செவ்வாய், டிசம்பர் 13, 2011

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.. 04



ன்று எப்படியாவது அவளைப்பற்றி தெரிந்து கொள்ளனும் என்று நான் தவித்துகொண்டிருந்தேன். அவள் கால்கள் பின்னி பிணைய மெதுவாக என்னைக்கடந்து பார்க்காதவள் போல் செல்ல தொடங்கினாள். 


உங்களுக்காத்தான் இவ்ளோ நேரமாய் காத்திருக்கேன்.. இப்போ நீங்க பேசமா போனா என்ன அர்த்தம்! அவளுடன் நடந்தபடியே கொஞ்சம் தைரியத்தை வரவழைத்தபடி கேட்டேன். நின்று திரும்பியவள் விழி இமைகள் படபடக்க என்னைப்பார்த்தாள். அந்த பெரிய விழிகளின் வீச்சை தாங்கமுடியாமல் என் கண்கள் தரை தாழ்ந்தது. எ...ன்ன பேசணும் ? தடுமாறியபடி கேட்டாள். உங்க பேர்..? சற்று யோசித்தவள் "சுலக்ஷிகா" என்று மெதுவாக உச்சரித்துவிட்டு வேகமாக நடக்க முயர்சித்தாள் , நில்லுங்களேன் ப்ளீஸ்..  ஏங்க பயப்படுறீங்க?  ச்சும்மா ரெண்டு வார்த்தை பேசுறதில் என்ன இருக்கு.. அதுக்கு போய் இப்படியா..! ஓடுறது. நீங்க நேற்று ஓடின ஓட்டத்தில் இப்பவும் எனக்கு மூச்சு வாங்குது தெரியுமா!! நான் சிரிக்காமல் சொல்ல, அவள் இதழ் மெல்ல விரிந்தது. அப்பாடா.... இப்பயாச்சும்  சிரிச்சீங்களே! நான் நினைச்சேன் உங்களுக்கு சிரிக்கவே தெரியாதாக்கும் என்று நான் பெருமூச்சு விட, மீண்டும் இதழ்விரித்து சிரித்தவள் நான் போகணும்..  என்று நகர்ந்தாள், முன்னாள் போய் மறித்து நின்றேன்.


என்னைப்பற்றி எதுவுமே கேக்க மாட்டீங்களா?? நான் அப்பாவியாய் முகத்தை வைத்துகொண்டு கேட்க, குறும்பு கொப்பளிக்க என்னைப்பார்த்தவள், தெரியுமே... ஒற்றைவரியில் சொல்லிவிட்டு நகர்ந்தவளை ஆச்சரியமாய் பார்த்தபடி பின் தொடர்ந்தேன். தெரியுமா! எப்படி..?!!  ம்.... உங்க பேர் ஆர்ணிகன் தானே? ஆமா... இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும் நான் முகத்தில் ஆச்சரியம் காட்ட, திரும்பி ஒரு ஏளன பார்வை பார்த்தவள். நீங்க வாறத்துக்கு முதலே உங்கள பத்தியும் உங்க அப்பா அம்மா பற்றியும் காமாட்சி அப்பம்மா நிறைய சொல்லி கேட்டு இருக்கேன் என்று சர்வசாதாரணமாய் சொன்னவளின் குரலில் மாற்றம்...! காமாட்சி அப்பம்மா ரெம்ப பாவம், தனியே இருந்து ரெம்ப கஸ்ரப்படுறாங்க என்று சுலக்ஷிகா அப்பம்மா மேல் காட்டிய பரிவு ஆச்சரியமாயும் அவள் மேல் ஒரு வித மரியாதையையும் உண்டு பண்ணியது.

அதன் பின் அவளை அடிக்கடி சந்திக்க தொடங்கினேன். முதலில் தயங்கி தயங்கி பேசியவள் போக போக இயல்பாக பேச தொடங்கினாள். முன்னைய சந்திப்புகளில் அவள் தன்னை பயந்தவள் போல் காட்டிக்கொண்டது உண்மையில்லை என்பதை அவளுடனான அடுத்தடுத்த சந்திப்புகளிலேயே தெரிந்துகொண்டேன். எங்களுடைய எல்லா சந்திப்புகளிலும் அவளே அதிகம் பேசுவாள். அவளுடைய பேச்சுக்கள் எல்லாம் வெறும் உலர்ந்த சொற்களாலேயே உருவாக்கப்பட்டு இருக்கும். எல்லாத்தையும் தெரிந்தவள் அறிந்தவள் அனுபவித்தவள் போல் அலட்டலான அவள் பேச்சில் ஒளிந்திருந்து அடிக்கடி வெளிப்படும் விரக்தி அவள் வாழ்க்கையில் நிறைய அடிபட்டதை காட்டிக்கொடுத்தது. அவளுடைய எதார்த்தமான பேச்சு துணிச்சலான பதில்கள் எதையுமே கடந்துபோகும் அவள் மனநிலை என்று எனக்கு அவள் ஒரு ஆச்சரிய குறியாகவே தென்பட்டாள். இதனால் என் மனமும் அவளை அதிகமாகவே நெருங்க தொடங்கிவிட்டது .

எங்கள் வீட்டின் பின்னால் உள்ள வேப்பமரத்தடியில் நின்று பார்த்தால் அவள் வீடு தெரியும். அவளை சந்திக்க முடியாத நாட்களில் பெரும்பாலும் நான் இந்த வேப்பமரத்தடியில் நின்றுதான் அவள் வீட்டையே பார்த்தபடி நிற்பேன். அப்பம்மாவின் பிரமாண்ட வீட்டுக்கு அப்படியே எதிரானது அவள் வீடு. சிறிய கூரை வீட்டில் இடிந்து விழும் நிலையில் இருக்கும் மண் சுவர்கள், அதற்கு தகரத்தால் பொருத்தப்பட்ட கதவு என சுலக்ஷிகாவின் வீடு ஒரு ஏழ்மையின் சின்னம். எனக்கு சுலக்ஷிகா வீட்டில் அவளைத்தவிர மற்றவர்கள் அறிமுகம் இல்லை என்றாலும் தூர நின்று பார்த்திருக்கிறேன். 


அவள் வீட்டில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் சந்தோஷமாய் பேசி நான் பார்த்தது இல்லை. அவள் அப்பா அதிகாலைகளில் அவசரமாக வீட்டைவிட்டு வெளியேறுவதை பார்த்திருக்கேன் பின் இருட்டிய பின் கையில் ஏதாவது ஒரு பையுடன் வீட்டுக்குள் நுழைவதையும் பார்த்திருக்கேன். இது பற்றி அப்பம்மா வீட்டில் வேலை செய்பவர்கள் அடிக்கடி பேசிக்கொள்வார்கள், அவருக்கு கடன் கொடுத்தவர்கள் தொல்லையாம் அதான் அவர்களுக்கு பயந்து பகலில் வீட்டில் இருப்பது இல்லையாம். சுலக்ஷிகா வீட்டில் பெரும்பாலும் இரவில்தான் அடுப்பு எரியும், அதுவும் அவள் அப்பா எதையாவது வேண்டிக்கொண்டு போனால்தான். 

சுலக்ஷிகாவுக்கு ஒரு தம்பி மட்டுமே..  நான் பாக்கும் போதெல்லாம் இடுப்பில் மட்டும் கிழிந்த ஒரு காற்சட்டையுடன் முற்றத்து மணலில் விளையாடிக்கொண்டிருப்பான். அவன் வேற்றுடம்பு வெய்யில் பட்டு பட்டு கருத்து இருக்கும். அந்த வீட்டின் வறுமை அவனிலேயே அதிகம் தெரியும். அவன் அடிக்கடி வீட்டுனுள் சென்று தாயிடம் எதையோ கேட்டு அழுவது கேட்கும் பின் சற்று நேரத்தில் எதுவும் நடக்காதது போல் கண்களை துடைத்தபடி வெளியே வந்து மீண்டும் விளையாட தொடங்கிவிடுவான். சுலக்ஷிகாவின் அம்மாவை நான் இதுவரை பார்த்ததே இல்லை. முற்றத்து மணலில் விளையாடும் மகனை கூப்பிடும்  போது அவள் குரலைக்கேட்டு இருக்கேன். அவள் குரல் ஜீவன் அற்று பரிதாபமாய் இருக்கும், அதனாலேயே என்னவோ சுலக்ஷிகாவின் அம்மாவை பார்க்க வேண்டும் என்ற உந்தல் மனதில் தோன்றிக்கொண்டே இருந்தது. ஆனால் அந்த சந்தர்பத்தை இறைவன் அவ்ளோ கொடூரமாக அமைப்பான் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

தொடரும்...


குறிப்பு:
இத்தொடர் யுத்தம் நடந்த காலபகுதியில் நடப்பதாகவே எழுதப்பட்டுள்ளது.
இத்தொடர் ஒரு சிறு குறுந்தொடர்.. சில பகுதிகளுடன் முடிவடையும்.
இத்தொடரில் வரும் காதாபாதிரங்களோ கதையோ உண்மையல்ல முழுக்க முழுக்க கற்பனையே.. (அவ்வ..
இத்தொடரின் நாயகிக்கு "சுலக்ஷிகா" என்று பெயர் சூட்டிய கலியுக காதல்மன்னன் "நாற்று" நிருபனுக்கு நன்றி.lol

28 கருத்துகள்:

  1. அதனோ தெரியல்ல பாஸ், பொண்ணுங்களுடனான முதல் சந்திப்பின் போது அநேகமான பொண்ணுங்க தங்களை அப்பாவிகளாகவே காட்டிக்கொள்(ல்)கிறார்கள்..ஆனால் ஆண்களோ ஒரு படி மேலே சென்று 'வளிந்தது கொள்(ல்)கிறார்கள்'.)

    பதிலளிநீக்கு
  2. என்னதான் இருந்தாலும் மடக்கியாச்சு...

    பதிலளிநீக்கு
  3. அண்ணே வறுமையின் விவரிப்பு அருமை...வாசிக்கும் பொது வாட்டுகிறது....

    பதிலளிநீக்கு
  4. ////இத்தொடரின் நாயகிக்கு "சுலக்ஷிகா" என்று பெயர் சூட்டிய கலியுக காதல்மன்னன் "நாற்று" நிருபனுக்கு நன்றி.////

    ஹி.ஹி.ஹி.ஹி....இவருக்கு இந்த பெயரில் எதோ மயக்கம் போல அவ்வ்வ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  5. சுலக்ஷிகா வின் கதையை நீங்கள் சொல்லும் போது எனக்கு என்னமோ கற்பனை என்று தோன்றவில்லை ஏன் என்றால் அந்த ஊரில் பெரும்பாலான குடும்பங்களின் நிலை இதுதான் எனவே இதுவும் உண்மைக்கதை போலதான் இருக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    தொடருங்கள் மாப்ள சிறப்பாக இருக்கு அடுத்த பகுதியில் என்ன சொல்ல போகின்றீர்கள் என்று எதிர்பார்க்க முடிகின்றது ஆனாலும் வெயிட்டிங் அவ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  6. ////நான் சிரிக்காமல் சொல்ல, அவள் இதழ் மெல்ல விரிந்தது. அப்பாடா.... இப்பயாச்சும் சிரிச்சீங்களே! நான் நினைச்சேன் உங்களுக்கு சிரிக்கவே தெரியாதாக்கும் என்று நான் பெருமூச்சு விட,////

    அப்பப்பா....

    பாக்கியராஜ் பட திரைக்கதை போல இல்ல இருக்கு...

    பதிலளிநீக்கு
  7. ////எங்களுடைய எல்லா சந்திப்புகளிலும் அவளே அதிகம் பேசுவாள். அவளுடைய பேச்சுக்கள் எல்லாம் வெறும் உலர்ந்த சொற்களாலேயே உருவாக்கப்பட்டு இருக்கும்.////

    நிறைய சந்திப்புகள் இப்படித்தான்..
    காலப்போக்கில் உலர்ந்த பேச்சுக்களாகவே மாறிவிடுகின்றன..

    இதெல்லாம் சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
    தந்துவிட்டேன் என்னை என்று .. காதல் மொழி பேசி வருவதில்லை
    வாழ்வின் நிதர்சன் அறிந்து வரும் வார்த்தைகள்..

    பதிலளிநீக்கு
  8. மிக மிக இயல்பாய்
    ரம்மியமாக கதை சொல்கிறீர்கள் நண்பரே..
    தொடருங்கள்..

    பதிலளிநீக்கு
  9. இந்தப்பதிவில் எனக்குப்பிடிக்காத ஒரே வார்த்தை தொடரும் தான் ஹி ஹி செம யூத் ஃபுல் கலக்கல்

    பதிலளிநீக்கு
  10. >>முன்னைய சந்திப்புகளில் அவள் தன்னை பயந்தவள் போல் காட்டிக்கொண்டது உண்மையில்லை என்பதை அவளுடனான அடுத்தடுத்த சந்திப்புகளிலேயே தெரிந்துகொண்டேன்.

    லேடீஸ் சைக்காலஜி

    பதிலளிநீக்கு
  11. டைட்டில்ல இன்னும் கிளாமர் சேர்த்திருக்கலாம்

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் ஐயா!
    அழகிய வர்ணைகள் ஏழைவீட்டை இடிவிழும் சுவர் ஒப்பீடு உண்மையைச் சொல்லும் வீடுகளின் இயல்பை! நல்ல
    எழுத்து நடையில் தொடர் ஆவலைத் தூண்டுகின்றது அடுத்தது என்ன என்று!

    பதிலளிநீக்கு
  13. வெளிநாட்டில் /வெளி இடங்களில் இருந்து வரும் மற்றவர்கள் மீது இயல்பாகவே உள்ளூரில் இருக்கும் பெண்களுக்கு ஒருவித பயம் இருக்கும் அது சுலசிஹா மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க
    முடியும் தொடரிங்கள் முடியும் போது எல்லாம் பின்னூட்டத்துடன் வருகின்றேன் . ஓட்டுப்போட தற்சமயம் முடியாது! இரவு முயல்கின்றேன்!

    பதிலளிநீக்கு
  14. //ஆனால் அந்த சந்தர்பத்தை இறைவன் அவ்ளோ கொடூரமாக அமைப்பான் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.//

    அடுத்த பகுதியை எதிர் பார்த்து காத்திருக்க வைக்கிறீர்கள்.. அருமை

    பதிலளிநீக்கு
  15. வணக்கம்,துஷி!பொன் ஜூர்!...........சரி!

    பதிலளிநீக்கு
  16. வறுமை பற்றிய வரிகள் மனதை வாட்டுகின்றன

    பதிலளிநீக்கு
  17. ஒ கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது, என்பதுதான் நினைவுக்கு வருகிறது...!!!

    பதிலளிநீக்கு
  18. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  19. எங்களுடைய எல்லா சந்திப்புகளிலும் அவளே அதிகம் பேசுவாள். அவளுடைய பேச்சுக்கள் எல்லாம் வெறும் உலர்ந்த சொற்களாலேயே உருவாக்கப்பட்டு இருக்கும்

    //
    எப்படி பேச்சு வரும்?

    பதிலளிநீக்கு
  20. அடுத்த பகுதியை எதிர் நோக்க வைக்கும் நடை!அருமை

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் மருமோனே!
    உண்மையாகவே எழுத்து நடை அருமை.. அதுவும் அந்த வீட்டின் ஏழ்மையை அந்த சிறுவனை வைத்து சொன்னீர்களே.. சூப்பர்.

    நானும் பதிவுலகம் வந்த பின்னரே தொடர்களை வாசிக்கிறேன்.. அந்த விதத்தில் இந்த தொடரும் ஒன்று..

    வாழ்த்துக்கள் மருமோனே!

    பதிலளிநீக்கு
  22. //அந்த வீட்டின் வறுமை அவனிலேயே அதிகம் தெரியும். அவன் அடிக்கடி வீட்டுனுள் சென்று தாயிடம் எதையோ கேட்டு அழுவது கேட்கும் பின் சற்று நேரத்தில் எதுவும் நடக்காதது போல் கண்களை துடைத்தபடி வெளியே வந்து மீண்டும் விளையாட தொடங்கிவிடுவான்.//

    வறுமையை சிறப்பாக பதிவு செய்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  23. கதை மிகுந்த சுவாரஸ்யமாகத் தொடர்கிறது
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  24. விறுவிறுப்பாக செல்கிறது கதை. சுருக்கமாக : கலக்குறீங்க...

    பதிலளிநீக்கு
  25. இயல்பான நடையில் இனிமையாக சென்றது கதை! அருமை!

    பதிலளிநீக்கு
  26. ///நான் அப்பாவியாய் முகத்தை வைத்துகொண்டு கேட்க, குறும்பு கொப்பளிக்க என்னைப்பார்த்தவள்,////

    இம்முறை வரிகளுக்குள் ஏன் ஒரு ஏக்கம் தெரிகிறது...

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் மச்சி,
    சுலக்‌ஷிகாவின் அறிமுகம் அருமை....

    அருமையான கிராமத்து சம்பாஷணைகளுடன் தொடர் நகர்கிறது.

    பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...