ஞாயிறு, ஜனவரி 01, 2012

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா..10. (இறுதி பகுதி)


மீண்டும் அவளை பார்க்க போகிறேனே என்ற நினைப்பில் மனசு சந்தோஷத்தில் தத்தளித்தாலும். மறு பக்கம் ஒரு வித பயம் மனதை இறுக்கத்தான் செய்தது.

சுற்றி சுற்றி வந்து அவளை காதலித்துவிட்டு.. அவள் மறுத்த போதெல்லாம் நம்பிக்கை வார்த்தைகள் கொண்டு அவளை மனம் மாற வைத்துவிட்டு, அவள் என்னிடம் தன் காதலை சொல்லி என்னை நம்பி நின்றபோது  ஒரு வார்த்தை கூட பேசாமால் அல்லவா நான் சென்றேன்.!!

எத்தகைய ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவளை விட்டு வந்தேன் என்பது என் மனச்சாட்சிக்கு தெரியும் என்று என்னை நான் சமாதானப்படுத்தினாலும். நான் அவளை தவிக்க விட்டு வரும்போது எப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அவள் இருந்தாள்!! அந்த நிலையில் எப்படி என்னால் அவளை விட்டு வர மனம் வந்தது!!! என் பக்க நியாயங்களை நான் எடுத்துவைத்தாலும் அவள் பக்க நியாயங்களும் அவளுக்காக வந்து என்னோடு மல்லுக்கட்டியது.

எது எப்படி இருந்தாலும் என் சுலக்க்ஷிகாவுக்கு என்னைப்பற்றி தெரியும். எனக்கு அவளைப்பற்றி தெரியும். கண்டிப்பாக அவளால் என்னை மறக்கவோ வெறுக்கவோ முடியாது. யாருக்காகவும் இந்த முறை அவளை தவற விடமாட்டேன்.  என் சுலக்க்ஷிகா இனி எப்போதும் என்னோடுதான். இந்த இரண்டு வருடங்களில் அவளை பிரிந்து நான் பட்ட வலிகள் எல்லாம் போதும். எனக்காக அவளும் அதிகமாகவே வலி கொண்டிருப்பாள். அவை எல்லாவற்றுக்குமே இன்றுடன் முற்றுப்புள்ளி. இன்றில் இருந்து என் சுலக்க்ஷிகாவின் சந்தோஷ நாட்கள் ஆரம்பம். அவளும் நானும் வாழப்போகும் அந்த அழகியல் காலங்கள் கண் எதிரேயே தெரிகிறது..

"ஆர்ணிகன் நேற்று இரவில இருந்து நீ ஒண்டும் சாபிடல்ல... ஏதாவது சாப்பிடன் புள்ள.." அம்மா தோள் தட்ட சுயநினைவுக்கு வந்தேன்.

கைகளை முறுக்கி சோம்பல் முறித்தவாறே "வேணாம்மா... பசிக்கல்ல... மனசே சரி இல்லைம்மா...." அசதியாக  சொல்லியவாறே அம்மாவின் தோள் சாய்ந்தேன்.

அம்மாவுக்கு புரிந்திருக்கும்... ஆனாலும் அதை அவர் ரசிக்கவில்லை என்பது அவர் முகத்தில் தெரிந்தது. எதையும் காதில் வாங்காதவர் போல் அப்பாவுடன் ஏதோ கதைக்க தொடங்கினார்.

கார் நெடுங்கேணியை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. நான் அம்மாவின் தோளில் தலை சாய்த்தபடியே கார் கதவுகள் ஊடே வெளியே பார்வையை செலுத்தினேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட  இப்போது  ரெம்ப வித்தியாசம். அங்கங்கு புதிய வீடுகளும் கடைதெருக்களும் முளைத்திருந்தன.. இயற்க்கை வேறு தன் பங்குக்கு அந்த பகுதியை ரம்மியமாக்கி கொண்டிருந்தது. ஆனால் இதை எதுவுமே ரசிக்கும் மன நிலையில் நான் இல்லை. என்னை அவள் நினைவுகள் எங்கெங்கோ இழுத்து அலைக்களித்துகொண்டிருந்தது.

ல்லோருக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. படுத்த படுக்கையாக கிடந்த அப்பம்மா மகனை கண்ட சந்தோஷத்தில் எழுந்து நடக்க தொடங்கியது. இதனால் என்றும் இல்லாதவாறு வீடு சந்தோஷத்தில் திளைத்து கொண்டிருந்தது. வந்த சில நாட்கள் என்னை கண்ணும் கருத்துமாக கண்காணித்து வந்த அப்பாவும் அம்மாவும் அடுத்தடுத்த தினங்களில் என்னை கண்டுகொள்ளாமல் சுதந்திரமாக விட்டது எனக்கு இன்ப ஆச்சரியம்.

எங்கள் வீட்டு முற்றத்தில் உள்ள அந்த வேப்பமரத்தடியில்  நின்று முன்புபோல் அவள் வீட்டை பல தடவைகள் நோட்டமிட்டுவிட்டேன் ஆனால் அவளை மட்டும் காணோம். முன்பு வழமையாக நாங்கள் சந்திக்கும் ஆற்றங்கரையிலும் அந்த பாழடைந்த கட்டிடத்திலும் பழைய நினைவுகளை வேதனையுடன் மீட்டபடி கொக்குப்போல் தவம் கிடந்தேன்.. அப்போதும் அவள் வரவில்லை.

மனதுக்குள் பயங்கரமான கற்பனைகள் வேறு  முட்டிமோதி என்னை காயப்படுத்தி என் பொறுமையை சோதித்துக்கொண்டிருந்தன. ஒருவேளை அவளுக்கு கல்யாணம் ஆகியிருக்குமோ..? கல்யாணத்தின் பின் அவள் அவனுடன் வேறு ஊருக்குப்போயிருப்பாளோ...? 'ச்சே...  இப்படியெல்லாம் என்னை நினைச்சிட்டே இல்ல..? ஆர்ணி..!!!'  அவள் என் முன்னாள் நின்று பரிதாபமும் கோபமும் கலந்து கேட்பதுபோல் இருந்தது. சட்டென நானே என் தலையிலேயே வலிக்கும்படி  இறுக்கி  குட்டிக்கொண்டேன். என் சுலக்க்ஷிகா அப்படிப்பட்டவள் அல்ல.. அவளால் என்னை தவிர இன்னொருவனை கற்பனைக்கு கூட நினைக்க முடியாது.

 ன்று மாலை எப்படியாவது அவளை பார்த்துவிடுவது என்று முடிவு எடுத்துக்கொண்டேன். அப்பம்மாவை பார்க்க  வீட்டுக்கு வந்திருந்த உறவினர்களால் வீடு அமளிப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த ஊட்டில் வீட்டை விட்டு நழுவிய நான் அவள் வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைய தொடங்கினேன்.

வழமைபோல் சுலக்க்ஷிகாவின் தம்பி முற்றத்தில் சிரட்டைகளை அடுக்கி விளையாடிக்கொண்டிருந்தான். திடீரென என்னைக் கண்டதும்  அடையாளம் காண திணறியவன் பின் அடையாளம் கண்டு ஆச்சரிய புன்னகை வீசியவனிடம் நான் பேச எத்தனிக்க ஓடிப்போய் வீட்டினுள் ஒளிந்துகொண்டான்.

அவள் வீடு குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் நிலையில் இருந்தது. அந்த வீட்டின் தகரக்கதவை மெதுவாக தட்டினேன்.. பதில் இல்லை. கதவை லேசாக தள்ள அது உள்ளே திறந்துகொண்டது.. குனிந்து உள்ளே நிமிர்ந்து பார்த்தேன்.

தரையில் அமர்ந்தபடி சுவற்றுடன் சாய்ந்திருந்த சுலக்க்ஷிகாவின் அப்பா என்னுடைய திடீர் வருகையால் சடாரென எழுந்து நின்று என்னை ஆச்சரிய ரேகைகளை முகத்தில் அப்பியபடி பார்த்தார்.

அவரை உற்று நோக்கினேன். நான் முதற் சந்திப்பில் அவரை பார்த்தமைக்கும்  இப்போதைக்கும் ரெம்ப வித்தியாசம். அவர் உடம்பு மெலிந்து கண்களில் குழி விழுந்து மிக பரிதாபமாக இருந்தார்.

அவரின் செருமலில் சுயநினைவுக்கு வந்த நான்.. "சார்.. நா..நான் ஆர்ணிகன். சுலக்க்ஷிகாவோட  ப்..ப்ரெண்டு, ப்ளீஸ் நான் ஒருக்கா சுலக்க்ஷிகாவை பார்க்கலாமா?? ப்ளீஸ் சார்.. ப்ளீஸ் தப்பா நினைக்காதீங்கோ.. நாங்க சீக்கிரம் நாடு திரும்பணும். அதுக்குள்ள ஒருக்காவது..... ப்ளீஸ் பழசை எல்லாம் மனசில் வைச்சு என்னை திருப்பி மட்டும் அனுப்பிறாதீங்கோ... நா..நான் ஒரு தடவைதான்... அதுக்கப்பிறோம் போயிருவேன்.. ப்ளீஸ் ப்ளீஸ் சார்..."  நான் தடுமாறியபடி பரிதாபமாக கெஞ்ச, அவர் எதுவும் பேசாமால் எங்கையோ வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார்.

"..இப்படி எதுவும் பேசாமல் இருந்தாள் எப்படி..? ப்ளீஸ் சார்.. சொல்லுங்கோவன் எங்கே சுலக்க்ஷிகா??!! நான் வந்ததில் இருந்து பாக்கிறேன் எங்கேயும் அவளை காணல்ல... எங்கேயாவது சொந்தக்காரங்க வீட்ட போயிட்டாளா..?"  நான் பேச பேச  அவர் கண்களில் இருந்து பொல பொல என கண்ணீர் கொட்டத் தொடங்கியது.

நான் அதிர்ச்சியோடு "என்ன சார் நடந்தது...?? ப்ளீஸ் சொல்லுங்கோ.. எங்கே சுலக்க்ஷிகா?? ப்ளீஸ் எங்க என் சுலக்க்ஷிகா?? எல்லோருமா சேர்ந்து அவளை என்ன செய்தனீங்க??!! ப்ளீஸ் சொல்லுங்கோ......" நான் கதறியபடி அவரை உலுக்க, அவர் அவள் பெயரை சொல்லியபடி வாய் விட்டு  கதற தொடங்கினார்.

நான் மேலும் பதை பதைப்போடு கண்களை துடைத்தபடி அருகில் சுவரோடு ஒட்டியபடி வெம்பி வெம்பி அழுதுகொண்டிருந்த அவர் மனைவியை பரிதாபமாக பார்த்தேன்.

அவர் வாயை இறுக பொத்தியபடி கண்களில் நீர் பெருக சுவற்றோடு சேர்ந்துதமர்ந்து குலுங்கி குலுங்கி அழுதுகொண்டிருந்தவரின் கண்கள் எதிரே இருந்த சுவற்றில் நிலை குத்த...

திரும்பினேன்.  அங்கே... அ..ங்கே... என் கால்கள் தரையில் இருந்து நழுவ.. கண்கள் செருக... அருகில் இருந்த சுவற்றை பற்றிக்கொண்டேன்.

சருகான சிறு பூமாலையுடன் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த அந்த அழகிய பழைய புகைப்படத்தில் சுலக்க்ஷிகா புன்னகைத்துகொண்டிருந்தாள்.

அந்த புகைப்படத்தில் அவளின் அந்த காந்தக்கண்கள்  என்னை ஏதோ கேட்பது போலவே இருந்தது. அந்தப்புன்னகை அது... அது என்னை கேலி செய்வது போலவே இருந்தது.

"ஆர்ணி.. என்னைக்கல்யானம் பண்ணிக்கிறீயா? என்னை எங்காவது உன் கூட கூட்டிட்டு போயிறேன் ப்ளீஸ்.. எனக்கு யாருமே வேண்டாம்  நீ மட்டும் போதும். உயிர் போற வரைக்கும் உன் கூடவே இருக்கணும் போல இருக்குடா......"  என் கைகளை பிடித்து தன் நெஞ்சோடு அணைத்தபடி அன்று அவள் சொன்ன அந்த வார்த்தைகள் என்னோடு பேசிய கடைசி நிமிடங்கள் எல்லாமே என் கண் முன்னாள் வந்து பேயாட்டம் போட்டு என்னை உலுக்கிக்கொண்டிருந்தன.

கண்களில் இருந்து கண்ணீர் தடம்புரண்டு ஓட.. உதடுகள் துடிக்க..  உறைந்து நின்ற என்னை சுலக்க்ஷிகாவின் அப்பா ஆதரவாக தோள் தொட்டார். சடாரென தட்டிவிட்டு எரிக்கும் பார்வை பார்த்துவிட்டு வேகமாக அவளின் வீட்டைவிட்டு வெளியேறினேன். 

தடுமாறியபடியே வீதியில் நடக்க தொடங்கினேன். என் அருகில் அவள் வந்துகொண்டிருந்தாள். சுயநினைவுகள் அற்று பிரமை பிடித்தவனாக உறவுகள் எதுவும் இல்லா ஒரு நீண்ட  தொலை தூரத்தை நோக்கி என் கால்கள் விரைய தொடங்கின. கண்கள் குளமாகி அவை வீதிகளை மறைத்து கொண்டிருந்தது. ஆனால்..!! நானும் அவளும் வாழப்போகும் அந்த உன்னத வாழ்க்கையை சிலாகித்து பேசியபடியே.. அடிக்கடி என் தோளோடு சாய்ந்து காதல் மொழிகள் பேசியபடியே.. சிறு குழந்தை போல் என் கைவிரல்களை பற்றியபடியே.. இப்போதும் அவள் என்னருகே வந்துகொண்டிருந்தாள்.

                                                       முற்றும்
.........................................................................................................................................
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா
...........................................................................................................................................

39 கருத்துகள்:

  1. பெயரில்லா5:12 PM, ஜனவரி 01, 2012

    மச்சி எதிர்ப்பார்க்காதா முடிவு ..! உண்மையிலே மனசு கொஞ்சம் கனத்துபோச்சு ;(

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா5:18 PM, ஜனவரி 01, 2012

    இறுதியில் மனமுடைந்த ஆர்ணிகன் விரக்தியில் என்ன முடிவு எடுத்தார் என்று சொல்வதற்கு பதிலாக

    /////தடுமாறியபடியே வீதியில் நடக்க தொடங்கினேன். என் அருகில் அவள் வந்துகொண்டிருந்தாள். சுயநினைவுகள் அற்று பிரமை பிடித்தவனாக உறவுகள் எதுவும் இல்லா ஒரு நீண்ட தொலை தூரத்தை நோக்கி என் கால்கள் விரைய தொடங்கின. கண்கள் குளமாகி அவை வீதிகளை மறைத்து கொண்டிருந்தது. ஆனால்..!! நானும் அவளும் வாழப்போகும் அந்த உன்னத வாழ்க்கையை சிலாகித்து பேசியபடியே.. அடிக்கடி என் தோளோடு சாய்ந்து காதல் மொழிகள் பேசியபடியே.. சிறு குழந்தை போல் என் கைவிரல்களை பற்றியபடியே.. இப்போதும் அவள் என்னருகே வந்துகொண்டிருந்தாள்.///

    போன்ற வரிகளில் கொண்டு வந்து முடித்தது நன்றாக உள்ளது..

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா5:19 PM, ஜனவரி 01, 2012

    உங்களுக்கும்,உங்கள் குடும்பத்துக்கும் புதுவருட வாழ்த்துக்கள் )

    பதிலளிநீக்கு
  4. மாலை வணக்கம்,துஷி!ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! நான் இரண்டு முடிவுகளுடன் இருந்தேன்.ஒன்று......!வாழ்த்துக்கள்!!!!!!

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் துஷி,
    முடிவு மனதை உருக்கி விட்டது...

    //சித்திரத்து பாவைதனை
    நித்திரையில் சிறைவைத்து
    பத்திரமாய் பார்த்துவந்தேன்
    ஆழ்ந்த நித்திரையில்
    சிறைபட்டுப் போனாயே - நானோ
    சிறகொடிந்து போனேனே////

    ////வார்த்தையொன்னு சொல்லியிருந்தால்
    வாடிப்போகுமுன்னே வாசமலர் தந்திருப்பேன்!
    ஏமாத்தி போனானென்று
    எனை விட்டுப் போனாயோ?!!/////

    பதிலளிநீக்கு
  6. கதை முழுதும் பத்து பதிவுகளிலும் வர்ணனைகள் களைகட்டியது
    துஷி. அங்கே பாதி சாண்டில்யனை தடமாக கண்டிருந்தேன்.
    வாழ்த்துக்கள் மனத்தினின்று .....
    இன்னும் தொடரட்டும் பல மெல்லினக் கதைகளும் தொடர்களும்..
    நானும் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. புத்தாண்டு நல்வாழ்த்துகள்!! துஷி

    ஆண்டிக்ளைமக்ஸ் தான் என்பதை தலைப்பே சொல்லியிருந்தாலும்.. ரொம்பத்தான் ஆண்டிக்ளைமக்ஸாக்கிடிங்க.. கனமான முடிவு.. 

    பதிலளிநீக்கு
  8. முழுக்க வாசிக்காம எப்பிடி கருத்து சொல்ற?
    அதான்,இவ்வள நாளும் ஒண்டும் சொல்லேல்ல.
    நல்லா சினிமாப்படம் பாக்கிறீங்களெண்டு விளங்குது.
    தரமாதான் இருந்துது.
    நல்ல விபரிப்பு.
    பதிவில் ,மட்டும் எழுதினாக்காணாது.ஏதாவது பேப்பருக்கோ/புத்தக,சஞ்சிகைகளுக்கோ அனுப்புங்கோ.
    தொடர்ந்தும் நிறைய எதிர்பார்க்கலாம்போல இருக்கே?

    பதிலளிநீக்கு
  9. நான் ஏற்கனவே எதிர்பார்த்தமுடிவுதான் பாஸ்..............

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் மருமோனே!!
    குறுந்தொடரை அருமையாக கொண்டு சென்றீர்கள்... உண்மையை சொன்னால் இத்தொடர் மூலம் வாசகர்களை உங்கள் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறீங்க...!!

    சுலக்க்ஷிகாவின் இறப்பு எதனால் என்று விளக்கி இருக்கலாம்..!!!
    சட்டுன்னு போட்டுட்டிங்களே...!!

    புது வருட வாழ்த்துக்கள்....!!))

    பதிலளிநீக்கு
  11. எதிர்பாரா முடிவுட மச்சி .
    உங்களுக்கும் உங்களின் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  12. குட்டி துஷி திரும்பி வந்திட்டார்.சந்தோஷம் துஷிக்குட்டி !

    அப்பா சொன்னதுபோல நானும் இரண்டு முடிவுகள் வச்சிருந்தேன்.ஆனாலும் முடிச்ச விதம் மனசைக் கனக்க வைத்தது.சுலக்‌ஷிகாவுக்கு என்ன நடந்தது என்றும் சாடையாகச் சொல்லியிருக்கலாமே.உங்கள் எழுத்துக்கு இந்தக் கதை ஒரு அஸ்திவாரம்.வாழ்த்துகள் துஷியா !

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் பாஸ் "வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா" என்ற தலைப்புக்கு மிக மிக பொருத்தமான கிளைமாக்ஸ் ஆனால் அவள் ஏன் இறந்தாள் என்று சொல்லியிருக்கலாம்.

    ப்ரான்ஸ் நாட்டில் இருக்கும் ஒரு இளைஞனுக்கும் இலங்கையில் நெடுங்கேணி என்னும் ஒரு கிராமத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கும் ஏற்பட்ட காதல் போராட்டத்தை சிறப்பாக ஒரு தொடராக வடிவமைத்து இருந்தீர்கள் இந்த தொடரில் குறை என்று எதுவும் சொல்ல முடியாவிட்டாலும் எனக்கு ஒரு இடத்தில் ஒரு விடயம் தோன்றியது அதாவது காதல் விடயம் பெற்றோருக்கு தெரிய வந்ததும் உடனே ப்ரான்ஸ் கிளம்பி போகின்ற தாக சொல்லியிருந்தீர்கள் அதே அத்தியாயத்தில் அடுத்த பந்தியிலே மீண்டும் நெடுங்கேணிக்கு வருவதாக குறிப்பிட்டது தொடரை அவசரமாக முடிக்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்தில் எழுதியதாக வாசிக்கும் போது உணர்ந்து கொள்ள முடிந்தது அந்த இடைப்பட்ட காலத்தில் ப்ரான்சில் அந்த இளைஞனிம் மன வேதனைகளை கொஞ்சம் விரிவாக சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

    மற்றும் படி குறை என்று சொல்ல இதில் ஒன்றும் இல்லை.நிச்சயம் இந்த தொடர் உங்கள் பதிவுலக வாழ்க்கையில் ஒரு மையில் கல் தான்.

    ஒரு தேர்ச்சி பெற்ற எழுத்தாளருக்குறிய அத்தனை தகைமைகளும் உங்களுக்கு இருப்பது இந்த தொடரில் வெளிப்பட்டது.

    பொதுவாக தொடர்கதைகள் எழுதும் போது மிக முக்கிய பிரச்சனை முதல் பகுதியிலே வாசகர்களை கவறவேண்டும் அப்பதான் தொடர்ந்து அந்த தொடருக்கு ஆதரவு கிடைக்கும் அந்த வகையில் இந்த தொடரின் முதல் பகுதியே பல வாசகர்களை நிச்சயம் கவர்ந்திருக்கும்.அவ்வளவு சிறப்பான ஆரம்பம்.

    அடுத்தது தொடருக்காக மிகைப்படுத்தி எழுதாமல் அளவான வர்ணனைகள் மிக அழகு.நெடுங்கேணி மண்ணின் வாழ்க்கை முறையை அப்படியே கண்முன்னே நிறுத்தியிருந்தீர்கள்.

    அறியாத வயதில் சுயமாக முடிவெடுக்க முடியாத வயதில் வரும் காதலை சிறப்பாக கண்முன் நிறுத்தியிருந்தீர்கள் ஒரு தொடரை வாசிப்பது போன்றே இருக்கவில்லை கண்முன் பார்ப்பது போல இருந்தது.

    சுலக்க்ஷிகா என்ற பாத்திரத்தின் மூலம் சின்ன வயதிலும் அந்த பெண்ணின் தெளிவு மற்றும் முடிவெடுக்கம் திறன் என்பவை சிறப்பாக சொல்லியிருந்தீர்கள்.
    குறிப்பாக ஆர்ணி காதலை முதன் முதலில் சொன்ன போது அவள் மறுத்த காரணங்களையும் அதன் போது அவள் அடிமனசில் இருந்த காதலால் சிறிது நேரம் அவனை தன்னுடன் அணைத்துக்கொண்டதும் பின்பு சுதாகரித்துக்கொண்டு அவனை விட்டு விலகிச்சென்றதும்.அந்த நிலையில் உள்ள ஒரு பெண்ணின் காதல் மனம் எப்படியானது என்பதை தெளிவாக சொல்லியிருந்தீர்கள்.

    மொத்ததில் பாலச்சந்திரர்+பாரதிராஜா இருவரும் சேர்ந்து ஒரு படம் இயக்கினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது உங்கள் தொடரை படிக்கும் போது..

    நான் ஆரம்பத்தில் சொன்னது போல இதை ஒரு குறும் நாவலாக வெளியிடலாம். தொடர்ந்து பல சிறப்பான பதிவுகள் மூலம் பதிவுலகில் சிறப்பாக கலக்க வாழ்த்துக்கள் பாஸ்
    அன்புடன்
    கே.எஸ்.எஸ்.ராஜ்

    பதிலளிநீக்கு
  14. மிகவும் சிறப்பான ஆக்கம் உண்மையில் பாராட்டுகள் தொடர்க .

    பதிலளிநீக்கு
  15. வார்த்தை ஜாலம், வர்ணிப்புகள் மிக அபாரமாக இருந்ததை அவதானித்தேன் சூப்பர் நண்பா....!!!

    பதிலளிநீக்கு
  16. முடிவை இப்படியாக்கிவிட்டீரே நண்பா மனதில் இருந்தது வேறு வாழ்க்கையில் எதுவும் வெறுமைதான் மிச்சமா??

    பதிலளிநீக்கு
  17. துஷி
    அருமையான கதை
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  18. கந்தசாமி. கூறியது...

    மச்சி எதிர்ப்பார்க்காதா முடிவு ..! உண்மையிலே மனசு கொஞ்சம் கனத்துபோச்சு ;(<<<<<<<<<<<

    தேங்க்ஸ் கந்து.... தொடர் தொடங்கும் போதே இந்த முடிவு தான் என்று தீர்மானித்துவிட்டேன். அதான் :(

    பதிலளிநீக்கு
  19. கந்தசாமி. கூறியது...

    இறுதியில் மனமுடைந்த ஆர்ணிகன் விரக்தியில் என்ன முடிவு எடுத்தார் என்று சொல்வதற்கு பதிலாக
    /////தடுமாறியபடியே வீதியில் நடக்க தொடங்கினேன். என் அருகில் அவள் வந்துகொண்டிருந்தாள். சுயநினைவுகள் அற்று பிரமை பிடித்தவனாக உறவுகள் எதுவும் இல்லா ஒரு நீண்ட தொலை தூரத்தை நோக்கி என் கால்கள் விரைய தொடங்கின. கண்கள் குளமாகி அவை வீதிகளை மறைத்து கொண்டிருந்தது. ஆனால்..!! நானும் அவளும் வாழப்போகும் அந்த உன்னத வாழ்க்கையை சிலாகித்து பேசியபடியே.. அடிக்கடி என் தோளோடு சாய்ந்து காதல் மொழிகள் பேசியபடியே.. சிறு குழந்தை போல் என் கைவிரல்களை பற்றியபடியே.. இப்போதும் அவள் என்னருகே வந்துகொண்டிருந்தாள்.///

    போன்ற வரிகளில் கொண்டு வந்து முடித்தது நன்றாக உள்ளது..<<<<<<<<<<<<<

    தேங்க்ஸ் கந்து :)))

    பதிலளிநீக்கு
  20. கந்தசாமி. கூறியது...

    உங்களுக்கும்,உங்கள் குடும்பத்துக்கும் புதுவருட வாழ்த்துக்கள் )<<<<<<<<<<<<<

    உனக்கும் மச்சி.....

    பதிலளிநீக்கு
  21. பிளாகர் Yoga.S.FR கூறியது...

    மாலை வணக்கம்,துஷி!ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! நான் இரண்டு முடிவுகளுடன் இருந்தேன்.ஒன்று......!வாழ்த்துக்கள்!!!!!!<<<<<<<<<<<<<<<<<<<<

    தேங்க்ஸ் அப்பா... உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    அப்பா அந்த ரெண்டு முடிவு. (நீங்கள் நினைத்த)

    சுலக்க்ஷிகா கல்யாணம் கட்டி இருப்பாள். அல்லது இறந்து இருப்பாள் இது தானே......??? lol

    பதிலளிநீக்கு
  22. மகேந்திரன் கூறியது...

    வணக்கம் துஷி,
    முடிவு மனதை உருக்கி விட்டது...

    //சித்திரத்து பாவைதனை
    நித்திரையில் சிறைவைத்து
    பத்திரமாய் பார்த்துவந்தேன்
    ஆழ்ந்த நித்திரையில்
    சிறைபட்டுப் போனாயே - நானோ
    சிறகொடிந்து போனேனே////

    ////வார்த்தையொன்னு சொல்லியிருந்தால்
    வாடிப்போகுமுன்னே வாசமலர் தந்திருப்பேன்!
    ஏமாத்தி போனானென்று
    எனை விட்டுப் போனாயோ?!!/////<<<<<<<<<<<<

    எவ்ளோ அழகா கவிதை எழுதுறீங்க பொறாமையா இருக்கு.... :(

    பதிலளிநீக்கு
  23. மகேந்திரன் கூறியது...

    கதை முழுதும் பத்து பதிவுகளிலும் வர்ணனைகள் களைகட்டியது
    துஷி. அங்கே பாதி சாண்டில்யனை தடமாக கண்டிருந்தேன்.
    வாழ்த்துக்கள் மனத்தினின்று .....
    இன்னும் தொடரட்டும் பல மெல்லினக் கதைகளும் தொடர்களும்..
    நானும் தொடர்கிறேன்.<<<<<<<<<<<<<<<

    நன்றி அண்ணா.... உங்கள் அன்பும் ஊக்கமும் தொடர்த்ந்து எழுதும் ஆசையை கொடுக்குது

    பதிலளிநீக்கு
  24. குடிமகன் கூறியது...
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்!! துஷி

    ஆண்டிக்ளைமக்ஸ் தான் என்பதை தலைப்பே சொல்லியிருந்தாலும்.. ரொம்பத்தான் ஆண்டிக்ளைமக்ஸாக்கிடிங்க.. கனமான முடிவு.. <<<<<<<

    நண்பா உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    முடிவு :(

    பதிலளிநீக்கு
  25. சுவடுகள் கூறியது...

    முழுக்க வாசிக்காம எப்பிடி கருத்து சொல்ற?
    அதான்,இவ்வள நாளும் ஒண்டும் சொல்லேல்ல.
    நல்லா சினிமாப்படம் பாக்கிறீங்களெண்டு விளங்குது.
    தரமாதான் இருந்துது.
    நல்ல விபரிப்பு.
    பதிவில் ,மட்டும் எழுதினாக்காணாது.ஏதாவது பேப்பருக்கோ/புத்தக,சஞ்சிகைகளுக்கோ அனுப்புங்கோ.
    தொடர்ந்தும் நிறைய எதிர்பார்க்கலாம்போல இருக்கே?<<<<<<<<<<<<<

    ஹாய் நண்பா.

    உங்கள் முதல் வருகைக்கு நன்றிகள்.

    ஹாஹா... யா யா நிறைய படம் பார்ப்பேன்... (அவ்வவ்)

    பத்திரிகைக்கா!!!!! பாஸ் நம்ம நிலை நமக்கு தெரியாத... அவ்வ்வ்வ்

    ஆஹா....... நன்றி நண்பா :)

    பதிலளிநீக்கு
  26. நவீனன் கூறியது...

    நான் ஏற்கனவே எதிர்பார்த்தமுடிவுதான் பாஸ்.............<<<<

    ஆஹா..... தேங்க்ஸ்

    பதிலளிநீக்கு
  27. காட்டான் கூறியது...

    வணக்கம் மருமோனே!!
    குறுந்தொடரை அருமையாக கொண்டு சென்றீர்கள்... உண்மையை சொன்னால் இத்தொடர் மூலம் வாசகர்களை உங்கள் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறீங்க...!!
    சுலக்க்ஷிகாவின் இறப்பு எதனால் என்று விளக்கி இருக்கலாம்..!!!
    சட்டுன்னு போட்டுட்டிங்களே...!!
    புது வருட வாழ்த்துக்கள்....!!))<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    ரெம்ப தேங்க்ஸ் maamaa....

    உண்மைதான் சுலக்க்ஷிகா இறப்பை நிறைய சொல்லி இருக்கலாம். ஆனால் அந்த முடிவை வாசகர்கள் முடிவுக்கு விடலாம் என்றுதான் இப்படி செய்தேன்... :))))

    பதிலளிநீக்கு
  28. Mahan.Thamesh கூறியது...

    எதிர்பாரா முடிவுட மச்சி .
    உங்களுக்கும் உங்களின் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் .<<<<<<<<<<<<<

    :)

    நன்றி மச்சி..... உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  29. ஹேமா கூறியது...

    குட்டி துஷி திரும்பி வந்திட்டார்.சந்தோஷம் துஷிக்குட்டி !
    அப்பா சொன்னதுபோல நானும் இரண்டு முடிவுகள் வச்சிருந்தேன்.ஆனாலும் முடிச்ச விதம் மனசைக் கனக்க வைத்தது.சுலக்‌ஷிகாவுக்கு என்ன நடந்தது என்றும் சாடையாகச் சொல்லியிருக்கலாமே.உங்கள் எழுத்துக்கு இந்தக் கதை ஒரு அஸ்திவாரம்.வாழ்த்துகள் துஷியா !<<<<<<<<<<<<<<

    வணக்கம் அக்காச்சி.

    எப்படி இருக்கீங்க?? புத்தாண்டு எல்லாம் எப்படி போச்சு!!!!

    ஓம் அக்கா சுலக்க்ஷிகா இறப்பை நிறைய சொல்லி இருக்கலாம். ஆனால் அந்த முடிவை வாசகர்கள் முடிவுக்கு விடலாம் என்றுதான் இப்படி செய்தேன்... :))))

    பதிலளிநீக்கு
  30. அழகன் கூறியது...

    Happy new year<<<<<<<<<<

    mee tooooooo machi :)

    பதிலளிநீக்கு
  31. மாலதி கூறியது...

    மிகவும் சிறப்பான ஆக்கம் உண்மையில் பாராட்டுகள் தொடர்க .<<<<<<<<<<<<<<

    ரெம்ப தேங்க்ஸ் மாலதி அக்காச்சி...

    பதிலளிநீக்கு
  32. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    வார்த்தை ஜாலம், வர்ணிப்புகள் மிக அபாரமாக இருந்ததை அவதானித்தேன் சூப்பர் நண்பா....!!!<<<<<<<<<<<<<

    இச்சோ.... மனோ அண்ணாவா சொல்லுறது!!!!! தேங்க்ஸ் தேங்க்ஸ் .. சோ... ஹப்பி பாஸ்.

    பதிலளிநீக்கு
  33. தனிமரம் கூறியது...

    முடிவை இப்படியாக்கிவிட்டீரே நண்பா மனதில் இருந்தது வேறு வாழ்க்கையில் எதுவும் வெறுமைதான் மிச்சமா??<<<<<<<<<<<<

    சோக ராகம் தானே சுக ராங்கம் நேசன் அண்ணா.....

    பதிலளிநீக்கு
  34. A.R.ராஜகோபாலன் கூறியது...

    துஷி
    அருமையான கதை
    வாழ்த்துக்கள்<<<<<<<<<<<<<<

    நீங்களுமா தொடர்ந்து படிச்சீங்க!!!!!!! சோ ஹப்பி.... தேங்க்ஸ் பாஸ்.

    பதிலளிநீக்கு
  35. K.s.s.Rajh கூறியது...

    வணக்கம் பாஸ் "வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா" என்ற தலைப்புக்கு மிக மிக பொருத்தமான கிளைமாக்ஸ் ஆனால் அவள் ஏன் இறந்தாள் என்று சொல்லியிருக்கலாம்.

    ப்ரான்ஸ் நாட்டில் இருக்கும் ஒரு இளைஞனுக்கும் இலங்கையில் நெடுங்கேணி என்னும் ஒரு கிராமத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கும் ஏற்பட்ட காதல் போராட்டத்தை சிறப்பாக ஒரு தொடராக வடிவமைத்து இருந்தீர்கள் இந்த தொடரில் குறை என்று எதுவும் சொல்ல முடியாவிட்டாலும் எனக்கு ஒரு இடத்தில் ஒரு விடயம் தோன்றியது அதாவது காதல் விடயம் பெற்றோருக்கு தெரிய வந்ததும் உடனே ப்ரான்ஸ் கிளம்பி போகின்ற தாக சொல்லியிருந்தீர்கள் அதே அத்தியாயத்தில் அடுத்த பந்தியிலே மீண்டும் நெடுங்கேணிக்கு வருவதாக குறிப்பிட்டது தொடரை அவசரமாக முடிக்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்தில் எழுதியதாக வாசிக்கும் போது உணர்ந்து கொள்ள முடிந்தது அந்த இடைப்பட்ட காலத்தில் ப்ரான்சில் அந்த இளைஞனிம் மன வேதனைகளை கொஞ்சம் விரிவாக சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

    மற்றும் படி குறை என்று சொல்ல இதில் ஒன்றும் இல்லை.நிச்சயம் இந்த தொடர் உங்கள் பதிவுலக வாழ்க்கையில் ஒரு மையில் கல் தான்.

    ஒரு தேர்ச்சி பெற்ற எழுத்தாளருக்குறிய அத்தனை தகைமைகளும் உங்களுக்கு இருப்பது இந்த தொடரில் வெளிப்பட்டது.

    பொதுவாக தொடர்கதைகள் எழுதும் போது மிக முக்கிய பிரச்சனை முதல் பகுதியிலே வாசகர்களை கவறவேண்டும் அப்பதான் தொடர்ந்து அந்த தொடருக்கு ஆதரவு கிடைக்கும் அந்த வகையில் இந்த தொடரின் முதல் பகுதியே பல வாசகர்களை நிச்சயம் கவர்ந்திருக்கும்.அவ்வளவு சிறப்பான ஆரம்பம்.

    அடுத்தது தொடருக்காக மிகைப்படுத்தி எழுதாமல் அளவான வர்ணனைகள் மிக அழகு.நெடுங்கேணி மண்ணின் வாழ்க்கை முறையை அப்படியே கண்முன்னே நிறுத்தியிருந்தீர்கள்.

    அறியாத வயதில் சுயமாக முடிவெடுக்க முடியாத வயதில் வரும் காதலை சிறப்பாக கண்முன் நிறுத்தியிருந்தீர்கள் ஒரு தொடரை வாசிப்பது போன்றே இருக்கவில்லை கண்முன் பார்ப்பது போல இருந்தது.

    சுலக்க்ஷிகா என்ற பாத்திரத்தின் மூலம் சின்ன வயதிலும் அந்த பெண்ணின் தெளிவு மற்றும் முடிவெடுக்கம் திறன் என்பவை சிறப்பாக சொல்லியிருந்தீர்கள்.
    குறிப்பாக ஆர்ணி காதலை முதன் முதலில் சொன்ன போது அவள் மறுத்த காரணங்களையும் அதன் போது அவள் அடிமனசில் இருந்த காதலால் சிறிது நேரம் அவனை தன்னுடன் அணைத்துக்கொண்டதும் பின்பு சுதாகரித்துக்கொண்டு அவனை விட்டு விலகிச்சென்றதும்.அந்த நிலையில் உள்ள ஒரு பெண்ணின் காதல் மனம் எப்படியானது என்பதை தெளிவாக சொல்லியிருந்தீர்கள்.

    மொத்ததில் பாலச்சந்திரர்+பாரதிராஜா இருவரும் சேர்ந்து ஒரு படம் இயக்கினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது உங்கள் தொடரை படிக்கும் போது..

    நான் ஆரம்பத்தில் சொன்னது போல இதை ஒரு குறும் நாவலாக வெளியிடலாம். தொடர்ந்து பல சிறப்பான பதிவுகள் மூலம் பதிவுலகில் சிறப்பாக கலக்க வாழ்த்துக்கள் பாஸ்
    அன்புடன்
    கே.எஸ்.எஸ்.ராஜ்<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    வணக்கம் ராஜ்.

    உண்மையில் உன் இந்த நீண்ட கருத்து எனக்கு இன்ப அதிரிச்சி. முதலில் அதற்க்கு ஒரு தேங்க்ஸ் டா.

    ஹும்... தொடரை ரெம்ப ரசிச்சு படிச்சு இருக்க....... ஹப்பியா இருக்கு. உனக்காகவே இன்னும் நாலு தொடர் எழுதலாம் போல இருக்கே ( சரி சரி பயப்படாத)

    ராஜ் ... உண்மைதான் நீ சொன்னது போல் ஆர்ணிகனின் வழியை நான் அதிகம் பதியவில்லை. அதற்க்கு காரணம் தொடரை அவசரமாக முடிக்கும் காரணம்தான்,

    மற்றும்படி சுலக்க்ஷிகாவின் மரணம் எப்படி நடந்தது என்று சொல்லாமல் விட்டது. நான் வேண்டும் என்றே செய்ததுதான்... காரணம்- சுலக்க்ஷிகா இறப்பு எப்படி நடந்திருக்கும் என்பதை வாசகர்கள் முடிவுக்கு விடலாம் என்றுதான் இப்படி செய்தேன்... :)))) (மாத்தியோசிப்போம் இல்ல)

    நண்பா உன் பாராட்டு மிக சந்தோஷத்தை கொடுத்தாலும் அதற்க்கு தகுதியானவன் நான் இல்லை என்று தெரியுது..... ஆனாலும் தேங்க்ஸ் டா.... நண்பேண்டா.....

    பதிலளிநீக்கு
  36. மனதுக்கு கனத்த முடிவு.....
    இப்படி எத்தினை பேரின் வாழ்வு நிலைமாறி இருக்கும்....

    பதிலளிநீக்கு
  37. முழுவதுமாக கதை அருமை ...

    பதிலளிநீக்கு
  38. துஸி
    என் வன்மையான கண்டனங்கள்
    எல்லாப் பாகங்களையும்
    அழகுறச் சொல்லிய நீங்கள்
    சுலக்‌ஷிகா ஏன் இறந்தாள்?
    வார்த்தை தவறி விட்டாய்
    தலைப்பிற்கான அர்த்தத்தினை இறுதிப் பாகத்திற் சொல்லவில்லை!
    அட்லீஸ் அவள் போராளியாக வீரச்சாவடைந்தது விட்டாள் என்றாச்சும் சொல்லி முடிவினை ஒரு இயல்பு நிலையில் முடித்திருக்கலாம். அல்லது ஓர் இயற்கை மரணம், குண்டு வீச்சு என்றாவது முடித்திருக்கலா,.
    உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால்
    நண்பர்களிடம் கேட்டு விட்டு முடிவில், இறுதிப் பந்திகளில் கவனம் செலுத்தி, திருத்துங்கள்
    ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
    நல்ல எழுத்தை, நல்லதோர் படைப்பினை கடைசியில் இப்படி கொண்டு வந்து சப்பையாக முடித்தது இறுதிப் பாகத்தில் சுவாரஸ்யத்தினையும், வாசகனின் மன ஓட்டத்தினையும் மாற்றுகின்றது.

    ப்ளீஸ்...முடிவில் கொஞ்சம் பரிசீலனை செய்து, விளக்கம் கொடுங்கள்!

    பதிலளிநீக்கு
  39. துஸி, எல்லாப்பாகமும் சூப்பர். என்று ஒப்புக்கு சொல்லவில்லை, சில பாகங்களை தவற விட்டேன். தொடர் முழுவதையும் ஒருநாள் இருந்து படிப்பேன். அன்று முழு விமர்சனத்தையும் தருகிறேன்.

    பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...