ஞாயிறு, டிசம்பர் 04, 2011

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா..


ரண்டு பக்கமும் செழித்து வளர்ந்திருந்த அடர்ந்த தேக்குமர காட்டுப்பாதையில் அந்த இரவில் மெல்லிய வெளிச்சத்தை பரப்பியபடி கார் விரைந்துகொண்டிருந்தது. காண்ணாடி இறக்கப்பட்ட கார் கதவுகள்  வழியே உள்ளே புகுந்த காற்றின் சுகத்தில் லயித்தபடி ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன். மனசுக்குள் ஏதேதோ நினைவுகள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதி தடுமாறிக்கொண்டிருந்தன. தூரத்தில் ஏதோ ஒரு மிருகத்தின் அலறல் கேட்டு திடுக்கிட்டு சுயநினைவு வந்தவனாய் வெளியே இருந்து காருக்குள் பார்வையை செலுத்தினேன்.


ற்று முன்புவரை அரட்டை அடித்துகொண்டுவந்த அப்பாவும் அம்மாவும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். வெளிக்காற்று அவர்கள் முகத்தில் மோத மோத அவர்கள் ஒருவித சுகத்தை அனுபவிப்பது போல் அவர்கள் முகம் பிரகாசமாய் இருந்தாலும் விமான பயண களைப்பு அவர்கள் முகமெங்கும் படர்ந்து கிடந்தது. அதை விட..  அண்ணே இந்த ஆமிக்காரங்க செக்கப் எல்லாம் முடிஞ்சுது இப்போ நம்ம பொடியங்க கட்டுப்பாட்டுக்க வந்துட்டோம்.. இனி ஒரு பிரச்னையும் இருக்காது என்று டிரைவர் சொன்னதை கேட்டு அப்பாவின் முகம் பிரகாஷமாகி அப்பாடா... என்று பெருமூச்சு விட்டது மனக்கண்ணில் நிழலாடியது.


நேரம் நள்ளிரவை தாண்டிவிட்டது.பயணக்களைப்பு வேற நன்றாக தூங்கட்டும் என்று நினைத்தாரோ என்னவோ! டிரைவர் எதுவும் பேசாமல் கார் ஓட்டுவதிலேயே குறியாக இருந்தார். நான் மீண்டும் பார்வையை வெளியே செலுத்தினேன். இரண்டுபக்கமும் பரந்து வளர்ந்திருந்த தேக்குமரக்காடு, ஏதோ ஒருவித பூச்சிகளின் இரைச்சல்,தூரத்தில் எங்கேயோ ஓடும் ஆற்றின் சப்தம் என அந்த இரவு ரம்மியமாக இருந்தாலும் எங்கேயோ தூரத்தில் ஊளையிடும் நரியின் சத்தம் மனதில் ஒருவித கிலியை ஏற்படுத்தியது.


ந்த பயணம் எனக்கு புதுசு இல்லைத்தான். ஏற்கனவே ஒரு முறை இலங்கை வந்திருக்கிறேன். இது எனது இரண்டாவது இலங்கை பயணம். இரண்டு வருடங்களுக்கு முன்பு முதன்முறையாக இலங்கை வந்த போது ஏற்பட்ட அனுபவங்களை இப்போது நினைத்தாலும் மனசுக்குள் இனம் புரியாத வலி படர்கிறது. நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் பிரான்ஸ்தான். நுனி நாக்கில் பிரஞ்சு பேசியபடி வீட்டில் மட்டும் அரைகுறை தமிழ் பேசும் நான், என் வாழ்க்கையை இலங்கையின் வன்னியில் ஒரு கிராமத்தில் தொலைப்பேன் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.


வ்வொரு வருட பாடசாலை லீவுக்கும் விடுமுறையை எங்கே கழிப்பது என்று எங்களுக்குள் ஒரு விவாதமே ஏற்படும் இறுதியில் வீட்டில் ஒரே செல்லப்பிள்ளை என் தெரிவே இறுதியாகிவிடும். அப்படித்தான் ஜரோப்பாவில் எல்லாநாடுகளும் சுற்றிவிட்டேன். ஒவ்வொரு வருடமும் அம்மாவினதும் என்னுடைய சாய்ஷும் வேற இடங்களாக இருந்தாலும் அப்பாவின் ஒரே சாய்ஸ் இலங்கையாத்தான் இருக்கும். ஆனால் அதை நாங்கள் நிராகரித்துவிடுவோம். ப்ளீஸ்..நான் வரமாட்டேன் அப்பா.. அங்க புழு பூச்சி எல்லாம் வீட்டுக்கேயே இருக்குமாமே! தமிழ் ஆக்கள் என்றால் ஆமிக்காரன் வேற சுடுவான். ஜயோ.. வர மாட்டேன் என்று நான் சிணுங்க, அம்மாவும் என் பக்கம் சாய்ந்து போறது எண்டா நீங்க மட்டும் போயிட்டுவாங்கோ நானும் அவனும் வீட்டையே நிக்கிறோம் உங்களுக்கே தெரியும்தானே அங்கெல்லாம் அவனுக்கு ஒத்துவராது என்று அம்மா கோபப்பட  அப்பா அத்துடன் தன் இலங்கைப்பயண பேச்சை விட்டுவிடுவார். ஆனாலும் அந்த வெற்றியை எங்களால் நிலைத்து வைத்திருக்க முடியவில்லை. 


ரண்டு வருடங்களுக்கு முன் அப்பாவே ஜெயித்துவிட்டார். என்னுடைய பயத்தையும் அம்மாவின் காரணங்களையும் நிராகரித்ததுடன். நீங்க பயப்படுற அளவுக்கு அங்கே ஒன்றுமே இல்லை. இப்போத்தான் பிரச்சனை கொஞ்சம் மெதுவாக போகிறது இந்த ஊட்டுக்க போயிட்டு வந்திரணும். அப்புறம் பிரச்சனை பெருசாகி ஊருக்கு போக முடியாத சூழ்நிலை வந்த பின் கவளைப்பட்டு பிரயோசனம் இல்லை. தொட்டதுக்கெல்லாம் பயப்பட அர்னிகன் ஒன்றும் குழந்தை இல்லை. பத்தொண்பது வயசாகிறது..! அவனுக்கும் இது ஒரு புது அனுபவமாக இருக்கட்டுமே.. எனக்கும் நான் பிறந்து  வளர்ந்த நாட்டை பார்க்க என் பிள்ளைக்கு காட்ட ஆசையாய் இருக்காதா.. அப்பா கண் கலங்க நாங்கள் அமைதியாகிவிட்டோம். இப்படித்தான் என் முதல் இலங்கை பயணம் அமைந்தது.


ந்த பகுதியில் சற்று முன்புதான் மழை பெய்திருக்க வேண்டும். குளிர் காற்று சில்லென முகத்தில் மோதியது. கார் கண்ணாடிகளை நன்றாக உயர்த்திவிட்டேன். சத்தம் கேட்டு கண் முழித்த அம்மா. டேய் அர்னிகன், கொஞ்சம் நேரமாவது நித்திரை கொள்ளன் இப்போ எதுக்கு கொட்ட கொட்ட முழிச்சு இருக்க!! அப்புறம் வரும்போதே எல்லாம் சொல்லித்தானே கூட்டிவந்தேன் சொன்னது எல்லாம் நினைவு இருக்கட்டும்.. எச்சரிப்பது போல் சொல்லிவிட்டு மறுபக்கம் தலைசாய்ந்து கண் மூடிக்கொண்டார்.


தை பற்றி பேசுகிறார்?? எதை சொல்லி கூட்டிவந்தார்?? நினைக்கும்போதே மனசை யாரோ இறுக்கி பிசைவது போல் இருந்தது.  இருக்கையில் தலை சாய்த்து கண்களை மூடிக்கொண்டேன். மனசு மிக கனமாக இருந்தது.அவளை மீண்டும் பாக்க போகிறேன் என்று நினைக்கும் போது மனம் விபரிக்க முடியாத நிலையில் தத்தளித்தது.


ப்போது திடிரென அவள் முன் நான் போய் நின்றால் என்ன செய்வாள்...! கோபப்படுவாளா?? சந்தோஷப்படுவாளா?? இல்லை........!! என்ன செய்வாள். மனசு அலைபாய்ந்தது. மனசை ஒருநிலை படுத்த முயன்றேன் அது கடிவாளம் இழந்த குதிரையின் நிலையில் இருந்தது. 
                                                                                                                    தொடரும்...




குறிப்பு 01: இத்தொடர் யுத்தம் நடந்த காலபகுதியில் நடப்பதாகவே எழுதப்பட்டுள்ளது.


குறிப்பு 02: இத்தொடர் ஒரு சிறு குறுந்தொடர்.. சில பகுதிகளுடன் முடிவடையும்.


குறிப்பு 03: இத்தொடரில் வரும் காதாபாதிரங்களோ கதையோ உண்மையல்ல முழுக்க முழுக்க கற்பனையே.. (அவ்வ..)



57 கருத்துகள்:

  1. நான் வெளியே போகும் நேரம் பார்த்து பதிவு போட்டதுக்கு கண்டனங்கள்! ஹி ஹி ஹி ஹி இருங்கோ, ஸ்பீட்டா படிச்சிட்டு வாறன்!

    பதிலளிநீக்கு
  2. வெளிக்காற்று அவர்கள் முகத்தில் மொத மொத அவர்கள் ஒருவித சுகத்தை அனுபவிப்பது போல் அவர்கள் முகம் பிரகாசமாய் இருந்தாலும் /////

    யோவ், வை திஸ் கொல வெறி?

    மோத மோத என்றுதானே வரும்?

    பதிலளிநீக்கு
  3. ஆகா, பொறுத்த இடத்தில் கதையை நிறுத்திவிட்டு, ஆவலைத் தூண்டிவிட்டீர்கள்! இனி அடுத்த பாகம், அடுத்த ஞாயிறா? நமக்கு அந்தளவுக்குப் பொறுமை கிடையாதுங்கோ! இடையில போடுங்கோ!

    கதை பரபரப்பா இருக்கு! உங்களைப் பார்த்ததும் அவள் என்ன செய்வாள் தெரியுமா..........??????

    ஹி ஹி ஹி ஹி ,

    வெட்கப்படுவாள்!

    பதிலளிநீக்கு
  4. துஷி, உங்கட அவாவுக்குப் பெயர் கண்ணம்மாவோ?

    ஹி ஹி ஹி ஹி தலைப்பில போட்டிருக்கிறியள், அதான் கேட்டேன்!

    பதிலளிநீக்கு
  5. ஆரம்பமே அசத்தல்.... மிகுதி எப்போ

    பதிலளிநீக்கு
  6. ***மனசு மிக கனமாக இருந்தது.அவளை மீண்டும் பாக்க போகிறேன் என்று நினைக்கும் போது மனம் விபரிக்க முடியாத நிலையில் தத்தளித்தது.


    இப்போது திடிரென அவள் முன் நான் போய் நின்றால் என்ன செய்வாள்...! கோபப்படுவாளா?? சந்தோஷப்படுவாளா?? இல்லை........!! என்ன செய்வாள். ***

    தல, நான் பார்த்தவரைக்கும், பழசை மறந்து சூழ்நிலைக்காக தன்னை எளிதாக மாத்திக்கொண்டு வாழ்வதில் பெண்கள் வல்லவர்கள்!

    பதிலளிநீக்கு
  7. துஷி, கதை ஆரம்பமே அசத்தலாக வந்து அடுத்துவரும் பகுதிகளும் சுவாரசியமாக இருக்கும் என்ற ஆவலில் ஏக்கமாக காத்திருக்க வைத்துவிட்டியள்.

    பதிலளிநீக்கு
  8. முழுக்க முழுக்க கற்பனையே? படிக்க ஆவலாயிருக்கிறது,தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  9. //ஒவ்வொரு வருடமும் அம்மாவினதும் என்னுடைய சாய்ஷும் வேற இடங்களாக இருந்தாலும் அப்பாவின் ஒரே சாய்ஸ் இலங்கையாத்தான் இருக்கும். ஆனால் அதை நாங்கள் நிராகரித்துவிடுவோம்.//
    வீட்டுக்குவீடு வாசப்படிதான்.......

    பதிலளிநீக்கு
  10. சுகமான இலங்கை பயண அனுபவங்களை பகிர்தமைக்கு நன்றி . நல்ல ரசனையுடன் படித்தேன் . இருதியில தொடரும் ஏன்னு போட்டு கவுத்திட்டியே நண்பா .
    அடுத்த பதிவினை காலம் கடந்தாலும் கண்டிப்பா படிக்க வேண்டும் போல் இருக்கிறது . வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. ஆரம்பமே அசத்தல், சுவாரஸ்யம்...

    பதிலளிநீக்கு
  12. /// தொட்டதுக்கெல்லாம் பயப்பட அர்னிகன் ஒன்றும் குழந்தை இல்லை. பத்தொண்பது வயசாகிறது..! ////

    ஆமா அண்ணே அவன் ஒன்றும் பயந்தவன் இல்லை..அவ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  13. ஒ இது தொடர் கதை வேறயா.......யார் யாருக்கு ஆப்போ.....

    பதிலளிநீக்கு
  14. அண்ணே கதை அருமையா போகுது...
    பயணங்களை நினைத்து பாக்க கூடிய மாதிரி இருக்குது...

    பதிலளிநீக்கு
  15. வணக்கம்! நன்றாக இருக்கிறது.தெளிந்த நீரோடைபோல்,சுகந்தமாக மனதை வருடுகிறது!வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  16. ரீச்சருக்கே ரோசாப்பூ குடுத்து கரெக்ட் பண்ணப் பாத்த மன்மதக் குஞ்சு!

    பதிலளிநீக்கு
  17. Powder Star - Dr. ஐடியாமணிகூறியது...
    நான் வெளியே போகும் நேரம் பார்த்து பதிவு போட்டதுக்கு கண்டனங்கள்! ஹி ஹி ஹி ஹி இருங்கோ, ஸ்பீட்டா படிச்சிட்டு வாறன்!<<<<<<<

    அண்ணே ஹன்சி மேலே சத்தியமா இனி உங்களிடம் போன் பண்ணி நீங்க ஹன்சியோட இல்லாத நேரம்தான் பதிவு போடுவேன் ஓக்கேவா??? ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  18. Powder Star - Dr. ஐடியாமணிகூறியது...
    வெளிக்காற்று அவர்கள் முகத்தில் மொத மொத அவர்கள் ஒருவித சுகத்தை அனுபவிப்பது போல் அவர்கள் முகம் பிரகாசமாய் இருந்தாலும் /////
    யோவ், வை திஸ் கொல வெறி?
    மோத மோத என்றுதானே வரும்?<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    அவ்வ.... சாரி பாஸ்.... இன்று ஒரு நாள்தான் வேலை லீவு. ரெம்ப அவசரமாய் ஒரு பதிவெழுதி ராஜுக்கு அனுப்பிட்டு. அப்புறம் இதை எனக்கு எழுதினேன்... அதன் இந்த எழுத்து பிழைகள்... இப்போ திருத்திவிட்டேன்... தேங்க்ஸ் அண்ட் சாரி.

    பதிலளிநீக்கு
  19. Powder Star - Dr. ஐடியாமணிகூறியது...
    ஆகா, பொறுத்த இடத்தில் கதையை நிறுத்திவிட்டு, ஆவலைத் தூண்டிவிட்டீர்கள்! இனி அடுத்த பாகம், அடுத்த ஞாயிறா? நமக்கு அந்தளவுக்குப் பொறுமை கிடையாதுங்கோ! இடையில போடுங்கோ!

    கதை பரபரப்பா இருக்கு! உங்களைப் பார்த்ததும் அவள் என்ன செய்வாள் தெரியுமா..........??????
    ஹி ஹி ஹி ஹி ,
    வெட்கப்படுவாள்!<<<<<<<<<<<<<<<<<<<<<<<<



    தேங்க்ஸ் மணி... அடுத்த பகுதியை வார இடைவெளி எடுக்காமால் சில தினங்களில் போட முயற்சிக்கிறேன்... அதில் என் நித்ட்ஜிரைதான் போகும் அவ்வ....

    ஆஹா.... என்னவோ சொல்ல போறீங்க என்று நினைத்தேன்... இறுதியில் உப்படி கவுத்திட்டீங்களே பாஸ்.

    பதிலளிநீக்கு
  20. Powder Star - Dr. ஐடியாமணிகூறியது...
    துஷி, உங்கட அவாவுக்குப் பெயர் கண்ணம்மாவோ?
    ஹி ஹி ஹி ஹி தலைப்பில போட்டிருக்கிறியள், அதான் கேட்டேன்!<<<<<<<<<<<<<<<

    யோவ் இது என் சொந்த கதை இல்லையப்பா...... நம்புங்க..... அப்புறம் அழுதுருவேன்..... அவ்வ

    பதிலளிநீக்கு
  21. மதுரன் கூறியது...
    ஆரம்பமே அசத்தல்.... மிகுதி எப்போ<<<<<<<<<<<<<<<<<<<

    தேங்க்ஸ் மதுரன்.. ரெண்டு மூன்று நாள் இடைவெளியில் போடலாம் என்று இருக்கேன்.

    பதிலளிநீக்கு
  22. வருண் கூறியது...
    ***மனசு மிக கனமாக இருந்தது.அவளை மீண்டும் பாக்க போகிறேன் என்று நினைக்கும் போது மனம் விபரிக்க முடியாத நிலையில் தத்தளித்தது.
    இப்போது திடிரென அவள் முன் நான் போய் நின்றால் என்ன செய்வாள்...! கோபப்படுவாளா?? சந்தோஷப்படுவாளா?? இல்லை........!! என்ன செய்வாள். ***

    தல, நான் பார்த்தவரைக்கும், பழசை மறந்து சூழ்நிலைக்காக தன்னை எளிதாக மாத்திக்கொண்டு வாழ்வதில் பெண்கள் வல்லவர்கள்!<<<<<<<<<<<<<<<<<<<<<

    ஹா ஹா....... பெண்கள் பற்றி நல்லாவே புரிந்து வைத்துள்ளீர்கள் பாஸ்.... நீங்கள் சொல்வது உண்மையும் கூட பாஸ்... பெண்கள் நாற்று போல என்று சொல்வார்கள்... :)

    பதிலளிநீக்கு
  23. அம்பலத்தார் கூறியது...
    துஷி, கதை ஆரம்பமே அசத்தலாக வந்து அடுத்துவரும் பகுதிகளும் சுவாரசியமாக இருக்கும் என்ற ஆவலில் ஏக்கமாக காத்திருக்க வைத்துவிட்டியள்.<<<<


    ரெம்ப தேங்க்ஸ் அம்பலத்தார்.. உங்கள் பாராட்டு சந்தோஷமாய் இருக்கு.

    பதிலளிநீக்கு
  24. shanmugavel கூறியது...
    முழுக்க முழுக்க கற்பனையே? படிக்க ஆவலாயிருக்கிறது,தொடருங்கள்.<<<<<<<<<<<<

    ரெம்ப தேங்க்ஸ் பாஸ்.

    பதிலளிநீக்கு
  25. அம்பலத்தார் கூறியது...
    //ஒவ்வொரு வருடமும் அம்மாவினதும் என்னுடைய சாய்ஷும் வேற இடங்களாக இருந்தாலும் அப்பாவின் ஒரே சாய்ஸ் இலங்கையாத்தான் இருக்கும். ஆனால் அதை நாங்கள் நிராகரித்துவிடுவோம்.//
    வீட்டுக்குவீடு வாசப்படிதான்.......<<<<<<<<<<<<<<<<<<<

    அப்போ அம்பலத்தார் வீட்டிலையும் இதா நடக்குது.... ஹா ஹா.... எல்லா வீட்டிலையும் இந்த நிலைதான் போல

    பதிலளிநீக்கு
  26. Mahan.Thamesh கூறியது...
    சுகமான இலங்கை பயண அனுபவங்களை பகிர்தமைக்கு நன்றி . நல்ல ரசனையுடன் படித்தேன் . இருதியில தொடரும் ஏன்னு போட்டு கவுத்திட்டியே நண்பா .
    அடுத்த பதிவினை காலம் கடந்தாலும் கண்டிப்பா படிக்க வேண்டும் போல் இருக்கிறது . வாழ்த்துக்கள்<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    ரெம்ப தேங்க்ஸ் மச்சி.... ஹப்பியா இருக்கு..... ச்சும்மா விளையாட்டை எழுதினேன்... உங்க பாராட்டு ஹப்பியை கொடுக்குது. அடுத்த பகுதியை விரைவிலேயே போடுறேன் நண்பா..

    பதிலளிநீக்கு
  27. குடிமகன் கூறியது...
    ஆரம்பமே அசத்தல், சுவாரஸ்யம்...<<<<<<<<<<<<<<<<<



    தேங்க்ஸ் பாஸ் :)

    பதிலளிநீக்கு
  28. ஆகுலன் கூறியது...
    /// தொட்டதுக்கெல்லாம் பயப்பட அர்னிகன் ஒன்றும் குழந்தை இல்லை. பத்தொண்பது வயசாகிறது..! ////

    ஆமா அண்ணே அவன் ஒன்றும் பயந்தவன் இல்லை..அவ்வ்வ்வ்<<<<<<<<<<<<<<<<<<<<<

    ஹீ ஹீ.... சரி சரி நம்பிட்டோம்....

    பதிலளிநீக்கு
  29. ஆகுலன் கூறியது...
    ஒ இது தொடர் கதை வேறயா.......யார் யாருக்கு ஆப்போ....<<<<<<<<<<<<<<<

    படுவா ராஸ்கல்ஸ்..... என்ன கோர்த்து விடுறாயா ??? என்ன ஒரு வில்லத்தனம்... அவ்வ

    பதிலளிநீக்கு
  30. ஆகுலன் கூறியது...
    அண்ணே கதை அருமையா போகுது...
    பயணங்களை நினைத்து பாக்க கூடிய மாதிரி இருக்குது.<<<<<<<<<<<<<<<<

    ரெம்ப தேங்க்ஸ் ஆகுலன்...

    பதிலளிநீக்கு
  31. Yoga.S.FR கூறியது...
    வணக்கம்! நன்றாக இருக்கிறது.தெளிந்த நீரோடைபோல்,சுகந்தமாக மனதை வருடுகிறது!வாழ்த்துக்கள்!<<<<<

    வணக்கம் பாஸ்... எப்படி இருக்கீங்க??? தேங்க்ஸ்..... நிஜமாவே உங்க பாராட்டு சந்தோஷமாய் இருக்கு.... பதிவுலகில் தொடர்களுக்கு அதிக வரவேற்பு இல்லை... இருந்தும் இன்று ச்சும்மா எழுதலாம் என்று எழுதினேன் நீங்கள் எல்லாம் ஆதரிப்பதை பாக்கும் போது ஒரே ஹப்பியா இருக்கு.... தேங்க்ஸ்......

    பதிலளிநீக்கு
  32. Yoga.S.FR கூறியது...
    ரீச்சருக்கே ரோசாப்பூ குடுத்து கரெக்ட் பண்ணப் பாத்த மன்மதக் குஞ்சு!<<<<<<

    ஆஹா.... நிருபன் பதிவில் நம்ம கருத்தை பார்த்துட்டீங்களா??? அவ்வவ். நம்மள ரெம்பத்தான் அவதாநிக்கிறீங்க பாஸ். ஹா ஹா.... அது ஒரு காலம் பாஸ்... நினைத்தாலே மனசுக்குள் ஆயிரம் பட்டாம் பூச்சி ;)

    பதிலளிநீக்கு
  33. ஆர்னிகன் தான் தொடக்கமா ? அப்போ போக போக கன பேர் செம்போட வருவினமோ? )

    நன்றாக இருக்கு தொடருங்கள் பாஸ்)

    பதிலளிநீக்கு
  34. துஷி...ம்ம்...காதல் கதையொன்று ஆரம்பமோ !

    பதிலளிநீக்கு
  35. குறை நினைக்காதை நாளைக்கு வாறன்..

    பதிலளிநீக்கு
  36. * இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே! குடிமக்களை பாதுகாக்க முடியாத இந்திய கப்பல்படையும், ராணுவமும் எங்கே போனது. ஓ அவங்கெல்லாம் நம்ம ராஜ பக்சே வீட்டு பண்ணையில் வேலை செய்றாங்க இல்லே அட மறந்தே போச்சி.சிங்களவர்களை பற்றி நமது வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகையில் அவர்களது பூர்வீகம் வட இந்தியா என்று சொல்கின்றனர்.ராஜபக்சே மாதிரி நமக்கு ஒரு பிரதமர் கனவிலும் கிடைக்க மாட்டார். அவரை நமது ஹிந்தி பாரத தேசத்துக்கு பிரதமராக்க வேண்டும். please go to visit this link. thank you.

    * பெரியாரின் கனவு நினைவாகிறது! முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம். தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது! தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.இவைகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தனி தமிழ் நாடு அமைப்பதே !. please go to visit this link. thank you.

    * நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.!. please go to visit this link. thank you.


    * தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

    * தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

    * இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
    please go to visit this link. thank you.

    * ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

    * கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

    * போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

    பதிலளிநீக்கு
  37. வணக்கம் மச்சி நடத்துங்க நடத்துங்க ஆரம்பமே அசத்தலாக இருக்கு இரண்டு மூன்று பகுதிகள் போகட்டும் விரிவான கமண்ட்ஸ் உடன் சந்திப்போம்.....

    ஒரு தொடரை எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்று உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன் நன்றி பாஸ்....

    பதிலளிநீக்கு
  38. வணக்கம் துஸி, அருமையான பதிவு,

    ஆரம்பமே சூப்பரா இருக்கு.
    தொடரின் ஆரம்பத்தில் இயற்கை வர்ண்ணை, கதையினை நகர்த்திச் செல்லும் விதம் அனைத்தும் அருமையாக இருக்கிறது.

    புலம் பெயர் மண்ணிலிருந்து தாயக மண்ணை நோக்கி வரும் சின்னப் பையன் துஸியின் உணர்வுகள் இங்கே ஆர்னிகன் வடிவத்திலா?

    ஹே...ஹே..

    இல்லே நம்ம ஆகுலன் தான் ஆர்னிகனாகா இங்கே வருகிறாரா?

    பதிலளிநீக்கு
  39. நானும் வந்துட்டேன், அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்..!!

    பதிலளிநீக்கு
  40. அருமையாக இருக்கிறது துஸி...தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  41. துஷ்யந்தா ஏ துஷ்யந்தா...நானும் தொடருகிறேன்.

    பதிலளிநீக்கு
  42. கவி அழகன் சொன்னது…
    Yavum katpanai nanka nampuram boos<<<<<<<<<<<<<<<<<<

    awwwww

    பதிலளிநீக்கு
  43. கந்தசாமி. சொன்னது…
    ஆர்னிகன் தான் தொடக்கமா ? அப்போ போக போக கன பேர் செம்போட வருவினமோ? )

    நன்றாக இருக்கு தொடருங்கள் பாஸ்)<<<

    ஹா ஹா... அப்படி எல்லாம் இல்லை பாஸ்... தேங்க்ஸ் பாஸ்

    பதிலளிநீக்கு
  44. ஹேமா சொன்னது…
    துஷி...ம்ம்...காதல் கதையொன்று ஆரம்பமோ !<<<

    எஸ் அக்கா......:)

    பதிலளிநீக்கு
  45. ANA VARO சொன்னது…
    குறை நினைக்காதை நாளைக்கு வாறன்..<<<<

    அப்படி எல்லாம் நினைக்கலாமா??? அண்ணே.... அவ்வவ்

    பதிலளிநீக்கு
  46. PUTHIYATHENRAL சொன்னது…<<<<<<

    தேங்க்ஸ் பாஸ்

    பதிலளிநீக்கு
  47. K.s.s.Rajh சொன்னது…
    வணக்கம் மச்சி நடத்துங்க நடத்துங்க ஆரம்பமே அசத்தலாக இருக்கு இரண்டு மூன்று பகுதிகள் போகட்டும் விரிவான கமண்ட்ஸ் உடன் சந்திப்போம்.....

    ஒரு தொடரை எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்று உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன் நன்றி பாஸ்....<<<<<<<<<<<<

    யோவ்... அந்த ரெண்டு மூன்று பகுதியிலேயே தொடர் முடிந்துவிடும்... அவ்வ...

    அப்புறம்... என்ன நக்கலா..... தொடர்கதை மன்னனய்யா நீர்.... உம்மா பார்த்துதான் நானே தொடர் எழுத தொடங்கினேன்... ரியலி.

    பதிலளிநீக்கு
  48. திண்டுக்கல் தனபாலன் சொன்னது…
    கலக்குறீங்க... சார்<<<

    தேங்க்ஸ் சார்

    பதிலளிநீக்கு
  49. நிரூபன் சொன்னது…
    வணக்கம் துஸி, அருமையான பதிவு,

    ஆரம்பமே சூப்பரா இருக்கு.
    தொடரின் ஆரம்பத்தில் இயற்கை வர்ண்ணை, கதையினை நகர்த்திச் செல்லும் விதம் அனைத்தும் அருமையாக இருக்கிறது.

    புலம் பெயர் மண்ணிலிருந்து தாயக மண்ணை நோக்கி வரும் சின்னப் பையன் துஸியின் உணர்வுகள் இங்கே ஆர்னிகன் வடிவத்திலா?

    ஹே...ஹே..

    இல்லே நம்ம ஆகுலன் தான் ஆர்னிகனாகா இங்கே வருகிறாரா?<<<<<<<<<<<

    தேங்க்ஸ் பாஸ்..
    வை திஸ் கொலைவெறி??????? அவ்வவ்

    பதிலளிநீக்கு
  50. MANO நாஞ்சில் மனோ சொன்னது…
    நானும் வந்துட்டேன், அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்..!!
    <<<<<<<<<<<<<<
    தேங்க்ஸ்

    பதிலளிநீக்கு
  51. ரெவெரி சொன்னது…
    அருமையாக இருக்கிறது துஸி...தொடருங்கள்...வாழ்த்துக்கள்...<<<<<<<<<<<<<<

    தேங்க்ஸ்

    பதிலளிநீக்கு
  52. சி.பி.செந்தில்குமார் சொன்னது…
    துஷ்யந்தா ஏ துஷ்யந்தா...நானும் தொடருகிறேன்.<<<<

    தேங்க்ஸ் சிபி பாஸ்

    பதிலளிநீக்கு
  53. பிளாகர் துஷ்யந்தன் கூறியது...

    Yoga.S.FR கூறியது...
    வணக்கம்,ராஜ்! நீங்கள் நினைத்தது போல் நான் ஒன்றும் பல்ப் வாங்கவில்லை!இரண்டாவதிலேயே புரிந்து விட்டது!அப்புறம்,ஆகுலன்!துஷி அண்ணா நர்சரியிலேயே "ரோசாப் பூ, சின்ன ரோசாப் பூ" பாட்டுப் பாடினவராம்,ஹி!ஹி!ஹி!!!/////////////////

    பாஸ் அது தேவயாணி பாட்டு இல்ல???////என்ன கறுமமோ? நீங்களும் எங்கயும் வயது கூடினதுகளிட்டை மாட்டுப்பட்டிடாதையுங்கோ!

    பதிலளிநீக்கு
  54. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ஸா வருவனெல்லோ!

    உனக்குத் தான் எல்லாம் செட் ஆயிட்டுதே! பிறகெதுக்கு பழைய லவ்வை நினைச்சு பீல் பண்ணுறாய்?

    பதிலளிநீக்கு
  55. அருமையாக, தெளிந்த நீரோடை போல் செல்கிறது தொடர்...தொடருங்கள் துஷ்..

    பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...