ஞாயிறு, மே 08, 2011

கல்லறையில் ஒரு தாஜ்மஹால்..

நேரம் இரவு 10.30 தாண்டிக்கொண்டிருந்தது, புயல் காற்றுடன் அடைமழையும் சேந்து ச்ச்..ர்ர்ர்ர் ர்ர்ர்.... என மரங்களை பேயாட்டம் ஆட்டி அந்த இரவை பயங்கரமாக்கி கொண்டிருக்க, இலங்கை வவுனியாவில் பூந்தோட்டம் செல்லும் அந்த சாலை ஆள் நடமாற்றம் இன்றி வெறித்தோடிப்போய் இருந்தது,  இரண்டு பக்கமும் இருக்கும் வயல்வெளிகளில் நிரம்பிய நீர் சாலைகளில் இருக்கும் குப்பைகளையும் இழுத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்க சாலையில் நினைவற்று விழுந்து கிடந்தான் சிவா. தன்னை உதைத்தபடி ஓடும் நீரின் வேகத்துக்கும் மழையின் உக்ரத்துக்கும் மெல்ல மெல்ல தன் சுய நினைவை பெற்றுக்கொண்டிருந்தான். தான் இருக்கும் நிலை மூளையில் உறைக்க மெதுமெதுவாக கண்களை திறந்து எழுந்திருக்க முயர்சித்தவன் தலையின் விண் விண் என்ற வலியால் மீண்டும் தலையை பிடித்தபடி முனங்கியபடி தரையில் சரிந்தான்.  அவன் மனக்கண்ணில் ஏதேதோ நினைவுகள் எல்லாம் முட்டி மோதிக்கொண்டிருந்தன,  பல உருவங்கள் அவனை உக்கிரமாக தாக்குவது போலவும் சில உருவங்கள் அவனை ஓடிவந்து தாங்கிப்பிடிப்பது போலவும் நினைவுகள்,  திடிரென அவன் மனசு எதையோ நினைத்து குழந்தைபோல விம்மி அழத்தொடங்கியது.


அவன் மனக்கண்ணில் ஒரு உருவம் ஒன்று அவனை ஆசையுடனும் ஏக்கத்துடனும் எதிர்பாத்தபடி காத்திருப்பது நிழலாடியது.. அந்த உருவத்தை உற்று நோக்கினான் அது.. அது காமாட்சியே தான் அவனை பெற்றெடுத்த தாய்,  பேய் மழைக்கு ஆட்டம் காணும் அவள் இருக்கும் அந்த குடிசை வீட்டினுள் அங்கங்கு மழை நீர் ஒழுகும் இடங்களுக்கெல்லாம் மண் சட்டிகளும் நெளிந்த பித்தளை சட்டிகளும் வெக்கப்பட்டு இருக்க அதில் விழும் மழை நீரின் சப்தம் சங்கீதமாய் ஒலித்துக்கொண்டிருந்தது. தசையில்லா எழும்புகளை தோல் மட்டும் மூடியிருப்பதைப்போன்ற அவள் உருவம்,  முழுதாக நரைத்த அவள் தலைமுடி வயதைக்காட்டிக்கொடுக்க,  அங்கங்கு கிழிந்து பொருத்தப்பட்ட சாயம்போன அவள் உடுத்தியிருந்த சேலை தன் பங்கிற்க்கு அவள் வறுமையையும் காட்டிக்கொடுத்தது.  இதையேதையும் சாட்டை செய்யாது திண்ணையில் குந்தியிருந்தபடி சுருட்டை புகைத்தபடி வெளியே மழையை வெறித்தபடி இருந்தால் காமாட்சி.  அவள் பளுப்பு கண்களில் ஏக்கமும் வெறுமையிம் அப்பிக்கொண்டிருந்தது.  சிவா தன் மனக்கண்ணில் தோன்றுவது நிஜமா.. நிழலா.. என பிரித்துப்பாக்க முடியாது திணறிக்கொண்டிருந்தான் அவன் உதடுகள் ஏதேதோ புலம்பிக்கொண்டிருந்தது தாயை நினைக்கும் போதெல்லாம் அவன் மனசு பதறும் அவள் அன்புதான் எவ்வளவு ஆழமானது எதையிம் எதிர்பாக்காத தாயன்பு எவ்வளவு விசித்திரமானதும் கூட,  ஒருவன் எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும் கூட அவன் அன்னையின் பார்வையில் மட்டும் நல்லவன் தானே.. ! பக்கத்து வீட்டு சரசக்கா தொடங்கி கடைசி தெரு பார்வதியக்கா வரை,  ஏண்டி காமாட்சி உன் புள்ளதான குடிச்சிட்டு உருபிடாம ரோட்டு வீதி சந்து பொந்து என ஒரு இடமும் மிச்சம் விடாம விளுந்து கிடக்கான் அவனை போய் தாங்கு தாங்கு என தாங்கிரியே உனக்கு புத்தியில்ல.. உன் பேச்சு கேட்காம அலையிறவன எதுக்குடி நீ பார்க்கனும் இந்த வயசில உன்ன உக்கார வைச்சு சோறு போடாம இப்பிடி குடிச்சிட்டு அலையிறான் நல்லாத்தான் புள்ள வளக்கிற போ.... உருப்படுவானா அவன் கட்டையில போறவன்....  சொல்லி முடிக்கும் முன்பே பத்திரகாளியாக மாறிவிடுவாள் காமாட்சி,  ஏய் நாவ அடக்கி பேசுங்கடி இல்ல இழுத்து வைச்சு வெட்டிடுவன் என் புள்ளைய பற்றி கதைக்கிறத்துக்கும் ஒரு யோக்கியம் வேணும்டி... அவன் என்னடி பண்ணிட்டான் அப்பிடி குடிக்கிறான் அவ்வளவுதான, அவன் மனசில இருக்கிற பாரம் யாருக்கெடி தெரியும் அது எனக்கு மட்டும்தாண்டி தெரியும்.. சொன்னா தாங்கமாட்டிங்கடி... நெஞ்சு வெடிச்சிரும்டி போங்கடி போங்க உங்க வேலைய பாருங்க  மூக்கை சீறி முந்தானையில் துடைத்தபடி தொடர்வாள். அந்த ஆண்டவனுக்கு கண்ணே இல்லே எனக்கு மட்டும் ஏன் இப்பிடி.. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என கருவேப்பிலை மாதிரி பெத்தேன் அது பொறுக்கல்ல அவனுக்கு தலையில் அடித்து ஒப்பாரி வைக்கும் அவளின் கோபம் சட்டென இடமாறும் பாவிமக சிறுக்கி இப்பிடி பண்ணிட்டாலே நல்லாத்தானே இருந்தான் இப்பிடி பண்ணிட்டு போயிட்டாளே என்னென்ன எல்லாம் பேசினா எல்லாமே என் புள்ளைய தவிக்க விட்டு போறத்துக்குதானா என் புள்ள என் கண் முன்னாலேயே சீரழியிரத பார்க்க வச்சிட்டாலே.. இத விட அவன உன் கூட கூட்டிபோயிருந்தாகூட சந்தோசப்பட்டிருப்பேனடி
பாவி பாவி இப்புடி பண்ணீட்டியே.. என அவள் பெருங்குரல் எடுத்து ஒப்பாரி வைப்பது தொடர்கதைதான். சில வேளைகளில் இதையெல்லாம் பாக்கும் போது அவனுடைய இதயம் நொருங்குவதைப்போல உணர்வான். அம்மா என்னை மன்னிச்சிடம்மா என கதறணும் போல இருக்கும் பாழாய்போன இந்த குடியை மறந்து அவளையும் மறந்து அம்மாவை ராணிபோல வைச்சு பாக்கணும் என்று நினைப்பான் எல்லாம் அந்த வினாடிகள் தான் பிறகு ஏதேதோ நினைவுகள் அவனை தாக்க வழமையான 'குடி'த்தனத்துக்கு வந்துவிடுவான்.


மழை உக்ரம் குறையாமல் இன்னும் வேகமெடுக்க தொடங்கி இருந்தது, சிவா மெதுவாக கையூண்டி எழுந்து சுற்றும் முற்றும் நோட்டமிட்டான் எங்கும் கரிய இருளின் ஆதிக்கமே.. விண் விண் என வலித்த தலையை மெதுவாக தொட்டுப்பார்த்தான் வீங்கிய பகுதியில் இருந்து இரத்தம் இன்னும் கசிந்து கொண்டிருந்தது, சற்று முன் நிகழ்ந்தவை அவன் கண்முன் நிழலாடியது. அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு நெடுனேரமாக வீதியில் விழுந்து கிடந்தவன் மெதுவாக எழுந்து வீதியில் நடக்க தொடங்கினான்.  இருட்டில் இரண்டு கரிய உருவங்கள் அவனை வழி மறித்தன, டேய் யாரு.... கொட்டியா...? எடு எடுடா பாஸ்ஸ.. டேய் நாயே எடுடா.. தமிழ் சிங்களம் கலந்த மொழிகளில் அந்த உருவங்கள் மிரட்ட, சற்று நேரத்தில் அவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டுகொண்டவன் உக்ரமாணான். டேய் என்னடா கேட்ட பாஸா..? யாருக்கடா பாஸ் .. என் நாட்டில் இருக்க நீ என்கிட்ட பாஸ் கேக்குறியா ..? ஏன்டா ஏன் இப்புடி இருக்கீங்க ரத்த வெறி பிடித்து அலையிறிங்க இந்த மண்ணுள்ள அப்புடி என்ன தாண்டா இருக்கு தோண்ட தோண்ட கல்லும் மண்ணும் தானே வருது இதுக்கு போய் ...! இத்தனை பேர காவு வாங்கிட்டிங்களே நியாமாடா..? உங்களால்தான் உங்களால்தான் என காவேரி போய்ட்டா... போயிட்டாடா போய்ட்டா, பச்ச மண்ணுடா அவ, என்ன விட்டா  அவளுக்கு வேற ஒண்ணுமே தெரியாதுடா அவளப்போய்... நாசம் பண்ணிட்டிங்களேடா நீங்க நல்லா இருப்பிங்கலாடா..? சொல்லு சொல்லுடா அவர்கள் இருவரையும் புடித்து இவன் உலுக்க..  டேய் கொட்டி என்ன தையிரியம் இருந்தா எங்க மேலேயே கை வைப்ப..? ஒருவனுடைய கையில் இருந்த துப்பாக்கியின் பின் பக்கம் இவன் தலையை சராமரியாக தாக்க தலையை கையால் பிடித்தபடி வேர் அற்ற மரம் போல நிலத்தில் சாய்ந்தான் சிவா.

மெதுவாக எழுந்து நடக்க தொடங்கினான் சிவா.
மழையினால் பாயும் வெள்ளத்தின் வேகத்துக்கு அவனுடைய அடிவாங்கிய உடம்பு தடுமாற, அவன் கால்கள் மட்டும் அவன் வழமையாக போகும் மயானத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.
மழை நீரினால் இழுத்து வரப்படட சருகு பூக்கள் எல்லாம் அவளை சூழ்ந்து அலங்கரித்து இருக்க காவேரி அமைதியாக கல்லறையில் தூங்கி கொண்டிருந்தாள். கல்லறையின் அருகே அமர்ந்தவனின் விரல்கள் அவளை மெதுவாக வருடியபடி, காவேரி.. எப்புடி இருக்க.., காவேரி என்னப்பாக்கமா ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டியே இப்போ எப்புடி..??!
காவேரி எப்புடிடா  என்ன விட்டுட்டு உன்னால போக முடிஞ்சுது.. சொல்லு காவேரி சொல்லு..! என்ன தவிக்க விட்டுட்டு போக உனக்கு எப்புடி மனசு வந்திச்சு..  நீ இல்லாம நான் எப்புடி ஆயுட்டேன் பாரு காவேரி..   மண்ணு மண்ணு எண்டு உயிரை எடுக்குற இந்த நாடு நமக்கு வேணாம்டி நானும் உன் கூட வந்திடுறன்.. காவேரி மாட்டேன்னு மட்டும் சொல்லிராத தயவு செய்து என்னையும் உன் கூட கொண்டு போயிரு காவேரி ப்ளீஸ் என்னையும் உன் கூட கொண்டு போயிரு..  அவளை கட்டிபிடித்த படி கல்லறையில் தலையை வேகமாக மோத தொடங்கினான் சிவா. அடிபட்ட இடத்தில் மீண்டும் மீண்டும் அடிபட தலையில் இருந்த ஆறாக பெருக்கெடுத்த இரத்தம் கல்லறையை தழுவியபடி ஓடும் நீரோடு கலந்து அந்த கல்லறையை செந்நிறமாக்கிக்கொண்டிருந்தது.
               
                            ***


14 கருத்துகள்:

  1. நேரம் இரவு 10.30 தாண்டிக்கொண்டிருந்தது, புயல் காற்றுடன் அடைமழையும் சேந்து ச்ச்..ர்ர்ர்ர் ர்ர்ர்.... என மரங்களை பேயாட்டம் ஆட்டி அந்த இரவை பயங்கரமாக்கி கொண்டிருக்க, இலங்கை வவுனியாவில் பூந்தோட்டம் செல்லும் அந்த சாலை ஆள் நடமாற்றம் இன்றி வெறித்தோடிப்போய் இருந்தது, இரண்டு பக்கமும் இருக்கும் வயல்வெளிகளில் நிரம்பிய நீர் சாலைகளில் இருக்கும் குப்பைகளையும் இழுத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்க சாலையில் நினைவற்று விழுந்து கிடந்தான் சிவா.//

    இயற்கை வர்ணனை அருமையாக வந்திருக்கிறது, கதையின் போக்கிற்கமைவாக மண் வாசனையுடன் கலந்த வர்ணனைகள் அழகு சேர்க்கின்றன.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. //Mahan.Thamesh a dit…
    ARUMAIYAGA ULLATHU NANBA//

    ரெம்ப தேங்க்ஸ் நண்பா.

    பதிலளிநீக்கு
  4. //நிரூபன் a dit…
    இயற்கை வர்ணனை அருமையாக வந்திருக்கிறது, கதையின் போக்கிற்கமைவாக மண் வாசனையுடன் கலந்த வர்ணனைகள் அழகு சேர்க்கின்றன.
    //

    உண்மையாவா அண்ணா
    ரெம்ப தேங்க்ஸ்
    எல்லாம் காதலிய வர்ணித்த பழக்க தோஷம் அண்ணா
    lol

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா12:35 PM, மே 09, 2011

    ஆரம்பத்திலிருந்தே அருமையாக உள்ளது எழுத்துக்கள்.இன்னும் எத்தனை காவேரிகள் எம் மண்ணிலே....((

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. //கந்தசாமி. a dit…
    ஆரம்பத்திலிருந்தே அருமையாக உள்ளது எழுத்துக்கள்.இன்னும் எத்தனை காவேரிகள் எம் மண்ணிலே....((
    //

    நன்றி நண்பா
    உண்மைதான் அவர்களை நினைக்கும் போதே மனசு கனக்கும்,
    நாம் வாங்கி வந்த வரம் அதுதான் போல் தோழா.

    பதிலளிநீக்கு
  8. கதை அருமையோ அருமை நண்பா

    பதிலளிநீக்கு
  9. // Mathuran a dit…
    கதை அருமையோ அருமை நண்பா//

    ரெம்ப நன்றி நன்பா..
    உங்க பாராட்டு ரெம்ப சந்தோஸமா இருக்கு ^_^

    பதிலளிநீக்கு
  10. அருமையான படைப்பு
    முதல் கதை இது என்றால்
    உண்மையில் ஆச்சரியம்தான்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. //Ramani a dit…
    அருமையான படைப்பு
    முதல் கதை இது என்றால்
    உண்மையில் ஆச்சரியம்தான்
    தொடர வாழ்த்துக்கள்
    //

    ரெம்ப நன்றி அண்ணா
    உங்கள் வருகைக்கும், உங்கள மாதிரி பெரியவர்களின் வாழ்த்து சந்தோசத்தைக் கொடுக்குது அடிகடி வாங்க அண்ணா.

    பதிலளிநீக்கு
  12. பின்னூட்டம் போடும் போது வரும் ஆங்கிலத்தை,
    வேர்ட் வெரிப்பிக்கேசனை நீக்கி விடவும் சகோ.

    பதிலளிநீக்கு
  13. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...