புதன், ஜூலை 06, 2011

என் மனதை பாதித்த பத்து பெண்கள்...

ப்போதுமே பெண் தேவதைகளால் மட்டும் ஆசிர்வதிக்கப்பட்டவன்
நான். இதுவரைகால என் வாழ்க்கையில் அதிகமாக பெண்களால்தான்
நேசிக்கப்பட்டுள்ளேன் பாதுகாக்கப்பட்டுள்ளேன்,  அதனால் எனக்கு எப்போதுமே பெண்கள் மேல் தனி மரியாதையுண்டு நாங்கள் யாரை அதிகம் நேசிக்கிறோமோ அவர்களால்தான் அதிக காயமும் படுவோம் அந்தவகையில் என்னை பல சமயங்களில் காயப்படுத்திய பெருமையும் அதிகமாக பெண்களைத்தான் சேரும். என் மனதை பாதித்த பெண்கள் பலபேர் இருந்தாலும்,  அதிகமாய் என் மனதை பாதித்த பத்து  பெண்கள் இவர்கள்..

சூரியகலா (பள்ளி ஆசிரியர்)
சொந்த இடமான நெடுங்கேணியில் இருந்து அப்பாவின் வேலை மாற்றத்தால் வவுனியா வந்து புது பாடசாலையில் சேர்ந்தபோது எனது வகுப்பின் ஆசிரியராக இருந்தவர்,  அன்றில் இருந்து நான் ப்ராண்ட்ஸ் வரும்வரை என் வகுப்பாசிரியராகவே தொடர்ந்து வழி நடத்தியவர். அழகானவர்,  சாந்தமான முகம், அமைதியானவர் அமைதியை விரும்புகிறவரும் எங்கள் தமிழ் ஆசிரியரும் கூட,  அவர் பாடம் நடத்தினால் தெளிந்த நீரோடை மெதுவாக ஓடுவதைப்போல அவ்வளவு அமைதியாக அழகாக இருக்கும். நான் தமிழை அதிகம் நேசித்தாலேயோ என்னவோ அவரையும் அதிகமாகவே நேசித்தேன்.  எனக்கு அவரை
பிடிக்கும் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லைத்தான்  ஆனால் அவருக்கு என்னைத்தான் பிடிக்கும் என்பது ஆச்சரியம் ப்ளஸ் பெருமை எனக்கு. வகுப்பிலும் மற்ற பாடங்களிலும் நான்தான் முதன்மையானவன் என்று அடித்து சொல்லமுடியாவிட்டாலும் அவர் கற்பித்த தமிழ் பாடத்தில் எப்போதுமே நான்தான் முதல் மாணவன்.  ஒரு வகுப்பு ஆசிரியர் என்ற வகையில் எங்கள் வகுப்பில் கிடைக்கும் அத்தனை சலுகைகளையும் எனக்கே வழங்கி என்னை என் சக மாணவர்களால் பொறமையாய் பார்க்க வைத்தவர்.  அவர் வகுப்பில் இருக்கும் சமயங்களில் அதிகம் உச்சரிப்பது என் பெயரைத்தான்,  வகுப்பில் அவர் படிப்பித்துகொண்டிருக்கும் போது திடீரென " துஷியந்தன் மிச்சத்த நீ விளங்கப்படுத்து.."  என்று சொல்லி என்னை தன் இடத்தில் வைத்து அழகுபாப்பவர் அதை தன் சக ஆசிரியர்களிடமும் சொல்லி பெருமைப்பட்டுகொள்பவர்.  எங்கு இலக்கிய போட்டிகள் நடந்தாலும் என்னைக்கேட்காமலே என் பெயரை கொடுத்து நம்பிக்கையுடன் தாய் அன்போடு வழியனுப்பி வைப்பவர்,  என் பாடசாலையில் உள்ள பல ஆயிரம் மாணவர்களுல் என்னை தனித்து தெரிய வைத்தவர்.  பாடசாலை அதிபர் தொடங்கி முதலாம் ஆண்டு படிக்கும் சிறு மாணவன் வரை என்னை உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கவைத்த பெருமைக்கு உரியவர்.  நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது என் முதல் சிறுகதை "இடி" வார இதழில் வெளிவந்த போது அந்த பத்திரிகையை தூக்கிக்கொண்டு அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் என ஒவ்வொருவரிடமும் காட்டி காட்டி துஷ்யந்தன் என் மாணவன்  என்று  பெருமைப்பட்டு அவர் குதுகளித்த அந்த நிமிடங்கள் இப்போதும் என் கண் முன் நிழலாடுகின்றது.  பிராண்ட்ஸ் வந்து இத்தனை வருடங்கள் உருண்டோடிவிட்ட பின்னும் இன்னும் பசுமையாகவே இருக்கிறது அவர் நினைவுகள்.  நான் படித்த பாடசாலையில் இப்போது படிக்கும் என் சொந்தங்கள் என்னுடன் தொலைபேசியில் பேசும் போது "துஷியந்தன் போல ஒரு மாணவன் எனக்கு இனி எப்போதும் கிடைக்காது என்று சொல்லி உன் சூரியகலா மிஸ் அடிக்கடி பீல் பண்ணுவாங்கடா " என்று சொல்லி என்னை நெகிழ வைத்துவிடுவார்கள்.  சில நேரங்களில் நல்ல ஆசிரியர்கள் கிடைப்பதும் இறைவன்  கொடுத்த வரம்தான். 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...