ஞாயிறு, டிசம்பர் 25, 2011

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.. 08

வளின் முரட்டுத்தனமான அணைப்பில் நான் கட்டுண்டு கிடந்தேன். எவ்வளவு நிமிடங்கள் கரைந்திருக்குமோ தெரியாது.. அவள் தன் அணைப்பில் இருந்து என்னை விலக்கும்போதுதான் சுயநினைவு பெற்றேன். விலகியவள் மறுபக்கம் திரும்பிக்கொண்டாள்.

"சாரி.. ஆர்ணி, மன்னிச்சுக்கொள் இது என் தப்புத்தான்" கண்களை துடைத்தபடியே சொன்னவள். "ஆர்ணி இதற்குமேல் நாம ரெண்டு பேரும் சந்தித்துக்கொள்ளுவது நல்லதல்ல, நான் என் முடிவில் உறுதியாகவே இருக்கேன். நான் எந்தவிதத்திலாவது உன் மனசை காயப்படுத்தி இருந்தால் மன்னித்துகொள்.. இதுதான் நான் உன்னைப்பார்க்கும் கடைசி சந்தர்ப்பமாக இருக்கட்டும்." சொல்லிவிட்டு என்னை சில வினாடிகள் பார்த்தாள். அழுது சிவந்திருந்த அந்த கண்களில் ஏக்கமும் காதலும் வலியும் நிறைந்திருந்தது.

நான் விரக்தியாக அவளைப்பார்துக்கொண்டிருந்தேன்.. என் பார்வையில் இருந்து தன்னை விலக்கியவள், கண்களை துடைத்தபடி மழைக்குள் இறங்கி தன் வீட்டை நோக்கி ஓடத்தொடங்கினாள். இருட்டினுள் அவள் உருவம் மறையும் வரை சிலையாக நின்று அவளை பார்த்துக்கொண்டே நின்றேன்.

ன்றைய சந்தோஷமும் வலியும் நிறைந்த அந்த சந்திப்பின் பிறகு அவள் என் கண்களில் படவேயில்லை. அதன் பின் அவள் என்னை சந்திக்க வருவதும் இல்லை. அவள் என்னை தவிர்ப்பது தெளிவாக தெரிந்தது.

கடைசி சந்திப்பில் அவளின் முரட்டு அணைப்பில் நான் சிக்குண்டு இருந்த அந்த நிமிடங்கள் மனசுக்குள் வந்து இன்பத்தை சுரக்க வைத்து கொண்டிருந்தன.

அடிக்கடி எங்கள் வீட்டு முற்றத்து வேப்பமரத்தடியில் நின்று அவள் வீட்டை நோட்டமிட்டபடியே இருந்தேன். அவள் வீட்டு முற்றத்தில் கூட ஆட்கள் நடமாட்டம் இல்லை. வழமைக்கு மாறாக அவள் வீடு பெரும் அமைதியாக இருந்தது. இந்த அமைதி பின்னால் வரப்போகும் பெரும் பூகம்பத்துக்காகத்தான் என்று அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை.

இரண்டு நாட்களாக அவளை காணாததால் மனசளவில் ரெம்ப சோர்ந்துபோய் இருந்தேன். அவளுக்கு என்ன ஆச்சோ..! என்ற பதட்டம் வேறு. அடிக்கடி முற்றத்துக்கு போய் அவள் வீட்டை பார்ப்பது வருவதுமாக இருந்தேன். என்னுடைய இந்த செய்கைகளை வீட்டினுள் இருக்கும் கண்கள் சந்தேகத்துடன் நோக்கத்தொடங்கின. நான் பிராண்ஸ் போகும் நாட்கள் வேறு நெருங்கிக்கொண்டிருந்தது.

அன்று வலுக்கட்டாயமாக அம்மா கடைக்கு இழுத்துவந்திருந்தார். "ப்ளீசம்மா.. சீக்கிரம் வீட்டுக்கு போவோம்" ஒரு ஜம்பது தடவைகளுக்கு மேல் சொல்லியிருப்பேன். இறுதியில் ஒருவாறு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தோம். இன்று ஏதோ நடக்கப்போகிறது என்று மனசு ஒருவித வலியுடன் சொல்லிக்கொண்டே இருந்தது.

என் மனதின் உணர்வுகளை உறுதிப்படுத்துவதுபோலவே தூர வரும்போதே அவள் வீட்டை சுற்றி நின்ற கூட்டம் மனதினுள் கிலியை ஏற்படுத்தியது.

இதயம் படு வேகமாக துடிக்க, உடம்பெல்லாம் திகில் பரவ..  அவள் வீட்டை நெருங்கிய எங்கள் கார் நிறுத்தின பாதி நிறுத்தாத பாதி இருக்கும்போதே கார் கதவுகளை திறந்தபடி அவள் வீட்டை நோக்கி ஓடினேன்.

அங்கு நான் கண்ட காட்சி என்னை அடியோடு நொறுங்க செய்தது. காட்டுப்பூனையின் வாயில் அகப்பட்ட முயலைப்போல அவள் தகப்பனின் அடிகளில் விழுந்து துவண்டு திணறி தடுமாறிக்கொண்டிருந்தாள்.

திடீரென உருப்பெற்றவள் போல் எழுந்து ஆக்ரோஷமாய் தகப்பனை தள்ளி விட்டபடியே வெறிபிடித்தவள் போல் கத்த தொடங்கினாள்.

"தூ... நீயெல்லாம் என்ன மனுசனைய்யா.. என்னை அடிக்கிறதுக்கு உனக்கு என்ன உரிமை இருக்கு. நீ ஒரு நல்ல தகப்பனாவும் இல்ல.. நல்ல மனுஷனாகவும் இல்ல.. உனக்கெல்லாம் எதுக்குய்யா கல்யாணம் மனுஷி பிள்ளைங்க..!!!!?? உன்னோடட இயலாமைய மறைக்க வேஷம் போட்டு எங்களை ஏன் தினம் தினம் சித்திரவதை பண்ணுற....." அவள் ஆவேசமாய் கத்த, அவர் மேலும் மேலும் நாகரீகமற்ற சொற்கள் கொண்டு திட்டியபடியே  உக்கிரமாய் அவளை தாக்குவதிலேயே குறியாக இருந்தார்.

அவள் அம்மா இடையில் சிக்குண்டு சின்னபின்னமாகிக்கொண்டிருந்தாள். ஆனால் அவள் அடிகளை எல்லாம் அலட்சியமாக தாங்கியபடியே இதுவரை காலம் வைத்திருந்த பொறுமைகள் எல்லாம் இழந்தவளாக கதறி கதறி அவரை நோக்கி கேள்விக்கணைகளால் துளைத்துகொண்டிருந்தாள். அவள் மேலான அவரின் உக்கிரமும் எல்லையை தாண்டிக்கொண்டிருந்தது.

அதுவரை நேரமும் திக்குபிரமை பிடித்து நின்ற நான் என் கைகளை இறுக பற்றியிருந்த அப்பாவின் கைகளை உதறிவிட்டு அவளை நோக்கி ஓடினேன்.

அவர் பிடியில் இருந்து வலுக்கட்டாயமாக மீட்டு, அவர் கைகளில் சிக்குண்டு இருந்த அவள் கூந்தலை விடுவித்து அவளை இழுத்து என் பின்னால் விட்டுக்கொண்டேன்.

சுற்றி நின்ற கூட்டத்தினுள் சலசலப்பு. ஆளுக்கொருவர் ஒவ்வொரு விதமாய் பேச, அதுவரை அதிர்ச்சியில் நின்ற அவள் அப்பா ஆவேஷமாய் என்னை தள்ளியபடியே.. என் சேட்டை இழுத்து பிடித்து உலுக்கியபடியே..

"என்ன பஞ்சாயத்து பண்ணுறீயா ?? வெளில போடா நாயே.. என் பொண்ணுடா.. அடிப்பேன் உதைப்பேன் முடிந்தால் கொலை கூட பண்ணுவேன். கேக்குறதுக்கு இங்கே எந்த நாய்க்கும் உரிமையில்லை.. முதல்ல வெளில போடா.... போடாங்கிறேன்...." அவர் என் நெஞ்சை இடித்து தள்ள நான் திமிறிக்கொண்டே

"பெத்த பெண்ணையே இப்படி போட்டு தாக்குறீயே..  உனக்கு வெக்கமா இல்ல? நீயெல்லாம் ஒரு ஆம்பிளை!! சீ..........." நானும் பதிலுக்கு கத்த, அவர் என்னையும் கண்டபடி தாக்க தொடங்கினார்.

அதுவரை நேரமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கூட்டம் இடையில் பூர, சுலக்க்ஷிகா வீட்டு முற்றம் யுத்த பூமியாக மாறத்தொடங்கியது.

கூட்டத்தினுள் ஒரு கரம் என்னை ஆதரவாய் பற்ற திரும்பினேன். சுலக்க்ஷிகா!! கண்களில் நன்றியும் காதலும் நிறைந்திருந்தது. அவள் உதடுகள் துடித்துகொண்டிருந்தது.. என் கைகள் இறுக பற்றிக்கொண்டாள்.

"ஆர்ணி.. என்னைக்கல்யானம் பண்ணிக்கிறீயா?? என்னை எங்காவது உன் கூட கூட்டிட்டு போயிறேன் ப்ளீஸ்.. எனக்கு யாருமே வேண்டாம் நீ மட்டும் போதும். உயிர் போறவரைக்கும் உன் கூடவே இருக்கணும் போல இருக்குடா......" அவள் என் கைகளை பிடித்து தன் நெஞ்சோடு அணைத்தபடியே சொல்ல... நான் சொல்ல வார்த்தைகள் அற்று உதடுகள் துடிக்க அவளை பார்த்துகொண்டிருந்தேன்.

அதே நேரம் ஒரு முரட்டு கரம் என்னை இழுக்க திரும்பினேன்.. எதிரே என் அப்பா. அடுத்தகணமே என் கன்னத்தை அவர் கரம் பதம் பார்த்தது. நான் பொறிகலங்கி பார்த்துகொண்டு நிக்கும்போதே அப்பா என் கைகளை இழுத்துக்கொண்டு வேகமாக நடக்கதொடன்கினார்.

என் மறுகையை பற்றி நின்ற அவளின் கைகள் நழுவ தொடங்கின.. அவள் ஏக்கமாகவும் பரிதாபமாகவும் என்னை பார்த்துகொண்டிருந்தாள்.

"உடனே பிராண்ஸ் போறோம், இன்று இரவே கொழும்பு வெளிக்கிடுறோம்.."   அருகில் பதறியபடி வந்த அம்மாவிடம் அப்பா சொல்லியபடி என்னை இழுத்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தார்.

எனக்கு எதுவும் காதில் விழவில்லை.. அவள்தான் என் கண்களில் தெரிந்துகொண்டிருந்தாள்.. "என்னை எங்காவது உன் கூட கூட்டிட்டு போயிறேன் ப்ளீஸ்.." என்ற அவள் வார்த்தைகள்தான் என் காதுகளில் எதிரொலித்துக்கொண்டிருந்தன..


தொடரும்...

76 கருத்துகள்:

 1. வணக்கம் துஷி, தோ படிச்சுட்டு வந்துடுறேன்! பொறுங்கோ!

  பதிலளிநீக்கு
 2. புது சட்டை அழகா இருக்கு சார்!(டெம்ப்ளேட்)

  பதிலளிநீக்கு
 3. இது போன்ற அப்பன்களை,குடும்பங்களை நிறைய பார்த்திருக்கிறேன்.சிறப்பாக பதிவு செய்திருக்கிறீர்கள்,நன்று.

  பதிலளிநீக்கு
 4. துஷி, இப்பதிவையும், உங்கள் வளர்ச்சியையும், இக்கதை நகர்ந்து செல்லும் விதத்தையும் இன்னும் பலவற்றையும் பாராட்ட என்னிடம் வார்த்தை இல்லை! ஒரு வரியில் சொல்கிறேன்!

  துஷி, நீங்கள் எங்கேயோ போயிட்டீங்க!

  பதிலளிநீக்கு
 5. கதையை சுவாரசியமாகத்தான் கொண்டு செல்கிறீர்கள்.. நல்லாயிருக்கு.

  பதிலளிநீக்கு
 6. டெம்ப்ளேட் சிம்பிளா இருக்கு.. நடுப்பக்கத்தின் அகலத்தை கொஞ்ச்ம சிறிதாக்க sidebar ஐ கொஞ்சம் பெரிதாக்கினால் அழகாயிருக்கும்..

  பதிலளிநீக்கு
 7. அருமையா போகுது பாஸ்!!

  ஆர்ணி அப்பாவ வில்லர் ஆக்கிடிங்களா?!

  பதிலளிநீக்கு
 8. புது டெம்ப்ளேட்.. புது போட்டோ.. கலக்குறிங்க துஷி!!

  பதிலளிநீக்கு
 9. துஷி எங்கையப்பா இவ்வளவு திறமையை வைச்சிருந்தனி. இந்தத்தொடரின்ரை அதிஉச்சம் இன்றைய பகுதி எட்டுத்தான். படிக்கத்தொடங்கினதிலையிருந்து top gear இல ஏறிட்டுப்போய் ஒருசில நிமிசங்கள் என்னை அந்த எழுத்துநடை அப்படியே கட்டிப்போட்டிட்டுது. நீ எங்கையோ போயிடுவாயப்பா

  பதிலளிநீக்கு
 10. ஆமாம் பாஸ்!இன்னைக்கு ரொம்ப வேகம்,
  கதைக்கேற்ற வேகத்தில் மனமும் பயணப்படுகிறது.

  பதிலளிநீக்கு
 11. மச்சி வாழ்க்கையில் எத்தனையோ கஸ்டங்களை தாங்கி இருக்கேன் ஆனால் எதுக்கும் கண் கலங்கியது கிடையாது உன் இந்த பதிவை படிக்கும் போது என்னை அறியாமல் கண்கள் கலங்கிவிட்டன.அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்.

  ரியலி கிரேட் நிச்சயம் இதை குறும்நாவலாக வெளியிடு நல்ல வரவேற்பு இருக்கும்

  தொடர் முடியட்டும் தொடர் பற்றி விரிவான விமர்சனம் சொல்கின்றேன்

  பதிலளிநீக்கு
 12. விசேடமாக இன்றைய பதிவின் பின்பாதியில் ஒவ்வொருவசனமும் தேவையற்ற வார்த்தைப்பிரயோகங்கள் எதுவும் இல்லாமல் உணர்வுகளை ஊடறுத்துச் செல்லும் வரிகள். குறைந்த வார்த்தைகளில் அதியுச்ச உணர்வுகளை கொண்டுவந்து அசத்திட்டிங்க. ஒருசிறந்த கதையைப் படிக்கும் உணர்வை தந்ததற்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 13. ////என் பார்வையில் இருந்து தன்னை விலக்கியவள், கண்களை துடைத்தபடி மழைக்குள் இறங்கி தன் வீட்டை நோக்கி ஓடத்தொடங்கினாள்.////

  கொளுந்துவிட்டு எரியுதடி
  கூட்டிவைச்ச உணர்ச்சியெல்லாம்- ஞானத்தங்கமே
  என்னுடல் உரசிப்போகவில்லை
  உயிர் உரசிப்போகிறாயே - ஞானத்தங்கமே!!!

  பதிலளிநீக்கு
 14. ///என் மனதின் உணர்வுகளை உறுதிப்படுத்துவதுபோலவே தூர வரும்போதே அவள் வீட்டை சுற்றி நின்ற கூட்டம் மனதினுள் கிலியை ஏற்படுத்தியது.////

  என்னவென்று தெரியவில்லை
  ஏதென்று புரியவில்லை
  என் மனசு துடிக்குதடி
  ஏங்கித் தவிக்குதடி!
  கூட்டமிதை பார்த்தபின்னே
  மனசு கூடுவிட்டு பாய்ந்துவந்து
  நாடுதடி உன்னுருவை!!

  பதிலளிநீக்கு
 15. நல்லா இருக்கு துஷி எழுத்து நடை..சிறப்பா கொண்டு போறீங்க...ஆர்ணீ ஆர்ணீ எண்டும் போது தான் மனசு திக்கு திக்க்ன்னுது..
  Interesting writing!!

  பதிலளிநீக்கு
 16. ////என்னைக்கல்யானம் பண்ணிக்கிறீயா?? என்னை எங்காவது உன் கூட கூட்டிட்டு போயிறேன் ப்ளீஸ்.. எனக்கு யாருமே வேண்டாம் நீ மட்டும் போதும். உயிர் போறவரைக்கும் உன் கூடவே இருக்கணும் போல இருக்குடா......"///

  புளியந்தோப்பு குயிலோன்னு
  குக்கூன்னு கூவிருச்சி!
  சாறெடுத்த கரும்புபோல
  சக்கையான எம்மனசு!
  நீர்ச்சத்து ஏறிப்போச்சு
  நீலக்குயில் உன்மொழியால்!!

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் துஷி,
  கதையின் வேகம் வலுப்பெற்றுக்கொண்டே போகிறது.
  நாயகியின் வாயிலிருந்து இந்த சொற்கள் வராதா என்று
  ஏங்கிக்கொண்டிருந்த நாயகனுக்கு இன்று
  சுகமும் துக்கமும் மாறி மாறி கிடைச்சிருக்கு..

  ம்ம்ம், தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 18. இரவு வணக்கம்,துஷி!பிறந்த நாள் போட்டோ நன்றாக இருக்கிறது.எத்தனையாவது என்று தான் தெரியவில்லை!பதினாறாவதோ?ஹி!ஹி!ஹி!///"என்னை எங்காவது உன் கூட கூட்டிட்டு போயிறேன் ப்ளீஸ்.." //// நெஞ்சைத் தொட்ட வரிகள்!

  பதிலளிநீக்கு
 19. Powder Star - Dr. ஐடியாமணி சொன்னது…
  வணக்கம் துஷி, தோ படிச்சுட்டு வந்துடுறேன்! பொறுங்கோ!<<<<<

  ஒக்கே பாஸ் :)))

  பதிலளிநீக்கு
 20. shanmugavel கூறியது...
  புது சட்டை அழகா இருக்கு சார்!(டெம்ப்ளேட்)<<<<

  ஹா ஹா... தேங்க்ஸ் சார் இன்றுதான் போட்டேனே..... :)

  பதிலளிநீக்கு
 21. shanmugavel கூறியது...
  இது போன்ற அப்பன்களை,குடும்பங்களை நிறைய பார்த்திருக்கிறேன்.சிறப்பாக பதிவு செய்திருக்கிறீர்கள்,நன்று.<<<<<<<<<<<<<<<<<<<<  தேங்க்ஸ் சார்.. நானும் நிறைய பார்த்து இருக்கேன்.... பிரான்சில் கூட :(

  பதிலளிநீக்கு
 22. Powder Star - Dr. ஐடியாமணிகூறியது...
  துஷி, இப்பதிவையும், உங்கள் வளர்ச்சியையும், இக்கதை நகர்ந்து செல்லும் விதத்தையும் இன்னும் பலவற்றையும் பாராட்ட என்னிடம் வார்த்தை இல்லை! ஒரு வரியில் சொல்கிறேன்!
  துஷி, நீங்கள் எங்கேயோ போயிட்டீங்க!<<<<<<<<<<<<<<<<<<  பாஸ்.... நீங்களா சொல்லுறீங்க!!!!! ஆஸ்கார் விருதே வாங்கின மாதிரி இருக்கு... ரியலி ஹப்பி :)))))

  பதிலளிநீக்கு
 23. துஷ்யந்தன் said...
  Riyas கூறியது...
  கதையை சுவாரசியமாகத்தான் கொண்டு செல்கிறீர்கள்.. நல்லாயிருக்கு.<<<<<<<<<<<

  ரெம்ப தேங்க்ஸ் பாஸ் :)

  பதிலளிநீக்கு
 24. நண்டு @நொரண்டு -ஈரோடுகூறியது...
  தொடருங்கள் ...<<<

  நன்றி

  பதிலளிநீக்கு
 25. Riyas கூறியது...
  டெம்ப்ளேட் சிம்பிளா இருக்கு.. நடுப்பக்கத்தின் அகலத்தை கொஞ்ச்ம சிறிதாக்க sidebar ஐ கொஞ்சம் பெரிதாக்கினால் அழகாயிருக்கும்..<<<<<<<<<<  தேங்க்ஸ் ரியாஸ் அண்ணா... மாற்றி விட்டேன் :) ரெம்ப தேங்க்ஸ்

  பதிலளிநீக்கு
 26. பெயரில்லா கூறியது...
  really super boss(Naveenan)<<<<

  தேங்க்ஸ் நவீனன் :)))

  பதிலளிநீக்கு
 27. குடிமகன் கூறியது...
  அருமையா போகுது பாஸ்!!
  ஆர்ணி அப்பாவ வில்லர் ஆக்கிடிங்களா?!<<<<<<<<<<<<<<<

  அவ்வ்வ்வ்...... காதல் என்றாலே எல்லா அப்பாக்களும் இப்படிதானே இருக்காங்க... :(

  பதிலளிநீக்கு
 28. குடிமகன் கூறியது...
  புது டெம்ப்ளேட்.. புது போட்டோ.. கலக்குறிங்க துஷி!!<<<<<<<<<<<<  ஹா ஹா......... ரெம்ப தேங்க்ஸ் மச்சி ;)))))

  பதிலளிநீக்கு
 29. அம்பலத்தார் கூறியது...
  துஷி எங்கையப்பா இவ்வளவு திறமையை வைச்சிருந்தனி. இந்தத்தொடரின்ரை அதிஉச்சம் இன்றைய பகுதி எட்டுத்தான். படிக்கத்தொடங்கினதிலையிருந்து top gear இல ஏறிட்டுப்போய் ஒருசில நிமிசங்கள் என்னை அந்த எழுத்துநடை அப்படியே கட்டிப்போட்டிட்டுது. நீ எங்கையோ போயிடுவாயப்பா<<<<<<<<<<<<<<

  வணக்கம் பாஸ்... இச்சோ..... ரெம்ப ஹப்பியா இருக்கு..... உங்களிடம் இருந்து பாராட்டு வேண்டுறது என்றால் சும்மாவா!!!!! :)))) உங்க அன்புக்கு ரெம்ப ரெம்ப தேங்க்ஸ் பாஸ். :)

  பதிலளிநீக்கு
 30. கோகுல் கூறியது...
  விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....<<<<
  :) :)

  பதிலளிநீக்கு
 31. கோகுல் கூறியது...
  ஆமாம் பாஸ்!இன்னைக்கு ரொம்ப வேகம்,
  கதைக்கேற்ற வேகத்தில் மனமும் பயணப்படுகிறது.<<<<

  ரெம்ப தேங்க்ஸ் மச்சி...

  பதிலளிநீக்கு
 32. அம்பலத்தார் கூறியது...
  விசேடமாக இன்றைய பதிவின் பின்பாதியில் ஒவ்வொருவசனமும் தேவையற்ற வார்த்தைப்பிரயோகங்கள் எதுவும் இல்லாமல் உணர்வுகளை ஊடறுத்துச் செல்லும் வரிகள். குறைந்த வார்த்தைகளில் அதியுச்ச உணர்வுகளை கொண்டுவந்து அசத்திட்டிங்க. ஒருசிறந்த கதையைப் படிக்கும் உணர்வை தந்ததற்கு வாழ்த்துக்கள்.<<<<<<<<<<<<<<<<

  நன்றி பாஸ் :)

  பதிலளிநீக்கு
 33. மகேந்திரன் கூறியது...
  ////என் பார்வையில் இருந்து தன்னை விலக்கியவள், கண்களை துடைத்தபடி மழைக்குள் இறங்கி தன் வீட்டை நோக்கி ஓடத்தொடங்கினாள்.////

  கொளுந்துவிட்டு எரியுதடி
  கூட்டிவைச்ச உணர்ச்சியெல்லாம்- ஞானத்தங்கமே
  என்னுடல் உரசிப்போகவில்லை
  உயிர் உரசிப்போகிறாயே - ஞானத்தங்கமே!!!<<<<<<<<<<<<<<<<<<<<<<<

  வாவ்.... சான்சே இல்லை பாஸ்.... ரியலி சூப்பர்

  பதிலளிநீக்கு
 34. மகேந்திரன் கூறியது...
  ///என் மனதின் உணர்வுகளை உறுதிப்படுத்துவதுபோலவே தூர வரும்போதே அவள் வீட்டை சுற்றி நின்ற கூட்டம் மனதினுள் கிலியை ஏற்படுத்தியது.////

  என்னவென்று தெரியவில்லை
  ஏதென்று புரியவில்லை
  என் மனசு துடிக்குதடி
  ஏங்கித் தவிக்குதடி!
  கூட்டமிதை பார்த்தபின்னே
  மனசு கூடுவிட்டு பாய்ந்துவந்து
  நாடுதடி உன்னுருவை!!<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<  இந்த கவிதை எனக்கு ரெம்ப புடிச்சு இருக்கு...

  ஆர்னிகனின் உணர்வை கவி மூலம் படம் புடித்து காட்டி விட்டீர்கள்.

  உங்கள் கவிதைக்கு நான் அடிமை பாஸ்... கலக்கல்

  பதிலளிநீக்கு
 35. மகேந்திரன் கூறியது...
  ////என்னைக்கல்யானம் பண்ணிக்கிறீயா?? என்னை எங்காவது உன் கூட கூட்டிட்டு போயிறேன் ப்ளீஸ்.. எனக்கு யாருமே வேண்டாம் நீ மட்டும் போதும். உயிர் போறவரைக்கும் உன் கூடவே இருக்கணும் போல இருக்குடா......"///

  புளியந்தோப்பு குயிலோன்னு
  குக்கூன்னு கூவிருச்சி!
  சாறெடுத்த கரும்புபோல
  சக்கையான எம்மனசு!
  நீர்ச்சத்து ஏறிப்போச்சு
  நீலக்குயில் உன்மொழியால்!!<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<  ஆர்ணிகனின் சந்தோஷ கவி இல்ல :)))

  சினிமா என்றால் இப்படி ஒரு பாடல் கண்டிப்பாய் வந்திருக்கும்....

  சூப்பர்

  பதிலளிநீக்கு
 36. மகேந்திரன் கூறியது...
  வணக்கம் துஷி,
  கதையின் வேகம் வலுப்பெற்றுக்கொண்டே போகிறது.
  நாயகியின் வாயிலிருந்து இந்த சொற்கள் வராதா என்று
  ஏங்கிக்கொண்டிருந்த நாயகனுக்கு இன்று
  சுகமும் துக்கமும் மாறி மாறி கிடைச்சிருக்கு..
  ம்ம்ம், தொடருங்கள்.<<<<<<<<<<<<

  வணக்கம் அண்ணா. ரெம்ப தேங்க்ஸ்... உங்க கவிதைக்கும் இன்னும் இன்னும் தேங்க்ஸ்... அசத்தலாய் இருக்கு கவிதை. திரும்ப திரும்ப படித்தேன் :)

  பதிலளிநீக்கு
 37. K.s.s.Rajh கூறியது...
  மச்சி வாழ்க்கையில் எத்தனையோ கஸ்டங்களை தாங்கி இருக்கேன் ஆனால் எதுக்கும் கண் கலங்கியது கிடையாது உன் இந்த பதிவை படிக்கும் போது என்னை அறியாமல் கண்கள் கலங்கிவிட்டன.அடுத்த பகுதிக்கு வெயிட்டிங். ரியலி கிரேட் நிச்சயம் இதை குறும்நாவலாக வெளியிடு நல்ல வரவேற்பு இருக்கும்
  தொடர் முடியட்டும் தொடர் பற்றி விரிவான விமர்சனம் சொல்கின்றேன்<<<<<<<<<<<<<<<<<<<<<<  என்ன மச்சி இப்படி சொல்லீட்ட!!!!!! எப்போதும் கலங்காத உன்னையும் கலங்க வைச்சுட்டேனா!!!! சாரி & தேங்க்ஸ் டா. சரி விடு மச்சி அடுத்த பகுதியை ஹப்பி ஆக்கிடுவோம். :)

  உன்னோட விமர்சனத்துக்காய் இப்பவே ஆவலாய் இருக்கேண்டா :)

  பதிலளிநீக்கு
 38. மைந்தன் சிவா கூறியது...
  நல்லா இருக்கு துஷி எழுத்து நடை..சிறப்பா கொண்டு போறீங்க...ஆர்ணீ ஆர்ணீ எண்டும் போது தான் மனசு திக்கு திக்க்ன்னுது..
  Interesting writing!!<<<<<<<<<<<<<<<<

  ஹாய் மைந்து....

  தேங்க்ஸ்..

  அடப்பாவி..... அவ்வ.

  மைந்தனை தொடர் படிக்க ரசிக்க வைத்ததே என் பெரிய சாதனைதான்... ஹா ஹா.... ஹப்பி.. தேங்க்ஸ்..

  பதிலளிநீக்கு
 39. Yoga.S.FR கூறியது...
  இரவு வணக்கம்,துஷி!பிறந்த நாள் போட்டோ நன்றாக இருக்கிறது.எத்தனையாவது என்று தான் தெரியவில்லை!பதினாறாவதோ?ஹி!ஹி!ஹி!///"என்னை எங்காவது உன் கூட கூட்டிட்டு போயிறேன் ப்ளீஸ்.." //// நெஞ்சைத் தொட்ட வரிகள்!<<<<<<<<<<<<<<<<<<<<<<  இரவு வணக்கம் அப்பா :)

  தேங்க்ஸ்.... வயசு சொல்லமாட்டோமே..... :) சரி சரி அப்பாக்கு சொல்லுறதில் என்ன இருக்கு அந்த போட்டோ எடுக்கும் போது மை ஏஜ் 18 .

  தேங்க்ஸ் அப்பா :)))))

  பதிலளிநீக்கு
 40. நல்ல போகுது மச்சி ..... தொடரட்டும்

  பதிலளிநீக்கு
 41. உங்கள் பதிவுக்கு இன்ட்லி யில் வோட்டு போடுவதில்லை என்றிருந்தேன் . பதிவைபடித்து மெய்மறந்த நிலையில் இன்ட்லி யிலும் கிளிக் செய்து விட்டேன் . நண்பா .

  பதிலளிநீக்கு
 42. துஷ்யந்தன் சொன்னது…
  இரவு வணக்கம் அப்பா :)
  தேங்க்ஸ்.... வயசு சொல்லமாட்டோமே..... :) சரி சரி அப்பாக்கு சொல்லுறதில் என்ன இருக்கு அந்த போட்டோ எடுக்கும் போது மை ஏஜ் 18 .

  தேங்க்ஸ் அப்பா :)))))////அப்பனுக்கு தாங்க்ஸ்?இற்ஸ் ஓ.கே!!!

  பதிலளிநீக்கு
 43. அண்ணே கதை வேறு ஒரு நிலையை அடைந்து விட்டது..

  கடைசி கட்டம் அருமை...

  பதிலளிநீக்கு
 44. வணக்கம் மருமோனே!
  அம்பலத்தார் சொல்வதை போல இதுவரை வந்த இத்தொடரில் இதுதான் மாஸ்டர் பீஸ் என்பேன்..!!

  வாழ்த்துக்கள் மருமோனே!!

  பதிலளிநீக்கு
 45. மாப்பிள மகேந்திரன் கவிதைகள் பதிவுக்கு இன்னும் அழகு சேர்க்கிறது..!!

  பதிலளிநீக்கு
 46. அழகாக நகர்த்தி செல்கிறிங்க பாஸ்..ஒவ்வொரு விவரிப்புக்களும் கண்முன்னே காட்சியாக வந்து நிக்கிறது...

  இனி கதை எவ்வாறு நகரப்போகிறது என்பதை ஊகிக்க முடியாது உள்ளது...

  தொடர்ந்து அசத்துங்க ....

  பதிலளிநீக்கு
 47. ரொம்ப லேட்டா வந்திட்டமோ!! அவ்வ்

  அம்பலத்தார் ஐயாவின் கருத்துக்களை நானும் வழிமொழிகிறேன்.

  துஷியின் எழுத்து திறன் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போகிறது,...

  பதிலளிநீக்கு
 48. அந்த பிள்ளைய கூட்டிற்று போனிங்களா? விட்டுட்டு போனிங்களா? அவ்வ் .... அடுத்த பகுதிய நாளைகே போடுங்க பாஸ்.. இல்லாட்டி முடிவ எனக்கு மட்டுமாவது சொல்லுங்க பாஸ்

  பதிலளிநீக்கு
 49. எனது முதல் வரவு..தொடர்ந்து வருகிறேன்..வாழ்த்துகள்..


  அன்போடு அழைக்கிறேன்..

  அழுகை அழ ஆரம்பிக்கிறது

  பதிலளிநீக்கு
 50. எனது முதல் வரவு..தொடர்ந்து வருகிறேன்..வாழ்த்துகள்..


  அன்போடு அழைக்கிறேன்..

  அழுகை அழ ஆரம்பிக்கிறது

  பதிலளிநீக்கு
 51. வணக்கம் துஸி,
  ஒரு பக்கம் சுலக்‌ஷனா மீதான காதல்,
  மறு புறம் அவளைச் சிறை மீட்க வேண்டும் என நினைக்கும் ஆர்ணிகனின் மன உணர்வுகள்,
  இடையில் பெற்றோரின் திடீர் முடிவு,
  சுலக்‌ஷி குடுமத்தினுள் தந்தை மூலம் ஏற்படும் வேதனைகள் என எல்லாவற்றையும் சொல்லி நகர்கிறது கதை.

  துஸி, நீங்கள் வளர்ந்த சூழலை அறிந்தவன் ஆதலால் உங்களின் தமிழை மெய்ச்சுகிறேன்!

  வாழ்த்துக்கள் துஸி!

  வர்ணனைகள், கதை நகர்வுகள் எல்லாமே கலக்கல்.
  ஏலவே முதற் பதிவிலும் இதனைச் சொல்லியிருந்தேன்.

  பதிலளிநீக்கு
 52. காத்திருந்தேன்  தொடரில் கண்டிப்பான தந்தை எங்கே கானவில்லை என்று இப்படி வருவார் என்று நினைக்கவில்லை என்றாளும் இப்படியும் நிகழும் பல (காதல்)பயணங்கள் என்பதை தொக்கிவிட்டுச் செல்கின்ற தொடரினைத் தருசிக்க காத்திருக்கின்றேன்!

  பதிலளிநீக்கு
 53. பொறுத்தது போதும் என்று மங்கை பொங்கிவிட்டால் ஆர்ணிங்கள் மனதில் தங்கிவிட்டால் ஆனாலும் விதி பிந்திவிட்டது தந்தையின் பயணத்தால் பார்த்திருக்கின்றேன் அடுத்த பகுதிக்காக!

  பதிலளிநீக்கு
 54. சுலக்சிகாவின் காதலன் புலிப்பல் போட்ட கோட்டுச் சூட்டுடன் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கான ராஜ(பட்டத்து ராஜா) களையுடன் அழகாய் சைட்பாரில் காட்சிதருகின்றார்!எத்தனை கோடி பொன்னும் பொருளும் வாங்கிவாரோ?? ஹீஹீ
  கோர்த்துவிடுவம் ராசுக் குட்டியுடன்  ஹீ ஹீ

  பதிலளிநீக்கு
 55. எங்கே நான் ரசித்த துஷிக்குட்டியின்ர போட்டோ !

  எதிர்பாராமல் கதை திரும்புதுபோல.எல்லாரும் சொல்லிட்டினம்.எனக்குக் கொஞ்சம் கூட வேலை துஷியா.நத்தார் புதுவருஷ நேரம் அதுதான் !

  பதிலளிநீக்கு
 56. Mahan.Thamesh சொன்னது…
  நல்ல போகுது மச்சி ..... தொடரட்டும்
  <<<<<<<<<<<<<<<<<<<<

  தேங்க்ஸ் மச்சி :))

  பதிலளிநீக்கு
 57. Mahan.Thamesh கூறியது...
  உங்கள் பதிவுக்கு இன்ட்லி யில் வோட்டு போடுவதில்லை என்றிருந்தேன் . பதிவைபடித்து மெய்மறந்த நிலையில் இன்ட்லி யிலும் கிளிக் செய்து விட்டேன் . நண்பா .

  <<<<<<<<<<<<<<<<<<<<<

  ஆஹா.... அவ்வ்வ்வ்

  பதிலளிநீக்கு
 58. Yoga.S.FR கூறியது...
  துஷ்யந்தன் சொன்னது…
  இரவு வணக்கம் அப்பா :)
  தேங்க்ஸ்.... வயசு சொல்லமாட்டோமே..... :) சரி சரி அப்பாக்கு சொல்லுறதில் என்ன இருக்கு அந்த போட்டோ எடுக்கும் போது மை ஏஜ் 18 .
  தேங்க்ஸ் அப்பா :)))))////அப்பனுக்கு தாங்க்ஸ்?இற்ஸ் ஓ.கே!!!<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<  ஹா ஹா... அப்பா என்றாலும் தேங்க்ஸ் சொல்லணும்... இது என் நிஜ அப்பா அடிக்கடி சொல்லுறது.... அவ்வவ்

  பதிலளிநீக்கு
 59. ஆகுலன் கூறியது...
  அண்ணே கதை வேறு ஒரு நிலையை அடைந்து விட்டது..
  கடைசி கட்டம் அருமை...<<<<<<<<<<<<<<<<<<<  தேங்க்ஸ் ஆகுலன் :)

  பதிலளிநீக்கு
 60. காட்டான் கூறியது...
  வணக்கம் மருமோனே!
  அம்பலத்தார் சொல்வதை போல இதுவரை வந்த இத்தொடரில் இதுதான் மாஸ்டர் பீஸ் என்பேன்..!!
  வாழ்த்துக்கள் மருமோனே!!<<<<<<<<<<<<  தேங்க்ஸ் மாமா :)

  பதிலளிநீக்கு
 61. காட்டான் கூறியது...
  மாப்பிள மகேந்திரன் கவிதைகள் பதிவுக்கு இன்னும் அழகு சேர்க்கிறது..!!<<<<<<<<<<<<<<<<  உண்மைதான் மாமா.... தேங்க்ஸ் மகேந்திரன் அண்ணா :)

  பதிலளிநீக்கு
 62. கந்தசாமி. கூறியது...
  அழகாக நகர்த்தி செல்கிறிங்க பாஸ்..ஒவ்வொரு விவரிப்புக்களும் கண்முன்னே காட்சியாக வந்து நிக்கிறது...
  இனி கதை எவ்வாறு நகரப்போகிறது என்பதை ஊகிக்க முடியாது உள்ளது...
  தொடர்ந்து அசத்துங்க ....<<<<<<<<<<<  ரெம்ப தேங்க்ஸ் கந்து :))

  பதிலளிநீக்கு
 63. மதுரன் கூறியது...
  ரொம்ப லேட்டா வந்திட்டமோ!! அவ்வ்

  அம்பலத்தார் ஐயாவின் கருத்துக்களை நானும் வழிமொழிகிறேன்.
  துஷியின் எழுத்து திறன் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போகிறது,...<<<<<<<<<<<<<<<<  அடப்பாவி..... ரெம்ப புகளுறாய்....... அவ்வ்வ்வ்

  தேங்க்ஸ்... நன்பேண்டா

  பதிலளிநீக்கு
 64. மதுரன் கூறியது...
  அந்த பிள்ளைய கூட்டிற்று போனிங்களா? விட்டுட்டு போனிங்களா? அவ்வ் .... அடுத்த பகுதிய நாளைகே போடுங்க பாஸ்.. இல்லாட்டி முடிவ எனக்கு மட்டுமாவது சொல்லுங்க பாஸ்<<<<<<<<<<<<<  ஹீ ஹீ.... உனக்கு சொல்லாமலா!!! போன் எடு சொல்லுறேன் :)))

  பதிலளிநீக்கு
 65. திண்டுக்கல் தனபாலன் சொன்னது…
  ஒவ்வொரு பதிவும் திக்! திக்! அருமை!<<<<

  தேங்க்ஸ்

  பதிலளிநீக்கு
 66. மதுமதி கூறியது...
  எனது முதல் வரவு..தொடர்ந்து வருகிறேன்..வாழ்த்துகள்..


  அன்போடு அழைக்கிறேன்..

  அழுகை அழ ஆரம்பிக்கிறது<<<<<  தேங்க்ஸ் பாஸ்

  பதிலளிநீக்கு
 67. நிரூபன் சொன்னது…
  வணக்கம் துஸி,
  ஒரு பக்கம் சுலக்‌ஷனா மீதான காதல்,
  மறு புறம் அவளைச் சிறை மீட்க வேண்டும் என நினைக்கும் ஆர்ணிகனின் மன உணர்வுகள்,
  இடையில் பெற்றோரின் திடீர் முடிவு,
  சுலக்‌ஷி குடுமத்தினுள் தந்தை மூலம் ஏற்படும் வேதனைகள் என எல்லாவற்றையும் சொல்லி நகர்கிறது கதை.

  துஸி, நீங்கள் வளர்ந்த சூழலை அறிந்தவன் ஆதலால் உங்களின் தமிழை மெய்ச்சுகிறேன்!

  வாழ்த்துக்கள் துஸி!

  வர்ணனைகள், கதை நகர்வுகள் எல்லாமே கலக்கல்.
  ஏலவே முதற் பதிவிலும் இதனைச் சொல்லியிருந்தேன்.<<<<<<<<<<<<<<<<<

  அழகான விரிவான கருத்து நன்றி பாஸ். :)))

  பதிலளிநீக்கு
 68. தனிமரம் சொன்னது…
  காத்திருந்தேன் தொடரில் கண்டிப்பான தந்தை எங்கே கானவில்லை என்று இப்படி வருவார் என்று நினைக்கவில்லை என்றாளும் இப்படியும் நிகழும் பல (காதல்)பயணங்கள் என்பதை தொக்கிவிட்டுச் செல்கின்ற தொடரினைத் தருசிக்க காத்திருக்கின்றேன்!<<<<<<<<<<<<<<<<<

  தேங்க்ஸ் பாஸ்

  பதிலளிநீக்கு
 69. தனிமரம் கூறியது...
  பொறுத்தது போதும் என்று மங்கை பொங்கிவிட்டால் ஆர்ணிங்கள் மனதில் தங்கிவிட்டால் ஆனாலும் விதி பிந்திவிட்டது தந்தையின் பயணத்தால் பார்த்திருக்கின்றேன் அடுத்த பகுதிக்காக!<<<<<<<<<<<<<<

  ஒக்கே பாஸ் :))) thnx

  பதிலளிநீக்கு
 70. தனிமரம் சொன்னது…
  சுலக்சிகாவின் காதலன் புலிப்பல் போட்ட கோட்டுச் சூட்டுடன் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கான ராஜ(பட்டத்து ராஜா) களையுடன் அழகாய் சைட்பாரில் காட்சிதருகின்றார்!எத்தனை கோடி பொன்னும் பொருளும் வாங்கிவாரோ?? ஹீஹீ
  கோர்த்துவிடுவம் ராசுக் குட்டியுடன் ஹீ ஹீ<<<<<<<<<<<<<<<<<<<<

  ஆஹா...... அண்ணா.... வை திஸ் கொலை வெறி.... ஜ ஆம் பாவம்.... அவ்வ்

  பதிலளிநீக்கு
 71. ஹேமா கூறியது...
  எங்கே நான் ரசித்த துஷிக்குட்டியின்ர போட்டோ !
  எதிர்பாராமல் கதை திரும்புதுபோல.எல்லாரும் சொல்லிட்டினம்.எனக்குக் கொஞ்சம் கூட வேலை துஷியா.நத்தார் புதுவருஷ நேரம் அதுதான் !<<<<<<<<<<<  ஹாய் அக்காச்சி...

  ரெம்ப பிஸி ஓ... :(

  நத்தார் வாழ்த்துக்கள் (பிந்திய)  ஹீ ஹீ.... அந்த போட்டோவை தூக்கிட்டேன்.

  அக்காச்சிக்காய் அடுத்த பதிவில் குட்டி போட்டோ போட்டுவேன்...

  தேங்க்ஸ் அக்காச்சி..............................

  பதிலளிநீக்கு
 72. கதை பயங்கர வேகமெடுக்கிறது
  அது பின்னூட்டங்களிலிருந்தும் தெளிவாகத் தெரிகிறது
  தொடர வாழ்த்துக்கள்
  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்க்ள்

  பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...