புதன், டிசம்பர் 07, 2011

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.. 02


வளை பார்க்க போவது மனதுக்குள் உற்சாகத்தை கொடுத்தாலும் என்னை பார்த்ததும் அவள் என்ன செய்வாள் என்பது மனதுக்குள் ஒரு அச்சத்தை பரவவிட்டது. எல்லாமே உன்னால்தான் உன்னால்தான் என்று அப்பாவும் அம்மாவும் என் மேல் பழியை சுமத்துகிறார்களே..? உண்மையில் இதற்கு யார் காரணம்.. நானா? இல்லையே.. இவர்கள் தானே காரணம். நான் மாட்டேன் மாட்டேன் என்று சொல்ல வில்லங்கமாக இலங்கை கூட்டி வந்தவர்கள் யார் இவர்கள் தானே? நான் வராமல் இருந்திருந்தால் இப்படி ஒரு இக்கட்டான நிலையில் மாட்டி தவித்திருக்க மாட்டேனே! எல்லாத்துக்கும் காரணகத்தாவாக அவர்களே  இருந்துவிட்டு இப்போது பழியை என் மேல் மட்டும் போடுவதில் என்ன நியாயம். டேய்.. ஆர்ணிகன் கூட்டி வந்தது அவர்கள்தான் ஆனால் அவளை பார்க்க பழக சொன்னதும் அவர்களா..? என்னைத் தொட்டு சொல்லு மனச்சாட்சி அதட்டியது. பதில் சொல்ல முடியாமல் தலை கவிழ்ந்து கொண்டேன். நான் வராமலே இருந்திருக்கலாமே என்று நினைக்கும் அந்த முதல் இலங்கை பயணத்தை மனம் அசைபோட தொடங்கியது.

வன்னியில் நெடுங்கேணியில் இருக்கும் ஒரு கிராமந்தான் அப்பாவின் பிறந்த இடம். அங்கு போய் சேர்ந்ததுமே எனக்கு தலையே சுற்றத்தொடங்கி விட்டது. ஏதோ திசை தெரியா காட்டில் அகப்பட்டு கொண்டதுபோல் இருந்தது. அங்கே எனக்கு ஒரே ஆச்சரியம் என் அப்பம்மாதான். காமாட்சி என்றால் அந்த கிராமத்தில் தெரியாவர்களே இல்லை. அங்கிருக்கும் குடிசை வீடுகளுக்கு மத்தியல் கம்பீரமாய் நிற்கும்  அப்பம்மாவின் கல்வீடு மகன் வெளிநாட்டில் இருக்கார் என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது. வீட்டை பார்க்கும் போது இவ்ளோ பெரிய வீட்டில் அப்பம்மா எப்படித்தான் தனியே இருக்காரோ என்றுதான் தோணும். வீட்டுக்குள் நுழைந்தால் ஒரே ஆச்சரியம்தான். எழுபத்தைந்து வயதிலும் பம்பரமாய் சுழண்டு கொண்டிருப்பார் அப்பம்மா. பெரிய வீட்டில் ஒரு மூலையில் குவிக்கப்பட்ட வெங்காயம். இன்னொரு மூலையில் அடுக்கப்பட்ட நெல்லு மூட்டை கச்சான் மூட்டை. முற்றத்தில் காயும் எள்ளு என, எதிர் எதிரே தென்படும் வேலைக்காரர்களிடம் இதை இப்படி செய் அதை அப்படி செய்திருக்கலாமே என சுழண்டு வேலை வாங்கும் அப்பம்மா என்னிடம் காட்டும் பிரியம்...! இதுவரை நான் அனுபவித்திராதது. 

டேய் ஆர்ணிகன் குட்டி.. உங்க அப்பண்டா இந்த ஆமிக்காரன் தொல்லையால்தான் பிரான்ஸ் போனான். அதுக்கு பிறகு உங்க அப்பப்பா இறந்ததுக்கு கூட வரல்லைடா... என்று முந்தானையால் கண்களை துடைத்தபடி தொடர்வார், ஏதோ விசா பிரச்சனை என்றான் பிறகு அங்கேயே உங்க அம்மாவ கல்யாணம் கட்டி நீயும் பிறந்து பல வருடம் ஓடி போச்சு, ஹும்.. இப்போத்தான் ஏதோ மனசுமாறி என் பேரப்புள்ளை உன்னை என் கண்ணில காட்டியிருக்கான், என்று அப்பம்மா கண்கலங்கி என்னை வாரி அனைத்து உச்சிமுகரும்போது எப்படி.. இப்படி ஒராளை அப்பாவால் மிஸ் பண்ண முடியுது! என்றுதான் தோணும். வீட்டை சுற்றி பெரிய முற்றம். முற்றத்தில் ஓங்கி வளர்ந்திருக்கும் மாமரங்கள். கள்ளம்கபடமற்ற அயலவர்கள் வீட்டைவிட்டு  கொஞ்சம் தள்ளி ஓடும் ஆறு. அதை சுற்றியுள்ள வயல்வெளிகள் அதில் திரியும் மயில்கள் என்று போன சில நாட்களிலேயே அந்த கிராமம் எனக்கு பிடித்துவிட்டது. ஆனாலும் அப்பாவையும் அம்மாவையும் போல் அவர்களுடன் என்னால் முழுதாய் ஒட்ட முடியவில்லை கொஞ்சம் விலகி விலகியே இருந்தேன். புது இடம் புது ஆக்கள் அதுதான் போக போக பழகிடும் என் நிலைக்கு அம்மா காரணம் சொல்ல மற்றவர்கள் அமைதியாகிவிட்டார்கள். ஆனால் என்னைத்தான்  தனிமை போட்டு வாட்டியது.

அன்றும் அப்படித்தான் நேரம் இரவு பத்தை தாண்டிகொண்டிருந்தது. அப்பாவும் அம்மாவும் வெளியே விறாந்தையில் இருந்து பழைய கதைகள் பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்குதான் அதில் பங்கு பெறவும் விருப்பம் இல்லை படுத்தால் தூக்கமும் வரவில்லை. எனக்கு ஒதுக்கப்பட்ட தனி அறையில் கட்டிலில் புரண்டு புரண்டு படுத்துகொண்டிருந்தேன். ஆர்ணிகன் குட்டி.. நீ வாறேண்டோன நம்ம காட்டான் இருக்கான் இல்ல.. அவனிட்ட சொல்லி கொழும்புல இருந்து கொண்டு வந்த கட்டில், அப்பம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. வெளியே பேரிரச்சலுடன் மழை பெய்துகொண்டிருந்தது. காற்றோடு போராடும் மரங்களின் அலறல். திறந்து மூடும் ஜன்னல் கதவுகளின் சத்தம் என அந்த இரவு பயங்கரமாகவும் ரசிக்கும்படி ரம்மியமாகவும் இருந்தது. இந்த நேரங்களில் மர்ம நாவல்கள் படிப்பது எனக்கு விருப்பமான ஒன்று. எழுந்து சென்று என் பெட்டியை திறந்து ஒரு புத்தகத்தை எடுத்து கட்டிலில் படுத்தபடி வாசிக்க தொடங்கினேன். சில நிமிடங்கள் கரைந்திருக்கும்.. அப்போதுதான் என் வாழ்க்கையை புரட்டி போட்ட அவளை சந்திக்க நேர்ந்தது.

எதாச்சையாக ஜன்னல் பக்கம் திரும்பிய எனக்கு பெரிய அதிர்ச்சி.. பின்னே இருக்காதா..!!புராணங்களிலும் கற்பனை கதைகளிலும் அறிந்த தேவதையை நேரில் அதுவும் அருகில் பார்த்தால் யாருக்குத்தான் அதிர்ச்சி வராது. எங்கள் வீட்டின் பின் பின்புறம் சற்று தள்ளித்தான் ஆற்றங்கரைக்கு போகும் சிறு மணல் பாதையுண்டு. அதன்வழியாக போனவள் திடீர் மழைக்கு என் அறையின் ஜன்னல் அருகே ஒதுங்கி இருக்கின்றாள்  போல். நிலவை போல் சுத்தமான வட்டமுகம்.. திருக்குறளை போல் சிக்கனமான சிறு உதடுகள்.. குளிரில் படபடக்கும் உதடுகள் இடையே தெரியும் முத்து பற்கள்.. பெரிய விழிகள்.. பாதி நனைத்த உடையை மீதியையும் ஈரமாக்கும் தண்ணீர் சொட்டும் கருங்கூந்தால்.. ஈரப்பாவாடையை குனிந்து பிழியும் போது அங்கங்கே திமிரும் இளமை..... கடவுளே.. இப்படியொரு அழகியை இதுவரை நான் பார்த்ததே இல்லையே!! அவளை விழுங்கி விடுவதுபோல் பார்த்துகொண்டு அறையுனுள் நான் நின்றேன். எவ்வளவு நேரம் அப்படியே நின்று இருப்பேனோ தெரியவில்லை. ஏதோ மூளையில் உறைக்க சட்டென திரும்பியவள் தன்னையே வெறித்து பார்த்துகொண்டிருக்கும் என்னை பார்த்ததும் அந்த அழகிய விழிகள் மிரட்சியால் அகல விரிந்தது. சில விநாடிகள்தான் என்னை பார்த்திருப்பாள் சட்டென கொட்டும் மழையில் இறங்கி இருட்டினுள் ஓட தொடங்கினாள். நான் செய்வதறியாது இருட்டினுள் அவள் உருவம் மறையும்வரை பார்த்துக்கொண்டே நின்றேன்.

தொடரும்...


குறிப்பு 01: இத்தொடர் யுத்தம் நடந்த காலபகுதியில் நடப்பதாகவே எழுதப்பட்டுள்ளது.
குறிப்பு 02: இத்தொடர் ஒரு சிறு குறுந்தொடர்.. சில பகுதிகளுடன் முடிவடையும்.
குறிப்பு 03: இத்தொடரில் வரும் காதாபாதிரங்களோ கதையோ உண்மையல்ல முழுக்க முழுக்க கற்பனையே.. (அவ்வ..)


75 கருத்துகள்:

  1. அண்ணே மிகவும் அழகாக இருக்குறது..

    இயற்கையை ரசிக்க கூடிய மாதிரி இருக்குறது......

    பதிலளிநீக்கு
  2. அந்த தேவதை ரசிக்கும் படியாக உள்ளது...

    அண்ணே இந்த கதையில் வரும் கதாபாத்திரத்தின் வயது என்ன..

    பதிலளிநீக்கு
  3. மிகவும் யதார்த்தமாக கதையை கொண்டு செல்கிறாய் மருமோனே.. அப்பம்மாவின் வீட்டை நான் கற்பனை செய்து பார்க்க வேண்டிய அவசியமில்லை அதில் நானே வாழ்ந்திருக்கிறேன்.. வீடு முழுவதும் அறுவடை தானியங்கள் இருக்க அவற்றை தின்ன கோழிகளுடன் போட்டி போடும் குருவிகள் பார்பதற்கே அழகு அவற்றை எல்லாம் இழந்த சோகம் இன்னும் என் மனதில்..

    பதிலளிநீக்கு
  4. அது சரி இதில் வரும் காட்டானும் ஆரனிக்கனும் இங்கினதானே நிக்கிறாங்கள்...!!??? ஹி ஹி

    பதிலளிநீக்கு
  5. கதைக்கரு புலம் பெயர் வலிகளையும் சேர்த்தே சொல்லும் என்று எதிர்பாக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  6. எனக்கென்னமோ ஆர்னிகனின் இடத்தில துஷியின்ர பெயர் வரும் போல தான் தோணுது..அந்த பொண்ணு கூட 'பதினோரு வயசில பாத்தது' தானே ))

    பதிலளிநீக்கு
  7. கதையா? அனுபவமா? நண்பரே! பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. இயல்பான தொடர்கதை நண்பரே..
    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  9. ////நிலவை போல் சுத்தமான வட்டமுகம்.. திருக்குறளை போல் சிக்கனமான சிறு உதடுகள்.. குளிரில் படபடக்கும் உதடுகள் இடையே தெரியும் முத்து பற்கள்.. பெரிய விழிகள்.. பாதி நனைத்த உடையை மீதியையும் ஈரமாக்கும் தண்ணீர் சொட்டும் கருங்கூந்தால்.. ஈரப்பாவாடையை குனிந்து பிழியும் போது அங்கங்கே திமிரும் இளமை..... கடவுளே.. இப்படியொரு அழகியை இதுவரை நான் பார்த்ததே இல்லையே!! ////

    நெடுங்கேணி மண்ணை நான் நன்கு அறிவேன் அங்கே இப்படி ஒரு பேரழகியா? மச்சி இப்ப அங்கதான் இருக்காளா என்று சொல்லு நான் தேவை என்றால் விசாரிச்சு சொல்லுறன் அவ்வ்வ்வ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  10. அட காட்டான் மாமாவுக்கு ஒரு பாத்திரம் கதையில் இருக்கா

    பதிலளிநீக்கு
  11. ////நிலவை போல் சுத்தமான வட்டமுகம்.. திருக்குறளை போல் சிக்கனமான சிறு உதடுகள்.. குளிரில் படபடக்கும் உதடுகள் இடையே தெரியும் முத்து பற்கள்.. பெரிய விழிகள்.. பாதி நனைத்த உடையை மீதியையும் ஈரமாக்கும் தண்ணீர் சொட்டும் கருங்கூந்தால்.. ஈரப்பாவாடையை குனிந்து பிழியும் போது அங்கங்கே திமிரும் இளமை..... கடவுளே.. இப்படியொரு அழகியை இதுவரை நான் பார்த்ததே இல்லையே!! அவளை விழுங்கி விடுவதுபோல் பார்த்துகொண்டு அறையுனுள் நான் நின்றேன். எவ்வளவு நேரம் அப்படியே நின்று இருப்பேனோ தெரியவில்லை. ஏதோ மூளையில் உறைக்க சட்டென திரும்பியவள் தன்னையே வெறித்து பார்த்துகொண்டிருக்கும் என்னை பார்த்ததும் அந்த அழகிய விழிகள் மிரட்சியால் அகல விரிந்தது. சில விநாடிகள்தான் என்னை பார்த்திருப்பாள் சட்டென கொட்டும் மழையில் இறங்கி இருட்டினுள் ஓட தொடங்கினாள்.////

    இதை நண்பன் என்று சொல்லவில்லை ஆழ்மனதில் இருந்து சொல்கின்றேன் எழுத்தாளர் சாண்டிலியனின் கதைகளை கவனித்தால் இரண்டு பக்கத்துக்கு ஒரு முறை பெண்களை அழகாக வர்ணிப்பார் மிக சிறப்பாக இருக்கும் நான் எல்லாம் அவர் புத்தகங்கள் படிப்பதே அந்த வர்ணிப்புக்காகத்தான்(இப்ப நாவல்கள் படிக்கும் பழக்கம் தொலைந்து போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டது..)

    அப்படி ஒரு பீலிங்கை தந்தது உங்கள் வர்ணனை மிக அழகான எழுத்துநடை

    இந்த தொடரை மேலும் மெருகூட்டி நாவலாக வெளியிடலாம் முயற்சி செய்யுங்கள் பாஸ்.....

    பதிலளிநீக்கு
  12. வணக்கம்,சார்!கம்பன் பிச்சை வாங்க வேண்டும் போலிருக்கிறது,அப்படி வர்ணிக்கிறீர்கள்.அது தான் சார் என்றேன்!

    பதிலளிநீக்கு
  13. K.s.s.Rajh கூறியது...

    அட காட்டான் மாமாவுக்கு ஒரு பாத்திரம் கதையில் இருக்கா?////மாட்டினாரு!

    பதிலளிநீக்கு
  14. காட்டான் கூறியது...

    அட.. நாமதான் முதலா?////என்ன ஒரு சந்தோசம்,வரப் போகும் ஆப்பு தெரியாமல்?

    பதிலளிநீக்கு
  15. ஆகுலன் கூறியது...

    அந்த தேவதை ரசிக்கும் படியாக உள்ளது...

    அண்ணே இந்த கதையில் வரும் கதாபாத்திரத்தின் வயது என்ன?///உங்கள விட ஒரு ஐஞ்சு வயது கூட!(என்ன ஒரு கொல வெறி!)

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் துஸி,

    அருமையாகப் பதிவினை நகர்த்திச் செல்லுறீங்க.

    உங்கள் தமிழ்ப் பற்றினையும், உங்களுக்குள் இருக்கும் தமிழ்ப் பரிச்சயத்தினையும் நினைக்கையில் புல்லரிக்கிறது.

    பதிலளிநீக்கு
  17. இயற்கை வர்ணனைகள், இலக்கிய ரசம் சிந்தும் பெண்ணைப் பற்றிய வர்ணனைகள் யாவும் சிறப்பாக இருக்கிறது. நெடுங்கேணிக்குப் போக கிஸ் ராஜா இப்பவே தயாராகிட்டாராம். ஜாக்கிரதை மச்சி!

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் ஐயா துசி ! 
    தனிப்பட்ட தேடலால் பின்னூட்டம் இடமுடியாவிட்டாலும் உங்கள் தொடரை வேலியோரம் நின்று வாசிக்கும் ஒரு யாசகன்.
    தொடருக்கு அதிக வரவேற்பில்லை என்று கடந்த பதிவில் கூறியது தவறு. என்பது என் கருத்து. நல்ல தொடர்களுக்கு எப்போதும் வரவேற்று இருக்கின்றது. செங்கோவி ஐய்யா,நிரூபன் என உதாரணபுருசர்கள் இருக்கின்றார்கள் பதிவுலகில். அதில் தனிமரமும் கண்ட அனுபவம் எப்போதும் நல்லவை ஊக்கப்படுத்தப்படும் என்ற செங்கோவி ஐயாவின் கூற்றும் நிஜமே!

    பதிலளிநீக்கு
  19. வன்னியின் நெடுங்கேணி மண்ணனின் வாசத்துடன் தமிழில் எண்டரி வீரமூர்நாத் அவர்களின் தமிழ் ஆளுமையைப் போல் உங்கள் தெள்ளு தமிழ் வர்ணைகள் நெஞ்செல்லாம் பொங்கி வழியும் அழகு தொடரினைச் சிறப்பாக கொண்டு செல்கின்றது. சிறுதொடராக்காமல் நீண்ட தொடருக்கான கதைக்களம் இருப்பது போன்ற உணர்வைத் தருகின்றது தொடர் நீண்டு செல்ல வேண்டி நிற்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  20. தொலைந்து போன வாழ்வை ஆர்னிங்கன் மூலமும் அவரின் தந்தை மூலமும் காலமாற்றத்தைச் சொல்லிச் செல்வீர்கள் என்று நம்புகின்றேன் ஐயா.

    பதிலளிநீக்கு
  21. காட்டான் வாங்கியந்த கட்டில் தேக்குமரக்கட்டிலா?சாக்குக் கட்டிலா? இல்லை நாகரிகம் தந்த தம்ரோ தயாரிப்பான கம்பிக்கட்டிலா என்ற  எண்ணங்களோடு விடைபெறுகின்றேன். தொடர்ந்து பின்னூட்டம் இடாமல் விட்டாலும் தொடரினை சுவாசிப்பேன் அழகு தமிழ் வர்ணைக்காக. மீண்டும் சந்திக்கலாம் சில வாரத்தில் ஐயா. 

    பதிலளிநீக்கு
  22. தனிமரம் "வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.. 02" என்ற இடுகையில் புதிய கருத்துரை விட்டுச் சென்றுள்ளார்: 

    வன்னியின் நெடுங்கேணி மண்ணின் வாசத்துடன் தமிழில் எண்டரி வீரமூர்நாத் (சுசீலா கனகதுர்க்கா)அவர்களின் தமிழ் ஆளுமையைப் போல் உங்கள் தெள்ளு தமிழ் வர்ணைகள் நெஞ்செல்லாம் பொங்கி வழியும் அழகு தொடரினைச் சிறப்பாக கொண்டு செல்கின்றது. சிறுதொடராக்காமல் நீண்ட தொடருக்கான கதைக்களம் இருப்பது போன்ற உணர்வைத் தருகின்றது தொடர் நீண்டு செல்ல வேண்டி நிற்கின்றேன். 

    பதிலளிநீக்கு
  23. /வீட்டுக்குள் நுழைந்தால் ஒரே ஆச்சரியம்தான். எழுபத்தைந்து வயதிலும் பம்பரமாய் சுழண்டு கொண்டிருப்பார் அப்பம்மா. பெரிய வீட்டில் ஒரு மூலையில் குவிக்கப்பட்ட வெங்காயம். இன்னொரு மூலையில் அடுக்கப்பட்ட நெல்லு மூட்டை கச்சான் மூட்டை. முற்றத்தில் காயும் எள்ளு என, எதிர் எதிரே தென்படும் வேலைக்காரர்களிடம் இதை இப்படி செய் அதை அப்படி செய்திருக்கலாமே என சுழண்டு வேலை வாங்கும் அப்பம்மா.../

    கிராமத்துவீட்டை அப்படியே கண்முன் கொண்டுவந்துவிட்டியள்.

    பதிலளிநீக்கு
  24. என்னயா இது நனைந்தவளின்ரை தலையை துவட்டி சாம்பிராணி புகை போட்டுவிடுகிறதைவிட்டிடு, இருட்டினுள் அவள் உருவம் மறையும்வரை பார்த்துக்கொண்டே நின்றாராம் சீ சீ verybad

    பதிலளிநீக்கு
  25. நன்றாக ரசிக்கிறீர்கள் அய்யா! தொடருங்கள்.படிக்கத்தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
  26. அதென்னப்பன், ஈரப்பாவடையைப் பிழியும் போது இளமை தெரியுதோ!? ரொம்ப முத்திப்போனாய்.

    பதிலளிநீக்கு
  27. ***தன்னையே வெறித்து பார்த்துகொண்டிருக்கும் என்னை பார்த்ததும் அந்த அழகிய விழிகள் மிரட்சியால் அகல விரிந்தது.***

    என்ன பார்வை உந்தன் பார்வை னு சொல்லாமல் சொல்லியிருக்குமே? :)))

    பதிலளிநீக்கு
  28. அடடா நெடுங்கேணி தான் உங்க ஊரா?

    பதிலளிநீக்கு
  29. ஃஃஃநிலவை போல் சுத்தமான வட்டமுகம்.. திருக்குறளை போல் சிக்கனமான சிறு உதடுகள்.. குளிரில் படபடக்கும் உதடுகள் இடையே தெரியும் முத்து பற்கள்.. பெரிய விழிகள்.. பாதி நனைத்த உடையை மீதியையும் ஈரமாக்கும் தண்ணீர் சொட்டும் கருங்கூந்தால்..ஃஃஃஃஃஃ

    அது சரி பெண்கள் தொன்றும் இடததில் மட்டும் நம்ம பசங்க கம்பனையே வெல்லறாங்களே அந்த ரகசியம் என்னவோ...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு week cinema (28.11.2011-5.12.2011)

    நம்ப முடியாத கின்னஸ் சாதனை படைத்துள்ள கனெடியத் தமிழன் guinness world record

    சாந்தனை தேசத்துரோகியாக்கிய ஈழ மக்கள்

    பதிலளிநீக்கு
  30. காட்டான் சொன்னது…
    அட.. நாமதான் முதலா.<<<

    ஆமா ஆமா.... :)

    பதிலளிநீக்கு
  31. ஆகுலன் கூறியது...
    அண்ணே மிகவும் அழகாக இருக்குறது..
    இயற்கையை ரசிக்க கூடிய மாதிரி இருக்குறது......<<<<

    தேங்க்ஸ் ஆகுலன்...

    பதிலளிநீக்கு
  32. ஆகுலன் கூறியது...
    அந்த தேவதை ரசிக்கும் படியாக உள்ளது...
    அண்ணே இந்த கதையில் வரும் கதாபாத்திரத்தின் வயது என்ன..<<<<<

    ஹா ஹா.... ரசிக்கிறதோட மட்டும் நிறுத்தனும் பாஸ் :( ஹா ஹா...

    அந்த பொண்ணு பெயரையே நான் இன்னும் யோசிக்கல்ல.... இதற்குள் வயசா??? அவ்வ... ஒரு பதினெட்டு கொடுப்போம் ஆகுல். :)

    பதிலளிநீக்கு
  33. காட்டான் கூறியது...
    மிகவும் யதார்த்தமாக கதையை கொண்டு செல்கிறாய் மருமோனே.. அப்பம்மாவின் வீட்டை நான் கற்பனை செய்து பார்க்க வேண்டிய அவசியமில்லை அதில் நானே வாழ்ந்திருக்கிறேன்.. வீடு முழுவதும் அறுவடை தானியங்கள் இருக்க அவற்றை தின்ன கோழிகளுடன் போட்டி போடும் குருவிகள் பார்பதற்கே அழகு அவற்றை எல்லாம் இழந்த சோகம் இன்னும் என் மனதில்..<<<<

    என் மாம்சையே பீல் பண்ண வைச்சுட்டேனா???அவ்வ்... உண்மைதான் மாமா... அவ்ளோ சீக்கிரமாய் அதை எல்லாம் மறக்க முடியுமா???

    பதிலளிநீக்கு
  34. காட்டான் கூறியது...
    அது சரி இதில் வரும் காட்டானும் ஆரனிக்கனும் இங்கினதானே நிக்கிறாங்கள்...!!??? ஹி ஹி<<<<

    யா இப்போ இங்கதான்... ஆனால் அப்போ அங்கே.... lol

    பதிலளிநீக்கு
  35. காட்டான் கூறியது...
    கதைக்கரு புலம் பெயர் வலிகளையும் சேர்த்தே சொல்லும் என்று எதிர்பாக்கிறேன்..<<<<<

    இது காதல் கதை என்ற வடியா அதை சொல்வது கொஞ்சம் கஸ்ரம் மாமா... இருந்தாலும் முயற்சிக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  36. நிகழ்வுகள் கூறியது...
    எனக்கென்னமோ ஆர்னிகனின் இடத்தில துஷியின்ர பெயர் வரும் போல தான் தோணுது..அந்த பொண்ணு கூட 'பதினோரு வயசில பாத்தது' தானே ))<<<<<<<<<<<<

    ராஸ்கல்ஸ்................................. யோவ் பப்ளிக் அடங்கப்பா.... அவ்வவ் :(

    பதிலளிநீக்கு
  37. PUTHIYATHENRAL கூறியது...<<<
    தேங்க்ஸ்

    பதிலளிநீக்கு
  38. திண்டுக்கல் தனபாலன்கூறியது...
    கதையா? அனுபவமா? நண்பரே! பகிர்வுக்கு நன்றி.<<<<

    கொஞ்சம் அனுபவம் கொஞ்சம் கதை பாஸ்... உஸ் வெளில சொல்லிராதீங்க..... அவ்வ

    பதிலளிநீக்கு
  39. மகேந்திரன் கூறியது...
    இயல்பான தொடர்கதை நண்பரே..
    தொடருங்கள்.<<<<<<<<<<<<<<<

    தேங்க்ஸ் நண்பா.....

    பதிலளிநீக்கு
  40. K.s.s.Rajh கூறியது...
    ////நிலவை போல் சுத்தமான வட்டமுகம்.. திருக்குறளை போல் சிக்கனமான சிறு உதடுகள்.. குளிரில் படபடக்கும் உதடுகள் இடையே தெரியும் முத்து பற்கள்.. பெரிய விழிகள்.. பாதி நனைத்த உடையை மீதியையும் ஈரமாக்கும் தண்ணீர் சொட்டும் கருங்கூந்தால்.. ஈரப்பாவாடையை குனிந்து பிழியும் போது அங்கங்கே திமிரும் இளமை..... கடவுளே.. இப்படியொரு அழகியை இதுவரை நான் பார்த்ததே இல்லையே!! ////
    நெடுங்கேணி மண்ணை நான் நன்கு அறிவேன் அங்கே இப்படி ஒரு பேரழகியா? மச்சி இப்ப அங்கதான் இருக்காளா என்று சொல்லு நான் தேவை என்றால் விசாரிச்சு சொல்லுறன் அவ்வ்வ்வ்<<<<<<<<<<<<<<<<

    ஹா ஹா.... மச்சி நீ பிளான் பண்ணீட்ட போல இருக்கே... நம்பலாமா மச்சி.... பொண்ணு விடயத்தில் இந்த துஷி யாரையும் நம்ப மாட்டான்... ஹா ஹா

    பதிலளிநீக்கு
  41. K.s.s.Rajh கூறியது...
    அட காட்டான் மாமாவுக்கு ஒரு பாத்திரம் கதையில் இருக்கா<<<<<<<<<<<<<

    மாமாவுக்கு இதில் கவிரவ தோற்றம்... ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  42. K.s.s.Rajh கூறியது...
    ////நிலவை போல் சுத்தமான வட்டமுகம்.. திருக்குறளை போல் சிக்கனமான சிறு உதடுகள்.. குளிரில் படபடக்கும் உதடுகள் இடையே தெரியும் முத்து பற்கள்.. பெரிய விழிகள்.. பாதி நனைத்த உடையை மீதியையும் ஈரமாக்கும் தண்ணீர் சொட்டும் கருங்கூந்தால்.. ஈரப்பாவாடையை குனிந்து பிழியும் போது அங்கங்கே திமிரும் இளமை..... கடவுளே.. இப்படியொரு அழகியை இதுவரை நான் பார்த்ததே இல்லையே!! அவளை விழுங்கி விடுவதுபோல் பார்த்துகொண்டு அறையுனுள் நான் நின்றேன். எவ்வளவு நேரம் அப்படியே நின்று இருப்பேனோ தெரியவில்லை. ஏதோ மூளையில் உறைக்க சட்டென திரும்பியவள் தன்னையே வெறித்து பார்த்துகொண்டிருக்கும் என்னை பார்த்ததும் அந்த அழகிய விழிகள் மிரட்சியால் அகல விரிந்தது. சில விநாடிகள்தான் என்னை பார்த்திருப்பாள் சட்டென கொட்டும் மழையில் இறங்கி இருட்டினுள் ஓட தொடங்கினாள்.////

    இதை நண்பன் என்று சொல்லவில்லை ஆழ்மனதில் இருந்து சொல்கின்றேன் எழுத்தாளர் சாண்டிலியனின் கதைகளை கவனித்தால் இரண்டு பக்கத்துக்கு ஒரு முறை பெண்களை அழகாக வர்ணிப்பார் மிக சிறப்பாக இருக்கும் நான் எல்லாம் அவர் புத்தகங்கள் படிப்பதே அந்த வர்ணிப்புக்காகத்தான்(இப்ப நாவல்கள் படிக்கும் பழக்கம் தொலைந்து போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டது..)
    அப்படி ஒரு பீலிங்கை தந்தது உங்கள் வர்ணனை மிக அழகான எழுத்துநடை
    இந்த தொடரை மேலும் மெருகூட்டி நாவலாக வெளியிடலாம் முயற்சி செய்யுங்கள் பாஸ்.....<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    ரெம்ப தேங்க்ஸ் மச்சி.... சாண்டில்யன் எனக்கு ரெம்ப புடித்த எழுத்தாளர் அவர் பெயர் கொண்டு என்னை பாராட்டுவது மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தாலும் அதற்க்கு சற்றும் தகுதி அற்றவன் நான் என்று தெரியும்...

    மச்சி... புத்தகமாகவா??? ஆஹா.... அவ்ளோ தகுதி இருக்க இந்த தொடருக்கு.....!!! ஆனாலும் இது ஒரு சிறு தொடர் பாஸ் இன்னும் சில அத்தியாயங்களுடன் முடிந்துவிடும்.

    பதிலளிநீக்கு
  43. Yoga.S.FR கூறியது...
    வணக்கம்,சார்!கம்பன் பிச்சை வாங்க வேண்டும் போலிருக்கிறது,அப்படி வர்ணிக்கிறீர்கள்.அது தான் சார் என்றேன்!<<<<<<<<<<<<

    இரவு வணக்கம் பாஸ். சாரா.... அவ்வ....... கம்பனா??நானா?? அவ்வவ்....... ஆனாலும் தேங்க்ஸ் பாஸ்

    பதிலளிநீக்கு
  44. Yoga.S.FR கூறியது...
    K.s.s.Rajh கூறியது...
    அட காட்டான் மாமாவுக்கு ஒரு பாத்திரம் கதையில் இருக்கா?////மாட்டினாரு!<<<<<<<<<<<<<<

    ஹீ ஹீ........ காட்டான் மாமா மாட்டினதில் உங்களுக்கு பெரிய சந்தோசம் போல்....:):) lol

    பதிலளிநீக்கு
  45. Yoga.S.FR கூறியது...
    காட்டான் கூறியது...
    அட.. நாமதான் முதலா?////என்ன ஒரு சந்தோசம்,வரப் போகும் ஆப்பு தெரியாமல்?<<<<<<<<<<<<<

    ஹீ ஹீ.... அதே அதே...

    பதிலளிநீக்கு
  46. Yoga.S.FR கூறியது...
    ஆகுலன் கூறியது...
    அந்த தேவதை ரசிக்கும் படியாக உள்ளது...
    அண்ணே இந்த கதையில் வரும் கதாபாத்திரத்தின் வயது என்ன?///உங்கள விட ஒரு ஐஞ்சு வயது கூட!(என்ன ஒரு கொல வெறி<<<<<<<<<<<<<<<<<<<<<

    வை திஸ் கொலை வெறி கொலை வெறி என்று ஆகுலன் யோகா பாஸை பார்த்து பாடுறது என் கண்ணுல தெரியுது... ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  47. நிரூபன் கூறியது...
    வணக்கம் துஸி,
    அருமையாகப் பதிவினை நகர்த்திச் செல்லுறீங்க.
    உங்கள் தமிழ்ப் பற்றினையும், உங்களுக்குள் இருக்கும் தமிழ்ப் பரிச்சயத்தினையும் நினைக்கையில் புல்லரிக்கிறது.<<<<<<<<<<<<<<<<<<<<<

    நிரு பாஸ் எனக்கு கிடைத்த பாராட்டிலையே இதைதான் பெருசா நினைக்கிறேன்... ஹும்... ஒரு தமிழில் விளையாடும் எழுத்து புலவரிடம் (வயதி அல்ல... ஹீ ஹீ) இருந்து வரும் பாராட்டு என்றால் சும்மாவா??? ரியலி ஹப்பி.... தேங்க்ஸ் நிரு.

    பதிலளிநீக்கு
  48. நிரூபன் கூறியது...
    இயற்கை வர்ணனைகள், இலக்கிய ரசம் சிந்தும் பெண்ணைப் பற்றிய வர்ணனைகள் யாவும் சிறப்பாக இருக்கிறது. நெடுங்கேணிக்குப் போக கிஸ் ராஜா இப்பவே தயாராகிட்டாராம். ஜாக்கிரதை மச்சி!<<<

    தேங்க்ஸ் நிரு.... யா யா கிஸ் ராஜா இப்போ எல்லாம் ஒரு மார்க்கமாத்தான் அலையிறாரு.... அவ்வவ்

    பதிலளிநீக்கு
  49. வேடந்தாங்கல் - கருன் *!கூறியது...
    வர்ணனைகள் அசத்தல்..-<<<<<<<<<<<<<<<<<<<<<<

    தேங்க்ஸ் கருண்

    பதிலளிநீக்கு
  50. தனிமரம் கூறியது...
    வணக்கம் ஐயா துசி !
    தனிப்பட்ட தேடலால் பின்னூட்டம் இடமுடியாவிட்டாலும் உங்கள் தொடரை வேலியோரம் நின்று வாசிக்கும் ஒரு யாசகன்.
    தொடருக்கு அதிக வரவேற்பில்லை என்று கடந்த பதிவில் கூறியது தவறு. என்பது என் கருத்து. நல்ல தொடர்களுக்கு எப்போதும் வரவேற்று இருக்கின்றது. செங்கோவி ஐய்யா,நிரூபன் என உதாரணபுருசர்கள் இருக்கின்றார்கள் பதிவுலகில். அதில் தனிமரமும் கண்ட அனுபவம் எப்போதும் நல்லவை ஊக்கப்படுத்தப்படும் என்ற செங்கோவி ஐயாவின் கூற்றும் நிஜமே!<<<<<<<<<<<<<<<

    தேங்க்ஸ் நேசன் அண்ணா.... என் தொடர் உங்களையும் மீண்டும் பதிவுலகம் இழுத்துவந்ததில் பெருமை எனக்கு.... உண்மைதான் நல்லவை எங்கே இருந்தாலும் வரவேற்பு பெறுமே... ஆனாலும் தொடர்களுக்கு வரவேற்பு அதிகம் இல்லை என்பதும் கசக்கும் உண்மைதானே அண்ணா...

    பதிலளிநீக்கு
  51. தனிமரம் கூறியது...
    வன்னியின் நெடுங்கேணி மண்ணனின் வாசத்துடன் தமிழில் எண்டரி வீரமூர்நாத் அவர்களின் தமிழ் ஆளுமையைப் போல் உங்கள் தெள்ளு தமிழ் வர்ணைகள் நெஞ்செல்லாம் பொங்கி வழியும் அழகு தொடரினைச் சிறப்பாக கொண்டு செல்கின்றது. சிறுதொடராக்காமல் நீண்ட தொடருக்கான கதைக்களம் இருப்பது போன்ற உணர்வைத் தருகின்றது தொடர் நீண்டு செல்ல வேண்டி நிற்கின்றேன்.<<<<<<<<<<<<<<<<<<<<

    எல்லோரும் தொடரை இழுக்க சொல்லுகிறார்கள்... ஹப்பியா இருக்கு..... பாப்போம்.... எனக்கு இழுக்க அதிகம் விருப்பம் இல்லை அண்ணா...

    பதிலளிநீக்கு
  52. தனிமரம் கூறியது...
    தொலைந்து போன வாழ்வை ஆர்னிங்கன் மூலமும் அவரின் தந்தை மூலமும் காலமாற்றத்தைச் சொல்லிச் செல்வீர்கள் என்று நம்புகின்றேன் ஐயா.<<<<<<<<<<<<<

    முயற்சிக்கிறேன் நேசன் அண்ணா...

    பதிலளிநீக்கு
  53. தனிமரம் கூறியது...
    காட்டான் வாங்கியந்த கட்டில் தேக்குமரக்கட்டிலா?சாக்குக் கட்டிலா? இல்லை நாகரிகம் தந்த தம்ரோ தயாரிப்பான கம்பிக்கட்டிலா என்ற எண்ணங்களோடு விடைபெறுகின்றேன். தொடர்ந்து பின்னூட்டம் இடாமல் விட்டாலும் தொடரினை சுவாசிப்பேன் அழகு தமிழ் வர்ணைக்காக. மீண்டும் சந்திக்கலாம் சில வாரத்தில் ஐயா. <<<<<<<<<<<<<<<<

    நேசன் அண்ணா... பெருய பெரியா ஆக்கள் பெயர் சொல்லி பாராட்டு கிறீர்கள். ஹப்பியா இருக்கு.... தேங்க்ஸ் அண்ணா..... மீண்டும் வாருங்கள் கலக்குவோம் ;)

    பதிலளிநீக்கு
  54. அம்பலத்தார் கூறியது...
    /வீட்டுக்குள் நுழைந்தால் ஒரே ஆச்சரியம்தான். எழுபத்தைந்து வயதிலும் பம்பரமாய் சுழண்டு கொண்டிருப்பார் அப்பம்மா. பெரிய வீட்டில் ஒரு மூலையில் குவிக்கப்பட்ட வெங்காயம். இன்னொரு மூலையில் அடுக்கப்பட்ட நெல்லு மூட்டை கச்சான் மூட்டை. முற்றத்தில் காயும் எள்ளு என, எதிர் எதிரே தென்படும் வேலைக்காரர்களிடம் இதை இப்படி செய் அதை அப்படி செய்திருக்கலாமே என சுழண்டு வேலை வாங்கும் அப்பம்மா.../

    கிராமத்துவீட்டை அப்படியே கண்முன் கொண்டுவந்துவிட்டியள்.<<<<<<<<<<<<<<

    தேங்க்ஸ்

    பதிலளிநீக்கு
  55. அம்பலத்தார் கூறியது...
    என்னயா இது நனைந்தவளின்ரை தலையை துவட்டி சாம்பிராணி புகை போட்டுவிடுகிறதைவிட்டிடு, இருட்டினுள் அவள் உருவம் மறையும்வரை பார்த்துக்கொண்டே நின்றாராம் சீ சீ வேர்ய்பாத்<<<<<<<<<<<<<<<<

    அவ்வ.... சரி அடுத்த முறை நீங்கள் சொன்னதை செய்கிறேன்.... ஹா ஹா

    பதிலளிநீக்கு
  56. shanmugavel கூறியது...
    நன்றாக ரசிக்கிறீர்கள் அய்யா! தொடருங்கள்.படிக்கத்தூண்டுகிறது.<<<<<<<<<<<<<<

    ரெம்ப தேங்க்ஸ் பாஸ்

    பதிலளிநீக்கு
  57. KANA VARO கூறியது...
    அதென்னப்பன், ஈரப்பாவடையைப் பிழியும் போது இளமை தெரியுதோ!? ரொம்ப முத்திப்போனாய்.<<<<<<<<<<<<<

    அண்ணே போங்கண்ணே.... எனக்கு வெக்கம் வெக்கமா வருது.... ;)

    பதிலளிநீக்கு
  58. வருண் கூறியது...
    ***தன்னையே வெறித்து பார்த்துகொண்டிருக்கும் என்னை பார்த்ததும் அந்த அழகிய விழிகள் மிரட்சியால் அகல விரிந்தது.***

    என்ன பார்வை உந்தன் பார்வை னு சொல்லாமல் சொல்லியிருக்குமே? :)))<<<<<

    ஹா ஹா.... இருக்கலாம் இருக்கலாம்.... ரசனைகாரர் பாஸ் நீங்க... தேங்க்ஸ்

    பதிலளிநீக்கு
  59. ♔ம.தி.சுதா♔ கூறியது...
    அடடா நெடுங்கேணி தான் உங்க ஊரா?<<<

    ஆமாம் பாஸ்.... :) :)

    பதிலளிநீக்கு
  60. ♔ம.தி.சுதா♔ கூறியது...
    ஃஃஃநிலவை போல் சுத்தமான வட்டமுகம்.. திருக்குறளை போல் சிக்கனமான சிறு உதடுகள்.. குளிரில் படபடக்கும் உதடுகள் இடையே தெரியும் முத்து பற்கள்.. பெரிய விழிகள்.. பாதி நனைத்த உடையை மீதியையும் ஈரமாக்கும் தண்ணீர் சொட்டும் கருங்கூந்தால்..ஃஃஃஃஃஃ

    அது சரி பெண்கள் தொன்றும் இடததில் மட்டும் நம்ம பசங்க கம்பனையே வெல்லறாங்களே அந்த ரகசியம் என்னவோ...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<



    ஆஹா.... அவ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  61. கவி அழகன் கூறியது...
    Mm kalakkal தொடருங்கள்<<<

    தேங்க்ஸ் பாஸ்

    பதிலளிநீக்கு
  62. சி.பி.செந்தில்குமார் கூறியது...
    verygood . continue <<<<

    தேங்க்ஸ் சிபி அண்ணா.

    பதிலளிநீக்கு
  63. துஷி...கதையல்ல நிஜம் மாதிரி இருக்கு.அதுவும் யாருமே எந்தக் கவிஞருமே சொல்லாத உவமை திருக்குறள்போல உதடு...அப்பப்பா !

    பதிலளிநீக்கு
  64. மிகவும் யதார்த்தமாக கதையை கொண்டு செல்கிதொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  65. ம்ம்ம்...நல்லாப்போகுது பாஸ்!

    பதிலளிநீக்கு
  66. நண்பரே. ஊருக்கு போனதால் இபபக்கம் வர முடியவில்லை.. நிறைய பதிவு எழுதியிருக்கிங்க படித்துப்பார்க்கிறேன்.. அப்புறம் நம்பிக்கையை விமர்சிப்பது சம்பந்தமான பதிவு அருமை துஷி.

    பதிலளிநீக்கு
  67. ஹேமா சொன்னது…
    துஷி...கதையல்ல நிஜம் மாதிரி இருக்கு.அதுவும் யாருமே எந்தக் கவிஞருமே சொல்லாத உவமை திருக்குறள்போல உதடு...அப்பப்பா !<<<<

    ஆஹா.... தேங்க்ஸ் அக்கா.... இது உண்மையான பாராட்டு தானே! உள் குத்து ஒண்டும் இல்லையே.... ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  68. மாலதி சொன்னது…
    மிகவும் யதார்த்தமாக கதையை கொண்டு செல்கிதொடருங்கள்.<<<

    தேங்க்ஸ் அக்கா

    பதிலளிநீக்கு
  69. ஜீ... கூறியது...
    ம்ம்ம்...நல்லாப்போகுது பாஸ்!<<

    தேங்க்ஸ் பாஸ்

    பதிலளிநீக்கு
  70. Riyas கூறியது...
    நண்பரே. ஊருக்கு போனதால் இபபக்கம் வர முடியவில்லை.. நிறைய பதிவு எழுதியிருக்கிங்க படித்துப்பார்க்கிறேன்.. அப்புறம் நம்பிக்கையை விமர்சிப்பது சம்பந்தமான பதிவு அருமை துஷி.<<<



    ஹாய் நண்பா... ஊருக்கா?? ஹும்... ரெம்ப ஹப்பியா இருந்திருப்பீங்க.... சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா???



    தேங்க்ஸ் பாஸ்

    பதிலளிநீக்கு
  71. அழகுத்தமிழில் அற்புத வர்ணிப்புகளுடன் தொடர் அருமையாபோகுது துஷி!!
    பகுதி 3 படிக்கபோரன்...

    பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...