதிர்ப்பை காட்டுகிறார் அதே வேகத்தை ஏன் இந்த மூவருக்காகவும் காட்டி இருக்க கூடாது. சரி பேரணிதான் நடத்த வேண்டாம் "அவர்களை காப்பாற்றுங்கள்" என்ற அறிக்கைதான் விட்டார் அத்துடன் அமைதியாக இருந்து இருக்க வேண்டியதுதானே.. இதிலுமா.. ஜெயாவை சாடி உன் கீழ்த்தரமான அரசியல் நாடகத்தை அரங்கேற்ற வேண்டும். இந்த வயது போன நேரத்தில் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா...?? இந்த மூவரின் தூக்கு தண்டனை யாரால் உறுதி செய்யப்பட்டது என்ற மனச்சாட்சி கூடவா உறுத்தவில்லை.
அப்பாக்கு பிள்ளை தப்பாமல் பிறந்து இருக்கு, அப்பா நடிகன் என்றால்
மகன் மகா நடிகனாக அல்லவா இருக்கான், ஜெயலலிதாவின் தமிழர் மேலான போலிப்பாசம் வெளுத்துவிட்டதாம், சொல்லுறாரு ஸ்டாலின்.
சோனியாவின் புடைவை தலைப்பின் பின்னால் நிக்கும் இவர்கள்
அதை சொல்லுகிறார்களாம். ஏன்ய்யா.... மூன்று உயிர்களில் பதைபதைப்பில்
நின்றுகொண்டு அங்கயும் உங்களுக்கு ஆதாயம் தேடி அறிக்கைவிட
உடம்பு கூசாவில்லையா?? உண்மையில் அக்கறை உள்ளவர்கள்தான் என்றால் கடந்த ஆட்சி உங்கள் கையில் தானே இருந்தது. சொத்து
சேகரிப்பதில் காட்டிய ஆர்வத்தை அவர்களின் கருணை மனுக்களிலும்
காட்டி இருக்கலாம் இல்லையா...?? பேசாமால் இருந்தாக் கூட பராவாயில்லை அவர்களின் மரண தண்டனைக்கு ஆதரவு வழங்கி
சோனியாவை குஷி படுத்திவிட்டு இப்போது ஏன் இந்த போலி வேஷம்.
புள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் இந்த நரிப்புத்தி எதற்கு.
தமிழர்கள் முன்னால் அம்மணமான பின்னுமா உங்கள் வேஷம் இன்னும் கலையவில்லை என்று நம்புகிறீர்கள்..??
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரணதண்டனைக்கு ஆதரவு அளித்த அவர்களின் கருணை மனுவை நிராகரிக்கலாம் என்று
19.4.2000 அன்று அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவு எடுக்கப்பட்டது.
"தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நான்கு கைதிகளில் ஒருவரான நளினியின் பெண் குழந்தை அனாதை ஆகி விடும் என்று முதல்வர் தெரிவித்த கருத்திற்கிணங்க, நளினி ஒருவருக்கு மட்டும் கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும், மற்றவர்களைப் பொறுத்த வரையில் அவர்களது கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை முடிவெடுத்தது."
"கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை ஏற்று ஆளுநர் 21.4.2000 அன்று ஒப்புதல் அளித்தார். அதன்படி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது."
"கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை ஏற்று ஆளுநர் 21.4.2000 அன்று ஒப்புதல் அளித்தார். அதன்படி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது."