வியாழன், ஏப்ரல் 14, 2011

காதல் சர்வாதிகாரி

ன்னிடம் பேசுவதற்காக
ஒவ்வொரு வார்த்தைகளையும்
பல முறை
ஒத்திகை பாக்கும் நான்
நீ வந்ததும் - தட்டுதடுமாறி
உளறிக்கொட்டுகுறேன் காரணம்
எல்லா தமிழ் வார்தைகளும்
உன்னுடன் பேச
அடம்புடித்து சண்டை போடுவதை
அறிவாயா நீ..

பார்த்தால் கூட
அடிப்பவன் - இன்று
அடித்தால் கூட
புன்னகைக்கிறேன்
மிடுக்குடன் அலைந்தவன்
இன்று - பூக்களுடன்
நடக்குறேன்
கடைகளில் கடவுள்
சிலைகளை கண்டால் கூட
உனக்காக நின்று
ஆழமாய் பிராத்திக்கிறேன்,
என்னை அடியோடு - புரட்டிப்போட்ட
மாயக்காரி நீ..

திட்டினால்
உதட்டை மூடும் முத்தம்
விலகினால்
இழுத்து  இறுக்கமான அணைப்பு
பார்க்காவிட்டால்
ஆளை விழுங்கும் குறுகுறு பார்வை
பேசாவிட்டால் பேசதூண்டும்
மயக்கும் அருகாமை -  இப்படி
தவறுகளை  தாராளமாய்
செய்யத்தூண்டும்
காதல் சர்வாதிகாரி நீ..


ஆக்கம் துஷ்யந்தன்



11 கருத்துகள்:

  1. எல்லா தமிழ் வார்தைகளும்
    உன்னுடன் பேச
    அடம்புடித்து சண்டை போடுவதை
    அறிவாயா நீ..//

    மனதிற்குப் பிடித்தவர்களைக் கண்டால் மௌனத்தில் வார்த்தைகளே உறைந்து போய் விடும் என்று தான் அறிந்திருக்கிறேன். ஆனாலும் இது அவளை நோக்கிப் பேச அடம் பிடிக்கும் கவிஞனின் வித்தியாசமான சிந்தனையில் விளைந்த பயிராக உள்ள காரணத்தால் ரசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. பார்த்தால் கூட
    அடிப்பவன் - இன்று
    அடித்தால் கூட
    புன்னகைக்கிறேன்
    மிடுக்குடன் அலைந்தவன்
    இன்று - பூக்களுடன்
    நடக்குறேன்
    கடைகளில் கடவுள்
    சிலைகளை கண்டால் கூட
    உனக்காக நின்று
    ஆழமாய் பிராத்திக்கிறேன்,
    என்னை அடியோடு - புரட்டிப்போட்ட
    மாயக்காரி நீ.. //

    இவ் வரிகளில் முற் கால கவிஞர் ஒருவரின் தழுவல் அல்லது, இன்ஸ்பிரேசன் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  3. கவிதையில் மு.மேத்தாவின் ஆக்கத்தினைப் படித்த ஒரு உணர்வு வருகிறது சகோ.

    பதிலளிநீக்கு
  4. அருமையாக உள்ளது
    வாழ்த்துக்கள்
    அப்படியே நம்ம பக்கத்துக்கும் வாங்க உங்க உறவு தான் நானும்
    http://mahaa-mahan.blogspot.com/

    பதிலளிநீக்கு
  5. நன்றி நிரூபன் அண்ணா,

    // இவ் வரிகளில் முற் கால கவிஞர் ஒருவரின் தழுவல் அல்லது, இன்ஸ்பிரேசன் தெரிகிறது.//

    நீங்கள் சொன்ன பிறகுதான் நானும் கவனித்தேன், எங்கயோ பழக்க பட்ட வரிகள் போல் உள்ளது,

    தெரியாமல் நடந்த தவறு இது , இப்புடி தவறுகள் இனிமேல் நடக்காமல் பார்த்து கொள்கிறேன்..

    பதிலளிநீக்கு
  6. // நிரூபன் a dit…
    கவிதையில் மு.மேத்தாவின் ஆக்கத்தினைப் படித்த ஒரு உணர்வு வருகிறது சகோ. //


    இது ரெம்ப பெரிய வார்த்தை அண்ணா, மு மேத்தா எனக்கு ரெம்ப புடிததவர், என்னால் ரசிக்கபடுபவர்,
    அதனால் அவர் தாக்கம் என் எழுத்திலும் இருக்குதோ தெரியவில்லை, ஆனாலும் மு.மேத்தா பெயர சொல்லி என்னை பாராட்டியது
    சந்தோசமாகவும் பெருமையாகவும் இருக்கு அண்ணா.

    பதிலளிநீக்கு
  7. //அருமையாக உள்ளது
    வாழ்த்துக்கள்
    அப்படியே நம்ம பக்கத்துக்கும் வாங்க உங்க உறவு தான் நானும்
    http://mahaa-mahan.blogspot.com//

    நன்றி நண்பரே..

    நம்ம இடமா?? பாரிஸ் ...!
    சந்தோசமாக இருக்கு,
    கண்டிப்பாக நாங்க வராம இருப்பமா ....

    பதிலளிநீக்கு
  8. தமிழ் வார்த்தை வராட்டி ஆங்கிலம், பிரெஞ்சு முயற்சி பண்ணலாமே ???

    கவிதை நல்லா இருக்கே

    பதிலளிநீக்கு
  9. please remove word verification, Many people find it irritating

    பதிலளிநீக்கு
  10. // எல் கே a dit…
    தமிழ் வார்த்தை வராட்டி ஆங்கிலம், பிரெஞ்சு முயற்சி பண்ணலாமே ???

    கவிதை நல்லா இருக்கே //

    ப்ரஞ்சதான் முயற்சிக்கலாம் எண்டு இருக்கான் பாஸ்.. lol

    பதிலளிநீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...