செவ்வாய், ஆகஸ்ட் 30, 2011

அம்மணமான கருணாநிதி(நரி)யும் ஜெயலலிதாவின் அதிரடியும்.

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார் அதை தொடர்ந்து பேசியவர், மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படவுள்ளது தமிழக மக்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மக்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் இந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இவ் முடிவு
எடுக்கப்படுகிறது என்று அறிவித்தார். இது உண்மையில் மிக பெரிய விடயம், ஜெயலலிதாவிடம் அந்த மூவரையும் காப்பாற்றுங்கள்  காப்பாற்றுங்கள் என்று கோரிக்கை மேல் கோரிக்கை வைத்தவர்கள்  
கூட இதை எதிர் பார்த்து இருக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை.
ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க
வேண்டும் என்று கோரி ஜெயலலிதா  சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தது பாராட்ட தக்க  மிகப்பெரிய விடயம் இது மிகப்பெரிய சாதனை என்பதை விட தமிழ் உணர்வாளர்களின் ஒட்டுமொத்த அபிமானத்தையும்
ஒருங்கே சம்பாதித்து விட்டார் ஜெயலலிதா. ஏனெனில் மத்தியஅரசு ஆதரவுடன் ஜனாதிபதியால் உறுதிப்படுத்தபட்ட மரணதண்டனையை ஒரு மாநில முதல்வர் குறைப்பதோ நிறுத்தி வைப்பதோ மிக சிக்கலானது.
அதைவிட அவர்கள் மீது சாட்டபட்டுள்ள குற்றம் சாதாரணமானது
அல்ல ஒரு பிரதமரை  அவர் நாட்டில் வைத்தே கொலை செய்த குற்றம்.
இது ஒரு தவறான  குற்றசாட்டு  அவர்கள் நிரபராதி என்பது உண்மையாக
இருக்கும் பட்சத்திலும் பல விசாரணைகள் நடத்தப்பட்டு நீதிவான்களால்
தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், பின்பு  உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள்  மறு ஆய்வு மனு தாக்கல் செய்தாபோதும். இதனையும் அன்று உச்ச நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது,  பின்  தமிழக ஆளுநருக்கு கருணை மனுக்களை சமர்ப்பித்தார்கள் ஆனால்  தமிழக ஆளுநரும்   இவர்களின் கருணை மனுக்களை நிராகரித்தார். அதன் பின்பு பேரறிவாளன் முருகன் சாந்தன் 
ஆகிய  மூன்று நபர்களும் குடியரசுத் தலைவருக்கு அளித்த கருணை மனுக்களை   இந்தியக் குடியரசுத் தலைவரும் நிராகரித்த நிலையில்   அதன் பின்பு ஒரு மாநில முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிடுவது என்பது எத்தகைய சிக்கல்களை உருவாக்கும்  என்பது நாம் அறியாதது அல்ல.
இந்த  உண்மையைத்தான் முந்தைய ஜெயலலிவாவின்  தன்னால் எதுவும்
செய்யமுடியாது என்ற அறிக்கை சொல்லிப்போனது. இந்நிலையில்
தமிழ் உணர்வாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஜெயலலிதாவால்
சட்டபேரவையில் கொண்டு வரப்பட்ட இந்த  தீர்மானமானது ஜெயலலிதாவின்  அரசியல் வாழ்க்கையில் ஒரு மைல் கல்,  மீண்டும்
ஒருமுறை மனிதாபிமானத்துடன் தன் துணிச்சலை நிரூபித்து உள்ள ஜெயலலிதாவுக்கு பேரறிவாளன்  தாயார்,  சீமான்,  வைகோ போன்றவர்களும்  பல தமிழ் உணர்வாளர்களும் தெரிவிக்கும் பாராட்டுகளுடனும் என் பாராட்டுக்களையும் தெரிவிக்கும் இந்த நேரத்தில் கருணாநிதி பற்றி பேசுவது தேவையற்றதுதான். ஆனாலும் இந்த உத்தமபுத்திரன் போல் வேஷம் போடும் கருணாநிதியின் உண்மை முகத்தின்  சில  பகுதிகளையேனும்  காட்டியே  ஆக வேண்டும்.புள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது கருணாநிதிக்கு. ஒன்றும் புதுசு இல்லைத்தான். ஆனால் இந்த மூவர் மரணதண்டனை விடயத்தில் தன் கபட நாடகத்தை அரங்கேற்றுவதுதான்  மன்னிக்க முடியாதபடி உள்ளது.  நில அபகரிப்பின் நியாயமான நடவடிக்கையில் திமுகாவின் முக்கிய புள்ளிகளே உள்ளே போக வெகுண்டெழுந்த கருணாநிதி மிக பெரிய பேரணி நடத்தி தன் எதிர்ப்பை காட்டுகிறார் அதே வேகத்தை ஏன் இந்த மூவருக்காகவும் காட்டி இருக்க கூடாது. சரி பேரணிதான் நடத்த வேண்டாம் "அவர்களை காப்பாற்றுங்கள்" என்ற அறிக்கைதான் விட்டார் அத்துடன் அமைதியாக இருந்து இருக்க வேண்டியதுதானே.. இதிலுமா..  ஜெயாவை சாடி உன் கீழ்த்தரமான அரசியல் நாடகத்தை அரங்கேற்ற வேண்டும். இந்த வயது போன நேரத்தில் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா...?? இந்த மூவரின் தூக்கு தண்டனை யாரால் உறுதி செய்யப்பட்டது என்ற மனச்சாட்சி கூடவா உறுத்தவில்லை.

அப்பாக்கு பிள்ளை தப்பாமல் பிறந்து இருக்கு, அப்பா நடிகன் என்றால்
மகன் மகா நடிகனாக அல்லவா இருக்கான், ஜெயலலிதாவின்  தமிழர் மேலான போலிப்பாசம் வெளுத்துவிட்டதாம், சொல்லுறாரு ஸ்டாலின்.
சோனியாவின் புடைவை தலைப்பின் பின்னால் நிக்கும் இவர்கள்
அதை சொல்லுகிறார்களாம். ஏன்ய்யா.... மூன்று உயிர்களில் பதைபதைப்பில்
நின்றுகொண்டு அங்கயும் உங்களுக்கு ஆதாயம் தேடி அறிக்கைவிட
உடம்பு கூசாவில்லையா??  உண்மையில் அக்கறை உள்ளவர்கள்தான் என்றால் கடந்த ஆட்சி உங்கள் கையில் தானே இருந்தது. சொத்து
சேகரிப்பதில் காட்டிய ஆர்வத்தை அவர்களின் கருணை மனுக்களிலும்
காட்டி இருக்கலாம் இல்லையா...?? பேசாமால் இருந்தாக் கூட பராவாயில்லை அவர்களின் மரண தண்டனைக்கு ஆதரவு வழங்கி
சோனியாவை குஷி படுத்திவிட்டு இப்போது ஏன் இந்த போலி வேஷம்.
புள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் இந்த நரிப்புத்தி எதற்கு.
தமிழர்கள் முன்னால் அம்மணமான பின்னுமா உங்கள் வேஷம் இன்னும் கலையவில்லை என்று நம்புகிறீர்கள்..??

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின்  மரணதண்டனைக்கு  ஆதரவு  அளித்த அவர்களின் கருணை மனுவை நிராகரிக்கலாம் என்று
 19.4.2000 அன்று அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவு எடுக்கப்பட்டது.

"தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நான்கு கைதிகளில் ஒருவரான நளினியின் பெண் குழந்தை அனாதை ஆகி விடும் என்று முதல்வர் தெரிவித்த கருத்திற்கிணங்க, நளினி ஒருவருக்கு மட்டும் கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும், மற்றவர்களைப் பொறுத்த வரையில் அவர்களது கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை முடிவெடுத்தது."

"கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை ஏற்று ஆளுநர் 21.4.2000 அன்று ஒப்புதல் அளித்தார். அதன்படி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது."



68 கருத்துகள்:

  1. தமிழ் 10 ஒட்டு போட்டுடேன் நண்பா ......

    பதிலளிநீக்கு
  2. மச்சி வென்றது மக்கள் போராட்டம் தான். அதன் பின் தான் அவரின் உந்த தீர்மானம்.

    இதற்க்கு முன் இவர்களின் தண்டனையை ரத்து செய்ய தனக்கு அதிகாரம் இல்லை என்று ஒரு ஆண்ட புளுகை தூக்கி போட்டா, ஆனால் இவவை வென்றது மக்கள் போராட்டம் மட்டும் தான்,

    பதிலளிநீக்கு
  3. இந்த தூக்கு தண்டனைக்கு எதிராகவும் மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாகவும் சென்னை உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கப்படும் வரை ஜெயா குரல் கொடுக்கவில்லையே. வியயகாந்த் கூட இந்த தூக்கு தண்டனைக்கு எதிராக தன் கருத்தை சொல்லியிருந்தார்.

    பதிலளிநீக்கு
  4. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஜெயா பேசியது- “ ராஜீவ் காந்தி கொலைவழக்கு குறித்து சி.பி.ஐ விசாரித்தபோது, எனது தலைமையிலான தமிழக அரசு அதற்கு முழு ஒத்துழைப்பையும் நல்கியது. நளினி உட்பட இன்னும் சிலருக்கு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் மரணதண்டனை வழங்கப்பட்டது. இதை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதிபடுத்தியது. உச்சநீதிமன்றமும் 1999 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மரணதண்டனையை உறுதி செய்தது. உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகியும், மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை. மாறாக, நளினிக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை ஆயுள் தண்டனையாக ஆக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு நளினியை காப்பாற்றியது படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவியுமான சோனியா காந்தி. மேற்படி நளினியை, கொலை செய்யப்பட்ட முன்னாள் பாரத பிரதமரின் மகள் ப்ரியங்கா சிறையில் சென்று பார்கிறார். இப்படி பொய் பார்க்கலாமா? அது அடுக்குமா? இப்போது நளினி ஏதோ உரிமைக்காக போராடுவதுபோல் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு போடுகிறார். உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் நடக்காதது எல்லாம் இந்தியாவில் நடக்கிறது! இது சோனியா மற்றும் பிரியங்கா ஆகியோருடைய சொந்த பிரச்சனை அல்ல. அவர்களுடைய குடும்ப பிரச்சனை அல்ல. எது ஒரு நாட்டு பிரச்சனை. ஒரு முன்னாள் பாரத பிரதமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்த நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். யாருடைய தனிப்பட்ட உரிமையும் இதில் இல்லை. இப்போது தமிழகத்தில் எனது தலைமையிலான ஆட்சி நடைபெற்றுகொண்டிருந்தால், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசியிருப்பவர்களை நிச்சயமாக கைது செய்திருப்பேன்.//////


    எல்லாம் அரசியல் தான் நண்பா (

    பதிலளிநீக்கு
  5. விடுங்க பாஸ்! கலைஞர் பற்றித் தெரிந்துதானே! எதிர்க்கட்சியாக இருக்கும்போதுமட்டும் திடீர்ப்பாசம் வந்துவிடும்!

    பதிலளிநீக்கு
  6. "... ஒரு பிரதமரை அவர் நாட்டில் வைத்தே கொலை செய்த ..."

    When killed he was "Ex-Prime minister"
    Just another politician thats it.

    பதிலளிநீக்கு
  7. காரசாரமான பதிவாயினும்
    தங்கள் தரப்பு கருத்து சரியானதுதான்
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம.5

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா2:03 PM, ஆகஸ்ட் 30, 2011

    politics,politics,that is the matter. good post.

    பதிலளிநீக்கு
  9. கோபத்தை கொட்டி விட்டீர்கள். தேவையான, எல்லாருக்கும் இருக்கிற கோபம்.

    பதிலளிநீக்கு
  10. stalin சொன்னது…
    தமிழ் 10 ஒட்டு போட்டுடேன் நண்பா ......

    ஹீ ஹீ, தேங்க்ஸ் நண்பா

    பதிலளிநீக்கு
  11. <<<அருள் கூறியது...
    தூக்குதண்டனை-சட்டமன்ற தீர்மானம்: முதலமைச்சருக்கே அதிகாரம் இருக்கும் போது நடுவண் அரசிடம் கெஞ்சலாமா?
    <<<

    உண்மைதான் ஆனாலும் அதிவரும் சிக்கல்களை சிந்தித்தாரோ என்னவோ
    தேங்க்ஸ் பாஸ் உங்கள் முதல் வருகைக்கு

    பதிலளிநீக்கு
  12. <<<!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
    ரைட்டு..
    <<<<

    ஆதரவுக்கு நன்றி பாஸ்

    பதிலளிநீக்கு
  13. <<<ஜீ... கூறியது...
    விடுங்க பாஸ்! கலைஞர் பற்றித் தெரிந்துதானே! எதிர்க்கட்சியாக இருக்கும்போதுமட்டும் திடீர்ப்பாசம் வந்துவிடும்!<<<

    உண்மைதான் பாஸ், அந்தாளின் அக்டிங் தெரிந்ததே
    ஆனாலும் உந்த ஓவர் அக்டிங் தானே கடுப்பாக்குது மனுசனை.

    பதிலளிநீக்கு
  14. <<<thiru கூறியது...
    "... ஒரு பிரதமரை அவர் நாட்டில் வைத்தே கொலை செய்த ..."

    When killed he was "Ex-Prime minister"
    Just another politician thats it.<<<<


    தேங்க்ஸ் பாஸ்

    பதிலளிநீக்கு
  15. <<Ramani கூறியது...
    காரசாரமான பதிவாயினும்
    தங்கள் தரப்பு கருத்து சரியானதுதான்
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம.5<<

    தேங்க்ஸ் பாஸ், உங்களை போன்று புரிந்தவர்கள் இருப்பதால்தான் எழுதும் ஆசையே வருகிறது :)

    பதிலளிநீக்கு
  16. <<<பெயரில்லா கூறியது...
    politics,politics,that is the matter. good post.<<
    <<

    நன்றி...

    பதிலளிநீக்கு
  17. <<தமிழ் உதயம் கூறியது...
    கோபத்தை கொட்டி விட்டீர்கள். தேவையான, எல்லாருக்கும் இருக்கிற கோபம்.
    <<<<

    நன்றி பாஸ்

    பதிலளிநீக்கு
  18. <<<நிகழ்வுகள் கூறியது...
    கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஜெயா பேசியது- “ ராஜீவ் காந்தி கொலைவழக்கு குறித்து சி.பி.ஐ விசாரித்தபோது, எனது தலைமையிலான தமிழக அரசு அதற்கு முழு ஒத்துழைப்பையும் நல்கியது. நளினி உட்பட இன்னும் சிலருக்கு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் மரணதண்டனை வழங்கப்பட்டது. இதை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதிபடுத்தியது. உச்சநீதிமன்றமும் 1999 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மரணதண்டனையை உறுதி செய்தது. உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகியும், மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை. மாறாக, நளினிக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை ஆயுள் தண்டனையாக ஆக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு நளினியை காப்பாற்றியது படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவியுமான சோனியா காந்தி. மேற்படி நளினியை, கொலை செய்யப்பட்ட முன்னாள் பாரத பிரதமரின் மகள் ப்ரியங்கா சிறையில் சென்று பார்கிறார். இப்படி பொய் பார்க்கலாமா? அது அடுக்குமா? இப்போது நளினி ஏதோ உரிமைக்காக போராடுவதுபோல் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு போடுகிறார். உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் நடக்காதது எல்லாம் இந்தியாவில் நடக்கிறது! இது சோனியா மற்றும் பிரியங்கா ஆகியோருடைய சொந்த பிரச்சனை அல்ல. அவர்களுடைய குடும்ப பிரச்சனை அல்ல. எது ஒரு நாட்டு பிரச்சனை. ஒரு முன்னாள் பாரத பிரதமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்த நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். யாருடைய தனிப்பட்ட உரிமையும் இதில் இல்லை. இப்போது தமிழகத்தில் எனது தலைமையிலான ஆட்சி நடைபெற்றுகொண்டிருந்தால், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசியிருப்பவர்களை நிச்சயமாக கைது செய்திருப்பேன்.//////


    எல்லாம் அரசியல் தான் நண்பா (<<<


    நண்பா உங்கள் ஆதங்கம் கருத்து எல்லாமே மிக சரியே..
    ஆனாலும், பழையது பேசுவதில் என்ன நன்மை குற்றவாளி கடைசிவரை அப்படியே தான் இருப்பானா?? திருந்தவே மாட்டானா
    மாற்றம் ஒன்றுதான் மாற்றம் இல்லாதது நண்பா
    நல்லது செய்கிறார்.... நம்புவோம் பாராட்டுவோமே.....

    பதிலளிநீக்கு
  19. <<<நிகழ்வுகள் கூறியது...
    இந்த தூக்கு தண்டனைக்கு எதிராகவும் மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாகவும் சென்னை உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கப்படும் வரை ஜெயா குரல் கொடுக்கவில்லையே. வியயகாந்த் கூட இந்த தூக்கு தண்டனைக்கு எதிராக தன் கருத்தை சொல்லியிருந்தார்.<<<


    எல்லாத்தையும் உடனேயே செய்து முடிக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால் எப்படி???
    அவருக்கும் அதுவும் முதல்வர் பதவியில் இருப்பவர் அவசரப்பட முடியுமா??
    நிதானமாகத்தானே யோசித்து சட்டங்களை ஆராய்ந்து முடிவெடுக்க முடியும்.

    பதிலளிநீக்கு
  20. ஏன் முன்பு அத்தகைய அறிக்கை விட்டார், பின்பு ஏன் இந்த தீர்மானம் கொண்டு வந்தார் என்ற கேள்விக்கு ஜெயாவின் இந்த அறிக்கையிலேயே பதில் உள்ளது,

    தமிழ்நாடு முதலமைச்சர்
    ஜெ ஜெயலலிதா...

    சட்டமன்றப் பேரவையில், சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியமைக்குமாறு இந்தியக் குடியரசுத் தலைவரை வலியுறுத்தும் தீர்மானத்தினை முன்மொழிந்து ஆற்றிய உரை :



    ’’இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 72-ல் தனக்குள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி, திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மேதகு குடியரசுத் தலைவர் நிராகரித்ததையடுத்து எழுந்த சூழ்நிலை குறித்தும், இந்தப் பிரச்சனையில், தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் சட்டப்படி எனக்குள்ள அதிகாரம் குறித்தும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் ஓர் அறிக்கையினை இந்த மாமன்றத்தில் நேற்று நான் அளித்தேன்.






    அந்த அறிக்கையில், திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை முதலமைச்சராகிய நானோ, தமிழ்நாடு அரசோ, மாநில ஆளுநரோ மீண்டும் பரிசீலனை செய்ய முடியாது என்பதை தெளிவுபட நான் கூறியிருந்தேன்.



    மத்திய அரசு இந்திய அரசமைப்புச் சட்ட பிரிவுக்கூறு 257(1)-ன் படி, கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கூறு 72-ன்படி, குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட பின், அதே பிரச்சனையை மாநில ஆளுநர் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கூறு 161-ன் படி எடுத்துக் கொள்ள முடியாது என்றும், மீண்டும் குடியரசுத் தலைவர் தான் கருணை மனுவை மறுபரிசீலனை செய்ய இயலும் என்றும் உத்தரவிட்டதை சுட்டிக் காட்டினேன்.

    இந்தச் சூழ்நிலையில், மேற்படி மூவருக்கும் தூக்கு தண்டனை விரைவில் நிறைவேற்றப்பட்டு விடும் என்று தமிழக மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் மேற்படி மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றன. எனக்கும் இது குறித்து கோரிக்கைகள் வந்துள்ளன.



    எனவே, தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் பின்வரும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.



    தீர்மானம்

    "தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேதகு இந்தியக் குடியரசுத் தலைவரை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது."



    முடிவுரை:

    தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அமைகிறேன். ’’

    பதிலளிநீக்கு
  21. <<<<<நிகழ்வுகள் கூறியது...
    மச்சி வென்றது மக்கள் போராட்டம் தான். அதன் பின் தான் அவரின் உந்த தீர்மானம்<<<<<



    உண்மைதான் இதற்க்கு மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் அவர்களுக்கு பயந்துதான் ஜெயா இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார் என்று யாராவது சொன்னால் அது மிக மிக தவறு. நினைத்தை விட்டு யாருக்காகவும் பின்வான்காதவர் ஜெயா. அவர் நல்லது செய்தாலும் கேட்டது செய்யதாலும் அதற்க்கு மூலக்
    காரணம் அவர் மட்டுமே.. இதுதான் ஜெயலலிதா. :))

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் அபையோரே,
    மற்றும் நம்ம சுட்டிப் பையன் துஸி அவர்களே.
    என்ன நடக்கிறது இங்கே?

    பென்னாம் பெரிய பின்னூட்டம் எல்லாம் போட்டுத் தாக்கிறீங்க,
    இருங்க பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  23. அம்மணமான கருணாநிதி(நரி)யும் ஜெயலலிதாவின் அதிரடியும்//


    ஏனய்யா, மஞ்சள் துண்டை நாய் இழுத்துக் கொண்டு போயிட்டா.

    பதிலளிநீக்கு
  24. திமுகாவின் முக்கிய புள்ளிகளே உள்ளே போக வெகுண்டெழுந்த
    கருணாநிதி மிக பெரிய பேரணி நடத்தி தன் எதிர்ப்பை காட்டுகிறார்
    அதே வேகத்தை ஏன் இந்த மூவருக்காகவும் காட்டி இருக்க கூடாது.
    சரி பேரணிதான் நடத்த வேண்டாம் "அவர்களை காப்பாற்றுங்கள்"
    என்ற அறிக்கைதான் விட்டார் அத்துடன் அமைதியாக இருந்து இருக்க வேண்டியதுதானே.. இதிலுமா.. ஜெயாவை சாடி உன் கீழ்த்தரமான
    அரசியல் நாடகத்தை அரங்கேற்ற வேண்டும். //

    ஆகா....இது தானா மேட்டர்.
    கலைஞரின் உள் நோக்கு அரசியல், சந்தர்ப்பம் பார்த்து தான் நல்ல பேர் எடுக்கச் செய்யும் முயற்சி இது என்பதனை நன்றாக எழுதியிருக்கிறார் நம்ம துஸி...


    கலைஞர் அம்மா அடங்கினா,
    இதுவும் செய்வார், இன்னமும் செய்வார்.

    பதிலளிநீக்கு
  25. கலைஞருக்குச் சாட்டை அடி கொடுத்திருக்கிறீங்க துஸி..

    சுறணையற்ற்அ ஜென்மங்களுக்கு இதெல்லாம் எப்படி உறைக்கும்?

    பதிலளிநீக்கு
  26. //அம்மணமான கருணாநிதி(நரி)யும் ஜெயலலிதாவின் அதிரடியும்//

    யோவ் கருணாநிதி மேலான உங்கள் ஆதங்கத்தை தலைப்பிலேயே காட்டிவிட்டீர்கள்.எனக்கு தலைப்பை பார்க்க சிரிப்பு சிரிப்பா வருது.

    எது எப்படியோ அந்த மூன்று உயிர்களும் காப்பாற்றப்பட்டால் சரிதான்.

    பதிலளிநீக்கு
  27. பெயரில்லா3:24 PM, ஆகஸ்ட் 30, 2011

    ஜெயாவா இப்படி... என்னால நம்ப முடியவில்லை...

    நல்லா எழுதியிருக்கீங்க துஷி...

    பதிலளிநீக்கு
  28. சார்! அம்மாவோட இந்த அதிரடி முடிவுனால நாம எம்புட்டு சந்தோசமா இருக்கோம்! அந்த மூணு உயிரையும் காப்பாத்தின திருப்தியே போதும் சார்!

    பதிலளிநீக்கு
  29. சரியான தலைப்பு. அம்மா நல்லா கணக்கு போட்டுத்தான் காய் நகர்த்துறாங்க.. இதுக்கு நம்ம புரட்சி பதிவர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  30. தூக்கு தண்டனை தள்ளி வைப்பு...சந்தோஷமான செய்தி...
    இதில் ஜெயலலிதாவின் பங்கு இருக்கும் எனின் நன்றி...

    பதிலளிநீக்கு
  31. ஜெயாதான் ஒவ்வொரு முறையும் ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டபடவர்களையும் திமுகவையும் இணைத்து பேசியவர், அதனாலதான் , இந்த விஷயத்தில் இதுவரை ஒரு அளவுக்குமேல் , வெளிபடையாக திமுகவால் செய்யமுடியவில்லை. நளினியை துக்கு தண்டனையில் இருந்து விடுவித்து ஆயுள் தண்டனையாக மாற்றியதும் திமுக ஆட்சியில்தான்.

    Apr. 25, 2000:

    The Tamil Nadu Governor, Ms. Fathima Beevi commutes the death sentence of Nalini, accused in the Rajiv assassination case, to life sentence.

    http://www.indianexpress.com/news/karunas-remarks-condone-rajiv-killers-jaya/642898/
    AIADMK leader Jayalalithaa today alleged that Tamil Nadu Chief Minister M Karunanidhi’s remarks on slain LTTE chief V Prabhakaran was an open acknowledgement that he condoned the assassination of Rajiv Gandhi and asked the Congress to realise the “true mindset” of its alliance partner.

    http://www.indianexpress.com/news/on-last-day-tn-parties-aim-their-channels-a/3953/
    With just minutes left for campaigning to end, Jaya TV beamed what it termed ‘a startling expose’ linking DMK president M Karunanidhi to the killers of Rajiv Gandhi in a 22-minute film titled Kalaignarin Kaimaru.

    மேலும் 1996 - 2001 திமுக ஆட்சியில் தான், சற்று வெளிபடையாக ராஜீவ் வழக்கில் குற்றம்சட்பட்டவர்களின் நீதிமன்ற வழக்குக்காக அதிக அளவில் நிதி சேகரிப்பு போன்றவை நடைபெற்று, சுப்ரீம் கோர்டில் பலர் விடுவிக்கப்பட்டனர், தண்டனைகள் குறைக்கப்பட்டன. அந்தகால கட்டங்களில், பல ஊர்களில் சுபவீ, அடையாறு நகலகம் அருணாசலம், நெடுமாறன் போன்றோர் சில விழாக்களை நடத்தி நன்கொடை பெற்று வழக்கை நடத்தினார்கள். நானும் அபோது சில கூடங்களில் கலந்துகொண்டு, என்னாலான சிறு நிதியை அளித்திருக்கிறேன். அபோது "இனி" என்ற பத்திரிகை ஆண்டு விழா திநகர் ஜெர்மன் ஹாலில் நடைபெறும்..

    நினைத்துபாருங்கள், அப்போது ஜெயா ஆட்சி நடைபெற்று இருந்தால், வழக்குக்காக நிதி சேகரித்த அனைவரும் தடா சட்டத்தில் உள்ளே தள்ளி, ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் மாரண தண்டனை பெற்றுத்தந்து இருபார். 1996 - 2001 காலத்திய திமுக ஆட்சியின் மறைமுக, கண்டும் காணாத ஆதரவில்தான் நிதி சேகரிப்பு போன்றவை நடைபெற்று, சுப்ரீம் கோர்டில் பலர் விடுவிக்கப்பட்டனர், தண்டனைகள் குறைக்கப்பட்டன.

    2000 ஆம் ஆண்டில் நளினிக்கு தூக்கை குறைத்து , ஆயுள் தண்டனையாக மாற்றியதும் திமுக ஆட்சியில் தான்..2000 ஆம் ஆண்டில்லிருந்து , மற்ற மூவர் இப்பொது மேலும் 11 ஆண்டுகள் தனிமை சிறையில் கழித்து, மொத்தம் 20 ஆண்டுகள் தண்டனையை அனுபவித்தபின் இப்பொது தூக்கு என்பதைத்தான் கருணாநிதி எதிர்க்கிறார்..அப்போது மாநில ஆளுநர் கருணைமனுவை நிராகரித்தாலும், மேல் முறையீடாக சுப்ரீம் கோர்ட் மற்றும் ஜனாதிபதி இருந்ததாலும், ஒருகால் அவர்களும் நிராகரித்தல் , பின் மீண்டும் மாநில அரசுக்கு அதை ஏற்கவோ நிரகரிகவோ முன் உதாரணங்கள் இருப்பதால், அபோது திமுகவின் மேல் ராஜீவ் கொலைகுற்றசட்டும் , ஜெயின் கமிஷன் போன்ற சதி வழக்குகளும் இருந்ததால், பின்னல் இந்த கருணை மனுக்கள், மாநில அரசுக்கு வரும்போது பார்த்துகொள்ளலாம் என்று திமுக நினைத்திருக்கலாம்...ஆனால் இப்படி ஜெயா வந்து கெடுத்துவிடுவார் என்று யாருக்கு தெரியும்,..

    பதிலளிநீக்கு
  32. நளினியின் தூக்கு, ஆயுள் தண்டனை ஆக கருணாநிதி ஆட்சில் குறைக்கப்பட்டதை எதிர்த்து ஜெயா கக்கிய விஷம்....

    கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் மன்னித்தாலும் நான்
    மன்னிக்க மாட்டேன் என்ற கருணையற்ற எண்ணம் கொண்ட
    ஜெயலலிதா இன்று சட்டமன்றத்தில்
    தி.மு.கவை கைகாட்டும்
    உச்சிகுடுமி சானக்கியதனத்தை காட்டியிருக்கிறார்.குறைந்த பட்சம் ஒரு கட்சியின் தலைவியாக
    தார்மீக அடிப்படையில் இந்த மரணதண்டனைக்கு எதிராக
    கருத்தை கருணையோடு தெரிவிப்பதற்குமா சட்டவிதிகள்
    தடுக்கின்றன???!!!

    ஈவு இரக்கமற்ற அந்த பெண்மணியின்
    23.10.2008 அறிக்கை

    “ ராஜீவ் காந்தி கொலைவழக்கு குறித்து சி.பி.ஐ
    விசாரித்தபோது, எனது தலைமையிலான தமிழக
    அரசு அதற்கு முழு ஒத்துழைப்பையும் நல்கியது.
    நளினி உட்பட இன்னும் சிலருக்கு நிர்ணயிக்கப்பட்ட
    நீதிமன்றத்தால் மரணதண்டனை வழங்கப்பட்டது.
    இதை சென்னை உய்ரநீதிமன்றமும் உறுதிபடுத்தியது.
    உச்சநீதிமன்றமும் 1999 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட
    நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட
    மரணதண்டனையை உறுதி செய்தது. உச்ச நீதிமன்றத்தால்
    உறுதி செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகியும்,
    மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை. மாறாக,
    நளினிக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை ஆயுள்
    தண்டனையாக ஆக்கப்பட்டுவிட்டது.
    இவ்வாறு நளினியை காப்பாற்றியது.. இப்போது தமிழகத்தில்
    எனது தலைமையிலான ஆட்சி நடைபெற்றுகொண்டிருந்தால்,
    தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக
    பேசியிருப்பவர்களை நிச்சயமாக
    கைது செய்திருப்பேன்.
    எப்போதெல்லாம்
    கருணாநிதி ஆட்சிக்கு வருகிறாரோ, அப்போதெல்லாம்
    விடுதலைபுலிகள் அமைப்புக்கு ஆதரவான பேச்சுக்கள்
    தமிழ்நாட்டில் பகிரங்கமாகவே நடைபெறுகின்றன.”
    இவ்வாறு செல்கிறது அறிக்கை.

    பதிலளிநீக்கு
  33. நேற்றே தீர்மானம் போட்ருந்தா நீ அம்மா.....! கோர்ட் "ஸ்டே" கிடைச்சதுக்கப்புறம் உன் தீர்மானம்லாம் சும்மா!!

    உயர் நீதிமன்றதால் தூக்கு தண்டனயை நிறுத்தி வழங்கப்பட்ட இந்த இடைக்கால தீர்ப்பு நம்பிக்கை அளிபதாக உள்ளது..இதற்காக முயற்சியெடுத்து போராடிய அனைவர்க்கும் நன்றிகள்.

    இது இவர்களின் தூக்கு தண்டனயை ஆயுள் தண்டனையாக நீதிமன்றத்தின் மூலம் குறைபதற்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கோர்ட் தான் இதற்கு ஒரே நம்பிக்கை.

    சட்டசபையில் நேற்றே இதற்கான தீர்மானம் நிறைவேற்றி இருக்கலாம், நேற்று முடியாது என்று கூறிவிட்டு, பொருளாதார தடை , கச்சதீவை மீட்போம் போன்ற தீர்மானங்கள் மட்டும் நேரடியாக செய்ய ஜெயாவுக்கு அதிகாரம் உள்ளதா? தூக்கு தண்டனயை ஆயுள் தண்டனையாக மாற்ற கோரி தீர்மானம் நிறைவேற்ற மனம் இல்லையா ? என்று எழுந்த எதிர்பை பார்த்து, இன்று தூக்கு தண்டனயை ஆயுள் தண்டனையாக மாற்ற கோரிக்கை நிறைவேற்றியதுக்கு நன்றி. அதிமுக அரசாங்கம் செய்த இந்த குளறுபடியால், ஜெயாவின் ஈழ வேஷம் கலைந்ததுதான் மிச்சம்..

    பதிலளிநீக்கு
  34. நேற்று,

    சுப்பிரமணி சாமி - தூக்கு தண்டனயை எதிர்ப்பவர்கள் எல்லாமே தேசவிரோதிகள் ....

    துக்ளக் சோ ராமசாமி - இவர்களை தூக்கிலிடவேண்டும், இதற்கு எதிரான போரட்டங்கள் அரசியல் ரீதியானது...

    இன்று,

    தூ​க்கு தண்டனயை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்ற கோரி ஜெயா சட்டசபையில் தீர்மானம்..

    இப்பொது,

    சு சாமி ஜெயாவை தேசவிரோதி என்று சொல்வாரா

    சோ, இந்த தீர்மானத்தை அரசியல் ஆதாயத்துக்காக ஜெயா நிறைவேற்றினார் என்று சொல்வாரா

    பதிலளிநீக்கு
  35. ஜெயலலிதாவின் இந்த திடீர் நடவடிக்கை மக்கள் போராட்டத்தின் வெளிப்பாடா இல்லை உள் அரசியல் நகர்வா என்பதை பொறுத்திருந்து பார்க்கனும் மூவரின் உயிர் காப்பாற்றுவதில் அவரின் பங்கையும் பாராட்டனும் தாத்தைவை விடங்கள் வீனாக ஏன் செத்த பாம்பை அடிப்பது!

    பதிலளிநீக்கு
  36. அரசியலின் கோபத்தை அழகாய் பதிவிட்டிருக்கிறீங்கள் பாஸ்!

    பதிலளிநீக்கு
  37. பெயரில்லா6:48 PM, ஆகஸ்ட் 30, 2011

    யோவ் துஷ்யந்தா 2 வருடங்களுக்கு முன் ஜெயா பேசியதை பொருட்படுத்தக் கூடாது.ஆனால் 11 வருடங்களுக்கு முன் அப்போதய சூழ்நிலையில் கலைங்கர் எடுத்த முடிவு மட்டும் உன் காமாலைக் கண்களுக்குத் தவறாகத் தெரிகிறது.மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்.

    பதிலளிநீக்கு
  38. பெயரில்லா7:09 PM, ஆகஸ்ட் 30, 2011

    பிரகாஷ் உங்கள் அருமையான பதிலுக்கு கோடானுகோடி ந்ன்றிகள். நான் சொல்ல நினைத்த எல்லாவற்றையும் பிட்டுபிட்டு வைத்திருக்கின்றீர்கள்.ஈழத்தமிழர் பிரச்சினையில் ,மத்தளத்துக்கு இரு பக்கமுமடி என்பது போல் கலைங்கர் நிலைமை இருந்து வருகிறது.91ல் அவரது ஆட்சியை கலைக்கத் துணை போனவர்கள்,சதி செய்தவர்கள்,மீடியாக்கள் என்று கூடி கும்மியடித்தவர்கள் ,சில காலங்களாக வேறு மாதிரி கும்மியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  39. என்ன அதிரடி? மக்கள் எல்லாம் ஒண்ணுகூடி ஆத்தாவை அரக்கி னு சொல்லிடுவாங்கனு பயம்!

    இதுவும் அரசியல்தான்! ஏன் இது மட்டும் சில மரமண்டைகளுக்கு புரியமாட்டேங்கிது தெரியலை.

    பை தெ வே, நெகடிவ் ஓட்டு நாந்தான்.

    அடுத்து சோ ராமசாமி பத்தி ஏதாவது அதிரடி எழவைக்கூட்டுங்க!

    பதிலளிநீக்கு
  40. துஷ்யந்தன்!

    "I cannot change ruling after rejection of mercy petitions: Jayalalithaa"

    Tamil Nadu Chief Minister Jayalalithaa told the Legislative Assembly on Monday that she did not have the power to annul the death sentence awarded to Santhan, Murugan and Perarivalan in the Rajiv Gandhi assassination case, or put their execution on hold, after the rejection of their mercy petitions by the President.

    “As Chief Minister I don't have the powers to change the ruling after the President of India has rejected their mercy petitions. Through the House, I request leaders of political parties and others not to carry on the propaganda that I have the powers to change the decision,” she said in a suo motu statement.

    At the same time, she said, a fresh application seeking reconsideration of the earlier decision could be filed before the President by the condemned person or anyone on his behalf “if there is a change of circumstance or if any new material is available.”

    “Once the President has rejected a mercy petition, all future applications in this behalf should be addressed to and would be dealt with by the President of India,” she said, quoting a March 5, 1991 directive from the Union Home Ministry.//

    Now, thushyanwthan, what are you saying???

    பதிலளிநீக்கு
  41. She say SHE DOES NOT HAVE power to change anything! I wonder why are you licking her BOTTOM then?

    Please EXPLAIN what have you really UNDERSTOOD!

    பதிலளிநீக்கு
  42. ///DMK linked to Rajiv's assassination in indirect way: Jaya
    8 Comments
    Share |
    FontLarger | Smaller
    #
    # Print
    Agencies Tags : AIADMK, Jayalalithaa, LTTE, Rajiv Gandhi assassination Posted: Tue May 24 2011, 19:03 hrs Chennai:

    Tamil Nadu Chief Minister Jayalalithaa alleged that the DMK was linked with the assassination of former Prime Minister Rajiv Gandhi in an "indirect way."

    "That has been our basic charge since a long time. We have always said DMK was behind the assassination of Rajiv Gandhi in an indirect way," the AIADMK chief told reporters here, responding to queries on reported remarks of Pathmanathan, leader of the now decimated LTTE, that the DMK's ideology (of anti-Brahminism) could have influenced the outfit to kill Gandhi.

    Known for her hardline against LTTE, Jayalalithaa, who was responsible for adoption of a resolution in the Tamil Nadu Assembly during her 1991-96 rule demanding arrest and extradition of slain LTTE founder V Prabhakaran, said threats from the outfit were not new to her.

    "I have been living with death threats since 1991 (when Gandhi was assassinated). This is nothing new," she said on Pathmanathan's claim that his outfit had tried to target her also. ///

    You are licking Jeay's bottom. She says it is MK who is linked to Rajiv assassination!!! I wonder WHY are you licking JEYA's bottom?

    Get a BRAIN!

    பதிலளிநீக்கு
  43. Who is "NAKED" now? I see only Jeya and brain-dead dhusyanthan are "NAKED"! You and your worthless post!

    பதிலளிநீக்கு
  44. ஆகா என்ர மருமோன் ஏற்கனவே அம்மா கட்சி கொள்கை பரப்பு செயலாலர்.. இதில வேற அம்மாவும் எல்லாற்ற வாயையும் அடைச்சிட்டார் ஒரு தீர்மானம் மூலம் பேந்தென்ன சொல்லவும் வேண்டுமோ என்ர மருமோண்ட குஷியப்பற்றி அது யாரப்பா சொன்னது கருணாநரி பத்து வருடத்துக்கு முன்ன சொன்னத நாங்க மறக்காம இருக்கோம் அம்மா இரண்டு வருடத்துக்கு முன்ன சொன்னத மறந்திடோம்ன்னு.. உங்களுக்கு மட்டும் செலக்டீவ் அமினேசியா இருக்கலாம் என்ர மருமோனுக்கு இருக்க கூடாதாய்யா..

    ஆனா ஒண்டு கருணாநரி தமிழ் நாட்டு தமிழனுக்கே துரோகம் செய்தவர்தானேய்யா.. கச்ச தீவ விட்டுக்க்கொடுக்கேக்க யார் ஆட்சியில இருந்தது..? காவேரியில தடுப்பணை கட்டுப்போது அதை தடுக்காமல் ஆட்சியில் இருந்தது யார்? பாலறுக்கு அணை கட்ட ஆத்திரா முடிவு எடுத்த பின்பும் தடுக்காமல் இருந்தது யார்? கேரளா பெரியாறு அணைக்கு பதிலா புதிய அணை கட்ட அனுமதி வாங்கும் போது மத்தியிலும் மானிலத்திலும் ஆட்சியில் இருந்தது யார்? படிக்கிற பசங்களையும் விடல இந்த ஆள்.. செத்த பாம்பு இல்லை கருணாநரி விழுந்து விழுந்து எழும்புவார் அவர் ஆகையால் அவரை அடித்துக்கொண்டே இருக்கத்தான் வேண்டும்...!!!!???

    எங்களுக்கு இப்ப தமிழ் நாட்டில ஆட்சியில் இருப்பது யார்? அம்மா தானே அவரிடம் தானே நாங்கள் முறையிட முடியும்..? இவர் ஆட்சியில் இருந்த போதுதானே முள்ளிவாய்க்காலில் இருந்து முறையிட்டோம் என்னத்தை கிழிச்சார் இந்த கருணாநரி..இவர் சக்காரியா கொமிசனில் இருந்து டெலிபோன் ஊழல் வரை தன்னை காப்பாற்ற தமிழனை பலி கொடுப்பார்..

    இப்ப எங்களுக்கு தேவை அந்த மூன்று அப்பாவி உயிர்களும் காப்பாற்றப்படவேண்டும் அதற்கு அம்மா உதவினால் கேள்வியே கேட்காமல் பெற்றுக்கொள்வதே நல்லது தானம் கொடுத்த மாட்டை பல்லுப்பிடிச்சு பாக்காதீங்கோ..

    ஆனால் ஒரு விடயத்தை நாங்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.. தமிழ் நாட்டு மக்களின் இடை விடாத போராட்டம்தான் அம்மாவை இந்த முடிவை எடுக்கத்தூண்டியது..

    பதிலளிநீக்கு
  45. பெயரில்லா2:09 AM, ஆகஸ்ட் 31, 2011

    வருண் >>>>>>>>>>தாங்கள் குறிப்பிடுவது எல்லாம் சரி தான்...ஆனால் தங்களுக்கு ஒன்றே ஒன்றை குறிப்பிடு சொல்கிறேன் ..தாங்கள் கூறும் கருத்துகள் யாவும் குறிப்பிட தக்கனவாக இருந்தாலும் தங்களின் கருத்துகளை தமிழில் முன் வைப்பது சால சிறந்தது என நான் கருதுகின்றேன்..ஏனெனில் தாங்கள் குறிப்பிடும் கருத்துகளை எல்லாரோலும் வாசித்து தங்கள் கருத்துகளை வெளியிட உதவும் எனவும் எதிர்பாக்கிறேன்

    பதிலளிநீக்கு
  46. காரசாரமா போகுது
    நல்லது நடக்கணும் நண்பரே

    பதிலளிநீக்கு
  47. பெயரில்லா7:36 AM, ஆகஸ்ட் 31, 2011

    காட்டான் உங்களுக்கு கலைங்கரைப் பற்றியோ தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி பேச எந்த உரிமையும் கிடையாது.

    பதிலளிநீக்கு
  48. பெயரில்லா9:06 AM, ஆகஸ்ட் 31, 2011

    காட்டான் உண்மையான தமிழனின் தொப்புள் கொடி உறவு.உறவுக்கு பிரச்சனை என்றால் அவ்ர் கேட்பார்.அந்த உரிமை அவருக்கு இருக்கிறது.அதை பேசக்கூடாது என்று சொல்ல நீங்கள் யார்?

    பதிலளிநீக்கு
  49. பெயரில்லாதவரே நான் ஒண்டும் அம்மா கட்சிக்காரனில்லை.. உங்களைபோல கருணாநரி கட்சிக்காரனும் இல்லை.. நான் சொன்ன கருத்திற்கு பதில் கருத்து வையுமய்யா.. நான் கருணாநரிய விமர்சிக்க கூடாதெண்டா.. அப்ப சிங்களவனா விமர்சிக்கிற.. அவர்தானே தன்னைத்தானே தமிழ் இனத்தலைவன்னு கூவுறார்..  முதல்ல நான் செய்த விமர்சனத்தை பார்த்து பதில் தாருமையா..

    என்ர தகுதி எனக்கு தெரியுமய்யா.. அய்யா நான் காட்டாந்தான் ஏதோ என்ர மூளைக்கு எட்டியத சொல்லுறன்.. நீங்க அறிவாளிதானே நான் வைக்கும் கேள்விகளுக்கு முதல்ல பதில் தாருங்கோ அதுக்கு பிறகு நான் வாய்யையும்.... .. யையும்!? பொத்திக்கொண்டு போறேன்யா ஒரு முள்ளிவாய்கால் போதுமையா அவற்ற தமிழின தலைவர் வேசத்துக்கு..  பக்சேக்கு மாலை போட பொ.....!? அனுப்பின்வர்தானேய்யா உன்ர தலைவர் ஏன் தமிழினதலைவர் பட்டம் பறிபோக காரணமாய் இருந்தவங்க ஓட்டீட்டாங்கன்னு சந்தோஷத்தை கொண்டாடவா..! எங்களுக்கு யார் குத்தினாலும் அரிசி வந்தா சரி.. திமுகவை மீண்டும் ஆதரிப்பது சில வேளை வேலியில் போகும் ஓணானை மடியில பிடிச்சு விட்டுட்டு குத்துது குடையுதெண்டு சொன்னது போலத்தான்யா..!?

    பதிலளிநீக்கு
  50. தல
    நா நெனெச்சேன் நீ சொல்லிட்ட

    பதிலளிநீக்கு
  51. கருத்துக்கள் மகா பிளஸ், டைட்டில் மட்டும் மைனஸ்

    பதிலளிநீக்கு
  52. பெயரில்லா11:25 AM, ஆகஸ்ட் 31, 2011

    காட்டான் நான் தி.மு.காரன் இல்லை .ஆனால் உண்மையான பச்சைத் தமிழன்.நீங்களும் , துஷ்யந்தனும் முதலில் நாகரீகமான சொற்களை பயன்படுத்துங்கள்.முள்ளிவாய்க்கால் கோர நிகழ்வுக்கு உம் தலைவர் பிரபாகரன் தான் முக்கியக் காரணம் என்று நிரூபன் பதிவு போட்டு உடைத்து விட்டார்.நான் அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.நீங்கள் கலைங்கரை விமர்சித்தது பொல நான் பிரபாகரனை விமர்சித்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? சொல்வதற்கு எத்தனையோ உள்ளது.

    பதிலளிநீக்கு
  53. <<<<<பெயரில்லா சொன்னது…
    காட்டான் உங்களுக்கு கலைங்கரைப் பற்றியோ தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி பேச எந்த உரிமையும் கிடையாது.<<<<<




    சரி... அப்போ யாரு விமர்சிக்கலாம் என்று சொல்லுறீங்க... காட்டான் விமர்சிக்க உரிமை இல்லை என்று சொல்வதின் காரணம் என்ன ??
    நாங்கள் இலங்கை தமிழர் என்றவடியால் இந்தியா அரசியலை விமர்சிக்க கூடாதோ..,,?? சார்... அப்படிப்பார்த்தால் உங்கள் நாட்டவரை விட உங்கள் அரசியல்வாதிகளை விமர்சிக்க எங்களுக்குத்தான் அதிக உரிமை இருக்கு.. ஏனெனில்
    அவர்கள் எல்லாம் அரசியல் நடத்துவது எங்கள் பிணங்களின் மேல் ஏறி நின்றல்லவா?? இந்தியாவில் மனிதாபிமானம் உள்ள பல பேர் இருந்தாலும் உங்களை , கருனாநியைப்போல் உள்ள சில ஜென்மங்கலால்தான் ஒட்டுமொத்தமாய் எல்லோருக்கும் கெட்ட பெயர்.

    இப்போது கருணா'நாய்'நிதியை பற்றி சில வார்த்தைகள் சொன்னதுக்கே பற்றிகொண்டு வருகுறதே உங்களுக்கு,
    அப்படிப்பார்த்தால் எங்களுக்கு இதைவிட அதிகம் அல்லவா வர வேண்டும். உங்க ஈன தலைவனை
    கடைசிவரை விமர்சிக்காமல் இருக்குறோம் ஆனால் அதற்க்கு நீங்கள் எனக்கு ஒரு உத்தரவாதம் தாருங்கள். எங்களை வைத்து எங்கள் பிணங்களின் மேல் ஏறி நின்று அரசியல் லாபம் தேடுவதை
    நிறுத்த சொல்லுங்கள் உங்கள் கபட நாடகம் ஆடும் தாத்தாவிடம்.

    இவ்வளவு பேசுகிறீர்களே, மூன்று உயிர்களை காப்பாற்ற ஜெயா எடுத்த முடிவு மக்கள் கொந்தளிப்பை பார்த்து மக்கள் தன்னை அரக்கி என்று சொல்லிவிடுவார்களோ என்று ஆயிரம் சப்ப காரணம் சொல்லுகிறீர்கள், சரி உண்மையாகவே இருக்கட்டும்.
    அப்படியானால்......இறுதி போரில் எங்கள் இனத்தையே சிங்களவன் அளிக்கும் போது இதை விட அதிகமாக அல்லவா??
    கொந்தளித்தோம் ஆர்ப்பாட்டம் நடத்தினோம், அப்போ எங்க போனார் உங்க கேவலமான தாத்தா.
    நீங்கள் சொன்னது போலவே மக்களுக்கு பயந்தேனும் ஏதாவது முடிவு எடுத்து இருக்கலாமே...
    மனச்சாட்சி இருந்தால் அதில் கையை வைத்து சொல்லுங்கள், மத்திய அரசோடு அந்தநேரம் உறவில் இருந்த
    கருணாநிதியால் எங்களை காப்பாற்றி இருக்க முடியாது... சீ.... இதுக்கு பிறகுமா இந்த கேவலமான தாத்தாவை போற்றி பாராட்டனும்.. நம்பினால் நம்புங்கள் ஒரு உண்மையை சொல்லுகிறேன்,
    இறுதி போர் நேரத்தில் ஜெயா ஆட்சியில் இருந்து இருந்தால் நிச்சயமாக எங்களை காப்பாற்றி இருப்பார்.எங்கள் மேல் உள்ள பாசத்தில் இல்லாவிட்டாலும் உலகமே உத்துபார்க்கும் ஒருவிடயத்தில்
    தன்னால்தான் நல்லது நடந்தது என்ற பெருமைகேனும் காப்பாற்றி இருப்பார். உங்கள் கபட நாடக தாத்தா நல்ல பாசமான குடும்ப தலைவன்தான் ஒத்துகொள்கிறேன் ஆனால் அவர் ஒரு
    மனிதாபிமானம் உள்ள சிறந்த தலைவராய் என்றுமே இருந்தது இல்லை இதுதான் முகாவின் அசிங்க வரலாறு......... எங்களுக்காக ஆட்சியை இழந்தாறு இழந்தாறு என்று எத்தனை காலம்தான் சொல்லி சொல்லியே அவரின் துரோகங்களை
    மறைப்பீர்கள். ஆரம்பத்தில் செய்தார்தான் நல்லது சில ஒத்துக்கொள்கிறேன், ஆனால் செய்த சிலவற்றுக்கு அதிகமாகவே எங்களை நாறடித்து கைவிட்டவரும் இவரே.....

    ஜெயலலிதா அப்படி சொன்னார் இப்படி சொன்னார் எண்டு அடுக்குறீர்கள், அது எங்களுக்கும் தெரியும் ஆனால் ஜெயா செய்வது ஓப்பனாக எல்லோருக்கும் தெரியும் படி அதன் வலி குறைவே..
    ஆனான் உந்த கருணாநிதி, நல்லவன் போல வேஷம் போட்டு போட்டே முதுகில் குத்தி ரத்தம் சுவைக்கும் காட்டேரி..... இதன் வலி மிக கொடுமையானது.

    எங்களுக்கு செய்த கருணாநிதியின் துரோகங்களை அடுக்கிகொண்டே போகலாம் ஆனால் அவற்றை திரும்ப திரும்ப சொல்லி ஒரு செத்த பாம்பை அடிப்பது எனக்கே கேவலம்.
    இவரு புலி ஆதரவாளராம்... ஜெயா எதிர்ப்பாம்... ஆமாம் ஜெயா எத்ரிப்புத்தான் ஆனால் அது உலகுக்கே தெரியும்..
    ஆனா இந்த தாத்தாவின் ஆதரவு எத்தகையது என்று எங்களுக்குத்தானே தெரியும்."புலிகளை வைத்து வைகோ தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக குற்றம் சாட்டி
    தன பதவிய மகனுக்காக காவல் காக்கும் போது" இந்த புலி பாசம் எங்கே போனது ஆனால் ஒன்று கருணா அரசியல் வந்ததில் சினிமாவுக்கு மட்டுமே நஸ்ரம்.
    ஏனெனில் இப்படிப்பட்ட சிவாஜி கூட தோற்றுப்போகும் ஒரு மகா நடிகனை
    சினிமா இழந்து விட்டதே........................

    அப்புறம்... ஜெயாவை ஆதரிக்கும் என் பதிவுகளில் நான் திரும்ப திரும்ப சொல்வது ஒன்றே ஜெயாவின் சமீம கால நடவடிக்கைகள் ஒருசில தவீர மிகுதி மிக பாராட்ட தக்கதே..... ஜெயாவின் முந்தைய நடவடிக்கைகளை எங்கயும் நான் சரி என்று வாதாடவில்லை. ஒன்று ஜெயா சிறந்த அரசியல்வாதி இல்லைத்தான் ஆனால் கருனாய்நிதியை விட ஜெயா ஆயிரம் மடங்கு சிறந்தவர் என்பதில் எவ்வித
    மாற்றுக்கருத்தும் இல்லை.

    அப்புறம்... மடத்தனமாக இங்கே வந்து உளருவருகெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, சாரி நான் ரெம்ப பிஸி பாஸ்.......

    பதிலளிநீக்கு
  54. <<<<பெயரில்லா கூறியது...
    காட்டான் நான் தி.மு.காரன் இல்லை .ஆனால் உண்மையான பச்சைத் தமிழன்.நீங்களும் , துஷ்யந்தனும் முதலில் நாகரீகமான சொற்களை பயன்படுத்துங்கள்.முள்ளிவாய்க்கால் கோர நிகழ்வுக்கு உம் தலைவர் பிரபாகரன் தான் முக்கியக் காரணம் என்று நிரூபன் பதிவு போட்டு உடைத்து விட்டார்.நான் அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.நீங்கள் கலைங்கரை விமர்சித்தது பொல நான் பிரபாகரனை விமர்சித்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? சொல்வதற்கு எத்தனையோ உள்ளது.
    <<<<



    உங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல கூடாது என்றுதான் நினைக்குறேன்,
    ஆனாலும் மனம் கேக்குது இல்லை......

    ஏதோ குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காக கருத்து போடாதீர்கள்,
    இங்கே நானோ காட்டானோ என்ன அநாகரிக வார்த்தைகளை பயன் படுத்தி இருக்கும்,
    அநாகரிகமாக அதில் கூட இலக்கிய பால் கலந்து பேசும் வல்லமை
    உள்ளவர் உங்கள் தாத்தா மட்டுமே... அண்மையில் விஜகாந்த சொல்லி இருந்தார்
    முகாவின் பதிலுக்கு " அநாகரிக பேச்சுக்கு திமுகா முதன்மையானது காரணம் தலைவனே அப்படி இருக்கும் போது
    தொண்டன் எப்படி இருப்பான்".

    அப்புறம்..... பிரபாகரன் பற்றியது.... அதுசரி நான் பிரபாகரன் ஆதரவு ஆளன் என்று
    உங்களுக்கு யார் சொன்னது...?? ஏன் உங்க உளவுத்துறை ஏதும் கண்டுபுடித்து சொன்னார்களோ...??
    நிருபன் அண்ணாவின் பதிவில் போய் ஏன் கருத்தை பாருங்கள்..
    நிருபன் அண்ணாவின் பதிவை பாராட்டியே என கருத்து இருக்கும்.
    முதலில் சுத்தி என்ன நடக்குது என்று பாருங்கள் அப்புறம் இங்கே நாட்டாமை செய்ய வாருங்கள்.
    பிரபாகரன் மேல் எனக்கும் விமர்சனம் உண்டு அனால் அவரை உங்கள் ஈன பிறவி கருணாநிதியுடன் ஒப்பிடுவதை முதலில் நிறுத்துங்கள். யாருடன் யாரை
    ஒப்புடுவது என்ற அடிப்படை அறிவு கூடவா இல்லை.

    விகடன் போன்ற ஜாம்பவான் பத்திரிகைகளே உங்கள் தலைவரை
    நாறடிப்பது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லை, அவை எல்லாம் உங்கள் பார்வையில்
    துரோக பத்திரிக்கைகளோ.. பிரபாகரன் பற்றி யார் உங்களை விமர்சிக்க தடை போட்டது??
    கருத்து சுதந்திரம் பற்றி எனக்கு நன்று தெரியும் அதைவிடா யாரா இருந்தாலும் உண்மை இருக்கும்
    பட்சத்தில் விமர்சிப்பதில் தப்பு இல்லையே

    அப்புறம்.. உங்கள் கருணாய்நிதி தலைவரை
    முதலில் மனிதாபமுள்ள மனுஷனாய் இருக்க சொல்லுங்கள்
    அப்புறம் மனிதாபிமானத்தை பற்றி வாய் கிழிய லச்சர் அடிக்கலாம்
    இது உங்களுக்கும் பொருந்தும்..

    இதுதான் உங்களுக்கான என கடைசி பதில்

    பதிலளிநீக்கு
  55. காட்டான் நான் தி.மு.காரன் இல்லை .ஆனால் உண்மையான பச்சைத் தமிழன்.நீங்களும் , துஷ்யந்தனும் முதலில் நாகரீகமான சொற்களை பயன்படுத்துங்கள்.முள்ளிவாய்க்கால் கோர நிகழ்வுக்கு உம் தலைவர் பிரபாகரன் தான் முக்கியக் காரணம் என்று நிரூபன் பதிவு போட்டு உடைத்து விட்டார்.நான் அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.நீங்கள் கலைங்கரை விமர்சித்தது பொல நான் பிரபாகரனை விமர்சித்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? சொல்வதற்கு எத்தனையோ உள்ளது.
    புதன், 31 ஆகஸ்ட், 2011 2:25:00 am GMT-07:00

    ஆமாய்யா நீங்க பச்சைத்தமிழன் நாங்க என்ன கேனைத்தமிழனா..? இப்பிடியே சொல்லுங்கோ பச்சைத்தமிழன் சிவப்புத்தமிழன்னு.. இண்டைக்கு எங்கள இப்பிடி பிரிச்சு பேசுற நீங்க நாளைக்கு என்ர பொடியங்க பிரான்ஸ்சில பிறந்ததால அவன் தமிழன் இல்லைன்னு கூவுவீங்க இதில வேற எங்கட ஆக்களும் அவன் இந்திய தமிழன் இவன் வடக்கத்தியான் இவன் தெற்கத்தியான்னு நல்லா பிரிச்சு மேயுறானுங்கோ.. இதுக்கெல்லாம் நான் லாவனி பாட விருப்பமில்ல.. அது சரி நிரூபனின் பதிவுகளின் தலையங்கத்த மட்டும் பாத்திட்டு ஏன்யா ஊழையிடுறாய்.,.

    அவர் சிலோன் வெய்யில்ல சுத்துறதால தலையெல்லாம் சூடாப்போய் அப்பிடி தலையங்கம் எழுதுறார்.. நீ ஏதாவது நிரூபனின் பதிவுகள் முழுசா படிச்சாயா.. தலயங்கத்த பார்த்திட்டு கருத்து போடாதீங்கோ நான் நினைக்கிறேன் நீங்க இந்த பதிவையும் முழுசா படிக்கேல்ல போல.. அது சரி பிரபாகரனை விமர்சிக்க அவர் என்ன சொத்து சேர்க்க அரசியலுக்கு வந்தவரோ.. ?ஒரு போராட்டத்தையும் அதை வழி நடத்தியவரையும்.. குடும்பம் குட்டியலுக்கு சொத்து சேர்க வந்தவரையும் ஒரு தட்டில வைச்சு விமர்சிக்க முயற்சிக்கிற உங்களுக்கு பின்னூட்டம் மூலம் பதில் அளித்த என்னை நனைய வைச்ச செருப்பாலதான்யா அடிக்கோனும்.. குழந்த பால்போத்தில் குசினிக்க இருக்காம் போய் குடிச்சிட்டு தூங்குங்கோ..

    பதிலளிநீக்கு
  56. ///எங்களுக்கு செய்த கருணாநிதியின் துரோகங்களை அடுக்கிகொண்டே போகலாம் ஆனால் அவற்றை திரும்ப திரும்ப சொல்லி ஒரு செத்த பாம்பை அடிப்பது எனக்கே கேவலம்.///

    இதைத்தான் நானும் கேக்கிறேன். என்னத்துக்கு இந்தப் பதிவு. செத்தை பாம்பை இன்னொருதர அடிக்கவா?

    ///இவரு புலி ஆதரவாளராம்... ஜெயா எதிர்ப்பாம்... ///

    உங்க ஆத்தாதான் சொல்லுது! நம்புது. நாங்களா சொல்றோம்?

    பதிலளிநீக்கு
  57. ***உங்க ஈன தலைவனை
    கடைசிவரை விமர்சிக்காமல் இருக்குறோம் ஆனால் அதற்க்கு நீங்கள் எனக்கு ஒரு உத்தரவாதம் தாருங்கள்.***

    அப்போ இந்தப் பதிவு என்ன?"

    ***அம்மணமான கருணாநிதி(நரி)யும் ஜெயலலிதாவின் அதிரடியும்."***

    ஏங்க சும்மா எதையாவது உளறிக்கொட்டுறீங்க? நீங்க சொல்றதெல்லாமே முரணாயிருக்கு! :(

    பதிலளிநீக்கு
  58. அம்மாதான் உங்களை காப்பாத்த வந்த தெய்வம். நாங்களும் பார்க்கத்தானே போறோம் இன்னும் அஞ்சு வருடத்தில் என்ன என்ன அம்மா சாதிக்கப் போறாங்கனு?

    கருணை மனுவை ஜனாதிபதி நிராகரிச்சபிறகு என்னால் எதுவும் செய்ய முடியாது, தமிழ் மக்கள் கொந்தளிப்பதால்தான் (வேறு வழியில்லாமல்) மறுபடியும் கருணை மனுவை அனுப்புகிறேன்னு சொன்னதுக்கே இந்த ஆதா ஜாலரானா, உங்களை எல்லாம் என்ன செய்றது?

    பதிலளிநீக்கு
  59. மிஸ்டர் வருண்,
    நாங்க முரணாகவும் தெளிவு இல்லாமலும்தான் பதிவுகள் கருத்துக்கள்
    போடுறோம் என்ற உங்க கருத்து சரியாகவே இருக்கட்டும், உங்கள் தெளிவான பதிவுகளையும் நீங்கள்
    கிழித்ததையும் உங்கள் ப்ளாக் வந்து 
    தெரிந்து கொண்டேன், 

    அப்புறம்.... எல்லாம் தெரிந்தவர் போல ஏதாவது உளறிக்கொட்டி எஸ்கேப் ஆகிறதை விட்டுட்டு, காட்டானோ நானோ
    முன் வைத்த கேள்விகளுக்கு உருப்படியான பதில் ஏதாவது சொல்லி (இருக்கா...!!)
    உங்க ஈன தலைவன் இமேஜ்ஜை தூக்கி நிறுத்திற வேலையைப்பாருங்க.......... :) 

    பதிலளிநீக்கு
  60. துஷ்யந்தன்!

    உங்களுக்காக உதவி கலைஞர் ஆட்சியை இழந்தார்னு சொன்னால்... இதெல்லாம் பழைய கதை விட்டுடுங்க னு சொல்றீங்க. இன்னைக்கு ஈனத்தலைவன்னு பழசு/நன்றி எல்லாம் மறந்து சொல்றீங்க! பழசெல்லாம் எதுக்கு? இன்னைக்கு உங்களுக்கு கலைஞர் ஈனத்தமிழன். ஆத்தா ஒரு தெய்வம். அப்புட்டுத்தான். சரி இருந்துட்டுப் போகட்டும்

    சரி, உங்களுக்காக தன் உயிரைக்கொடுத்த முத்துக்குமார், இன்னைக்கு கொலைக்குற்றம் சாட்டப்பட்டவகளுக்காக எந்தக்குற்றமும் செய்யாத தன் உயிரை மாய்த்துக் கொண்ட செங்கொடி போன்றவர்களையும் இன்னும் கொஞ்ச நாளில் இதேபோல் நீங்க பழசெல்லாம் எதுக்கு இப்போ? னு சொல்லுவீங்களா, சார்? இல்லை அவர்கள தலையெழுத்துனு சொல்லுவீங்களா? ஆமா நீங்க எல்லாம் என்னைக்கு தமிழ் நாட்டுத்தமிழனுக்காக உயிரை விட்டு இருக்கீங்க???

    சரி, இப்போ ஆத்தாதானே ஆளுராங்க? விழுந்து கும்பிடுங்க!

    அப்புறம் உங்க வாதம் முன்னுக்குப் பின் முரணா இருக்குனு சொன்னால், எதுக்கு இதுக்காக சின்னப்பிள்ளை மாதிரி என் ப்ளாக்லா போயி படிக்கிறீங்க???? நான் என்ன தரமான பலாக்ர்னு சொன்னேனா? இல்லை "வாங்க"னு உங்களுக்கு அழைப்பிதழா கொடுத்தேன்? உங்க கருத்தை விமர்சிச்சால், என் விமர்சனத்தை விமர்சிக்கனும் சார். சின்னப்பிள்ளை மாதிரி நீ என்ன எழுதி கிழிக்கிறனா சொல்லுவாங்க?

    சரி, யாரையாவது உங்க தளத்தில் "அம்மணமாக்கி" எதையாவது உளறி வேடிக்கை பாருங்க சார்! நீங்க நல்லாயிருக்கனும்! நன்றி!

    பதிலளிநீக்கு
  61. //வருண் சொன்னது…

    அம்மாதான் உங்களை காப்பாத்த வந்த தெய்வம். நாங்களும் பார்க்கத்தானே போறோம் இன்னும் அஞ்சு வருடத்தில் என்ன என்ன அம்மா சாதிக்கப் போறாங்கனு?//

    திருட கூட தெரியாத மாடு மேச்ச பயலுவ கட்சிய விட கண்டிப்பா நல்ல ஆட்சி தான் நடக்கும். கவலை படாம அரசாங்க பென்ஷன வாங்கிகிட்டு ... காலத்த ஓட்டுங்க

    பதிலளிநீக்கு
  62. வருண்...

    நன்றி உங்கள் வாழ்த்துக்கு.
    மீண்டும் மீண்டும் உங்கள் தாத்தாவின் பழைய புகழ் சொல்லியே
    இப்போது எழுப்பபட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து தப்புவதிலேயே குறியாக
    இருக்கிறீர்கள். இதில் வேறு அந்த அப்பாவி நல்ல ஜீவன்களான செங்கொடி, முத்துக்குமார்
    போன்றவர்களை வேறு சப்போட்டுக்கு.. கருணாநியை காப்பாற்ற தங்கள் பெயர்களை பயன்படுத்துவதை அவர்களின் ஆத்மா கூட ஏற்றுகொள்ளாது. பாஸ் நீங்கள் ஒரு சிறந்த திமுகாகாரன் என்பதை நிருபித்து விட்டீர்கள். உங்கள் தலைவரும் இப்படித்தான் செய்யும் பித்தலாட்டங்கள் அனைத்தையும் செய்துவிட்டு.. அதை நியாப்படுத்த அண்ணா, காந்தி , திருவள்ளுவர் என்று
    எல்லோரையும் இழுத்து வந்து சந்தியில் நிறுத்துவார்...

    முன்பு நல்லது செய்தான் என்ற ஒரே காரணத்துக்காக கொடூரமாக கொலை செய்தவனை மன்னிப்பீர்களா?? என்ன சார் பேசுறீங்க??எங்கள் சனத்தொகையில் 75 வீதத்தை அழிக்கும் போது
    வேடிக்கை பார்த்த மனுஷன் இவரு.... ஒருவகையில் காரணமாகவும் இருந்தவரு..
    சார் இதெல்லாம் சொன்னா புரியாது , அனுபவித்தால் புரியும்
    இரத்த சொந்தங்கள் அரை உயிரோடு துடிக்க துடிக்க அவர்களை கைவிட்டு
    இருக்கும் மற்ற சொந்தமாவது உயிரோடு இருக்கோணும் என்று உயிரை கையில் புடித்துகொண்டு
    இழுத்து கொண்டு ஓடி இருந்தால் அவ் வலி தெரியும். நிறைய பேசலாம் சார் புரிந்து கொள்ள முடியாத உங்களோடு பேசவே அசிங்கமா இருக்கு.

    எல்லாத்தையும் விடுங்க சார்,
    இப்போது மூவரை காப்பாற்ற ஜெயா எடுத்த முடிவு மக்கள் கொந்தளிப்பை
    பார்த்து என்று சொல்லுகிறீர்கள், அதையேதான் நானும் கேக்குறேன்..
    வன்னியின் இறுதிப்போரில் இதைவிட அதிகமாகவ அல்லவா
    மக்கள் கொந்தளிப்பு நடந்தது அப்போது கருணாநிதியால் ஏன் எதுவும் செய்ய முடியாமல் போனது??? சரி இப்போது ஜெயா செய்ததையாவது செய்து
    இருக்கலாம் இல்லையா, ரம்பா கல்யாணத்துக்கும் சோனாவுடனான சந்திப்புக்கும்
    காட்டிய முக்கியதுவத்தில் ஒரு பகுதியேனும் எங்கள் மேல் காட்டி இருக்கலாம்
    இல்லையா?? இதுக்கு பிறகுமா?? அவர நம்ப சொல்லுறீங்க???
    போங்க சார் போங்க நீங்களும் உங்க தலைவரும்...

    அப்புறம்... , என் எழுத்தை நீங்கள் நடுநிலையோடு விமர்சித்து இருந்தால் நானும் அதற்க்கு பதில் சொல்லி இருப்பேன்,
    முரணான கருத்து எங்கே உள்ளது என்று நீங்கள் சுட்டி காட்டி இருந்தால் அதற்கும் பதில்
    அல்லது திருத்தம் செய்து இருப்பேன், அதைவிட்டு உங்க கருணாநிதியை
    காப்பாற்ற சும்மா போகிற போக்கில் எல்லாம் முரண் முரண் என்றால் என்ன நியாயம்??
    சோவை வைத்து இழவு எழுத சொன்னீர்கள், என்னை அது எழுது இதை எழுதாதே
    என்று சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கு. அதனால்தான் ஏன் இப்பவும் சொல்லுகிறேன்
    முதலில் உங்கள் ப்ளோகில் போய் கிழியின்கள், அப்புறம் எனக்கு அட்வைஸ்
    சொல்ல வரலாம்...

    இதுக்கு மேலேயும் உங்க குதர்க்க வாதத்துக்கு என்னால் பதில் சொல்ல முடியாது.எனக்கு நிறைய வேலை இருக்கு, நான் ரெம்ப பிஸி சாரே..
    சரி..... உங்க தலைவர் கருணாநிதி அன்னைதெரசா போன்றவர்
    போதுமா..... போய்ட்டுவாங்க சார்..

    பதிலளிநீக்கு
  63. **

    அஹோரி சொன்னது…

    //வருண் சொன்னது…

    அம்மாதான் உங்களை காப்பாத்த வந்த தெய்வம். நாங்களும் பார்க்கத்தானே போறோம் இன்னும் அஞ்சு வருடத்தில் என்ன என்ன அம்மா சாதிக்கப் போறாங்கனு?//

    திருட கூட தெரியாத மாடு மேச்ச பயலுவ கட்சிய விட கண்டிப்பா நல்ல ஆட்சி தான் நடக்கும். ***

    ஆத்தாதான் ஆடு மாடு வாங்கிக்கொடுத்து நெறையாப் பேரை மாடு மேய்க்க விடுதுனு சொல்றாங்க. மனுஷ திங்கிற அஹோரிக்கு ஆடு மாடைப்பத்தி எல்லாம் என்ன கவலை??? :))))


    ***கவலை படாம அரசாங்க பென்ஷன வாங்கிகிட்டு ... காலத்த ஓட்டுங்க
    புதன், 31 ஆகஸ்ட், 2011 1:25:00 pm GMT-07:00 ***

    தோ பாருடா பிச்சை எடுத்து நரமாமிஷம் திங்கும் அஹோரியெல்லாம் பென்ஷன் வாங்கி சாப்பிடிறவ்ங்கல கேலி பண்ணுது!!!

    எல்லாம் நேரம்தான்!

    பதிலளிநீக்கு
  64. ***இதுக்கு மேலேயும் உங்க குதர்க்க வாதத்துக்கு என்னால் பதில் சொல்ல முடியாது***

    சரி விடுங்க. என்னைப்பற்றி ஒரு முடிவுக்கு வந்த பிறகு எதுக்கு கேள்வி பதில். விவாதமெல்லாம்? உங்க பணியை ஆத்தா அடியாள் இந்த அஹோரியோட சேர்ந்து தொடருங்கள்! :)

    பதிலளிநீக்கு
  65. this article written in complete bad taste....try to use some good words to say what you think. heading alone criticize your biased opinion.

    பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...