உன் செல்லக்குரலை - என்
தேசியக்கீதமாய்
மாற்றிவிட்டுப்போன
வித்தைக்காரியே...
ஒண்ணுமே தெரியாதவள்போல்
அருகில் வந்து
மோகத்தை தூண்டிவிட்டு
உன் தேவைகளை
பூர்த்தி செய்யும்
காரியக்காரியே...
நடந்தால் என் நிழலாக
படித்தால் என் புத்தகமாக
தூங்கினால் என் கனவாக
வெகுதூரத்தில் இருந்தாலும்
அருகில் இருப்பதைப்போல்
என்னை ஆட்டிப்படைக்கும்
மாயக்காரியே...
விருப்போ வெறுப்போ
துக்கமோ சந்தோசமோ
எந் நிலையில் நான் இருந்தாலும்
உன்னைப்பார்த்ததும் - எல்லாம் மறந்து
உன்னைக்காதலிக்க வெக்கும்
வசியக்காரியே..
எங்கேயும் எப்போதும்
உன் கைப்பொம்மையாக
எங்கேயும் எப்போதும்
எந்நேரமும்
உன்னையே உன்னைப்பற்றி
மட்டுமே - பேச வெக்கும்
காதல்காரியே...
உன் கைப்பொம்மையாக
என்னை சீண்டி
விளையாடும் உன்னை
வெறுக்கத்தான் நினைக்குறேன்
ஆனாலும்
என்னையே என்னால்
எப்படி - வெறுக்கமுடியும்
சொல்லடி என்னவளே.
ஆக்கம் துஷ்யந்தன்
ஆக்கம் துஷ்யந்தன்