திங்கள், மே 02, 2011

"நக்கீரன்" கோபாலிடம் பத்து கேள்விகள்..

01.  ஜெயலலிதா, உங்களை வீரப்பன் விவகாரத்தில் சம்மந்தப்படுத்தி தூக்கி ஜெயிலில் போட்டதாலும், உங்கள் மீதும் உங்கள் பத்திரிகை ஊழியர்கள் மீதும் பல பொய் வழக்குகளை போட்டதாலும் அன்றில் இருந்து இன்று வரை ஜெயலலிதா கெட்டது நல்லது எது செய்தாலும் அவரை எதிர்கிறீர்களே, பத்திரிகை தர்மத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அம்சமே பகைமை பாராட்டாததுதான் என்பது பத்திரிகை உலகின் புலனாய்வு புலி என பாராட்டுப்பெற்ற உங்களுக்கு தெரியாதா..? அல்லது தெரிந்தும் உங்கள் சுய கோவத்துக்கு அடிமைப்பட்டு இருக்குறிர்களா..?

02.  ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சரமாரியாக உங்கள் மேல் வழக்குகள் பாய்ந்த போது, அப்போது எதிரிகட்சியாக இருந்த கருணாநிதி உங்களை அரவணைத்து காப்பாற்றினார் என்ற ஒரே காரணத்துக்காக இன்று வரை கருணாநிதியின் குள்ள நரி வேலைகளை கூடுமானவரை மறைத்தும் அவரை விமர்சிக்காமலும் மறைமுகமாக ஆதரித்தும்(அப்படி நீங்க நம்பும்) உங்களை நம்பும் உங்கள் வாசகர்களை ஏமாத்துறிர்களே இது தப்புண்ணு எப்பவாச்சு உங்களுக்கு தோனி இருக்கா..? அல்லது இதுக்காக எப்பவாது சின்ன வருத்தமாவது பட்டதுண்டா..?

3) நக்கீரனில் உங்களால் எழுதப்பட்டு வரும் " யுத்தம் " தொடரில் சில உண்மைகளும் சில பாராட்ட தக்க விடையங்களும் இருந்தாலும் பெரும்பாலும் அதிகப்படுத்தலும் தனி நபர் விரோதமும் சுய தம்பட்டமும் பெரிதாக தெரிகிறதே ஊருக்கு உபதேசம் செய்யும் உங்களுக்கு இது தெரிய வில்லையா..? மெகா சீரியல் போல் எங்கேங்கோ சுத்தும் தொடர் சமீபத்தில் முடிந்த சட்டமன்ற தேர்தல் நேரம் பாத்து ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தும் அவரை ஒரு அரக்கி போல் சித்தரித்தும் எழுதி தி.மு.க வுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்தீர்களே இதர்க்கு பதில் வடிவேல் மாதிரி ரோட்டு ரோட்டாக சென்று கருணாநிதியை ஆதரிது ஓட்டு கேட்டு இருக்கலாம் இல்லையா.. ஏன் இந்த " நடு நிலையான பத்திரிகையாலன் " என்ற போலி வேசம்..?

04. "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று உங்கள் பத்திரிகையில் போடுகிறீர்கள், ஆனால் பத்திரிகையை பார்த்தால் "வேண்டப்பட்டவர் செய்யின் குற்றம் குற்றமில்லை" என்ற எண்ண்ம் அல்லவா வருகிறது, ஒன்றை சொல்லி இன்னொன்றை ஏன் செய்வான் பேசாமல் அதை விடுத்து "வேண்டப்பட்டவர் செய்யின் குற்றம் குற்றமில்லை" என்றே உங்கள் பத்திரிகையில் போடலாமே..?

05. தமிழ் நாட்டில் அத்தனை பத்திரிகைகளும் சத்திய சாயி பாபாவை ஆதரித்து செய்தி வெளியிட்டுக்கொண்டிருந்த வேளையில் திடீரென பாபாவிடம் உண்மை இல்லை எனவும் அவர் விபூதி வரவளைப்பதும் லிங்கம் எடுப்பதும் எல்லாமே பித்தலாட்டம் என்று முன் பக்கத்தில் கவர் ஸ்டோரி வெளியிட்டு திடீர் பரபரப்பை கிளப்பி உங்கள் பத்திரிகையின் விற்பனையை கூட்டினீர்கள், நீங்கள் சொன்னால் சரியாத்தான் இருக்கும் என்று நான் உட்பட நம்பிய வாசகர்கள் ஏராளம். ஆனால் இப்போது, பாபா இறந்ததும் இப்போது உள்ள நிலமையில் அவரை விமர்சித்து எழுதினால் கல்லா கட்ட முடியாது என்ற உண்மையை உணர்ந்து கொண்டு அவரை போற்றியிம் புகழ்ந்தும் எழுதுகிறிர்களே.. உண்மையை சொல்லுங்கள் உங்கள் வாசகர்களை பற்றி நீங்கள் என்னதான் நினைக்கிறிர்கள்..?

06. ஸ்பெக்ட்ரம் ஊழலில் முக்கிய குற்றவாழியே கருணாநிதியும் அவர் குடும்பமும் தான் இதர்க்கு சாட்சியாக இருக்கு கலைஞர் தொலைக்காட்சி, ஆனால் நீங்கள், உங்களை நடு நிலைவாதி(!)யாகவும் காட்டிகொள்ள வேண்டும் கலைஞரையும் பகைக்க கூடாது இதற்காக ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று ஒன்று நடக்காதது போல் காட்டிவந்து  இப்போது ஸ்பெக்ட்ரம் ஊழல் பூதகரமானதை தொடந்து அதர்க்கும் கலைஞர் குடும்பத்துக்கும் சம்மந்தம் இல்லாதது போலவும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் எல்லத்தையும் சுருட்டியது ராசா தான் என்பதைப்போல மனசாட்சியே இல்லாமல் எய்தவன் இருக்க அம்பை புடித்துக் கொண்டு இருக்குறீர்களே இதுதான் உங்கள் பத்திரிகை தர்மமா..?

07. ஸ்பெக்ட்ரம் ஊழலில் நீங்கள் அடக்கி வாசிப்பதற்க்கு, சிபிஜ அதிகாரிகளின் அதிரடி சோதனையில் உங்கள் இதழின் இணையாசிரியர் "காமராஜ்" ம் சிக்கியதுதான் காரணமா..? உண்னமையில் நீங்கள் நேர்மையான சிகாமணிதான் என்றால் இதற்க்கு உங்கள் வாசகர்களுக்கு விளக்கம் கொடுத்து இருக்கலாம் இல்லையா..?

08. ஜெகத் கஸ்பரை புலிகளின் ஆதரவு மீடியாக்களே போட்டுதாக்கின்றது, ஜெகத் கஸ்பர் நல்லவரா கெட்டவரா என்று ஈழத்தமிழர்களே பட்டிமன்றம் நடத்துகிறார்கள். ஆனால் நீங்கள் அவரை வைத்து மறக்க முடியுமா.. தொடர் எழுதி, ஈழ பிரச்சனையை வைத்து எவ்ளோக்கு எவ்ளோ கல்லா கட்ட முடியுமோ கட்டினிர்கள், ஆனால் கஸ்பரோ மறக்க முடியுமா.. தொடரில் ஈழத்துக்காக சிறைச்சாலை சென்று வந்த நெடுமாறன் வைகோ சீமான் போன்றவர்களை "விவச்சாரம்" போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி கடுமையாக விமர்சித்ததும் இல்லாமல் இவர்கள்தான் பிரபாகரனை ஆட்டிவெக்கிறார்கள் என்றும், பிரபாகரன் தவறு செய்து இருக்கிறார் என்றும் இவர் எழுதியதை, பிராபாகரனின் தீவிர விசுவாசியான நீங்கள் எப்படி அனுமதித்தீர்கள்..? ஈழப்போர் நடக்கும் போது பிராபாகரனுக்கும் தனக்கும் நெருங்கிய தொடர்வு இருப்பதை போல் ஈழம் பற்றி பொய்யான தகவல்களை அவர் வெளியிடும் போது ஈழ ஆதரவு இணையங்கள் எல்லாம் கொதித்து எழுந்தபோதெல்லாம் என்னிடம் ஆதரங்கள் இருக்கிறது இதோ வெளியிடுகிறேன் அதோ வெளியிடுகிறேன் என்று சொல்லி சொல்லி அதை கடைசி வரை வெளியிடவே இல்லையே அந்த ஆதாரங்களை! ஜெகத் கஸ்பர் உங்களிடமாவது காட்டியுள்ளாரா..?

09.பத்திரிகை உலகின் இன்றைய நிலவரப்படி புலனாய்வு இதழ்களிலேயே அதிக பிரதிகள் விற்பனையாவது உங்கள் நக்கீரந்தான் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை, ஆனால் இந்த உயர்வு எப்படி வந்தது உங்கள் தி மு கா வுக்கு ஆதரவான் ஜால்ரா அரசியல் கட்டுரைகளாலா..! இல்லையே, ஒரு மஞ்சள் பத்திரிகைகே உரிய ஆபாசமான எழுத்துக்களுடன் தாங்கி வந்த சினிமா கிசு கிசுக்களும், நடிகைகளின் வாழ்க்கை வரலாறுகளும், நாட்டில் நடக்கும் கள்ள தொடர்வுகளும் உதாரணமாக, சூர்யா-ஜோதிகா- விக்ரமின் முக்கோண காதல், த்ரிஷா -த்ரிஷா அம்மா- விக்ரமின் முக்கோண நட்பு, அண்ணாச்சி-ஜீவஜோதியின்
கள்ளத்தொடர்பு , பிரவுதேவா- நயன்தாராவின் கள்ளக்காதல், நித்தியானந்தா-ரஞ்சிதா கள்ள உறவு போன்றவற்றை பயன்படுத்தி நீங்கள் வெளியிட்ட ஆபாச செய்திகளால் தானே, உங்கள் மனச்சாட்சிக்கு தெரிந்த இந்த உண்மையை வெளியே யாரும் கேட்டால் ஒத்துக்கொள்ளும் தைரியம் இருக்கா உங்களுக்கு..?

10.இறுதியாக ஒரு கேள்வி..
ஈழத்தின் இறுதி போர் தொடங்கி இன்று வரை ஈழச்செய்திகளை உங்களைப்போல் தமிழ் நாட்டில் எந்த பத்திரிகைகளும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது இல்லை, ஈழத்தின் மேல் அக்கறை உள்ள தமிழ் நாட்டு பத்திரிகைகளில் முதன்மையானது நக்கீரன் என்பது உலக தமிழர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை, ஆனால் ஈழபடுகொலைக்கு துணைபோன தி மு க மேல் உள்ள உங்கள் பாசம், புலித்தலைவர்களை நம்ப வைத்து நெருக்கடியான கடைசி நேரத்தில் கைவிட்டு துரோகம் செய்த கனிமொழியை என் சினேகிதி என சொல்லிக்கொள்ளும் உங்கள் நட்பு, ஈழ விசயத்தில் முன்னுக்கு பின் முரணாக பேசி தமிழ்மக்களால் சந்தேக கண்கலோடு பாக்கப்படும் ஜெகஸ்கஸ்பர் போன்றவர்களை வைத்து தொழில் செய்வது போன்றவை உங்கள் மீது ஒரு நல்ல அபிப்ராயத்தை வர வைக்க மறுக்கிறது, ஒரு ஈழ தமிழனாக கேக்கிறேன் சொல்லுங்கள்..
உங்களுக்கு எங்கள் மேல் உள்ளது உண்மையான அக்கறையா..? அல்லது இதுவும் உங்கள் பத்திரிகை வியாபார தந்திரங்களில் ஒன்றா..?

21 கருத்துகள்:

  1. நியாயமான கேள்விகள் நண்பா

    பதிலளிநீக்கு
  2. //"வேண்டப்பட்டவர் செய்யின் குற்றம் குற்றமில்லை"//
    அருமை

    பதிலளிநீக்கு
  3. இந்திய ஊடகங்களில் பெரும்பாலானவை இவ்வாறான "ஊடக விபச்சாரத்"தனத்தையே கடைப்பிடித்துவருகின்றன. ஊடக சுதந்திரம் என்ற பெயரில் இவை அடிக்கும் கொட்டம் கொஞ்ச நஞ்சமல்ல.. இவ்வாறான போக்கு ஆரோக்கியமான ஒரு விடயம் அல்ல‌

    பதிலளிநீக்கு
  4. //Mathuran a dit…
    நியாயமான கேள்விகள் நண்பா//

    நன்றி நண்பா
    உண்மைதான் நண்பா
    ஊடக சுதந்திரம் என்ற பெயரில் தங்கள் பத்திரிக்கை வியாபாரத்தை அதிகம் ஆக்க எதையும் எழுத தயங்காதவர்கள் அவர்கள்,
    நக்கீரனின் வளர்ச்சி என்பது ஓட்டு மொத்த டீமின் அயராத உழைப்பு. ஆனால் இன்று அவர் என்ன செய்கிறார் தி.மு.கா வின் அதிகார பூர்வ ஏடாக மாறியுள்ளார்.

    பதிலளிநீக்கு
  5. நண்பா..
    ஒரு நண்பர் நக்கீரன் கோபாலை ஆதரித்து போட்ட பதிவுக்கு வந்த எதி கருத்துக்களை பாருங்கள்
    அவ்லோவும் எவ்லோ உண்மைகள் நக்கீரன் கருணானிதி குடும்பத்தின் ஆஸ்தான பத்திரிகையாளராக மாறி ரொம்ப நளாச்சு!

    கருத்து 01.
    Deleepan - ஆகஸ்ட்27
    நல்ல பதிவு. ஆனால் அண்ணன் ராஜகோபால் என்கிற நக்கீரன் கோபால் அவர்கள் பத்திரிக்கை ஆரம்பிக்கும் முன் முட்டி மோதி தன் வாழ்க்கையில் பெரும்பாடு பட்ட விசயங்களை மிகத்தெளிவாக தெரிவித்திருக்கிறீர்கள். இது நக்கீரன் கோபாலின் ஒரு பக்கம் மட்டுமே!

    மறு பக்கம் பற்றி தெரியுமா?
    * நக்கீரன் பத்திரிக்கைக்கு இருவிதமான நிறுபர்கள் இருக்கிறார்கள். ஒன்று நேரடியாக அரசியல் தலைவர்களை ,விழாக்களை, நடிகைகளை பேட்டி எடுத்து (ரூம் போட்டுத் தண்ணியடித்து புலணாய்வு செய்து) செய்தியாக வெளியிடுவார்கள்.
    இரண்டாவது வகை “பிளாக் ரிப்போர்டர்” எனப்படும் உளவு நிறுபர்கள். அதாவது இவர்களின் வேலை என்னவென்றால் பெரியப் பெரிய அரசியல் புள்ளிகளின் பிள்ளைகளைப் பின்தொரடந்து அவர்களின் அந்தரங்களை படம்பிடித்து வைத்துக்கொண்டு அவர்களின் தந்தைகளிடம் பண பேரம் ஆரம்பிப்பார்கள். அதாவது அவர் தன்னை நக்கீரன் நிறுபர் என காட்டிக்கொள்ள மாட்டார். அவ்வாறு பேரம் படியாத சூழ்நிலைகளில் அந்தப் போட்டாக்கள் அனைத்தும் நக்கீரன் பத்திரிக்கையில் “பிரபல புள்ளி மகனின் காம லீலைகள்” என்ற பெயரில் வெளியாகும். அத்தனையும் பொம்பளை கேஸ் என்பதால் அதிகபட்சமாக பேரம் படிந்துவிடும்.

    * சின்ன சின்ன தவறுகள் செய்து கொண்டிருந்த சந்தன வீரப்பனை ஆள்கடத்தல் செய்ய பழக்கியதே இந்த கோபால் தான். அதிலும் முக்கியமாக ராஜ்குமாரை கடத்த திட்டம் வகுத்துக்கொடுத்தது கோபால் தான்.

    * ராஜ்குமார் கடத்தப்பட்ட நிலையில் அவருக்கு கைமாறிய பிணையத்தொகை சுமார் 200 கோடிகள். இதிலே வீரப்பனுக்கு கிடைத்தது வெறும் 4 முதல் 5 கோடிகள் தான்.
    * இரண்டு முறை அரசு தூதராக சென்று வந்த நிலையில் பணப்பேரம் நடந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நெற்றிக்கண் ஆசிரியர் பாயும் புலி காட்டுக்குள் நுழைந்து விட அவரை போலீஸ் என நினைத்த வீரப்பன் , பாயும்புலியை கட்டிவைத்து பதம் பார்த்துவிட்டு கடைசியில் அவரை சோதனையிடும் போது நெற்றிக்கண் அடையாள அட்டையைக் கண்டு அவரை விடுவித்து விளக்கம் கேட்க அங்கு தான் 200 கோடி விசயத்தை போட்டுடைக்க வெறியாகிய வீரப்பன் இனிமேல் அவன் வந்தால் அவனின் உயிர் இங்குதான் சமாதியாகும் என எச்சரித்து அனுப்பியது முழுமையாக ஆதாரத்துடன் நெற்றிக்கண்ணில் வெளியாகியது.

    *இந்த செய்தி வந்த அடுத்த நிமிடம் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல கோபால், தான் இனிமேல் காட்டிக்கு செல்ல போவதில்லை என வெளியான செய்தி
    * வீரப்பன் அந்தப் பகுதி கலெக்டருக்கு அனுப்பிய கேசட்டில் இனிமேல் கோபால் இங்கே வரக்கூடாது என தெரிவித்து அனுப்பியதும் மாற்று ஏற்பாடாக நெடுமாறன், கல்யாணியை தூதராக அனுப்பி ராஜ்குமாரை மீட்டது.
    * காட்டுக்குள் இருக்கும் போது கோபாலை தன் வாழ் நாளில் மறக்க மாட்டேன் என பேட்டி கொடுத்திருந்த ராஜ்குமார் மீண்டு வந்ததும் கோபாலின் மூஞ்சியில் முழிக்காமல் சென்றது.
    *ராஜ்குமார் மீண்டு வந்து கலைஞரை சந்தித்த போதும் அந்த சந்திப்பில் கோபால் கலந்து கொள்ளாதது.

    என இன்னும் இன்னும் பட்டியல் நீளும். நீங்கள் கொடுத்திருக்கும் தலைப்பிற்கு சரியான செய்தி நான் கொடுத்த இது தான். ஆக கோபால் ஒரு முழு தமிழ் வியாபாரியன்றி நீங்கள் புகழ்வதற்கு எந்தவிதமான தகுதியும் கோபாலிடம் கிடையாது. பச்சையாக சொல்லப்போனால் கோபால் ஒரு கிரிமினல்.

    பிகு: கோபால் பற்றி இன்னும் எக்கச்சக்க விசயங்கள் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் வெளியிட்டால் பல முக்கிய புள்ளிகளையும் இழுக்க வேண்டி வரும் எனபதால் இது போதும்.

    பதிலளிநீக்கு
  6. கருத்து 02.
    நக்கீரனின் முன்னாள் வாசகர் - ஆகஸ்ட்27,
    நக்கீரன் கோபாலின் இருண்ட பக்கங்கள் – உங்கள் தலைப்பிலே உள்ளது நிச்சயம் அவருக்கு என்று இருண்ட பக்கங்கள் உண்டு.

    அவரின் உழைப்பு / வளர்ச்சி பாராட்டுகுறியது. ஆனால் பாதை மாறிய பயணங்கள். லட்சியத்திற்காக ஆரம்பிக்கபட்ட பத்திரிக்கை இன்று லட்சங்களுக்காக நடத்தபடுகிறது.

    “நக்கீரனின்” வளர்ச்சிக்கு ஐயா கணேஷன் போன்றவர்களின் உயிர்தியாகமும் ஒரு காரணம்.

    ஆரம்பகாலத்தில் விளம்பரங்கள் இல்லாத / சினிமா செய்திகள் இல்லாத ஒரு தரமான ஏன் சொல்ல போனால் ஒரு இயக்கத்தின் பத்திரிக்கையாக / லட்சிய பத்திரிக்கையாக இருந்தது.

    விளம்பரங்கள் தவிர்க்க முடியாதது… ஏற்று கொள்கிறோம் ஆனால் கால ஓட்டத்தில் நடிகைகளின் அங்கங்களை காட்டி பிழைப்பதற்கு துணிந்தவர் தானே இவர்… ஏன் அப்படி ஒரு பிழைப்பு? நீங்கள் சொல்லும் 40,000 வைத்து லட்சியத்துடன் துவங்கிவர் லட்சங்களையும் நல்ல தொரு பெயரினையும் பெற்ற பிறகு ஏன் அந்த தடுமாற்றம்.

    +12 படித்த கால கட்டத்தில் க.சுப்பு அவர்களின் இங்கே ஒரு ஹிட்லர் தொடர் வந்தது. நக்கிரன் கொளுத்த பட்ட கால கட்டம் அது. கல்லலில் இருந்து மதுரக்கு பஸ்ஸில் சென்று வாங்கி வருவேன். இன்னொரு தொடர் அமெரிக்க வாழ் பெண் (பெயர் சரியாக நினைவில் இல்லை) எழுதியது பல தூண்டியது. காமராஜ் அவர்கள் அவர் பெயரால் எழுதிய ஆரம்ப கால புலணாய்வு கட்டுரைகள் அபாரம். ஆனால் சில ஆண்டுகளாக அவர் பெயரில் கட்டுரைகள் வரவில்லை சமீபத்தில் ஒரு கட்டுரை படித்தேன்.

    காமராஜ் அவர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னை சென்று சிவகங்கை மாவட்ட நண்பர் ஒருவரின் உதவியுடன் அவர் தங்கி இருந்த அறைக்கு சென்றோம். தூக்கம் என்றால் என்ன? கேட்கும்… ஏங்கும் கண்கள். பேச்சிலர் ரூம்களுக்கே உண்டான அலங்கோலமான அறையில் அதிகம் சிதறி கிடந்தது புத்தங்கள் தான்.

    நக்கீரனின் வளர்ச்சி என்பது ஓட்டு மொத்த டீமின் அயராத உழைப்பு. ஆனால் இன்று அவர் என்ன செய்கிறார் தி.மு.கா வின் அதிகார பூர்வ ஏடாக மாறியுள்ளார். நக்கீரனின் நடுநிலை தவறி வேண்டியவர் வேண்டாதவர் என்ற நிலைக்கு வந்து வெகு நாளாகிவிட்டது.

    90 களின் ஆரம்பத்தில் முதல் தர பத்திரிக்கையாக இருந்தது இன்று அதே நிலையில் உள்ளதா? என்ற கேள்வியை ஆசிரியர் திரு கோபல் அவர்கள் கேட்டு பார்க்கட்டும். பழைய வெறியை / லட்சியத்தை நான் அவர்களிடம் எதிர் பார்க்கிறேன். யார் செய்தாலும் குற்றம் குற்றமே என்ற அளவில் இருக்க வேண்டும்

    அதை விடுத்து அந்த அந்த காலகட்டத்தில் உள்ள பரபரப்பு செய்திகளை வெளியீட்டு கல்லா கட்டும் சராசரி வியாபாரியாக இருக்க கூடாது.

    ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யட்ட்டும் முதல் இதழில் இருந்து இன்று வரை வெளி வந்த அனைத்து இதழ்களையும் இடம் பெற செய்தால் பாதை மாறிய பயணம் தெரிய வரும் 95 க்கு முன் பின் என்று தான் நாம் தரம் பிரிக்கலாம்.

    அவரின் மீது தனிப்பட்ட கோபம் இல்லை… ஓரு ஆரம்ப கால வாசகனால் அவர்களின் பாதை மாறிய பயணத்தை ஏற்க முடியவில்லை…

    இன்றும் அவர்களுக்கு என்று ஒரு இடம் இருக்கிறது. புலனாய்வு செய்திகளை படிப்பதற்கும் ஆர்வமும் நம்மிடம் இருக்கிறது அதற்காக ஒருவரின் அந்தரங்கத்தை அம்பலபடுத்துவது தான் என்றில்லாமல் சமுதாயத்தை பாதிக்க கூடிய கரை படிந்தவர்களை தோலுரித்து காட்ட வேண்டும்.

    இன்றைய தமிழக இளைய சமூதாயம் பணம் தான் எல்லாம் அதை எப்படி வேண்டுமானலும் சம்பாதித்தால் சரி எதுவும் தவறில்லை என்ற மன நிலையில் சென்று கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக அரசியலில் நேர்மைக்கு சுத்தமாக இடம் இல்லை.

    போரட்ட குணம் மிக்க திரு கோபால் / காமராஜ் போன்றவர்களால் சிறு மாற்றத்தை கொண்டு வர முடியும்… பலரை தோலுரித்து காட்ட முடியும் அதை விடுத்து நடிகைகளில் அழுக்கு உள்ளாடை ரகசியங்களை வெளியீட்டு தமிழ் வாசகனின் அந்தரங்க அபிலாசைகளுக்கு தீனி போடுவதை தான் தொடருவோம் என்றால் நாம் என்ன செய்ய முடியும்.

    மீண்டும் சொல்கிறேன்…..அவரின் மீது தனிப்பட்ட கோபம் இல்லை… ஓரு ஆரம்ப கால வாசகனால் அவர்களின் பாதை மாறிய பயணத்தை ஏற்க முடியவில்லை… தவறான வார்த்தைகள் இருந்தால் நீக்கி விடலாம்.

    பதிலளிநீக்கு
  7. ம்ம்.. இது கோபால் என்ற பச்சோந்தியின் பின்னால் உள்ள இருண்ட பக்கங்கள்... இவர்போல் இன்னும் எத்தனை பேரோ?

    பதிலளிநீக்கு
  8. தேசியத்தலைவர் பிரபாகரனுக்கே போர் தந்திரங்களை கற்றுத்தந்தவர் போல் பேசிவரும் போலிப்பாதிரியார் ஜெகத் கஸ்பார் ஒரு சமயம் தன்னலம் கருதா தலைவர் வைகோ மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கண்ணியமிக்க தலைவர் நெடுமாறன் அவர்களின் மீது சேறு வாரி இறைத்த பொது, அதை செய்தியாக்கி பெருமளவில் கல்லா கட்டியதுடன், தமிழின துரோகி "கருணாநிதியை" ரொம்ப நல்லவன் என செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபால், ஒரு சமயம் ஒரு விளக்கம் வேண்டி அய்யா நெடுமாறன் அவர்களை தொடர்பு கொண்டபோது அய்யா சொன்னது.. "இந்திய உளவு நிறுவனமான "ரா" வின் கைப்பாவையான பத்திரிக்கைக்கு பேட்டி கொடுப்பதில்லை" இன்றும் என்றும் நினைவில் கொள்ள கூடியது.

    இப்போது கல்லா கட்டுவது மிகவும் குறைந்துள்ளதால், "ரா" மீது தனக்கு எந்தவிதமான பரிவும் இல்லை என காட்டமுனைவதற்க்காக, புருலியா ஆயுத கேசில் "ரா" வை குற்றம் சாட்டி ஏற்கனவே எழுதியுள்ள வடநாட்டு பத்திரிக்கைகளுடன் நக்கீரனும் இணைந்துள்ளது.

    காலம் அனைத்தையும் கவனித்து கொண்டுள்ளதை நக்கீரன் கோபால் அறிவாரோ?

    பதிலளிநீக்கு
  9. சூடான சவுக்கடி .......

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா10:19 PM, மே 04, 2011

    இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா10:21 PM, மே 04, 2011

    வாங்க பாஸ் வலைத்தளத்துக்கு உங்களை வரவேற்கிறேன்...

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா10:22 PM, மே 04, 2011

    இன்று பத்திரிக்கை தர்மம் என்பது எங்க தான் இருக்கு வியாபாரத்துக்காக என்னவும் செய்வார்கள் இவர்கள்.

    பதிலளிநீக்கு
  13. //singam a dit…//

    வருகைக்கு நன்றி பாஸ்


    //நக்கீரன் கோபால், ஒரு சமயம் ஒரு விளக்கம் வேண்டி அய்யா நெடுமாறன் அவர்களை தொடர்பு கொண்டபோது அய்யா சொன்னது.. "இந்திய உளவு நிறுவனமான "ரா" வின் கைப்பாவையான பத்திரிக்கைக்கு பேட்டி கொடுப்பதில்லை" இன்றும் என்றும் நினைவில் கொள்ள கூடியது.//

    இது நான் அறியா தகவல்
    அறிய தந்தமைக்கு நன்றி பாஸ்..

    பதிலளிநீக்கு
  14. //பாலா a dit…
    சூடான சவுக்கடி .......
    //
    நன்றி பாஸ் பட் எப்புடி சவுக்கடி கொடுத்தாலும் இவர்கள் திருந்த மாட்டார்கள் பாஸ்
    அவர்கள் குறிக்கோள் காசு தான பிறகு எங்க திருந்திறது.

    பதிலளிநீக்கு
  15. //கந்தசாமி. a dit…
    வாங்க பாஸ் வலைத்தளத்துக்கு உங்களை வரவேற்கிறேன்...//


    ரெம்ப நன்றி பாஸ்

    இந்த வலை உலகம் ரெம்ப புதுசா இருக்கு
    இவ்லோ நாலா மிஸ் பண்ணிடேன் எண்டு கவலையாவும் இருக்கு..

    பதிலளிநீக்கு
  16. //கந்தசாமி. a dit…
    இன்று பத்திரிக்கை தர்மம் என்பது எங்க தான் இருக்கு வியாபாரத்துக்காக என்னவும் செய்வார்கள் இவர்கள். //

    மறுக்க முடியாத உண்மை பாஸ்

    பதிலளிநீக்கு
  17. இருப்பினும் பிற இதழ்களுடன் ஓப்பிடும் போது நக்கீரன் பரவாயில்லை.

    பதிலளிநீக்கு
  18. //Thameez a dit…//

    வருகைக்கு நன்றி பாஸ்

    பதிலளிநீக்கு
  19. //Selva Ganesan a dit…
    இருப்பினும் பிற இதழ்களுடன் ஓப்பிடும் போது நக்கீரன் பரவாயில்லை.
    //

    வருகைக்கு நன்றி பாஸ்

    பட் நீங்க சொல்வது
    அவங்க ஆட்சிய விட என் ஆட்சி ஓகே தான் என்று கருணாநிதி சொல்லுற மாதிரி இருக்கு lol

    பதிலளிநீக்கு
  20. உங்கள் பத்திரிகை வியாபார தந்திரங்களில் ஒன்றா..?
    Post Comment





    You might also like:

    இன்று ஒரு தேவ(யானி)தைக்கு பிறந்த நாள்.. ஒரு ரசிகனின் ...
    மாறுகிறாரா ஜெயலலிதா...?
    தமிழ்மொழியும் வெளிநாடுவாழ் தமிழரும்..
    வெற்றிபெற்ற ஜெயலலிதா.. மூக்குடைபட்ட நக்கீரன். LinkWithin

    பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...