வியாழன், டிசம்பர் 01, 2011

மாத்தியோசி : ஊரில ஹீரோ! வெளிநாட்டில ஸீரோ!


மாத்தியோசி என்ற தலைப்பில் பதிவர்கள் தங்களுக்குள் இன்னொருவரின் தளத்தில் மாற்றி பதிவிடலாமே என்ற அக்ஷ்யம் வலைப்பூவின் சொந்தக்காரர் வரோ அண்ணனின் வித்தியாசமான சிந்தனைக்கு உயிர் கொடுக்க அவருடன் சேர்ந்து நாங்கள் ஜந்து பேர் ஒன்று சேர்ந்து இந்த முயற்சியை செயல் படுத்தி வருகிறோம்.. அந்த வகையில் வரோ அண்ணனின் பதிவு இன்று என் வலைப்பூவில்.... 

வரோ சிறு அறிமுகம்...
லண்டனில் ரிலாக்ஸாக வரோ அண்ணன் .

வரோ அண்ணாவை நான் அறிமுகப்படுத்தித்தான் மற்றவர்கள் அறிய வேண்டும் என்ற தேவையே இல்லை... இவரை வலையுலகில் தெரியாதவர்கள் மிக குறைவே வலைப்பூவில் நீண்டகாலமாய் எழுதும் மூத்த பிரபல  பதிவர்களில் ஒருவர். இப்போது அதிகம் சினிமா&நகைசுவை பதிவுகளே எழுதி வந்தாலும் அதிலும் தன் தனித்திறமையை நிருபித்துக்கொண்டுதான் இருக்கார். இவரின் பழைய பதிவுகள் இவரின் மிக  சிறந்த எழுத்துக்கு சான்று.. இப்போது அதிகம் சினிமா&நகைச்சுவை பதிவுகள் எழுத காரணம் தன் நேரமின்மையே என்று சொல்லும் இவரின் பேச்சில் மட்டும் அல்ல எழுத்திலும் சொல்ல வந்த விடயத்தை சுத்தி வளைக்காமல் சுருக்கமாக அழுத்தமாக வெளிப்படையா சொல்லும் முறை இவரிடம் என்னை அதிகம் கவர்ந்தது. இப்போது இவர் எழுதி வரும் சங்கிலி மன்னனின் வரலாற்று தொடர் இவரில் சிறந்த எழுத்துக்கு நல்ல உதாரணம் (இத்தொடருக்கான லிங்க் என் தளத்திலேயே மேலே கொடுத்துள்ளேன்..) சங்கிலிய மன்னனின் வரலாற்று உண்மைகளுடன் சில கற்பனை கதாபாத்திரங்களையும் உருவாக்கி இவர் எழுதுவது தனிச்சிறப்பு.. சாண்டில்யனின் எழுத்தில் இருக்கும் சுவராசியமும் ஈர்ப்பும் விறுவிறுப்பும் இவரின் இத்தொடரில் கொட்டிகிடைப்பது 
இன்ப ஆச்சரியம். இனி அவரின் பதிவு...

ஊரில ஹீரோ! வெளிநாட்டில ஸீரோ!


குந்த வசதிகளும் வாய்ப்புக்களும் இருந்தால், தாங்குவதற்கு சொந்தங்கள் இருந்தால், தனிமையைப் போக்க எம்மைச் சுற்றி உறவுகள் இருந்தால் வெளிநாடு என்பது சொர்க்கபுரி தான். இவற்றில் ஏதாவது ஒன்றாவது இருந்தால் கூட வெளிநாட்டு வாழ்க்கையைத் தாக்குப்பிடித்து விடலாம். இவை எதுவுமே இல்லாத ஒருவனின் வாழ்க்கை வெளிநாடுகளில் பாலைவன பூமி போன்றது. இங்கு மருந்துக்கு கூட ஒரு மழைத்துளியை எதிர்பார்க்க முடியாது.

அவ்வாறான ஒரு நரகத்தில் தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். இது விரும்பி ஏற்றுக் கொண்ட வாழ்வு. அதனால் யார் மீதும் குறைப்பட என்னால் முடியாது. 

வெளிநாட்டு வாழ்க்கை சவாலானதாக இருக்கும் என எனக்கு தெரியும். ஆனால் இவ்வளவு கரடுமுரடாக இருக்கும் என நான் நினைத்திருக்கவில்லை. திரும்பும் பக்கமெல்லாம் சுயநலவாதிகள், கொள்ளையர்கள், காட்டுமிராண்டிகள். இவர்களில் எம்மவர்களும் பலர் இருக்கிறார்கள் என்பது தான் வருத்தப்படவேண்டிய விடயம். 

'ஏன் ஊரில் இவர்கள் ஒருவரும் இல்லையா?' என நீங்கள் கேள்வி எழுப்பலாம். அங்கு இருப்பவர்களையும், இங்கு இருப்பவர்களையும் ஒரே தராசில் வைத்துப் பார்த்துவிட முடியாது. காரணம் என்னைப் போலவே இவர்களும் ஐந்தோ, பத்தோ, பதினைந்தோ வருடத்திற்கு முதல் இங்கெல்லாம் வந்து குடியேறியிருப்பார்கள். இவர்கள் நான் அனுபவித்ததை விட பல மடங்கு கஸ்டத்தை அனுபவித்திருப்பார்கள். இன்று ஓரளவாவது நல்ல நிலையில் இருக்கும் அவர்கள் புதிதாக புலம்பெயர்ந்து வரும் எம் உறவுகளை கொஞ்சமாவது மனச்சாட்சியுடன் நடத்தலாமே என்பதே எனது ஆதங்கள்.

பல்கலைக்கழகங்களில், தாங்கள் சீனியரிடம் வாங்கிய ராக்கிங்கை அடுத்து வரும் ஜூனியர்களுக்கு கொடுப்பது போல இவர்களும் புதியவர்களை மிக மிக கஸ்டப்படுத்துகிறார்கள். 

நான் கூறும் விடயங்கள் எல்லாம் 'என் புலம்பல்கள்' என நினைக்கிறீர்களா? இல்லவே இல்லை. என்னைப் போல நூற்றுக்கணக்கில் ஸ்ருண்ட் விஸாவில் லண்டனில் தங்கியிருக்கும் மாணவர்களின் புலம்பல் இது. நான் படிக்கும் கல்லூரியில் இலங்கையர்களும் பாகிஸ்தானியர்களுமே அதிகம். ஏறத்தாள 200 இற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் மாணவர்கள் இக்கல்லூரிக்கு இந்த வருடம் வந்திருக்கிறார்கள். அவர்களில் 100 இற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து படிக்க வருகிறார்கள். (ஏனையவர்கள் எஸ்கேப்..) அவர்கள் ஒவ்வொருவரும் லண்டனின் பல்வேறு பிரதேசங்களிலும் வசிக்கிறார்கள். அவர்கள் அனுபவங்களை கூறும்போது அவற்றைக் கேட்டு அவர்களின் பிரதிநிதியாகவே என் கருத்தை முன் வைக்கின்றேன். 

வெளிநாடுகளில் படிக்கும் எண்ணத்தில் வந்தாலோ அல்லது உழைக்கும் எண்ணத்தில் வந்தாலோ முதலில் தேவைப்படுவது பணம். லண்டனில் சராசரியாக 300 பவுண்களாவது மாத  வாழ்க்கைக்கு தேவைப்படுகின்றது. (ஏறத்தாள 56ஆயிரம் இலங்கை ரூபாய்). இதில் படிப்பு செலவையும் கட்டவேண்டும் என்றால் மாதம் ஆயிரம் பவுண்களாவது தேவைப்படும். அதிகாரபூர்வ வேலை செய்யும் பத்து, இருபது மணித்தியாலங்களில் இவற்றை ஒரு மாணவனால் உழைத்துக் கொள்ள முடியுமா?

அதனால் களவாக வேலைசெய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இங்கு அதிகளவில் எல்லோருக்குமே உண்டு. சரி! வேலைக்கு எங்கு போவது? தெரிந்தவர்களிடம் தானே வேலை கேட்கலாம்..

இங்கே அதிகளவில் தமிழர்கள் கடை வைத்திருக்கிறார்கள். 'ஓவ் லைசன்ஸ்' என்ற அடையாளத்துடன் பெரும்பாலும் குடி வகைகளே அதிகமாக விற்கப்படும். இங்கு அதை விடுத்தால் பிஸ்னஸ் செய்வது மிகவும் கடினம். அவ்வாறான இடங்களில் தேடிப்பிடித்து தெரிந்தவர்கள் மூலம் வேலையைப் பெற்றால் அதிகளவான எல்லா முதலாளிகளும் ஒரே மாதிரியே ஊழியர்களை நடத்துகிறார்கள். (நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்)

லண்டனில் அங்கீகரிக்கப்பட்ட மணித்தியால சம்பளம் 6.13 பவுண்கள். தமிழ்க்கடைகளில் அவ்வளவு கொடுக்க முடியாது என்பது எங்களுக்கும் தெரியும். அதை எதிர்பார்க்கும் மடையர்களும் நாங்கள் இல்லை. ஆனால் ஆகக் குறைந்த கொடுப்பனவாக 4 பவுண்களையாவது கொடுக்கலாமே! இங்கிருப்பவர்களில் சில முதலாளிகள் இரண்டு பவுண்களில் இருந்து ஸ்டார்ட் பண்ணுவார்கள். அவர்கள் நான்கு பவுண்கள் ஆக்குவதற்குள் எங்களுக்கு விஸா முடிந்துவிடும். லண்டன் வந்தற்கு என்ன சாம்பாதித்தாய் என்றால்.. கடன் தான் அதிகமாக இருக்கும்.

எங்கள் உழைப்பைச் சுரண்டுகிறார்கள். அவர்கள் கடையிலும் பிஸ்னஸ் நன்றாகவே நடக்கின்றது. (சுமாரத் தன்னும் இருக்கும்). மனச்சாட்சியுடனாவது ஏற்றுக்கொள்ளக் கூடிய சம்பளத்தைத் தரலாமே! தரமாட்டார்கள். ஏனெனில் நாங்கள் களவாக வேலை செய்கின்றோம். எங்களை நன்றாக பயன்படுத்துகிறார்கள். சரி! சம்பளத்தைத் தான் பொறுத்துப் போனாலும் சங்கடத்தையாவது தராமல் இருக்கலாமே. செய்யும் வேலையில் ஆயிரம் குறைகளை தினமும் அடுக்கிக் கொண்டே போவது. ஏறக்குறைய அடிமைகளைப் போலவே நடத்துகிறார்கள். அவர்களை மனதில் கொண்டே நான் இந்தப் பதிவை முன்னர் எழுதியிந்தேன். லண்டனில் வேலை கிடைப்பது என்பதே திண்டாட்டம் தான். அதனால் கிடைத்த வேலையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக எல்லாவற்றையும் சகித்துப் போகவேண்டியதாக இருக்கின்றது.

நான் அனுபவித்துக் கொண்டிருக்கும் கஸ்டங்களை விட பலமடங்கு கஸ்டங்களை தமிழர்கள் மாத்திரமின்றி பல நாட்டவர்களும் அனுபவத்துக் கொண்டிருக்கின்றார்கள். குறுகிய வழியில் பணக்காரர்கள் ஆன இந்த பைத்தியம் பிடித்த முதலாளிகள் திருந்தும் வரை இவ்வாறன சம்பங்கள் வெளிநாடுகளில் குறிப்பாக லண்டனில் குறையாது. பணம் பாதாளம் மட்டும் பாயும் என்பது எனக்கும் தெரியும். ஆனால் இவர்கள் பாதாளத்துக்கு பணத்தை கொண்டு செல்லத் தேவையில்லை தாங்கள் இறக்கும் போது தங்களுடன் எடுத்துச் சென்றார்கள் ஆனால் அவர்களுக்காக என் உயிரையும் நான் கொடுக்க தயார்.

நண்பர்களே! ஊரில் ஹீரோவாக சுற்றித்திரியும் நீங்கள் வெளிநாடுகளுக்கு தேவையில்லாமல் வந்து ஸீரோ ஆகாதீர்கள்! இது அனுபவித்தவனின் கருத்து.

வரோ அண்ணனின் தளம்http://shayan2613.blogspot.com

67 கருத்துகள்:

  1. வரோ அண்ணன் தன் அனுபவங்களை சிறப்பான ஒரு அறிவுரையை கூறியிருக்கின்றார்......

    பலருக்கு உபயோகப்படும்

    பதிலளிநீக்கு
  2. ஏதாவது புதிதாக வலையுலகில் அறிமுகப்படுத்தும் வரோ அண்ணன் முயற்சிகள் சிறப்பானது அந்த வகையில் இந்த மாத்தியோசியும் அவரின் சிறப்பான சிந்தனையின் வடிவம் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. இப்படியானவர்கள் இங்கு ஃபிரான்ஸிலும் எக்கச்சக்கம்! இவரகளைப் பற்றி நானும் ஒரு பதிவு போட எண்ணியிருந்தேன்! அட, லண்டனிலும் இதே தானா? எம்மவர்கள் எங்கு போனாலும்........!!

    பதிவுக்கு நன்றி வரோ + துஷி!

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் துஷி, வணக்கம் வரோ..!

    இந்த பதிவை நான் வாசித்தேன்னு மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.. ஏன்னா நான் லண்டனிலும் பாரீசிலும் நேரடியாக கண்ட விடயங்களைத்தான் வரோ எழுதி இருக்கின்றார்.. இதைவிட கூடத்தான் இங்கு "தமிழ்"முதலாலிகள் மற்றவர்களை நடத்துகிறார்கள்..!

    அத்தோடு வரே சொல்லாமல் விட்ட ஒரு விடயம் வீட்டு ஓனர்களின் அடாவடி.. இத நானே அனுபவித்திருக்கிறேன்..!!

    பதிலளிநீக்கு
  5. துஷி-வரோ தங்களின் புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள்!!

    நம்மவர்களே நம்மவர்களின் உழைப்பை கொள்ளையடிப்பதை அறியும்போது மிகவும் வருத்தமாக உள்ளது!!

    பதிலளிநீக்கு
  6. ஊரில இருக்கிறவர்களிடம் ஐயோ வராதேங்கோ.அங்க சுகமாயிருங்கோ எண்டா பொறாமையில சொல்றமாம்.பட்டாத்தானே தெரியும்.ஆனால் சுவிஸ்ல் இத்தனை கஸ்டங்கள் எனக்குக் கிடைக்கவில்லை.இங்கு ஆரம்பகாலங்களில் மட்டும் கொஞ்சம் கஸ்டம் என்பார்கள் !

    பதிலளிநீக்கு
  7. நண்பர்களே! ஊரில் ஹீரோவாக சுற்றித்திரியும் நீங்கள் வெளிநாடுகளுக்கு தேவையில்லாமல் வந்து ஸீரோ ஆகாதீர்கள்! இது அனுபவித்தவனின் கருத்து.

    அனுபவப் பகிர்வு!

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்,துஷி!பல வழிகளிலும் இந்தப் பிரச்சினை பகிரப்பட்டு வருகிறது.இணையப் பத்திரிகைகளிலும் அடிக்கடி எழுதப்படுகிறது.முதலாளிகளுக்கு இதையெல்லாம் படிக்கவோ,கவலைப்படவோ?! நேரம் எங்கே இருக்கிறது?ஆனாலும் கல்வி தேடி வந்த மாணவர்களை கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடத்தலாம் தான்,சிந்திப்பார்களா?

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் வரோ அண்ணே.... மிக சிறப்பான பதிவு.... பலரின் வெளிநாட்டு வாழ்க்கையை படம் புடித்து காட்டுகிறது உங்க பதிவு..

    ஆனால் பாஸ்... வெளிநாட்டில் ஹீரோக்களும் (நம்மள மாதிரி.... ஹீ ஹீ... சரி சரி கடுப்பாகாதீங்கோ??° இருக்கிறாங்கள் தானே...
    நீங்களும் எல்லோரையும் சொல்லாததால் இந்த விவாதத்தை விட்டுவிடுவோம்.... ஹா ஹா

    ஆனாலும் இது பற்றி நானும் முன்பு ஒரு பதிவெழுதி உள்ளேன்...
    "பாசமாவது பந்தவாவது இது வெளிநாடு" என்று.... இப்படி இருக்கும் சில ஜென்மங்கலால்தான் பல நல்ல உள்ளங்களுக்கும் கேட்ட பெயர். :(அவர்கள் நிஜ முகங்களை அழகாக தோளிரித்து காட்டி உள்ளீர்கள்..நன்று...
    உங்கள் தளத்திலும் அடிக்கடி எழுதுங்கள்....

    பதிலளிநீக்கு
  10. இப்படியான பதிவுகள்தான் உங்களிடம் இருந்து என்னை அதிகம் கவர்வது... இப்படியான சமூக சவுக்கடி பதிவுகளை உங்கள் தளத்திலும் இனி அடிக்கடி எதிர்பார்ப்பேன்...

    பதிலளிநீக்கு
  11. சிங்கம் பாலத்துக்கு மேல சிங்கிளா நிக்குது ...ஒரு வேளை போட்டோ எடுத்தது அவாவ இருக்குமோ?

    பதிலளிநீக்கு
  12. அநேகமா நீங்கள் சொல்லுற ரக முதலாளிமார் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்களாக தான் இருப்பார்கள். வேண்டுமென்றால் விசாரிச்சு பாருங்கள்... அது அவர்களின் பிறவி குணம்.. சொந்த இனத்துக்கு மட்டுமில்ல ,சொந்தக்காரன் கஸ்ரப்பட்டாலே நின்னு வேடிக்கை பார்ப்பார்கள். ஏனோ தெரியவில்லை யாழ்ப்பாணத்து மக்களிடம் (பெரும்பாலும்) அப்பிடி ஒரு குணம் இருக்கு. நானும் இங்கு வந்து ஏனைய ஊர்/மாவட்ட நண்பர்களுடன் பழகியிருக்கிறேன்.. ஆனால் அவர்களுக்கும் நம்ம யாழ் நண்பர்களுக்கும் அடிப்படையிலேயே நிறைய வேற்றுமை உண்டு. (பிரதேசவாதம் இல்லை,இது உண்மை)

    பதிலளிநீக்கு
  13. நம்ம ஊஉரப்போல வருமா? வரோவுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. ம்ம்ம்... :) இப்பிடியே ஒற்றுமையா இருங்கோ தம்பி மார்!!! நல்ல முயற்சி. சந்தோசம்.

    பிறகு, இஞ்ச கனடாவிலேம் இப்பிடித்தான் சொல்லீனம். சில ஈழத்தமிழ் தொழிலதிபர்கள்/வியாபாரக் காந்தங்கள் (Business Magent.. :)) அடிமாட்டு விலைக்கு எங்கட ஆட்களிட்ட வேலை வாங்குவினம் எண்டு. ம்.. என்னத்த சொல்றது :(

    பதிலளிநீக்கு
  15. வரோ துதி பாடும் பதிவுக்கு மைனஸ் ஓட்டு இல்லையா? பதிவுலகம் வரவர ரொம்ப கெட்டுப்போச்சு.

    நான் இன்னும் என் வாக்குரிமையை பாவிக்கவில்லை என்பதை துஸி நினைவில் கொள்க..

    பதிலளிநீக்கு
  16. அந்த வகையில் வரோ அண்ணனின் பதிவு இன்று என் வலைப்பூவில்...//

    ஏன்டா உன்னைவிட ஆறு மாசம் தானேடா அதிகம். அதுக்கு இப்படி மூச்சுக்கு தரம் அண்ணை எண்டுறாய். புரிஞ்சு போச்சுடா உன் ஐடியா. என்னை வயசு போனவன் ஆக்கி என் தளம் வாற கொஞ்ச பெட்டயளையும் நிப்பாட்ட பாக்கிறாய்..

    பதிலளிநீக்கு
  17. //வரோ அண்ணாவை நான் அறிமுகப்படுத்தித்தான் மற்றவர்கள் அறிய வேண்டும் என்ற தேவையே இல்லை... இவரை வலையுலகில் தெரியாதவர்கள் மிக குறைவே//

    ஏன்னா இவரு பி.பி.சி ல நியூஸ் வாசிக்கிறார். எல்லாரும் தெரிஞ்சு வைச்சிருக்கினம்.. சும்மா கடுப்பை கிளப்பாதை

    //வலைப்பூவில் நீண்டகாலமாய் எழுதும் மூத்த பிரபல பதிவர்களில் ஒருவர். //

    ஒரு ஐம்பது வயசிருக்குமோ! இவர் பதிவுலகில என்னத்தை கிழிச்சார் எண்டு கேட்டு சொல்லுமன்..

    பதிலளிநீக்கு
  18. // இப்போது அதிகம் சினிமா&நகைச்சுவை பதிவுகள் எழுத காரணம் தன் நேரமின்மையே என்று சொல்லும் இவரின் //

    நேரமில்லாதவர் எப்பிடி இந்த பதிவுகளை எழுதுறார் எண்டு என்னை போல சிலதுகள் கேக்கலாம..

    எனக்கு மூளை பிரஸ்ஸா இல்லப்பா.. நல்ல விசயங்களை யோசிக்கேலாது

    பதிலளிநீக்கு
  19. நல்ல பதிவு வரோ அண்ணா!
    நானும் இப்படி எனது நண்பர்கள் சொல்லி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். நம்மவர் எங்கே போனாலும்..
    நன்றி துஷி அண்ணா!

    பதிலளிநீக்கு
  20. புரிந்து கொள்ளும்படியாக மிகத் தெளிவாக
    எழுதிப் போகிறீர்கள்
    மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும்
    புதிதாக வருபவர்களுக்கு அல்லது வர நினைப்பவர்களுக்கு
    தங்கள் பதிவு ஒரு நல்ல வழிகாட்டியாக விளங்கும்

    பதிலளிநீக்கு
  21. நாம காட்டுக் கத்ஹல் கத்தினாலும், யாரும் காதுல வாங்கிக்குரது இல்ல.. இங்கு வந்து பாடு படும் போதுதான் அனைவரும் புரிந்து கொள்கிறோம் வெளி நாட்டு வாழ்க்கையின் மகிமையை...

    பதிலளிநீக்கு
  22. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய, பதிவு. நன்றி நண்பரே!
    நம்ம தளத்தில்:
    "மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

    பதிலளிநீக்கு
  23. பகிர்விற்கு நன்றி
    வெளிநாட்டு மோகம் கொண்டு அலைபவர்களுக்கு நல்ல ஒரு பாடம் .ஆனாலும் அவர்கள் திருந்துவதில்லை .சூப்பர் பதிவு நண்பா...கவலைக்குரிய விடயம் என்னவென்றால் ஊரில் உள்ளவர்களுக்கு அந்த காசின் அருமை தெரிவதில்லை அதுதான் அதை இப்படியாவது தெரிய படுத்தலாம் .வரோக்கு நன்றி அதிலும் துசிக்கு பெரிய நன்றி .

    பதிலளிநீக்கு
  24. உங்கள் முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  25. சூரியனுக்கு அறிமுகமா? கூட்டுமுயற்சி புதுமை.

    பதிலளிநீக்கு
  26. K.s.s.Rajh கூறியது...
    வரோ அண்ணன் தன் அனுபவங்களை சிறப்பான ஒரு அறிவுரையை கூறியிருக்கின்றார்......
    பலருக்கு உபயோகப்படும்<<<<<<<<<<<<<<<



    தேங்க்ஸ் ராஜ்..... உண்மைதான் வரோ அண்ணாவின் குட் பதிவு...

    பதிலளிநீக்கு
  27. K.s.s.Rajh கூறியது...
    ஏதாவது புதிதாக வலையுலகில் அறிமுகப்படுத்தும் வரோ அண்ணன் முயற்சிகள் சிறப்பானது அந்த வகையில் இந்த மாத்தியோசியும் அவரின் சிறப்பான சிந்தனையின் வடிவம் வாழ்த்துக்கள்<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    ராஜுடன் சேர்ந்து நானும் வாழ்த்துறேன் .. வரோ அண்ணாவை... :)

    பதிலளிநீக்கு
  28. Powder Star - Dr. ஐடியாமணிகூறியது...
    இப்படியானவர்கள் இங்கு ஃபிரான்ஸிலும் எக்கச்சக்கம்! இவரகளைப் பற்றி நானும் ஒரு பதிவு போட எண்ணியிருந்தேன்! அட, லண்டனிலும் இதே தானா? எம்மவர்கள் எங்கு போனாலும்........!!

    பதிவுக்கு நன்றி வரோ + துஷி!<<<<<<<<<<<<<<<<



    தேங்க்ஸ் மணி...

    நம்ம ஆக்கள் எங்கே போனாலும் திருந்த மாட்டார்கள்.. இவர்கள் அட்டகாசம் லண்டனில் தான் அதிகம் என்று கேள்வி பட்டு இருக்கேன்.

    பதிலளிநீக்கு
  29. காட்டான் கூறியது...
    வணக்கம் துஷி, வணக்கம் வரோ..!

    இந்த பதிவை நான் வாசித்தேன்னு மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.. ஏன்னா நான் லண்டனிலும் பாரீசிலும் நேரடியாக கண்ட விடயங்களைத்தான் வரோ எழுதி இருக்கின்றார்.. இதைவிட கூடத்தான் இங்கு "தமிழ்"முதலாலிகள் மற்றவர்களை நடத்துகிறார்கள்..!
    அத்தோடு வரே சொல்லாமல் விட்ட ஒரு விடயம் வீட்டு ஓனர்களின் அடாவடி.. இத நானே அனுபவித்திருக்கிறேன்..!!<<<<<<<<<<<<<<<<<<<<



    மாம்ஸ்....உண்மைதான்..... வீட்டு ஓனர் அட்டகாசங்களை நானும் அதிகம் கேள்வி பட்டு இருக்கேன்... இது பற்றி நீங்கள் ஒரு பதிவு போடலாமே மாமா

    பதிலளிநீக்கு
  30. குடிமகன் கூறியது...
    துஷி-வரோ தங்களின் புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள்!!
    நம்மவர்களே நம்மவர்களின் உழைப்பை கொள்ளையடிப்பதை அறியும்போது மிகவும் வருத்தமாக உள்ளது!!<<<<<



    தேங்க்ஸ் நண்பா....

    உண்மைதான் உழைப்பை திருடுவது என்பது மிக கேவலமானது....

    இவர்கள் அட்டகாசம் இங்கே அதிகம் நண்பா :(

    பதிலளிநீக்கு
  31. ஹேமா கூறியது...
    ஊரில இருக்கிறவர்களிடம் ஐயோ வராதேங்கோ.அங்க சுகமாயிருங்கோ எண்டா பொறாமையில சொல்றமாம்.பட்டாத்தானே தெரியும்.ஆனால் சுவிஸ்ல் இத்தனை கஸ்டங்கள் எனக்குக் கிடைக்கவில்லை.இங்கு ஆரம்பகாலங்களில் மட்டும் கொஞ்சம் கஸ்டம் என்பார்கள் !<<<<<<<<<<<<<<<<



    ஹா ஹா.... இதைத்தான் சொல்லுவார்கள்... இக்கரை மாட்டுக்கு அக்கறை பச்சை என்று..... சுவிசில் இப்படி அதிகம் இல்லைதான் அக்கா...

    பதிலளிநீக்கு
  32. இராஜராஜேஸ்வரி கூறியது...
    நண்பர்களே! ஊரில் ஹீரோவாக சுற்றித்திரியும் நீங்கள் வெளிநாடுகளுக்கு தேவையில்லாமல் வந்து ஸீரோ ஆகாதீர்கள்! இது அனுபவித்தவனின் கருத்து.
    அனுபவப் பகிர்வு!<<<<<<<<<<<<<<<<<<<<<

    தேங்க்ஸ் அக்கா

    பதிலளிநீக்கு
  33. Yoga.S.FR கூறியது...
    வணக்கம்,துஷி!பல வழிகளிலும் இந்தப் பிரச்சினை பகிரப்பட்டு வருகிறது.இணையப் பத்திரிகைகளிலும் அடிக்கடி எழுதப்படுகிறது.முதலாளிகளுக்கு இதையெல்லாம் படிக்கவோ,கவலைப்படவோ?! நேரம் எங்கே இருக்கிறது?ஆனாலும் கல்வி தேடி வந்த மாணவர்களை கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடத்தலாம் தான்,சிந்திப்பார்களா?<<<<<<<<<<<<<<<<<

    உண்மைதான் யோகா ஐயா...

    இவர்கள் பற்றி உங்களுக்கு அதிகம் தெரிந்து இருக்கும் என்று நினைக்குறேன்..... உந்த தமிழ் கடைகள் ரெம்ப மோசம் தான் :( எனக்கு இவர்களிடம் போய் அனுபவம் இல்லை இருந்து உப்படி நிறைய கேள்வி பட்டு உள்ளேன்...

    பதிலளிநீக்கு
  34. நிகழ்வுகள் கூறியது...
    சிங்கம் பாலத்துக்கு மேல சிங்கிளா நிக்குது ...ஒரு வேளை போட்டோ எடுத்தது அவாவ இருக்குமோ?<<<<<<<<<<

    சொந்த அவா... இலங்கையிலயாம்... இவா வாடகை அவா.... ஹா ஹா

    பதிலளிநீக்கு
  35. நிகழ்வுகள் கூறியது...
    அநேகமா நீங்கள் சொல்லுற ரக முதலாளிமார் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்களாக தான் இருப்பார்கள். வேண்டுமென்றால் விசாரிச்சு பாருங்கள்... அது அவர்களின் பிறவி குணம்.. சொந்த இனத்துக்கு மட்டுமில்ல ,சொந்தக்காரன் கஸ்ரப்பட்டாலே நின்னு வேடிக்கை பார்ப்பார்கள். ஏனோ தெரியவில்லை யாழ்ப்பாணத்து மக்களிடம் (பெரும்பாலும்) அப்பிடி ஒரு குணம் இருக்கு. நானும் இங்கு வந்து ஏனைய ஊர்/மாவட்ட நண்பர்களுடன் பழகியிருக்கிறேன்.. ஆனால் அவர்களுக்கும் நம்ம யாழ் நண்பர்களுக்கும் அடிப்படையிலேயே நிறைய வேற்றுமை உண்டு. (பிரதேசவாதம் இல்லை,இது உண்மை)<<<<<<<<<<<<<<<<<<<<<

    நிதர்சனம் கந்து... நான் நிறைய கேள்வி பட்டு உள்ளேன்.... இங்கையும் பாக்குறேன்... இவர்களின் குணம் ரெம்ப வித்தியாசம்.... என்னத்த சொல்ல..... ஏதோ ஒன்று சொல்வார்கள்... அற்பனுக்கு காலம் வந்தால் அர்த்த ராத்திரியில் குடை புடிப்பானாம்.... உப்படித்தான் இருக்கு இவர்களின் அட்டகாசம்

    பதிலளிநீக்கு
  36. shanmugavel கூறியது...
    நம்ம ஊஉரப்போல வருமா? வரோவுக்கு வாழ்த்துக்கள்.<<<<<<<<<<<

    தேங்க்ஸ் பாஸ்

    பதிலளிநீக்கு
  37. Rathi கூறியது...
    ம்ம்ம்... :) இப்பிடியே ஒற்றுமையா இருங்கோ தம்பி மார்!!! நல்ல முயற்சி. சந்தோசம்.

    பிறகு, இஞ்ச கனடாவிலேம் இப்பிடித்தான் சொல்லீனம். சில ஈழத்தமிழ் தொழிலதிபர்கள்/வியாபாரக் காந்தங்கள் (Business Magent.. :)) அடிமாட்டு விலைக்கு எங்கட ஆட்களிட்ட வேலை வாங்குவினம் எண்டு. ம்.. என்னத்த சொல்றது :(<<<<<<<<<<<<<

    தேங்க்ஸ் அக்கா....

    நம்மவர்களே நம்மவர் உந்த பாடு படுத்தினால் என்னதான் செய்ய .......!!! :(

    பதிலளிநீக்கு
  38. KANA VARO கூறியது...
    வரோ துதி பாடும் பதிவுக்கு மைனஸ் ஓட்டு இல்லையா? பதிவுலகம் வரவர ரொம்ப கெட்டுப்போச்சு.

    நான் இன்னும் என் வாக்குரிமையை பாவிக்கவில்லை என்பதை துஸி நினைவில் கொள்க..<<<<<<<<<<<<<<<

    ஹீ ஹீ.....

    ஏன் இந்த கொலை வெறி?????? அவ்வவ் நல்லாத்தானே போயோட்டு இருக்கு....

    பதிலளிநீக்கு
  39. KANA VARO கூறியது...
    அந்த வகையில் வரோ அண்ணனின் பதிவு இன்று என் வலைப்பூவில்...//

    ஏன்டா உன்னைவிட ஆறு மாசம் தானேடா அதிகம். அதுக்கு இப்படி மூச்சுக்கு தரம் அண்ணை எண்டுறாய். புரிஞ்சு போச்சுடா உன் ஐடியா. என்னை வயசு போனவன் ஆக்கி என் தளம் வாற கொஞ்ச பெட்டயளையும் நிப்பாட்ட பாக்கிறாய்..<<<<<<<<<<<<<<<<<<<<<<



    ஹீ ஹீ..... நீங்க ஆறு மாசம்தான் மூப்பு என்று நாங்க எப்படி நம்புறதாம்... அவ்வ்

    பதிலளிநீக்கு
  40. KANA VARO கூறியது...
    //வரோ அண்ணாவை நான் அறிமுகப்படுத்தித்தான் மற்றவர்கள் அறிய வேண்டும் என்ற தேவையே இல்லை... இவரை வலையுலகில் தெரியாதவர்கள் மிக குறைவே//

    ஏன்னா இவரு பி.பி.சி ல நியூஸ் வாசிக்கிறார். எல்லாரும் தெரிஞ்சு வைச்சிருக்கினம்.. சும்மா கடுப்பை கிளப்பாதை

    //வலைப்பூவில் நீண்டகாலமாய் எழுதும் மூத்த பிரபல பதிவர்களில் ஒருவர். //

    ஒரு ஐம்பது வயசிருக்குமோ! இவர் பதிவுலகில என்னத்தை கிழிச்சார் எண்டு கேட்டு சொல்லுமன்..<<<<<<<<<<<<<<<<<<<



    ஹா ஹா.................... கடைசியில் காட்டான் மாவின் கோமணமா.... காற்றில் பறக்கிறது????????? மாம்ஸ் எங்க நிக்கீறீங்க????? ஹே ஹே

    பதிலளிநீக்கு
  41. KANA VARO கூறியது...
    // இப்போது அதிகம் சினிமா&நகைச்சுவை பதிவுகள் எழுத காரணம் தன் நேரமின்மையே என்று சொல்லும் இவரின் //

    நேரமில்லாதவர் எப்பிடி இந்த பதிவுகளை எழுதுறார் எண்டு என்னை போல சிலதுகள் கேக்கலாம..

    எனக்கு மூளை பிரஸ்ஸா இல்லப்பா.. நல்ல விசயங்களை யோசிக்கேலாது<<<<<<<<<<<<<<<<<<



    புத்திசாலிகள் எப்பவும் தங்களை புத்திசாலிகளாய் ஒத்துக்க மாட்டாங்களாம்...

    நிஜம் போல் தான் இருக்கு.... அவ்வவ்

    பதிலளிநீக்கு
  42. ஜீ... கூறியது...
    நல்ல பதிவு வரோ அண்ணா!
    நானும் இப்படி எனது நண்பர்கள் சொல்லி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். நம்மவர் எங்கே போனாலும்..
    நன்றி துஷி அண்ணா!

    5:33 AM, December 02, ௨௦௧௧<<<<<<<<<<<<<<<<<<<<<<<<



    தேங்க்ஸ் ஜீ பாஸ்.

    எல்லாம் வரோ அண்ணனால் வந்தது

    இப்போ பாருங்க ஜீ யும் அண்ணாவாம்... அவ்வ

    பதிலளிநீக்கு
  43. Ramani கூறியது...
    புரிந்து கொள்ளும்படியாக மிகத் தெளிவாக
    எழுதிப் போகிறீர்கள்
    மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும்
    புதிதாக வருபவர்களுக்கு அல்லது வர நினைப்பவர்களுக்கு
    தங்கள் பதிவு ஒரு நல்ல வழிகாட்டியாக விளங்கும்<<<<<<<<<<<<<<

    தேங்க்ஸ் பாஸ்

    பதிலளிநீக்கு
  44. Mohamed Faaique கூறியது...
    நாம காட்டுக் கத்ஹல் கத்தினாலும், யாரும் காதுல வாங்கிக்குரது இல்ல.. இங்கு வந்து பாடு படும் போதுதான் அனைவரும் புரிந்து கொள்கிறோம் வெளி நாட்டு வாழ்க்கையின் மகிமையை...<<<<

    ஹா ஹா... உண்மைதான் நண்பா.... இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சயம்.... :)

    பதிலளிநீக்கு
  45. திண்டுக்கல் தனபாலன்கூறியது...
    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய, பதிவு. நன்றி நண்பரே!
    நம்ம தளத்தில்:
    "மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."<<<<<<<<<<<<<<

    தேங்க்ஸ் பாஸ்

    பதிலளிநீக்கு
  46. விண்மீன்கள் கூறியது...
    பகிர்விற்கு நன்றி
    வெளிநாட்டு மோகம் கொண்டு அலைபவர்களுக்கு நல்ல ஒரு பாடம் .ஆனாலும் அவர்கள் திருந்துவதில்லை .சூப்பர் பதிவு நண்பா...கவலைக்குரிய விடயம் என்னவென்றால் ஊரில் உள்ளவர்களுக்கு அந்த காசின் அருமை தெரிவதில்லை அதுதான் அதை இப்படியாவது தெரிய படுத்தலாம் .வரோக்கு நன்றி அதிலும் துசிக்கு பெரிய நன்றி .<<<<<<<<<<<<<<<<<<<<<



    ரெம்ப தேங்க்ஸ்.... இங்கத்த கஸ்ரம் ஊரில் இருப்பவர்களுக்கு புரியாது... புரிந்து கொள்ளும் நிலையம் அவர்களிடம் இல்லை.... ஏதோ நாமலே நம்ம மனசை தேத்தினால்தான் உண்டு :(

    பதிலளிநீக்கு
  47. பாலா கூறியது...
    உங்கள் முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்

    9:48 AM, December 02, ௨௦௧௧<<<<



    தேங்க்ஸ் பாலா பாஸ்

    பதிலளிநீக்கு
  48. "என் ராஜபாட்டை"- ராஜாகூறியது...
    தேவையான தகவல்<<<<<<<<<<<<<<

    தேங்க்ஸ்

    பதிலளிநீக்கு
  49. சி.பி.செந்தில்குமார் கூறியது...
    சூரியனுக்கு அறிமுகமா? கூட்டுமுயற்சி புதுமை.<<<<<<<<<<<<<<<<<<<<



    வணக்கம் பாஸ்... தேங்க்ஸ்.... யா யா வரோ அண்ணா பற்றி சொன்னது சரியே.... ஹீ ஹீ...... எல்லா பெருமையும் வரோ அண்ணனுக்கே...

    பதிலளிநீக்கு
  50. துஷ்யந்தன் சொன்னது…
    இவர்கள் பற்றி உங்களுக்கு அதிகம் தெரிந்து இருக்கும் என்று நினைக்குறேன்..... உந்த தமிழ் கடைகள் ரெம்ப மோசம் தான் :( எனக்கு இவர்களிடம் போய் அனுபவம் இல்லை இருந்து உப்படி நிறைய கேள்வி பட்டு உள்ளேன்...////உங்கள் ஊகம் சரிதான்!கொஞ்ச நாள்,இந்தப் "புதிய"முதலாளிகளுடன் நின்றிருக்கிறேன்!அது பல காலங்களுக்கு முன்பு!ஆனால்,அப்போதெல்லாம் இப்படிக் கெடுபிடிகள் இருந்ததில்லை, நான் அனுபவித்ததில்லை.இப்போ,சொல்லவே வேண்டாம்!அதிலும் காலை ஒன்பதுக்கு ஆரம்பித்து,இரவு பத்துக்குத் தான் வெளியே விடுகிறார்கள்.சம்பளம்?!

    பதிலளிநீக்கு
  51. //
    ஏன்டா உன்னைவிட ஆறு மாசம் தானேடா அதிகம். அதுக்கு இப்படி மூச்சுக்கு தரம் அண்ணை எண்டுறாய். //

    ஆமா வரோ 'அண்ணா'
    ரொம்ப ஓவராதான் துஷி போறார்ண்ணா
    என்னன்னு கேளுங்கண்ணா
    இப்படியா வரோ அண்ணாவை கேவலப்படுத்துவது...

    நீங்க கவலப்படாதீங்க வரோ அண்ணா...

    பதிலளிநீக்கு
  52. சூழ்நிலைகளை அனுபவித்தவர்களுக்கு தான் அதன் வலிகள் தெரியும்.

    அருமையான கரூத்துசெரிவு மிக்க பதிவு

    பதிலளிநீக்கு
  53. Yoga.S.FR சொன்னது…
    துஷ்யந்தன் சொன்னது…
    இவர்கள் பற்றி உங்களுக்கு அதிகம் தெரிந்து இருக்கும் என்று நினைக்குறேன்..... உந்த தமிழ் கடைகள் ரெம்ப மோசம் தான் :( எனக்கு இவர்களிடம் போய் அனுபவம் இல்லை இருந்து உப்படி நிறைய கேள்வி பட்டு உள்ளேன்...////உங்கள் ஊகம் சரிதான்!கொஞ்ச நாள்,இந்தப் "புதிய"முதலாளிகளுடன் நின்றிருக்கிறேன்!அது பல காலங்களுக்கு முன்பு!ஆனால்,அப்போதெல்லாம் இப்படிக் கெடுபிடிகள் இருந்ததில்லை, நான் அனுபவித்ததில்லை.இப்போ,சொல்லவே வேண்டாம்!அதிலும் காலை ஒன்பதுக்கு ஆரம்பித்து,இரவு பத்துக்குத் தான் வெளியே விடுகிறார்கள்.சம்பளம்?!<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    ஆஹா..... அப்போ நீங்களும் மாட்டித்தான் இருக்கீங்க??? ஆனால் நீங்கள் சொல்வது போல் அப்போது இப்போது உள்ளது போல் கெடி புடி குறைவு என்றே நினைக்குறேன்..... நீங்கள் சொல்லும் இப்போது விடிய ஒன்பதில் இருந்து இரவு பத்து என்பது உண்மையில் பாவம்....... இவர்களுக்கு மனச்சாட்சியே இல்லையா???? என்ன பிறப்புகளோ??? நினைக்கவே மனசு என்னவோ செய்யுது.... :(

    பதிலளிநீக்கு
  54. ஆமினா கூறியது...
    //
    ஏன்டா உன்னைவிட ஆறு மாசம் தானேடா அதிகம். அதுக்கு இப்படி மூச்சுக்கு தரம் அண்ணை எண்டுறாய். //

    ஆமா வரோ 'அண்ணா'
    ரொம்ப ஓவராதான் துஷி போறார்ண்ணா
    என்னன்னு கேளுங்கண்ணா
    இப்படியா வரோ அண்ணாவை கேவலப்படுத்துவது...

    நீங்க கவலப்படாதீங்க வரோ அண்ணா..<<<<<<<<<<<<<<<<<<<



    செமையா வாறீட்டீங்க வரோ அண்ணாவ.... அப்புறம் அக்கா அவர் சொல்லுறத நம்பாதீங்கோ..... நாம எவ்ளோ சின்ன பையன்... சோ அவர் பொய் சொல்லுறார்.... ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  55. ஆமினா சொன்னது…
    சூழ்நிலைகளை அனுபவித்தவர்களுக்கு தான் அதன் வலிகள் தெரியும்.

    அருமையான கரூத்துசெரிவு மிக்க பதிவு<<<<<<

    உண்மைதான் அனுபவித்தவனுக்கே அதன் வலி தெரியும்... தேங்க்ஸ் அக்கா ...

    பதிலளிநீக்கு
  56. வரோவின் வாழ்வுபோன்றுதான் ஸ்ருண்ட் விஸாவில் லண்டனில் தங்கியிருக்கும் பெரும்பாலான மாணவர்களின் நிலையும் சவால்கள் நிறைந்ததாக இருக்கிறது. இவர்களின் நிலையை நினைத்து வேதனைப்பவும் பரிதாபப்படவும்தான் முடிகிறது. வரோ மனம்தளர வேண்டாம். இந்த உலகில் எதுவும் நிலையானது அல்ல சோகங்களும் கவலைகளும் கூட அப்படித்தான். காலங்கள் மாறும் உங்கள் கனவுகள் மெய்ப்படும்.

    பதிலளிநீக்கு
  57. வணக்கம் துஷி எம்மவராலேயே எம்மவர் சுரண்டப்படும், சிரமங்களுக்குள்ளாக்கப்படும் அவலங்களை வெளிகொண்டுவ்ந்த உங்கள் பதிவிற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  58. முதலாளிகளுக்கு இன, மத, தேச வேறுபாடுகள் எதுவும் கிடையாது. அவர்களது ஒரே குறிக்கோள் சுரண்டுவதும் தொழிலாளியின் உழைப்பை உறிஞ்சுவதுமட்டுமே.

    பதிலளிநீக்கு
  59. வணக்கம் வரோ, மற்றும் துஸி மற்றும் நண்பர்களே!

    பதிவுலகில் வித்தியாசமான முயற்சியினைச் செய்து வரும் உங்கள் இருவருக்கும் முதலில் வாழ்த்துக்கள்!

    இக்கரை மாட்டிற்கு அக்கரை பச்சை என்பது போல வெளி நாட்டு அவலங்களைப் பலர் சொல்லியும் பட்டால் தான் புத்தி தெளியும் என நினைக்கும் பலரின் நிலமையினையும், அடிமைகளாக நடாத்தப்படும் ஆதரவற்ற மாணவர்களின் நிலையினையும் பகிர்ந்திருக்கிறீங்க.

    இவற்றினைப் படித்தாலாச்சும் எம் சமூகம் திருந்தினால் சரி!

    பதிலளிநீக்கு
  60. அம்பலத்தார் சொன்னது…
    வரோவின் வாழ்வுபோன்றுதான் ஸ்ருண்ட் விஸாவில் லண்டனில் தங்கியிருக்கும் பெரும்பாலான மாணவர்களின் நிலையும் சவால்கள் நிறைந்ததாக இருக்கிறது. இவர்களின் நிலையை நினைத்து வேதனைப்பவும் பரிதாபப்படவும்தான் முடிகிறது. வரோ மனம்தளர வேண்டாம். இந்த உலகில் எதுவும் நிலையானது அல்ல சோகங்களும் கவலைகளும் கூட அப்படித்தான். காலங்கள் மாறும் உங்கள் கனவுகள் மெய்ப்படும்.<<<<<<<<<<<<<<

    எஸ் சார்... வரோ அண்ணா , அம்பலத்தார் சொல்லுறதுதான் நிஜம்...

    பதிலளிநீக்கு
  61. அம்பலத்தார் சொன்னது…
    வணக்கம் துஷி எம்மவராலேயே எம்மவர் சுரண்டப்படும், சிரமங்களுக்குள்ளாக்கப்படும் அவலங்களை வெளிகொண்டுவ்ந்த உங்கள் பதிவிற்கு வாழ்த்துக்கள்.<<<<

    தேங்க்ஸ் அம்பலத்தார்... எல்லா பெருமையும் வரோ அண்ணனுக்கே

    பதிலளிநீக்கு
  62. அம்பலத்தார் கூறியது...
    முதலாளிகளுக்கு இன, மத, தேச வேறுபாடுகள் எதுவும் கிடையாது. அவர்களது ஒரே குறிக்கோள் சுரண்டுவதும் தொழிலாளியின் உழைப்பை உறிஞ்சுவதுமட்டுமே.<<<<<<<<<<



    அதே... அதே... இதுதான் முத்தலாலி வர்க்கத்தின் நிஜ முகம்.... அருமையா சொன்னீங்க...

    பதிலளிநீக்கு
  63. நிரூபன் கூறியது...
    வணக்கம் வரோ, மற்றும் துஸி மற்றும் நண்பர்களே!

    பதிவுலகில் வித்தியாசமான முயற்சியினைச் செய்து வரும் உங்கள் இருவருக்கும் முதலில் வாழ்த்துக்கள்!

    இக்கரை மாட்டிற்கு அக்கரை பச்சை என்பது போல வெளி நாட்டு அவலங்களைப் பலர் சொல்லியும் பட்டால் தான் புத்தி தெளியும் என நினைக்கும் பலரின் நிலமையினையும், அடிமைகளாக நடாத்தப்படும் ஆதரவற்ற மாணவர்களின் நிலையினையும் பகிர்ந்திருக்கிறீங்க.

    இவற்றினைப் படித்தாலாச்சும் எம் சமூகம் திருந்தினால் சரி!<<<<<<<<<<<<<<<<<<<<<<<



    தேங்க்ஸ் நிரு...

    பதிலளிநீக்கு
  64. அண்ணன் பிசி எண்டு தெரிஞ்சு தம்பியே எல்லாருக்கும் பதிலை போட்டிட்டான்.. நன்றிப்பா...

    பதிலளிநீக்கு
  65. அருமையான பதிவு,புலம் பெயர் நண்பர்கள் சொல்லும் நெருக்கடிகள்தான்

    பதிலளிநீக்கு
  66. இந்த வகையில் தமிழ் முதலாளிகள் மட்டுமில்லை மற்ற இந்திய/பஞ்சாப் /வங்கதேச /பாக் முதலாளிகளும் கூட அப்படிதான் .நேரில் நிறையதரம் பார்த்து இருக்கிறேன் ..மாணவர்களை சொல்லி குற்றமில்லை /இந்த கல்வி நிறுவனங்கள் நம்மூரில் இங்கே வந்து படிச்சிட்டே வேலை செய்யலாம் இவ்ளோ சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தைகளை வீசுவதால் அப்பாவிகள் மாட்டுகின்றனர்.உண்மை நிலையை அழகா சொல்லியிருக்கீங்க

    பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...