ஞாயிறு, டிசம்பர் 11, 2011

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.. 03


ன்றிரவு நான் தூங்க பின்னிரவு தாண்டிவிட்டது. இருட்டில் மழை இரவில் மின்னல் வெளிச்சத்தில் திடிரென தோன்றி மறையும் அழகிய பூப்போல் அவள் முகம் என் மனதினில் பதிந்துவிட்டது. அந்த சில வினாடிகள் அவள் என்னை பார்த்த போது மிரட்சியையும் தாண்டி அவள் முகத்தில் அப்பியிருந்த அந்த மென் சோகம் என் மனசை பிசைந்து கொண்டேயிருந்தது.

இரவு நெடுநேரம் கண்விழித்ததால் காலையில் தூக்கம் கலைந்த பின்னும் கண் விழிக்க மனமின்றி படுக்கையில் கிடந்தேன். நெடுநேரமாகியும் திறக்கபடாததால் என் அறைக்கதவு தட்டப்பட அவசரமாக எழுந்து போய் கதவை திறந்தேன். வெளிய பாலுடன் அப்பம்மா.  அவளைப்பற்றி அப்பம்மாவிடம் விசாரிக்க நா துடித்தது. ஏதோ ஒரு முன்னெச்சரிக்கை தடுக்க அடக்கிகொண்டேன். ஆனாலும் அவளைத்தான் மறக்க முடியவில்லை. எதைப்பார்த்தாலும் அவள் முகம்தான் நிழலாடியது. அவளை மீண்டும் பார்க்க மாட்டோமோ! பேசமாட்டோமா! என்று மனசு கிடந்தது அடித்துக்கொண்டது. முன்பின் தெரியாத ஒருத்திக்காக என் மனம் ஏன் இப்படி தவிக்கிறது ஏங்கிறது..! என்னையே நான் கேட்டுக்கொண்டேன் பதில்தான் கிடைக்கவில்லை. சில வினாடிகள் நடந்த அந்த பார்வை பரிமாற்றங்களிலேயே எப்படி அவளால் என்னை பாதிக்க முடிந்தது நினைக்க நினைக்க ஆச்சரியமாய் இருந்தது. எப்போ பார்த்தாலும் வீட்டுக்குளேயே அடைபட்டபடி எதையாவது யோசிச்சபடியே திரியிறியே.. என்னாச்சுடா ஆர்ணிகன் குட்டி! வெளிலே ..ச்சும்மா காலாற நடந்திட்டு வரலாமில்ல? வேணும் எண்டா நானும் கூட வரவா... அப்பம்மா கொஞ்ச, நான் நெளிந்த படி.. இல்ல அப்பம்மா நான் தனியவே போயிட்டு வாறேனே.  ..ம் சரியா போச்சு இப்பவும் தனியா தானா? சரி அப்படி என்னதாண்டா யோசிப்ப! அப்பம்மா ஆச்சரியமாய் கேட்க சிரித்து மழுப்பியபடி நகர்ந்தேன்.

எவ்ளோ... அழகா இருக்கு! இவ்ளோ நாளா இங்கே வராம விட்டுடியே ஆர்ணிகன். உனக்கு இந்த அழகை எல்லாம் முதலே ரசிக்க கொடுத்து வைக்கவில்லைப்போல் மனசு ஆச்சரியப்பட்டு கோபப்பட்டு சலித்துக்கொண்டது. ஓங்கி வளர்ந்திருக்கும் பெரிய மரங்கள், பச்சைப்பசளேன அழகான புல்வெளி. அருகில் வளைந்து நெளிந்து ஓடும் ஆறு, சற்று தள்ளி யுத்தத்தால் சிதைந்து போய் இருக்கும் பழைய பிரமாண்டமான கட்டிடம் ஒன்று, அதில் படரும் கொடி. ஒவ்வொன்றையும் ரசித்தபடி நான் ஆற்றங்கரையை நோக்கி நடந்துகொண்டிருந்தேன். புல் மேய்ந்தபடி நின்ற ஆடுகள் தலையை தூக்கி என்னைப்பார்த்துவிட்டு மறுபடியும் மேய தொடங்கின. வேகமாக பாய்ந்தோடும் ஆற்று நீர் இடையிடையே பள்ளத்தில் விழுந்து எழும்புவதால் உண்டாகும் வெள்ளை வேளேரென்ற நுரைகள் அவ்ளோ அழகா இருந்தது. நான் மேடான கரைப்புல்லில் அமர்ந்தபடி கால்கள் இரண்டையும் ஓடும் நீருக்குள் விட்டபடி தெறிக்கும் மீன்களின் அழகையே கண்வெட்ட மறந்து ரசித்துகொண்டிருந்தேன்.

மிக அருகில் ..க்ளுக் ..க்ளுக் என குடத்துக்குள் யாரோ தண்ணீர் நிரப்பும் சத்தம், சட்டென திரும்பினேன் அருகில் அவள். நேற்றைய மழை இரவில் மனதை நனைத்துவிட்டு மாயமான தேவதை. அவளை பார்த்தபடி வார்த்தைகள் வராமல் நான் திணற, திரும்பியவள் விழிகளும் ஆச்சரியமாய் என்னை நோக்க அங்கே நான்கு விழிகளும் ஒன்றுடன் ஒன்று கவ்வி பின்னிக்கொண்டன. சில விநாடிகள்தான் ஆனால் சில யுகம் போல் கழிய யார்தான் முதலில் பார்வைகளை விலக்குவது என்ற போராட்டத்தில் அவளே ஜெயித்தாள். சட்டென சுதாரித்தவள்  பாதி நிறைந்த குடத்தை தூக்கியபடி மிக வேகமாக நடக்கதொடங்கினாள். ஒரு வினாடி செய்வதறியாது திணறிய நான் சுதாரித்தபடி வேகமாக அவளை பின்தொடர்ந்தேன். ப்ளீஸ்.. கொஞ்சம் நில்லுங்க.. உங்க கூட சில வார்த்தைகளாவது பேசணும்.. நான் தடுமாறி சொல்ல அவள் எதையும் காதில் வாங்காமல் வேகமாக நடப்பதிலேயே குறியாக இருந்தாள். ஹலோ.. ப்ளீசுங்க..பெயரையாவது சொல்லீட்டு போங்களேன்! நானும் வேகமாக பின் தொடர அவளினது பயமும் வேகமும்தான் அதிகரித்தது. இறுதியில் ஒரு வார்த்தை கூட பேசாமல் ஓடி மறைந்து விட்டாள். எனக்குத்தான் எதையோ தவற விட்டதைப்போல் மனசு கிடந்தது தவித்தது.

அடுத்த நாள். அதே நேரம் அதே இடம் அவள் வருகைக்காக காத்திருந்தேன். அவள் வருவாள் வருவாள் என மனசு திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தது. கடிகார முற்கள் சோம்பறியாகி மெது மெதுவாய் நடைபோடுவதைப்போலவும் நான் அதை தள்ளினால் என்ன என்ற நிலையில் ஒருவித அவஸ்சையிலேயே நான் தவித்துகொண்டிருந்தேன். நேற்று அவள் ஓடி மறைந்த இடத்தை பார்த்து பார்த்து கண்கள் சோரத்தொடங்கியது. அவள் வருகையை எதிர்பார்த்து எதிர்பார்த்து சோர்ந்து போயிருந்த என் கண்களில் திடீரென ஒரு ஒளிக்கீற்று. ஆம்... தூரத்தில் அவள் குடத்துடன் வருவது தெரிந்தது. நான் விபரிக்க முடியாத சந்தோஷத்தில் திளைக்க தொடங்கினேன். சாம்பல் நிற பூப்போட்ட சட்டையிலும் மெல்லிய கருப்பு நிற பாவாடையிலும் பாதி பின்னி விரிக்கப்பட்ட கூந்தலிலும் அவளை பார்க்கும் போது சிகிரியாவில் பூவோடு நிற்கும் சித்திரம்தான் உயித்தெழுந்து இங்கு குடத்துடன் வருகிறதோ என்ற ஜயம் எழுந்தது. வேகமாக வந்தவளின் நடை என்னைக்கண்டதும் தளர்ந்தது.

தொடரும்...


குறிப்பு:
இத்தொடர் யுத்தம் நடந்த காலபகுதியில் நடப்பதாகவே எழுதப்பட்டுள்ளது.
இத்தொடர் ஒரு சிறு குறுந்தொடர்.. சில பகுதிகளுடன் முடிவடையும்.
இத்தொடரில் வரும் காதாபாதிரங்களோ கதையோ உண்மையல்ல முழுக்க முழுக்க கற்பனையே.. (அவ்வ..
இத்தொடருக்கு அழகான முகப்பு படம் செய்து அனுப்பிய நண்பன் கந்தசாமிக்கு நன்றி.




88 கருத்துகள்:

  1. பொன் சுவார்,துஷி!கொன்னுட்டீங்க,போங்க! நானும் தான் கடந்த இரண்டு வாரங்களாக என்ன எழுதலாம் என்று மண்டைகாய யோசிக்கிறேன்.ஒன்றும் வர மாட்டேன் என்கிறது!அருமையாக இருக்கிறது,உங்கள் வர்ணனை,அட்டகாசம்!வாழ்க!

    பதிலளிநீக்கு
  2. இப்போது தான் நேரம் கிடைத்தது.மூன்று பகுதிகளையும் வாசித்தேன்!

    பதிலளிநீக்கு
  3. துஷி....குட்டி துஷி நல்ல வடிவு.நானும் இனி துஷிக்குட்டியெண்டுதான் கூப்பிடப்போறன்.பாருங்கோ அவரை.அவரும் அவரின்ர சிரிப்பும்.சிரிக்கிறாரோ
    அழப்போறாரோ !

    சரி கதைக்கு வருவம்.கண்டதும் காதல் இப்பிடி வருமோ துஷிக்குட்டி.எனக்கெண்டா நம்பிக்கையில்லை !

    பதிலளிநீக்கு
  4. ஐயாவின் நிலைதான் எனக்கும்.அருமையான வர்ணனைகள்!

    பதிலளிநீக்கு
  5. ஒண்ணுமே புரியல இந்த உலகத்தில............

    பதிலளிநீக்கு
  6. வேகமாக வந்தவளின் நடை என்னைக்கண்டதும் தளர்ந்தது.
    //

    அங்கே வைச்சிங்க பாருங்க ட்விஸ்டு .,

    பதிலளிநீக்கு
  7. ஆஹா, என்ன வர்ணனை? என்ன வார்த்தைகள்? மனுஷனுக்கு காதல் வந்தா ஒவ்வொருத்தனும் கவிஞன் ஆகிடுவான்னு சொல்லுவாங்க! அது உண்மைதான் போலும்! இங்கே துஷி காவியக் கவிஞர் ஆகிவிட்டார்!

    கதை சூப்பர்!

    பதிலளிநீக்கு
  8. இயற்கை காட்சிகளை படிப்பவர்களின் கண் முன்னே கொண்டு வந்து காட்சி படுத்துகிறீர்கள்.. நன்றாக இருக்கிறது ...

    பதிலளிநீக்கு
  9. பாரதி ராஜா பார்த்தா இத வச்சே ஒரு படம் பண்ணிடப்போறாரு... ஆனா கதாநாயகனாக துஷியை தான் போடணும் எண்டு கேட்டுக்கொள்கிறன்....

    பதிலளிநீக்கு
  10. கதை இன்ட்ரெஸ்ட்டிங்கா செல்கிறது .
    யாதுவுக்கு இந்த அக்காவின் வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க .

    பதிலளிநீக்கு
  11. ///கடிகார முற்கள் சோம்பறியாகி மெது மெதுவாய் நடைபோடுவதைப்போலவும் நான் அதை தள்ளினால் என்ன என்ற நிலையில் ஒருவித அவஸ்சையிலேயே நான் தவித்துகொண்டிருந்தேன். // இந்த வரிரொம்ப பிடிச்சிருக்கு எனக்கு... காதலில் ரொம்ப அனுபவப்பட்டவங்களுக்கு இவ்வாறு வார்த்தையாய் கொட்டுமாமே ))

    பதிலளிநீக்கு
  12. கடைசி யூடுபி பாட்டு சூப்பர். ஆனா அதுக்குள்ளே இருக்கிற வீடியோ பிடிக்கல்ல..அதில உங்க வீடியோ எல்லோ வரணும் ))

    பதிலளிநீக்கு
  13. ரொம்ப அனுபவிச்சு எழுதன மாதிரி இருக்கே! நல்லாருக்கு சார்!

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் கந்தசாமி,சார்!"அந்த"இடுகையை அகற்றியதற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  15. ஹேமா சொன்னது…

    துஷி,குட்டி துஷி நல்ல வடிவு!///ஓமோம்,சின்னனா இருக்கேக்கை எல்லாம் வடிவு தான்!ஹி!ஹி!ஹி!!!!!(இந்தப் போட்டோவ பிரெஞ்சுப் பொலிசிட்டக் குடுத்து இப்பத்தைய வடிவைக் கண்டு பிடிக்கப்போறன்!)

    பதிலளிநீக்கு
  16. Yoga.S.FR கூறியது...
    பொன் சுவார்,துஷி!கொன்னுட்டீங்க,போங்க! நானும் தான் கடந்த இரண்டு வாரங்களாக என்ன எழுதலாம் என்று மண்டைகாய யோசிக்கிறேன்.ஒன்றும் வர மாட்டேன் என்கிறது!அருமையாக இருக்கிறது,உங்கள் வர்ணனை,அட்டகாசம்!வாழ்க!<<<<<<<<<<<<<<<

    வணக்கம் பாஸ்... உங்களுக்கும் பொன் சுவார். ஆஹா..... நிஜமா!!!!! ரெம்ப தேங்க்ஸ் பாஸ். அதுசரி..... நீங்க எழுதுறீங்களா???? எங்களுகெல்லாம் சொல்லவே இல்லை :( யோகா பாஸின் எழுத்தை ரசிக்க ஆவலாகவே ஆசையுடன் இருக்கேன் தெரியும் இல்லோ.....

    பதிலளிநீக்கு
  17. கோகுல் கூறியது...
    இப்போது தான் நேரம் கிடைத்தது.மூன்று பகுதிகளையும் வாசித்தேன்!<<<<<<<<<<<<<<<

    ஆஹா.... ரெம்ப மெனக்கெட்டு இருக்கீங்க.... எனவே தேங்க்ஸ் கோகுல் :)

    பதிலளிநீக்கு
  18. யோகா...உங்களுக்கு எரிச்சல்,பொறாமை.அதான் துஷிக்குட்டியைப் பார்த்து...சரி நீங்களும் சின்னனில வடிவாயிருந்திருப்பீங்கள்.இப்ப சரியோ !

    பதிலளிநீக்கு
  19. ஹேமா கூறியது...
    துஷி....குட்டி துஷி நல்ல வடிவு.நானும் இனி துஷிக்குட்டியெண்டுதான் கூப்பிடப்போறன்.பாருங்கோ அவரை.அவரும் அவரின்ர சிரிப்பும்.சிரிக்கிறாரோ
    அழப்போறாரோ !

    சரி கதைக்கு வருவம்.கண்டதும் காதல் இப்பிடி வருமோ துஷிக்குட்டி.எனக்கெண்டா நம்பிக்கையில்லை !<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<



    ஹேமா அக்கா..... ரெம்ப தேங்க்ஸ்.. நிஜமா உங்க கமெண்ட்ஸ்சை திரும்ப திரும்ப பார்த்தேன் தெரியுமா??? ஹா ஹா.... அவ்ளோ ஹப்பியா இருக்கு.... குட்டி என்றா கூப்பிட போறீங்க!! தாராளமாய் கூப்ப்பிடுங்கோ. எங்க அம்மா இப்பவும் என்னை அப்படித்தான் கூப்பிடுவா..... :) அந்த போட்டோ வன்னியில் எடுத்தது அக்கா.

    பார்த்தவுடன் வரும் காதலில் யாருக்கும் மதிப்பு இல்லை. ஆனால் உந்த காதல்கள் இப்போ இப்படித்தானே வருது...!!!! இதுதானே அக்கா கசக்கும் உண்மை.. மனசை பார்த்து வரும் காதல் மலை கடந்து போயிட்டுது...

    பதிலளிநீக்கு
  20. முதலில் என் தங்கை யதுவுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

    கருத்துக்களோடு பின்னர் வருகிறேன்

    பதிலளிநீக்கு
  21. ஹேமா கூறியது...
    யோகா...உங்களுக்கு எரிச்சல்,பொறாமை.அதான் துஷிக்குட்டியைப் பார்த்து...சரி நீங்களும் சின்னனில வடிவாயிருந்திருப்பீங்கள்.இப்ப சரியோ !<<<<<<<<<<<<<<<

    சரியா சொன்னீங்க அக்கா. யோகா பாஸுக்கு பொறாமை ஹா ஹா..... எல்லோரும் சின்னனில் வடிவென்று அவர் தன்னையும் சேர்த்துதான் முதல் சொன்னவர்... இது பக்கத்து இலைக்கு பாயாசம் கேப்பது மாதிரி. ஹா ஹா.

    ஆனாலும் யோகா பாஸ் சாதிச்சுட்டார்... உங்க வாயாலா தன்னையும் அழகென்று சொல்ல வைச்சுட்டாரே....ஹீ ஹீ.... ஆனாலும் யோகா பாஸ் அக்காவுக்கு "குட்டி" நான் மட்டும்தான் :) :)

    சரி சரி கோவிச்சுகாதீங்க யோகா பாஸ்.... எங்க யோகா பாஸும் அழகுதான்.. : :)

    பதிலளிநீக்கு
  22. கோகுல் கூறியது...
    ஐயாவின் நிலைதான் எனக்கும்.அருமையான வர்ணனைகள்!<<<<<<<<<<<<<<<<



    தேங்க்ஸ் கோகுல்... :)

    பதிலளிநீக்கு
  23. நவீனன் கூறியது...
    ஒண்ணுமே புரியல இந்த உலகத்தில............<<<<<<<<<<<<<<<<

    நவீனன் பிரான்சுக்கு வாங்கோ... எல்லாம் புரியும்... லண்டனில் இருந்தா ஒண்டும் புரியாதுப்பா lol

    பதிலளிநீக்கு
  24. கோகுல் கூறியது...
    வேகமாக வந்தவளின் நடை என்னைக்கண்டதும் தளர்ந்தது.
    //அங்கே வைச்சிங்க பாருங்க ட்விஸ்டு .,<<<<<<<<<<<<<<<<


    ஹீ ஹீ.......

    பதிலளிநீக்கு
  25. Powder Star - Dr. ஐடியாமணிகூறியது...
    ஆஹா, என்ன வர்ணனை? என்ன வார்த்தைகள்? மனுஷனுக்கு காதல் வந்தா ஒவ்வொருத்தனும் கவிஞன் ஆகிடுவான்னு சொல்லுவாங்க! அது உண்மைதான் போலும்! இங்கே துஷி காவியக் கவிஞர் ஆகிவிட்டார்!

    கதை சூப்பர்!<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    மணி இதெல்லாம் ரெம்ப ஓவரப்பா.....காதலிக்காதவங்களுக்குத்தான் கவிதை நிறைய வருமாம் அந்த காதலை நினைச்சு நினைச்சே...... நம்ம கந்தசாமிக்கு மாதிரி.. :) :)


    தேங்க்ஸ் மணி.

    பதிலளிநீக்கு
  26. கந்தசாமி. கூறியது...
    இயற்கை காட்சிகளை படிப்பவர்களின் கண் முன்னே கொண்டு வந்து காட்சி படுத்துகிறீர்கள்.. நன்றாக இருக்கிறது ...<<<<<<<<<

    தேங்க்ஸ் கந்தசாமி :) :)

    பதிலளிநீக்கு
  27. கந்தசாமி. கூறியது...
    பாரதி ராஜா பார்த்தா இத வச்சே ஒரு படம் பண்ணிடப்போறாரு... ஆனா கதாநாயகனாக துஷியை தான் போடணும் எண்டு கேட்டுக்கொள்கிறன்....<<<<<<<<<<<<<<



    யோவ் கந்து ஏன் வை திஸ் கொலை வெறி???? அவ்வ்வ்வ்..... நான் கவுதமின் படத்தில் மட்டும்தான் நடிப்பேனாக்கும்... :) :) ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  28. angelin கூறியது...
    கதை இன்ட்ரெஸ்ட்டிங்கா செல்கிறது .
    யாதுவுக்கு இந்த அக்காவின் வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க .<<<<<

    ரெம்ப தேங்க்ஸ் அக்கா...

    யா கண்டிப்பாய் சொல்லிவிடுகிறேன்..... உங்க அன்புக்கு நன்றி அக்கா ;)

    பதிலளிநீக்கு
  29. கந்தசாமி. கூறியது...
    கடைசி யூடுபி பாட்டு சூப்பர். ஆனா அதுக்குள்ளே இருக்கிற வீடியோ பிடிக்கல்ல..அதில உங்க வீடியோ எல்லோ வரணும் ))<<<<<<<<<<<<<<<<<<<

    ஹா ஹா...... ஆசை தோசை...... :) :) சரி கந்து உங்களுக்காண்டி ஒரு பதிவில் போடுறேனே..... ;) ;)

    பதிலளிநீக்கு
  30. கந்தசாமி. கூறியது...
    ///கடிகார முற்கள் சோம்பறியாகி மெது மெதுவாய் நடைபோடுவதைப்போலவும் நான் அதை தள்ளினால் என்ன என்ற நிலையில் ஒருவித அவஸ்சையிலேயே நான் தவித்துகொண்டிருந்தேன். // இந்த வரிரொம்ப பிடிச்சிருக்கு எனக்கு... காதலில் ரொம்ப அனுபவப்பட்டவங்களுக்கு இவ்வாறு வார்த்தையாய் கொட்டுமாமே ))<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    ஆமாம் பாஸ்... அனுபவப்பட்டவனுக்கு மட்டும் அல்ல இதை ரசிப்பவனும், காதல் அனுபவங்களில் கெட்டிக்காரன் என்று சொல்லுறாங்களே நிஜமா??? ஹா ஹா....

    பதிலளிநீக்கு
  31. shanmugavel கூறியது...
    ரொம்ப அனுபவிச்சு எழுதன மாதிரி இருக்கே! நல்லாருக்கு சார்!<<<<

    தேங்க்ஸ் பாஸ்

    பதிலளிநீக்கு
  32. Yoga.S.FR கூறியது...
    வணக்கம் கந்தசாமி,சார்!"அந்த"இடுகையை அகற்றியதற்கு நன்றி!<<<<<<<<<<<<<<<<<



    எந்த இடுகை??? என்னப்பா நடக்குது..... நான் இன்றைக்கு நித்திரையால எழும்ப கொஞ்சம் லேட் ஆச்சு..... சோ இருங்கோ கந்து ப்ளாக் பாக்கிறேன் :) :)

    பதிலளிநீக்கு
  33. Yoga.S.FR கூறியது...
    ஹேமா சொன்னது…

    துஷி,குட்டி துஷி நல்ல வடிவு!///ஓமோம்,சின்னனா இருக்கேக்கை எல்லாம் வடிவு தான்!ஹி!ஹி!ஹி!!!!!(இந்தப் போட்டோவ பிரெஞ்சுப் பொலிசிட்டக் குடுத்து இப்பத்தைய வடிவைக் கண்டு பிடிக்கப்போறன்!)<<<<<<<<<<<<<<<<<<<<



    இதுக்கு ஏன் ஹேமா அக்காவே பதில் சொல்லிட்டாவே இனி நான் என்ன சொல்ல.... ஹா ஹா :) :)

    பதிலளிநீக்கு
  34. மதுரன் கூறியது...
    முதலில் என் தங்கை யதுவுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

    கருத்துக்களோடு பின்னர் வருகிறேன்<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<



    தேங்க்ஸ் மது.... :)

    பதிலளிநீக்கு
  35. ஹலோ மிஸ்டர் துஷி...... ஹி ஹி

    அந்த கடைசி பாட்டு.. ஒருக்கா திரும்பவும் வடிவா கேளுங்க...

    என்னை ஒரு கேள்வி கேட்டிங்களே! அதுக்கான பதில் அந்த பாட்டிலயே இருக்கு ஹா ஹா

    ”உன்னை நீங்கி எந்நாளும் எந்தன் ஜீவன் வாழாது... உந்தன் அன்பில் வாழ்வதற்கு ஜென்மம் ஒன்று போதாது..

    நீ என்னை சேர்ந்திடும் வரையில் இதயத்தில் சுவாசங்கள் இல்லை...
    நீ வந்து தங்கிய நெஞ்சில் யாருக்கும் இடமே இல்லை..

    அப்பிடீன்னு போகுது பாட்டு ஹி ஹி

    பதிலளிநீக்கு
  36. ஹேமா சொன்னது…

    யோகா...உங்களுக்கு எரிச்சல்,பொறாமை.அதான் துஷிக்குட்டியைப் பார்த்து...சரி நீங்களும் சின்னனில வடிவாயிருந்திருப்பீங்கள்.இப்ப சரியோ !///சரி,சரி!என்ர மகளும்(ஹேமா)வடிவாத்தான் இருந்திருப்பா!ஹா!ஹா!ஹா!!!!!!!!

    பதிலளிநீக்கு
  37. அண்ண கதையை அருமையா நகர்துரீங்க....

    யார் அந்த பெண்......

    பதிலளிநீக்கு
  38. அப்புறம் அண்ணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்......

    பதிலளிநீக்கு
  39. மதுரன் சொன்னது…
    ஹலோ மிஸ்டர் துஷி...... ஹி ஹி

    அந்த கடைசி பாட்டு.. ஒருக்கா திரும்பவும் வடிவா கேளுங்க...

    என்னை ஒரு கேள்வி கேட்டிங்களே! அதுக்கான பதில் அந்த பாட்டிலயே இருக்கு ஹா ஹா

    ”உன்னை நீங்கி எந்நாளும் எந்தன் ஜீவன் வாழாது... உந்தன் அன்பில் வாழ்வதற்கு ஜென்மம் ஒன்று போதாது..

    நீ என்னை சேர்ந்திடும் வரையில் இதயத்தில் சுவாசங்கள் இல்லை...
    நீ வந்து தங்கிய நெஞ்சில் யாருக்கும் இடமே இல்லை..அப்பிடீன்னு போகுது பாட்டு ஹி ஹி<<<<<<<<<<<<<<<<<

    யோவ்.... என்ன மாட்டீட்டான் என்ற ஹப்பியா.... ஹா ஹா... சரிப்பா உங்க நெஞ்சு இன்னும் எவ்ளோ நாளைக்கு ஆள் இல்லா வீடாவே இருக்கென்று நானும் பாதுடுறேனே!!!! மது நான் நினைக்குறேன் உங்களுக்கு உங்கள் வீட்டில் குடியிருந்தவங்க போனபிறகு புதுசா யாரையாவது குடியமர்த்த மனசு இடம் கொடுத்தாலும் சரியான ஆள் கிடைக்கல்ல என்று நினைக்கிறேன்.... சரியா :) :) யோவ் நான் வீடு பற்றித்தான் பேசிட்டு இருக்கேன்

    பதிலளிநீக்கு
  40. Yoga.S.FR கூறியது...
    ஹேமா சொன்னது…

    யோகா...உங்களுக்கு எரிச்சல்,பொறாமை.அதான் துஷிக்குட்டியைப் பார்த்து...சரி நீங்களும் சின்னனில வடிவாயிருந்திருப்பீங்கள்.இப்ப சரியோ !///சரி,சரி!என்ர மகளும்(ஹேமா)வடிவாத்தான் இருந்திருப்பா!ஹா!ஹா!ஹா!!!!!!!!<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<



    சரி சரி.... அப்பாவும் (யோகா) அழகு. அக்காவும் (ஹேமா) அழகு. அட நானும் (துஷ்யந்தன்) அழகு.... இது எப்புடி!!!! ஹே ஹே....

    பதிலளிநீக்கு
  41. ஆகுலன் கூறியது...
    அண்ண கதையை அருமையா நகர்துரீங்க....
    யார் அந்த பெண்......<<<<<<<<<<<<<<<<<<<<<<

    தேங்க்ஸ் ஆகுலன்... ஆஹா...... வை திஸ் கொலை வெறி ஆர்ணிகன்??? :) :)

    பதிலளிநீக்கு
  42. ஆகுலன் கூறியது...
    அப்புறம் அண்ணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....<<<<<<<<<<<<<<<

    தேங்க்ஸ்டா தம்பி :) :) :)

    பதிலளிநீக்கு
  43. வணக்கம் மருமோனே!
    கதை நல்லா இருக்கு அதை விட வர்ணனை இன்னும் அழகா இருக்கு.. அதுவும் கடிகார முள்ளு அசத்தல் வர்ணனை..


    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  44. அப்பா எண்டு சொல்லி அசத்தலா மடக்கிப்போட்டார்.இனி ஒன்லி மரியாதை !

    பதிலளிநீக்கு
  45. ஹேமா சொன்னது…

    அப்பா எண்டு சொல்லி அசத்தலா மடக்கிப்போட்டார்.இனி ஒன்லி மரியாதை !/////தேங்க்சு,சுட்டிப் பொண்ணே!

    பதிலளிநீக்கு
  46. ஹேமா சொன்னது…

    அப்பா எண்டு சொல்லி அசத்தலா மடக்கிப்போட்டார்.இனி ஒன்லி மரியாதை!//vielen dank!

    பதிலளிநீக்கு
  47. எல்லோரும் ஒரு தடவை மதுரன், நிரூபன் வீட்டுப் பக்கம் தலை காட்டலாமே?

    பதிலளிநீக்கு
  48. எல்லோரும் ஒரு தடவை மதுரன், நிரூபன் வீட்டுப் பக்கம் தலை காட்டலாமே?<<<<

    நான் போயிட்டு வந்துட்டேன் அப்பா... (ஹேமா எனக்கு அக்கா என்றால்... ஹேமா அக்கா உங்களுக்கு மகள் என்றால்.... நீங்கள் எனக்கு அப்பாதானே!!!)

    மது பதிவு குட்... விஜயின் போலி முகம் பற்றி நான் எழுத இருந்தேன்... எழுதித்தான் என்னத்தை சாதிக்கிறது... நடிகர்கள் எல்லா இடத்திலும் நடிக்கிறார்கள் :(

    பதிலளிநீக்கு
  49. ///////உனக்கு இந்த அழகை எல்லாம் முதலே ரசிக்க கொடுத்து வைக்கவில்லைப்போல் மனசு ஆச்சரியப்பட்டு கோபப்பட்டு சலித்துக்கொண்டது. ஓங்கி வளர்ந்திருக்கும் பெரிய மரங்கள், பச்சைப்பசளேன அழகான புல்வெளி. அருகில் வளைந்து நெளிந்து ஓடும் ஆறு, சற்று தள்ளி யுத்தத்தால் சிதைந்து போய் இருக்கும் பழைய பிரமாண்டமான கட்டிடம் ஒன்று, அதில் படரும் கொடி. ஒவ்வொன்றையும் ரசித்தபடி நான் ஆற்றங்கரையை நோக்கி நடந்துகொண்டிருந்தேன்./////

    என்ன ஒரு கற்பனை...
    அப்படியே என் சுட்டு விரலைப்பிடித்துக் கொண்டு
    நீங்கள் நடை போட்டது போல இருந்தது..
    யுத்தத்தில் சிதைந்தது என்றும் தெரியாமல் அந்தக் கோடி
    அதன் வாழ்வுக்காய் அதன் மேல் படர்ந்தது..
    நான் அப்படியே அந்த இடத்துக்கு போயிட்டேன்..

    அருமை அருமை நண்பரே..

    பதிலளிநீக்கு
  50. காட்டான் சொன்னது…
    வணக்கம் மருமோனே!
    கதை நல்லா இருக்கு அதை விட வர்ணனை இன்னும் அழகா இருக்கு.. அதுவும் கடிகார முள்ளு அசத்தல் வர்ணனை..
    வாழ்த்துக்கள்..<<<<<<<<<<<<<<<<<<<

    தேங்க்ஸ் மாமா

    பதிலளிநீக்கு
  51. ஹேமா கூறியது...
    அப்பா எண்டு சொல்லி அசத்தலா மடக்கிப்போட்டார்.இனி ஒன்லி மரியாதை !<<<<<<<<<<<<<<<<<

    ஹா ஹா...... உண்மைதான் அக்கா.... எங்க அபா ராசி அப்படி.

    பதிலளிநீக்கு
  52. Yoga.S.FR கூறியது...
    ஹேமா சொன்னது… அப்பா எண்டு சொல்லி அசத்தலா மடக்கிப்போட்டார்.இனி ஒன்லி மரியாதை !/////தேங்க்சு,சுட்டிப் பொண்ணே!<<<<<


    ஹே ஹே.... அக்காவின் சுட்டித்தனம் உங்களுக்கும் தெரிஞ்சு போச்சோ..... :)

    பதிலளிநீக்கு
  53. Yoga.S.FR கூறியது...
    ஹேமா சொன்னது…
    அப்பா எண்டு சொல்லி அசத்தலா மடக்கிப்போட்டார்.இனி ஒன்லி மரியாதை!//vielen dank!<<<<

    புரியல்லையே.... அவ்வ

    பதிலளிநீக்கு
  54. மகேந்திரன் கூறியது...
    ///////உனக்கு இந்த அழகை எல்லாம் முதலே ரசிக்க கொடுத்து வைக்கவில்லைப்போல் மனசு ஆச்சரியப்பட்டு கோபப்பட்டு சலித்துக்கொண்டது. ஓங்கி வளர்ந்திருக்கும் பெரிய மரங்கள், பச்சைப்பசளேன அழகான புல்வெளி. அருகில் வளைந்து நெளிந்து ஓடும் ஆறு, சற்று தள்ளி யுத்தத்தால் சிதைந்து போய் இருக்கும் பழைய பிரமாண்டமான கட்டிடம் ஒன்று, அதில் படரும் கொடி. ஒவ்வொன்றையும் ரசித்தபடி நான் ஆற்றங்கரையை நோக்கி நடந்துகொண்டிருந்தேன்./////

    என்ன ஒரு கற்பனை...
    அப்படியே என் சுட்டு விரலைப்பிடித்துக் கொண்டு
    நீங்கள் நடை போட்டது போல இருந்தது..
    யுத்தத்தில் சிதைந்தது என்றும் தெரியாமல் அந்தக் கோடி
    அதன் வாழ்வுக்காய் அதன் மேல் படர்ந்தது..
    நான் அப்படியே அந்த இடத்துக்கு போயிட்டேன்..
    அருமை அருமை நண்பரே..<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    ரெம்ப தேங்க்ஸ் பாஸ்.... :)

    பதிலளிநீக்கு
  55. ////அவளை பார்த்தபடி வார்த்தைகள் வராமல் நான் திணற, திரும்பியவள் விழிகளும் ஆச்சரியமாய் என்னை நோக்க அங்கே நான்கு விழிகளும் ஒன்றுடன் ஒன்று கவ்வி பின்னிக்கொண்டன. சில விநாடிகள்தான் ஆனால் சில யுகம் போல் கழிய யார்தான் முதலில் பார்வைகளை விலக்குவது என்ற போராட்டத்தில் அவளே ஜெயித்தாள். சட்டென சுதாரித்தவள் பாதி நிறைந்த குடத்தை தூக்கியபடி மிக வேகமாக நடக்கதொடங்கினாள்./////

    அட.அட.அட...
    என்னமா எழுதிட்டீங்க....

    அண்ணலும் நோக்கினான் ..அவளும் நோக்கினாள்
    எனபது போல இருந்துச்சு..

    அங்கே பார்த்தீர்களா. மண் பார்த்து கண் சிவந்த எம் குலப் பெண்கள்
    ஆடவரை உடையவனே ஆயினும் சிறிது நேரத்துக்கு மேலே காணாது
    தம் முகம் தளர்த்தி மனம் புதைத்துக்கொள்வார். இது..இது தான் நம் பண்பாட்டின்
    வெளிச்சம்.

    அருமையா எழுதியிருகீங்க துஷி...

    பதிலளிநீக்கு
  56. வர்ணணை பிச்சு உதறுது என்ன வர்ணணை காதலிச்சா மட்டும்தான் முடியும்

    பதிலளிநீக்கு
  57. சூப்பர்!

    அந்த பெண்ணின் வர்ணிப்புகள் படு பிரமாதம். ஆமா அவள் கதைச்சாளா???????

    பதிலளிநீக்கு
  58. //சிகிரியாவில் பூவோடு நிற்கும் சித்திரம்தான் உயித்தெழுந்து இங்கு குடத்துடன் வருகிறதோ என்ற ஜயம் எழுந்தது.//

    அப்பிடியா வந்தா...சீச்சீ அப்பிடி இருக்காது...ஹி ஹி

    இப்படிக்கு
    கோர்த்துவிட்டு கும்மியடிப்போர் சங்கம்

    பதிலளிநீக்கு
  59. அட அட என்ன வர்ணனை என்ன வர்ணனை.

    பதிலளிநீக்கு
  60. இயற்கை அழகு நிறைந்த அழகிய அந்த நெடுங்கேனி மண் இன்று யுத்தத்தால் சீரழிந்து இருபதை பார்க்க மனம் வலிக்கின்றது...

    பதிலளிநீக்கு
  61. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  62. ///வரும் செவ்வாய்க்கிழமை "என்" கண்ணம்மாவுக்கு(YATHU ) பிறந்தநாள். :)
    19வது (13.12.1993) பிறந்தநாளை கொண்டாடும் மை Yathuக்கு என் மனம்தொட்ட பிறந்த நாள் வாழ்த்துக்கள்.////

    மாப்ள என் அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நான் இவ்வளவு காலமும் அவங்களுக்கு என்னைவிட வயசு குறைவு என்றுதான் நினைச்சேன் இப்ப நீங்க 19 என்று சொல்லதான் அவங்க எனக்கு தங்கைச்சி இல்லை அக்கா என்று தெரிஞ்சது.

    பதிலளிநீக்கு
  63. ////வரும் செவ்வாய்க்கிழமை "என்" கண்ணம்மாவுக்கு(YATHU ) பிறந்தநாள். :)
    19வது (13.12.1993) பிறந்தநாளை கொண்டாடும் மை Yathuக்கு என் மனம்தொட்ட பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    எல்லோரும்
    தாங்கள் பிறந்த நாளைத்தான்
    பிறந்த தினமாய் கொண்டாடுகிறார்கள்.
    நானோ உன்னை
    முதல் முதல் சந்தித்த நாளைத்தான்
    பிறந்த தினமாய் கொண்டாடுவேன்.////

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றும் நீங்கள் அன்பான தம்பதிகளாக வாழ அன்பு என்னும் அடித்தளத்தில் கட்டப்பட்ட உங்கள் காதல் கோட்டையில் என்றும் அன்பு சாம்ராஜ்யம் நிலவட்டும்
    அன்புடன்
    கே.எஸ்.எஸ்.ராஜ்

    பதிலளிநீக்கு
  64. ////22 June 1973)////

    மாப்ள அப்ப இந்த திகதியில் பிறந்த ஒருவருக்கும் ஏன் நீ பிறந்த நாள் கொண்டாடுற அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  65. அருமையான பகிர்வு, நன்றிகள் மக்கா...!!!

    பதிலளிநீக்கு
  66. துஷிக்குட்டி அப்பா எனக்கு பிரான்ஸ்ல மர்சி சொல்றபோல டொச்ல நிறைவான நன்றி சொல்லியிருக்கார்.

    அப்பா என்றால் நன்றி சொல்லக்கூடாதெல்லோ.அதுசரி எதுக்கு நன்றி.அப்பா எண்டு சொன்னதால நாங்கள் அவரைக் கலாய்க்கமுடியாது.தான் மட்டும் கலாச்சுக்கொண்டிருக்கப் போறார்போல !

    பதிலளிநீக்கு
  67. அருமையான ரசனை மற்றும் கற்பனைவளம்!!

    கண்ணமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! (மறக்காம சொல்லிடுங்கோ)

    குட்டி துஷி படம் சூப்பர்!!

    பதிலளிநீக்கு
  68. மகேந்திரன் சொன்னது…
    ////அவளை பார்த்தபடி வார்த்தைகள் வராமல் நான் திணற, திரும்பியவள் விழிகளும் ஆச்சரியமாய் என்னை நோக்க அங்கே நான்கு விழிகளும் ஒன்றுடன் ஒன்று கவ்வி பின்னிக்கொண்டன. சில விநாடிகள்தான் ஆனால் சில யுகம் போல் கழிய யார்தான் முதலில் பார்வைகளை விலக்குவது என்ற போராட்டத்தில் அவளே ஜெயித்தாள். சட்டென சுதாரித்தவள் பாதி நிறைந்த குடத்தை தூக்கியபடி மிக வேகமாக நடக்கதொடங்கினாள்./////

    அட.அட.அட...
    என்னமா எழுதிட்டீங்க....
    அண்ணலும் நோக்கினான் ..அவளும் நோக்கினாள்
    எனபது போல இருந்துச்சு..
    அங்கே பார்த்தீர்களா. மண் பார்த்து கண் சிவந்த எம் குலப் பெண்கள்
    ஆடவரை உடையவனே ஆயினும் சிறிது நேரத்துக்கு மேலே காணாது
    தம் முகம் தளர்த்தி மனம் புதைத்துக்கொள்வார். இது..இது தான் நம் பண்பாட்டின்
    வெளிச்சம்.
    அருமையா எழுதியிருகீங்க துஷி...<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    பாஸ் என்னை சொல்லிட்டு, என்னமா நீங்க புகுந்து விளையாடுறீங்க!!!!! சான்சே இல்லை.... சூப்பர். பாஸ் ஒரு டவுட்... உண்மையை சொல்லுங்க நீங்க தமிழ் ஆசிரியர்தான????????????????????????

    பதிலளிநீக்கு
  69. கவி அழகன் கூறியது...
    வர்ணணை பிச்சு உதறுது என்ன வர்ணணை காதலிச்சா மட்டும்தான் முடியும்<<<<<<<<<<<<

    தேங்க்ஸ்.... ஆனாலும் கவியலகனின் கவிக்கு ஈடாகுமா நம் எழுத்து!!!

    பதிலளிநீக்கு
  70. திண்டுக்கல் தனபாலன்கூறியது...
    அருமை.
    பகிர்வுக்கு நன்றி நண்பரே!<<<<<<<<<<<

    தேங்க்ஸ் தனபாலன் சார்.

    பதிலளிநீக்கு
  71. மதுரன் சொன்னது…
    சூப்பர்!
    அந்த பெண்ணின் வர்ணிப்புகள் படு பிரமாதம். ஆமா அவள் கதைச்சாளா???????<<<<<<<<<<<<<<<<<<

    யோவ்.... என்ன அவசரம்.... ரெண்டு நாள் வெயிட் பண்ணலாம் இல்ல... ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  72. மதுரன் சொன்னது…
    //சிகிரியாவில் பூவோடு நிற்கும் சித்திரம்தான் உயித்தெழுந்து இங்கு குடத்துடன் வருகிறதோ என்ற ஜயம் எழுந்தது.//

    அப்பிடியா வந்தா...சீச்சீ அப்பிடி இருக்காது...ஹி ஹி
    இப்படிக்கு
    கோர்த்துவிட்டு கும்மியடிப்போர் சங்கம்<<<<<<<<<<<<<<<

    ஹா ஹா.... அப்படிதானே இருந்திச்சு மச்சி... வை திஸ் கொலை வெறி மக்கா

    பதிலளிநீக்கு
  73. K.s.s.Rajh சொன்னது…
    அட அட என்ன வர்ணனை என்ன வர்ணனை.<<<<<<<<<<<<

    நன்றி நன்றி மை பிரெண்ட்

    பதிலளிநீக்கு
  74. K.s.s.Rajh சொன்னது…
    இயற்கை அழகு நிறைந்த அழகிய அந்த நெடுங்கேனி மண் இன்று யுத்தத்தால் சீரழிந்து இருபதை பார்க்க மனம் வலிக்கின்றது...<<<<<<<<<<<<<<<<<<<

    உண்மைதான் நண்பா.... நெடுங்கேணி என்ன அழகு???? இப்போ!!!!!!!!! :(

    பதிலளிநீக்கு
  75. K.s.s.Rajh சொன்னது…
    ///வரும் செவ்வாய்க்கிழமை "என்" கண்ணம்மாவுக்கு(YATHU ) பிறந்தநாள். :)
    19வது (13.12.1993) பிறந்தநாளை கொண்டாடும் மை Yathuக்கு என் மனம்தொட்ட பிறந்த நாள் வாழ்த்துக்கள்.////

    மாப்ள என் அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நான் இவ்வளவு காலமும் அவங்களுக்கு என்னைவிட வயசு குறைவு என்றுதான் நினைச்சேன் இப்ப நீங்க 19 என்று சொல்லதான் அவங்க எனக்கு தங்கைச்சி இல்லை அக்கா என்று தெரிஞ்சது<<<<<<<<<<<<<<<<<<<<<

    யோவ் நீர் என்ன கணக்கில் வீக்கா!!! ஹா ஹா....... நான் பத்தொன்பது என்று தான் சொன்னேன்... இருபத்தி ஒன்பது என்று சொல்லவே இல்ல.... ஹா ஹா....lol

    பதிலளிநீக்கு
  76. K.s.s.Rajh சொன்னது…
    ////வரும் செவ்வாய்க்கிழமை "என்" கண்ணம்மாவுக்கு(YATHU ) பிறந்தநாள். :)
    19வது (13.12.1993) பிறந்தநாளை கொண்டாடும் மை Yathuக்கு என் மனம்தொட்ட பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    எல்லோரும்
    தாங்கள் பிறந்த நாளைத்தான்
    பிறந்த தினமாய் கொண்டாடுகிறார்கள்.
    நானோ உன்னை
    முதல் முதல் சந்தித்த நாளைத்தான்
    பிறந்த தினமாய் கொண்டாடுவேன்.////

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றும் நீங்கள் அன்பான தம்பதிகளாக வாழ அன்பு என்னும் அடித்தளத்தில் கட்டப்பட்ட உங்கள் காதல் கோட்டையில் என்றும் அன்பு சாம்ராஜ்யம் நிலவட்டும்
    அன்புடன்
    கே.எஸ்.எஸ்.ராஜ்<<<<<<<<<<<<<<<<<

    தேங்க்ஸ் மை பிரென்ட்.... உங்க அன்பு உண்மையில் ஹப்பியா இருக்கு.... ரியலி தேங்க்ஸ் :)

    பதிலளிநீக்கு
  77. K.s.s.Rajh சொன்னது…
    ////22 June 1973)////
    மாப்ள அப்ப இந்த திகதியில் பிறந்த ஒருவருக்கும் ஏன் நீ பிறந்த நாள் கொண்டாடுற அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்<<<<<<<<<<<<<<<

    யோவ் கிஸ், பழைய லவ்வ (தேவயாணி மேலே) சொல்லி ஏன்ய்யா என் குடும்பத்தில் கும்மி அடிக்க பாக்குற ???? அவ்வவ்

    பதிலளிநீக்கு
  78. MANO நாஞ்சில் மனோ சொன்னது…
    அருமையான பகிர்வு, நன்றிகள் மக்கா...!!!<<<<<<<<<<<<

    நன்றி மனோ சார்

    பதிலளிநீக்கு
  79. குடிமகன் சொன்னது…
    அருமையான ரசனை மற்றும் கற்பனைவளம்!!
    கண்ணமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! (மறக்காம சொல்லிடுங்கோ)
    குட்டி துஷி படம் சூப்பர்!!<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    தேங்க்ஸ் நண்பா :)
    ரியலி தேங்க்ஸ் மச்சி.... கண்டிப்பா சொல்லிவிடுறேன்... ஹா ஹா.
    அவ்ளோ அழகாவா இருக்கேன்!!!! ஹீ ஹீ.... தேங்க்ஸ் நண்பா :) :)

    பதிலளிநீக்கு
  80. ஹேமா கூறியது...
    துஷிக்குட்டி அப்பா எனக்கு பிரான்ஸ்ல மர்சி சொல்றபோல டொச்ல நிறைவான நன்றி சொல்லியிருக்கார்.
    அப்பா என்றால் நன்றி சொல்லக்கூடாதெல்லோ.அதுசரி எதுக்கு நன்றி.அப்பா எண்டு சொன்னதால நாங்கள் அவரைக் கலாய்க்கமுடியாது.தான் மட்டும் கலாச்சுக்கொண்டிருக்கப் போறார்போல !<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<



    அப்பா டொச் பேசினாரா? அவ்வவ்.... இது நமக்கு புரியாமல் போச்சே....... :(

    அதுதானே அப்பா மகளுக்கு எப்படி தேங்க்ஸ் சொல்லலாம்!!!!! :)

    யா யா..... அக்கா, அப்பா உப்படி சொல்லி தன்னை கலாய்க்க முடியாமல் பண்ணீட்டார்.... இனி நானும் அப்பாவை கலாய்க்க முடியாதே!!!!!!! அவ்வவ்

    அப்புறம்..... நீங்க துஷிக்குட்டி என்று சொல்லும் போது அவ்ளோ சந்தோசமாய் இருக்கு :) :) இனி ஒவ்வொரு நாளும் பதிவு போட்ட என்ன என்று இருக்கு, அப்போத்தானே நீங்க வருவீங்க... துஷிக்குட்டி என்று சொல்லுவீங்க :) :) தேங்க்ஸ் அக்காச்சி...................... :)

    பதிலளிநீக்கு
  81. யாதுவுக்கு இனிய மனங்கனிந்த
    பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
    இன்றுதான் மூன்று பகுதிகளையும்
    தொடர்ச்சியாகப் படித்தேன்
    கதை மிகச் சிறப்பாகப் போகிறது
    கற்பனை என சுதாரிப்பாக அடிக்குறிப்பு
    கொடுத்தது மிகச் சரி
    ஏனெனில் சொல்லிச் செல்லும் விதம்
    நிஜம் போலவே உள்ளது
    தொடர் மிகச் சிறப்பாகப் போகிறது தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள் த.ம 11

    பதிலளிநீக்கு
  82. துஷிக்குட்டி...உங்கள் கண்ணம்மாவுக்கு இன்று என் அன்பையும் சொல்லிவிடுங்கோ.இப்பபோல எப்பவும் இரண்டு பேரும் சந்தோஷமா இருக்கவேணும் !

    பதிலளிநீக்கு
  83. Ramani சொன்னது…
    யாதுவுக்கு இனிய மனங்கனிந்த
    பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
    இன்றுதான் மூன்று பகுதிகளையும்
    தொடர்ச்சியாகப் படித்தேன்
    கதை மிகச் சிறப்பாகப் போகிறது
    கற்பனை என சுதாரிப்பாக அடிக்குறிப்பு
    கொடுத்தது மிகச் சரி
    ஏனெனில் சொல்லிச் செல்லும் விதம்
    நிஜம் போலவே உள்ளது
    தொடர் மிகச் சிறப்பாகப் போகிறது தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள் த.ம ௧௧<<<<<<<<<<<<<<<

    தேங்க்ஸ் ரமணி சார்.... :=)

    பதிலளிநீக்கு
  84. ஹேமா சொன்னது…
    துஷிக்குட்டி...உங்கள் கண்ணம்மாவுக்கு இன்று என் அன்பையும் சொல்லிவிடுங்கோ.இப்பபோல எப்பவும் இரண்டு பேரும் சந்தோஷமா இருக்கவேணும் !<<<<<<<<<<<<<<<< தேங்க்ஸ் அக்காச்சி..... என் அக்காச்சி சொன்ன வாழ்த்தை சொல்லாமா விட்டுடுவனா???!!! இப்பவே சொல்லிவிடுறேன் :) உங்க ஆசை போலவே நாங்க சந்தோஷமாய் இருப்போம் அக்காச்சி :) தேங்க்ஸ்

    பதிலளிநீக்கு
  85. ஹை.. துசிக்குட்டி... ஐ லவ் யூடா செல்லம்.
    சூப்பரா எழுதுறீங்களே?முதலே இப்பிடியா அல்லது... நடை தளர்ந்த பின்னரா?

    பதிலளிநீக்கு
  86. ///மிக அருகில் ..க்ளுக் ..க்ளுக் என குடத்துக்குள் யாரோ தண்ணீர் நிரப்பும் சத்தம், சட்டென திரும்பினேன் அருகில் அவள். நேற்றைய மழை இரவில் மனதை நனைத்துவிட்டு மாயமான தேவதை.////


    ஒரு தேவதையைக் கண்ட அதே உணர்வு வரிகளுக்குள் அதே ஒளிக்கீற்றுத் தெறிக்கிறது...

    பதிலளிநீக்கு
  87. வணக்கம் மச்சி!

    தொடர் சூப்பராகப் போகுது.
    தண்ணீர் குடத்துடன் தாமரையைச் சூரியன் கண்டு முகம் மலர்ந்த காதலா?
    ஹே...ஹே...
    அருமையான வர்ணனைகளுடன் நகர்கிறது பாஸ்..

    அடுத்த பாகத்தில் மீட் பண்ணுகிறேன்.

    கொஞ்சம் பிசியாகிட்டேன்.
    அதான் வர முடியலை!.

    உங்கட அவாவுக்கு என் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

    என்றென்றும் இணை பிரியாத அன்றில்கள் போல நீங்கள் இருவரும்
    ஒன்றாக வாழ வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...