எனக்கும் அந்த பிரபல பதிவருக்கும் கிட்டத்தட்ட நாலு ஜந்து மாதங்கள் நடந்த இந்த கண்ணாம்பூச்சி விளையாட்டை சொல்ல எனக்கும் நேரமும் இல்லை பொறுமையும் இல்லை ஆகையால் நாற்றில் நிரூபன் போட்ட status பாருங்கள்.. மிகுதியை நான் சொல்லுகிறேன்.
Selvarajah நிருபன்: வழமையான தமிழ் சினிமா சாயலிலில் நின்றும் விலகி பதிவர்களைப் பற்றிய கருவினை படத்தில் உள்ளடக்கலாம் என்று நினைத்து இக் குறும்படத்திற்கான கதையினை எழுதியுள்ளேன். படத்தின் முக்கிய கட்டம்,
பதிவர்கள் இருவர் அவர்களின் வலைப் பதிவு எழுத்தால் கவரப்பட்டு ஒருவரை ஒருவர் பார்த்துப் பேச வேண்டும் எனும் ஆவல் நீண்ட நாட்களாய் மனதில் குடி கொண்டிருக்க, இருவருமே சந்திக்க வேண்டும் எனத் தவித்துக் கொண்டிருப்பார்களாம், ஆனால் நேரில் இரு பதிவர்களும், இவர்கள் பதிவர்கள் இல்லை என்ற ரீதியில் ஒவ்வோர் நாளும் சந்தித்துக் கொள்வார்களாம்! அப்போது ஒரு பதிவருக்கு மற்றைய பதிவரைப் பற்றித் தெரியுமாம். ஆனால் மற்றப் பதிவருக்கு இவர் பதிவர் தான் என்று தெரியாதாம்! இப்படி சஸ்பென்ஸுடனும், ஆவலைத் தூண்டும் வகையில் ஒரு சம்பவம் நிஜ வாழ்க்கையில் நடந்தால் எப்படி இருக்கும்..??"
இதில் சித்தரிக்கப்படும் பதிவர்களில் ஒருவர் நான், மற்றவர் அந்த பிரபல
மணிப்பதிவர்.இதைப்பார்த்ததும் எனக்கும் சிரிப்பு வந்தாலும் கூடவே
இன்னொரு உண்மையும் தெரிய வந்தது.. சிரிப்பு வந்ததின் காரணம்
சில நாட்களின் முன்புதான் நான் அவரை அடையாளம் கண்டேன்.
இப்போது தெரிய வந்த உண்மை இவ்ளோ நாளா எங்களுக்குள் நடந்த இந்த
விளையாட்டு எங்கள் இருவருக்கு மட்டும்தான் தெரியும் என்று நினைத்து இருந்தேன் ஆனால் மூன்றாவதாக இன்னொரு நபருக்கும் இது தெரிந்து
இருக்கிறது என்பதுதான்.
அந்த பதிவருக்கும் எனக்குமான தொடர்பு எத்தகையது..?
பதிவுலகத்துக்காக எப்பவுமே என் நேரத்தை நான் ஒதுக்கியது இல்லை. எனக்கு கிடைக்கும் நேரங்களில்தான் பதிவுலகை டைம் பாஸுக்கு பயன்படுத்தி வருகிறேன். விளையாட்டாய் எழுதவந்த எனக்கு இவ்ளோ நண்பர்களும் பதிவுலகில் கிடைத்த சிறு அங்கீகாரமும் உண்மையில்
புரியாத ஆச்சரியம்தான் இத்தனைக்கும் நான் எழுதியது வெறும் 30பதிவுகள்தான். என்னுடைய நண்பர்கள் பதிவுகளுக்கு மட்டுமே போய்
கருத்துரைகளும் வோட்டும் போட்டு வந்தேன். என் நட்பு வட்டத்துக்குள் புதிதாய் யாரையும் நான் சேர்ப்பதும் இல்லை.
இந்த நிலையில்தான் எனக்கு அந்த பதிவரின் ப்ளாக் அறிமுகம் கிடைத்தது.
நான் ஒரு மொக்கைப்பதிவர் என்று அவர் தன்னை சொல்லிக்கொண்டாலும்
அவர் பதிவுகளை மொக்கை என்று ஒதுக்கி விட முடியாது.. அத்தனை ஈர்ப்பு ரசனை அவர் எழுத்தில். படித்த மாத்திரத்திலேயே அவர் எழுத்துக்கு அடிமையாகிவிட்டேன். சாண்டில்யனின் கட்டு புத்தகங்களை இடைவெளி இன்றி படித்தது போல் அவரில் பழைய பதிவுகளை இரவு இரவாய் நித்திரை முழித்து படித்த நாட்களும் உண்டு. அதன் பின் நானும் அவருடைய புதிய பதிவுகளுக்கு போய் கருத்துரை வோட் போட்டு வந்தாலும் அவர் நம்ம ப்ளாக்பக்கம் வருவதே இல்லை. என் ப்ளாக் வரும் எல்லா நண்பர்கள் ப்ளாக் பக்கமும் நான் போவதும் இல்லை, நான் போகும் ப்ளாக் நண்பர்கள் எல்லோரும் என் பக்கம் வருவதும் இல்லை. ஆகவே இதை நான் பெருசாக நினைக்காவிட்டாலும் அவர் எனக்கு பிடித்த பதிவர் என்ற முறையில் அவர் கருத்துக்களுக்காக மனம் ஏங்கத்தான் செய்தது. இந்த நிலையில் ஒரு நாள் நான் பதிவிட்ட பாசமாவது.. பந்தமாவது.. இது வெளிநாடு. என்ற பதிவுக்கு முதன் முறையாக என் ப்ளாக் வந்த அவர் என்னையும் என் பதிவையும் மிகவும் பாராட்டி கருத்துரைகளை அள்ளி வழங்கியதுடன் என் பதிவை தன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து விட்டதுடன் தனிபட்ட முறையில் என்னுடன் பேசினார். பதிவுலகம் வந்து நான் மிகவும் சந்தோஷமாய் இருந்த நாட்களில் அந்த நாளும் ஒன்று. நமக்கு பிடித்த பதிவர் அதுவும் பதிவுலகில் தனிக்காட்டு ராஜாவாக கொடிகட்டி பறக்கும் பிரபல பதிவர் நம்மை வந்து பாராட்டுகிறார் என்றால் சும்மாவா?? அந்த சந்தோஷத்தை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. இதன் பின் ப்ளாக்-பேஸ்புக் என்று எனக்கும் அவருக்குமான நட்பு மிகவும் நெருங்க தொடங்கிவிட்டது.
யார் அந்த பதிவர்..?
உலகம் ரெம்ப சிறியது என்று சொல்லுவார்கள். இந்த பதிவர் விடயத்தில்
நான் ரெம்ப ரெம்ப சின்னன் என்று உலகம் எனக்கு உணர்த்திவிட்டது. இந்த பதிவர் என் சொந்தகாரர் ஏன் எங்கள் வீட்டுக்கு கூட அடிகடி வரும் ஒரு நபர். அந்த பதிவர் மேல் வைத்த அன்பால் பிரான்சில் அவரை தேடி இருக்கேன்
அவரிடமே விசாரித்து இருக்கேன்.. அவரை பார்க்க ஆசைப்பட்டு இருக்கேன்.
இத்தனைக்கும் அவர் என் முன்னாலேயே இருந்து எனக்கே கை தந்து என் வீட்டுக்கே வந்து போயிருக்கார் போய்க்கொண்டு இருக்கார்.
அடக்கடவுளே.......!!!!! அவர் எங்கள் வீட்டுக்கு வந்த போதெல்லாம் எப்போதுமே ஹாய்.. ஹலோ.. என்பதை தவிர நான் வேறு வார்த்தை பேசியது இல்லை. காரணம் நான் யாருடனும் அதிகம் பேச மாட்டேன் அதிலும் தமிழ் ஆக்களை பார்த்தால் ஒருவித பதட்டம் நாணமே.. இங்கு எனது நண்பர்கள் லிஸ்ட்டில் தமிழர்கள் இல்லாததும் இதுக்கு ஒரு காரணமாய் இருக்கலாம். நான் தமிழ் நண்பர்களை சம்பாதித்துக்கொண்டதே ப்ளாக் எழுத வந்த பின்புதான். இப்படியான ஒரு சூழ்நிலையில் அந்த பதிவர் வீட்டுக்கு வரும் நேரங்களில் அவர் யார் என்று அடையாளம் தெரியா நிலையில் நான் அவருடன் பேசாமால் ஒரு புன்னகையுடன் அவரை கடந்து போனதில் ஆச்சரியம் இல்லைத்தானே...?
உண்மையில் எங்கள் வீட்டுக்கு வந்தும் அவர் ஆரம்பத்தில் என்னை அடையாளம் காணவில்லைத்தான். அதுவும் "நான்" எல்லாம் ப்ளாக் எழுதுவேன் என்று அவர் கனவிலும் நினைத்து இருக்க மாட்டார். என் ப்ளாக்கில் என்னுடைய புகைப்படத்துடன் என்னைப்பற்றிய தகவல்களும் கிடைப்பதால் பின்பு அவர் என்னை அடையாளம் கொண்டதிலும் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. என்னை அடையாளம் தெரிந்து கொண்டும் தான் யாரோ ஒருவர் போல் இருந்து என்னோடு சஸ்பென்ஸ் வைச்சு கண்ணாம்பூச்சி விளையாடியதுதான் எனக்கு ஆச்சரியம் கொஞ்சம் கோவமும்.
நான் எப்படி அந்த பதிவரை கண்டு பிடித்தேன்..?
அவருடைய முதல் எழுதிய ப்ளாக் பெயரும் வேறு இப்போது எழுதும் ப்ளாக் பெயரும் வேறு இருந்தும் அவர் உண்மையான பெயர் ரஜீவன் என்றதுமே அவர் மேல் எனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்துவிட்டது. அதன் பின் அவர் ஒரு ஆங்கில ஆசிரியர் என்றதுமே அவர் மேல் சந்தேகம் உறுதியாகி நாமளும் புலனாய்வு புலியாகி அவரைப்பற்றிய தகவல்களை சேகரிக்க தொடங்கிய வேளையில் தவளையும் தன் வாயால் கெடும் என்பதைப்போல் "அத்தை பெற்ற
அழகிய ராட்சஷிகள்" என்று என் சமீபத்திய பதிவொன்றில் நான் புலிகள் அமைப்பில் சேர்ந்த என் மச்சாள் பற்றியும் இறந்த மச்சாள் பற்றியும் சொல்ல அதில் நான் சொல்லாமல் விட்டதை இவர் சொல்லியதுடன் அந்த மச்சாள்மாரின் அப்பாக்கள் (என் மாம்ஸ்) பெயரை சொல்லியதுடன் பல தகவல்களை சொல்லி என்னை ஆச்சரியப்பட வைக்க நினைத்து அதனுடே தன்னைப்பற்றிய தகவல்களையும் உளறிவிட்டுப்போனார். இதேநேரத்தில் என் புலனாய்வாலும் அவரைப்பற்றிய பல தகவல்கள் எனக்கு கிடைக்க (அவரின் பாதுகாப்பு கருதி அத்தகவல்கள் இங்கே மறைக்கப்பட்டு உள்ளது) இவர்தான் அவர்.. அவர்தான் இவர்.. என்று சுலபமாக நான் அடையாளம் கண்டு கொண்டு விட்டேன்.
அழகிய ராட்சஷிகள்" என்று என் சமீபத்திய பதிவொன்றில் நான் புலிகள் அமைப்பில் சேர்ந்த என் மச்சாள் பற்றியும் இறந்த மச்சாள் பற்றியும் சொல்ல அதில் நான் சொல்லாமல் விட்டதை இவர் சொல்லியதுடன் அந்த மச்சாள்மாரின் அப்பாக்கள் (என் மாம்ஸ்) பெயரை சொல்லியதுடன் பல தகவல்களை சொல்லி என்னை ஆச்சரியப்பட வைக்க நினைத்து அதனுடே தன்னைப்பற்றிய தகவல்களையும் உளறிவிட்டுப்போனார். இதேநேரத்தில் என் புலனாய்வாலும் அவரைப்பற்றிய பல தகவல்கள் எனக்கு கிடைக்க (அவரின் பாதுகாப்பு கருதி அத்தகவல்கள் இங்கே மறைக்கப்பட்டு உள்ளது) இவர்தான் அவர்.. அவர்தான் இவர்.. என்று சுலபமாக நான் அடையாளம் கண்டு கொண்டு விட்டேன்.
அவரை நான் அடையாளம் கண்டு கொண்ட பின்னும் வழமை போல்
எதுவும் தெரியாதவன் போல் அவரின் சஸ்பென்ஸ் விளையாட்டை ரசித்துக்கொண்டிருக்க எப்படியோ நான் அவரை நெருங்கிக்கொண்டுப்பதை உணர்ந்துகொண்டவர். நாடகம் முடிந்த பின்னும் தன்னை காப்பாற்றிக்கொள்ள
அவர் போட்ட நாடகங்களும் துடிப்பும் இருக்கே...!! ஒரு உயிரின் கடைசி துடிப்பைப்போல் அந்த பதிவர் தன் முகமூடியை காப்பாற்ற கடைசி வரை போரா(டியது)க்கொண்டிருப்பது உண்மையில் எனக்கே மனசுக்கு கஸ்ரமாய் போய்விட்டது. நான் உங்களை பார்க்கவில்லை பேசவில்லை நீங்கள் யார் என்றே எனக்கு தெரியாது என்று சொல்லிவிட்டு ஒன்றும் தெரிந்து கொள்ளாதவன் போல் பழைய மாதிரி இருந்துவிடுவோமா என்று கூட ஜோசித்தேன்.. அவ்ளோ பரிதாபமாக இருந்தது.
சரி இவ்ளோ நடந்து முடிந்துவிட்டது, என்னை ஏமாற்றிய அந்த பதிவருடன்
நட்பை தொடரலாமா..?
ஏன் தொடரப்படாது... ப்ளாக்கில் அவருக்கும் எனக்குமான நட்பு இன்றுவரை
ஆரோக்கியமாகவும் அன்பாகவும் தானே இருக்கு. ப்ளாக் நண்பனாக இந்த நிமிஷம் வரை என் மேல் அன்பு செலுத்திக்கொண்டுதானே இருக்கார். தான் யார் என்று என்னிடம் வெளிப்படுத்தி ஒரு உறவாக அவர் என்னிடம் தன்னை காட்டிக்கொள்ள விரும்பாமல் இருந்து இருக்கலாம்! அல்லது சஸ்பென்ஸ் வைத்து இருக்கலாம்! ஆனால் பொய்களுக்கு ஆயுசு கம்மி என்பதை அவர் உணராமல் விட்டுவிட்டார். எது எப்படியோ இந்த கண்ணாம்பூச்சி விளையாட்டில் அவர் மேல் எனக்கு துளி கோபம் இல்லை என்பதை இங்கேயே சொல்லிக்கொள்கிறேன். அவர் எப்போதும் நான் நேசிக்கும் பதிவர்தான் நண்பர்தான் இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்னிடம்.
அப்போ ரஜீவன்...?
போங்கப்பா...... அவர் பிரான்ஸ் வந்த இந்த சில வருடங்களில் பல தடவை எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார்.. அதில் பல நேரங்களில் சிறு புன்னகையுடன் அவரைக்கடந்து என் அறைக்கு போயிருக்கேன். அதில் ஜந்து தடவை ஹாய்.. சொல்லி கைகொடுத்து இருப்பேன், மூன்று தடவை என் கையால் தேநீர் போட்டு கொடுத்திருப்பேன், ஒரு தடவை சாப்பாடு போட்டுக்கொண்டுவந்து கொடுத்ததாய் நினைவு.. இப்படியான ஒரு சூழ் நிலையில் உனக்கும் அவருக்கும் நட்பு தொடருமா என்று கேட்டால் கெக்கே பேக்கே என்று சிரிப்பு வராது..!!
குறிப்பு: இப்பதிவு அந்த பிரபல 'மணி'ப்பதிவரை மனம் நோகும்படி செய்திருந்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவர் மனதை
நோகடிப்பது என் நோக்கமும் அல்ல. நான் யாரிடமும் இலகுவில் ஒட்டவும் மாட்டேன் எதுவும் வாங்கவும் மாட்டேன். ஒட்டினால் ரெம்ப ஒட்டிவிடுவேன் வாங்கினால் ரெண்டு மடங்காக திருப்பிக்கொடுத்துவிடுவேன். அவரை யார் என்று அடையாளம் கண்டபின் எனக்கு கிடைத்தை அவர் தந்த 'ஷாக்கை' இப்போது நான் அவரை அடையாளம் கண்டதை சொல்லி திருப்பி கொடுக்க வேண்டும் என்பதே இப்பதிவின் நேக்கம். ஹே.. ஹே.
