வியாழன், டிசம்பர் 15, 2011

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.. 05

ன்று காலை வழமைபோல் பற்களை தீட்டுவதை போல் பாவனை செய்தபடி சுலக்ஷிகாவை கண்களால் தேடிக்கொண்டிருந்தேன். திடீரென அவள் வீடு பரபரப்பானது, சுலக்ஷிகாவின் அம்மா வழமைக்கு மாறாக அடித்தொண்டையில் கத்தி பேசுவதும் பின் அழுவதுமாக இருக்க, அவளுடைய அப்பாவின் கர்ஜனை காதை பிளந்தது. பல தலைகள் அயல்வீட்டு முற்றங்களில் தோன்றி வேடிக்கை பார்க்க தொடங்கின. அப்பா அம்மாவுடன் அப்பம்மாவும் பதறியபடி என்னருகே வந்துவிட்டார்கள். நான் பயத்துடன் பார்த்துகொண்டு இருக்கும் போதே.. சுலக்ஷிகாவின் அம்மாவை அவள் அப்பா தலைமயிரில் பிடித்து வெளியே இழுத்துவந்து அடுத்த கட்டமாக கன்னத்தில் பளார்..பளார்.. என அறைய தொடங்கினார். பதிலுக்கு சுலக்ஷிகாவின் அம்மாவும் அவர் சட்டையை பிடித்து உலுக்கியபடி, கொல்லுய்யா... கொல்லு.. இப்படி தினம் தினம் சித்திரவதை பட்டு சாகிறதைவிட ஒரேயடியா செத்துடுறேன்...அவள் அடித்தொண்டையில் கதற அவர் மேலும் மேலும் உக்கிரமாக தாக்கதொடங்கினார்.

அதுவரை திக்குபிரமை பிடித்து நின்ற சுலக்ஷிகா ஆவேஷமாக கத்தியபடி இடையில் நுழைய அவர் மனைவியை நோக்கி அடித்த அடிகள் சுலக்ஷிகாவை பதம் பார்த்தது. அவள் அதை சர்வ சாதாரணமாய் தாங்கியபடியே தகப்பனை தள்ளி தாயை காப்பாற்றுவதிலேயே குறியாய் இருந்தாள். அவள் தம்பி சுவற்றுடன் அட்டைபோல் ஒட்டியபடியே வெம்பி வெம்பி அழுதுகொண்டிருந்தான். அவள் அப்பா திடீரென அடிப்பதை நிறுத்தி சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பவர்களை முறைப்பாக பார்த்தவர் சட்டென வீட்டைவிட்டு வெளியேறி வீதியில் வேகமாக நடக்கதொடங்கினார். ஈவு இரக்கம் கொஞ்சமும் இன்றி தன் மனைவியையும் மகளையும் அடித்துவிட்டு போகும் அந்தாளை விட எந்த சலனமும் இன்றி சுற்றி வேடிக்கை பார்த்தவர்கள் மீதே கோபம் அதிகம் வந்தது எனக்கு. என் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை அவதானித்த அப்பம்மா மெதுவாக என் கைகளை வருட சட்டென தட்டி விட்டேன். 

சே.. ஏன் இப்படி இருக்காங்க.. இப்படி ஒரு அநியாயம் நடக்குதே தட்டிக்கேப்போம் என்ற மனிதாபிமானமே இல்லாமா இப்படி நான்சென்ஸ் மாதிரி வேடிக்கை பார்க்கிறாங்களே என்ன மனுஷங்க இவங்க எல்லாம்?! நான் பொரும, அப்பம்மா மீண்டும் என் கைகளை பிடித்து தலையை கோதிய படி, ஆர்ணிகன் குட்டி.. உனக்கு இதெல்லாம் புதுசு அதான் தாங்கிக்க முடியாம இருக்குப்பா எங்களுக்கு எல்லாம் பழகிச்சுடா கண்ணா. அந்த வீட்டு சண்டையை மட்டும் யாரும் விலக்க போக மாட்டாங்கடா ஏக்கனவே பலமுறை அங்கே போய் அவமானப்பட்டு வந்தவங்கதான் எல்லோருமே. ஏன் நான் கூட பலமுறை போய் அவமானப்பட்டு இருக்கேன், பரிதாபப்பட்டு போனதுக்கு செருப்பால அடிக்காத குறையா வயசு போனவளே என்ற சின்ன உறுத்தல் கூட இல்லாம கழுத்தைபுடிச்சு வெளிலே தள்ளிட்டான். அது கூட பரவாயில்லை ஆனா அவன் பொண்டாட்டி ஒரு படி மேலேயே போய், இது எங்க குடும்ப பிரச்சனை எங்க பிரச்சனைக்க அடுத்தவங்க நீங்க தலையிடுறது நாகரீகம் அற்றது தயவு செய்து வெளில போங்கம்மா.. என்று கையெடுத்து கும்புடுறா..!! இதுக்கு பிறகும் அந்த வீட்டுக்க எவனும் காலெடுத்து வைப்பானா சொல்லு.. 

ஆர்ணிகன் இதை எல்லாம் மனசுக்க வைச்சுக்காதையப்பா.. அந்த குடும்பம் ஒரு மாதிரித்தான். ஊர்காரங்க எங்களுக்கே அதுவள புரிஞ்சுக்க முடியல்ல, வீட்டுக்க தலைவன் ஒழுங்கா இருந்தாத்தானே மிச்சமும் ஒழுங்கா இருக்கு. அவனே படு அயோக்கியன் அப்புறம் மிச்சம் எப்படி இருக்கும்?? நான் கூட ஒருதடவை பழசை எல்லாம் மறந்துதுட்டு சோற்றுக்கே கஸ்ரப்படுதுவளே வயசுக்கு வந்த பொண்ணு வேற இருக்கு எண்டுட்டு எங்க காணிலையே அவனுக்கு வேலை போட்டு கொடுத்தேன். கொடுத்து என்ன பிரயோசனம் ரெண்டுநாள் ஒழுங்கா வந்தான் அப்புறம் கூட வேலைசெய்யிறவனோட ஏதோ தகராறாம். நான் கூப்பட்டு விசாரிச்சதுக்கு பணக்காரங்களிட்ட எல்லாம் என்னால கைகட்டி வேலை பார்க்கமுடியாது அதுக்கு வேற யாரையும் பாருங்க என்று சொல்லீட்டு அவன் பாட்டுக்கு போயிட்டே இருக்கான். அதுகளிட்ட எது இருக்கோ இல்லையோ ரோஷத்துக்கு மட்டும் குறைச்சல் இல்லை. ம்..... ஆர்ணிகன் குட்டி அதுகள் அப்படித்தாண்டா.. ஆனா ஒண்டுடா அந்த பொண்ணு இருக்காளே சுலக்ஷிகா.. தங்கமான பொண்ணு. அவள் ரெம்ப பாவம்டா... இந்த சின்னவயசிலேயே எவ்ளோ அவமாங்கள் வேதனைகள் அவளுக்கு! அப்பம்மா பெருமூச்சு விட்டு அங்கலாய்க்க நான் அவளை நினைத்து உள்ளுக்குள்ளே உடைந்து நொருங்கிக்கொண்டிருந்தேன்.

இரவு நெடுநேரமாகியும் தூக்கம்வராமல் புரண்டு புரண்டு படுத்துகொண்டிருந்தேன். துக்கத்திற்கு பதில் காலையில் நடந்த சம்பவங்களே கண்முன் வந்து மனசை ரணமாக்கிக்கொண்டிருந்தது. பாவம் சுலக்ஷிகா.. இறைவன் அவளுக்கு அழகு அறிவு எல்லாத்தையும் அள்ளிக்கொடுத்து விட்டு அவள் வாழ்க்கையை மட்டும் ஏன் இவ்ளோ ரணமாக அமைத்தான். சுலக்ஷிகா மாதிரி ஒரு பெண் இப்படி இருப்பது எவ்ளோ வேதனையானது. சுலக்ஷிகா நல்லா இருக்கோணும்.. அவள் வாழ்க்கை நன்றாக அமையனும்.. அதற்க்கு என்னால் ஆனா உதவியை செய்யணும். இல்லை இல்லை... அவளுக்காக அடுத்தவர்களிடம் போய் உதவி கேட்பதை விட நானே செய்யலாமே!!! என் மனசுக்குள் ஒரு மகா யுத்தமே நடந்துகொண்டிருந்தது. மனசுபோட்டு அடித்து இறுதியில் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தது. இந்த முடிவு வெளித்தோற்றத்துக்கு  அவள் மேல் கொண்ட பரிதாபமே காரணமாக எல்லோருக்கும் பட்டாலும் என் மனச்சாட்சிக்கு தெரியும் உண்மை நிலை. முதல் பார்வையிலேயே அவள் எனக்குள் வந்துவிட்டாள். அவள் மேல் எனக்கு ஏற்பட்ட ஈர்ப்பே அவள் பின்னால் என்னை சுற்ற வைத்தது. அதுவே இன்று இந்த முடிவை எடுக்கும் நிலைக்கு என்னை கொண்டுவந்துள்ளது. எல்லாம் சரி, இந்த முடிவை சுலக்ஷிகா ஏற்பாளா? ஒருவேளை இதை அவள் ஏற்க்காவிட்டால்..!! இல்லையில்லை இதை அவள் ஏற்கா விட்டாலும் அவள் ஏற்கும்படியான ஒரு சுழலை நான் உருவாக்கவேண்டும் மனசு உறுதியாக சொன்னது. எதையோ பெரிய சுமையை இறக்கியது போல் மனசு லேசாக இருந்தது. வழமைக்கு மாறாக மனசு சந்தோஷத்தில் குதுகழிக்க மனநிறைவோடு தூங்க தொடங்கினேன்.


வழமையாக அவளை சந்திக்கும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. வீட்டினுள் இருந்து அவளை பார்க்க போக  எத்தனித்த போது ஏதோ என்னை உந்த மீண்டும் கண்ணாடி முன் வந்து நின்று என்னைப்பார்த்தேன்.. இப்போது வர்ணிக்க நேரம் பற்றாது ஆனாலும் நீ ரெம்ப அழகுடா மனச்சாட்சி குறும்பு சிரிப்புடன் சொல்ல வெக்கம் என்னை பிடுங்கி தின்றது. மனசுக்குள் கற்பனைகள் புடை சூழ ஆற்றங்கரையை நோக்கி நடக்க தொடங்கினேன். தொலைவில் வரும்போதே  அந்த பாழடைந்த பங்களாவின் மேல் படரும் கொடிமீது சாய்ந்தபடி தூரத்தில் எதையோ வெறித்து பார்த்தபடி அவள் நிற்பது தெளிவாக தெரிந்தது. வழமைக்கு மாறாக இன்று அவள் அதிகமாகவே அழகாய் இருப்பதுபோல் இருந்தது. மனசுக்குள் சந்தோஷமும் பயமும் தடம்புரள அவளை நெருங்கினேன். என் காலடி சத்தம் கேட்டு சுயநினைவு பெற்றவள் சட்டென புன்னகைதவள் பின் பார்வையை என்னில் இருந்து எடுத்து மீண்டும் அந்த தூர திசையில் செலுத்த தொடங்கினாள். நான் தயங்கி தயங்கி சுலக்ஷிகா... என்றேன். என்ன என்பதுபோல் திரும்பி நிமிர்ந்து என்னை பார்த்தாள்.
தொடரும்..


வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா 

குறிப்பு
: இத்தொடர் யுத்தம் நடந்த காலபகுதியில் நடப்பதாகவே எழுதப்பட்டுள்ளது.
: இத்தொடர் ஒரு சிறு குறுந்தொடர்.. சில பகுதிகளுடன் முடிவடையும்.

: இத்தொடரில் வரும் காதாபாதிரங்களோ கதையோ உண்மையல்ல முழுக்க முழுக்க கற்பனையே.. 


42 கருத்துகள்:

  1. அடுத்த பதிவிற்காய் ஆவலுடன் காத்திருக்கிறோம்..

    பதிலளிநீக்கு
  2. கதையில் சுவாரஸ்யம் கூடிக்கொண்டு போகிறது
    அடுத்த பதிவை அதிக ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 2

    பதிலளிநீக்கு
  3. குடும்பம் எண்டா சண்டை சச்சரவு இருக்க தான் செய்யும்.. ஆனால் அதையே தெருவுக்கு கொண்டுவரும் சிலரின் செயல்கள் அசிங்கம்... அது இப்பவும் இருக்கு.

    பதிலளிநீக்கு
  4. நீங்க தொடருங்க ..அநேகமாய் அடுத்த,அதற்கடுத்த பகுதியுடன் நிறைவு பெரும் போல இருக்கு? அப்பெண்ணின் முடிவு தான் என்ன என்பதை என்னால் இன்னமும் ஊகிக்க முடியவில்லை!)

    பதிலளிநீக்கு
  5. உங்களின் முடிவு என்ன..அல்லது அவளின் முடிவு என்ன என்று அறிய ஆவலாக உள்ளது........

    பதிலளிநீக்கு
  6. ////பாவம் சுலக்ஷிகா.. இறைவன் அவளுக்கு அழகு அறிவு எல்லாத்தையும் அள்ளிக்கொடுத்து விட்டு அவள் வாழ்க்கையை மட்டும் ஏன் இவ்ளோ ரணமாக அமைத்தான். சுலக்ஷிகா மாதிரி ஒரு பெண் இப்படி இருப்பது எவ்ளோ வேதனையானது.////

    மச்சி இப்படி நிறைய சுலக்ஷிகாக்கள் இங்கே இருக்கின்றார்கள்....

    அதைவிட கொடுமை யுத்தம் என்னும் அரக்கன் ஏற்படுத்திய வடுக்களில் அங்கங்களை இழந்த பல பெண்கள் இருக்கின்றார்கள் அவர்களை பார்த்து விதியை நொந்து கொள்வதைத்தவிர வேறு என்ன செய்ய முடியும்....

    பதிலளிநீக்கு
  7. எழுத்து அழகாக வசப்பட்டுவிட்டது உங்களுக்கு ! தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  8. இறைவன் அவளுக்கு அழகு அறிவு எல்லாத்தையும் அள்ளிக்கொடுத்து விட்டு அவள் வாழ்க்கையை மட்டும் ஏன் இவ்ளோ ரணமாக அமைத்தான். சுலக்ஷிகா மாதிரி ஒரு பெண் இப்படி இருப்பது எவ்ளோ வேதனையானது. சுலக்ஷிகா நல்லா இருக்கோணும்.. அவள் வாழ்க்கை நன்றாக அமையனும்.. அதற்க்கு என்னால் ஆனா உதவியை செய்யணும். இல்லை இல்லை... அவளுக்காக அடுத்தவர்களிடம் போய் உதவி கேட்பதை விட நானே செய்யலாமே!!!

    //

    எல்லாரும் இப்படி முடிவு பண்ணிட்டா பரவாயில்லையே!

    பதிலளிநீக்கு
  9. இம்முறை அதிகமாக கண்டிப்பு வார்த்தைகள் விளையாடுகிறதே..

    பதிலளிநீக்கு
  10. ம்..துஷிக்குட்டி இப்பத்தான் இரண்டு பதிவுகளும் வாசித்தேன்.வறுமையை விபரித்த விதம் அருமை.

    இங்கே கண்ணாடிமுன் உங்கள் அழகை சுருக்கமாகச் சொன்னதும் அழகு.அதோடு சுலஷிகா பெயர் இன்னுமழகு.ஆனால் அர்த்தம் தெரியவில்லை.தொடருங்கள்.நிச்சயமாய் உங்கள் ஏற்பாடு எதையும் ஏற்றுக்கொள்ளமாட்டாள் என்றே நினைக்கிறேன் !

    பதிலளிநீக்கு
  11. குடும்பம் என்றால் சண்டையும் சச்சரவும் வருவது கிராமத்தில் இயல்பு நாங்களும் முன்னர் இப்படியான விடயங்களை விடுப்பு பார்த்த ஞாபகங்களை மீள அசைபோடும் உங்கள் எழுத்து நடை சிறப்பு துசி ஐயா!

    பதிலளிநீக்கு
  12. தலைமகனின் இயலாமையை இங்கு குடும்ப வன்முறையாக வெடிப்பதை சில இடங்களில் இன்றும் கானமுடியும் ..அதற்கு கல்வியில் விடிவெள்ளி அவர்களுக்கு கிடைக்கனும் .என்ன செய்வது சில இடங்களில் குடும்பத்தை சந்தி சிரிக்க வைக்க முடியாது என்பதால் பல பெண்கள் பாடு திண்டாட்டம் தான்!

    பதிலளிநீக்கு
  13. முடிவைக்கான ஆவலுடன் இருக்கின்றேன் அவள் வருவாளா ?தருவாளா??(அன்பை) உங்கள்
    எழுத்துநடை மீது எனக்கே பொறாமை வருகின்றது பாஸ் உண்மையில். இன்னும் பின்னூட்டம் இட நேரம் தடுக்குது பார்க்கலாம் பிறகு! 

    பதிலளிநீக்கு
  14. ////அவள் அதை சர்வ சாதாரணமாய் தாங்கியபடியே தகப்பனை தள்ளி தாயை காப்பாற்றுவதிலேயே குறியாய் இருந்தாள். அவள் தம்பி சுவற்றுடன் அட்டைபோல் ஒட்டியபடியே வெம்பி வெம்பி அழுதுகொண்டிருந்தான்.////

    இயலாமையால் வாழ்வின் இன்றைய பொழுதை
    இனிதே கடக்க துணிவில்லாத சாதாரண குடும்பங்களில்
    நடைபெறும் நிலையில்லா சண்டைகளை வாக்குவாதங்களை
    அருமையா சொல்லியிருகீங்க...
    இந்த நிலைகளை கண்கொண்டு கண்ட குழந்தைகள்
    மனம் பாதிப்புக்குள்ளாகி அதே குணத்தை தொடரவும் செய்கிறது.
    சற்று மாற்றி அந்தப் பாதையை நம் வாழ்வில் வரவிடாது எத்தனிக்க
    வேண்டும் என்ற எண்ணங்களிலும் வீழ்கிறது.

    பதிலளிநீக்கு
  15. மிக மிக இயல்பான வார்த்தைகளால் கதை நகற்றும் விதம்
    மனதைத் தொடுகிறது துஷி.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம்,துஷி!ஒவ்வோர் பாகத்திலும்(கதை)சஸ்பென்ஸ் வைத்து நகர்த்திச் செல்கிறீர்கள். நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  17. தொடர் அருமை, தொடருங்கள் தொடர்கிறோம்...!!!

    பதிலளிநீக்கு
  18. கோவி சொன்னது…
    அடுத்த பதிவிற்காய் ஆவலுடன் காத்திருக்கிறோம்..<<<<<<<<<<<

    நன்றி நண்பா... உங்கள் முதல் வருகைக்கும் :)

    பதிலளிநீக்கு
  19. Ramani கூறியது...
    கதையில் சுவாரஸ்யம் கூடிக்கொண்டு போகிறது
    அடுத்த பதிவை அதிக ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம௨ <<<<<<<<<<<<<<

    ரெம்ப தேங்க்ஸ் பாஸ்.... அடுத்த பகுதி சண்டே வெளிவரும் பாஸ். :)

    பதிலளிநீக்கு
  20. கந்தசாமி. கூறியது...
    குடும்பம் எண்டா சண்டை சச்சரவு இருக்க தான் செய்யும்.. ஆனால் அதையே தெருவுக்கு கொண்டுவரும் சிலரின் செயல்கள் அசிங்கம்... அது இப்பவும் இருக்கு.<<<<<<<<<<<<<<<

    உண்மைதான் கந்து... குடும்ப பிரச்சனையை வீட்டுக்குள் நாலு சுவற்றுக்குள் முடிக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  21. கந்தசாமி. கூறியது...
    நீங்க தொடருங்க ..அநேகமாய் அடுத்த,அதற்கடுத்த பகுதியுடன் நிறைவு பெரும் போல இருக்கு? அப்பெண்ணின் முடிவு தான் என்ன என்பதை என்னால் இன்னமும் ஊகிக்க முடியவில்லை!)<<<<<<<<<<<<<<<

    ஹா ஹா...... :)

    பதிலளிநீக்கு
  22. நண்டு @நொரண்டு -ஈரோடுகூறியது...
    தொடருங்கள் ...தொடர்கிறேன் ...<<<<

    தேங்க்ஸ் நண்டு அண்ணா :)

    பதிலளிநீக்கு
  23. ஆகுலன் கூறியது...
    உங்களின் முடிவு என்ன..அல்லது அவளின் முடிவு என்ன என்று அறிய ஆவலாக உள்ளது........<<<<<<<<<<<<

    ஹா ஹா... ஆகுலன் என் முடிவு அவள் எனக்கு வேணும்... அவம் முடிவு!!! அவளிட்ட தான் கேக்கனுமப்பா :) :)

    பதிலளிநீக்கு
  24. குட்டிப்பையன் கூறியது...
    ////பாவம் சுலக்ஷிகா.. இறைவன் அவளுக்கு அழகு அறிவு எல்லாத்தையும் அள்ளிக்கொடுத்து விட்டு அவள் வாழ்க்கையை மட்டும் ஏன் இவ்ளோ ரணமாக அமைத்தான். சுலக்ஷிகா மாதிரி ஒரு பெண் இப்படி இருப்பது எவ்ளோ வேதனையானது.////

    மச்சி இப்படி நிறைய சுலக்ஷிகாக்கள் இங்கே இருக்கின்றார்கள்....
    அதைவிட கொடுமை யுத்தம் என்னும் அரக்கன் ஏற்படுத்திய வடுக்களில் அங்கங்களை இழந்த பல பெண்கள் இருக்கின்றார்கள் அவர்களை பார்த்து விதியை நொந்து கொள்வதைத்தவிர வேறு என்ன செய்ய முடியும்....<<<<<

    உண்மை குட்டிப்பையன். விதி கொடியது :(

    பதிலளிநீக்கு
  25. shanmugavel கூறியது...
    எழுத்து அழகாக வசப்பட்டுவிட்டது உங்களுக்கு ! தொடருங்கள்.<<<

    தேங்க்ஸ் பாஸ்

    பதிலளிநீக்கு
  26. கோகுல் கூறியது...
    இறைவன் அவளுக்கு அழகு அறிவு எல்லாத்தையும் அள்ளிக்கொடுத்து விட்டு அவள் வாழ்க்கையை மட்டும் ஏன் இவ்ளோ ரணமாக அமைத்தான். சுலக்ஷிகா மாதிரி ஒரு பெண் இப்படி இருப்பது எவ்ளோ வேதனையானது. சுலக்ஷிகா நல்லா இருக்கோணும்.. அவள் வாழ்க்கை நன்றாக அமையனும்.. அதற்க்கு என்னால் ஆனா உதவியை செய்யணும். இல்லை இல்லை... அவளுக்காக அடுத்தவர்களிடம் போய் உதவி கேட்பதை விட நானே செய்யலாமே!!!

    //எல்லாரும் இப்படி முடிவு பண்ணிட்டா பரவாயில்லையே!<<<<<<<<<<<<<<<<<<<<<<< உண்மை சிந்திக்க வேண்டிய விடயம் கோகுல்

    பதிலளிநீக்கு
  27. ♔ம.தி.சுதா♔ கூறியது...
    இம்முறை அதிகமாக கண்டிப்பு வார்த்தைகள் விளையாடுகிறதே<<<<<<<<<<<<<<<<<

    புரியவில்லையே சுதாண்ணா... :( கண்டிப்பு வார்த்தைகள் என்றால் என்ன??

    பதிலளிநீக்கு
  28. ஹேமா சொன்னது…
    ம்..துஷிக்குட்டி இப்பத்தான் இரண்டு பதிவுகளும் வாசித்தேன்.வறுமையை விபரித்த விதம் அருமை.

    இங்கே கண்ணாடிமுன் உங்கள் அழகை சுருக்கமாகச் சொன்னதும் அழகு.அதோடு சுலஷிகா பெயர் இன்னுமழகு.ஆனால் அர்த்தம் தெரியவில்லை.தொடருங்கள்.நிச்சயமாய் உங்கள் ஏற்பாடு எதையும் ஏற்றுக்கொள்ளமாட்டாள் என்றே நினைக்கிறேன் !<<<<<<<<<<<<

    ஹாய் அக்காச்சி... எப்படி இருக்கீங்க?? ரெம்ப பிஸி போல.... :)
    சுலக்ஷிகா பெயருக்கு அர்த்தம் நிருபனிடம் தான் கேக்கணும் அவர்தான் பெயர் வைச்சார் அக்காச்சி....
    உங்க ஊகம் தான் நடக்க போகுது போல இருக்கே அக்காச்சி.. அவ்வவ்

    பதிலளிநீக்கு
  29. தனிமரம் கூறியது...
    குடும்பம் என்றால் சண்டையும் சச்சரவும் வருவது கிராமத்தில் இயல்பு நாங்களும் முன்னர் இப்படியான விடயங்களை விடுப்பு பார்த்த ஞாபகங்களை மீள அசைபோடும் உங்கள் எழுத்து நடை சிறப்பு துசி ஐயா!<<<<<<<<<<<<<<<<<

    தேங்க்ஸ் நேசன் அண்ணா.... என்னது ஜயாவா ...! அவ்வவ்

    பதிலளிநீக்கு
  30. தனிமரம் கூறியது...
    தலைமகனின் இயலாமையை இங்கு குடும்ப வன்முறையாக வெடிப்பதை சில இடங்களில் இன்றும் கானமுடியும் ..அதற்கு கல்வியில் விடிவெள்ளி அவர்களுக்கு கிடைக்கனும் .என்ன செய்வது சில இடங்களில் குடும்பத்தை சந்தி சிரிக்க வைக்க முடியாது என்பதால் பல பெண்கள் பாடு திண்டாட்டம் தான்!<<<<<<<<<<<<<<<<<<

    நிதர்சனமான உண்மை நேசன் அண்ணா

    பதிலளிநீக்கு
  31. தனிமரம் கூறியது...
    முடிவைக்கான ஆவலுடன் இருக்கின்றேன் அவள் வருவாளா ?தருவாளா??(அன்பை) உங்கள்
    எழுத்துநடை மீது எனக்கே பொறாமை வருகின்றது பாஸ் உண்மையில். இன்னும் பின்னூட்டம் இட நேரம் தடுக்குது பார்க்கலாம் பிறகு! <<<<<<<<<<<<<<<<

    ரெம்ப தேங்க்ஸ் பாஸ்... நீங்கள் பொறாமைப்படும் அளவுக்கு நான் ஒன்று பெரிய ஆள் இல்லைப்பா.... அவ்வ

    உங்கள் நேர பற்றாக்குறை எனக்கும் புரியும்.... சோ உங்க அன்புக்கு தேங்க்ஸ் பாஸ்

    பதிலளிநீக்கு
  32. மகேந்திரன் கூறியது...
    ////அவள் அதை சர்வ சாதாரணமாய் தாங்கியபடியே தகப்பனை தள்ளி தாயை காப்பாற்றுவதிலேயே குறியாய் இருந்தாள். அவள் தம்பி சுவற்றுடன் அட்டைபோல் ஒட்டியபடியே வெம்பி வெம்பி அழுதுகொண்டிருந்தான்.////

    இயலாமையால் வாழ்வின் இன்றைய பொழுதை
    இனிதே கடக்க துணிவில்லாத சாதாரண குடும்பங்களில்
    நடைபெறும் நிலையில்லா சண்டைகளை வாக்குவாதங்களை
    அருமையா சொல்லியிருகீங்க...
    இந்த நிலைகளை கண்கொண்டு கண்ட குழந்தைகள்
    மனம் பாதிப்புக்குள்ளாகி அதே குணத்தை தொடரவும் செய்கிறது.
    சற்று மாற்றி அந்தப் பாதையை நம் வாழ்வில் வரவிடாது எத்தனிக்க
    வேண்டும் என்ற எண்ணங்களிலும் வீழ்கிறது.<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<



    வணக்கம் மகேந்திரன் அண்ணா ... தேங்க்ஸ் உங்கள் விரிவான கருத்துரைகளுக்கு.... உண்மைதான் சண்டை பார்த்து வளரும் குழந்தைகள் நிறைய பாதிக்கப்படுகிறார்கள்.. இதான் உண்மை.

    பதிலளிநீக்கு
  33. மகேந்திரன் கூறியது...
    மிக மிக இயல்பான வார்த்தைகளால் கதை நகற்றும் விதம்
    மனதைத் தொடுகிறது துஷி.<<<<<<<<<<<<<<<<<

    உங்க பாராட்டு சந்தோஷத்தை கொடுக்குது அண்ணா... தேங்க்ஸ்

    பதிலளிநீக்கு
  34. Yoga.S.FR கூறியது...
    வணக்கம்,துஷி!ஒவ்வோர் பாகத்திலும்(கதை)சஸ்பென்ஸ் வைத்து நகர்த்திச் செல்கிறீர்கள். நன்றாக இருக்கிறது.<<<<<<<<<<<<<<<<<<

    வணக்கம் யோகா பாஸ்... தேங்க்ஸ்..... உங்க ஆதரவுக்கு ரெம்ப தேங்க்ஸ் பாஸ்.... :) ஹப்பியா இருக்கு...

    பதிலளிநீக்கு
  35. MANO நாஞ்சில் மனோகூறியது...
    தொடர் அருமை, தொடருங்கள் தொடர்கிறோம்...!!!<<<<<<<<<<<<<<<<<<<<< தேங்க்ஸ் மனோ பாஸ்

    பதிலளிநீக்கு
  36. நன்றாக போகிறது கதை! ஏதாவது தீடீர் திருப்பம் இருக்கோ?
    பகிர்விற்கு நன்றி நண்பரே!
    என் வலையில் :
    "நீங்க மரமாக போறீங்க..."

    பதிலளிநீக்கு
  37. கதை அருமையாக தொடர்கிறது...... தொடருங்கள்.......

    பதிலளிநீக்கு
  38. விறுவிறுப்பாக கதை செல்கிறது சிறந்த நடை பாராட்டுகள் தொடர்கள் தொடருட்டும்

    பதிலளிநீக்கு
  39. அவர் மனைவியை நோக்கி அடித்த அடிகள் சுலக்ஷிகாவை பதம் பார்த்தது.//

    யாரோ என்னைப்போல வீரன் போல!

    பதிலளிநீக்கு
  40. டேய்! என்னடா குட்டி துஸி எண்டு ஒரு நாவுறு கழிக்கிற படம் போட்டிருக்காய்

    பதிலளிநீக்கு
  41. இப் பதிவின் முதலிரு பந்திகளிலும் சோகம். ஆனாலும் இதுவே எம் ஊர்களின் யதார்த்தம், சிறு மோதல்கள். பின்னர் கூடல்கள்.

    அடுத்த பாகத்தில் சுலக்‌ஷனாவிற்கும், துஸிக்கும் இடையில் காதல் பத்திக்கும் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  42. எல்லோரும் சொல்வது போல..(அனைத்தும் கற்பனை) சொல்லி, எழுதியதிற்றான் சின்ன சந்தேகம்.
    தொடருங்கள்.நல்ல நடையில் போகிறது.(உங்களுக்கு "ஆறுதல்" சொல்ல இத்தனபேர் இருக்கிறோம். அவள் மறுத்தால்.)
    அப்பிடியே உங்கட வீட்டுக்காரரின்ர ஃபோன் நம்பரையும் அனுப்பினா வீட்டில போட்டுக்குடுக்க வசதியா இருக்கும்.

    பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...