ஞாயிறு, டிசம்பர் 18, 2011

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.. 06


சுலக்க்ஷிகா உன் கூட நான் கொஞ்சம் பேசணும்.. நேற்று நடந்ததை பார்த்துதில் இருந்து என் மனசு எவ்ளோ வேதனை பட்டோண்டு இருக்கு தெரியுமா உனக்கு?  நான் தடுமாறி சொல்ல, அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை. இன்னும் அந்த தூர திசையை வெறித்து பார்த்துகொண்டிருந்தாள். சுலக்க்ஷிகா இதெல்லாம் உனக்கு கஸ்ரமா இல்லையா..? ஆச்சரியமாய் அவளைப்பார்த்தேன்.. மெதுவாக திரும்பி என்னை ஆழமாய் பார்த்தவள். இருக்கு.. ஆனால் அதுவே பழகிடுச்சு, உதட்டை கடித்து அவள் அழுகையை அடக்க முயற்சிப்பது தெளிவாய் தெரிந்தது. ஆனால் இத்தோடு இப்பேச்சை விட்டுவிடும் நிலையில் நானும் இல்லை... அவளோடு நிறைய பேசணும் என்று மனசு சொல்லிக்கொண்டிருந்தது. சரி... ஆனா நீ நினைத்தால் இதை மாற்றலாம் இல்லையா? நான் இயலாமையுடன் கேட்க அவள் விழிகளில் நிறைந்து நின்ற நீர் கன்னங்களில் உருண்டோட தொடங்கியது. இல்ல ஆர்ணி.. என்னால முடியாது இதுதான் எனக்கு தந்த வாழ்க்கை.. விட்டுடேன்... இதுக்கு மேலே இது பற்றி பேசாத.. அவள் குரல் உடைந்திருந்தது. சரி.. இதோட இந்த பேச்சை விட்டுடலாம், ஆனா ஒன்று நீ உன் வாழ்க்கையையாவது நல்லா அமைக்கலாம் இல்ல? ஆர்ணி.. என்னை ஒரு சுயநலக்காரியா இருக்க சொல்லுறாயா!! நான் ஒன்றும் அப்படிப்பட்டவள் இல்லை கண்களில் திரளும் கண்ணீரை துடைத்தபடி  தீர்க்கமாக சொன்னாள்.

சுலக்க்ஷிகா நீ நினைக்கிறது தப்பு.. நீ நல்லா இருந்தா உன் குடும்பத்தையும் உன்னால் நல்லா வைத்திருக்க முடியும், குறிப்பாய் உன் தம்பியை. நான் சொல்ல என்னை ஊருடுவி பார்த்தவள் வேறு பக்கம் பார்வையை திருப்பிக்கொண்டாள். நான் சொன்னதுக்கு இன்னும் நீ பதிலே சொல்லவில்லை..?! என் பேச்சை காதில் வாங்காதவள் போல் இருந்தாள். நானும் அமைதியாக அவளையே பார்த்தபடி இருந்தேன். சூரியன் மெது மெதுவாக மறைந்துகொண்டிருந்தான் வானம் சிவத்து கருக்க தொடங்கியது. மழைக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கின. அவளே பேசட்டும் என்று அமைதியாக இருந்தேன். இன்னும் சில நிமிடங்கள் கரைய, தூர நிலைகுத்திய தன் பார்வையை விலக்கியவள். என்னை ஆழமாக பார்த்துவிட்டு, அது பற்றி யோசிக்கல்ல... யோசிக்கவும் விரும்பல்ல.. மரம் நட்டவன் தண்ணி ஊற்றாமலா போக போறான்..!! உன் அக்கறைக்கு நன்றி அலட்சியமாய் சொல்லிவிட்டு எழுந்தவளை மறித்தேன். சுலக்க்ஷிகா நில்லு... உன்னோட இன்னும் நான் பேசணும்..கொஞ்சம் காட்டமாகவே சொன்னேன். நின்று என் கண்களை உற்று நோக்கியவள் என்ன பேசணும்!! சீக்கிரம் சொல்லு நான் போகணும் வெடுக்கென சொன்னாள். சுலக்க்ஷிகா அது வந்து..து. நான் சொல்லுறேன்... ஆனா நீ தப்பா நினைக்க கூடாது.. நான் தடுமாற, சிறு அலட்சிய சிரிப்புடன் என்னை பார்த்தாள் அவள் விழிகளின் வீச்சை தாங்க முடியாமல் என் விழிகள் தடுமாற சட்டென திரும்பி வேறெங்கோ பார்த்தவள், மீண்டும் திரும்பி.. இல்ல ஆர்ணி.. வேணாம்.. நீ சொல்ல நினைக்கிறத நீயே வைச்சுக்கோ.. அதை சொல்லி என்னை தர்மசங்கடத்தில் விட்டுறாதே...சொல்லிவிட்டு போக முயற்சித்தவளை வேகமாக இடைமறித்தேன்.

இல்ல.. நீ ஏதோ தப்பா புரிஞ்சு கிட்ட.. நான் என்ன சொல்ல வந்தேன் என்றா... நான் சொல்லி முடிப்பதற்குள் இடைமறித்தாள். தெரியும்... நீ என்ன சொல்ல போறாய் என்று நல்லாவே தெரியும். வழமைக்கு மாறான உன் தடுமாற்றமும் கண்களும் எல்லாமே சொல்லுதே... இதை புரிஞ்சு கொள்ள முடியாத அளவுக்கு நான் ஒன்றும் முட்டாள் கிடையாது. ஆவேசமாக சொன்னவள் "நீ என்னை காதலிக்கிற.." அவ்வளவு தான?? கண்களில் தீப்பொறி பறக்க கேட்டாள். நான் ரெம்பவே தடுமாறிப்போனேன். சுலக்க்ஷிகா இதெ..ப்படி உனக்கு..?? அதானே உன் கண்களே சொல்லுதே.. அதைவிட உன்ன மாதிரி பணக்கார வயசு பசங்களுக்கு இதுதானே பொழுது போக்கு..!! வேணாம் சுலக்க்ஷிகா தப்பா பேசாத..? எல்லா பசங்கள் மாதிரியும் என்னை நினைக்காத... உங்க நாட்டிலே ஒரு ஆணும் பொண்ணும் பேசுறதே தப்பா இருக்கலாம். நான் வளர்ந்த நாட்டில் அப்படியெல்லாம் இல்லை. அங்கே தப்பு பண்ணுவதற்கு ஆயிரம் கதவுகள் திறந்தே இருக்கும். எல்லோருக்கும் சுய கட்டுப்பாடும் ஒழுக்கமும் வேணும் என்று நினைக்கிறவன் நான். சுலக்க்ஷிகா.. நான் யார் கூடையும் இந்தளவுக்கு பேசினது இல்லை தெரியுமா? ஆனா... உன்ன முதல் முதல் பார்த்த அந்த நிமிஷத்தில் இருந்து உன்னோட பேசணும் பழகணும் என்று துடிச்சுட்டு இருக்கேன் தெரியுமா..? உன் கஸ்ரங்களில் நானும் பங்கெடுக்கணும் என்று நினைக்கிறேன் ஆசைப்படுறேன். இதை என்னால் எங்கையோ ஒரு தூரத்தில் நின்று செய்யமுடியாது அதான் உன் கூட வரணும் வாழனும் என்று நினைக்கிறேன். இந்த முடிவை உன் மேல் இரக்கப்பட்டு எடுத்தது என்று மட்டும் நினைச்சுடாதே.. உன்னை நான் எவ்ளோ நேசிக்கிறேன் என்று என் மனசுக்கு மட்டும்தான் தெரியும். என் விருப்பத்தை நீ நிராகரித்தால்  கூட என் வாழ்க்கையில் எப்போதும்  உனக்கு மட்டும்தான் இடம். நீ வராட்டி கூட அந்த இடம் உனக்காக எப்பவும் வெற்றிடமாகத்தான் இருக்கும். நான் உடைந்து போய் தழு தழுத்த குரலில் சொல்ல அவள் கண்களில் இருந்து கண்ணீர் பெருக தொடங்கியது. 

ம்ம்.. நீ என்னை ரெம்ப நேசிக்கிற... சரி இருக்கட்டும். இந்த காதல் எதுவரைக்கும்...!! நீ பிரான்ஸ் போகும் வரைக்குமா?? அலட்சியமாக கேட்டவள், ஆர்ணி..  நீ வைரம்தான் ஒத்துக்கிறேன் ஆனா நான் மண்குதிரை. உன்னோடு ஆற்றில் இறங்கினா நாளைக்கு கரைந்து காணாமல் போகபோவது நான்தான் சொல்லிவிட்டு  கண்களில் பெருகும்  கண்ணீரை துடைத்தபடி ஏக்கத்துடன் என்னைப்பார்த்தாள்.

தொடரும்..
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா 

42 கருத்துகள்:

  1. வணக்கம் துஷி! இருங்கோ படிச்சிட்டு வாறன்!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் துஷி...நில்லுங்கோ வாசிச்சிட்டு வாறன் :P

    பதிலளிநீக்கு
  3. ஏலே சத்தியமா இது சொந்தக்கதை இல்லை தானே?

    பதிலளிநீக்கு
  4. சூப்பரா இருக்கு துஷி, வர்ணிப்புக்கள் எல்லாமே கலக்கம்! அந்தப் பெண்ணை நினைக்க பாவமா இருக்கு! இறுதியில் தன்னை மண்குதிரை என்று சொன்னது, மனதை கனக்கச் செய்கிறது!

    அழகான விபரிப்புகள்! அழுத்தமான கதையோட்டம்! வாழ்த்துக்கள் துஷி!

    சின்ன ஆலோசனை ஒன்று!

    உரையாடல்கள் வரும் இடத்தில் கோள்கோள் குறிகள் பாவியுங்கள்! மற்றது சிறி சிறிய பந்தியாகப் பிரித்து எழுதினால் படிக்க மிகவும் இலகுவாக இருக்கும்! நன்றி!

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் மருமோனே!
    கதை நல்லா இருக்கு சொந்த கதையும் கலந்து இருக்கா...?

    பதிலளிநீக்கு
  6. துஷி... வரிக்கு வரி உயிர்த்துடிப்பு இருக்கிறது... அசத்தலா எழுதிறீங்க பாஸ்...

    பதிலளிநீக்கு
  7. அனுபவிச்சு எழுதியிருக்கிறீங்க.. ஒருவேளை சொந்த கதையா இருக்குமோ

    பதிலளிநீக்கு
  8. கதை தொடர்ந்து அதிக எதிர்பார்ப்பைத் தூண்டிப் போகிறது
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 6

    பதிலளிநீக்கு
  9. அருமையான வர்ணிப்புக்கள் ; சிறப்பா இருக்கு மச்சி . அனுபவித்ததை எழுதியது போல் உள்ளது .

    பதிலளிநீக்கு
  10. Powder Star - Dr. ஐடியாமணி சொன்னது…
    வணக்கம் துஷி! இருங்கோ படிச்சிட்டு வாறன்!<<<<<<<<<<<<<<<<<<

    மணிதான் முதல் வருகையோ.... ஹா ஹா... :)

    பதிலளிநீக்கு
  11. மைந்தன் சிவா கூறியது...
    வணக்கம் துஷி...நில்லுங்கோ வாசிச்சிட்டு வாறன் :P <<<<<<<<<<<<<<<<<<<

    எலேய் மைந்து.... ரெம்ப நாளைக்கு அப்புறம் எங்க பக்கம் :( ஹன்சிகா கார்த்திகா எல்லாம் எப்படி இருக்காங்க?? ;)

    பதிலளிநீக்கு
  12. மைந்தன் சிவா கூறியது...
    ஏலே சத்தியமா இது சொந்தக்கதை இல்லை தானே?<<<<<<<<<<<<<<<<<<

    தேவயாணி மேலே சத்தியமாய் சொந்த கதை நொந்த கதை இல்லைப்பா மைந்து.... நம்பு.....

    பதிலளிநீக்கு
  13. Powder Star - Dr. ஐடியாமணிகூறியது...
    சூப்பரா இருக்கு துஷி, வர்ணிப்புக்கள் எல்லாமே கலக்கம்! அந்தப் பெண்ணை நினைக்க பாவமா இருக்கு! இறுதியில் தன்னை மண்குதிரை என்று சொன்னது, மனதை கனக்கச் செய்கிறது!
    அழகான விபரிப்புகள்! அழுத்தமான கதையோட்டம்! வாழ்த்துக்கள் துஷி!

    சின்ன ஆலோசனை ஒன்று!
    உரையாடல்கள் வரும் இடத்தில் கோள்கோள் குறிகள் பாவியுங்கள்! மற்றது சிறி சிறிய பந்தியாகப் பிரித்து எழுதினால் படிக்க மிகவும் இலகுவாக இருக்கும்! நன்றி!<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<



    மணி... ரெம்ப தேங்க்ஸ் மணி :) :)

    அப்படியா.... உண்மையில் எழுதிவிட்டு நானே வாசிக்கும் போது எனக்கும் இது தோன்றியது.... ஆனால் சின்ன சின்ன பந்தியாக இதுவரை பதிவு போடவில்லை என்பதால் தயக்கமாக இருந்ததால் விட்டுவிட்டேன்..... தேங்க்ஸ் மணி அடுத்த பகுதியில் இருந்து நீங்கள் சொன்னது போலவே செய்கிறேன்.....

    பதிலளிநீக்கு
  14. காட்டான் கூறியது...
    வணக்கம் மருமோனே!
    கதை நல்லா இருக்கு சொந்த கதையும் கலந்து இருக்கா...?<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    தேங்க்ஸ் மாமா..... வை திஸ் கொலை வெறி கொலை வெறி மாமா ;(

    பதிலளிநீக்கு
  15. மதுரன் கூறியது...
    அனுபவிச்சு எழுதியிருக்கிறீங்க.. ஒருவேளை சொந்த கதையா இருக்குமோ<<<<<<<<<<<<<<<<<<

    மது இதுவரை நல்லாத்தானே போயிட்டு இருக்கு..... கிர்ர்ர்

    பதிலளிநீக்கு
  16. Ramani கூறியது...
    கதை தொடர்ந்து அதிக எதிர்பார்ப்பைத் தூண்டிப் போகிறது
    தொடர வாழ்த்துக்கள் <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    தேங்க்ஸ் ரமணி சார் ;)

    பதிலளிநீக்கு
  17. மதுரன் கூறியது...
    துஷி... வரிக்கு வரி உயிர்த்துடிப்பு இருக்கிறது... அசத்தலா எழுதிறீங்க பாஸ்.<<<<<<<<<<<<<<<<<<

    ஓ...... தேங்க்ஸ் மது.... மது வாயால் பாராட்டு வேண்ருவது என்றால் சும்மாவா.... துஷி லக்கியப்பா.... ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  18. Mahan.Thamesh கூறியது...
    அருமையான வர்ணிப்புக்கள் ; சிறப்பா இருக்கு மச்சி . அனுபவித்ததை எழுதியது போல் உள்ளது .<<<<<<<<<<<<<<<<<<<<<<<



    ரெம்ப தேங்க்ஸ் மச்சி........ :):)

    பதிலளிநீக்கு
  19. கலக்ஷிகா நல்ல தெளிவான எண்ணம் கொண்ட பாத்திரப்படைப்பு(உண்மைக்கதை இல்லை ன்னு சொல்லியதை நம்பிட்டேன்).

    நல்ல துடிப்புடன் நகர்கிறது.

    பதிலளிநீக்கு
  20. கதை நல்லாயிருக்கு பாஸ்..வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் துஸி,
    கதை அருமையாக நகர்கிறது.

    ஆமா நீங்கள் காத்திருந்த அந்த இடம் எங்கே நெடுங்கேணியிலா இருக்கு?
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    அருமையான இயற்கை வர்ணணைகள். காலத்தின் போக்கிற்கு ஏற்றவாறு காதலை நகர்த்தும் விதமும் கலக்கல் நண்பா.

    தொடருங்கள்.

    அவளுக்கு எப்படியாவது வெளிநாட்டு நிலமையைப் புரிய வைத்து ஆணும் பெண்ணும் சகஜமாகப் பழகுவது போலவாச்சும் பழகலாம் என்று நினைக்கிறீங்க.

    பாவம்! சுலக்‌ஷிகா தான் புரிந்து கொள்ளாமல் இருக்கிறாளே!

    பதிலளிநீக்கு
  22. // உங்க நாட்டிலே ஒரு ஆணும் பொண்ணும் பேசுறதே தப்பா இருக்கலாம். நான் வளர்ந்த நாட்டில் அப்படியெல்லாம் இல்லை. அங்கே தப்பு பண்ணுவதற்கு ஆயிரம் கதவுகள் திறந்தே இருக்கும். எல்லோருக்கும் சுய கட்டுப்பாடும் ஒழுக்கமும் வேணும் என்று நினைக்கிறவன் நான்.//

    ரொம்ப பிடித்திருகுது.....

    பதிலளிநீக்கு
  23. அண்ணே கதை சூடு பிடிக்குது...

    பதிலளிநீக்கு
  24. //நான் யார் கூடையும் இந்தளவுக்கு பேசினது இல்லை தெரியுமா?//

    அப்போ கண்டிப்பா இது கதை தான்.. அவ்வ்..

    முதலில் பார்த்தமையை வர்ணிக்கும்போது மிகவும் சிறப்பாக செய்திருந்தீர்கள், ஆனால் காதலை சொல்லும்போது அதைவிட ஒருபடி மேலே இருக்கவேணாமா?

    ம்ம்ம் தொடருங்கள்..

    பதிலளிநீக்கு
  25. துஷிக்குட்டிக்குள்ள பெரிய ஒரு நல்ல மனுசன் இருக்கார்.கதை நீளும் எண்டு நினைக்கிறன் !

    துஷிக்குட்டி...கதையைச் சின்னச் சின்னப் பந்தியாக்குங்கோ.இரணடு பேர் கதைக்கிறதையும் குறியிடுங்கோ.இன்னும் வாசிக்க சுகமாவும் சுவையாவும் இருக்கும் !

    பதிலளிநீக்கு
  26. இரவு வணக்கம்,துஷி!அருமையான கதை ஓட்டம்.உங்கள் நண்பர்கள் சொல்வதையே(பந்தி) நானும் சொல்கிறேன்.பிரித்துப்,பிரித்து எழுதினால் சுவையாக இருக்கும்.///இடையில் பிரான்ஸ் வருவதால் நண்பர்கள் சந்தேகப்படுகிறார்களோ?

    பதிலளிநீக்கு
  27. ///நான் சொல்ல என்னை ஊருடுவி பார்த்தவள் வேறு பக்கம் பார்வையை திருப்பிக்கொண்டாள்.///

    எண்ணங்களை வார்த்தையின் வீரியத்தில்
    புரிந்துகொண்ட பெண்..

    பதிலளிநீக்கு
  28. துஷி கதை அருமையா இருந்துச்சு,
    கதைநாயகியின் மனமும் கதைநாயகனின்
    மனமும் உங்களுக்காக கவிதையாக...


    கண்களிலே கண்ணீர் ஏனடி..
    காத்திருக்கேன் நானடி!
    காலமிங்கே பதில் சொல்லும்
    காதலை நீ ஏத்துக்கோ
    கலங்காது பார்த்துக்கிறேன்!!
    காமத்தில் விளையவில்லை
    கடும் மோகத்தில் விளையவில்லை
    உன் முக பாவத்தில் விளைந்ததடி
    உன்னோடு நானிருப்பேன் என்கிறேன்
    நீயோ என்னை விட்டு போவாய் என்கிறாய்..
    உன்னைவிட்டுப் போனாலும்
    உன் நெஞ்சை விட்டுப் போவதில்லை ..

    பதில் சொல்லடி கண்மணியே!!

    பதிலளிநீக்கு
  29. கோகுல் கூறியது...
    கலக்ஷிகா நல்ல தெளிவான எண்ணம் கொண்ட பாத்திரப்படைப்பு(உண்மைக்கதை இல்லை ன்னு சொல்லியதை நம்பிட்டேன்).
    நல்ல துடிப்புடன் நகர்கிறது.<<<<<<<<<<<<<<<<<<<

    தேங்க்ஸ் நண்பா.... ஹா ஹா அப்போ நம்பல்லையா.....அவ்வவ்

    பதிலளிநீக்கு
  30. Riyas கூறியது...
    கதை நல்லாயிருக்கு பாஸ்..வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்<<<<<<<<<<<<<<

    தேங்க்ஸ் பாஸ்

    பதிலளிநீக்கு
  31. நிரூபன் கூறியது...
    வணக்கம் துஸி,
    கதை அருமையாக நகர்கிறது.
    ஆமா நீங்கள் காத்திருந்த அந்த இடம் எங்கே நெடுங்கேணியிலா இருக்கு?
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    அருமையான இயற்கை வர்ணணைகள். காலத்தின் போக்கிற்கு ஏற்றவாறு காதலை நகர்த்தும் விதமும் கலக்கல் நண்பா.
    தொடருங்கள்.
    அவளுக்கு எப்படியாவது வெளிநாட்டு நிலமையைப் புரிய வைத்து ஆணும் பெண்ணும் சகஜமாகப் பழகுவது போலவாச்சும் பழகலாம் என்று நினைக்கிறீங்க.
    பாவம்! சுலக்‌ஷிகா தான் புரிந்து கொள்ளாமல் இருக்கிறாளே!<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<



    வணக்கம் நிரு.. தேங்க்ஸ் பாஸ்.. ஆமா ஆமா நம்ம ஊர் நெடுங்கேணியில்தான் இருக்கு... ஹீ ஹீ.

    இல்லை பாஸ்... அவளோட பழகணும் இல்ல வாழனும் என்று ஆசை எனக்கு... சாரி...ஆர்ணிகனுக்கு. :)

    பதிலளிநீக்கு
  32. ஆகுலன் கூறியது...
    // உங்க நாட்டிலே ஒரு ஆணும் பொண்ணும் பேசுறதே தப்பா இருக்கலாம். நான் வளர்ந்த நாட்டில் அப்படியெல்லாம் இல்லை. அங்கே தப்பு பண்ணுவதற்கு ஆயிரம் கதவுகள் திறந்தே இருக்கும். எல்லோருக்கும் சுய கட்டுப்பாடும் ஒழுக்கமும் வேணும் என்று நினைக்கிறவன் நான்.//
    ரொம்ப பிடித்திருகுது.....<<<<<<<<<<<<<<<<<<

    தேங்க்ஸ்டா :)

    பதிலளிநீக்கு
  33. ஆகுலன் கூறியது...
    அண்ணே கதை சூடு பிடிக்குது...<<<<<

    ஆமாம் பாஸ்... அடுத்த அத்தியாயம் இன்னும் சூடு.. அவ்வ

    பதிலளிநீக்கு
  34. குடிமகன் கூறியது...
    //நான் யார் கூடையும் இந்தளவுக்கு பேசினது இல்லை தெரியுமா?//
    அப்போ கண்டிப்பா இது கதை தான்.. அவ்வ்..<<<<<<<<<<<<<<<<<

    வை திஸ் கொலை வெறி கொலை வெறி... நண்பா :)

    //முதலில் பார்த்தமையை வர்ணிக்கும்போது மிகவும் சிறப்பாக செய்திருந்தீர்கள், ஆனால் காதலை சொல்லும்போது அதைவிட ஒருபடி மேலே இருக்கவேணாமா?
    ம்ம்ம் தொடருங்கள்..<<<<<<<<<<<<<<<<<<<

    ஆமா இல்ல....!!!! அடுத்த பாகத்தில் உருகிடுவோம்.... தேங்க்ஸ் நண்பா :)

    பதிலளிநீக்கு
  35. ஹேமா கூறியது...
    துஷிக்குட்டிக்குள்ள பெரிய ஒரு நல்ல மனுசன் இருக்கார்.கதை நீளும் எண்டு நினைக்கிறன் !
    துஷிக்குட்டி...கதையைச் சின்னச் சின்னப் பந்தியாக்குங்கோ.இரணடு பேர் கதைக்கிறதையும் குறியிடுங்கோ.இன்னும் வாசிக்க சுகமாவும் சுவையாவும் இருக்கும் !<<<<<<<<<<<<<<<<<<<<

    ஹாய் அக்காச்சி..... எப்படி இருக்கீங்க???

    ஆஹா..... அவ்வ.

    இல்லையக்கா.. சீக்கிரமே முடிக்கும் ஜடியால இருக்கேன்... ஆதரிக்கும் போதே முடிச்சுடனும் என்று நினைக்கிறேன்.

    சரி அக்காச்சி... அடுத்த பகுதியை எல்லோர் விருப்பம் படியே எழுதுறேன்...

    தேங்க்ஸ் அக்காச்சி...

    பதிலளிநீக்கு
  36. Yoga.S.FR கூறியது...
    இரவு வணக்கம்,துஷி!அருமையான கதை ஓட்டம்.உங்கள் நண்பர்கள் சொல்வதையே(பந்தி) நானும் சொல்கிறேன்.பிரித்துப்,பிரித்து எழுதினால் சுவையாக இருக்கும்.///இடையில் பிரான்ஸ் வருவதால் நண்பர்கள் சந்தேகப்படுகிறார்களோ?<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    இரவு வணக்கம் யோகா ஜயா...

    ரெம்ப தேங்க்ஸ்... ரியலி ஹப்பி..... :)

    சரி... அடுத்த பகுதியை அப்படியே செய்கிறேன்.... தேங்க்ஸ்.

    யா யா..... பிரான்ஸ் என்ற வடியாத்தான் எல்லோரும் என் மேலே சந்தேகப்படுறாங்க.... அவ்வவ்

    பதிலளிநீக்கு
  37. மகேந்திரன் கூறியது...
    ///நான் சொல்ல என்னை ஊருடுவி பார்த்தவள் வேறு பக்கம் பார்வையை திருப்பிக்கொண்டாள்.///

    எண்ணங்களை வார்த்தையின் வீரியத்தில்
    புரிந்துகொண்ட பெண்..<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    வணக்கம் அண்ணா.... எப்படி இருக்கீங்க அண்ணா.

    தேங்க்ஸ் அண்ணா.

    பதிலளிநீக்கு
  38. மகேந்திரன் கூறியது...
    துஷி கதை அருமையா இருந்துச்சு,
    கதைநாயகியின் மனமும் கதைநாயகனின்
    மனமும் உங்களுக்காக கவிதையாக...


    கண்களிலே கண்ணீர் ஏனடி..
    காத்திருக்கேன் நானடி!
    காலமிங்கே பதில் சொல்லும்
    காதலை நீ ஏத்துக்கோ
    கலங்காது பார்த்துக்கிறேன்!!
    காமத்தில் விளையவில்லை
    கடும் மோகத்தில் விளையவில்லை
    உன் முக பாவத்தில் விளைந்ததடி
    உன்னோடு நானிருப்பேன் என்கிறேன்
    நீயோ என்னை விட்டு போவாய் என்கிறாய்..
    உன்னைவிட்டுப் போனாலும்
    உன் நெஞ்சை விட்டுப் போவதில்லை ..
    பதில் சொல்லடி கண்மணியே!!<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    வாவ்.................... அண்ணா சூப்பர் வ்வ்வ்..... கவிதை அவ்ளோ அழகா இருக்கு... ரெம்ப தேங்க்ஸ் அண்ணா.... நிஜமாவே அவ்ளோ சந்தோஷமாய் இருக்கு.... உங்கள் கவிதை பரிசு.. இன்ப அதிர்ச்சி.... பெரிய விருது ஒன்றே கிடைத்த மாதிரி சந்தோஷமாக இருக்கு அண்ணா..... உங்கள் அன்பையும் ஆதரவையும் எப்பவும் மறக்க மாட்டேன்... ரியலி ஹப்பி அண்ணா :) ;) :)

    பதிலளிநீக்கு
  39. நன்றாக கதைய நகர்த்தி செல்கிறீங்க,

    உவமைகள் வர்ணிப்புகள் எல்லாம் சோக்கா இருக்கு ...)

    பதிலளிநீக்கு
  40. கதை சும்மா நேர்த்தியா சுவாரஸ்யமா போகுதேப்பா..!!!

    பதிலளிநீக்கு
  41. //நீ வைரம்தான் ஒத்துக்கிறேன் ஆனா நான் மண்குதிரை. உன்னோடு ஆற்றில் இறங்கினா நாளைக்கு கரைந்து காணாமல் போகபோவது நான்தான் //

    எவ்வளவு தெளிவான பேச்சு! ரசித்தேன்.தொடருங்கள் அருமையாக செல்கிறது.

    பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...